Jump to content

ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணைவளம் மிக்க சவூதி அரேபியா, அரசராலும் அவரது சொந்த பந்தங்களாலும் ஆளப்படும் ஒரு முடியரசு நாடு. அரச அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள்.

பல பெண்களை மணக்கும் அரச குடும்ப ஆண்மக்களால் உருவாகப் பட்ட கணக்கு இல்லா வாரிசுகளினால், பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோரும் இளவரசர்கள் தான்.

சவூதியின் மொத்த செல்வமும் இந்த அரச குடும்ப, மற்றும் இளவரசர்கள் வசம் தான் சிக்கி உள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போல தாய்லாந்திலிருந்தும் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறாக இளவரசர் ஒருவரின் வீட்டுக்கு 23 -24 வருடங்களின் முன்னர் சுத்தம் செய்யும் பணியாளர் ஆக வந்து சேர்ந்தார் ஒரு தாய்லாந்து கிராமவாசி.

அவரைப் போல் கிட்டத் தட்ட 250,000 தாய்லாந்துக்காரர்கள் அப்போது சவுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இரு வருடங்கள் கடந்து விட்டன. விடுமுறைக்கு தாயகத்துக்கு செல்வதற்கு அனுமதியும், கடவுச் சீட்டினையும் கேட்டு இருந்தார் தாய்லாந்துக்காரர்.

குடும்பத்துடன் விடுமுறைக்கு ஐரோப்பாவிற்கு சென்று வந்தபின் அவர் செல்லலாம் என சொல்லி விட்டார் இளவரசர்.

அவரது படுக்கை அறையில் ஒரு இருப்புப் பெட்டி இருந்தது. அதன் கதவு பூட்டிக் கொள்ளும் 'சங்கேத இலக்கம்' ஒழுங்காக வேலை செய்யாததால், அங்கிருந்த நகைகள் எல்லாம் வேறு இடத்திற்கு நகர்த்தப் பட்டு அந்தப் பெட்டி திருத்துனர் வரவுக்காக காத்திருந்தது.

திருத்துனர், குடும்பத்தின் விடுமுறைக் காலத்தில் வருவதற்கு ஏற்பாடு ஆகி இருந்தது.

திருத்துனர் வரும் போது, படுக்கை அறையில், குளியல் அறையினை சுத்தம் செய்து கொண்டிருந்தார் தாய்லாந்துக்காரர். அங்கிருந்த படியே, கதவு இடுக்கு வழியே திருத்துனர் உபயோகப் படுத்திய 'Master Code' இணை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார் கில்லாடியான அவர்.

நடக்கப் போகும் மிக மிகப் பெரிய விபரீதத்துக்கும் மூன்று சுழி போட்டுவைத்தார்!!!

தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எக்கச்சக்கமான நேரத்தில, கதைகளுக்குத் தொடரும் போடுறது, சில பேருக்கு, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்! - புதிய ஆய்வறிக்கை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி திரட்டியிலும்..... தொடருமா?

ரொம்ப.... கடுப்பேத்துறீங்க, நாதமுனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தமிழ்சிறி,

குறிப்பு வைத்துக் கொள்வதில்லை.

வாசித்த, நல்ல, சுவாரசியமான, விடயங்கள், நினைவில் இருந்து வருவதால் அவற்றினைத் தருகின்றேன். வேலை இடையே நேரம் கிடைக்கும் போது, டைப் செய்வதால் 'தொடரும்' வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வசதியை பொறுத்து, எழுதுங்கள் நாதமுனி.

மிச்சம் என்ன நடந்திருக்கும், என்று அறிய, அடக்கமாட்டாத ஆவலாக உள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் குடும்பமும் விடுமுறை முடிந்து திரும்பியது. வெளியே வங்கியில் இருந்த நகைகள் பெட்டிக்கு திரும்பி வந்தன.

திரும்பி வந்ததை கவனமாக உறுதி செய்து கொண்டார் தாய்லாந்துக்காரர். அவரது பெயர் Kriangkrai Techamong.

வசதியாக 'தேக்கா' என அழைப்போம்.

மிகக் கவனமாக திட்டமிட்டார், தேக்கா. தனது தாயக பயணத்தினை சிறிது காலம் தள்ளி வைத்திருப்பதாக தெரிவித்துக் கொண்டார். தொடர் கவனிப்பின் மூலம் இரும்புப் பெட்டி அடிக்கடி திறக்கப் படுவதில்லை என்பதனையும் முக்கிய குடும்ப நிகழ்வுகள் வந்தால் மட்டுமே பெட்டியில் உள்ள ஒரு சில நகைகள் அணியப் படுவதனையும் கவனித்துக் கொண்டார்.

கரணம் தப்பினால் கத்தியினால் மரணம் என தெரிந்திருந்தாலும், அவரது சிந்தனை முழுவதும் பெட்டியின் உள்ளே உள்ளதை ஆட்டையை போடுவது குறித்து தான் இருந்தது.

அதே வேளை ஏனைய பணியாளர்களுக்கும் சந்தேகம் வராதவாறு கவனமாக பார்த்துக் கொண்டார்.

தேக்கா, எதிர் பார்த்து இருந்த தருணமும் வந்தது. குடும்பத்தினர் சில நாள் பயணமாக பக்கத்துக்கு ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

வழக்கம் போல படுக்கை அறையினை சுத்தம் செய்ய vacuum cleaner உடன் சென்றார் தேக்கா.

திட்டமிட்டவாறே vacum clearnar றினை, மறந்தது போல் அங்கேயே வைத்து விட்டு வெளியே வந்து விட்டார். சிறிய விடயம் ஆகையினால் யாரும் சந்தேகிக்கவில்லை.

அன்று மாலை தோட்டத்தில் வேலையில் இருந்தார் தேக்கா.

இரவும் வந்தது. ஆனால் அன்று வானத்தில் நிலவு இல்லை.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

கரணம் தப்பினால் கத்தியினால் மரணம் என தெரிந்திருந்தாலும், அவரது சிந்தனை முழுவதும் பெட்டியின் உள்ளே உள்ளதை ஆட்டையை போடுவது குறித்து தான் இருந்தது.

------

தேக்கா ஆட்டையப் போட்டாரா?

அல்லது சவூதி அரேபியாக்காரர் தேக்காவை, உப்புக் கண்டம் போட்டார்களா? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தலைப்பினைப் பாருங்கள், தமிழ்சிறி

Link to comment
Share on other sites

:rolleyes: :rolleyes: :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான வெக்கை காலங்களில், சூரிய மறைவிற்கு பின்னர் முன்னிரவு நேரங்களில் தோட்ட வேலை செய்வது வழக்கம் ஆகையால், இன்றும் தனது திட்டப்படி வேலை, ம்... வேலை செய்வது போல் ஏதோ செய்து கொண்டிருந்தார் தேக்கா.

சரியான தருணம் வந்ததும், சுற்று முற்றும் பார்த்து தன்னை யாரும் கவனிக்கப் போவதில்லை என உறுதி செய்து கொண்டு சத்த மில்லாமல் ஆனால் வேகமாக நகர்ந்தார்.

மழை நீர் குழாய் வழியாக வேகமாக ஏறி இரண்டாவது மாடியினை அடைந்து, ஏற்கனவே உள்ளாக திட்டமிட்டு பூட்டாமல் வைத்திருந்த யன்னல் வழியாக நுழைந்து படுக்கை அறையினுள் புகுந்து கொண்டார்.

பரிச்சயமான இடமாகையினால் வேகமாக இயங்கினார். கதவினை உள்ளாக தாளிட்டுக் கொண்டார்.

இரும்புப் பெட்டியினைத் திறந்து உள்ளே இருந்த அனைத்தையும், vacuum cleaner உள்ளே இருந்த bag உள் போட்டு நிரப்பிய பின்னர், தாளிட்ட கதவினைத் திறந்து விட்டு, பின்னர் வந்த வழியே வேகமாக வெளியேறி விட்டார்.

மறுநாள் vacuum cleaner தேடுவது போல் ஏனையோருக்கு பாசாங்கு செய்து, பின்னர் படுக்கை அறைக்கு சென்று அதனை எடுத்து வந்தார்.

மறக்காமல் 'dust மற்றும் குப்பையினால்' நிறைந்திருந்த bag கினை மாத்திக் கொண்டு சாதாரணமாக வேலைகளைத் தொடர்ந்தார்.

ஊருக்கு அனுப்ப பல பொருட்களை வாங்கி இருந்தார் தேக்கா. அவற்றில் ஒன்று ஒரு பெரிய fridge.

Vacuum Bag, ஏனைய பொருட்களுடன் fridge உள்ளே வைத்து கட்டப்பட்டு, shipping agents வசம் கை அளிக்கப்பட்டு விட்டது.

சரக்கு கப்பல் ஏறியதனை உறுதி செய்து கொண்டு, சில நாட்களின் பின் தேக்கா ஊருக்கு கிளம்பி விட்டார்.

விமானம் வானம் ஏறியதும், இது வரை எந்த பிரச்னையும் இல்லாது காத்த, புத்த பகவானுக்கு நன்றி சொல்லிக் கொண்டார் தேக்கா.

ஆனால் வரப் போகும் விபரீதங்கள் எல்லாம் பௌத்த தேசத்தில் தான் என்பது புத்தரின் சித்தமோ?

புத்தரின் தேசத்தில் பார்க்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரையுமே காணவில்லை.

ரொம்ப அறுக்கிறேனோ?

ம்..ம்.. ஆவது போடுங்களேன் கண்ணுகளா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உறுப்பினர் ஆகையினால் அரிச்சுவடியில் ஆரம்பித்தேன்.

நிருவாகம் இந்த பகுதியில் போட்டு விட்டது என நினைக்கின்றேன். அவர்கள் தான் மாறிப் போட வேண்டுமா அல்லது நான் மாற்ற முடியுமா என தெரிய வில்லை.

Link to comment
Share on other sites

நிருவாகம் இந்த பகுதியில் போட்டு விட்டது என நினைக்கின்றேன். அவர்கள் தான் மாறிப் போட வேண்டுமா அல்லது நான் மாற்ற முடியுமா என தெரிய வில்லை.

கதை கதையாம் பகுதிக்கு நகர்த்தி விட்டாச்சு...இனி மிச்சம் உங்கள் கையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர், மனத் தவிப்பு, பயம் நீங்கி, ஒரு வித நிம்மதியுடன் கண்ணயர்ந்தார் தேக்கா.

அதேவேளை 35,000 அடிகள் கீழே, vacuum cleaner bag ன் உள்ளே அன்றைய திகதிக்கு $20 million மதிப்புடைய பெருந்திரவியம் கொண்ட கொள்கலனைக் தாங்கிய அந்த பாரிய கப்பல் அரபிய கடலில் இருந்து இந்து சமுத்திரத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது.

அந்த பெருந்திரவியதினுள்ளே, இளவரசர் பைசால் பாத் அப்துல் அஸிஸ் ஆசையாக வாங்கிய கிடைத்தற்கரிய ஒரு Blue Sapphire' வைரமும் இருந்தது.

பின்னர் நடந்த விபரீதங்களை வைத்து சபிக்கப்பட்ட வைரம் ('The Cursed Diamond') என பெயர் பெற்ற, அந்த வைரம் தாய்லாந்து நோக்கிய தனது பல உயிர் குடிக்கப் போகும் கடல் வழிப் பயணத்தில் இருந்தது.

வடக்கு தாய்லாந்தினைச் சேர்ந்த மலைப் பிரதேசமான பரே எனும் ஊரினைச் சேர்ந்த தேக்கா, பெரும் புத்திசாலி அல்ல. அசட்டுத் துணிச்சல் கொண்டதோர் சந்தர்ப்ப வாத திருடன்.

இரும்புப் பெட்டி திருத்தும் போது, குளியல் அறையில் இருந்திருக்காவிடில் இந்த திருட்டு நடந்து இருக்க முடியாது.

ஊர் வந்து இருந்த பணத்தில் மகிழ்வுடன் குடும்பத்தாருடன் சந்தோசமாக கழித்தார் தேக்கா.

கப்பல் வரட்டும், ஊரிலேயே மிகப் பெரிய வீடு கட்டலாம் என சொல்லிக் கொண்டிருந்தார்.

கப்பலும் வந்தது. அதில் இருந்த fridge ம் கொள்ளைத் திரவியத்துடன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது.

முக்கியமான விடயம் என்னவெனில் தனது கொள்ளையின் மதிப்பு என்ன என அவன் ஒரு போதும் சிந்தித்ததில்லை. ஒரு சாதாரண கிராம வாசிக்கு இருக்கக் கூடிய அற்பமான தொடர்பு வசதிகளே தேக்காவுக்கும் இருந்தன.

இன்னும் தெளிவாக சொல்வதாயின், தலைநகர் Bankok இல் இருக்கக் கூடிய, அவரது திரவியத்துக்கு நல்ல விலை கொடுக்கக் கூடிய உயர் தொடர்பு அவருக்கு இருக்கவில்லை.

இதனால், உள்ளூரில் இருந்த நகை கடையில் முதலில் ஒரு சிறு நகையினை அடைவு வைத்தார் தேக்கா.

மேலும் ஒன்று, இரண்டு விலைக்கு வந்த போது, அடி மாட்டு விலைக்கு வாங்கிய சந்தி (Santi Sithanakan) எனும் அந்த நகை கடைக்காரர் சீக்கிரமே, ஒரு பெரிய மீன் சிக்கி இருப்பதனைப் புரிந்து கொண்டார்.

சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடையும்,கதை தொடரும் விதமும் நன்றாக உள்ளது தொருங்கள்

Link to comment
Share on other sites

நாதமுனி சஸ்பென்ஸ் தாங்கேலாம ,ஒரியினல தேடிப்பிட்டிச்சு வாசிச்சன் ஒரு திரில்லர் படமா எடுக்காலம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ...ம்ம்ம்ம்ம்.....தொடருங்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி சஸ்பென்ஸ் தாங்கேலாம ,ஒரியினல தேடிப்பிட்டிச்சு வாசிச்சன் ஒரு திரில்லர் படமா எடுக்காலம் !!!

நாதமுனி விரைவாக வந்து கதையை எழுதி முடிக்கவும் அல்லது எல்லோரும் போய் மூலக் கதையை வாசித்து விடுவார்கள் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.