Archived

This topic is now archived and is closed to further replies.

¾õÀ¢Ô¨¼Â¡ý

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !

Recommended Posts

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !

அரசியல் அரங்கில் தாங்கள் தற்போது எடுத்து வைக்கும் விதண்டா வாதங்கள் தாங்கள் இன்னும் ஒரு தலைவராக பக்குவப்படவில்லையோ என எண்ண வைக்கிறது.

உங்களது கட்சியும், கூட்டணியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை. அது இயல்பானதே. சமீப காலங்களாக மேடைகளில் உண்மை நிலையை மறைக்கும் விதமாக முழங்குகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேள்விகள்.

//வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பான ஆட்சியை செய்துள்ளார்.// என உங்களது மனம் கவர்ந்த தலைவியை குளிர்விக்க முழக்கமிடுகிறீர்கள்.

நீங்கள் அடிக்கடி மனசாட்சி என முழக்கமிடுவீர்களே அந்த மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது உண்மையா? சுனாமி நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் கலந்துகொண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது. அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை. அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?

அ.தி.மு.க கரைவேட்டிகளிடம் அதிகாரத்தை கொடுத்து அரசு அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள், அரிசி, பருப்பு என வழங்கி அரசியல் பார்த்தது அதிமுக அரசு. பாதிக்கப்பட்ட மக்கள் உடனடி உதவிக்காக பல கிலோமீட்டர் தொலைவு அலைக்கழிக்கப்பட்டனர். மன்னர் மாளிகையில் பிறந்த முதலமைச்சர் செல்வி ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆறுதல் (!) வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல அரசியல் தலைவர்கள் நேரடியாக தரைவழியாக ஆறுதல் சொல்ல வந்ததை பார்த்து தங்கத்தாரகை (!) பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்த மையங்களில் பார்த்தார்.

அறிவிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களை முறைப்படி செயல்படுத்த மக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுக்களை உருவாக்க பலர் அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாமல் மறுபடியும் அ.தி.மு.க கரைவேட்டிகள் சொன்ன ஆட்களுக்குத் தான் நிவாரணம். கணிசமான தொகையை அ.தி.மு.க கட்சியின் கரைவேட்டிகள் கொள்ளையிட்டனர். அதன் பங்கு போயஸ் தோட்டம் முதல் மன்னார்குடி கும்பல் வரை போனதும் மறைக்கமுடியாத உண்மை.

கடற்கரை பகுதிகளின் நீண்டகால திட்டமிடலுக்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் உலக வங்கி கொடுத்த தொகை $434 மில்லியன். தமிழ்நாட்டு, பாண்டிச்சேரி வாழ் கடற்கரை மக்களின் கல்வி மற்றும் பயிற்சிக்காக $2.5 மில்லியன் வழங்கியது. ஆசிய வளர்ச்சி வங்கி (உலக வங்கி கிளை) $143.75 மில்லியன் தொகை மறுவாழ்வு திட்டங்களுக்காக போக்குவரத்து கட்டுமானங்கள், கிராம சீரமைப்பு, வாழ்வாதாரங்களை மீட்கும் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கியது. ஜப்பான் நிதியிலிருந்து $2.5 மில்லியன் தொகை வழங்கப்பட்டது. இது தவிர மத்திய அரசு நிதி மற்ரும் பொதுமக்கள் கொடுத்த நிதி ஏராளம். இந்த பணத்தின் கணக்கு அல்லது அது சார்ந்த திட்டங்கள் எங்கே? வெளிப்படையான தன்மையே ஒரு நல்லாட்சிக்கு அடிப்படை (ட்ரன்ச்பரன்cய் இச் தெ பசிச் ஒf கோட் கொவெர்னன்cஎ). அதனால் இந்த தகவல்களை உங்களால் ஆதாரத்துடன் விளக்கமுடியுமா? வீரச்சவடால்களை கேட்டு தமிழ்மக்கள் வாழ்வு புண்ணாகியது மட்டுமே மிச்சம்.

( கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் கோடிமுனை பகுதியில் பாதிக்கப்பட்ட மகக்ளுக்காக குளச்சல் களிமார் பகுதியில் உப்பளத்தை நிரப்பி வீடுகட்ட சரிசெய்யப்படுகிற நிலம். படம் எடுக்கப்பட்டது டிசம்பர் 29, 2005ல். இதில் வைகோ சொன்ன படி அரசு வேகமான நடவடிக்கை எடுத்து கட்டிய வீடு எங்கே? வீடு கட்ட பணம் கொடுப்பதும் அரசு அல்ல, காரித்தாஸ் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள்)

மக்கள் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் திரட்டிய உள்நாட்டு வெளி நாட்டு நிதியில் தான் அதிகமான புனரமைப்புகள் நடந்தன. இன்றும் நடைபெறுகிறது. மக்கள் இன்னும் தகரம், ஓலைக்கிற்று கொட்டகைகளிலும், வெலையில்லாமலும், மனதிடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாடும் அவலம் இன்றும் கடற்கரை கிராமங்களில் நிதர்சனம். கடந்த டிசம்பரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் ஆய்வு செய்ததில் நான் கண்ட உண்மையும் இதுவே. மக்களின் கண்ணீரை வார்த்தை பசப்புரைகளால் மறைத்துவிட முனைகிறீர்களா?

மக்கள் பசியில், வறுமையில், வேலையில்லாமல், பேரழிவுகளால் செத்துக்கொண்டிருக்கையில் ஹெலிகாப்டரில், குளிர்சாதன மேடைகளில் வலம் வருவது தான் முதல்வரின் சிக்கனமும், மக்கள் பணம் மீதுள்ள அக்கறையா? ரோம் பற்றி எரிந்தவேளை பிடில் வாசித்த சார் மன்னன் வரலாறு நீங்கள் மறந்திருக்கலாம்.

மக்கள் வாழ்விற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், உலக வங்கி கடன், மத்திய அரசு நிதி முதல்வர் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யவும், அவருக்கு பிடித்தமான பச்சை நிறத்தில் கழிப்பறை கட்டவும் என வீணடிப்பது தான் உங்கள் பார்வையில் நல்லாட்சியா?

அய்யாவும், அண்ணாவும் தந்த வழியில் நடப்பதாக முழங்கும் நீங்கள் எங்காவது அய்யாவோ, அண்ணாவோ, மக்கள் தலைவர் காமராசரோ இப்படிப்பட்டவைகளை ஏற்றதாக படித்ததோ பார்த்ததோ உண்டா?

மக்கள் வாழ்வு மீது அக்கறை இருந்தால் கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை புள்ளிவிவர கணக்குடன் வெளியிடுங்களேன். அதில் தமிழகம் வாங்கிய கடன் தொகை, நிவாரண நிதி, மத்திய அரசு நிதி இவற்றையும் அது செலவிடப்பட்ட விதத்தையும் வெளியிடும் தைரியமும், நேர்மையும், யாருக்கும் வணங்காத தன்மையும் உங்களுக்கு உண்டா?

மக்களை ஏமாற்ற உணர்ச்சிகளை வீரச்சவடால்களில் குழைத்து சொல்லெறியும் உங்களுக்கு அரசியலில் நீடிக்க, கட்சியை தக்க வைக்க இதெல்லாம் தேவைப்படுகிறது. என்ன செய்வது, தமிழ்மக்களும் உணர்ச்சி வசப்படும் மக்கள், உங்கள் பேச்சில் மயங்கி விடலாம் என கனவு காண்கிறீர்கள். கனவு பலிக்குமா தேர்தல் பதில் சொல்லும்.

கேள்விகள் தொடரும்...

நன்றி - திரு/ http://aalamaram.blogspot.com/2006/04/blog...og-post_08.html

Share this post


Link to post
Share on other sites

இதையெல்லாம் விட முக்கியமான ஒரு கேள்வி தற்போது அம்மையார் இராமநாதபுரம் பிரச்சாரத்திற்கு வந்த போது அங்கிருந்த ஈழத்தமிழ் அகதிகளெல்லாம் 2 நாட்கள் அகதிமுகாமில் முடக்கப்பட்டு அடையாள அட்டைகள் எல்லாம் பறிக்கப்பட்டனவே. இதைப்பற்றி வை.கோ ஒன்றுமே சொல்லவில்லையே. இவரா இந்த அம்மையார் தலைமையில் ஈழத்தமிழர்களுக்காக பாடுபடப் போகின்றார் :roll: :D

Share this post


Link to post
Share on other sites

வைகோ பதில் சொல்லுவது இருக்கட்டும்... இங்கே வைகோவுக்கு ஜால்ரா தட்டுபவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

Share this post


Link to post
Share on other sites

பாடா சட்டத்தின் கீழ் கைதாகி, வேலூர் சிறையில் அடைபட்டிருந்தபோது எழுதிய நூலை வைகோ ஒருமுறை வாசித்துப் பார்த்து, அதில் உள்ள கருத்துக்கள், பேச்சுக்கள் உண்மை என்றால் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அகில இந்தியச் செயலாளர் ராஜா அதை வெளியிட்டார். பின்னர் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ராஜா பேசுகையில்,

தமிழக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது, வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத் துறையின் பங்களிப்பு 18 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு ஜெயலலிதா என்ன பதில் கூறப் போகிறார்?

வைகோவுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். வேலூர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த காலத்தில் எழுதிய நூலை (ஜெயலலிதா ஆட்சியின் அடக்குமுறை ஆட்சி குறித்த நூல்) அவரே ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.

அதில் எழுதப்பட்டுள்ள பேச்சுக்கள், கருத்துக்கள் உண்மையானவை என்றால், தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என்று பெருமை அடித்த வைகோ இப்போது அந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவோடு சேர்ந்துள்ளார்.

இப்போது சேது சமுத்திர திட்டத்தை வைகோ ஆதரிக்கிறாரா? இல்லையா? இந்த விஷயத்தில் நெஞ்சைத் தொட்டு உண்மை பேச வைகோ தயாராக இருக்கிறாரா?

பொடாவில் இருந்து வெளியே வந்தாலும் வைகோ இப்போதும் ஒரு கைதி தான். அவர் இப்போது சூழ்நிலைக் கைதியாக ஜெயலலிதாவின் பிடியில் சிக்கியிருக்கிறார்.

தங்கள் கூட்டணிக்கு பலமில்லை என்பதால் தான் தயாநிதி மாறனை விமர்சித்து தனி மனித தாக்குதலில் இறங்கியிருக்கிறார் வைகோ. அதற்கு வைகோவுக்கு கொஞ்சமாவத அருகதை இருக்கிறதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைக்க எதிர்க் கட்சிகள் சதி செய்வதாக ஜெயலலிதா பேசுவது, அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே காட்டுகிறது என்றார்.

புரட்சிப் புயலல்ல.. புழுதிப் புயல்:

இதற்கிடையே தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தமீமுல் அன்சாரி,

ஒரு தனியார் டிவி தன் முகத்தைக் காட்டவில்லை என்ற தரங்கெட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு வைகோ தள்ளப்பட்டுவிட்டார். புரட்சிப் புயல் என்று சொல்லப்பட்டவர் இப்போது புழுதிப் புயல் ஆகிவிட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனாக இருந்தவர் இப்போது எட்டப்பனாகிவிட்டார். தேர்தல் முடிந்தவுடன் அவரை ஜெயலலிதா கழற்றிவிட்டுவிடுவார். ஜெயலலிதாவைப் போய் நம்பி அங்கு போயிருக்கிறார்.

தனது கல்லூரியை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டியவர் தான் விஜய்காந்த். இவர் எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.

நன்றி - தற்ஸ்தமிழ்

Share this post


Link to post
Share on other sites

சிரிப்பு என்ன என்டா அம்மா வைகோ வீட்டுக்கு போனவவாம்....குலோப் ஜம் குடுத்தவராம்...எனக்கு என்ன சந்தோஷம் ன்டா அல்வா குடுக்கலேயே என்டு...நான் நினைக்கிறன் அது கருணாநிதிக்கு மட்டும் தான் குடுப்பார் ஆக்கும்.... :oops: :oops: :D அது சரி அம்மா சொன்னவாவாம்....சகோதரர் நல்லா பிரச்சாரம் பன்னிறாறாம்...உள்ள தூக்கி போடேக்க இந்த சகோதர பாசம் எல்லாம் எங்க போனதுங்க அம்மணி? :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

சுண்டல்

உமக்கு புரியவில்லையா முதலில் ஏன் குலோப் ஜாம் அம்மையார் கொடுத்தவரென்று. குலோப் ஜாம் முதலில் தடவிவிட்டு பிறகு அம்மையார் கொடுக்கப் போற அல்வாவை மென்றால் தான் ஒட்டாமல் சாப்பிடலாம். :P :D

Share this post


Link to post
Share on other sites

சிரிப்பு என்ன என்டா அம்மா வைகோ வீட்டுக்கு போனவவாம்....குலோப் ஜம் குடுத்தவராம்...எனக்கு என்ன சந்தோஷம் ன்டா அல்வா குடுக்கலேயே என்டு...நான் நினைக்கிறன் அது கருணாநிதிக்கு மட்டும் தான் குடுப்பார் ஆக்கும்.... :oops: :oops: :D அது சரி அம்மா சொன்னவாவாம்....சகோதரர் நல்லா பிரச்சாரம் பன்னிறாறாம்...உள்ள தூக்கி போடேக்க இந்த சகோதர பாசம் எல்லாம் எங்க போனதுங்க அம்மணி? :lol::lol:
எல்லா பொண்ணுங்களும் ....ஸ்ரார்ட்க்கு...சகோதரம் அப்படி... இப்படி கப்சா காட்டுவாங்க...பிறகு றூட்டை மாத்திப்பாங்க...இல்லைங்களா.....அ

Share this post


Link to post
Share on other sites

ஜயா தான் கொடுத்தவராம்......

:D:lol: சரி அதுல அப்பிடியும் ஒரு வழி இருக்கா? :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

எல்லா பொண்ணுங்களும் ....ஸ்ரார்ட்க்கு...சகோதரம் அப்படி... இப்படி கப்சா காட்டுவாங்க...பிறகு றூட்டை மாத்திப்பாங்க...இல்லைங்களா.....அ

Share this post


Link to post
Share on other sites

வை கோ சாமி சுனாமி நிதியை அம்மாவிடம் கொடுக்கச் சென்று அவமானப் பட்டதை அப்போது பத்திரிகைகளிலெல்லாம் முழங்கினாரே. :oops: :oops: அதற்கிடையில் மறந்து விட்டாரா?? ஒரு வேளை முன்பு அத்வாணிக்கு வந்ததாக ஜெயலலிதா சொன்ன ஞாபகமறதி நோய் இப்போ வை கோ விற்கு வந்து விட்டதா?? :roll: :cry: :roll: :cry:

Share this post


Link to post
Share on other sites

அது சரி - வை கோ - தமிழக அரசியலில்- ஒரு - - செல்லா காசு என்று - சொன்ன தமிழக உறவுகள்...... ( உண்மையா நீங்க அதுதான் என்றால்) . தீவிர கவனம்- வை கோ - பற்றி எடுப்பது ஏன்?

சரி அது அவர்கள் பிரச்சினை - செந்தில் - 'கலை 'குடும்பம் விஜயகுமார் - முரளி - !

மற்றது - எங்க உறவுகள் கிட்ட !

சிங்களவன் - எங்க குடும்பத்தை சீரழிக்கிறான் - என்று தெரிந்ததும் - ஓடி வந்து குரல் கொடுத்த ஒரு மனிதனை சீண்டி பார்க்கும் உறவுகள் கிட்ட கேட்க நினைப்பது-

நாளைக்கு - உங்க சிஸ்டர் -சிங்களவனால - உடம்பில துணி இல்லாம இருக்கும் போது - அடுத்தவன் வந்து காப்பாத்தினால் -

காப்பாத்தினவன் குடும்பம் எப்பிடி இருக்கும் என்றா ஜோசிப்பிங்க?

நல்ல கருத்துகளடா சாமிங்க! 8)

Share this post


Link to post
Share on other sites

ஒரு மேலைததேயன் சொன்ன வசனம் ஞாபகத்துக்கு வருகின்றது.

அவர்கள் முதலில் யுதரைத் தேடி வந்தார்கள்

நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் யுூதன் இல்லை

அவர்கள் கம்னூசிகளைத் தேடி வந்தார்கள்

நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் கம்னீசியவாதியல்ல

என்னைத் தேடி வந்தார்கள்

யாரும் வாய்திறக்கவில்லை-ஏனென்றால் ..........

இது தான் வர்ணன் சொன்னதற்கு எனது கருத்து.

Share this post


Link to post
Share on other sites

வைகோ தேவையில்லாமல் நாம் சாதிப்போம் என்று மார்தட்டிப் போனவர்கள் எல்லாம் கடைசியில் வைக்கோவை வசைபாடித்தான் தங்கள் பலத்தை காட்டவேண்டிய நிலைக்கு போனது துப்புக் கெட்ட நிலையில் இருக்கும் இவர்களது அரசியல் வங்குரோத்து நிலையைக் காட்டுகின்றது.

தாங்கள் என்னவோ நல்லவர்கள் போலவும், நேர்மை, நீதிக்கும் தலைவணங்குவது போலவும் உரைக்க சிலர் இங்கே வக்களாத்து வாங்குவது மூக்கு முட்டப்பிடித்த புரியாணியின் வசனையை எமக்கு அடையாளப்படுத்தி சொல்லித் தருகின்றது.

ஒரு காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று வீராப்பு பேசியவர்களையும், பின்பு கூடிக் கொஞ்சிக் குலாவியவர்களையும், அல்லது மதவாத பிஜேபியோடு கூட்டணியே வைக்கமாட்டோம் என்று விட்டு பின் பதவி சுகத்திற்காக மூட்டணி அமைத்த திமுகாவைப் பற்றி எமக்க நக்றாகத் தெரியும்.

கருணாநிதியின் மகனும், மதுரை பேட்டை ரவுடியுமான அழகிரி செய்த கொலையை மறைப்பதற்காக எத்தனை கோடிகள் போயஸ் காடினுக்கு பரிமாறப்பட்டன என்பதும் நாம் அறிவோம்.

இவை எல்லாம் இராச தந்திரம் என்று மார்தட்டினாலும், மற்றவர்கள் செய்யும் போது தான் ஏனோ உறைக்கின்றது கண்டியளோ??

:wink:

Share this post


Link to post
Share on other sites

சரிப்ப தான் வருது..வைகோ க்கு மட்டும் பதவி ஆசை .ல்லையாக்கும்..வைகோ மட்டும் தன்னோட ஆரம்ப கால கொள்கைகளை தானே கடைபிடிச்சிட்டு வாரார் ஆக்கும்....வை கோ க்கு மட்டும் கோடிக்கனக்கில போகலையாக்கும்...

வைகோ க்கு காச பார்த்தாலே அலர்ஜியாக்கும்..வைகோவா உள்ள தூக்கி போட்டா அம்மாவ திட்டிவிங்க..அப்புறம் அனைச்ச கிட்டா அம்மா நல்லவவா மாறிடுவா இது எல்லாம் சந்தர்ப வாதம் இல்லையாக்கும்...செம ஜோக் பா.........

வைகோக்கு தனித்து நிற்க வக்கில்ல .....விஜயகாந் தனித்து நிற்க வில்லையா..இரண்டு கட்சிகளையும் வமர்சித்து வட்டு..வைகொ இரண்டையும் விமர்சிபார்..அப்புறம் ஒன்டோட போய் ஒட்டி கிட்டு ஒட்டு அரசியல் நடத்திட்டு இருப்பார்.....

Share this post


Link to post
Share on other sites

சுண்டல் வீம்புக்கு தனித்து நின்று தோக்க வைக்கோ ஒன்ரூம் முட்டாள் அல்ல, அவர் படித்தவர் நாலும் தெரிந்தவர், ஏற்கனவே தனித்து நின்று போட்டியிண்டு தனது பலத்தின் அளவை பார்த்தவர், அவ்ருக்கு தெரியும் தனித்து நின்றால் எவ்வளவு இடம் கிடைக்கும், திமுகவுடன் நின்றால் என்ன கிடைக்கும், அதிமுகவுடன் நின்றால் எவ்வளவு இடம் கிடைக்கும், இப்போது தேவையானது அவரது கட்சியை பலப்படுத்துவதே, அதுவே அவரது குறிக்கோல். எதிர்காலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான காத்திருப்பு இது, "ஓடு மீன் ஓட ஓடவிட்டு உறு மீன் வர காத்திருக்குமாம் கொக்கு" புத்திசாலி எப்போதும் திட்டமிட்டுத்தான் காய் நகர்த்துவான். வைகோ புத்திசாலி, அப்ப நீங்க?

Share this post


Link to post
Share on other sites

வைகோ புத்திசாலியா இல்லை அடி முட்டாளா என்று தமிழகத்தில் இருப்பவனுக்கு தான் தெரியும்.... ஆம்பளையா என்று அறிவுகெட்டத்தனமாக கேட்டு ஒரு சின்னப்பையன் அதையே திருப்பிக் கேட்டவுடன் கண்ணீர் விடுபவர் தான் இந்த வைகோ....

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பவர் தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ?? இந்த இலட்சனத்தில் இவர் ஜெயலலிதா அரசில் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாக அறிக்கை விடுவதும் ஏனோ?? ஓஓஓ இதுவா புத்திசாலித்தனம. :roll: :roll: :P

Share this post


Link to post
Share on other sites

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது - இந்த அறிவுரை வைகோவுக்கு இந்த நேரத்தில் சரியாகப் பொருந்தும்....

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பவர் தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ?? இந்த இலட்சனத்தில் இவர் ஜெயலலிதா அரசில் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாக அறிக்கை விடுவதும் ஏனோ?? ஓஓஓ இதுவா புத்திசாலித்தனம. :roll: :roll: :P

அவர் எந்த அரசில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பார், ஒரு ஈழத்தமிழரான உமக்கு அவர் குரல்கொடுப்பதில் என்ன பிரச்சினை? :shock: :shock: :shock:

Share this post


Link to post
Share on other sites

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது - இந்த அறிவுரை வைகோவுக்கு இந்த நேரத்தில் சரியாகப் பொருந்தும்....

அப்ப என்ன ஜே யோட ஒட்டி உறவாட சொல்லுகிறீர்களா...???? :P :P :P

உங்களுக்கு ஓண்று தெரியுமா.? வைகோ கலைஞரோடு இருப்பதைவிட ஜே யோடு இருப்பதுதான் அவருக்கு பாதுகாப்பு.... காரணம் கலைஞர் அவரை உள்ள போட மாட்டார்.... :(:D:lol:

Share this post


Link to post
Share on other sites

Birundan wrote:

அவர் எந்த அரசில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பார், ஒரு ஈழத்தமிழரான உமக்கு அவர் குரல்கொடுப்பதில் என்ன பிரச்சினை?

நான் கேட்டது

தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ??

Share this post


Link to post
Share on other sites

நான் கேட்டது

தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ??

தமிழ்நாட்டில் ஈழத்தவருக்கு எதிராக கொடுமைகள் நடப்பதே இல்லை எண்று சொல்லும் லக்கிதான் இதுக்கு பதில் சொல்லவேணும்.... :P :P :P

Share this post


Link to post
Share on other sites

ஏன் வை கோ விற்கு வக்காலத்து வாங்குவோரும் பதிலளிக்கலாமே

Share this post


Link to post
Share on other sites

ஏன் வை கோ விற்கு வக்காலத்து வாங்குவோரும் பதிலளிக்கலாமே

ஏன் நாங்களும் பதில் அளிக்கலாம்தான்..... ஆனால் தமிழகத்தில் ஈழத்தவர் மகிழ்வாய் வாழ்கிறார்கள், நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை... எண்று கதை அளக்கும் உங்கள் நண்பர் பார்த்து மன வேதனைப்படுவார்... இதுக்கு அவரே பதில் சொல்லட்டுமே....! :(:D:lol:

Share this post


Link to post
Share on other sites

"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?

Share this post


Link to post
Share on other sites