Jump to content

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்


Recommended Posts

ஈழத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாட்டில் நான் எந்தத் தவறையும் காணவில்லை. அவர்கள் இரண்டு பெரும் இனங்களாக தம்மைக் கருதிக் கொண்ட சிங்களவர்களாலும், தமிழர்களாலும் "எம்மவர்கள்" என்ற பார்வையோடு நோக்கப்படவில்லை. இரண்டு இனங்களால் பிரச்சனையை எதிர்நோக்குபவர்கள், அதில் பலமான இனத்தோடு இணைந்து நின்று தம்மை பாதுகாக்க முனைவார்கள்.

மூன்றாவது நிலையில் உள்ள எந்த ஒரு இனமும் இதே நிலைப்பாட்டையே எடுக்கும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எமது அயலிலே உள்ளவர்களின் பிரச்சனைகளை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே புரிந்துணர்வையும், நட்பையும் வளர்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 153
  • Created
  • Last Reply

இலங்கையில் தமிழ், சிங்களம் என பிரதான இரண்டு மொழிகள் உள்ளன. இதற்கமைய 1. தமிழர் தாயகம் ஈழம் 2. சிங்களவர் பூமி லங்கா

தமிழை தாய்மொழியாக பேசுவதனால் தமிழர் என அழைக்கப்படுகின்றார்களேயொழிய இந்துவாக உள்ளதனால் தமிழர் என அழைக்கப்படுவதில்லை.

சிங்களத்தை தாய்மொழியாக பேசுவதனால் சிங்களவர் என அழைக்கப்படுகின்றார்களேயொழிய பெளத்தர்களாக உள்ளதனால் சிங்களவர் என அழைக்கப்படுவதில்லை.

முஸ்லீம் மக்கள் இஸ்லாம் மதப்பிரிவினர். ஆனால் சிங்களவரும் தமிழரும் வெவ்வேறு மொழியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுபவர்கள். சிங்களமோ அல்லது தமிழோ மதம் இல்லை.

நாளை கிறீஸ்தவர்கள் "கீறீஸ்தவ லீக்" என "முஸ்லிம் காங்கிரஸ்" போல் கட்சியை எழுப்பி அரசியலில் ஈடுபட்டால் முஸ்லீம் காங்கிரசை அணுகுவதுபோல் கிறிஸ்தவ லீக்கை அணுகமுடியுமொழிய நீங்கள் தனித்துவம் இல்லாதவர்கள் என "கிறிஸ்தவ லீக்கை" புறக்கணிக்கமுடியாது.

அதாவது முஸ்லீம்கள் மதப்பிரிவினராக பார்க்கப்படுவதே நியாயமானது. தமிழர் பிரச்சனையுடன் முஸ்லீம் மதப்பிரிவினரின் பிரச்சனையை தொடர்புபடுத்தி குழம்பிக்கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களையும் கிறிஸ்தவத் தமிழர்களையும் ஒப்பிடுவது அர்த்தமற்றது. வரலாறு, பண்பாடு, அரசியல் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேசுகின்ற குழந்தைத்தனமான வாதம்.

இங்கே தெளிவாக ஒன்றைக் குறிப்பிடுகின்றேன்.

ஒரு மக்கள் கூட்டம் இன்னொரு மக்கள் கூட்டத்தால் மேலாதிக்கம் செய்யப்படுதாகவும், தமது உரிமைகள் பறிபோவதாகும், பாதுகாப்பு அற்ற சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் உணர்கின்ற நிலை வருகின்ற போது, அந்த மக்கள் கூட்டத்திற்கு தன்னை பாதுகாப்பதற்கான அலகுகளை (தனி நாடு, தனி மாகாணம், தனி அலகு) உருவாக்கும் தேவை உருவாகும்.

சைவத் தமிழர்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவத் தமிழர்களுடன் நட்புறவை வரலாற்றுரீதியாக பேணி வந்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுடன் அரச உத்தியோகத்தில் வீற்றிருந்த சைவ வேளாளத் தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துடன் மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பின்பு போராட்ட காலத்திலும கிறிஸ்தவ மதகுருமாருடனும் சிறந்த உறவை போராட்டத் தலைமை பேணி வந்தது.

ஆனால் துன்பியல் நிகழ்வாக முஸ்லீம்களுடம் தமிழர்கள் அப்படியான ஒரு உறவை பேணவில்லை. விரோதமான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்கள்

வரலாறு, பண்பாடு, அரசியல் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேசுகின்ற குழந்தைத்தனமான வாதம்.

உங்களது கருத்துக்கள்தான் அப்படியுள்ளன.

வரலாற்று ரீதியாக தமிழர்கள் ஏமாற்றப்பட்டதையும் அழிக்கப்பட்டதையும் மறந்து தமிழர்கள் தொடர்ந்து விடுத்த நல்ல சிக்னல்களையெல்லாம் கெடுத்தது யார்?

அத்துடன் கத்தோலிக்க மற்றும் வேற்று மதத்தவருடன் தமிழர்களால் ஒற்றுமையாக நின்று போராட முடிகிறது இவர்களுடன் மட்டும் முடியவில்லைல என்றால் தப்பு எங்குள்ளது என்பதும் குழந்தைகளுக்கும் புரியும்.

மேலும்தங்கள்;போன்ற தமிழர்கள் மட்டுமே இது பற்றி விழுந்து விழுந்து அவர்கள் பின்னால் அலைகிறீர்கள்.

ஆனால் அவர்கள் யாரும் இது பற்றி எந்த முயற்சியும் எடுத்தது கிடையாது.

தற்போது கொஞ்ச நாளாக இது தமிழர்களிடையே ஒரு தாரக மந்திரமாக உருவாகி வருகிறது.

ஈழத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாட்டில் நான் எந்தத் தவறையும் காணவில்லை. .

:o :o :o

Link to comment
Share on other sites

பெருன்பான்மை பெளத்த சிங்களவர்களுடன் சிறுபான்மை கிறீஸ்தவ சிங்களவர்கள் வாழ்கின்றார்கள்.

பெருன்பான்மை இந்து தமிழர்களுடன் சிறுபான்மை கிறிஸ்தவ தமிழர்கள் வாழ்கின்றார்கள்.

ஆனால், இஸ்லாமியர்கள் மாத்திரம் இதற்கு விதிவிலக்காம்? ஏன் என்றால் அவர்களின் தாய்மொழி தமிழும் இல்லையாம், அவர்களின் தாய்மொழி சிங்களமும் இல்லையாம். அவர்களின் தாய்மொழி அராபிக்காம்? என்னையா கூத்து இது?

அவர்கள் முஸ்லீம்கள் இரண்டும் கெட்டான் தாய்மொழி பேசுகின்றார்கள் என்பதற்காக மதப்பிரிவினரான முஸ்லீம்களை மொழிப்பிரிவினரான தமிழர், சிங்களவருடன் ஒன்றாக நோக்கமுடியுமா? இது நியாயம் என்றால் நிச்சயம் இலங்கையை இந்து, பெளத்தம், கிறிஸ்தவம் என மதத்தின் அடிப்படையிலேயே தனி அலகுகளாக கூறுபோடவேண்டும்.

முஸ்லீம்கள் தனித்துவமான சமூகங்கள் என்றால் பெளத்தர்கள், இந்துக்கள், கிறீஸ்தவர்களும் அவ்வாறானவர்களே.

சபேசன், இலங்கைக்கு சென்று சிறிதுகாலம் இணுவிலிலும், சிறிதுகாலம் பாசையூரிலும், சிறிதுகாலம் கல்முனையிலும், சிறிதுகாலம் அநுராதபுரத்திலும் இருந்துவிட்டு மீண்டும் நீங்கள் மேலே எழுதிய கருத்துக்களை வாசித்துப்பாருங்கள். குழப்பம் எங்கேயுள்ளது என்று தெரியும்.

Link to comment
Share on other sites

கத்தோலிக்கர்களுடன் இணைந்த செல்ல முடிந்ததற்கான காரணத்தை மேலே சொல்லியிருக்கிறேன். ஈழத்தை முகாலயர்கள் ஆண்டிருந்தால், இன்றைக்கு முஸ்லீம்களின் நிலையில் கிறிஸ்தவர்கள் இருந்திருக்கக் கூடும்.

நாமும் வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுடன் நெருக்கத்தைப் பேணி அரச உத்தியோகங்களைப் பெற்று எம்மை தக்க வைத்தபடி வளர்த்துக் கொண்டோம். ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருக்கும் சூட்சுமத்தை முஸ்லீம்கள் எங்களிடம் இருந்துதான் கற்றிருப்பார்கள்.

தொடர்ந்தும் மற்றவர்களிடம் தவறுகளை தேடிக் கொண்டிருப்பதை விட்டு, நாம் விட்ட தவறுகளை பற்றி பேச வேண்டும்.

இனம் பற்றிய விளக்கத்தை இந்தக் கருத்தாடலை ஆரம்பித்த பொழுதே சொல்லியிருக்கிறேன். உலகின் கண்ணோட்டத்தில் ஒரு மக்கள் குழுமத்தை தனித்துவம் மிக்கதாக காட்டுவதற்கு மொழி அடிப்படையானதாக இல்லை. ஒரே மொழியைப் பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடுகள் கூட தமக்குள் சமஸ்டி முறைமை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போய்ச்சேர முடியாத ஊருக்கு வழி காட்டுகிறீர்கள்

அதுவும் ஒரு நரியின் துணையுடன்.

நான் இந்த விளையாட்டுக்கு வரல.

நன்றி

வணக்கம்.

Link to comment
Share on other sites

நரி என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு ஒட்டுமொத்தச் சமூகத்தை அப்படி அழைப்பீர்களாயின், அந்தச் சமூகம் தனி அலகு கோருவதை இன்னும் அது நியாயப்படுத்தும்.

இப்படியான கருத்துக்கள் தமிழர்களிடம் இருப்பதனால்தான் அந்த சமூகம் தமிழர்களுடன் ஒரு அதிகாரமையத்தின் கீழ் வாழ முடியாது என்கின்ற முடிவுக்கு நான் வருகின்றேன். அந்த வகையில் அவர்கள் தனியான அதிகார அலகு கோருவதையும் நான் புரிந்து கொள்கிறேன். மற்றையபடி நான் எந்த ஊருக்கும் வழி காட்டவில்லை.

Link to comment
Share on other sites

முஸ்லீம் மதப்பிரிவினர் தனி அலகு கோருவது, அதற்காக போராடுவது, அதற்காக உயிரைக்கொடுப்பது, அதற்காக வாழ்க்கையைத்தொலைப்பது அது அவர்கள் பிரச்சனை. ஆனால், ஓர் மதப்பிரிவினரின் பிரச்சனையை தனிப்பட்ட, தனித்துவமான ஓர் மொழிப்பிரிவினரினதுடன் ஒரே தராசில் வைத்து பார்ப்பது தவறானது இதுவே எனது பார்வை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி

சபேசன்

இப்ப என்னுடைய பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்கோ

நான் தீவுப்பகுதியைச்சேர்ந்தவன்.

எப்ப பார்த்தாலும் இந்த தமிழர்கள் அதில் மாவட்ட தொகுதி பாகுபாடே இல்லை எல்லோரும் தீவார் தீவார் என ஒதுக்குகிறார்கள்.

நாம் பேசும் தமிழ் வித்தியாசமாக இருக்காம். பழக்க வழக்கங்கள் வேறு மாதிரி இருக்காம். பள்ளிக்குடம் போவதைவிடுத்து வியாபாரம் செய்ய சின்ன வயசிலேயே போய் விடுகின்றோமாம்.

எங்களுக்கும் இவர்களோட வாழ முடியாது.

எங்களுக்கும் தனி மொழி

தனி மதம்

தனி நிலம்

என்று நீங்கள் சொல்வது எல்லாம் இருக்கு.

அத்துடன் நாங்களும் நீங்கள் சொல்கின்றது போல் ஒரு பகுதியின் அகோர தாக்குதல்களால நொந்து போயிருக்கிறம்.

தயவு செய்து எங்களுக்கும் ஒரு தனி அலகு தாங்கோ.

அது முடியாவிட்டால் எங்களுக்கு மற்றப்பக்கத்தால இந்தியா பக்கத்தில தான் இருக்கு.

அவையுடன் என்றாலும் சேர்த்து விடுங்கோ.

(நான் உங்களுக்குகு எழுதியது வெளியில் தெரிய வேண்டாம். பிறகு நாங்கள் யாழ்ப்பாணம் போகும் போது வங்களாவடிச்சந்தியிலும் பண்ணைச்சந்தியிலும் எங்கள் எல்லா வாகனத்தையும் மறிச்சு வைச்சு தாக்குவார்கள். கேட்க நாதியில்லாத ஒரு தனி அலகுக்கு எல்லா தகுதியுமுடைய இனம் சார் நாங்கள்)

Link to comment
Share on other sites

உலகின் கண்ணோட்டத்தில் ஒரு மக்கள் குழுமத்தை தனித்துவம் மிக்கதாக காட்டுவதற்கு மொழி அடிப்படையானதாக இல்லை.

மதம் அடிப்படையானதாக உள்ளதா? அவ்வாறாயின் தமிழ் கீறீஸ்தவர்கள்/கத்தோலிக்கர்கள் தனித்துவமான சமூகம் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்கள்?

இலங்கை முஸ்லீம்கள் எனப்பார்த்தால் கடந்த பல நூற்றாண்டுகளாக இலங்கையில் முஸ்லீம்களாக மதமாற்றம் பெற்றவர்கள் அடங்குகின்றார்கள். மதம் என்பது தவிர இங்கு தனித்துவம் எங்கு உள்ளது?

Link to comment
Share on other sites

சூடானில் இருந்து தென்சூடான் பிரிந்து போனதற்கு முக்கிய காரணம் மதம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஒரு சமூகம் தன்னைத் தனித்துவம் மிக்கதாக ஆக்கிக் கொள்வதற்கு மொழி, மதம், பண்பாடு, பொருளாதாரம் என்று பல காரணங்கள் இருக்கின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய தெற்கு இத்தாலியில் வாழ்பவர்களில் தமது பகுதியை தனிநாடாக ஆக்க வேண்டும் என்று கோருபவர்கள் இருக்கிறார்கள்.

முஸ்லீம்கள் மதத்தினாலும் மற்றும் அவர்களின் பொருளாதாரம் மற்றும் நிலம் சார்ந்த தனித்துவப் பண்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இது ஏற்கனவே விடுதலைப் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

விசுகு கேட்டது நல்ல ஒரு கேள்வி. ஆனால் தவறான ஒரு ஒப்பீடு.

பிரதேச வேறுபாடுகளும், முரண்பாடுகளும் அனைத்து இனங்களுக்குள்ளும் உண்டு. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, தீவுப் பகுதிகள் என்கின்ற வேறுபாடுகளும், பின்பு அதற்குள்ளேயே தனித்தனி முரண்பாடுகளும் இருக்கும். ஆனால் இவைகள் ஒரு தேசிய மற்றும் இனம் சார்ந்த உணர்வை பாதிப்பது இல்லை.

மாறாக இப்படி வைத்துக் கொள்வோம். யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தீவுப் பகுதியைச் சேர்ந்த தமிழர்களை விரோதமாக நோக்குகின்றார்கள். "தீவார்கள்" தமிழர்களுடன் இணைந்து வாழ்வதில் பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். இப்படியான ஒரு நேரத்தில் அவர்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ முடியாது, அவர்கள் எம்மை அடக்குகிறார்கள், எமக்கு தனி அலகு வேண்டும் என்று கேட்டால் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்.

Link to comment
Share on other sites

ஐயோ முடியல.. நான் இந்த விளையாட்டுக்கு வரல.. :D

Link to comment
Share on other sites

தீவார் போன்ற பிரச்சனைகள் எமது இனம் மற்றும் தேசியத்தை பாதிக்கவில்லை. ஆனால் முஸ்லீம்கள் சார்ந்த பிரச்சனை தமிழினத்திற்குள் அடங்க வேண்டிய ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை தனிச் சமூகமாக ஆக்கி விட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கே உள்ள பலரைப் போன்ற கருத்தே என்னிடமும் இருந்தது. அவர்களை "இஸ்லாமியத் தமிழர்கள்" எ;ன்றே அழைத்தேன். ஆனால் உலக அரசியல் பற்றிய பார்வையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்னுடைய கருத்தை மாற்றியிருக்கிறது.

யாரும் யாரின் மீது எதையும் திணிக்கக்கூடாது என்பதிலிம் ஒரு மக்கள் கூட்டம் தான் எப்படி அழைக்கப்பட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்பதிலும் இன்றைக்கு தெளிவாக இருக்கின்றேன்.

இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களை வாசித்து மட்டும் வைத்திருங்கள். நாளை உங்கள் கருத்துக்களில் ஏற்படக் கூடிய நல்ல மாற்றங்களுக்கு அவைகள் துணை நிற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு கேட்டது நல்ல ஒரு கேள்வி. ஆனால் தவறான ஒரு ஒப்பீடு.

பிரதேச வேறுபாடுகளும், முரண்பாடுகளும் அனைத்து இனங்களுக்குள்ளும் உண்டு. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, தீவுப் பகுதிகள் என்கின்ற வேறுபாடுகளும், பின்பு அதற்குள்ளேயே தனித்தனி முரண்பாடுகளும் இருக்கும். ஆனால் இவைகள் ஒரு தேசிய மற்றும் இனம் சார்ந்த உணர்வை பாதிப்பது இல்லை.

மாறாக இப்படி வைத்துக் கொள்வோம். யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தீவுப் பகுதியைச் சேர்ந்த தமிழர்களை விரோதமாக நோக்குகின்றார்கள். "தீவார்கள்" தமிழர்களுடன் இணைந்து வாழ்வதில் பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். இப்படியான ஒரு நேரத்தில் அவர்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ முடியாது, அவர்கள் எம்மை அடக்குகிறார்கள், எமக்கு தனி அலகு வேண்டும் என்று கேட்டால் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்.

இதைத்தானே சபேசன் நானும் எழுதினேன்

சரி ஏதோ எனக்கு நல்ல தீர்பபுப தந்தீர்கள்

நலல்லது

அப்படியே எனது இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள்

இல்லையென்றால் என் தலை வெடித்துவிடும்

இப்படியே கொடுத்தால் தமிழ் ஈழம் எங்கு உள்ளது??

அதன் எல்லைகள் எவை????????

அப்படி இல்லாத ஒன்றுக்கு இத்தனை தியாகங்கள் தேவையா??

Link to comment
Share on other sites

முஸ்லீம்களையும் கிறிஸ்தவத் தமிழர்களையும் ஒப்பிடுவது அர்த்தமற்றது. வரலாறு, பண்பாடு, அரசியல் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேசுகின்ற குழந்தைத்தனமான வாதம்.

காலனித்துவக் காலங்களில் இருந்து இலங்கையில் வாழும் கிறிஸ்தவர்களின் அரசியல் உரிமையை குழந்தைத்தனமான வாதம் என மறுதலிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?

இடம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றிக் கவலைப்பட ஒருவருமில்லை. உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை திரும்பவும் குடியேற்றுவது பற்றி குரல் கொடுக்க யாருமில்லை. வீட்டிற்குள் அத்து மீறி முளைக்கும் புத்தர் சிலைகளைத் தடுக்க யாருமில்லை. சொல்லப் போனால் ஒட்டு மொத்த ஈழத் தமிழனே சோத்துக்கு வழியில்லாமல் நிற்கிறான். அதற்குள் முன்னேறிப் பாய்ந்து முஸ்லிம்களுக்கான தனி அலகு பற்றிக் கவலைப்படுவதுதான் குழந்தைத்தனமான (வழமையான) அரசியல் / இராணுவ ரீதியான ஆய்வு.

Link to comment
Share on other sites

இலங்கையில் வாழும் பேர்கர் சமூகத்திற்கு என்னமாதிரி??!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் பேர்கர் சமூகத்திற்கு என்னமாதிரி??!! :D

எப்படியே எனக்கு சபேசனது உதவியால் ஒரு தனி நாடு கிடைக்கப்போகுது எல்லோரும் வந்திடணும். திறப்பு விழாவுக்கு.

(ஆயிரக்கணக்கான ஆடுகள் அடிக்கப்பட்டு விருந்து கொடுக்கப்படும். விமானம் தரை இறங்க எமது ஊர் கடற்கரை தயாராக இருக்கிறது)

:icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

ஐயோ முடியல.. நான் இந்த விளையாட்டுக்கு வரல.. :D

உங்களால் முடியும்

இப்ப மகிந்தா சமயத்தை வைத்து அலகு பிரித்துத் தரப்போகிறார்.

'நித்தியானந்தா / ரஞ்சி கோஷ்டி சார்பில் தென் மேற்கில் ஒரு அலகு கேட்போம். :D

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் மற்றவர்களிடம் தவறுகளை தேடிக் கொண்டிருப்பதை விட்டு, நாம் விட்ட தவறுகளை பற்றி பேச வேண்டும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி பிரச்சினைக்கு மூலகாரணமாக முஸ்லிம்கள் இருந்து அதனாலேயே தமிழர்கள் அவர்களுடன் பிரச்சினைப்பட்டு பிறகு அதற்கு கூட மன்னிப்பு கேட்டு தான் தலைவர் அவர்களை எம்முடன் சேர சொல்லி கேட்டார். அதை அவர் முஸ்லிம்களிடம் கேட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியிருந்தும் கேட்டார்.

இங்கு நாம் விட்ட தவறுகளை பற்றி பேச வேண்டும் என்கிறீர்களே.. அப்ப தலைவர் இந்த விடயத்தில் என்னத்தை பண்ணினவர் என்று நினைக்கிறியள்?

Link to comment
Share on other sites

வேண்டுமென்றே நான் சொல்வது புரியாதது போன்று கருத்து எழுதுவது விவாதத்தை திசை திருப்பும் செயல்.

பேர்கர் சமூகம் மற்றைய இனங்களால் அடக்கப்படுவதாகவோ, துன்புறுத்தப்படுவதாகவோ நான் அறியவில்லை. அத்துடன் அவர்கள் மற்றைய இனங்களுடன் கலந்து வாழ்கின்றனர்.

ஆனால் முஸ்லீம்கள் அப்படி இல்லை. அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பல தலைமுறையாக பெரும்பான்மையாக வாழ்கின்றனர். முஸ்லீம்கள் என்பதற்காக இனரீதியாக இரண்டு இனங்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். கொல்லப்பட்டிருக்கின்றனர். விரட்டப்பட்டிருக்கின்றனர்.

யாராக இருந்தாலும் ஒரு இன அல்லது சமூக அடையாளத்தின் பொருட்டு பெரும்பான்மை இனத்தினால் அச்சுறுத்தலுக்கும துன்புறுத்தலுக்கும் உயிர், பொருள் இழப்புக்கும் ஆளாகும் பொழுது அவர்கள் தம்மைத் தாமே ஆளும் தேவையை பெறுகின்றனர்.

Link to comment
Share on other sites

இங்கே நான் முஸ்லீம்களின் பொருட்டு பேசுவது அப்படியே தமிழர்களுக்கும் பொருந்தும்.

சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி இங்கே சிலர் முஸ்லீம்களைப் பற்றி சொல்வது போன்றுதான் சொல்கின்றனர்.

"இடையிலே இந்தியாவில் இருந்து வந்தவர்கள், இவர்களை விரட்டி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும், தமிழர்கள் கொழும்பில் அதிகமாக வாழ்கின்றனர்;, அவர்களுக்கு சொந்த நிலம் இல்லை...." இப்படி நிறைய சொல்வார்கள்.

ஆனால் சிங்களவர்கள் தமிழர்களைப் பற்றி முடிவு செய்ய முடியாது. அதைத் தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அது முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.

யாழ் களத்தில் தொடர்ச்சியாக முஸ்லீம்கள் பற்றிய இனவிரோதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்ததனாலேயே இதை இங்கே எழுதுகிறேன்.

அதற்கு தமிழர்களின் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று அர்த்தம் இல்லை.

Link to comment
Share on other sites

வேலியில போற ஓணானை வேட்டிக்குள் பிடித்துவிடுவது நல்லது என்று சபேசனுக்குத்தோன்றினால் முஸ்லீம் மதத்தினரின் பிரச்சனையை அவர் கூறுவதுபோலவே அணுகலாம். முஸ்லீம் சகோதரர்கள் நோகாமல் நொங்கு சாப்பிடுவதை மறுப்பார்களா என்ன!

Link to comment
Share on other sites

யதார்த்தத்தை உணர்ந்து அதற்கு ஊடாக எப்படி பயணிப்பது என்பதை தமிழினம் சிந்திக்க வேண்டும்.

யதார்த்தத்தை உணர்ந்து அதற்கூடாக எப்படி பயணிப்பது என்பதை தமிழினம் சிந்தித்து தான் இருந்தது. அதனால் தான் பல தடவை தலைவர் அவர்களை எம்முடன் சேரும்படி கேட்டார். இங்கு சேர்ந்து கொள்ளாதது அவர்கள் தான். இங்கு யார் யதார்த்தத்தை உணரவில்லை? யார் பயணிப்பில் தவறு உள்ளது?

சிங்களவர்கள் தமிழர்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழர்கள் முஸ்லீம்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படியே மாறி மாறி எதிர்பார்க்க வேண்டியதுதான்.

பிழை விடுபவர்கள் திருந்த தானே வேணும்? அவர்கள் சிங்களவர்களுக்கு ஆதரவளிப்பது அப்ப சரி என்று கூறுகிறீர்களா? அல்லது அவர்கள் சிங்களவர்களுக்கு ஆதரவளித்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

சிங்களவர்களுக்கு ஆதரவளித்து விட்டு எம்மிடம் ஏன் தனியலகு கேட்க வேண்டும்? சிங்களவர்களிடம் கேட்கட்டுமே?

அவர்கள் எம்மிடம் தமக்கான தனியலகை பிரித்து தரும்படி கேட்க வேண்டுமென்றால் அவர்களும் எமது போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும்.

அவர்கள் யதார்த்தவாதிகள் என்று நீங்கள் கருதினால் இப்பொழுதே அவர்களை எம்முடன் இணைய சொல்லுங்கள். அவர்கள் இணைகிறார்களா என்று பார்க்கலாம்.. நிச்சயம் மாட்டார்கள். ஏனென்றால் இப்பொழுது எம் நாட்டில் சிங்களவர் கை தான் ஓங்கியுள்ளது. எனவே அவர்களுடன் தான் இணைந்திருக்க பார்ப்பார்கள். அது தான் அவர்களின் யதார்த்த தன்மை.

தமிழ் மக்கள் உயிரைக்கொடுத்து போராடுகிறார்கள். சும்மா இருந்து போட்டு வெற்றியின் பக்கம் அவர்கள் தாவுறதுக்கு தமிழர்களின் உயிர் என்ன செல்லாக்காசா?

Link to comment
Share on other sites

சபேசன் மனதில் எடுக்காவிட்டால் ஒரு சின்ன விண்ணப்பம் . நீங்கள் இடையில் நிற்கின்ற அந்த பயணத் தொடரை முடியுங்கோவன் . கடைசியா ஒரு ரீக்கடையிலை ரீ குடிக்கிறதோடை நிற்கின்றது . என்னை ஏமாத்திப் போட்டியள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.