Jump to content

Malta ஒரு புதிய அனுபவம் - 08


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன்,

என்னை பணச்செலவு இன்றி Malta சுற்றி காட்டியதற்கு :D:)

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

[size=4]பயணம் 08

மகன் காட்டிய திசையில் நோக்கினேன். உண்மையில் அது புலிக்கொடி தான், ஆனால் தமிழீழ கொடியல்ல, நாம் தமிழரின் கொடியும் அல்ல.[/size]

[size=4]

img0760pe.jpg[/size]

[size=4]அது Malta வின் நடப்பு ஆண்டு சாம்பியன்களான ஒரு உதைபந்தாட்ட கழகத்தின் கொடி அது. [size=2]Xewkija Tigers [/size]இது தான் அந்த கழகத்தின் பெயர். உள்ளே அவர்களது மண்டபத்தின் நடுவே இருந்த சுவரில் அழகாக பாயும் புலி கொடி ஒன்றை கட்டி இருந்தார்கள். [/size]

[size=4]

Xewkija_Tigers.png[/size]

[size=4]எனக்கு அதை பார்க்கும் போது எங்களின் தேசிய கொடியின் நினைவு வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இவ்வளவு தூரம் கடந்து ஒரு தீவில் எங்களது கொடியை ஒத்த ஒரு கொடியை பார்த்தால் எல்லாருக்குமே அந்த எண்ணம் தான் வரும் போலும்.[/size]

[size=4]

img0761h.jpg[/size]

[size=4]மேலும் ஒரு ஐந்து கிலோமீட்டரில் எங்களது நோக்கியா GPS காட்டிய பாதையை அடைத்து இருந்தார்கள் அதனருகேயும் ஒரு அழகான தேவாலயம் கட்டி இருந்தார்கள். அவர்களின் கட்டடகலைக்கு இன்னொரு எடுத்துகாட்டாக அமைந்தது அந்த தேவாலயம். [/size]

[size=4]

img0781r.jpg[/size]

[size=4]

img7326u.jpg[/size]

[size=4]தேவாலயம் அதனை ஒட்டி இருந்த வீடுகள், வீதி அமைப்புகள் எனக்கு யாழ்பாணம் ஒஸ்மானியா பாடசாலையை சுத்தி இருந்த யாழ் முஸ்லிம்களின் வீடுகளுக்கும் வீதிக்கும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்ததை ஞாபகபடுத்தியது. (பின்னர் அந்த இடம் சவூதி என்று அழைக்கபட்டது )[/size]

[size=4]

img0768ap.jpg[/size]

[size=4]நாங்கள் போய் பார்க்கவேண்டிய இடம் அந்த தீவின் அக்கரையில் இருந்தது. கப்பலில் இருந்து பார்த்த போதே மிகவும் அழகாக செங்குத்து மலையும் அதை ஒட்டிய ஒரு கடலும். அதனை நோர்வேயின் ச்டவான்கர் என்ற இடத்திலும் பார்க்கலாம். அங்கு தான் கோ பட பாடலை எடுத்திருந்தார்கள். இப்போ மாற்றான் பட பாடலும் நோர்வேயின் ஹெலசுன்ட் என்ற இடத்தில் தான் படமாக்கினார்கள். அங்கும் அப்படியான செங்குத்து மலையும் கடலும் ஒன்று சேர காணலாம்.[/size]

[size=4]

img7348o.jpg[/size]

[size=4]நாங்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த போது இரவு ஏழு மணியாகி இருந்தது. சூரியன் தனது செங்கதிர்களை பரப்பி கடலை செம்மஞ்சலாக்கி இருந்தான். கடலும் அதனை ஒட்டிய மலையும் பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது. எங்களின் இம்முறை உல்லாச பயணத்தில் நான் கண்ட மிகவும் அழகான காட்சி அது தான். [/size]

[size=4]

img0805dq.jpg[/size]

img0849cq.jpg

img7346q.jpg

[size=4]கரை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கொஞ்ச தூரம் நடந்து செல்லவேண்டும். அழகான அந்த மஞ்சள் நிற மலைகளில் நடப்பதும் ஒரு அழகு தான். திருகோணமலையின் ராவணன் வெட்டை ஞாபகபடுத்தும் இடங்கள் அவை.[/size]

[size=4]

img7347f.jpg[/size]

[size=4]அந்த இடத்தை அசூர் சாளரம் ( AZUR WINDOW ) என்று சொல்லுவார்கள். ஒரு உள்கடலும், இயற்கை மலையாலான ஒரு சாளரம் போன்ற அமைப்பும், நடுவே கொக்கரிக்கும் கடலும், பார்க்கவே அவ்வளவு அழகு.[/size]

[size=4]

img0853b.jpg[/size]

[size=4]அங்கே தூரத்தில் ஒரு காதலன் தனது காதலியை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து கொண்டிருந்தான். அருகில் சென்ற போது, ஒளிபடகருவியை தானியங்கியில் விட்டு விட்டு ஓடிவந்து காதலியை கட்டி அனைத்து படம் எடுக்க முயன்று கொண்டிருந்தான். என்னக்கே தோணவில்லை. மனைவி தான் ஓடி சென்று அந்த கருவியை வாங்கி தானே படம் எடுத்துவிட்டாள். அவனும் நன்றி கடனாக எங்களை குடும்பமாக படம் எடுத்துவிட்டான். அந்த படம் தான் இன்றைக்கும் எனது கணினி, மனைவியின் IPAD எல்லாத்துக்குமே background படம்.[/size]

[size=4]

img0852wl.jpg[/size]

[size=4]கடல் ஆர்ப்பரித்து மலையை மோதி கொண்டிருந்தது. எல்லா ஆண்களை போலவும் மனைவி எவ்வளவோ கெஞ்சியும், இல்லை ஒரு முறை எட்டி பார்த்துவிட்டு தான் வருவேன் என்று நுனிவரை சென்றேன். என் மேல் கொண்ட காதலால் மனைவி மகனை இருத்தி விட்டு என்னை கைகளை இறுக்க பிடித்தபடி வந்தாள். அவளது பிடியின் இறுக்கத்தில் அன்பின் ஆழம் தெரிந்தது.[/size]

[size=4]

img7403o.jpg[/size]

[size=4]நான் மட்டும் தான் எட்டி பார்த்தேன், அவளுக்கு எவ்வளவு தைரியம் கொடுத்தும் எட்டி பார்க்க மறுத்துவிட்டாள், என்ர வாய் சும்மா இராமல் எல்லா கணவன்மார் போலவே ,நான் [/size][size=4]இங்கே இருந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்றேன். மூளை யோசிக்க கூட நேரம் இருந்திருக்காது அவளது மென்மையான கைகள் எனது வாயை சொல்ல வந்த வசனம் முடிக்க முதலே பொத்திவிட்டது. அவளின் விழியோரம் மெல்லிய கண்ணீர் துளி அரும்ப தொடங்கி இருந்தது.[/size]

[size=4]

img7404s.jpg[/size]

[size=4] கடல் சூரியன் மேல் கொண்ட காதலால் தனக்குள் அணைக்கும் நேரம், நான் என் காதல் மனைவியை நெஞ்சோடு அழுத்தி அணைத்து கொண்டேன். என் ஆசை மகனும் கையை நீட்டியபடி எங்களை நோக்கி ஓடிவந்தான்.[/size]

[size=4]

img7407zz.jpg[/size]

[size=4]ஆதவன் கடலினுள் மூழ்கும் அந்த காட்சி நீங்கள் ஒரு முறை பார்த்தால் இந்த ஆயுளுக்கும் மறக்கக மாட்டீர்கள். எனது அவத்தாரை ஒத்த அந்த காட்சி. அப்ப்பப்பா என்ன அருமை .நீங்களும் பாருங்கள்.[/size]

[size=4]

img7410v.jpg[/size]

[size=4]சூரியன் மறையும் போது நேரம் எட்டரை. கொசோ தீவை இருள் சூழ தொடக்கி இருந்தது. இரவு பத்து மணிக்கு பிறகு ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் தான் கப்பல் சேவை. அதை கருத்தில் கொண்டு வேகமாக மலை இறங்கி துறைமுகத்தை நோக்கி காரை ஓட்டினேன்.[/size]

[size=4]

img7415y.jpg[/size]

[size=4]நோக்கியா வரைபடத்தில் துறைமுகத்தை தேர்வு செய்து அதன் வழி ஓடி வந்தேன். துறை முகத்தை அடையும் போது ஒன்பது இருபது. வாசலுக்கு வேகமாக காரை ஓடிப்போனால் அது தீவின் மறு கரையில் இருக்கும் இன்னொரு துறைமுகம். அப்போது தான் தெரிந்தது. தீவுக்கு இரண்டு துறைமுகம் இருக்கு என்று. மனைவியின் முகத்தில் கலவரம் தொடங்கியது. மகனோ களைப்பில் உறங்கி கொண்டிருந்தான். ஒரு வழிபாதையில் கூட காரை செலுத்துமாறு GPS கட்டளை இட்டு கொண்டிருந்தது. பத்து மணி கப்பலையாவது பிடித்து விட வேண்டும் என்று எனது காரின் வேக முள் நூறுக்கும் நூற்றி இருபத்துக்கும் இடையில் அலை பாய்ந்தது.[/size]

[size=4]

img1302be.jpg[/size]

[size=4]மற்றைய துறைமுகத்துக்கு வரும்போது சரியாக ஒன்பது ஐம்பத்தைந்து. கப்பலுக்குள் செல்லும் வாயில் கதவை மூட தொடங்கி இருந்தார்கள். வேகமாக நுழைந்தால், எங்கள் காரை மறித்த காவலர் கப்பல் பயணச்சீட்டை கேட்டார். நாங்கள் இலவசம் தானே என்ற போது. அதற்கு அவர் சிரித்தபடி சொன்னார் Malta வில் இருந்து இங்கு வருவதற்கு தான் இலவசம், இங்கிருந்து Malta போக கட்டணம் என்றார். யப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கள் என்று நான் யோசிக்கும்போதே எங்களை விட்டுவிட்டு கப்பல் புறப்பட தொடங்கி இருந்தது.[/size]

[size=4]தொடரும் [/size]

எழுத்துபிழைகளை திருத்தி உள்ளேன். - நன்றி துளசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

Link to comment
Share on other sites

[size=4]மற்றைய துறைமுகத்துக்கு வரும்போது சரியாக ஒன்பது ஐம்பத்தைந்து. கப்பலுக்குள் செல்லும் வாயில் கதவை மூட தொடங்கி இருந்தார்கள். வேகமாக நுழைந்தால், எங்கள் காரை மறித்த காவலர் கப்பல் பயணச்சீட்டை கேட்டார். நாங்கள் இலவசம் தானே என்ற போது. அதற்கு அவர் சிரித்தபடி சொன்னார் Malta வில் இருந்து இங்கு வருவதற்கு தான் இலவசம், இங்கிருந்து Malta போக கட்டணம் என்றார். யப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கள் என்று நான் யோசிக்கும்போதே எங்களை விட்டுவிட்டு கப்பல் புறப்பட தொடங்கி இருந்தது.[/size]

:lol: :lol: :lol: நல்லா எழுதிறீங்கள் அண்ணா..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, அதற்குப் பின்னர் என்ன நடந்திருக்கும் ..... :D

தொடருங்கள் பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன விசயங்களை சேர்த்து ஒரு எந்தெட்டாய் பயணக்கட்டுரையை கொண்டு போறதுக்கும் ஒரு திறமை வேணும்...நன்றி பகலவன்.......நள்ளிரவில் சூரியன் உதிக்கும் காட்சியை படமாக இணைக்க முடியுமா? :)

Link to comment
Share on other sites

ஆஹா, அதற்குப் பின்னர் என்ன நடந்திருக்கும் ..... :D

மனைவியுடனான கொஞ்சலும் கெஞ்சலும் நடந்திருக்கும்...... :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் எனக்கு கண் தெரியவில்லையோ தெரியாது உங்கள் மகன் காட்டிய புலிக் கொடி எங்கே?

பொறுமை அவசியம் ரதி. அடுத்த பகுதியில் சொல்ல தானே இருந்தேன். அதுக்குள்ளே என்ன அவசரம்.

நன்றி உங்கள் பகிர்வுக்கு

நன்றி பகலவன்,

என்னை பணச்செலவு இன்றி Malta சுற்றி காட்டியதற்கு

நன்றி தமிழரசு. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

இந்த கருத்துகள் தான் என்னை மேலும் எழுத தூண்டுகின்றன.

ம்ம்ம்

என்ன அண்ணா ஏக்க பெருமூச்சா .. :lol:

நல்லா எழுதிறீங்கள் அண்ணா..... :)

நன்றி துளசி உங்கள் ஊக்கத்திற்கும் பதிவிற்கும்.

ஆஹா, அதற்குப் பின்னர் என்ன நடந்திருக்கும் ..... :D

தொடருங்கள் பகலவன்

சிலவற்றை வாசகர்களிடம் விடுவது தான் சுவாரசியம். உங்களின் கற்பனைக்கு தோன்றும் எவ்வளவோ கற்பனைக்கு தோன்றுவதில்லை. :D

நன்றி வாத்தியார் உங்கள் பகிர்வுக்கு.

கன விசயங்களை சேர்த்து ஒரு எந்தெட்டாய் பயணக்கட்டுரையை கொண்டு போறதுக்கும் ஒரு திறமை வேணும்...நன்றி பகலவன்.......நள்ளிரவில் சூரியன் உதிக்கும் காட்சியை படமாக இணைக்க முடியுமா? :)

நன்றி குமா அண்ணா உங்கள் பதிவிற்கு, நான் மீண்டும் எழுத தொடங்கியமைக்கு உங்களை ஏமாற்ற கூடாது என்ற எண்ணமும் ஒரு காரணம். இந்த முறை நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாளில் நான் நோர்வேயில் இல்லை குமா அண்ணா, யாராவது நண்பர்களிடம் இருந்தால் எடுத்து தருகிறேன்.

நள்ளிரவு சூரியனை பார்க்க ஜூன் மாத நடுப்பகுதியில் வடக்கு நோர்வேயுக்கு செல்ல வேண்டும். அது ஒஸ்லோவில் இருந்து ஆயிரம் km ஆவது இருக்கும்.

வானில் பல வர்ணங்கள் (சிவப்பு பச்சை ) தோன்றும் அதிசய காட்சியையும் பார்க்கலாம்.

சென்ற கோடை விடுமுறையின் இறுதி நாட்களில் நோர்வே-சுவீடன்-பின்லாந்து மூன்று நாடுகளும் சந்திக்கும் ஒரு புள்ளிக்கு சென்று இருந்தேன். அதன் படங்கள் பின்னர் இடுகிறேன். வித்தியாசமான அனுபவம். ஒரு காலை இந்த பக்கம் வைத்தால் நோர்வே, அங்காலை வைத்தால் சுவீடன், பின்னுக்கு வந்தால் பின்லாந்து. ஒரு படகு பயணம், அதன் பின்னர் காட்டுக்குள்ளே ஒரு மூன்று km நடை ஒரு ஏரிக்கு நடுவில் உள்ளது அந்த முச்சந்திப்பு புள்ளி.

நன்றி அண்ணா உங்கள் பகிர்வுக்கும் வருகைக்கும்.

மனைவியுடனான கொஞ்சலும் கெஞ்சலும் நடந்திருக்கும்......

எப்படி துளசி உங்களால முடிகிறது. அப்படியே பார்த்த மாதிரியே சொல்லுறீங்கள் :lol: :lol: :icon_idea:

Link to comment
Share on other sites

எப்படி துளசி உங்களால முடிகிறது. அப்படியே பார்த்த மாதிரியே சொல்லுறீங்கள் :lol: :lol: :icon_idea:

இந்த திரி முழுக்க பார்த்துக்கொண்டு தானே வாறன்... :lol: ஈசன் அண்ணா சொன்னது போல் நீங்கள் சாண்டில்யனின் சிஷ்யப்பிள்ளை தான்.. சந்தேகமே இல்லை.... :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி நானும் இந்த திரியை வந்து எட்டிப் பார்த்துட்டு போறனான்....பெரும்பாலும் படங்களும் , அந்த நாடுகளில் என்ன அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறார்கள் என்ற விபரங்களையும் சேகரிக்க இப்படியான திரிகளுக்குள் வாறது வளமை...மற்றது உங்கள் தனிப்பட்ட விடையங்கள், உங்களுக்கே உரிய சுதந்திரம்..நானும் கு.சா தாத்தா மாதிரித் தான் கேக்கிறன்..உங்கள் நாட்டில் சாமத்தில் சூரியன் உதிக்கும் காட்சியை படமாக தந்தால் ரொம்ப சந்தோசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் உள்ள ஒரு மொல்டா காரன் சொன்னான் தங்கன்ட நாட்டில இருக்கிற மொட்டாகாரனின் எண்ணிக்கையைவிட அவுஸ்ரேலியாவில் அதிகம் மொல்டா காரர்கள் இருக்கிறாங்கள் என்று....?தொடருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியாவில் உள்ள ஒரு மொல்டா காரன் சொன்னான் தங்கன்ட நாட்டில இருக்கிற மொட்டாகாரனின் எண்ணிக்கையைவிட அவுஸ்ரேலியாவில் அதிகம் மொல்டா காரர்கள் இருக்கிறாங்கள் என்று....?தொடருக்கு நன்றிகள்

ஓம் புத்ஸ் அண்ணா இங்க நிறைய பேர் தான் இருக்கினம்.... மற்றது பல பத்து வருடங்களுக்கு முன் வந்தவர்கள் என்றதால பல வீடுகள் மற்றும் கடை தொகுதிகளுக்கு சொந்தகாராகவும் இருக்கினம்.... தாக்கல் வந்தபுதிதில் பட்ட கஷ்டங்களையும் எப்பிடி படிப்படியாக முன்னேரினவர்கள் என்றதையும் இன்றும் நினைவில் வைத்து சொல்லுவார்கள் வந்து இறங்க்கிய முதல் தலைமுறையினர்

Link to comment
Share on other sites

  • 4 months later...

இதை தூசு தட்டி தொடருவமா என்று யோசிக்கிறேன்  :lol:

Link to comment
Share on other sites

இதிலை யோசிக்க என்ன இருக்கு. தொடருங்கோ.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கன விசயங்களை சேர்த்து ஒரு எந்தெட்டாய் பயணக்கட்டுரையை கொண்டு போறதுக்கும் ஒரு திறமை வேணும்...நன்றி பகலவன்.......நள்ளிரவில் சூரியன் உதிக்கும் காட்சியை படமாக இணைக்க முடியுமா? :)

 

 

மீண்டும் தூசு தட்டிக்கொள்வதற்கு நன்றி பகலவன்...மற்றும் கு.சா தாத்தா நீங்கள் கேட்ட படம் பலதும்,பத்தும் பகுதியில் இணைக்கபட்டு இருக்கு பாருங்கள்.

Link to comment
Share on other sites

இதை தூசு தட்டி தொடருவமா என்று யோசிக்கிறேன்  :lol:

 

என்னாது..............  :o  :o ?  எழுதிறதை விளப்பமாய் எழுதவேணும் எனக்கு நெஞ்சு பக்கெண்ணுது :lol: :lol: .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.