Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன் தொடர்பான வழக்கில், ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக மேல்முறையீடு செய்யப்படாததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை.

விளக்குகிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_9281.html

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம் நீட்’ தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்குவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி சாகும்வரையிலான பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பாதை இயக்கத்தினர் மீது காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அறவழிப்போராட்டத்தை ஒடுக்கிய தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வன்மையாக எதிர்ப்பதாகச் சொல்லும் அதிமுக அரசு, அதே நோக்கத்திற்காக அறப்போராட்டம் செய்யும் இளைஞர்களைக் குண்டாந்தடியாகக் கைதுசெய்து அப்புறப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல்தர மறுத்து, எதேச்சதிகாரப்போக்கோடு மாநிலத்தின் தன்னுரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கவோ, அரசியல் நெருக்கடி கொடுக்கவோ நெஞ்சுரமற்ற தமிழக அரசு அப்பாவி இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுக்க முனைவது வெட்கக்கேடானது. மதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தினர் நீட் தேர்வு முறைக்கெதிராக சென்னையில் அமைந்துள்ள அவ்வியக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி முதல் காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேரில் அணுகி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னெடுப்புகளை விரைந்து செய்கிறோம் எனும் நம்பிக்கை மொழிகளைத் தர வேண்டிய தமிழக அரசு, அதற்கு நேர்மாறாகக் கைதுசெய்து போராட்டத்தைக் குலைக்க முனைவது சனநாயகத்துரோகமாகும். தங்கை அனிதா தொடங்கி 13 பிஞ்சுகள் நீட் எனும் கொலைக்கருவிக்கு இரையாகியுள்ள நிலையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு முற்று முழுதாய் பொசுங்கிய தற்காலத்தில் நீட் தேர்வை எதிர்த்து அறப்போர் செய்ய வேண்டிய தமிழக அரசு அதிகாரமற்ற எளியப் பிள்ளைகள் மீது பாய்வது அரச நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர் நிற்கையில், அதே நோக்கத்திற்காக பட்டினிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைவது மக்களின் உணர்வுகளுக்கெதிரான படுபாதகச்செயலாகும். நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் முற்றாகச் சிதைக்கும் மத்திய அரசின் மனுதர்மக் கோட்பாட்டிற்கும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவோம் எனக்கூறி பல ஆண்டுகளாகத் தமிழக மாணவர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசின் ஆளுமையற்ற செயல்பாட்டுக்கும் எதிரான கோபத்தின் வெளிப்பாடே இத்தகைய போராட்டங்கள் என்பதை எவராலும் மறுக்கவியலாது. ஆகவே, அதனைப் புரிந்துகொண்டு நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்டுள்ள மக்கள் பாதை அமைப்பினர் மீது எவ்வித வழக்கும் தொடராது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி https://www.naamtamilar.org/seeman-condemns-tn-police-forcefully-evict-makkal-pathai-members-who-were-protested-against-neet/    
  • கிருஷ்ணா முகுந்த முரரே ... கிருஷ்ணா முகுந்தா முரரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே கருணா சாகரா கமலா-நாயகா கருணா சாகரா கமலா-நாயகா கனகாம்பர தரி கோபாலா கனகாம்பர தரி கோபாலா கிருஷன் முகுந்தா முரரே கலிங்க-நார்த்தனா கம்ச நிசுதானா கமலாயதா-நயன கோபால கிருஷ்ணா முகுந்தா முரரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே குட்டிலா-குந்தலம் குவலயா-தலனிலம் மதுரா முரளி தவலோலம் கோட்டி மதான லாவண்யம் கோபி புண்யம் பஜாமே கோபாலம் கோட்டி-ஜன மன மோகன் தியபகா கோட்டி-ஜன மன மோகன் தியபகா கோட்டி-ஜன மன மோகன் தியபகா குவலய தலனிலா கோபாலா குவலய தலனிலா கோபாலா குவலய தலனிலா கோபாலா கிருஷ்ணா முகுந்தா முரரே கிருஷ்ணா முகுந்தா முரரே முரரே    
  • கடற்கரும்புலி மேஜர் மங்கை       கற்பிட்டிக் கடலில் சிங்களக் கடற்படையின் கடலரசனைத் தாக்கியழித்த கடற்கரும்புலி. “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி கூறினாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் அனேகமான போராளிகளுக்கு அவள் நீச்சல் பழக்கியிருந்தாள். இரவு பகல் பாராது பிள்ளைகளோடு ஒருத்தியாக மங்கை நிற்பாள். எங்கடை ‘மங்கை அக்கா எந்தக் கஸ்டமான பயிற்சிகளையும் தான் முன்மாதிரியாகச் செய்து காட்டித்தான் எங்களைச் செய்யச் சொல்லுவா. எங்களுக்கு கஸ்டமாக இருந்தாலும் மங்கை அக்காவே செய்யிறா. ஏங்களால ஏலாதோ” என்று செய்து போடுவம். எப்போதுமே முன்மாதிரியான போராளியாகவே நாம் அவளைக் கண்டோம். பிள்ளைகள் நாலுமுப்பது மணிக்கு நித்திரை விட்டு எழுந்தபோதெல்லாம் அவள் நாலு மணிக்கே எழுந்து விடுவாள். எந்தப் பிள்ளையும் நீந்தத் தெரியாமல் இருக்கக்கூடாது. குறைந்தது ஐந்து கடல் மைல்களாவது நீந்திப் பழகியிருக்க வேண்டுமென்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அதற்காக மழையென்றும் வெயிலென்றும் பாராது பிள்ளைகளுடன் நனைந்தும் காய்ந்தும் நின்றாள். பிள்ளைகளை நீந்தப் பழக்குவதற்கென கடலில் இறக்கி விட்டு அலைகளில் நனைந்தபடி அவள் நிற்பாள். கால்கள் விறைத்தாலும் கண்கள் தூரத்தே புள்ளியாய்த் தெரியும் எதிரியின் விசைப்படகின் அசைவினைப் பார்த்தபடி நிற்கும். ஒருமுறை வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்துக்கு மங்கை அலுவலாகச் சென்றிருந்தாள். அங்கிருந்து நான்கு படகுகள் இவர்களது பக்கம் வருவதாகச் செய்தி வந்தது. பிள்ளையள் நீந்துவதற்குப் போவார்களே, நான்கு படகுகளும் தாக்குதல்தளை நிகழ்த்தலாம், பிள்ளைகள் கடலுக்குள் இறங்கினால் ஆபத்து. விடியுமுன்னரே அவள் சைக்கிளில் நீண்டமைல்கள் கடந்து கண்களில் சிவப்போடு வந்து சேர்ந்தாள். அவ்வளவு தூரம் ஒவ்வொரு போராளிகளையும் கண்ணுக்குள் வைத்துப் பேணினாள். போராளிகள் வீணாக இறக்கக் கூடாது. இந்தப் போராட்டத்தில் நிறையச் சாதிக்கவேணும் என்பதில் தீவிரமாக நின்றாள். ஒவ்வொரு போராளிகளுக்கும் படகு எஞ்சின் உதிரிப் பாகங்களிலிருந்து படகு ஓட்டுவது வரை சகல துறைகளையும் கற்றுக் கொடுத்தாள். கட்டுமரம் ஓடப் பழக்கி குல்லா வலிக்கக் கற்றுக் கொடுத்தது வரை அவள் சாதித்தது ஏராளம். கடலைப் பற்றித் தெரியாது. நீச்சல் பற்றி அடி தலை தெரியாது வந்த போராளிகளே அனேகம். ஐயோ நான் தாழப்போறன் எனக்குப் ‘போசா’ தாங்கோ என்று மூச்சுமுட்டி நிற்கும் போராளிகளுக்கெல்லாம் அண்ணையை (தலைவரை) நினைச்சுக் கொண்டு பயிற்சி எடுங்கோ, கஸ்டம் தெரியாது என்று நம்பிக்கையூட்டி தைரியமளித்து பிள்ளைகளோடு எப்போதும் தானும் ஒரு பயிற்சியாளராகவே நின்றாள். எப்போதும் தலைவரின் வளர்ப்புப் பற்றியும் போராட்டம் பற்றியும் சொல்லிச் சொல்லி வாழ்ந்த போராளி அவள். அவளது முதற்சண்டை ஆனையிறவு ஆகாய – கடல் – வெளித்தாக்குதலாக அமைந்தது. அதற்கு அவள் விநியோகக் குழுவில் ஒருத்தியாகச் சென்றாள். அந்தச் சண்டையில் நான் திரும்பி வருவேன் என்ற உறுதியோடு தான் சென்றாள். கையில் சிறிய காயத்தோடு வந்தவளிடம் நிறையக் கனவுகள் இருந்தன. கரும்புலியாய்ப் பாயவேணும் என்ற கனவையே நெஞ்செல்லாம் நிறைத்து அதற்காகவே தன்னைத் தயார்ப்படுத்தினாள். பூநகரிச் சண்டைக்கும் அவள் லெப். கேணல் பாமாவுடன் சென்றாள். அலைகளில் நனைந்து நனைந்து படகோட்டியபடி கண்காணிப்புப் படகின் ஓட்டியாக நின்றாள். லெப். கேணல் பாமா நீருந்து விசைப் படகை எடுக்கும் போது படகுக்கு ஓட்டியாக நின்று அதைக் கொண்டு வந்து சேர்த்து பெரிய வெற்றிப் பூரிப்போடு திரும்பவும் சென்றாள். எதிரியின் ஆயுதங்கள் அள்ளி 50 கலிபரின் தாங்கி கழற்றி இலக்குப்பிசகாமல் வந்து கரைசேர்ந்த அந்தச் சண்டையில் அவளது பங்கு கணிசமானது. கடைசியாக கற்பிட்டிக் கடலில் கரும்புலியாய்ச் செல்வதற்கு முன் அவள் படகு துறைத்தொழில்நுட்பப் பிரிவுக்குப் பொறுப்பாக நின்றாள். ஒவ்வொரு போராளிக்கும் நுட்பமாக விளங்கப்படுத்தி உற்சாகமூட்டி தானே அருகிருந்து ஒவ்வொரு தேவைகளையும் கவனித்துச் சென்றாள். மங்கையக்கா தனக்கு என்ன தெரியாது என்டாலும் எந்தப் போராளியிடமும் கேட்டு அறிஞ்சு கொள்ளுவா. எதையும் துருவித் துருவி நுட்பமாக கேட்டறிவது அவளிடம் எப்போதுமே இருந்தது. அப்படி என்டா என்ன? இப்படிச் செய்தால் சரிவருமோ? என்று அவளுக்குப் புதிய புதிய நுட்பமான யோசனைகள் தோன்றும். அதனைச் செயலிற் காட்டும் போது மூக்கில் விரலை வைக்கத் தோன்றும். அங்கையற்கண்ணியின் தாக்குதலுக்குப் பின்னெல்லாம் அவளுக்குப் பொறுமை எல்லை கடந்துவிட்டது. எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தாள். மனம் சலித்து ஓய்ந்ததில்லை, அந்த இடைப்பட்ட கணங்களிலெல்லாம் இயலுமானவரை போராளிகளுக்கு நீச்சல் பழக்கி, படகு ஓட்டப் பயிற்சி அளித்து அவற்றில் தன்னைத் தீவிரப்படுத்திக் கொண்டாள். கற்பிட்டித் தாக்குதலுக்கு நெஞ்சிலே சாவைச் சுமந்தபடி வாய் ஓயாமல் அண்ணையைப் பற்றியே கதைத்தபடி சென்றாள். இலக்குச் சரிவராவிட்டால் காட்டுக்குள்ளேயே இருந்திடுவன். கரையில் நின்ற போராளிகளுக்கு கைகளை அசைத்தபடி சொன்னாளாம். இரவு 11.25 மணி உச்சி நிலவு பொங்கித் தணிந்தது. மன்னார் கற்பிட்டிக் கடலில் ஓயாத அலைச்சத்தத்தின் மத்தியில் கடலரசன் விரித்தபடி நின்றது. நளாயினி தலைமையில் மங்கையின் படகு உயரக் கிளம்பிய அலைகளை கிழித்தபடி முன்னே சென்று மோதி வெடித்தது. லக்ஸ்மனும், வாமனும் சென்ற படகு கப்பலின் அடுத்தபுறம் மோதி வெடிக்க கடலரசன் தீப்பற்றியபடி கற்பிட்டிக் கடலடித்தளத்தோடு மெல்ல மெல்ல தாழ்ந்து போனது. நான் வெடிச்சதன் பிறகு வீட்டில என்ர உடுப்புகளோடை இருக்கிற மஞ்சள் சீலையை அம்மாவுக்கு உடுத்துவிடுங்கோ என்ற கூறிச் சென்ற மங்கை சத்தமிட்ட கற்பிட்டிக் கடலலையோடு கரைந்து போனாள். பிள்ளைகள் திருந்துறத்துக்குத் தானே அப்படிச் செய்தனான். கிச்சினிலை விடப்போறியளோ? அப்ப நல்லாப் பனங்காய்ப் பிட்டு செய்து சாப்பிடலாம் என்று கண்கள் விரிய வாயைச் சப்புக் கொட்டியபடி சொன்ன மங்கை வரவேயில்லை. கண்கள் வலித்து மீண்டன. அவள் சிரித்தபடி…… சிதறிப்போன உடலைச் சுமந்தபடி அலை குமுறி எழுந்தது. மூலம்: உயிராயுதம் பாகம் 01 https://thesakkatru.com/black-sea-tiger-mejor-mangai/  
  • உயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும் தியாக தீபம் திலீபனின் 6ஆம் நாள் உண்ணாநோன்பு நிகழ்வு நினைவில் அவர் தோழன் ராஜனின் பதிவுகள்… ஐந்து நாட்கள் கடந்தும் காந்தி வழியில் சுதந்திரம் வேண்டிய நேருவின் பேரன் ராஜீவ்காந்தி அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளிக்கவில்லை. ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு பெளத்தனாக இருந்து கொண்டு புத்தரின் கோட்பாடுகளின்படி நடக்கவில்லை. அன்று இவர்கள் இருவரும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தால், இந்நாட்டின் தலைவிதி வேறாக மாறியிருக்கலாம். இன்று இலங்கையில் முப்பது ஆண்டுகளில் உப்புச்சப்பற்ற வெறும் இனவாத ஆக்கிரமிப்பையே குறியாக கொண்ட ஆறு திருத்தச்சட்டங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்காது. இவ்வளவு உயிர்களும் மனித மற்றும் மூல வளங்களும் வீணாகி போயிருக்காது. இலங்கை இன்று ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக திகழ்ந்திருக்கும். இவர்களை விஞ்சி இன்று ஒருபடி மேலே போய் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் 2100 வருடங்கள் பின் சென்று தான் துட்டகைமுனுவின் வாரிசு என்பது போல் அநுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆனால் துட்டகைமுனுவின் செயலில் உள்ள நல்ல பக்கங்களை மறந்து அல்லது மறந்த மாதிரி நடந்து கொள்வதில் முனைப்பாக ஈடுபடுகிறார். இதன் ஒரு அம்சமாக தான் திலீபன் நினைவு நாளை தமிழர்கள் நடாத்தக் கூடாது என்று மனு நீதி மறந்த புது நீதி புகுத்துகிறார். துட்டகைமுனு எல்லாளனுக்கு வழங்கிய நீதியும் பிழை என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. அல்லது அவரது நீதிமன்றின் ஊடாகவே எல்லாளனுக்கு எல்லோரும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற துட்டகைமுனு வழங்கிய ஆணையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி நீக்கி விட்டோம் என அறிவித்தாலும் ஆச்சரியப்பட முடியாது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த காலம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர் சேபால ஆட்டிக்கல உத்தியோகபூர்வமாக போராட்ட அமைப்புகள் அனைத்திற்கும் பொது மன்னிப்பு வழங்கிய காலம். இந்திய அமைதிப்படையிடம் தலைவரின் அறிவுறுத்தலின் படி யோகி அண்ணா ஆயுதங்களை ஒப்படைத்த காலம். ஏன் இன்றைய மகிந்த, கோத்தபாய அரசாங்கத்தில் அமைச்சராகவிருக்கும் வாசுதேவ நாணயக்கார திலீபனை வந்து பார்வையிட்டு கலந்துரையாடல் செய்து விட்டு தலைசாய்த்து வணங்கி விட்டு சென்ற நாள் இன்றாகும். இப்படி வரலாறு இருக்கும் போது 33 வருடங்களின் பின் திலீபன் பயங்கரவாதி, நோயாளி என்று கூறுபவர்களிற்கு தான் இனவாத நோய் 70 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. 1987இல் யாழ். சென்று திலீபனை பார்த்து வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இன்று பாராளுமன்றத்தில் அமைச்சராக உள்ளார். திலீபன் என்னும் உன்னத போராளி உங்கள் பார்வையில் பயங்கரவாதி என்றால், அன்று திலீபனை பார்த்து வந்த அமைச்சருக்கும் இன்று ஆபத்து வந்துள்ளது. ஆகவே இவரும் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகவோ, நீதிமன்று முன்பாகவோ நிறுதப்படலாம். இனபேதம் இன்றி இந்த அராஜக சட்டங்களிற்கு எதிராக போராட வேண்டும் என்பதே திலீபனினை நினைவு கூர தடுக்கும் உத்தரவு சொல்லி நிற்கும் செய்தியாகும். ஆறாம் நாளாகிய இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் திருச்செல்வம், திருகோணமலையில் கிருபா, மட்டக்களப்பில் மதன் ஆகிய போராளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்றும் திலீபன் உடல் வேதனையால் துவண்ட போதும் உறுதி தளராது விழித்து பார்ப்பதும், கதைகளை முடிந்தவரை கேட்பதும் தேவைகளுக்காக சைகை செய்வதுமாக கட்டிலில் புரண்ட வண்ணம் இருந்தார். திலீபனை பார்த்து விட்டாவது போவோம் என்று போராளிகள் வரிசையாக வந்து பார்த்து சென்றார்கள். திலீபனுடன் பழகிய தளபதிகள், உற்ற நண்பர்களாக கதைத்து பழகிய போராளிகள் திலீபன் காதுகளில் தங்கள் கருத்துக்களை மெதுவாக கூறினார்கள். மில்லரை வழியனுப்பி வைத்த தளபதி பிரபா வந்து திகைப்புடன் திலீபனை பார்த்தவண்ணம் அசையாது நின்றார். இருவரும் மில்லரை வழியனுப்பும் இறுதி நேரத்தில் ஒன்றாக நின்று வழியனுப்பியவர்கள். இன்று திலீபனின் நிலை கண்டு துவண்டு நின்றது உறுதியின் உறைவிடங்களுக்கு உள்ளுள்ள இளகிய மனதின் வெளிப்பாடாகவே தெரிந்தது. உண்மையில் போராளிகள் மிக இளகிய மனம் கொண்டவர்கள், மற்றவர் துன்பத்தை தம் துன்பமாக கருதியே தம் உயிரிலும் மேலாக தம் மக்களை மதித்து தம் உயிர்களை துறக்க சித்தம் கொண்டனர். திலீபன் பெயர் வைத்து உருவாக்கிய ‘சுதந்திர பறவைகள்’ என்ற மகளீர் அமைப்பு பெண் பிள்ளைகள் திலீபனை வந்து பார்த்து கண்கலங்கி வரிசையாக சென்றார்கள். இன்று நிறைய போராளிகள் வந்து திலீபனை பார்த்து சென்றபோது கூடியிருந்த மக்கள் சோகத்தில் விம்மி அழத் தொடங்கினர். இருள் கவியும் நேரம் எல்லோர் மனங்களிலும் இனி திலீபனை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்ற உணர்வு படரத் தொடங்கியது.   http://www.ilakku.org/உயிரினும்-மேலாக-எம்-மக்க/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.