Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அதே நேரத்தில் அங்கே சவூதி அரேபியாவில் ஒரு குடும்ப நிகழ்வுக்காக இருப்புப் பெட்டியினை திறந்த இளவரசர் குடும்பமோ பேர் அதிர்சியில் உறைந்தது.

அங்கே இருந்த பணியாளர்கள் எல்லோரும் போலீஸ் விருந்தினராக லாடம் கட்டப்பட்டார்கள். தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டனர்.

அவர்களிடம் தகவல்கள் எதுவும் இல்லாவிடினும், விரைவிலேயே தேக்காவின் திருவிளையாடல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதே வேளையில் நகைக்கடைக்காரர் சந்தி, தேக்காவுடன் பெரு நட்பு கொண்டவராக காண்பித்துக் கொண்டு அவரிடம் இருந்து பெருமளவு நகைகளை அடி மாட்டு விலைக்கு வாங்கி இருந்தார்.

நகைக்கடைக்காரர் சந்தி ஒரு தந்திரமான வியாபாரி. தாய்லாந்தில் பழக்கத்தில் இல்லாத design நகைகள் சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வந்திருந்த ஒரு சாதாரண தொழிலாளியிடம் இருந்து விற்பனைக்கு வருகின்றது என்றால், என்ன காரணமாக இருக்கும் என புரிந்து கொள்ள முடியாத முட்டாள் வியாபாரி அல்ல அவர்.

என்றோ ஒரு நாள் போலீஸ் விசாரணை வரும் என அவருக்கு தெரிந்து இருந்தது. எனவே தாம் வாங்கும் நகைகளுக்கு சரி சமனாக அதே போன்ற போலி நகைகளைச் செய்து தாயாராக வைத்திருந்தார் கில்லாடி சந்தி.

1990 ஜனவரி மாதம் சவூதி அரசாங்கத்தினால், தாய்லாந்து அரசுக்கு செய்யப் பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணையைத் தொடர்ந்த பொலிசார் தேக்காவினைக் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து மிகுதி நகைகளையும், அவரது தகவல் படி சந்தியையும் கைது செய்தனர்.

பெரும் risk எடுத்த தேக்கா, நீதிமன்றில் நிறுத்தப் பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார். சந்தி இடம் இருந்து கிடைத்த சொற்ப பணமே அவருக்கு கிடைத்த வருமானம்.

இத்துடன் எமது கதாநாயகன் தேக்கா விலகிக் கொள்கின்றார். இதில் உள்ள விசித்திரம் என்னவெனில் நகைகள் கையை விட்டு போனவுடன் தேக்காவுக்கு இருந்த உயிர் ஆபத்து அல்லது 'வைரத்தின் சாபம்' இடம் மாறுகின்றது என்பதேயாகும்.

புது கதாநாயகர்களுடன் பெரும் மர்மங்களுடன் கதை தொடர்கின்றது.

Link to post
Share on other sites
 • Replies 64
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி விரைவாக வந்து கதையை எழுதி முடிக்கவும் அல்லது எல்லோரும் போய் மூலக் கதையை வாசித்து விடுவார்கள் :lol:

உண்மை, கதை முதல் பகுதியை வாசித்தவடன் மிகுதியை அறியும் ஆவலில் ஏற்கனவே விக்கிபிடியாவில் முழுவதையும் பார்த்துவிட்டேன். எனினும், இவரது கதைசொல்லும் பாங்கு சுவாரசியமாக உள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பின்நாளில் பிரச்னைகள் வரலாம் என கருதி இருந்த சந்தி, தேக்காவுடனான தனது கொடுக்கல் வாங்கல்களைத் தெளிவாக வைத்திருந்தார்.

பொலிசார் விசாரணையில் தான் வாங்கிய நகை விபரங்கள், கொடுத்த பணம், வாங்கிய திகதி போன்ற விபரங்களை ஒழுங்காக கொடுத்து, வாங்கிய நகைகளினையும் ஒப்படைத்தார்.

தேக்காவுடன் தான் செய்த வியாபாரம் சட்ட விரோதமானது அல்ல, சாதரணமானது தான் என காட்டி ஓர், இரு தினங்களிலே வெளியே வந்து விட்டார் எமது புதிய கதாநாயகன் சந்தி.

1990 ம் ஆண்டு மார்ச் மாதம், பாங்காக் நகரில் நடந்த ஒரு பொது நிகழ்வு ஒன்றில், கொள்ளைத் திரவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட பின்னர் பொலிசாரினால், சவூதி ராஜதந்திரிகள் வசம் ஒப்டைக்கப் பட்டன.

இத்துடன் இந்த விடயம் முடிவுக்கு வந்து விடும் என தாய்லாந்து அரசு கருதியது.

ஆனால் விரைவாகவே, தம்மிடம் முழுவதுமே தரப் படவில்லை என்பதனையும், கையளிக்கப் பட்ட நகைகளில் பெரும்பகுதி போலியானவை எனவும் கண்டு கொண்ட சவூதி அரசு பெரும் கோபம் கொண்டு, பாங்கொக்கில் இருந்த தூதரகத்தினை தரம் குறைத்து பல ராஜதந்திரிகளினையும் திருப்பி அழைத்துக் கொண்டது.

சவூதியில் இருந்த 250,000 தாய்லாந்து நாட்டுக் காரர்களின் விசாவினை நீடிக்க மறுத்தது .

மேலும் தமது நாட்டினர் தாய்லாந்துக்கு விடுமுறை செல்வதனை மறைமுகமாக தடுத்தது. தாய்லாந்துக்கான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

வெறும் $20million நகைக்காக பல பில்லியன் டாலர் வருமானைத்தினை தாய்லாந்து இழக்கத் தொடங்கியது.

சவூதியினைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய மூடி மறைப்பில் தாய்லாந்து போலீஸ் மற்றும் அரச உயர் மட்டத்தில் நடை பெறுவதாகக் கருதியது.

முக்கியமாக அந்த வைரம் கிடைக்கவே இல்லை. அதற்கு என்ன நடந்தது எனவும் தெரியவில்லை.

இந்நிலையில் இழந்த நகைகள் குறித்த தேடலில், சவூதி அரேபியா நேரடியாக சில நடவடிக்கைகளை தாய்லாந்தில் எடுக்கத் தீர்மானித்தது.

அத்துடன் மர்மங்கள் நிறைந்த 'கொலை உதிர் காலமும்' ஆரம்பம் ஆனது.

புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் கரணம் கச்சாமி...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண தொழிலாளி தமது நாட்டில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி செய்து முடித்த பெரும் திருட்டுக்கு மேலாக, எவ்வளவு இலகுவாக நாட்டிற்கு வெளியே அதனை அனுப்பி, தானும் சாவகாசமாக வெளியேறியதனை சவூதி அரசினால் ஜீரணிக்க முடியவில்லை.

மேலாக தாய்லாந்து அரசும், பொலிசாரும் நடாத்தும் பூசி மெழுகும் வேலைகள் மேலும் கோபத்தினை கூட்டின.

ராஜதந்திரிகளாக சில புலனாய்வு அதிகாரிகள் பாங்காக்கில் இருந்த தரம் குறைக்கப் பட்ட சவூதி துனை தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதே வேளை, எவ்வளவு பணம் கொடுத்தாவது இழந்த வைரத்தினையும், இயலுமான அளவு நகைகளையும் மீட்டுக் கொள்ள சில சவூதி பெரு வியாபாரிகளும் களத்தில் இறக்கப் பட்டனர். இதன் மூலமாவது இழந்த சவூதி மரியாதையினை காக்கலாம் என எதிர் பார்க்கப் பட்டது.

இந்த காலப் பகுதியில், நகைகடைக்காரர் சந்தி, பெரும் வசதி படைத்த வராகவும், மேல் மட்ட தொடர்பு கொண்டவராகவும் மாறி இருந்தார். அவர் தனது குடும்பத்துடன் பாங்காக் நகருக்கு குடி பெயர்ந்து இருந்தார்.

சவூதி ராஜதந்திரிகளைப் பொறுத்தளவில் போலி நகைக்கான சூத்திரதாரி இந்த சந்தி என கருதினர். அவர் சில போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பின்புலத்துடன் இயங்குகின்றார் என அறிந்து கொண்டனர்.

ஒத்தை நரி மகா தந்திரமாக வேட்டையாடி விழுத்திய இரையை, காட்டு நாய்கள் கூட்டம் லவட்டிக் கொண்டு போவது போல், தேக்காவின் கொள்ளைத் திரவியம், அவரிடம் இருந்து சட்ட ரீதியாகப் பறிக்கப் பட்டதாயினும், உரியவரிடம் சேர்க்கப் படாமல், சட்ட ரீதியற்ற முறையில் எங்கோயோ, யாரோ ரகசியமாக பதுக்கி விட்டனர்.

ஒரு 'பெரும் கொள்ளை' எனும் நிகழ்வு , 'பெருமோசடி' எனும் நிகழ்வாக மாறியது. யார் அந்த மோசடியாளர்கள்?

அதே வேளை தேக்கா, சிறையில் வேறு ஒரு பிரச்சினையும் இல்லாது, தனது சவூதிய வீரப் பிரதாபங்களை வாய் பிளந்தபடி கேட்கும் சக கைதிகளுக்கு பெரும் பீலாவுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரது மடியில் கனம் எதுவுமே இல்லாததால், உயிருக்கு பயம் எதுவும் இல்லை.

இந்த நிலையில் ஒரு நாள் தீடிரென, மூன்று சவூதி ராஜதந்திரிகளும் மேலும் ஒரு சவூதி பெரு வியாபாரியும் பாங்காக் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இவர்களுடன் சேர்த்து ஒரு தாய்லாந்து போலீஸ் காரரும் உயிர் இழந்தார்.

அவர்கள் கண்டறிந்த சில உண்மைகள் வெளியாகும் முன்னே அவர்கள் வீழ்த்தப் பட்டார்கள் என தாய்லாந்து மக்கள் பேசிக் கொண்டார்கள்.

கொலைகளும் , மர்மங்களும் தொடரும்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் ஒரு நாள் தீடிரென, மூன்று சவூதி ராஜதந்திரிகளும் மேலும் ஒரு சவூதி பெரு வியாபாரியும் பாங்காக் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இது நடை பெறும் பொழுது நான் சவுதியில் இருந்தேன்.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

2rmv6dv.jpg

களவெடுத்த பலே ஆசாமியும், பறிகொடுத்த மன்னர் வழித்தோன்றலும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி சஸ்பென்ஸ் தாங்கேலாம ,ஒரியினல தேடிப்பிட்டிச்சு வாசிச்சன் ஒரு திரில்லர் படமா எடுக்காலம் !!!

தமிழ் திரைப்படத் துறையினரின் கண்களுக்கு இந்த கதை தெரியவில்லையா :unsure: ...இனி மேல் படமாக எடுப்பார்கள் :lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்.........ம்ம்ம்ம்ம்.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையும் திறில்லிங்...அதை எழுதும் விதமும் சூப்பர்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனேவே பெரும் திகில் கதை போல் தொடர்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் ஒரே நாளில் வேறு வழியில் பயணிக்கத் தொடங்கியது.

பெரும் அதிர்வலைகளை சவூதி அரேபியாவிலும், தாய்லாந்திலும் ஏற்படுத்திய இந்த விபரீத சம்பவம் 'நீல வைரத்தின் சாபம்' (Curse of the blue diamond) காரணமாகவே நடந்தது என பலரால் நம்பப் பட்டது.

மறு புறத்தே இந்த கொள்ளைத் திரவியங்கள் தாய்லாந்தின் உயர் அரசியல் மட்டங்களில் பங்கிடப்பட்டு இருக்கலாம் என சவூதி அரேபியா தீவிரமாக நம்பியது.

இது தொடர்பில் முக்கிய தகவல்களை பெற்றுக் கொண்டிருந்த சவூதியர்களும், அதனை வழங்கி இருக்கக் கூடிய உள்ளூர் போலீஸ்காரர் ஒருவரும் கொலை செய்யப்படுவதற்கான ஆணை சம்பந்தப்பட்டவர்களால் இடப்பட்டு இருக்கலாம் என சவூதி மற்றும் தாய் மக்கள் நம்பினர்.

உண்மையிலே போலீஸ்காரர் உட்பட மூன்று ராஜதந்திரிகள் ஒரே இரவில் இரு வேறு இடங்களிலும் தலையில் மிக அண்மையாக வைத்து சுடப்பட்டும் (Execution Style) , நான்காவது சவூதியாரான பெரு வியாபாரி சரியாக இரு நாட்களின் பின்னர் கடத்தப் பட்டு உடலே கிடைக்காதவாறு காணமல் போயும் இருந்தார்.

இந்த கொலைச் செயலுடன் சம்பந்தப்பட்டவர்கள் தம்மையும் தாம் மோசடியாகப் பதுக்கிக் கொண்ட திரவியங்களையும் பாதுகாக்க மேலும் கொலை செய்யத் தயங்க மாட்டார்கள் என தெளிவாகப் புரிந்தது.

கண்துடைப்பு நாடகத்தின் ஒரு அம்சமாக 1991 யூன் மாதத்தில் தீடீரென 'எங்கிருந்தோ' ஒரு சிறு தொகுதி நகைகள் 'கண்டுபிடிக்கப் பட்டு' நான்கு உள்ளூர் வாசிகள் 'திருட்டுப் பொருட்கள்' கையாண்டமைக்காக நீதி மன்றில் நிறுத்தப்பட்டார்கள்.

பொலிசாரினால் கை அளிக்கப்பட்ட மிகச் சிறு தொகை ($100,௦௦௦) பெறுமதி மிக்க நகைகள் சவூதியர்களை திருப்திப்படுத்தவில்லை.

மாறாக சவூதி அடிக்கடி நெருக்குவதும் தாய்லாந்து ஏதாவது சாக்குப் போக்கு சொல்வதுமாக ஆண்டுகள் நகர்ந்தன.

இதனிடையே சவூதியின் ராஜதந்திரிகள் கொலைக்கு, ஈரானிய உளவாளிகளே காரணம் எனவும் காட்ட தாய்லாந்து முயற்சி செய்தது.

சவூதியின் நடவடிக்கையினால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து சாதாரண தாய்லாந்து மக்களும் உணரத் தொடங்கினர்.

இந்நிலையில் திடீரென 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்.....

சபிக்கப்பட்ட வைரம் மீண்டும் தனது வேலையினை காட்டியது......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்,

படங்களுக்கு மிக்க நன்றி.

ஆசாமி கழுத்தினைப் தான் பார்த்தேன்.எப்படிப்பட்ட தோர் அதிஸ்டசாலி.

சவூதியில் பிடி பட்டு இருந்தால் சந்தியில், தமிழ்சிறி சொன்னது போல, கழுத்தில் கத்தியினை வைத்து சும்மா ரணகளம் பண்ணி உப்புப் கண்டம் போட்டிருந்திருப்பார்கள்.

ஐந்து வருடத்துடன் தப்பி விட்டார்.

Link to post
Share on other sites

நாதமுனி, கதை சுவாரசியமாக உள்ளது.தொடருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நண்பர்களே,

இந்த மிகவும் சுவாரசியம் மிக்க திரில் நிறைந்த கதையினை 1995 ஆம் ஆண்டில் வந்த UK Independent Paper Sunday Magazine இல் வாசித்து பத்திரப் படுத்தி இருந்தேன்.

கடந்த வாரம் எனது அறையினை சுத்தப் படுத்திய போது Magazine வெளியே வந்தது.

உடனடியாகவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். நான் எதிர் பார்க்காத அளவுக்கு உங்கள் ஆர்வம் இருந்தது.

எனவே மேலும் இது குறித்து பல விடயங்களைத் தேடினேன். பகிர்ந்தேன்.

அடுத்து என்ன நடந்ததோ அதனையும் பார்ப்போம்.

பின்னர் எனது அவதானிப்புகளையும், சில அனுமானங்களையும் பகிர்கிறேன், விவாதிப்போம்.

இதனை ஏன் சினிமாவாக எடுக்கவில்லை என ஒரு உறவு கேட்டு இருந்தார்.

உண்மையில் இது குறித்து Hollywood காரர்கள் சிந்தித்து கொண்டிருகிறார்கள். தாய்லாந்துக்கான முன்னால் சவூதி துணைத் தூதர் ஒருவர் இது குறித்த புத்தகம் ஒன்றினை வெளியிடுகின்றார்.

கற்பனைக்கு அப்பால் பட்ட மர்மங்கள் நிறைந்த ஓர் சம்பவக் கோர்வை என இது குறித்து விபரிக்கின்றார். Hollywood காரர்கள் இவரையும் அணுகி இருக்கின்றனர்.

எனினும் இதனை இன்னும் படமாக எடுக்காததற்கு காரணம், ஒரு உண்மையான சம்பவம் முடிவின்றி அனுமார் வால் போல நீண்டு செல்வதால், கற்பனையான முடிவினைச் சேர்க்க முடியாது என்பதால் தான் என நினைக்கின்றேன்.

மீண்டும் தாய்லாந்தில் சந்திப்போம்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஆர்வமா நான் கதை வாசிச்சு கனகாலம் பா..

சீக்கிரம் முடிச்சிடுங்கோ.. நல்ல சுவாரசியமாக எழுதுகிறிர்கள் அண்ணா. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சம்பந்தமாக தாய்லாந்தில் நடந்த கொலைகளில் ஒன்று பாங்கொக் பெச்பூரி வீதியில் நட்சத்திர விடுதியொன்றில் நடந்தபொழுது நானும் அந்தப்பகுதியல்தான் இருந்திருந்தேன். அப்பொழுது கொலைக்களிற்கான சரியான காரணம் தெரிந்திருக்கவில்லை. கொலை நடந்தபொழுது சவுதி உளவு பிரிவை சேர்ந்தவர் தாய்லாந்து விலைமாது ஒருவருடன் இருந்திருந்தார். எனவே அது பணம் சம்பந்தமான மாபியா குழுவால் நடத்தப்பட்டிருக்கலாமென்றே பலரும் நினைத்திரந்தனர். அப்படித்தான் பாங்கொக் போஸ்ற் பத்திரிகையும் செய்தி வெளியிட்டிருந்ததாக ஞாபகம். ஆனா சத்தியமா நான் அந்த வைரத்தை எடுக்கேல்லை :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கு, நாவுல சனியன் குடி கொண்டிருக்கு.

இப்ப... தாய் லாந்து பொலிஸ்காரிககள் வூட்டுக்குள் தேடுதல் வேட்டைக்கு வரலாம்.

நாயை... அவிட்டு வுடுங்கோ....

கடிச்சு, குதறட்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஆர்வமா நான் கதை வாசிச்சு கனகாலம் பா..

சீக்கிரம் முடிச்சிடுங்கோ.. நல்ல சுவாரசியமாக எழுதுகிறிர்கள் அண்ணா. :)

அண்ணே இது கதையல்ல நிசம் !!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொலைகள் விழு முன்னர், சவூதியர்களின் கொலை தொடர்பில், தாய்லாந்து போலீஸ் விசாரணையில் காட்டிய அசமந்த போக்கு காரணமாக, தாய்லாந்துக் காரர்களுக் காண சவூதி விசா வழங்குதல் முழுவதுமாக நிறுத்தப் பட்டு இருந்தது. கிட்டதட்ட $14 billion வருமானம் இழக்கப் பட்டு இருந்தது.

இந்த நிலையில் 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாங்காக் நகரில், நகைக்கடைக் காரர் சந்தி சித்தனாகன் (சாந்தி சித்தனாகன்?), அவரது மனைவி, 15 வயது மகன், மூவருமே கடத்தப் பட்டனர்.

சந்தி விரைவிலே விடுவிக்கப் பட்டார். ஆனால் அவரது மனைவியும், மகனும், பின் தலையில் தாக்கி கொல்லப் பட்ட நிலையில், வெள்ளை நிற மேர்செடிஸ் பென்ஸ் கார் ஒன்றில் கண்டு பிடிக்கப் பட்டார்கள்.

பெருந்தெரு ஒன்றில், விபத்து ஒன்றில் உயிர் இழந்ததாக காட்ட முயற்சி எடுக்கப் பட்டு இருந்தது.

சந்தியின் புது பணக்காரத்தனம் காரணமாக கடத்தி பணம் பறிக்க நடந்த முயற்சி ஒன்றில் பணத்தினை தயார் செய்யவே சந்தி மட்டும் விடுவிக்கப் பட்டு இருந்தார்.

ஆனால், நகைக் கடைக்காரர் சந்தியின் துரதிஸ்டம், கடத்தியவர்கள் போலிஸ்காரர்கள் என அவருக்கு தெரிந்து இருக்கவில்லை.

எனவே சொல்லப் பட்டத்துக்கு மாறாக சந்தி, கடத்தல், கப்பம் தொடர்பில், அப்பாவித் தனமாக போலீஸ்காரர்களிடமே முறையிட போய் இருந்தார்.

இதன் காரணமாக அவர் தனது குடும்பத்தினை இழந்தார். அதே வேலை கடத்தல் காரர்கள் தமது அடையாளத்தினை காக்க, தன்னையும் கொல்ல முயற்சி செய்வார்கள் என உணர்ந்து கொண்ட சந்தி, நிலைமை எல்லை மீறுவதனை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டார்.

சிறிது புத்திசாலித் தனத்துடன் ஊடகங்களை அழைத்து, சவூதி நகை கொள்ளை விடயத்தில் தனக்கு உள்ள பங்கு தொடர்பில் தான் சரணடையப் போவதாகக் கூறி, அவர்கள் முன்னிலையில் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

ஊடகங்கள் இந்த விடயத்தினை தீவிரமாக எடுத்துக் கொள்ள, வேறு வழி இல்லாது, புதிய அரசாங்கமும் அக்கறை செலுத்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியது.

அப்போதைய தாய்லாந்து பிரதமர் Chuan Leekpai, சந்தியை சந்தித்து பேசி, வேலிகள் மிகத் தீவிரமாக பயிர் மேயும் நிலைமையை புரிந்து கொண்டார்.

'சந்திக்கு இன்றைய நிலையில் உலகில் எங்குமே பாதுகாப்பு இல்லை, அவர் சிறையில் இருப்பதே அவருக்கு பாதுகாப்பானது 'என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளை FBI க்கு இணையான Department of Special Investigation (DSI) இடம் கை அளிக்கப் பட்டது.

DSI தனது விசாரணைகள, உள்ளூர் போலீசிடம் இருந்து எடுத்துக் கொண்டது.

சில நாட்களிலே நடந்த பல கைதுகள், தாய்லாந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

பார்ப்போம்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே இது கதையல்ல நிசம் !!!

என்ன ஒரு கண்டுபிடிப்பு.. :lol: நீங்கள் எங்கையோ இருக்க வேண்டியர்ப்பா.. :rolleyes::lol::icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சந்தியின் மனைவி, மகன் கொலைகள் தொடர்பில், Chalor Kerdthes எனும் உயர் போலீஸ் அதிகாரியும் அவருடன் சேர்த்து 15 போலீஸ்காரர்களும் கைது செய்யப் பட்டனர்.

இந்த உயர் போலீஸ் அதிகாரியே ஆரம்ப விசாரணைகளுக்கும், போலி நகைகளை சவூதி அரேபியாவிடம் கையளிப்பதற்கும் பொறுப்பாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விசாரணையின் பின் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் இவர் ஒரு இசைப்பிரியர். அங்கிருந்து ஒரு இசைப் பேழையை கூட வெளியிட்டு உள்ளார்.

எனினும் தாய்லாந்து சட்டப்படி, குற்றம் நிகழ்ந்து பல ஆண்டுகளின் பின் தண்டனை விதிக்கப் படத்தால், மரணதண்டனை நிறைவேற்றும் காலக்கெடு முடிவடைந்து விட்டதால் இவர் ஆயுள் தண்டனை அனுபவிக்கின்றார்.

அதே வேளை 2004 ஆம் ஆண்டு சவூதி ராஜதந்திரிகள் மற்றும் மேலுமொருவர் கொலை தொடர்பான விசாரணைகளையும் DSI பொறுப் பெடுத்துக் கொண்டது.

Somkid Boonthanom எனும் இன்னுமோர் போலீஸ் அதிகாரியும், மேலும் ஐந்து போலீஸ்காரர்களும் நான்கு சவூதியர்கள் கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்படடார்கள்.

இவர்களது கொலை நகைகள் தொடர்பானது அல்ல என கூறும் DSI , 2009 ம் ஆண்டு அபு அலி எனும் ஒருவரது கைது குறித்து interpol நிறுவனத்தினை தொடர்பு கொண்டது.

சவூதி அரேபியா இதனை மறுத்து கொலை, கொள்ளை நகைகளுடன் தொடர்புடையது என கூறி, அபு அலி விவகாரம் ஒரு திசை திருப்பும் செயல் என சொல்கின்றது.

இறுதியாக, இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தாலும், இழந்த நகைகள் முழுவதுமாக கைக்கு வரவில்லை.

தனது ஆசைக்குரிய வைரம் எப்போது கையில் கிடைக்கும் என இளவரசர் பைசால் பாத் அப்துல் அஸிஸ் இன்னமும் ஏங்கிக் கொண்டு இருக்கலாம்.

எனினும் தாய்லாந்து அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கை, மீண்டும் சவூதியுடனான உறவுகளில் புதிப்பிக்க முடியுமாயினும், இறுதி முடிவு சவூதி அரேபியாவின் கையில் தான் உள்ளது.

கதை முடிந்தது. அடுத்து சில அவதானிப்புகளை பார்க்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவ கோர்வையில் வரும் சட்ட விரோதமான செயல்களையும், மூட நம்பிக்கையும் ஒரு புறத்தே வைத்து விட்டு இங்கே எமக்கு கிடைக்கக் கூடிய தொழில், வியாபார பாடங்கள் (business lessons) குறித்து பார்ப்போம்.

எனது கருத்துகளை, இந்த கதையில் வரும் உதாரணங்களுடன் பின்வரும் தொழில் தலைப்பின் கீழ் தருகின்றேன்.

உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை வரவேற்கின்றேன்.

1. இடர் எதிர் நோக்கல் (risk taking)

2. தூர நோக்கும் மாறும் நிலைமைகளுக்கு தயராதலும் (long vision and being prepared for new circumstances)

3. தொழிலுக்கு எம்மைத் தயார் படுத்துதல் (getting ready for business)

4. தக்கன அறிந்து சேரல் (choosing suitable parnership)

5. சட்டத்தினை மதித்தல் (Law abiding)

6. இடர் தவிர்த்தல் (risk avoiding)

7. தலைமைத்துவம் (Leadership)

1. இடர் எதிர் நோக்கல் (risk taking)

இடர் இல்லாமல் வியாபாரம் எதுவும் இல்லை. இடர் குறித்து பயந்து கரையில் நின்று மீன் பிடித்தால் சிறிய மீனே கிடைக்கலாம். மேலும் அதற்கும் மிகக் கடுமையான போட்டி இருக்கும்.

அதே வேளை, இடர் எடுத்து நடுக் கடலுக்கு சென்றால் பெரிய மீன் கிடைக்கும்.

அதாவது உயர் இடர்: உயர் வரவு

High Risk: High Reward

அதே வேளை, பாரிய அலை அல்லது ஒரு சுறா நமது படகைக் கவுக்கலாம். படகு உடைந்தும் போகலாம், படகின் இயந்திரம் செயல் இழந்து போகலாம்.

எனவே இடர் மதிப்பீடு இல்லாமல் இடர் எடுப்பது புத்திசாலித்தனமான தொழில் யுக்தி இல்லை.

இடர் மதிப்பீடு (risk assessment) என்றால் என்ன?

கடலுக்கு செல்லப் போகின்றோம். படகு, இயந்திரம் எல்லாமே நல்ல நிலைமையில் உள்ளதா? போதுமான தண்ணீர், உணவு உள்ளதா? காலநிலை அறிக்கை என்ன சொல்கின்றது, போன்ற விடயங்களை மதீப்பீடு செய்தால் தான் நாம் எடுக்கும் இடருக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

இந்த கதையில் தேக்கா எடுத்தது மிக, மிக அபாயகரமான இடர். இரும்புப் பெட்டியில் இருந்த திரவியங்களை கைப் பற்றிய நேரம் முதல் விமானம் சவூதியில் இருந்து கிளம்பும் வரை, எந்த நேரமும் உயிருக்கு ஆபத்தான இடர்.

முற்று முழுதாக அதிஷ்டத்தினை நம்பி எடுக்கப்பட்ட இடர். அவருக்கு ஏதோ அதிஷ்டம் கைகொடுத்தது.

ஆனால், அவரது பேராசை, இடர் மதிப்பீடு செய்வதனை தவிர்த்து விட்டது. இடர் மதிப்பீடு செய்திருந்தால் இது போன்ற அபாயகரமான இடரினை அவர் தவிர்த்திருப்பார். இறுதியில் அவரை நம்பி இருந்த குடும்பத்தினை கைவிட்டு சிறை சென்றார்.

இது போன்ற இடர் எடுத்தல் தொழில் முனைவோர்களால் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும்.

2. தூர நோக்கும் மாறும் நிலைமைகளுக்கு தயாராதலும் (long vision and being prepared for new circumstances)

தொழில் செய்பவர்களுக்கு தூர நோக்கும் மாறும் நிலைமைகளுக்கு தயாராகும் திறன் முக்கியமானது.

பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு வானொலி ஆரம்பிப்பது மிகவும் செலவு மிக்கது. Satalite செலவு, அறிவிப்பாளர், தயாரிப்பாளர், விளம்பரம் சேகரிப்பு, அலுவலகம், உபகரணங்கள் என செலவு மிக்க ஒரு தொழில்.

இனையத்தளம் ஊடாக செலவு குறைந்த இடங்களில் இருந்து, குடிசை கைத்தொழில் போல் வானொலி வரும் இந்நாளில், ஒருவர் புதிய நிலைமைகளை, வசதிகளை புரியாது, அப்போது இருந்தது போல் செலவு செய்து வானொலி ஆரம்பித்தால் என்னாகும்?

இதனையே நான் வேறு ஒரு பதிவிலும் சொல்லி இருந்தேன். பாரிய நிறுவனங்கள், கடைகளைப் பூட்டி இனையத்தளம் பக்கம் செல்லுகையில், நம்மவர்கள் அதே கடைகளை பெரும் தொகை கொடுத்து , எடுத்து, இடியப்பம், சொதி, சம்பல் என மிகச் சிறிய தமிழர் சந்தைக்கு விற்பனை செய்தால் நிலைமை என்னாகும்?

இந்த கதையில் தேக்காவுக்கு தூர நோக்கு இருக்கவில்லை. என்றாவது ஒரு நாள் இரும்புப் பெட்டி திறக்கப் படும் என கவலைப் படவில்லை. ஒரு நாள் போலீஸ் வீட்டு வாசலில் நிற்கும் என யோசிக்கவில்லை. கொண்டு வந்து சேர்த்த திரவியத்தின் மதிப்பு குறித்தோ, அதனை எவ்வாறு பாது காப்பது எனவோ அவர் சிந்தித்து தயாராகவில்லை.

யோசித்து இருந்தால், வீட்டினையோ, கிராமத்தினையோ அல்லது நாட்டினையோ மாற்றி இருப்பார்.

குறைந்த பட்சம், திரவியத்தினை எங்காவது பதுக்கி விட்டு, சிறிது காலத்துக்கு எங்கே என்று ஏனையவர்களுக்கு சொல்லாமல் இன்னுமோர் நாட்டிற்க்கு வேலைக்கு போய் இருக்கலாம்.

எனவே ஒரு தொழில் செய்பவர் தூர நோக்கமும், மாறும் நிலைமைகளுக்கு தயாராகும் திறன் கொண்டவராயும் இருப்பது மிக முக்கியமானது.

Remember: If you are not updated, you will be outdated

3. தொழிலுக்கு எம்மைத் தயார் படுத்துதல் (getting Ready)

ஒரு தொழில் செய்யப் புறப்பட்டால் அது குறித்து நன்கு அறிந்து கொள்ளும் வரை பொறுமையாக இருப்பது அவசியம். அத்தொழில் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னொருவரை நம்பி தொழில் செய்வது மிகவும் அபாயகரமானது. ஏன் எனில் உங்களுக்கு விடயங்கள் தெரியாவிடில், அடுத்தவர் செய்வதால் வரக் கூடிய நன்மை, தீமை புரியாது. அடுத்தவர் செய்யக் கூடிய தவறின் விளைவினை நாமே எதிர் கொள்ள நேரிடும்.

திரவியத்தினை கொண்டு வந்து சேர்த்த, தேக்கா அதன் பயனைப் பெற தன்னை தயார் படுத்த வில்லை. சந்தி என்பவரினை நம்பி, அவரது அபாயகரமான முட்டாள் தனத்தின் விளைவாக அனைத்தினையும் இழந்து சிறை சென்றார்.

தன்னை சரியாக தயார் படுத்தி தவிர்த்திருக்கலாம். உதாரணமாக ஒரு நகை கடையில் வேலைக்கு சேர்ந்து நகை மதிப்பீடு, வியாபார விடயங்கள் என தானாக படித்து அறிந்து இருக்கலாம்.

எனவே தொழில் தொடங்க நினைப்பவர்கள் அந்த தொழில் பற்றிய அறிவு பெற வேண்டும்.

4. தக்கன அறிந்து சேரல் (choosing suitable parnership)

ஒருவருடன் கூட்டு சேரும் போதோ, அல்லது வேலைக்கு எடுக்கும் போதோ, எமது வேலைக்கு சரியான நபர் தானா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இல்லாவிடில் எமது business partnership பெரும் அவலத்தில் முடியும். இரு நண்பர்கள், ஒருவர் production பகுதியினையும், அடுத்தவர் நிர்வாக, சந்தைப்படுத்துதலையும் பார்க்கிறார் என்றால், நிர்வாகத்தினை பார்ப்பவர் நேர்மை இல்லாதவராயின் என்னாகும்?

இருவருமே நேர்மையானவராயும், ஒருவருக்கு ஒருவர் உண்மையானவராயும் இருக்க கூடிய partnership தான் வெற்றி பெறும்.

'நமக்கு எளியது சம்பந்தம்' எனும் பதம் தமிழ் மொழியில் உண்டு. அதாவது நாம் இயல்பாக, எந்த வித தயக்கமோ, பயமோ இன்றி பழகக் கூடியவர்களுடன் சேர்ந்து இயங்குவது பாதுகாப்பானது.

நாம் வலிமை கூடியோரிடம் தொடர்பு வைத்தால் அவர்கள் சொல்வதைத் கேட்க வேண்டும். அவர்களும் எமது கருத்தினை கேட்க மாட்டார்கள்.

இந்த வகையான partnership தவிர்க்கப் பட வேண்டும் .

தேக்கா, ஒரு நம்பிக்கை இல்லா நிலைமையிலே, (desperate) சந்தி இடம் வந்தார். தனக்கு எளிமையான தேக்காவுடன் சம்பந்தம் (partnership) வைக்காது அவரை ஏமாற்றி, தவித்த முயல் அடிக்கும் நோக்கில், தன்னை விட விலிமை கூடிய போலீஸ்காரர்களுடன் சம்பந்தம் (partnership) வைக்கப் போய் தனக்கும் தனது குடும்பத்துக்கும் பேரழிவினைத் தேடிக் கொண்டார்.

சந்தி கொடுத்த போலி நகைகளை எடுத்துக் கொண்டு அவரை விட்டு விட போலீஸ் காரர்கள் ஒன்றும் விரல் சூப்பிக் கொண்டிருந்த குழந்தைகள் இல்லை.

போலீஸ்காரர்களுடன் partnership வைத்தது வெறும் முட்டாள் தனம் எனில், போலீஸ் காரர்களின் பேராசை அதை விட முட்டாள்தனம்.

சந்தி மிக கவனமாக செயல் பட்டு,

1. வரக் கூடிய பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தேக்காவினை வேறு ஊருக்கு, நாட்டிக்கு தற்காலிகமாக அனுப்பி இருக்கலாம்.

2. எல்லாவற்றினையும் எடுத்துக் கொண்டு 'வெள்ளை வான்' ஒன்றுடன் விடயத்தினை காதும், காதும் வைத்தவாறு முடித்து இருக்கலாம்.

எனவே தொழில் முனைவோருக்கு இங்குள்ள படிப்பினை தக்கன அறிந்து சேரலும், நமக்கு எளியது சம்பந்தம், ஆகியனவேயாகும்.

5. சட்டத்தினை மதித்தல் (Law Abiding)

செய்யும் தொழில் சட்டத்திற்க்கு இசைவானதாக இருந்தால் பயம் இருக்காது. சட்டம் தரும் பாதுகாப்பு இருக்கும்.

பொதுவாக சட்டதிற்கு புறம்பான தொழில்களில் தான், வன்செயல் நிறைந்து, உயிர் ஆபத்து கூடியதாக இருக்கும்.

தேக்கா, சந்தி இருவரும் இறுதியில் சட்டத்தினால் மட்டுமே (சிறை வாசம்) தமது உயிர் பாதுகாப்பினை உறுதி செய்தனர்.

எனவே தொழில் முனைவோர், தமது முயற்சி சட்டத்திற்க்கு இசைவானதாக வைத்துக் கொள்வதே பாது காப்பானதும், புத்திசாலித் தனமானதும் ஆகும்.

6. இடர் தவிர்த்தல் (risk avoiding)

நடுக்கடலுக்கு மீன் பிடிக்கப் படகு ஏறுகின்றோம். புயல் அறிவிப்பு வருகின்றது. அதனை அலட்சியப் படுத்தி விட்டு செல்வோமா, என்ன? இதனையே இடர் தவிர்த்தல் எனலாம்.

$100,000 முதலீட்டில் ஒரு கடை எடுத்து சூழலிலுள்ளவர்களை மட்டும் இலக்கு வைத்து வியாபாரம் செய்வதிலும் பார்க்க $1,000 முதலீட்டில்இணையதளத்தினை நிறுவி உலகம் முழுவதும் வியாபாரம் செய்வது இடர் தவிர்த்தல்.

தேவை இல்லா இடர்களை தவிர்த்து ஒதுக்கி, அதிக வரவு உள்ள, இடர் மத்ப்பிடப் பட்ட இடர் எடுத்தலே, தொழில் முனைவோருக்கு தேவை யானது.

சந்தி, பொலிசாருடன் கூட்டினை தவிர்த்திருக்கலாம். இறுதியில் ஊடகங்களை அழைத்து இடர் தவிர்க்க முடிவு செய்த போது, அவரது இழப்பு மிக, மிக அதிகமானது.

7. தலைமைத்துவம்

மிகவும் கடுமையான ஒரு சூழலிலே, ஒரு நிறுவனத்தின் தலைமைத்துவம் மிகச் சரியான முடிவு எடுத்து நிறுவனத்தினை காக்க வேண்டும்.

வியாபாரத்திலே Customer is the King என்று சொல்வார்கள்.

இங்கே சவூதி அரேபியா, தாய்லாந்தின் மனித வலுவினை கொள்முதல் செய்யும் ஒரு வாடிக்கையாளர். சந்தையில் பல வழங்குனர்கள் இருக்கையில், தாய்லாந்தின் மிகப் பெரிய ($bs) வாடிக்கையாளர்.

ஒரு வாடிக்கையாளர் ஒரு முறைப்பாடு செய்கையில், தாய்லாந்து அரசு என்ன செய்து இருக்க வேண்டும்?

இளவரசரை சந்தித்து, 'தலைவா, உங்கள் கொள்ளை போன பொருட்களை நாம் மீட்டுத்தருகின்றோம். அது வரை இதோ இங்கே $50million தருகின்றோம், வைத்துக் கொள்ளுங்கள்.

நகைகள் மீண்டதும், திருப்பி தாருங்கள் என்று சொல்லி இருந்தால் என்ன நடந்து இருக்கும்?

இதுதான் தலைமைத் துவ பண்பு.

இதுவே ஒரு தொழில் நிறுவனத்தினை நடுத்துபவருக்கு தேவையானது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

நாதமுனியின் இறுதி அவதானிப்புகள் நன்றாக இருக்கிறது.

தேகாவின் Overall Business Plan சரியில்லை என்றும் சொல்லலாம். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Easan,

தேக்கா மிகத் திறமையான வேலையாள்.

He has executed the job with perfect planning.

ஆனால், அவரது சந்தி எனும் தேர்வு மிகத் தவறானது.

தேக்காவினை திறமையாக கையாளாமல், போலீஸ்காரர்களை திறமையாக கையாள முற்பட்ட சந்தி செயல் முட்டாள்தனமானது மட்டும் அல்ல, பின்னர் நடந்த நிகழ்வுகளால் அபாயகரமானது என உறுதி செய்யப் பட்டது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி உங்கட ஆய்வுகள் நன்றாக இருக்குது...இன்று வரைக்கும் அந்த வைரம் யாரிடம் இருக்குது எனத் தெரியாதா?...சந்தி இந்த நகைகளை யாரிடம் கொடுத்தார் என்று கடைசி வரை யாரிடமும் சொல்லவில்லையா?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.