Jump to content

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்


Recommended Posts

தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்

இன்குலாப்

தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.

சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.

"இந்திய விடுதலையும் பகத்சிங்கும்' நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. "தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்' என்ற முதல் இயலும், "தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்' என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.

சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.

இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். "பெரியாரின் இடதுசாரித் தமிழ்' என்றும், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். "மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்' அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.

எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.

விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.

இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் "நீரை' "ஜலம்' ஆக்கவில்லை. "சோற்றை' "சாதம்' ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.

இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.

மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'' ("தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்' பக்கம்: 20).

தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:

“முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்...'' இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: "தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'' (பக்கம்: 138).

பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.

மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'' இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.''

பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'' என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.

இந்நூலின் மிக முதன்மையான பகுதி "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:

"... சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.''

இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரவிடக் கொள்கைகள் வெறுமனே இந்து மத்தை வசைபாடுவதற்கு மட்டுமே சுருங்கிப் போனது வேதனை. பெரியார் அவர்களின் கொள்கைளில் முழுமையான யதாரத்தம் இல்லை.

Link to comment
Share on other sites

எவ்வகைப்பட்ட எதார்த்தம் இல்லையென்று தயைகூர்ந்து விளக்கமுடியுமா?அல்லது எது எதார்த்தம் என்பதற்கான வரையரைகளை விளக்குவீர்களா?

Link to comment
Share on other sites

நூலின் பெயர்: பெரியாரியல்

ஆசிரியர் : வே. ஆனைமுத்து

விலை: ரூ. 200 (இரு தொகுதிகளும்)

கிடைக்குமிடம்: வே. ஆனைமுத்து

19 முருகப்பா தெரு (முதல் மாடி)

சேப்பாக்கம்

சென்னை௬00 005

தொலைப்பேசி: (044) 2852 2862

மேற்கண்ட நூலை திரு. தூயவனுக்கு பரிந்துரைக்கிறேன்.

அல்லது முகவரி அளித்தால் வாங்கி அனுப்ப சித்தமாய் உள்ளேன்

Link to comment
Share on other sites

திரவிடக் கொள்கைகள் வெறுமனே இந்து மத்தை வசைபாடுவதற்கு மட்டுமே சுருங்கிப் போனது வேதனை. பெரியார் அவர்களின் கொள்கைளில் முழுமையான யதாரத்தம் இல்லை.

நடக்கவில்லை நாம்: நடத்தப்படுகிறோம்!

எழுதியவர் "சிந்தனைச் செல்வர்" எழிலன்

கடவுள் இல்லை என்று வாதிடும் பகுத்தறிவுக் கொள்கையின் பின்னணியில்...

மதங்களின் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான அறிவுக்குதவாத மூடநம்பிக்கைகளின் மேலான ஆத்திரமும் மக்களை அவற்றின் அடிப்படையிலே மட்டுமே சிந்திக்க வைப்பதன் மூலம் தன்னம்பிக்கையை பலவீனப்படுத்த முயலும் பிழையான அணுகு முறைக்கு எதிராக எழுகின்ற கோபமும் சமுதாயத்தைச் சுதந்திரமாக சிந்தித்து நடக்கவிடாமல் திட்டமிட்டவிதத்தில் விஷமிகளின் பிழையான முறை கெட்ட வழிகாட்டல்களினால் மக்கள் வெறும் பெட்டிப் பாம்புகளாக பணிந்து கிடக்கும்படி அடக்கியொடுக்கப்படுவதன் கொடுமையைப் பொறுத்துக் கொள்ளமுடியாத நியாயமான தர்மம் சார்ந்த ஆத்திரமும், படிப்பறிவே இல்லாதவனும்கூட, எல்லாம் தெரிந்தவனாக வேடம் போடவும் மக்களை ஏய்க்கவும் இந்த இறை நம்பிக்கை துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் எழும் வெறுப்புணர்வும், அரசியலும் நாடுகளும் அநியாயமாக மதங்களின் பெயரால் நிம்மதிக் குறைவுகளுக்கு உட்பட்டு இருப்பதனை அவதானித்து, அதனால் எழும் நியாயமான கோபமும், மக்களின் சிந்தனைப் பலவீனத்தினால் எழக்கூடிய எதிர்காலம் பற்றிய அக்கறையுமே அவர்களை எல்லா அநீதிகளுக்கும் அடிப்படையாக இந்த நம்பிக்கையே இருப்பதாக எண்ண வைக்கின்றது. இதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

“கடவுளை மற ; மனிதனை நினை” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகள் வெறும் நாத்திகமான, குதர்க்கமான வார்த்தைகள் அல்ல. அவை சத்தியத்தின் சுத்தமான வெளிப்பாடுகள்.

“கடவுளே, கடவுளே!” என்று ஓடுகின்றவன் “தனக்கு, தனக்கு” என்ற சுயநலத்தோடேதான் ஓடுகிறான். அதுவே அவனைக் கடவுளை விட்டுத் துரத்தும் நடவடிக்கையும் கூட.

ஆனால் எதுவித கைம்மாறும் கருதாமல், மனிதாபிமானத்தை நினைத்து வாழ்ந்தால் அதுதான் சரியான வழிபாடும் செபமும் மந்திரமும் ஆகும்.

ஏசுக்கிறிஸ்து சொன்னார்: “பிதாவே! பிதாவே என்று உரக்கக் கத்தி செபிப்பவர்கள் என் தந்தையின் இராட்சியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. அவரது சித்தத்தை நிறைவேற்றுபவர்களே பிரவேசிப்பார்கள்” இதற்கும் தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கும் அடிப்படையில் கருத்து வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லையே! அவர் கடவுளே! கடவுளே! என்று கத்திக் கொண்டு தமது கடமையை அலட்சியப்படுத்தும் மனிதர்களைச் சாடுவதில் எந்தத் தவறுமே இல்லையே!

ஆண்டவனே! ஆண்டவனே! என்று சொல்லி மட்டும் காட்டுபவனை நீதிமான் என நம்பும் மூடத்தனத்துக்கு பதிலாகத்தான் தற்போதைய ஆத்திக ஆதிக்க மண்டலங்களின் வண்டவாளங்கள் பல இடங்களிலும் தண்டவாளம் ஏறிக் கொண்டிருக்கின்றனவே!

இத்தகைய நல்ல வார்த்தைகளை ஒரு நாத்திகவாதி சொல்லிவிட்டார். அதனால் அதைக் கேட்காதே என்று சொல்பவன் பச்சை சுயநலவாதியாக மட்டுமே இருப்பான்; இருக்க முடியும். அல்லவா?

நானறிந்த எத்தனையோ தங்கமான மனிதர்கள் உலகின் கண்ணுக்கு நாத்திகர்கள் என்றாலும் நான் கண்ட பல பக்தர்களில் பெரும்பான்மையானோர் பொய் முகத்தினராகவே இருந்திருக்கின்றார்கள்.

உண்மையான பக்தர்களையும் நான் கண்டிருக்கிறேன். மனதார மற்றவர்களுக்குத் தீங்கே நினைக்காத நல்ல நாத்திக இதயங்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.

அதே சமயம் மனதார தீமையை மட்டுமே நினைப்பவர்களாகவும் மேலுக்கு பக்திப் பூச்சு என்ற வண்ணத்தைப் பூசிக் கொண்டு, இறைவன் பெயரில் ஏமாற்றித் திரிபவர்களாகவும் அலையும் நடமாடும் பசாசுகளையும் பலரை நான் நேரிலேயே கண்டு, பழகி அனுபவப்பட்டிருக்கிறேன். அங்கும்தான். இங்கும்தான்.

இக்கட்டுரையை அவர்களில் சிலர் வாசிக்க நேரலாம். அப்போது அவர்கள் என்னைத் திட்டவும் கூடும. ஆனால் அதற்காக நான் உண்மையை விட்டு அகல்வது சரியாகாதே!

உண்மையாக நான் இறைவனின் உதவியைக் கேட்டு நின்றதுண்டு. தன்னந்தனியனாக மனதால் அழுததும் உண்டு. என் மனதார நான் கேட்ட காரியங்கள் நடந்ததாக உணர்ந்தபோது, அவற்றை இறைவனின் சித்தப்படி எனக்கு நடப்பதாகவே நான் எடுத்துக் கொண்டேன்.

இதில் புதுமை என்பதாய்ச் சொல்ல எதுவுமே இல்லை. ஆனால் நமக்காக என்ன நடக்கவுள்ளதோ அது நமக்காக நடக்கத்தான் செய்யும் என்றும் எதுவும் நடப்பது நமது நன்மைக்காகத்தான் என்றும் நான் நம்பிக் கொள்வேன்.

இந்த எண்ணத்தில் இனந்தெரியாதவொரு நிம்மதியை நான் உணர்ந்ததுண்டு. எனக்கு நடந்தவற்றையும் நடக்கின்றவற்றையும் நானே அவதானித்தபோது, நான் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை என்னவெனில் நாம் நாமாக நடக்கவில்லை; நம்மையுமே அறியாத விதத்தில் ஒரு சக்தியால் வழிநடத்தப்படுகின்றோம் என்பதுதான்.

வெறுமனே விதண்டாவாதமாகப் பேசுவதில் பொழுது போகலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பேசுவதில்தான் பொழுதுகள் அர்த்தம் பெறத்தக்கனவாகின்றன.

ஆழ்ந்த சிந்தனையில் எழும் நாத்திகவாதம் பொய் சொல்வதில்லை. அது சத்தியமாகத் தான் கண்டதை உரைப்பதனால்தான் அது தீமை எனத் தான் உணர்வதைச் சாடுவதற்குத் தயங்குவதில்லை. அதனால்தான் அச்சமின்மையை அது உண்மையாகவே பிரதிபலிக்கின்றது.

நன்றி - தமிழமுதம்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசுரித்ததுக்கு நன்றி

Link to comment
Share on other sites

"திராவிடம்" "நாத்திகம்" வேறு வேறு....

கம்யூனிஸ்டுகள் கூட நாத்திகர்கள் தான்.... இரண்டையும் போட்டு குழப்பக் கூடாது... பெரியார் சொன்ன சமூகக் கருத்துகளை ஏற்கத் திராணியில்லாதவர்கள் அவருடைய நாத்திகக் கொள்கைகளை வைத்து அவரைத் தாக்க முனைகிறார்கள்....

பெரியாரின் தொண்டர்களோடு நேருக்கு நேர் விவாதம் செய்ய இவர்கள் தயாரா?

Link to comment
Share on other sites

அதிகாரங்களுக்கு எதிரான விமர்சனம்தான் பெரியாரியல் ! அது இந்து மதமாயினும் சரி , எந்த மதமாயினும் சரி மக்களை முட்டாளாக்குவது , அடிமைப்படுத்துவது தன் நலன்களுக்காக அளுமை செய்வது என இவைதான் அதன் அடிப்படை பண்புகள். இதில் இந்து மதத்தை மட்டும் என்று வேலைத்திட்டம் ஏதும் இல்லை. அதையும் பெரியார் விளக்கி விட்டார் 'ஏன் இந்து மதத்தை மட்டும் அதிகம் சாடுகிறேன் என்றால் . நாம் வீடு சுத்தம் செய்கிறோம் எந்த அறையில் குப்பை அதிகம் இருக்கிறதோ அதைத்தான் முதலில் சுத்தம் செய்வோம் அது போலத்தான்" . அவர் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அங்கும் அவர் இதே வேளையை எந்த மதம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதை ஏதிர்த்து செய்துகொண்டிருப்பார்.

Link to comment
Share on other sites

சமீபத்தில் கூட திராவிடர் கழகத்தினர் புனித ஆவியால் இட்லி வேகுமா என்று கேட்டிருந்தனர்.... நாத்திகத்துக்கு இந்த மதத்தை தான் தாக்க வேண்டும் என்று குறிக்கோள் எல்லாம் இல்லை.... ஏதோ நாத்திகவாதிகள் ரெகுலராக சர்ச்சுக்கும், மசூதிக்கும் போய் வருவது போல சிலர் சந்தேகம் கொள்கின்றனர்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.