Jump to content

சைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்


Recommended Posts

கணபதி துணை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்

சைவ வினா விடை

இரண்டாம் புத்தகம்

220px-Arumuka_Navalar.jpg

பதியியல்

1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.

3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?

நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர்.

4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.

5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ?

தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.]

6. படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

7. காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல்.

8. அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்

9. மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.

10. அருளலாவது யாது?

ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.

11. தனு கரண புவன் போகம் என்றது என்னை?

தனு = உடம்பு; கரணம் = மன முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.

12. ஒரு காரியத்திற்கு காரணம் எத்தனை?

முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்றாம். குடமாகிய காரியத்துக்கு முதற் காரணம் மண், துணைக் காரணம் திரிகை, நிமித்த காரணம் குயவன். திரிகை - சக்கரம்.

13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?

முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.

14. சிவசத்தியாவது யாது?

அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.

15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?

அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.

16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?

அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.

17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?

ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.

18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?

shivaperuman10.jpg

சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல்]

19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?

சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ?க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.

20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?

பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.

21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?

பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.

22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?

படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]

23. மகேசுர வடிவம் எத்தனை?

சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ?ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.

திருசிற்றம்பலம்

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

2. பசுவியல்

24. ஆன்மாக்களாவார் யாவர்?

நித்தியமாய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடையுடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய்ச் சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப் பயன்களை அநுபவிப்பேராய்ச், சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையோராய்த், தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பவர். (சேதனம் - அறிவுடைப் பொருள்)

25. ஆன்மாக்கள் எடுக்கும் சரீரம் எத்தனை வகைப்படும்?

தூல சரீரம், சூக்கும சரீரம் என இரண்டு வகைப்படும்.

26. தூல சரீரமாவது யாது?

சாதி, குலம், பிறப்பு முதலியவைகளால் அபிமானஞ் செய்தற்கு இடமாய்ப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து பூதமும் கூடிப் பரிணமித்த உருவுடம்பு. (பரிணமித்தல் - உருத்甜ிரிதல்)

27. சூக்கும சரீரமாவது யாது?

சத்த ஸ்பரிச ரூப ரச கந்தம் என்னும் காரண தன்மாத்திரையைந்தும், மனம் புத்தி அகங்காரம் என்னும் அந்தக்கரண மூன்றுமாகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு, ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அநுபவித்தற்குக் கருவியாய், ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு.

28. ஆன்மாக்கள் எப்படிப் பிறந்திறந்து உழலும்?

நல்விணை, தீவிணை என்னும் இருவினைக்கும் ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும் எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப், பிறந்திறந்து உழலும்.

29. நால்வகைத் தோற்றங்களாவன யாவை?

அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அண்டசம் = முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் = வேர்வையிற் தோன்றுவன. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன. சராயுசம் = கருப்பையிற் தோன்றுவன.

30. எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும். இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள். இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.

31. கருப்பையிலே பிறப்பன யாவை?

தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளுமாம்.

32. முட்டையிலே பிறப்பன யாவை?

பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவுமாம்.

33. வேர்வையிலே பிறப்பன யாவை?

கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளுமாம். (கீடம் - புழு)

34. வித்தினும் வேர், கொம்பு, கொடி, கிழங்குகளிலும் பிறப்பன யாவை?

தாவரங்கள்.

35. எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் எவை?

1. தேவர் -11,00,000 யோனி பேதம்

2. மனிதர்- 9,00,000 யோனி பேதம்

3. நாற்கால் விலங்கு -10,00,000 யோனி பேதம்

4. பறவை -10,00,000 யோனி பேதம்

5. ஊர்வன -15,00,000 யோனி பேதம்

6. நீர்வாழ்வன -10,00,000 யோனி பேதம்

7. தாவரம் -19,00,000 யோனி பேதம்

ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம்

36. ஆன்மாக்கள் வினைகளைச் செய்தற்கும் வினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் எவை?

இருவினைகளைச் செய்தற்கும் இருவினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் பூமி; நல்வினைப் பயனை அநுபவித்தற்கு இடஞ் சுவர்க்க முதலிய மேலுலங்கள்; தீவினைப் பயனை அநுபவித்தற்கு இடம் இருபத்தெட்டுக் கோடி நரகங்கள்.

37. பூமியிலே பிறந்த ஆன்மாக்கள் சரீரத்தை விட்டவுடனே யாது செய்யும்?

நல்வினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனே, சூக்கும சரீரத்தோடு பூதசார சரீரமாகிய தேவ சரீரத்தை எடுத்துக்கொண்டு, சுவர்க்கத்திலே போய் அந்நல்வினைப் பயனாகிய இன்பத்தை அநுபவிக்கும் தீவினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனேயே, சூக்கும சரீரத்தோடு பூத சரீரமாகிய யாதனா சரீரத்தை எடுத்துக்கொண்டு, நரகத்திலே போய் அத்தீவினைப் பயனாகிய துன்பத்தை அநுபவிக்கும். இப்படியன்றி, ஒரு தூல சரீரத்தை விட்டவுடனே பூமியிலே தானே ஒரு யோனி வாய்ப்பட்டு, மற்றொரு தூல சரீரத்தை எடுப்பதும் உண்டு.

38. சுவர்க்கத்திலே இன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின் யாது செய்யும்?

தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து மனிதர்களாய்ப் பிறக்கும்.

39. நரகத்திலே துன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?

தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து முன்பு தாவரங்களையும் பின்பு நீர்வாழ்வனவாயும், பின்பு ஊர்வனவாயும், பின்பு பறவைகளாயும், பின்பு விலங்குகளாயும் பிறந்து, பின்பு முன் செய்த நல்வினை வந்து பொருந்த மனிதர்களாய்ப் பிறக்கும்.

40. எழுவகைப் பிறப்பினுள்ளும் எந்தப் பிறப்பு அருமையுடையது?

பசுபதியாகிய சிவபெருமானை அறிந்து வழிபட்டு முத்தியின்பம் பெற்றுய்தற்குக் கருவியாதலால் மனிதப் பிறப்பே மிக அருமையுடையது.

41. மனிதப் பிறப்பை எடுத்த ஆன்மாக்களுக்கு எப்பொழுது அம்முத்தி சித்திக்கும்?

அவர்கள், தங்கள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்பப் படிமுறையினாலே, பிறவிதோறும் பெளத்தம் முதலிய புறச்சமயங்களில் ஏறி, ஏறி, அவ்வச் சமயத்துக்கு உரிய நூல்களில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே வைதிக நெறியை அடைந்து, வேதத்தில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே சைவ சமயத்தை அடைவர்கள்; சைவ சமயத்தை அடைந்து, சிவாகமத்தில் விதிக்கப்பட்ட சரியை கிரியை யோகங்களை விதிப்படி மெய்யன்போடு அநுட்டித்தவருக்குச் சிவபெருமான் ஞானாசாரியரை அதிட்டித்து வந்து சிவஞானம் வாயிலாக உண்மை முத்தியைக் கொடுத்தருளுவர்.

42. புறச்சமயங்களின் வழியே ஒழுகினவர்களுக்கு யாவர் பலங் கொடுப்பார்?

புறச்சமயிகளுக்கு, அவ்வவரால் உத்தேசித்து வழிபடப் படுந் தெய்வத்தைச் சிவபெருமானே தமது சத்தியினாலே அதிட்டித்து நின்று, அவ்வவ் வழிபாடு கண்டு, பலங் கொடுப்பார்.

43. சரியையாவது யாது?

சிவாலயத்துக்குஞ் சிவனடியார்களுக்குந் தொண்டு செய்தல்.

44. கிரியையாவது யாது?

சிவலிங்கப் பெருமானை அகத்தும் புறத்தும் பூசித்தல்.

45. யோகமாவது யாது?

விடயங்களின் வழியே போகாவண்ணம் மனத்தை நிறுத்திச், சிவத்தைத் தியானித்துப், பின்பு தியானிப் போனாகிய தானுந் தியானமுந் தோன்றாது தியானப் பொருளாகிய சிவம் ஒன்றே விளங்கப் பெறுதல்.

46. ஞானமாவது யாது?

பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடல்.

47. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினாலும் அடையும் பலங்கள் யாவை?

சரியையினால் அடையும் பலஞ் சிவசாலோக்கியமும், கிரியையினால் அடையும் பலஞ் சிவசாமீப்பியமும், யோகத்தினால் அடையும் பலஞ் சிவசாரூப்பியமுமாம். இம்மூன்றும் பதமுத்தி; ஞானத்தினால் அடையும் பலஞ் சிவசாயுச்சியமாகிய பரமுத்தி.

திருச்சிற்றம்பலம்.

sri_shiva_life.jpg

Link to comment
Share on other sites

3. பாசவியல்

48. பாசமாவன யாவை?

ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். (பந்தித்தல் - கட்டுதல், பாசம், மலம் என்பவை ஒருபொருட் சொற்கள்.)

49. பாசம் எத்தனை வகைப்படும்?

ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும். இம்மூன்றோடு, மாயேயம், திரோதயி என இரண்டுங் கூட்டிப் பாசம் ஐந்து என்று கொள்வதும் உண்டு.

50. ஆணவமாவது யாது?

செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களின் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையுந் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால வெல்லையிலே நீங்கும் அநேக சக்திகளையுடையதாய்ச், சடமாய் இருப்பது.

51. கன்மமாவன யாது?

ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள், இவை, எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட பொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும். பிறவி தோறும் இப்படி ஈட்டப் பட்டுப் பக்குவப்படும் வரையும் புத்தித்தத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இச்சஞ்சித கன்மங்களுள்ளே பக்குவப்பட்டவை, மேல் எடுக்கும் உடம்பையும் அது கொண்டு அநுபவிக்கப்படும் இன்ப துன்பங்களையுந் தந்து பயன்படும் பொழுது, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

52. மாயை எத்தனை வகைப்படும்?

சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மூன்று வகைப்படும். இவைகளுள்ளே, சுத்தமாயை அசுத்தமாயை இரண்டும் நித்தியம்; பிரகிருதிமாயை அசுத்த மாயையினின்றுந் தோன்றியதாதலால் அநித்தியம்.

53. சுத்தமாயையாவது யாது?

நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ச் சொல்வடிவமுஞ் சுத்தமாகிய பொருள் வடிவுந் தோன்றுதற்கு முதற்காரணமாய், மயக்கஞ் செய்யாததாய் இருப்பது.

54. அசுத்தமாயையாவது யாது?

நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ப், பிரளய காலத்திலே ஆன்மாக்களுடைய கன்மங்களுக்கு உறைவிடமாய், ஆன்மாக்களுக்குச் சுத்தா சுத்தமும் அசுத்தமுமாகிய தனு கரண புவன போகங்கள் தோன்றுதற்கு முதற் காரணமாய், மயக்கஞ் செய்வதாய் இருப்பது.

Link to comment
Share on other sites

55. மாயேயமாவன யாவை?

மாயையால் ஆகிய தத்துவங்களும், அவைகளால் ஆகிய தனு கரண புவன போகங்களுமாம்.

56. திரோதாயியாவது யாவை?

ஆணவங் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையுந் தொழிற்படுத்திப் பாசம் வருவிக்குஞ் சிவசக்தி. இது மலத்தைச் செலுத்துதலினாலே, மலம் என உபசரிக்கப்பட்டது

57. மாயாகாரியமாகிய தனு கரண புவன போகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எதன் பொருட்டு?

ஆன்மாக்களைப் பந்தித்த ஆணவ மலமுங் கன்ம மலமுமாகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும் பேற்றைக் கொடுக்கும் பொருட்டு.

58. தனு கரண முதலியவைகளும் மலமன்றோ? மலமென்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்?

வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவர் மண்ணையும் பிசிறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடைவையை மிக வெண்மையுடையதாகச் செய்வன்; அது போலவே சிவபெருமான் ஆன்மாவினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய ஆணவ மலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மலத்தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வார்.

திருச்சிற்றம்பலம்.

SHIVA_BHAJA_by_VISHNU108.gif

Link to comment
Share on other sites

[size=2][size="6"]4. வேதாகமவியல்[/size][/size]

59. சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச் செய்த முதனூல்கள் எவை?

வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம். வேதத்தின் பெயர் சுருதி, நிகமம். ஆகமத்தின் பெயர் தந்திரம், மந்திரம், சித்தாந்தம்.

60. வேதம் எத்தனை?

இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம்.

61. சிவாகமம் எத்தனை?

காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம்.

62. வேதம் நான்கும் எங்கே தோன்றின?

சதாசிவமூர்த்தியுடைய தற்புருட முகத்தினின்றும் இருக்கு வேதமும், அகோர முகத்தினின்றும் யசுர் வேதமும் வாமதேவ முகத்தினின்றுஞ் சாம வேதமும், சத்தியோசாத முகத்தினின்றும் அதர்வ வேதமுந் தோன்றின.

Link to comment
Share on other sites

63. சிவாகம மிருபத்தெட்டும் எங்கே தோன்றின?

சதாசிவமூர்த்தியுடைய உச்சி முகமாகிய ஈசானத்தினின்றும் தோன்றின.

64. வேதம் நான்கும் எத்தனை சாகை யுடையன?

இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர்வேதம் நூறு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும் அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையன (சாகை பிரிவு)

65. வேதம் நான்கும் தனித்தனி எத்தனை காண்டமுடையன?

பிரமகாண்டமும், பிரமகாண்டத்துக்கு நிமித்தமாகிய கருமகாண்டமும், என இரண்டு காண்டமுடையன. பிரமகாண்டத்தின் பெயர் பிரபல் சுருதி, வேதாந்தம், வேதசிரசு, உபநிடதம், கரும காண்டத்தின் பெயர் அற்பகருதி.

66. வேதத்துக்கு அங்கமாகிய நூல்கள் எவை?

சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவி**, சோதிடம் என்னும் ஆறுமாம்.

67. சிக்ஷையாவது யாது?

வேதங்களை உதாத்தம் அநுதாத்தம் முதலிய சுர வேறுபாட்டினால் உச்சரிக்கும் முறைமையை அறிவிப்பது.

68. கற்பமாவது யாது?

வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுட்டிக்கும் முறைமையை அறிவிப்பது.

69. வியாகரணமாவது யாது?

வேதங்களில் எழுத்துச் சொற் பொருளிலக்கணங்களை அறிவிப்பது.

70. நிருத்தமாவது யாது?

வேதங்களின் சொற்களுடைய பொருளை அறிவிப்பது.

74. புராணமாவது யாது?

பரமசிவன் உலகத்தைப் படைத்தல், அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது. உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும் மனுவந்தரங்களும், பாரம்பரியக் கதைகளுமாகிய இவ்வைந்தையும் கூறுதலால், புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும். இதிகாசமும் புராணத்துள் அடங்கும்.

75. நியாயமாவது யாது?

வேதப் பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமாகிய பிரமாணம் முதலியவைகளை அறிவிப்பது.

76. மீமாஞ்சையாவது யாது?

வேதப் பொருளினுடைய தாற்பரியத்தை அறிதற்கு அநுகூலமாகிய நியாயங்களை ஆராய்ச்சி செய்து அறிவிப்பது. அது பூருவமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சை என இரண்டு வகைப்படும். பூருவ மீமாஞ்சையின் பெயர் கருமமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சையின் பெயர் பிரமமீமாஞ்சை, வேதாந்த சூத்திரம்.

77. மிருதியாவது யாது?

அவ்வவ் வருணங்களுக்கும் ஆச்சிரமங்களுக்கு உரிய தருமங்களை அறிவிப்பது.

78. உபவேதங்கள் எவை?

ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம் அருத்தவேதம் என்னும் நான்குமாம்.

79. ஆயுர்வேதமாவது யாது?

எல்லாவற்றையும் அநுட்டித்தற்குச் சாதனமாகிய சரீரத்தை நோயின்றி நிலைபெறச் செய்தற்கு வேண்டப்படுபவைகளை அறிவிப்பது.

80. தனுர்வேதமாவது யாது?

பகைவர்களாலே நலியாது உலகத்தைக் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலப் பயிற்சியை அறிவிப்பது.

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இணைப்புகளுக்கு, நன்றி ஐயா. :)

Link to comment
Share on other sites

[size=2][size="5"]5. சைவபேதவியல்[/size][/size]

108. சிவபெருமானைச் சிவாகம விதிப்படி வழிபடுதற்கு யோக்கியதையைப் பிறப்பிப்பது யாது?

சிவ தீக்ஷை.

109. சிவ தீக்ஷை பெற்ற பின் ஆவசியமாக அநுட்டிக்கப்படும் கருமங்கள் எவை?

இயமநியமங்களும், சந்தியாவந்தனம் சிவலிங்க பூசை, தேவார திருவாசக பாராயணம், சிவாலய கைங்கரியம், சிவாலய தரிசனம், குருவாக்கிய பரிபாலனம், இயன்றமட்டும் மாகேசுர பூசை முதலியவைகளுமாம். (கைங்கரியம் = தொண்டு)

110. இயமம் என்பன யாவை?

கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொதுமகளிரையும் விரும்பாமையாகிய ஆண்டகைமை, இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, மனங் கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் பத்துமாம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

111. நியமம் என்பன எவை?

தவம், மனமுவந்திருத்தல், கடவுள் உண்டென்னும் விசுவாசம், பாவத்துக்குப் பயந்து தேடிய பொருளைச் சற்பாத்திரமா யுள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் மூத்தோரை வழிபடுதல், உயிர்க்கு உறுதி பயக்கும் உண்மை நூல்களைக் கேட்டல், குலஞ்செல்வம் அதிகாரம் முதலியவைகளினாலே கெருவம் இன்றி அடங்கி யொழுகுதல், தக்கனவுந் தகாதனவும் பகுத்தறிதல், செபம், விரதம் என்னும் பத்துமாம்.

112. அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை?

சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திரநிந்தை, தேவத்திரவியங்களை உபயோகஞ் செய்தல், உயிர்க்கொலை முதலியவைகளாம்.

113. அநுட்டானத்தில் வழுகிய பாவங்கள் எப்படி நீங்கும்?

அறியப்பட்ட பாவங்கள் பிராயச்சித்தங்களினாலே நீங்கும்; அறியப்படாத பாவங்கள் அந்தியேட்டிக் கிரியையினாலே நீங்கும்.

114. தீக்ஷை பெற்றுந் தத்தமக்கு விதிக்கப்பட்ட சைவாசாரங்களை அநுட்டியாது விடுத்தவர் யாது பெறுவர்?

பைசாச புவனத்திற் பிசாசுகளாய் அங்குள்ள போகங்களை அநுபவிப்பர்.

115. சிவதீக்ஷை பெற்றுச் சிவபெருமானை வழிபடுவோர்கள் யாது பெயர் பெறுவார்கள்?

சைவர் என்னும் பெயர் பெறுவார்கள்.

116. சைவர்கள் சாதிபேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?

ஆதிசைவர்; மகாசைவர்; அநுசைவர்; அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகைப்படுவார்கள்.

117. ஆதிசைவராவார் யாவர்?

அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய ஐந்து திருமுகங்களினுந் தீக்ஷிக்கப்பட்ட இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய சிவப்பிராமணர். (இருடி = முனிவர்)

118. மகாசைவராவர் யாவர்?

பிரமாவினுடைய முகங்களிற் றோன்றிய இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய வைதிகப் பிராமணருள்ளே சிவதீக்ஷை பெற்றவர்.

119. அநுசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற க்ஷத்திரியரும், வைசியரும்.

120. அவாந்தரசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற சூத்திரர்.

121. பிரவரசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற அநுலோமர்.

122. அந்நியசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற பிரதிலோமர் முதலிய மற்றைச் சாதியார்.

123. சைவர்கள் தீக்ஷா பேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?

சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், நிருவாண தீக்ஷிதர், ஆசாரியர் என நால்வகைப்படுவார்கள்.

124. சமயதீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனத்தை மாத்திரமேனும், சந்தியாவந்தனம் சிவாலயப் பணி என்னும் இரண்டுமேனும் அநுட்டிப்பவர்.

125. சந்தியாவந்தனம் மாத்திரம் அநுட்டிக்குஞ் சமயிகள் யாது பெயர் பெறுவர்?

சந்தியோபாஸ்திபரர் என்னும் பெயர் பெறுவர். (உபாஸ்தி = வழிபாடு)

126. சந்தியாவந்தனம், சிவாலயப் பணி என்னும் இரண்டும் அநுட்டிக் குஞ்சமயிகள் யாது பெயர் பெறுவர்?

சிவகர்மரதர் என்னும் பெயர் பெறுவர்

(ரதர் = விருப்பமுடையவர்)

127. விசேஷ தீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, என்னும் இரண்டும் பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டும் அநுட்டிப்பவர்.

128. நிருவாண தீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேக்ஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என்னும் மூன்றும் பெற்றுக்கொண்டு, சந்தியா வந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டனோடு ஞான பூசையும் அநுட்டிப்பவர்.

129. ஞானபூசை யென்பது என்ன?

ஞான நூல்களாகிய சைவ சித்தாந்த சாத்திரங்களை விதிப்படியே ஓதல், ஓதுவித்தல், அவைகளின் பொருளைக் கேட்டல், கேட்பித்தல், கேட்டதைச் சிந்தித்தல் என்னும் ஐந்துமாம்.

130. ஆசாரியராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை, ஆசாரியபிஷேகம் என்னும் நான்கும் பெற்றுக் கொண்டு, நித்திய கருமங்களோடு தீக்ஷை, பிரதிட்டை முதலிய கிரியைகளுஞ் செய்பவர்.

131. ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருள்ளும், மனக்குற்றங்களும், உடற்குற்றங்களும் இல்லாதவராய், நிகண்டு கற்று, இலக்கியவாராய்ச்சி செய்து இலக்கணமுந் தருக்கமும், நீதிநூல்களுஞ் சிவபுராணங்களும் படித்தறிந்தவராய், தேவார திருவாசங்களைப் பண்ணோடு ஓதினவராய், சைவாகமங்களை ஓதி அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அறிந்தவராய், சீடர்களுக்கு நல்லொழுக்கத்தையுஞ் சைவ சமயத்தையும் போதித்தலின்கண் அதிசமர்த்தராய் உள்ளவர்.

Link to comment
Share on other sites

  • 5 months later...

132. ஆசாரியராதற்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன் எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை களவு முதலிய தீயொழுக்க முடையவன், சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்).

133. இக்குற்றமுடைய ஆசாரியரைக் கொண்டு தீக்ஷை பிரதிட்டை முதலியன செய்வித்தவர் யாது பெறுவர்?

அவைகளால் ஆகும் பயனை இழந்து, நரகத்தில் வீழ்ந்து வருந்துவர். ஆதலினாலே, குருலக்கணங்கள் அமையப் பெற்ற ஆசாரியரைக் கொண்டே தீக்ஷை, பிரதிட்டை முதலியன செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

134. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன வருணத்தாருக்கு ஆசாரியராகலாம் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராமணர், பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும், க்ஷத்திரியர், க்ஷத்திரியர் முதலிய மூன்று வருணத்தாருக்கும், வைசியர், வைசியர் முதலிய இரண்டு வருணத்தாருக்கும், சூத்திரர், சூத்திரருக்குஞ் சங்கரசாதியருக்கும் ஆசாரியராகலாம். இந்நியமங் கிரியாகாண்டத்தின் மாத்திரமேயாம்; ஞான காண்டத்திலோ வெனின், நான்கு வருணத்துள்ளும் உயர்ந்த வருணத்தாருக்குத் தாழ்ந்த வருணத்தாரும் ஆசாரியராகலாம்.

135. சிவஞானத்தை அடைய விரும்பி சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், யாது செய்தல் வேண்டும்?

வண்டானது தான் அடைந்த பூவினிடத்தே தேன் இல்லையாயின், அதனை விட்டுத் தேன் உள்ள பூவைத் தேடி அடைவது போலச், சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், அவரை விட்டுச் சிவஞானம் உள்ள ஆசாரியரைத் தேடியடையலாம்; அடையினும், மூன்று சந்தியினும், கிரியை உபதேசித்த முந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்து கொண்டே, ஞானம் உபதேசித்த பிந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

 

136. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன தீக்ஷை பெறுதற்கு யோக்கியர் என்னும் நியமம் உண்டோ?

 

ஆம்; நான்கு வருணத்தாரும், அநுலோமர் அறுவரும் ஆகிய பத்துச் சாதியாரும் ஒளத்திரி தீக்ஷை பெறுதற்கு யோக்கியர். மற்றைச் சாதியார் ஒளத்திரி தீக்ஷைக்கு யோக்கியரல்லர். ஒளத்திரி தீக்ஷைக்கு அங்கமாகிய நயன தீக்ஷை, பரிச தீக்ஷை, வாசக தீக்ஷை, மானச தீக்ஷை, சாத்திர தீக்ஷை, யோக தீக்ஷை என்னும் ஆறனுள்ளுந் தத்தஞ் சாதிக்கும் பரிபக்குவத்துக்கும் ஏற்ற தீக்ஷை பெறுதற்கு யோக்கியர். ஆசாரியர் தமது பாதோதகத்தைக் கொடுத்தலும் ஒரு தீக்ஷையாம்; சீடர் அதனைச் சிரத்தையோடும் ஏற்றுச் சிரசின் மீது புரோக்ஷித்து ஆசமனஞ் செய்யக் கடவர்.

137. ஒளத்திரி தீக்ஷையாவது யாது?

ஓமத்தோடு கூடச் செய்யப்படும் தீக்ஷை. (ஹோத்திரம் = ஓமம்)

138. ஒளத்திரி தீக்ஷை எத்தனை வகைப்படும்?

ஞானவதி, கிரியாவதி என இரண்டு வகைப்படும்.

 

139. ஞானவதியாவது யாது?

 

குண்டம், மண்டலம், அக்கினி, நெய், சுருக்குச்சுருவ முதலியவைகளெல்லாம் மனத்தாற் கற்பித்துக் கொண்டு, விதிப்படி அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம். இது சத்தி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.

140. கிரியாவதியாவது யாது?

குண்ட மண்டலங்களைப் புறத்தேயிட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம். இது மாந்திரி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.

141. ஞானவதி, கிரியாவதி என்னும் இரண்டுந் தனித்தனி எத்தனை வகைப்படும்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என மூன்று வகைப்படும்.

 

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

6.விபூதி இயல்

1. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?

விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.

2. விபூதியாவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய திருநீறு, விபூதியின் பெயர்: பசிதம், பசுமம், க்ஷரம், இரக்ஷை

3. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

Link to comment
Share on other sites

4. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொள்ளல் வேண்டும்?

புது வஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப் பாண்டத்தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ளே போட்டுப், புது வஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி வைத்துக்கொள்ளல் வேண்டும்.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தொடுத் திழுத்துப் பெருவிரலிரலினால் வலப் பக்கந் தொடுத் திழுத்துத் தரித்தலுமாம். வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்து விட்டு, அந்தத் தலத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி தரிக்கலாகாது?

சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நிலத்தும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது.

10. எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?

சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ�க்ஷ யில்லாதவர் தீண்டிய போதும், பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.

11. விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?

சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.

12. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல மீட்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?

ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ�க்ஷயில்லாதார் தந்த விபூதியுந் தரிக்கலாகாது.

14. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

15. சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் யாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல் வேண்டும்?

கொண்டு வந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்; அப்படிபட்டவரல்லராயின், அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.

16. விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

( உத்தூளனம் = திருநீறுபூசுதல்)

17. திரிபுண்டரமாவது யாது?

வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.

18. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு.

19. திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தானங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், மார்ப்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும். இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங் குற்றமாம்.

20. எல்லோரும் எப்பொழுதும் விபூதியைச் சலத்திற் குழைத்துத் தரிக்கலாமா?

திக்ஷையுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குழைத்துத் தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும். திக்ஷை இல்லாதவர் மத்தியானத்துக்குப் பின் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.

21. விபூதிதாரணம் எதற்கு அறிகுறி?

ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்குஞ் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

உருத்திராக்ஷவியல்

1. உருத்திராக்ஷமாவது யாது?

தேவர்கள் திரிபுரத்தசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பஞ் செய்து கொண்ட பொழுது, திருக்கைலாசபதியுடைய மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரிற்றோன்றிய மணியாம்.

2. உருத்திராக்ஷந் தரித்தற்கு யோக்கியர் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசார முடையவராய் உள்ளவர்.

3. உருத்திராக்ஷந் தரித்துக்கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

4. எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?

சந்தியாவந்தம், சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணங் கேட்டல், சிராத்தம் முதலியவை செய்யுங் காலங்களில் ஆவசியகமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்; தரித்துக்கொள்ளாது இவை செய்தவருக்குப் பலம் அற்பம்.

Link to comment
Share on other sites

5. ஸ்நான காலத்தில் உருத்திராக்ஷதாரணங் கூடாதா?

கூடும்; ஸ்நானஞ் செய்யும் பொழுது உருத்திராக்ஷ மணியிற் பட்டு வடியுஞ் சலம் கங்கா சலத்துக்குச் சமமாகும்.

6. உருத்திராக்ஷத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

ஒருமுக மணி முதற் பதினாறுமுக மணி வரையும் உண்டு.

7. உருத்திராக்ஷ மணியை எப்படிக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்?

பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும் முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்.

8. உருத்திராக்ஷந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், பூணூல் என்பவைகளாம்.

9. இன்ன இன்ன தானங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; குடுமியிலும் பூணூலிலும் ஒவ்வொரு மணியும், தலையிலே இருபத்திரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். குடுமியும் பூணூலும் ஒழித்த மற்றைத் தானங்களிலே அவ்வத்தானங் கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகும்.

10. இந்தத் தானஙக ளெல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்ஷந் தரித்துக்கொள்ளலாமா?

குடுமியிலும், காதுகளிலும், பூணுலிலும் எப்போதுந் தரித்துக்கொள்ளலாம்; மற்றைத் தானங்களிலோ வெனின், சயனத்திலும் மலசல மோசனத்திலும், நோயினும், சனனாசெளச மரணாசெளசங்களிலுந் தரித்துக்கொள்ளலாகாது..

11. உருத்திராக்ஷதாரணம் எதற்கு அறிகுறி?

சிவபெருமானுடைய திருக்கண்ணிற் றோன்றுந் திருவருட்பேற்றிற்கு அறிகுறி.

 

 

 

 

திருச்சிற்றம்பலம்

Ganesha.jpg

Link to comment
Share on other sites

8. பஞ்சாக்ஷரவியல்

175. சைவசமயிகள் நியமமாகச் செபியக்கற்பாலதாகிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திரு ஐந்து எழுத்து).

176. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ�க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

177. ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை எப்படிப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்?

தத்தம் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்குந் தீ�க்ஷக்கும் ஏற்பக் குருமுகமாகவே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

178. மந்திரோபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?

குருவை வழிபட்டு, அவருக்கு வருடந்தோறும் இயன்ற தக்ஷணை கொடுத்துக்கொண்டே செபித்தல் வேண்டும்.

179. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே நியமமாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டுருவாயினும், ஐம்பதுருவாயினும், இருபத்தைந்துருவாயினும், பத்துருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

180. செபத்துக்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். (விரலிறை=கட்டைவிரல்)

181. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

உருத்திராக்ஷமணி கொண்டு செய்வது உத்தமம்.

182. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியுங் கொள்ளத் தகும். இல்வாழ்வான் நூற்றெட்டுமணி ஐம்பத்து நான்கு மணிகளாலுஞ் சபமாலை செய்து கொள்ளலாம்.

183. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டுமுக மணியும், பதின்மூன்று முக மணியுஞ் செபமாலைக்கு ஆகாவாம்; அன்றியும், எல்லாமணியும் ஒரே விதமாகிய முகங்களையுடையனவாகவே கொள்ளல் வேண்டும்; பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடைத்து.

Link to comment
Share on other sites

184. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழிழையினா லாக்கிய கயிற்றினாலே கோத்தல் வேண்டும்.

185. செபமாலையை எப்படிச் செய்தல் வேண்டும்?

முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு என்றும் பெயர்.

186. செபமாவது யாது?

தியானிக்கப்படும் பொருளை எதிர்முக மாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

187. மந்திரம் என்பதற்குப் பொருள் யாது?

நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்னும் பெயர், நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்குஞ் சிவசத்திக்குமே செல்லும்; ஆயினும், வாச்சியத்துக்கும் வாசகத்துக்கும் பேதமில்லாமை பற்றி, உபசாரத்தால் வாசகத்துக்குஞ் செல்லும்; எனவே, மந்திரம் வாச்சிய மந்திரம், வாசகமந்திரம் என இரு திறப்படும் என்ற படியாயிற்று. [மந்=நினைப்பவன்; திர=காப்பது]

188. மந்திரசெபம் எத்தனை வகைப்படும்?

மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.

189. மானசமாவது யாது?

நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருத்தி மனசினாலே செபித்தலாம்.

190. உபாஞ்சுவாவது யாது?

தன் செவிக்கு மாத்திரங் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்றும் பெயர்.

191. வாசகமாவது யாது?

அருகிலிருக்கும் பிறர் செவிக்குங் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

192. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசங் கோடி மடங்கு பலமுந் தரும்.

193. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

வடக்குமுக மாகவேனும் கிழக்குமுக மாகவேனும், மரப்பலகை, வஸ்திரம், இரத்தின கம்பளம், மான்றோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றிலே, முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத் தொடையினுள்ளே வலப் புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்த்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

194. எப்படி இருந்து செபிக்க லாகாது?

சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கெளபீனந் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரந் தரியாதும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றையும், புலையர் முதலாயினோரையும் பார்த்துக் கொண்டுஞ் செபிக்கலாகாது. செபஞ் செய்யும் போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்பல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்.

195. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

பிறர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகக் செபிக்கிற் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனசிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயக மணிக்கு அடுத்த முகமேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும் முத்தியின் பொருட்டு மேனோக்கித் தள்ளியுஞ் செபித்து, பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும் போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படிற் பாவமுண்டாம்.

196. இன்ன இன்ன பொழுது செபித்தவர் போக மோக்ஷங்களுள் இன்னது இன்னது பெறுவர் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராணவாயுவானது இடப்பக்க நாடியாகிய இடையிலே நடக்கும் போது செபித்தவர் போகத்தையும், வலப்பக்க நாடியாகிய பிங்கலையிலே நடக்கும் போது செபித்தவர் மோக்ஷத்தையும், நடுநிற்கு நாடியாகிய கழுமுனையிலே நடக்கும் போது செபித்தவர் போகம் மோக்ஷம் என்னும் இரண்டையும் பெறுவர்.

197. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபம் எவ்வெக் காலங்களிலே விசேஷமாகச் செய்யத் தக்கது?

அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், பன்னிரண்டு மாதப்பிறப்பு, கிரகணம், சிவராத்திரி, அர்த்தோதயம், மகோதயம் முதலாகிய புண்ணிய காலங்களிலே புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து, தியானஞ் செபம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும். சித்திரை, ஐப்பசி என்னும் இவ்விரண்டு மாதப் பிறப்பும் விஷ� எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறத்தற்கு முன்னெட்டு நாழிகையும் பின்னெட்டு நாழிகையும் புண்ணிய காலம். ஆடி மாதப் பிறப்பு, தக்ஷ�ணாயனம் எனப்படும்.

இதிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு உத்தராயணம் எனப்படும்; இதிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி என்னும் இந்நான்கு மாதப் பிறப்பும் விட்டுணுபதி எனப்படும்; இவைகளிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். ஆனி, புரட்டாதி, மார்கழி, பங்குனி என்னும் இந்நான்கு மாதப்பிறப்பும் சடசீதிமுகம் எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். சூரிய கிரகணத்திலே பரிசகாலம் புண்ணிய காலம்; சந்திர கிரகணத்திலே விமோசன காலம் புண்ணிய காலம். அர்த்தோதயமாவது தை மாதத்திலே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும் விதிபாத யோகமுங் கூடிய காலம். மகோதயமாவது தை மாதத்திலே திங்கட்கிழமையும் அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும், விதிபாத யோகமுங் கூடிய காலம்.

198. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்னை?

ஸ்ரீ பஞ்டாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நிங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித் தருளுவர்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

9.சிவலிங்கவியல்

1. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?

சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். [சைலம்=சிலையாலாகியது]

2. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?

மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.

3. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் இருவகைப்படும்.

4. பரார்த்த லிங்கமாவது யாது?

சிவபெருமான் சங்கார காலம் வரையுஞ் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரக்கப் பெறும் இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம்=அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல், தாவரம் எனினும், திரம் எனினும், நிலையியற் பொருள் எனினும் பொருந்தும்.

5. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?

சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கமாவது தானே தோன்றியது. காண லிங்கமாவது விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிக லிங்கமாவது விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கமாவது இருடிகளாற் றாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினாற் றாபிக்கப்பட்டதும் அது. மானுடலிங்கமாவது மனிதராற் றாபிக்கப்பட்டது.

6. இவ்வைவகை யிலிங்கங்களும் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; மானுட லிங்கத்தின் உயர்ந்தது ஆரிட லிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிக லிங்கம்; அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்பு லிங்கம்.

7. பரார்த்த லிங்கப் பிரதிட்டை, பரார்த்த பூஜை, உற்சவம் முதலியவை செய்தற்கு அதிகாரிகள் யாவர்?

ஆதிசைவர்களுக்குள்ளே, சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவர்களாய்ச் சைவாகமங்களிலே மகாபாண்டித்திய முடையவர்களாய் உள்ளவர்கள்.

8. திருக்கோயிலுள் ளிருக்குஞ் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லாரலுமே வழிபடற் பாலானவா?

ஆம்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் மார்க்கத்தாராலும் வழிபடற் பாலனவேயாம்; ஆயினும், அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும்; படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.

9. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

சரியையாளர்கள் பகுத்தறித லில்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வர்.

10. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினிபோல, அவ்வம் மந்திரங்களினாலும் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.

11. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

யோகிகள், யோகிகளுடைய இருதய மெங்கும் இருக்குஞ் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம் மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று அருள் செய்வர்.

12. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்/ அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக், கருணை மிகுதியினால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.

Link to comment
Share on other sites

13. சிவபெருமானுடைய திருவுருவஞ் சிவசக்தி வடிவம் என்று முன் செல்லப்பட்ட தன்றோ: இங்கே அவர் திருவுருவம் மந்திர வடிவம் என்றது என்னை?

சிவபெருமானுக்கு வாச்சிய மந்திரமாகிய சிவசத்தியே உண்மை வடிவம்; அச்சிவசத்தி, கரியினிடத்தே அக்கினி போல வாசக மந்திரத்தினிடத்தே நின்று சாதகருக்குப் பயன் கொடுக்கும். ஆதலினாலே, சிவபெருமானுக்குச், சிவசத்தியினால், வாசக மந்திரத்தோடு சம்பந்தம் உண்டு. அச்சம்பந்தம் பற்றி வாசக மந்திரஞ் சிவபெருமானுக்கு உபசார வடிவமாம்.

14. மந்திரநியாசம் என்றது என்ன?

வாச்சிய மந்திரங்களாகிய சிவசக்தி பேதங்களை உள்ளத்தில் சிந்தித்து, அவைகளை அறிவிக்கும் வாசக மந்திரங்களை உபசரித்துச், சிவபெருமானுக்கு உபசார வடிவத்தை அம்மந்திரங்களினாலே சிர முதலாக அமைத்தலாம். [நியசித்தல்=வைத்தல், பதித்தல்]

15. இட்டலிங்கமாவது யாது?

ஆசாரியர் விஷேதீக்ஷையைப் பண்ணி, சீடனைப் பார்த்து, "நீ உள்ளளவுங் கைவிடாது இவரை நாடோறும் பூசி" என்று அநுமதி செய்து, "அடியேன் இச்சரீரம் உள்ளவரையுஞ் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளேன்" என்று பிரதிஞ்ஞை செய்வித்துக்கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம். இது ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் எனவும் பெயர் பெறும்.

16. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?

வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், லோகஜ லிங்கம், சைல லிங்கம், க்ஷணிக லிங்கம், எனப் பலவகைப்படும்.

17. இட்டலிங்கம் பூசைக்கு அதிகாரிகள் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் அநுலோமர் அறுவருமாகிய பத்துச் சாதியாருள்ளும், அங்ககீன ரல்லாதவர்கள் இட்டலிங்க பூசைக்கு அதிகாரிகள்; இவர்களுள்ளும், பிணியில்லாதவராய், இடம் பொருளேவல்கள் உடையவராய்ச், சிவபூசா விதி, பிராயச்சித்த விதி, மார்கழி மாதத்துக் கிருதாபி�க்ஷகம் முதலாகப் பன்னிரண்டு மாதமுஞ் செய்யப்படும் மாதபூசாவிதி, சாம்பவற்சரிகப் பிராயச் சித்தமாகச் சாத்தப்படும் பவித்தர விதி முதலியவைகளை நன்றாக அறிந்தவராய், அறிந்தபடியே அநுட்டிக்க வல்லவராய் உள்ளவர் மாத்திரமே, வாண முதலிய சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்டு பூசை பண்ணலாம். மற்றவரெல்லாரும் க்ஷணிக லிங்க பூசையே பண்ணக் கடவர். அவர் குளிக்கப் புகுந்து சேறு பூசிக்கொள்வது போலச் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளப் புகுந்து பாவந் தேடிக்கொள்வது புத்தி யன்று.

18. எவ்வகைப்பட்ட சிவலிங்கம் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்?

சிவாகம விதிவிலக்குகளை ஆராய்ந்து, சிவலிங்கங்களைப் பரீ�க்ஷ செய்து, யாதொரு குற்றமும் இல்லாததாய் நல்லிலக்கணங்கள் அமையப்பெற்றதாய் உள்ள சிவலிங்கத்தையே பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

19. க்ஷணிக லிங்கமாவது யாது?

பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாம்.

20. க்ஷணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?

மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்ஷம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பமாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.

21. மேலே சொல்லப்பட்ட பத்துச் சாதியாருள் அங்ககீனரும் மற்றைச் சாதியாருஞ் சிவபூசை பண்ண லாகாதா?

தங்கள் தங்கள் அதிகாரத்திற் கேற்ப ஆசாரியர் பண்ணிய தீ�க்ஷயைப் பெற்றுத் தூல லிங்கமாகிய தூபியையேனுந் திருக்கோபுரத்தையேனும் பத்திர புஷ்பங்களால் அருச்சித்துத் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதே அவர்களுக்குச் சிவபூசை; சூரிய விம்பத்தின் நடுவே சதாசிவமூர்த்தி அநவரதமும் எழுந்தருளி யிருப்பர் என்று நினைந்து அவருக்கு எதிராகப் புட்பங்களைத் தூவித் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதும் அவர்களுக்குச் சிவபூசை.

22. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?

பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்குஞ் சமம்; அப்படிப் புசித்தவனைத் தீண்டல் காண்டல்களும் பாவம். ஆதலால், ஒரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவன், ஆசாரியரை அடைந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.

23. ஞானநிட்டை யுடைவர் சிவபூசை முதலிய நியமங்களைச் செய்யாது நீக்கிவிடலாமா?

நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவர் அறியாமற்றானே நீங்குதல் போல, ஞானநிட்டையுடையவருக்குச் சிவபூசை முதலிய நியமங்கள் தாமே நீங்கிற் குற்றமில்லை; அப்படி யன்றி அவர் தாமே அவைகளை நீக்குவாராயின், நரகத்து வீழ்தல் தப்பாது.

24. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டவர் சனன மரணா செளசங்களில் யாது செய்தல் வேண்டும்?

திடபத்தி யுடையவர் ஸ்நானஞ் செய்து, ஈர வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, தாமே சிவபூசை பண்ணலாம்; ஸ்நானஞ் செய்தமை முதற், பூசை முடிவுவரையுந் தாமரையிலையில் நீர் போல அவரை ஆசெளசஞ் சாராது. திடபத்தி யில்லாதவர், ஆசெளசம் நீங்கும் வரையும் தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்துகொண்டு, அப்பூசை முடிவிலே புறமண்டபத்தி னின்று புட்பாஞ்சலித்திரயஞ் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும். (அந்தரியாகம்-உட்பூசை)

25. வியாதினாலே தங் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?

தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.

26. சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?

மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர ஸ்நானஞ் செய்து கொண்டு, அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்; நான்காம் நாள் ஸ்நானஞ் செய்து, பஞ்ச கவ்வியமேனும், பாலேனும் உட்கொண்டு; மீட்டும் ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்தல் வேண்டும், அம்மூன்று நாளும் அந்தரியாகஞ் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.

27. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசெளசம், வியாதி இவைகள் வரின், யாது செய்தல் வேண்டும்?

வருணத்தாலுந் தீ�க்ஷயாலுந் தம்மோ டொத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.

28. ஆசெளசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தவர் யாவரும், ஆசெளச முதலியவை நீங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?

பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறுருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.

29. சிவலிங்க காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?

அந்தரியாக பூசை செய்து, பால் பழம், முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும் அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொருலிங்கத்தை ஆசாரியர் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.

30. சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷபூசை செய்யத்தக்க காலங்கள் எவை?

பஞ்சாக்ஷரவியலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களுஞ் சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாடோறும் நித்திய பூசையே யன்றி அதற்குமுன் உஷக்கால பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும் (சென்மத்திரயங்களாவன; பிறந்த நக்ஷத்திரமும் அதற்குப் பத்தா நக்ஷத்திர்மும், அதற்குப் பத்தா நக்ஷத்திரமுமாம்.)

31. சென்மத்திரய பூசையால் வரும் விசேஷ பலம் என்னை?

சென்மத்திரயந்தோறும் சிவலிங்கப்பெருமானூக்குப் பதமந்திரங்கொண்டு பாலினாலும் சர்க்கரையினாலும் விசேஷமாக அபிஷேகஞ் செய்து, சுகந்தத் திரவியங்கள் கலந்த சந்தனக் குழம்பு சாத்திப் பாயச முதலியன நிவேதனஞ் செய்துகொண்டுவரின், உற்பாதங்களும், பயங்கரமாகிய கிரக பிடைகளும், சகல வியாதிகளும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆறுமுகநாவலர் ஐயா! மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.........

Link to comment
Share on other sites

10. நித்தியகருமவியல்

230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.

சிவத்தியானாதி

231. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாக வேனும் இருந்து, விபூதி தரித்துக் கொண்டு, குரு உபதேசித்த பிரகாரஞ் சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை இயன்றமட்டுஞ் செபித்து, அருட்பாக்களினாலே உச்ச விசையோடு தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

232. சிவத்தியான முதலியவை செய்த பின் செய்யத் தக்கவை யாவை?

அவசியகருமம், செளசம், தந்ததாவனம், ஸ்நானம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவாலய தரிசனம், சிவசாத்திர பாராயணம், தேவார திருவாசக பாராயணம், மத்தியான சந்தியாவந்தனம், போசனம், சிவசாத்திர படனம், சாயங்கால சந்தியாவந்தனம், சிவாலய தரிசனம், சிவபுராண சிரவணம், சயனம் என்பவைகளாம்.

அவசிய கருமம்

233. மலசலமோசனஞ் செய்யத் தக்க இடம் யாது?

திருக்கோயிலெல்லைக்கு நானூறு முழ தூரத்தின தாய் ஈசானதிக்கொழிந்த திக்கினிடத்ததாய் உள்ள தனியிடமாம்.

234. மலசலமோசனஞ் செய்யத் தகாத இடங்கள் எவை?

வழி, குழி, நீர்நிலை, நீர்க்கரை, கோமயம் உள்ள இடம், சாம்பர் உள்ள இடம், சுடுகாடு, பூந்தோட்டம், மரநிழல், உழுத நிலம், அறுகம்புல்லுள்ள பூமி, பசுமந்தை நிற்கும் இடம், இடி வீழிடம், காற்றுச் சுழலிடம், புற்று, அருவி பாயும் இடம், மலை என்பவைகளாம்.

235. மலசலமோசனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

மெளனம் பொருந்திப், பூணூலை வலக்காதிலே சேர்த்துத் தலையையும், காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றிப், பகலிலும் இரண்டு சந்தியா காலங்களிலும் வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும், நாசி நுனியைப் பார்த்துக் கொண்டிருந்து, மலசல மோசித்தல் வேண்டும். சந்தியாகாலம் இரண்டாவன; இராக்காலத்தின் இறுதிமுகூர்த்தமும், பகற் காலத்தின் இறுதி முகூர்த்தமுமாம். (முகூர்த்தம் - இரண்டு நாழிகை)

செளசம்

236. மலசல மோசனஞ் செய்யின் எப்படிச் செளசஞ் செய்தல் வேண்டும்?

எழுந்து புண்ணிய தீர்த்த மல்லாத சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு, மூன்று விரலால் அள்ளிய மண்ணுஞ்சலமுங் கொண்டு இடக்கையினாலே குறியை ஒருதரமும், குதத்தை ஐந்து தரத்துக்கு மேலும், இடக்கையை இடையிடையே ஒவ்வொரு தரமும், பின்னும் இடக்கையைப் பத்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து; கால்களை முழங்கால் வரையுங் கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரமுங் கழுவிச் சுத்தி செய்து, செளசஞ் செய்த இடத்தைச் சலத்தினால் அலம்பிவிட்டு, அவ்விடத்தினின்று நீங்கி, வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையுங் காதுகளையுங் கைகால்களிலுள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத்தரஞ் சலம் வாயிற் கொண்டு, இடப் புறத்திலே கொப்பளித்துத், தலைக்கட்டு இல்லாமற் பூணூலை முன்போலத் தரித்துக், குடுமியை முடித்து, மந்திரங்கள் உச்சரியாது ஒரு தரமும் மந்திரங்கள் உச்சரித்து ஒரு தரமுமாக இரண்டு தரம் ஆசமனம் பண்ணல் வேண்டும். (ஆசமனம் - உறிஞ்சுதல்)

237. சலமோசனஞ் செய்யின் எப்படி செளசஞ் செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமுங்கொண்டு, குறியை ஒரு தரமும், இடக்கையை ஐந்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து மூன்று தரமும், இரண்டு கால்களையும் ஒவ்வொரு தரமுஞ் சுத்தி செய்து, நான்கு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

238. செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையாயின் யாது செய்தல் வேண்டும்?

பாத்திரத்திலே சலம் மொண்டு ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசல மோசித்துச் செளசஞ் செய்துவிட்டுப், பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலம் மொண்டு, வாய் கொப்பளித்துக், கால் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும். சல பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு சலமல விசர்க்கஞ் செய்யலாகாது. (விசர்க்கம் = கழித்தல்)

239. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

கிழக்கையேனும் வடக்கையேனும் நோக்கிக், குக்குடாசனமாக இருந்து, இரண்டு முழங்கால்களுக்கும் இடையே கைகளை வைத்துக்கொண்டு, வலக்கையை விரித்துப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

240. குக்குடாசனமாவது யாது?

இரண்டு பாதங்களையும் கீழே வைத்துக் குந்திக் கொண்டிருத்தல்.

241. தடாக முதலியவற்றில் எப்படி ஆசமனஞ் செய்தல் வேண்டும்?

முழங்காலளவினதாகிய சலத்திலே நின்று, இடக் கையினாலே சலத்தைத் தொட்டுக்கொண்டு, வலக்கையினாலே ஆசமனம் பண்ணல் வேண்டும். முழங்காலளவினதாகிய சலத்திற் குறைந்தால் கரையை அலம்பி, அதிலிருந்து கொண்டு ஆசமனம் பண்ணல் வேண்டும்.

தந்ததாவனம்

242. தந்த சுத்திக்குக் கருவியாவன யாவை?

விதிக்கப்பட்ட மரங்களின் கொம்பும் இலையுந் தூளுமாம்.

243. இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

மருது, இத்தி, மா, தேக்கு, நாவல், மகிழ், ஆத்தி, கடம்பு, விளா, நாயுருவி, அசோகு, குருக்கத்தி, பூல், வேல், சம்பகம் என்பவைகளாம்.

244. துறவிக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

பெருவாகை, நொச்சி, பெருங்குமிழ், புன்கு கருங்காலி, ஆயில், மருது என்பவைகளாம்.

245. தந்த காட்டம் எப்படிப்பட்டதாய் இருத்தல் வேண்டும்?

நேரியதாய்த், தோலோடு பசப்புள்ளதாய்க், கணுவுந் துளையும் இடைமுறிதலும் இல்லாததாய், சிறுவிரற் பருமை யுடையதாய் இருத்தல் வேண்டும். இல்வாழ்வானுக்குப் பன்னிரண்டங்குல நீளமும், துறவிக்கு எட்டங்குல நீளமும், பெண்களுக்கு நாலங்குல நீளமுங் கொள்ளப்படும். (காட்டம் = குச்சி)

246. தந்த சுத்திக்குக் கருவி யாகாதன யாவை?

பட்டமரம், பாளை, வைக்கோல், கைவிரல், செங்கல், கரி, சாம்பல், மணல் என்பவைகளாம்.

247. தந்த சுத்தி எப்படிச் செய்தல் வேண்டும்?

விதிக்கப்பட்ட தந்த காட்டத்தையேனும், இலையையேனுஞ் சலத்தினாலே கழுவி, மெளனம் பொருந்திக், கிழக்கு நோக்கியேனுங் குக்குடாசனமாக இருந்துகொண்டு, பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ்வையாகக் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பிளப்பை மும்மூன்று தரம் உண்ணாவளவாக ஓட்டி, நாக்கை வழித்து, இடப்புறத்தில் எறிந்துவிட்டுச் சலம் வாயிற்கொண்டு, பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கைகால்களையுங் கழுவி ஆசமனம் பண்ணல் வேண்டும். நின்றுகொண்டாயினும் நடந்து கொண்டாயினும், போர்த்துக்கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாகாது.

ஸ்நானம்

248. ஸ்நானஞ் செய்யத் தக்க நீர்நிலைகள் யாவை?

நதி, நதிசங்கமம், ஓடை, குளம், கேணி, மடு முதலியவைகளாம். நதிசங்கமமாவது இரண்டு யாறுகள் சந்தித்த இடமாம்; யாறுங் கடலுங் கூடிய இடம் எனினும் அமையும்.

249. ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

கெளபீனத்தைக் கசக்கிப், பிழிந்து, தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி வஸ்திரங்களைத் தோய்த்து, அலம்பித், தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.

250. ஸ்நானம் எப்படிச் செய்தல் வேண்டும்?

ஆசனம் பண்ணிச் சகளீகரணஞ் செய்து, கொப்பூ ழளவினதாகிய சலத்தில் இறங்கி, நதியிலேயாயின் அதற்கு எதிர்முகமாக நின்றும், குள முதலியவைகளிலாயிற் கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் நின்றும், இரண்டு காதுகளையும், இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு சுட்டுவிரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக்கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து ஸ்நானஞ் செய்ய வேண்டும். இப்படி மூடுவது சண்முகி முத்திரை எனப் பெயர் பெறும்.

251. இப்படி ஸ்நானஞ் செய்தவுடனே யாது செய்தல் வேண்டும்?

ஆசமனஞ் செய்துகொண்டு, கரையிலேறி, வஸ்திரங்களைப் பிழிந்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினாலே தலையிலுள்ள ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டிக், குடுமியை முடித்து, ஈரக் கெளபீனத்தைக் களைந்து, உலர்ந்த கெளபீனத்தைத் தரித்து, இரண்டு கைகளையுங் கழுவிச், சுத்தமாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உலர்ந்தனவாய் உள்ள இரண்டு வஸ்திரந் தரித்துக் கொண்டு, ஈர வஸ்திரங்களையுங் கெளபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடல் வேண்டும். ஒரு கொடியிலே தானே தோய்த்த வஸ்திரமுந் தோயாத வஸ்திரமும் போடுதலும், ஒருவர் வஸ்திரம் போட்ட கொடியிலே மற்றொருவர் வஸ்திரம் போடுதலும் ஆகாவாம். நக்கினனாயேனும், கெளபீன மாத்திரமுடையனாயேனும், ஒரு வஸ்திரந் தரித்துக் கொண்டேனும், யாதொரு கமருமுஞ் செய்யலாகாது.

(நக்கம் - அம்மணம்)

252. குளிர்ந்த சலத்திலே ஸ்நானஞ் செய்ய மாட்டாத பிணியாளர் யாது செய்தல் வேண்டும்?

ஸ்நானஞ் செய்தவர் சுத்திசெய்யப்பட்ட தானத்திலே சுத்தி செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்த வெந்நீரை ஒரு பாத்திரத்தில் விடவிட, அவர் எடுத்து ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினால் ஈரத்தைத் துவட்டி, உலர்ந்த வஸ்திரந் தரித்துப், பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம்.

253. வியாதியினாலே ஸ்நானஞ் செய்ய மாட்டாதவர் யாது செய்தல் வேண்டும்?

கழுத்தின்கீழ், அரையின்கீழ், கால் என்னும் இவைகளுள் ஒன்றை, இயன்றபடி சலத்தினாலே கழுவிக் கொண்டு, கழுவாமல் எஞ்சிய உடம்பை ஈர வஸ்திரத்தினால் ஈரம் படும்படி துடைத்து, அவ்வீரத்தைத் துவட்டித் தோய்த் துலர்ந்த வஸ்திரந் தரித்துப் பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம். இந்த ஸ்நானங் காபில ஸ்நானம் எனப் பெயர் பெறும்.

254. இராத்திரி ஸ்நானஞ் செய்யலாமா?

யாகம், சந்திரகிரகணம், சிவராத்திரி, மாசப் பிறப்பு, மகப்பேறு என்பவைகளின் மாத்திரம் இராத்திரி ஸ்நானஞ் செய்யலாம்.

255. நியமகாலத்திலன்றி, இன்னும் எவ்வெப்பொழுது ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்?

சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்.

(சர்த்தி = வாந்தி)

256. தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.

257. ஸ்நானஞ் சரீர சுத்திக்கு மாத்திரந்தான் காரணமா?

சரீர சுத்திக்கு மாத்திரமின்றிச் சரீராரோக்கியத்துக்கும், சித்தசோபனத்துக்கும், ஒருப்பாட்டுக்கும், இந்திரிய வடக்கத்துக்கும், யோக்கியத்துவத்துக்குங் காரணமாம். விடியற்கால ஸ்நானத்தினாலே பசி உண்டாகும்; நோய் அணுகாது.

சந்தியாவந்தனம்

258. சந்தியாவந்தனம் எத்தனை?

பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி, அர்த்தயாமசந்தி என நான்காம்.

259. இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சந்தியா வந்தனங்கள் உரியன என்னும் நியமம் உண்டோ?

சமயதீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி யொன்றே உரியது; விசேஷ தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, சாயங்காலசந்தி என்னும் இரண்டு சந்திகள் உரியன; நிருவாண தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி என்னும் மூன்று சந்திகள் உரியன; ஆசாரியருக்கு நான்கு சந்திகளும் உரியன. சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர்கள் மூன்று சந்திகளுஞ் செய்யலாம் என்று சில ஆகமங்களில் விதிக்கப் பட்டிருக்கின்றது.

260. பிராதக் காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் உத்தமம்; நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்தல் மத்திமம்; சூரியன் பாதி உதிக்கும்போது செய்தல் அதமம்.

261. மத்தியானசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

பதினைந்தாம் நாழிகையாகிய மத்தியானத்திலே செய்தல் உத்தமம்; மத்தியானத்துக்கு முன் ஒரு நாழிகையிலே செய்தல் மத்திமம்; மத்தியானத்துக்குப் பின் ஒரு நாழிகையிலே செய்தல் அதமம்.

262. சாயங்காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

சூரியன் பாதி அத்தமிக்கும்போது செய்தல் உத்தமம்; அத்தமயனமானபின் ஆகாசத்திலே நக்ஷத்திரங்கள் தோன்றுமுன் செய்தல் மத்திமம்; நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் அதமம்.

263. சந்தியாவந்தனம் முதலிய கிரியைகளுக்கு ஆகாத நீர்கள் எவை?

நுரை குமிழி உள்ள நீர், புழு உள்ள நீர், வடித்து எடாத நீர், இழிகுலத்தார் தீண்டிய நீர், கலங்கல் நீர், பாசி நீர், உவர்நீர், வெந்நீர், பழநீர், சொறிநீர் என்பவைகளாம்.

போசனம்

264. போசனபந்திக்கு யோக்கியர் யாவர்?

சமசாதியாராயும், சிவதீக்ஷை பெற்றவராயும், நியமாசார முடையவராயும் உள்ளவர்.

265. போசனஞ் செய்தற்குரிய தானம் யாது?

வெளிச்சம் உடையதாய்ப், பந்திக்கு உரியரல்லாதவர் புகப் பெறாததாய்க் கோமயத்தினாலே மெழுகப் பட்டதாய் உள்ள சாலை.

266. போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

வாழையிலை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரியிலை, பலாசிலை, சுரையிலை, கமுகமடல் என்பவைகளாம். வாழையிலையைத் தண்டுரியாது அதனுடைய அடி வலப் பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும். கல்லை தைக்குமிடத்துக், கலப்பின்றி ஒரு மரத்தினிலை கொண்டே ஒரு கல்லை முழுதுந் தைத்தல் வேண்டும். (கல்லை = இலைக் கலம்)

267. போசன பாத்திரங்களை எப்படி இடம் பண்ணிப் போடல் வேண்டும்?

போசன பாத்திரங்களைச் சலத்தினாலே செவ்வையாகக் கழுவி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழவளவை சதுரச் சிரமாகப் புள்ளியின்றி மெழுகி அததின் மேலே போடல் வேண்டும்.

268. இலை போட்டபின் யாது செய்தல் வேண்டும்?

அதிலே நெய்யினாலே புரோக்ஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவைகளைப் படைத்தல் வேண்டும்.

269. போசனம் எப்படி பண்ணல் வேண்டும்?

இரண்டு கால்களையும் முடக்கி, இடமுழந்தாளின் மேலே இடக்கையை ஊன்றிக் கொண்டிருந்து, விதிப்படி அன்ன முதலியவற்றைச் சுத்தி செய்து, சிவபெருமானுக்கும் அக்கினிக்குங் குருவுக்கும் நிவேதனம் பண்ணி, அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறாகப் பிரித்துப் பருப்பு நெய்யோடு பிசைந்து, சிந்தாமற் புசித்தல் வேண்டும்; அதன்பின் சிறிது பாகத்தை முன்போலப் பிரித்துப், புளிக்கறியோடாயினும் ரசத்தோடாயினும் பிசைந்து புசித்தல் வேண்டும். கறிகளை இடையிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையினுங் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனுந் தண்ணீரேனும் பானம் பண்ணல் வேண்டும். உமிழத் தக்கதை, இலையின் முற்பக்கத்தை மிதத்தி, அதன்கீழ், உமிழ்தல் வேண்டும்.

270. போசனம் பண்ணும்பொழுது செய்யத்தகாத குற்றங்கள் எவை?

உண்பதற்கிடையிலே உப்பையும் நெய்யையும் படைத்துக் கொள்ளல், போசனத்துக்குப் உபயோகமாகாத வார்த்தை பேசுதல், சிரித்தல், நாய் பன்றி கோழி காகம் பருந்து கழுகு என்பவைகளையும், புலையர் ஈனர் அதீக்ஷதர் விரதபங்கமடைந்தவர் பூப்புடையவள் என்பவர்களையும் பார்த்தல் முதலியனவாம்.

271. புசிக்கும்போது அன்னத்திலே மயிர், ஈ, எறும்பு, கொசு முதலியன காணப்படின், யாது செய்தல் வேண்டும்?

அவைகளை சிறிதன்னத்தோடு புறத்தே நீக்கி விட்டுக், கை கழுவிக் கொண்டு, சலத்தினாலும், விபூதியினாலும் சுத்திப்பண்ணிப் புசித்தல் வேண்டும்.

272. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, வீட்டுக்குப் புறத்தே போய்க், கை கழுவி விட்டுச், சலம் வாயிற்கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, வாயையுங் கைகளையுங் கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, விபூதி தரித்தல் வேண்டும். அன்னமல்லாத பண்டங்கள் புசிக்கின், எட்டு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

273. உச்சிட்டதை எப்படி அகற்றல் வேண்டும்?

இலையை எடுத்து எறிந்து விட்டுக் கை கழுவிக் கொண்டு உச்சிட்டத் தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந் தெளித்து, இடையிலே கையையொடாமலும், முன்பு தீண்டிய விடத்தைப் பின்பு தீண்டாமலும், புள்ளியில்லாமலும் மெழுகிப், புறத்தே போய்க் கைகழுவிவிட்டுப் பின்னும் அந்தத் தானத்திலே சலந் தெளிந்து விடல் வேண்டும்.

274. போசனஞ் செய்தபின் வாக்குச் சுத்தியின் பொருட்டு யாது செய்தல் வேண்டும்?

இல்வாழ்வார் தாம்பூலம ஒரு தரம் மாத்திரம் புசிக்கலாம். துறவிகள் கிராம்பு, ஏலம், கடுக்காய், சுக்கு, வால்மிளகு என்பவைகளுள் இயன்ற தொன்றைப் புசித்தல் வேண்டும்.

275. இராத்திரியில் எத்தனை நாழிகையினுள்ளே புசித்தல் வேண்டும்?

எட்டு நாழிகையினுள்ளே புசித்தல் உத்தமம். பதினொரு நாழிகை யளவேல் மத்திமம்; பதினான்கு நாழிகை யளவேல் அதமம்; அதன் மேற் புசிக்கலாகாது.

276. போசன காலத்தில் விளக்கவியின் யாது செய்தல் வேண்டும்?

போசனம் பண்ணாது, அவ்வன்னத்தை வலக்கையினாலே மூடி, விளக்கேற்றி வருமளவும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மானசமாகச் செபித்துக் கொண்டிருந்து, விளக்கேற்றியபின், பானையில் அன்னத்தை இடுவித்துக் கொள்ளாது, அவ்வன்னத்தையே புசித்துக் கொண்டு எழும்பல் வேண்டும்.

சயனம்

277. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

கிழக்கேயாயினும் மேற்கேயாயினுங் தெற்கேயாயினுந் தலை வைத்துச், சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டு, வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும், வடக்கே தலை வைக்கலாகாது. வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும். சந்தியா காலத்தில் நித்திரை செய்தவன் அசுத்தன்; அவன் ஒரு கருமத்துக்கும் யோக்கியனாகான்; அவன் தான் செய்த புண்ணியத்தை இழப்பன்; அவன் வீடு சுடுகாட்டுக்குச் சமம்.

278. இரவிலே காலம்பெறச் சயனித்து வைகறையில் விழித்தெழுந்து விடுதலினாற் பயன் என்ன?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகை உண்டென்னுங் காலம் பிராமீமுகூர்த்தம் எனப் பெயர் பெறும்; சிவத் தியானத்துக்கு மனந்தெளிவது அக்காலத்தேயாம்; அன்றியும், அக்காலத்தில் விழிக்கின் நோய்கள் அணுகாவாம். இராநித்திரைப் பங்கமும், வைகறை நித்திரையும், பகல் நித்திரையும் பற்பல வியாதிகளுக்கும் காரணம்.

மந்திரக் கிரியைகளோடு எழுதப்பட்ட ஸ்நான விதி, சந்தியாவந்தன விதி, பூசா விதி, போசன விதி என்னும் நான்குங் குருமுகமாகப் பெற்றுக்கொள்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.