Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வைரம்?

சவூதியர்கள் கொலைக்கு என்ன காரணம் என நினைக்கின்றீர்கள்?

எனது ஊகப்படி, சந்தியிடம் வைரத்தினைப் பறித்துக் கொண்ட போலீஸ்காரர்கள் ஒரு பிரிவினர் அவர்களுக்கு வைரத்தினை விற்க இன்னுமொரு பிரிவினர் வேறோர் இடத்தில் பணத்தினை பெற, காரியம் முடிந்ததும் இரு இடங்களிலும் கொலைகளைச் செய்து விட்டு பணத்துடனும், வைரத்துடனும் Escaped.

போகும் வழியில் அவர்களை அடையாளம் கண்டு கொண்ட தொடர்பில்லா போலீஸ் காரருக்கும் ஒரு வெடி...

இரு நாட்களின் பின், தம்மை காட்டிக் கொடுக்கக் கூடிய, வேறு வகையில் பேச்சுவார்த்தை நடாத்திய, வியாபாரி கடத்தப் பட்டு மறைக்கப் பட்டார்.

அதுதான் இதனை கற்பனைக்கு அப்பால் பட்ட மர்மங்கள் நிறைந்தது என சொன்னார்கள்.

அனேகமாக, தேக்கா செய்யத் தவறிய 'பதுக்கி விட்டு காத்திருத்தல்' நடை பெறக் கூடும், அல்லது வைரம் வேறு வழியில் விற்கப் பட்டிருக்கும்.

வைரம் சம்பந்தமாக எத்தனை ஆங்கிலப் படங்கள் பார்த்திருப்போம். Blood Money அவற்றினுள் ஒன்று. பாருங்கள், எத்தனை ஆபத்தான வியாபாரம் என புரியும்.

Link to post
Share on other sites
 • Replies 64
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக சுவாரஸ்யமாக எழுதியிருந்தீர்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .

வைரம் பற்றிய ஆங்கிலப்படம் blood diamond. blood money யும் வைரம் பற்றிய கிந்திபடம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

blood diamond http://www.yarl.com/forum3/index.php?showtopic=96935&st=40#entry756189

இரத்தத்தில் உறைந்த வைரம்

வைரக் கற்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்று. தாது பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை ஈட்டும் நாடு. 'டைட்டானியம்', 'பாக்சைட்' மற்றும் தங்கம் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. உலகின் மூன்றாவது பெரிய இயற்கை துறைமுகத்தைக் கொண்ட நாடும் கூட...ஆனாலும் அதன் எழுபது சதவித மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். அந்நாடு 'சியரா லியோன்' (Sierra Leone).

மேற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலின் கடற்கரையை ஒட்டியமைந்த ஒரு சிறு நாடு. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே எல்லா இயற்கை வளங்களையும் கொண்டது. சுரங்கத் தொழிலை ஆதாரமாக கொண்ட நாடு, குறிப்பாக வைரக் கற்களை அதிகமாக தோண்டி எடுக்கும் நாடு. ஐம்பத்தி நான்கு லட்சத்திலிருந்து அறுபத்தி நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அறுபது சதவிதம் முகமதியர்களும், அதிக அளவு கிருத்துவ சிறுபான்மையர்களும் வாழுகிறார்கள். பதினாறு சிறு இனக்குழுக்கள், சமவிகிதத்தில் நாட்டின் முப்பது சதவித மக்கள் தொகையாக வாழ்ந்தாலும், அவர்களிடையே இனப்பிரச்சனையோ, மதப்பிரச்சனையோ எழுவதில்லை. உலகின் 'மத சகிப்புத்தன்மை' கொண்ட நாடுகளில் ஒன்றாக சியரா லியோன் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இயற்கை வாரி வழங்கி இருந்தாலும் அந்நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்..நாம் நன்கு அறிந்த காலனிய ஆதிக்கமும் அந்நிய நிறுவனங்களின் கொள்ளையும் தான்.

blooddiamond2.jpg

'சியரா லியோனும்' மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலவே பல அந்நிய ஆட்சிகளுக்கு உட்பட்டு, பிரித்தானியர்களின் காலனிகளில் ஒன்றாக இருந்து 27, ஏப்ரல் 1961-இல் விடுதலை அடைந்தது. அதன் முதல் பிரதமரான 'சர் மில்டன் மார்க்கே' (Milton Margai)-வில் துவங்கி அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் யாரும் அந்நாட்டிற்கு நல்லாட்சியை வழங்கி விடவில்லை. ஊழல், நிர்வாக சீர்கேடு, தேர்தலில் வன்முறை, அதிகார கயமைத்தனம் போன்றவை நாட்டை சீர்குலைத்தது.

1968-இல் ஆட்சிக்கு வந்த 'சைக்கா ஸ்டிவன்ஸ்' (Siaka Stevens)-இன் காலத்திலேயே அந்நாட்டின் இயற்கை வளங்கள், பெரும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. வைரங்கள் பெரும் அளவில் கிடைக்க கூடிய வாய்ப்பே அந்நாட்டை பெரும் துயரத்திற்கு தள்ளியது எனலாம். வைரத் தொழிலில் பெரும் நிறுவனமான 'டிபியர்ஸ்' (DeBeers)-உடன் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கை, பெரும் கொள்ளையாக இருந்தது. ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வசதிகளை பெருக்கவே அவை உதவியன. 1984-இல் 'டி பியர்ஸ்' அரசாங்கத்துடனான உடன்படிக்கையை முறித்துக் கொண்டது என்றாலும் கள்ளத்தனமாக வைரங்கள் கடத்தப்பட்டன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய பணம் முழுவதும் தனியாரின் வசம் குவிந்தது.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் கருவூலம் சிதறுண்டு போனது. அரசாங்க ஊழியர்களுக்குக்கூட ஊதியம் தரமுடியாத நிலை உண்டானது. கல்வி, வேலை வாய்ப்பு என எதுவும் மக்களுக்கு கிடைக்க வில்லை. தலைநகரமான பிரிடவுனிலேயே (Freetown) எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு மிக மோசமான நிலையை அடைந்ததும், அதன் மேல்மட்ட வர்க்கமும், தொழில்முறை வர்க்கமும் (professional class) வெளிநாடுகளுக்கு ஓடிப்போயின. 1991-இல் 'சியரா லியோன்' உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மாறிப்போனது.

m86106.jpgRUF

நாட்டின் இந்நிலைக் கண்டு எழுந்து நின்ற இளைஞர் கூட்டம் ஒன்று, 'புரட்சிகர ஐக்கிய முன்னணி' - Revolutionary United Front'(RUF) என்ற அமைப்பின் பெயரில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியது. 'போடே சங்கா' (Foday Sankoh) என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

'அடிமையும் இல்லை, முதலாளியும் இல்லை, அதிகாரமும் செல்வமும் மக்களுக்கே' ('No More Slaves, No More Masters. Power and Wealth to the People') என்று 'RUF' முழங்கியது. இலவச கல்வி, சுகாதாரம் மற்றும் வைர வருமானத்தில் சரிவிகித பங்கு என்பது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருந்தது. மக்கள் 'RUF'-ஐ வரவேற்றார்கள், இணைந்தார்கள்.

இருண்ட அரசாங்கத்தை காய் அடிப்பதும், மக்கள் அரசை நிறுவுவதும் மக்களின் பெரும் கனவாகிப்போனது. அது கொடுத்த உத்வேகம் அத்தேசத்தை 'உள்நாட்டுப் போரில்' உற்சாகமாக ஈடுபட தூண்டியது.

'RUF'துவக்கி வைத்த இப்போர் பல கட்டங்களை கடந்து வர வேண்டியதாக இருந்தது. புரட்சிக்குழு அடைந்த வெற்றியும் பெற்ற ஆதரவும், அரசாங்க படைத்துறையின் ஒரு பிரிவை 'RUF'-வோடு இணைய தூண்டியது, இவ்விரண்டு படைகளை சமாளிக்க உருவான மக்கள் படை, இவற்றை அடக்க வந்த வெளிநாட்டுப்படை, அமைதிப்படை, தனியார் படை, ஐநா படை என பல பெரும் படைகள் பங்கு கொண்ட இப்போர், அம்மக்களுக்கு பெரும் இன்னல்களை கொண்டுவந்தது.

மற்ற எந்த உள்ளாட்டு போரிலும் நிகழாத ஒரு கொடுமை இங்கே நடந்தது. பொது மக்களின் கை கால்களை துண்டிப்பது. ஆம்..ஒருபுறம் 'RUF' மக்கள் தேர்தலில் ஓட்டு போடாமல் இருக்க அவர்களின் கைகளை துண்டித்தது. மறுபுறம் அரசு படை 'RUF'-இல் இணையாமல் இருக்க மக்களின் கை கால்களை துண்டித்தது. மேலும் சிறுவர்களை போரில் ஈடுபத்தியதும், வைரம் தோண்ட மக்களை அடிமைப்படுத்தியதும் நிகழ்ந்தது. சிறு பிள்ளைகளின் கைகளும் வெட்டப்பட்டன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்கொடுமைகளை விளக்க ஒரு புத்தகமே எழுதவேண்டும். இங்கே அதற்கு இடம் போதாது.

amputee.jpg

23 மார்சு 1991-இல் துவங்கிய 'சியரா லியோனின்' உள்நாட்டுப் போர், பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு 18 ஜனவரி 2002-இல் முடிவுக்கு வந்தபோது அது எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததா என்றால்.. இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனில் பதினோறு ஆண்டு கால போராட்டத்தின் பயன் என்ன?..

வேறன்ன.. கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் பேர், முழுமையாக சீர்குலைந்து போன உள்கட்டமைப்பு, இருபது லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது, பல்லாயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்தது மற்றும் மீண்டு வர முடிய வறுமையும் தான்.

நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாள் வருமானம் என்பது ஒரு டாலருக்கும் கீழ்தான். போதிய ஆகாரம் இன்மையால் நான்கில் ஒரு குழந்தை ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகிறது. இன்றும் அந்நாட்டின் வளம் அந்நியர்களின் கைகளில் தான் இருக்கிறது.

egch_03_img0248.jpg

இதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில்..நாம் அறிந்ததுதான். அரசியல் அயோக்கியத்தனம், உலகப்பொருளாதாரம், ஐக்கிய நாட்டு சபை, உலகயமைதி, பன்னாட்டு சமூகம், துரோகம், பேராசை.. என நீண்டுக் கொண்டே போகும் காரணங்கள் பல.

இப்போரில் ஈடுபட்ட 'RUF'-க்கு பணம் எங்கிருந்து வந்தது? அது அந்நாட்டின் வளங்களில் ஒன்றான வைரங்களை கள்ள சந்தையில் விற்றதில் வந்த பணம். அப்பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டன.

இப்படி வைரங்களை கள்ள சந்தையில் விற்று போருக்கான ஆயுதங்களை வாங்கப்படுகிறது என்பது 'அங்கோலிய உள்நாட்டுப் போரின்' (Angolan Civil War) போதுதான் உலகத்தாருக்கு தெரியவந்தது. அடிமைகளால் தோண்டி எடுக்கப்பட்ட அவ்வைரங்கள் 'இரத்த வைரங்கள்' (Blood Diamond) என அழைக்கப்படுகின்றன. உலக வைரத் தொழிலில் இவ்வைரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

blood_diamond_ver5.jpg

2006-இல் வெளியான 'Blood Diamond' என்னும் படம் 'சியரா லியோனின் உள்நாட்டுப் போர்' நடந்த காலகட்டத்தில் நிகழும் கதை ஒன்றின் மூலமாக, 'இரத்த வைரங்கள்' பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

'RUF' படையிடம் தன் மகனை பறிகொடுத்துவிட்டு, அடிமையாக சிக்கிக் கொண்டு சுரங்கத்தில் வைரம் தோண்டும் ஒரு தகப்பன். இரத்த வைரங்களை கடத்த முயன்று மாட்டிக்கொள்ளும் கதாநாயகன். இப்போரை கட்டுரையாக்க வந்த செய்தியாளராக கதாநாயகி. மூவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அப்போரை விவரிக்கிறார் அதன் இயக்குனர்.

'The Empire in Africa'(2006) என்னும் ஆவணப்படம் இப்போரை களக்காட்சிகளோடு விவரிக்கிறது. இப்போரில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இப்படம் பாரபட்சம் இன்றி அலசுகிறது. இரு தரப்பு படைகளும், பன்னாட்டு சமூகமும் இம்மக்களுக்கு செய்யத்தவறியதை, செய்த துரோகத்தை இப்படம் பதிவுசெய்திருக்கிறது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் வாசித்தேன். நாதமுனி மிகவும் சுவாரசியமாக கதையை எழுதியுள்ளார். அந்தச் சம்பவத்தை வைத்து எழுதிய இறுதி அவதானிப்புக்கள் நன்றாக இருக்கின்றன. நாதமுனியிடம் நல்ல எழுத்துவளத்துடன் ஒரு விடயத்தை பலகோணங்களிலும் இருந்து ஆராயும் திறமையும் உள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சவூதி அரேபியாவில், படுக்கை அறையில்..., 20 மில்லியன் டொலர் பெறுமதியான நகைகளை வைத்திருந்தும்,

வெளியே போகும் போது... அதைப் போட்டுக் கொண்டு, முடீக் கொண்டு தானே போகிறார்கள்.

அதனால் அந்த, அந்த நகைக்கு என்ன பிரயோசனம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

Posted Today, 11:30 AM

சவூதி அரேபியாவில், படுக்கை அறையில்..., 20 மில்லியன் டொலர் பெறுமதியான நகைகளை வைத்திருந்தும்,

வெளியே போகும் போது... அதைப் போட்டுக் கொண்டு, முடீக் கொண்டு தானே போகிறார்கள்.

அதனால் அந்த, அந்த நகைக்கு என்ன பிரயோசனம்.

அழகிய பெண்கள் வருகையில் ஆண்கள் நகைகளைப் பார்ப்பதிலையே!!

நகைகள் பெண்கள் அணிவது அடுத்த பெண்கள் பார்ப்பதற்கும், பொறமை கொள்ள வைக்கவும் தான்.

வேறு பெண்களுடன் உள்ளே அரட்டை அடிக்கும் போது போது மூடிக் கட்டல் இருக்காது, தமிழ்சிறி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அழகிய பெண்கள் வருகையில் ஆண்கள் நகைகளைப் பார்ப்பதிலையே!!

நகைகள் பெண்கள் அணிவது அடுத்த பெண்கள் பார்ப்பதற்கும், பொறமை கொள்ள வைக்கவும் தான்.

வேறு பெண்களுடன் உள்ளே அரட்டை அடிக்கும் போது போது மூடிக் கட்டல் இருக்காது, தமிழ்சிறி.

காட்டிற்குள் எறிக்கும் நிலவு மாதிரி, இந்த நகைகள் என்பதால்....

தேக்கா, ஆட்டையைப் போட்டு.... தாய்லாந்துக்குக் கொண்டு போனதில் தவறு இல்லையோ... என்று, நினைக்கத் தோன்றுகின்றது நாதமுனி.

இந்த, நகைகளை தாய்லாந்துப் பெண்களே... அணிவதற்கு அழகாக இருக்கும். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சந்தி சித்தனாகன்

54108436.jpg

63119971.jpg

Lieutenant-General Chalor Kerdthes with display of the loot

57078791.jpg

நகைகளை அடையாளம் காட்டும் நம்ம தேக்கா, கருப்பு ஜாக்கெட்டில்

KriangkraiTechamong.jpg

எப்படி இருந்த ஆள், இப்படி...

67633725.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நகைகளும், "வக்கியூம் கிளீனருக்குள்" அடங்கிய நகைகளா?

சவூதி ஆட்களிடம், "பெரிய வக்கியூம் கிளீனர்" போலுள்ளது. :D:icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதமுனி

உங்கள் கதை நன்றாக உள்ளது... இருந்தாலும் என்னால் உங்கள் வணிக பாடங்கள் என்ற கருத்தை எற்றுக் கொள்ள முடியவில்லை.....

I am appalled to read your article/comment on "business lessons". I am not being rude to you but it is a shame you are making risk assessments, visions, partnerships, etc..on fraudulent and theft activities and call them business lessons.

This does nothing but encourage people to believe such fraudulent or theft activities are in fact legitimate businesses- Just how some of the fraudsters in London label themselves as business men and recognised by both societies and organisations..

Perhaps you should try and educate people how such dishonest behaviors can damage and cause disaster in highly profitable relationships - whether it be business or diplomatic.

இன்றைய உலகில், முக்கியமாக தமிழர்கள், சில திருட்டுகளை ஏற்றுக்கொண்டு, அதை செய்பவர்களை திறமையானவர்களாக வர்ணித்து விடுகின்றது... இது வருங்காலதில எந்த விதமான ஒரு தாக்கதை ஏற்படுதும் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

நீங்கள் இந்த திருட்டை மையப்படுத்தி வணிக அல்லது வியாபார நுணுக்கங்களை ஆராய்வது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல கண்டிக்கதக்கது...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Hello Chumma,

mm...mmm, thanks but I like to disagree.

I am not sure if you see the TVs nowadays for programs such as 'Cops Chase', 'Border Control at Airports' involving 'Australian, US, UK' Customs.

They are there NOT to entertain or encourage people to do so but to warn not to try by seeing the desperate and hopeless position of the people who were stopped or detained by authorities.

இந்த நிகழ்வுகள் மகிழ்விற்கு ஆக அல்ல. ஆனால் அவ்வாறு செய்யாதீர்கள் என பிடிபட்டவர்களின் பரிதவிப்பு, பய உணர்வு, அதிர்ச்சி, குழப்பம் மூலம் காட்டுகின்றனர். ஆகா, இந்த வழி முறைகள் எல்லாம் சரிவராது. பிடித்துவி ட முடியாத புதிய வழிமுறைகள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்க வைப்பதல்ல, நோக்கம்.

UK 'Cop Chase' program மில் காட்டப் பட்ட போதையில் கார் ஓட்டிய தமிழர், போலிசாரினால் கைது செய்யப் பட்ட போது, அவரது மனைவி 'ஐயோ, அப்பா, நான் இந்த பிள்ளைகளுடன் என்ன செய்யப் போறேன்' என்று கதறியதைப் பார்த்த எந்த தமிழ் பெண்ணும் தனது குடும்பம் அந்த நிலையில் இருப்பதனை விரும்பார்.

They found out this way the message will be loud and clear than merely saying 'don't risk jail terms by bringing in banned items / driving drunk '.

The stunt programs on TV too start with a warning NOT to try at home. and I too said so at the beginning.

I find it difficult to accept this: இன்றைய உலகில், முக்கியமாக தமிழர்கள், சில திருட்டுகளை ஏற்றுக்கொண்டு, அதை செய்பவர்களை திறமையானவர்களாக வர்ணித்து விடுகின்றது. I never heard of this before. மட்டைக் கோஸ்டி, அடிபாட்டுக்கோஸ்டி, அந்தக்கோஸ்டி, இந்தக்கோஸ்டி என வகைப் படுத்தப் படுவார்களே அன்றி அவர்கள் திறமைசாலிகள் என கூறப் படுவதில்லையே.

உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, நான் அப்பாவித் தனமாக பணத்தினை வியாபாரம் எனும் பெயரில் இழந்து பெரும் துன்பத்தில் ஆளும் நம்வர்களுக்கு இவ்வாறான விடயங்கள் மூலமாக புரிய வைக்க முயல்கின்றேன்.

ஒரு கணக்காளர் எனும் வகையில் இதனை கவலையுடன் பார்கின்றேன்.

Risk எனும் சொல்லுக்கு தமிழ் கருத்தே இல்லாத நிலையில் (இடர் என நான் குறித்தேன்) அதன் தாற்பரியம், ஆழம் புரியாமல், பொருளாதர அவலத்தில் வீழும் எம்மவருக்கு (சாதரணமான மக்கள்) என்னால் ஆனா சிறு உதவி. Professionals எமது வேலை உண்டு, நாம் உண்டு என்று இல்லாது, தொழில் முனைவோருக்கு சரியான உதவிகளை செய்ய வேண்டும் என கருதுகின்றேன்.

நீங்கள் குறிப்பிடும் தவறான வழிகளில் செல்லக் கூடியவர்கள் இங்கே வந்து தான் அப்படி யான வழியினை தேர்ந்து எடுக்கப் போகின்றனர் என நான் கருதவில்லை.

மேலும் இங்கே risk assessments, visions, partnerships போன்றவற்றினை ஒரு professional examples உடன் புரிய வைப்பதற்கு உரிய (ஆடியன்ஸ்) தளம் இது எனவும் நான் கருதவில்லை. அதே வேளை professionals களுக்கு இது குறித்த விளக்கத்தினை நான் அளிக்க வேண்டிய தேவையும் இருக்காது.

நீங்கள் இதனை ஒரு 'professional level' கொண்டு பார்க்கிறீர்கள் என நினைக்கும் அதேவேளை, இதனை வாசித்த 5.000 மேல் பட்டோர் நான் சொல்ல விளைந்த செய்தியினை புரிந்து இருப்பார்கள் என கருதுகின்றேன்.

Again I am not trying to be rude or arguing with you but trying to get my point across. Hope you will understand.

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=2]Latest[/size]

[size=3]Jan 10, 2009, [/size]Somkid Boonthanom எனும் இன்னுமோர் போலீஸ் அதிகாரியும், மேலும் ஐந்து போலீஸ்காரர்களும் நான்கு சவூதியர்கள் கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்படடார்கள்.

[size=5]இவர்களது விசாரணை 2012 மே மாதம் 29ம்திகதி ஆரம்பமாகி உள்ளது.[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=6]Saudi ban on Thailand continues[/size]

[size=3]

[size=5]Saudi Arabia authorities are reminding citizens of a standing order that bans leisure travel to Thailand and have urged travel agencies not to promote travel to any “blacklisted” nation.[/size][/size]

Link to post
Share on other sites
 • 1 year later...
 • கருத்துக்கள உறவுகள்

பல வாசகர்களைக் கவர்ந்த, ஒரு உண்மைக் கதையை...
நாதமுனி தனக்கே உரிய எழுத்து நடையுடன், மர்மக் கதையயாக கொண்டு சென்ற இப் பதிவை...
யாழின் இன்றைய தெரிவாகத் தேர்ந்தெடுத்து, முகப்புப் பக்கத்தில் பதிந்த... நியானிக்கு நன்றி. :)

Link to post
Share on other sites

எழுதின விதம் நல்லது,ஆனால் திருட்டு திருட்டு தானே?.இதில் என்ன வியாபார திறமை வேன்டும் ?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.