Jump to content

நாம் தமிழர் ஆவணம் – தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 1


Recommended Posts

சீமான் எதைச் சாதித்தாரோ, வைகோ எதைச் சாதித்தாரே, நெடுமாறன் ஐயா எதைச் சாதித்தாரோ அதைத்தான் அவர்களும் சாதித்தார்கள். இவர்கள் என்னதான் உண்மையாக ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் சுயநல திமுக-அதிமுக கட்சிகளை மக்கள் தூக்கியெறியும்வரை இந்திய மத்திய அரசு தமிழர் நலன்களைக் கண்டு கொள்ளாது.

வால்பிடிப்பது வீரமணி, கொளத்தூர் மணியல்ல. எப்போதும் யாருக்கும் அவர் வால்பிடித்ததில்லை.

இவர்களின் சுயரூபங்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது மட்டும் தெளிவு!

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எதைச் சாதித்தாரோ, வைகோ எதைச் சாதித்தாரே, நெடுமாறன் ஐயா எதைச் சாதித்தாரோ அதைத்தான் அவர்களும் சாதித்தார்கள். இவர்கள் என்னதான் உண்மையாக ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் சுயநல திமுக-அதிமுக கட்சிகளை மக்கள் தூக்கியெறியும்வரை இந்திய மத்திய அரசு தமிழர் நலன்களைக் கண்டு கொள்ளாது.

வால்பிடிப்பது வீரமணி, கொளத்தூர் மணியல்ல. எப்போதும் யாருக்கும் அவர் வால்பிடித்ததில்லை.

அண்ணன் சீமான்.. பிரபாகரனை தலைவனா ஏற்று.. தமிழீழ தேசிய தலைவரின் வழிகாட்டலைப் பின்பற்றி... தமிழீழ மக்களின் வழி.. தமிழ் தேசிய உணர்வேந்தலை செய்கிறார். நாம் தமிழர் என்பதை உணர்த்துகிறார். கொளத்தூர் மணி அப்படி என்ன செய்கிறார்.. ????!

நாம் திராவிடர் என்று இல்லாத ஒன்றுக்குள் தமிழர்களை அடக்கி அடிமைப்படுத்தி வைக்கிறார். இவர் எப்படி.. சீமானுக்கு நிகராக முடியும். சீமான் சீறும் புலி. கொளத்தூர் மணி.. பெரியாரின் தாடிக்குள் ஊரும் பேன்..!

கொள்கை அளவில் இதுதான் அவருக்கு ஏற்ற நல்ல உவமானம். எனியாவது கொளத்தூர் மணி தன்னை மாற்றிக் கொண்டு தமிழ் தேசிய இன எழுச்சிக்குள் தனது கொள்கைகளை இட்டு வர சிந்திக்க வேண்டும்..! திராவிட முழக்கத்தின் கீழ்.. பெரியார் என்ற கன்னடனை பாதுகாக்க முனைவதை விட்டுவிட்டு.. அவரைத் தூக்கி கர்நாடகம் நோக்கி.. எறிந்துவிட்டு அண்ணன் பிரபாகரனின் வழியில் தமிழ் தேசிய உணர்வெளிச்சியோடு அவர் நடக்க வேண்டும். முனைவாரா..????! தமிழகத்தின் எதிர்கால அண்ணலாக அண்ணன் பிரபாகரனும் அவரின் சமூக இன வழிகாட்டல்களும்.. தமிழக மக்களை வழிநடத்த வேண்டும்..! ஈழத்தமிழ் ஆதரவு பேசி.. விளம்பரம் தேடிக் கொள்ளும்.. கொளத்தூர் மணி.. இதைச் செய்வாரா..???! :lol::D

Link to comment
Share on other sites

வீரமணி நீண்டகாலம் காங்கிரஸ், ஜெயா உடன் இருந்து ஈழத் தமிழரையே மறந்திருந்தார். கொளத்தூர் மணி சக திராவிட கும்பலுடன் முரண்படும் போதெல்லாம் (சில தடவைகள் எல்லோரும் மதிக்கும் வைக்கோவிடமும்) யாரோ ஒருவரிடம் (தமிழின விரோதிகள்) சில காலம் ஒட்டிக் கொள்ளும் வழக்கமுடையவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் இருந்து மாறுபட்டு நிற்கும்..நாம் தமிழர் என்ற அண்ணன் சீமானின் கட்சி.. தமிழ் தேசிய இன உணர்ச்சியோடு எழுச்சியோடு.. இன்று தமிழர்களின் அழிவுகளுக்கு குறைந்தது உலக அரங்கில் நியாயம் கேட்கும் நிலைக்கு நாம் தமிழர் வந்து நிற்பதோடு.. அதன் பலம்.. தமிழர்களின் அழிவில் அரசியல் குளிர்காய்ந்த திராவிட மாயாவிகளிடம் இருந்து ஆட்சிப் பறிப்பையும் செய்துள்ள அதேவேளை.. ஆரிய காங்கிரஸிற்கு சரியான பாடமும் புகட்டப்பட்டியுள்ளது. அதற்காக அண்ணா தி மு க மன்னிக்கப்பட்டு விட்டது என்ற பொருள் அல்ல. அது தீவிர ஆரிய.. திராவிட தீவிரவாதிகளுக்கான தண்டனைக் கால இடைவெளியில் தப்பிப் பிழைத்து நிற்கிறது என்று தான் கொள்ள வேண்டும்..! இதை சாதித்தது.. அண்ணன் சீமானும்.. நாம் தமிழர் என்ற தமிழ் தேசிய எழுச்சியும் ஒற்றுமையும் பலமுமே அன்றி வேறில்லை.

நாம் தமிழர் கட்சி உருவாகா விட்டால் தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சிதான் தொடர்ந்திருக்குமோ? :icon_idea: .

தமிழின அழிப்பிற்கு துணைபோன காங்கிரசிற்கு எதிராக நாம் தமிழர் போராடியது. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசின் வெற்றியைப் பறித்தது.

இதையெல்லாம் வைத்து சீமான், நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் பெரும் பலத்துடன் இருப்பதான கற்பனை வேண்டாம். நாம் தமிழர் தேர்தல் அரசியலுக்கு வந்தால் டெபாசிட்டைப் பெறும் தகுதிக்கே இன்னும் வளரவில்லை.

தேர்தல் அரசியலில் பலமுள்ள சக்தியாக வரவரும்வரையாவது சர்ச்சைக்குரிய விடயங்களைத் தவிர்த்து நாம் தமிழர் செயற்பட்டாலே அவர்கள் தம்மை உறுதியாக நிலை நிறுத்த முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் சுயரூபங்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது மட்டும் தெளிவு!

சீமான், வைகோ, நெடுமாறன் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோரின் சுயரூபத்தையா சொல்லுறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரமணி நீண்டகாலம் காங்கிரஸ், ஜெயா உடன் இருந்து ஈழத் தமிழரையே மறந்திருந்தார். கொளத்தூர் மணி சக திராவிட கும்பலுடன் முரண்படும் போதெல்லாம் (சில தடவைகள் எல்லோரும் மதிக்கும் வைக்கோவிடமும்) யாரோ ஒருவரிடம் (தமிழின விரோதிகள்) சில காலம் ஒட்டிக் கொள்ளும் வழக்கமுடையவர்.

சொல்லுங்கள் கொளத்தூர் மணி

எப்ப திராவிடக் கும்பல்களுடன் முரண் பட்டிருகிறார்?

எந்த தமிழின விரோதியுடன் ஒட்டிக் கொண்டிருந்தவர்??

வன்னிக்காட்டில் கொளத்தூர் மணி ஒருவருடன் ஒட்டிக் கொண்டு நிற்கிறார். அவர் நீங்கள் சொன்ன தமிழின விரோதியா??

1989_annai_tsm.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ் ஆதரவு பேசி.. விளம்பரம் தேடிக் கொள்ளும்.. கொளத்தூர் மணி..

மற்றும்படி.. ஈழத்தமிழர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக.. உழைத்த.. உழைக்கின்ற..எல்லா மனிதர்களும் அவர்களின் தனிப்பட்ட கொள்கைகளுக்கு அப்பால்.. எம் கெளரவத்துக்குரியவர்களே. அதேவேளை.. அவர்களின் ஈழத்தமிழர் கொள்கைகளுக்கு அப்பால் மற்ற கொள்கைகளில் தவறுகள் இருந்தால்.. அதைச் சுட்டிக்காட்டும் போது.. அதனை அவர்களின் ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கைக்கான விமர்சனமாக காட்டுவதும்.. தவறு. இதனை திராவிட பாசிசவாதிகள் தங்களின் நிலை இருப்புக்காக செய்ய விளைகின்றனர்...என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் தகும்..! :icon_idea:

????????????????????

????????????????????

????????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கொளத்தூர் மணி பற்றி தாங்களே கூறிய கருத்திற்கு தாங்களே சிரிப்பதனால்.. என்ன அர்த்தம்..??!

மேற்கோள் காட்டப்பட்ட உங்களின் கருத்துக்கே சிரிப்பு

கொளத்தூர் மணி அண்ணன் சீமானோடு சேர்ந்தியங்கியதை ஒத்துக் கொண்டீர்கள்.

சீமானுடன் இணைந்து பணியாற்றியதையும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் உருவாக்கத்திற்கு துணை நின்றதையும் நான்தான் உங்களிற்குச் சுட்டிக் காட்டினே்.

பெரியார் கழகம் என்ற ஒன்றை வைத்திருக்கிறவர் திராவிடத்தில் திராணியான நம்பிக்கை வைத்திருந்தால்.. அதன் மூலம் தமிழக ஆட்சியைப் பிடித்து ஈழத்தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் திராவிடத்தின் பெயரால் நல்லதைச் செய்யலாமே..??!

தேர்தல் அரசியலுக்கு அப்பால் சமூகத்தளத்தில் நின்று பொராடுபவர்கள் . தேர்தல் அரசியலுக்குள் அவர் வரமாட்டார்கள். ஆனால் தமிழின் உரிமைக்காக ஆட்சியில் இருப்பவர்களோ, அல்லது அட்சிக்கு வர துடித்துக் கொண்டிருப்பவர்கோ போராட முன்வருவதற்கு முன்பாகவே இவர்கள் களத்தில் நிற்பார்கள். முல்லைப் பெரியாறு என்றால் என்ன, காவிரி என்றால் என்ன ஈழத்தமிழர் பிரச்சினை என்றால் என்ன. முன்னிற்கு வந்து நிற்பவர்கள் இவர்கள்தான். (அதற்காக நாம் தமிழரை இல்லை என்று சொல்லவில்லை.)

தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்து களமிறங்கியிருக்கும் நாம் தமிழரின் தற்போதைய பலம் நான் ஏற்கனேவே கூறியதுபோல டெபாசிட் பெறும் நிலைக்கு வரவில்லை.

அதிமுக, திமுக என்றை மலைகளை உண்மையான தமிழ்த் தேசியமும், உண்மையான திராவிடமும் தாண்டுவது மிகக்கடினமாகவே இருக்கும். அப்படி ஒரு நிலை வந்தால் கூட அரியப் பார்ப்பனம் அதனையும் அடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொளத்தூர் மணி பற்றி தனிப்பட்ட ஆராய்ச்சியை வேண்டும் என்றால் விலாவாரியாக தனித் தலைப்பில் ஆராய்வோம். அப்போது தேவையான ஆதாரங்களை நாங்களும் அளிக்க முடியும்..! மற்றும்படி.. திராவிட வாத முன்னிறுத்தலை தவிர்த்து.. ஈழத்தமிழர் மீதான அவரின் தமிழ் இன உணர்வை எப்போதும் மதிக்கிறோம்..! அது அவரின் திராவிடக் கொள்கை.. பெரியாரிசும்.. சாராத ஒன்றாகவே நோக்குகிறோம்.

நீங்கள் திராவிட வாதத்தை எதிர்ப்பதென்றால் எதிர்த்திருந்தால் அதைப்பற்றிக் கதைத்திருப்போம் அல்லது பேசாமல் மூடிக்கொண்டு போயிருப்போம்.

நாம் தமிழரின் ஆவணம் தொடர்பில் பெருமளவில் எதிர்ப்பை வெளியிட்டவர்கள் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் மற்றும் அவர்களின் பெரியார் தி.கவினர். நீங்கள் திராவிட பாசிசவாதிகள், ஈழத்தமிழரின் அழிவற்கு அவர்களே காரணமென குறிப்பிட்டதற்காகவே எனது எதிர்ப்பு இருந்தது.

சீமானின் தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டுமா ஒத்துழைப்புக் கொடுங்கள்.

திராவிடக் கருத்தியலுக்கு எதிராக எழுத வேண்டுமா எழுதிக் கொள்ளுங்கள்.

ஆனால் திராவிட கருத்தியலை வலியுறுத்துவர்களை ஈழப்போராட்டத்தின் அழிவிற்கு காரணமாகக் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

வன்னிக்காட்டில் கொளத்தூர் மணி ஒருவருடன் ஒட்டிக் கொண்டு நிற்கிறார். அவர் நீங்கள் சொன்ன தமிழின விரோதியா??

1989_annai_tsm.jpg

[size=5]யார் தமிழின விரோதி, யாழ் தமிழ் மக்களின் உரிமைக்காக மகா தியாகம் செய்த மாபெரும் வீரர் என்பது கூடத் தெரியாமல் கேள்வி கேட்குமளவுக்கு புத்தி பேதலித்துவிட்டது விளங்குகிறது.

தலைவர் பிரபாகரனுடன் படமெடுத்தவர்கள் எல்லாம் புனிதர்களாக எப்பவும் இருக்கவேண்டும் என்றில்லை? தலைவருடன் கருணா படத்தையும் போட்டு இப்போ இவரா தமிழின விரோதி என்று கேட்குமளவுக்கு தரம் தாழ்ந்த கேள்விகள் கேட்க ஒருசில கேவலமானவர்கள் இருப்பது வழமைதான். ஆனால் அவர்களின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட வேண்டும்!

இதை தான் மிக மட்டரகமான ஈனப் பிழைப்பு நடத்துவது என்றும் சொல்வர்!

இங்கு போலித் திராவிடக் கும்பலுக்கு ஜால்ரா போட பட்டறிவில்லாத ஒரு கும்பல் கிளம்பியுள்ளது. அதற்கு தலைவரையும் கேவலப்படுத்த அந்தக் கும்பல் தயங்காது என்று தெரிகிறது.

போலித் திராவிடம் பற்றி பேசுவதால் அவர்களை எதிர்க்கும் அனைவரையும் ஆதரிக்கிறோம் என்றாகிவிடாது. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ-

தேசிய தலைவருக்கு உபதேசம் செய்கிறோம் என்ற போர்வையில்.. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு இட்டுச் சென்ற அதே திராவிட பாசிசவாதிகளே.. இப்போ.. நாம் தமிழர் கட்சிக்கு.. தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளனர்..!

இவர்களின் நோக்கம்.. எதிரியால் இனம் அழிந்தாலும் பறுவாயில்லை.. மாயைத் திராவிடமும்.. மாயாவி பெரியாரும் வாழ வேண்டும். இப்படிப்பட்ட இந்த பகுத்த"ரி"வு வாதிகளின் நோக்கம்... இன்னும் இன்னும் பல முள்ளிவாய்க்கால்களை திராவிடக் கூப்பாட்டின் மூலம் ஏற்படுத்துவது மட்டுமே ஆகும்..! அதை வைச்சு பயங்காட்டியே தமிழனை அடிமைப்படுத்தி.. திராவிட வெறியூட்டலை செய்து.. தமிழர்களை இன அடையாளமற்று அழித்தொழிப்பது மட்டுமே.

நிச்சயம் இந்த திராவிடக் கூலிகளை சிங்களம் வரவேற்கும். காரணம் சிங்களத்தின் இன அழிப்புக்கு.. சர்வதேசத்திடம் இருந்து அங்கீகாரம் தேட... இவர்களின் உதவி மிக அவசியம்..! :icon_idea:

ஆ-

திராவிடக் கருத்தியலுக்கு எதிரான சீமானின் கருத்துக்கள் மற்றும் இப்போது கொடுக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஆவணம் என்பவற்றை விமர்சிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் உருவாக்கத்திற்கு உறுதுணை நின்றவர்கள். பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் மதிமுக.

கொளத்தூர் மணி மற்றும் வைகோ போன்றவர்கள் உங்களிற்கு எப்படி திராவிட பாசிசவாதிகளாகத் தெரிகிறார்கள் என்று விளங்கவில்லை.

இவர்கள் இருவரும் தலைவருக்கு உபதேசம் செய்யவில்லை. உதவிகள் மாத்திரம் நீண்ட நெடுங்காலமாகச் நிறையச் செய்திருக்கிறார்கள்.

உங்களிற்கு திராவிட கருத்தியலோடு உடன்பாடு இல்லையென்றால் அதனை விமர்சியுங்கள். சீமானின் கருத்துக்களுடன் உடன்படுகிறீர்கள் என்றால் அதற்கு ஆதரவு கொடுங்கள்.

திராவிடக் கருத்தியலுக்கு எதிரான உங்கள் கருத்தை நிறுவ ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக எப்போதும் உதவிக் கொண்டிருப்பவர்களை அந்த அழிவுக்குக் காரணமென அசிங்கப்படுத்தாதீர்கள்.

இ-

நீங்கள் திராவிட வாதத்தை எதிர்ப்பதென்றால் எதிர்த்திருந்தால் அதைப்பற்றிக் கதைத்திருப்போம் அல்லது பேசாமல் மூடிக்கொண்டு போயிருப்போம்.

நாம் தமிழரின் ஆவணம் தொடர்பில் பெருமளவில் எதிர்ப்பை வெளியிட்டவர்கள் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் மற்றும் அவர்களின் பெரியார் தி.கவினர். நீங்கள் திராவிட பாசிசவாதிகள், ஈழத்தமிழரின் அழிவற்கு அவர்களே காரணமென குறிப்பிட்டதற்காகவே எனது எதிர்ப்பு இருந்தது.

சீமானின் தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டுமா ஒத்துழைப்புக் கொடுங்கள்.

திராவிடக் கருத்தியலுக்கு எதிராக எழுத வேண்டுமா எழுதிக் கொள்ளுங்கள்.

ஆனால் திராவிட கருத்தியலை வலியுறுத்துவர்களை ஈழப்போராட்டத்தின் அழிவிற்கு காரணமாகக் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மேலே என்பது இத்தலைப்பில் எனது முதல் கருத்து.

ஆ , இ என்பது உங்களின் முதல் கருத்தும் இறுதிக் கருத்தும்.. (இதுவரையான).

இங்கு கொளத்தூர் மணியை உட்செருகி.. இந்த விவாதத்தை கொளத்தூர் மணி - சீமான் சண்டையாக திராவிட - தமிழ் தேசிய நாம் தமிழர் சண்டையாக இனங்காட்டிக் கொண்டிருப்பது நாம் அல்ல. தாங்களே..!

நாங்கள் எப்போதுமே போலி.. மாயை திராவிடக் கருத்தியலை நிராகரிக்கிறோம். அதற்குள் தமிழினத்தை அடையாளப்படுத்தி.. அதன் தனிப் பெரும் இன சிறப்புக்களை விழுமியங்களை சமூகவியலை.. வாழ்வியலை.. உரிமையை சிதைப்பதை நிராகிக்கிறோம். அந்நியர்கள் தமிழர்களை தமிழர்களின் நிலத்தில் அவர்களை சில மாயைக் கருத்தியலால் கட்டிப்போட்டு.. அடிமைப்படுத்தி..ஆள்வதே தமிழினத்தின் அழிவிற்கு காரணம் என்பதையும் அதை திராவிடமும் செய்கிறது என்பதையும் நாம் கடந்த கால நிஜத்தில் இருந்து கண்டு முன்வைக்கிறோம்..!

இதனை மறுதலிக்க திராணி அற்று.. கொளத்தூர் மணியை வைத்துக் கொண்டே ஒரு விவாதத்தை ஆரம்பித்தது (தலைப்புக்கு எந்த வகையில் அவசியமற்று) தாங்கள்.

பின்னர் தாங்களே வந்து.. கொளத்தூர் ஒரு தூய்மையின் பிறவி.. என்று நிறுவ... முனைகிறீர்கள்.

எமக்கு கொளத்தூர் தூய்மையானவரா இல்லையா என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படுத்தி வருபவர் என்ற வகையில் மரியாதை உண்டு. அதற்காக அவரின் தீவிர பாசிசத் தனமான தமிழர் விரோத திராவிடக் கொள்கையை ஆதரிக்கிறோம்.. ஆதரிக்க வேண்டும் என்ற தங்களின் எதிர்பார்ப்பையே நிராகரிக்கிறோம். மாயைத் திராவிடக் கருத்தியலை தமிழர்களின் தமிழ் தேசிய நாம் தமிழர் என்ற சிந்தனையை சிதைக்க.. எவர் பாவித்தாலும் அதை கடுமையாகவே எதிர்ப்போம். அது கொளத்தூராக இருக்கலாம்.. எல்லாம் வல்ல கடவுளாகக் கூட இருக்கலாம்..! எமது நிலைப்பாட்டில் மாற்றத்திற்கு இடமே இல்லை. காரணம்.. திராவிடம் என்ற ஒரு போலி மாயை தமிழர்களுக்கு அவசியம் இல்லை. அதனால் தமிழினம் வாழ்ந்துவிடப் போவதும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது என்பதால்..!

ஆனால்.. நீங்கள் என்னடான்னா.. கருத்துக்களை சரிவர விளங்கிக் கொள்ளாது.. தமிழக திராவிட இயக்கங்களின் வரலாறு தெரியுமா என்றீர்கள்.. அப்புறம்.. கொளத்தூர் - வீரமணி.. பற்றிச் சொன்னீர்கள்... அப்புறம்.. சீமான் - கொளத்தூர் உறவு பற்றிச் சொன்னீர்கள்.. இப்ப கொளத்தூர் தேசிய தலைவர் படத்தைப் போட்டு.. எதையோ சொல்ல விளைகிறீர்கள்.. எல்லாவற்றிற்கும் மேலால் ஒரு படி முன்னேறி.. ஏதோ நாங்கள் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாகக் காட்ட முனைகிறீர்கள்.

நாங்கள் ஏலவே குறிப்பிட்டுவிட்டோம்.. அவரவரின் தனிப்பட்ட அரசியல் சமூகக் கொள்கைகளுக்கு அப்பால்.. அவரவர் காட்டும் உண்மையான ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கைக்காக எல்லோரையும் மதிக்கிறோம்..கெளரவமாகக் கொள்கிறோம். ஆனால் அதேவேளை.. அவர்களின் திராவிட.. பெரியாரிசக் கொள்கைகளை எல்லாம் ஆதரிக்கிறோம் என்பது அல்ல அதன் தொனிப்பொருள் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறோம். இருந்தும்.. இதனை உள்வாங்காமல்.. நீதி என்ற பெயரில்.. அநியாயமாக கருத்தை முன் வைத்துக் கொண்டு.. விவாதம் என்றால் வாதத்தால் வெல்வோம் என்று கொண்டு.. பொத்து மூடு என்று எழுதுவது மிகவும் மோசமான வாத நிலை. எங்களுக்கும் உங்களைப் போல எழுத அதிக நேரம் எடுக்காது.. ஆனால்... நாங்கள் கெளரவமான தமிழின பிரதிநிதிகள். நாம் தமிழர் சொந்தங்கள். திராவிட பாசிச வெறியர்கள் அல்ல என்பதால்.. அப்படி எழுத மாட்டோம்..!

மேலும்.. தேசிய தலைவரை அவரது இக்கட்டான காலங்களில் எல்லாம் தமிழக சொந்தங்கள் சென்று பார்த்து ஆறுதலும் ஆதரவும் தந்தது திராவிடத்தின் பெயராலோ.. அல்லது பெரியாரின் பெயராலோ அல்ல. விடுதலைப்புலிகள்.. திராவிட நாடு கேட்டோ.. பெரியாரை முன்னிலைப்படுத்தியோ விடுதலைப் போராட்டம் நடத்தவில்லை. விடுதலைப்புலிகள் கேட்டது.. போராடியது.. ஈழத்தீவில்.. பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும்.. அனைத்து உரிமையுடன் கூடிய தமிழீழம் என்ற தேசம் அமைவதையே..! இதனை ஆதரித்ததன் பெயரில் தான் தலைவர் பல தமிழக தலைவர்களை சந்தித்தாரே அன்றி.. அவர்களின் தனிப்பட்ட கொள்கைகளை எல்லாம் அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார் என்பது தவறு. அப்படி காட்டி.. திராவிட மாயாவிகள்.. போலித் திராவிடத்தை தலைவரின் பெயரால் தமிழர் தலையில் கட்ட முனைவது வரலாற்று தவறு மட்டுமன்றி.. தேசிய தலைவர் பிரபாகரனை அவமதிப்பது போன்றதும் ஆகும்..! இதனையும் நான் வன்மையாக எதிர்க்கிறோம்.

தயவுசெய்து கருத்துத் திரித்தல் இன்றி.. வாதம் செய்ய முடிந்தால்.. தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள். இன்றேல்.. உங்களோடு வாதம் செய்து எந்தப் பயனும் இல்லை..!

நாங்கள் எக்காரணம் கொண்டும்.. ஆரிய.. இந்தியத்துடன் கூட்டு நின்று.. எம் தமிழினத்தின் அழிவை வேடிக்கை பார்த்து நின்ற திராவிட மாயையை கருவறுப்பதை செய்யாமல் விடமாட்டோம். அதேவேளை நாம் தமிழர் என்ற ஒற்றுமையை முன்னிறுத்தி.. தமிழர்களை தமிழ் தேசிய உணர்வால் கட்டி தமிழர்கள்.. தங்களை தாங்களே ஆளவும் வளப்படுத்தவும் இந்த உலகில் உரிமை பெறும் வரை நாம் தமிழர்களாக உழைப்போம்..! அதனை எந்த போலித் திராவிட.. பெரியாரிச.. கொம்புகளும் தடுக்க முடியாது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

180909_003.jpg

கொளத்தூர் மணி : அன்றொரு நேரம்.. பிரபாகரனோடு படம் எடுத்துக் கொண்டதோடு சரி. பேசுவது ஈழ ஆதரவு.. வளர்ப்பதோ.. ஈழ அழிவு.. தமிழின அழிப்புப் திராவிடமும்.. பெரியாரிசுமும்..!

சீமான்: பிரபாகரனோடு (நேற்றைய பிரபாகரனுடன்..) படம் எடுத்துக் கொண்டது மட்டுமன்றி.. அவரையே தலைவராகவும் வகுந்து கொண்டு.. அவரின் வழிகாட்டலின் கீழ் அவரின் கொள்கையை பின்பற்றி நாம் தமிழர்களாக.. தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வூட்டி.. திராவிடத்தால் ஆரியத்தால்.. உணர்விழந்து அடிமைப்பட்டுக்.... கிடக்கும் தமிழர்களை மீண்டும் தமிழர்களாக உணரச் செய்து.. தமிழர்களே தமிழர்களை தமிழர்களின் நிலத்தில் ஆளவும் வளம் பெறவும் செய்யப் பாடுபடுகிறார்.

இதில் யார் உசத்தி என்பதை.. நீதியை விட.. காலமும் மக்களும் சரிவர தீர்மானிப்பார்கள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

''அதற்காக, கொள்கை விளக்க ஆவணத்தில் பெரியாரைத் தமிழர் வளர்ச்சிக்கு எதிரானவராகக் குறிப்பிட்டு இருப்பது நியாயம் ஆகுமா?''

''கொள்கை விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். மூத்திரப் பையோடு அலைந்த நிலையிலும் சூத்திரப் பிரிவுகளைக் கண்டித்த பெரியார், மண்ணுக்குள் போகும் வரை இந்த மண்ணுக்காகப் போராடியவர். அந்தப் பழுத்த தாடிக் காரரைத் தவிர்த்துவிட்டு, சுயமரியாதை தொடங்கி பெண்ணியம் வரை எதையும் இங்கே பேச முடியாது. ஆவணத்தில் திராவிட அரசியல், தேசிய அரசியல்பற்றிச் சொல்லும்போது, திராவிடம் என்றால் பெரியார் மட்டுமே இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறோம். 'வெள்ளையா இருக்குறவன், பொய் சொல்ல மாட்டான். படிச்சவன் சொன்னா, சரியா இருக்கும்னு நம்பாதே. எதையும் அறிவால் விமர்சனம் செய். விவாதி’ எனச் சொன்னவர் பெரியார். விவாதிக்கப்படும் கருத்துதான் வீரிய வடிவம் எடுக்கும் என்பது அவர் கற்பித்த பாடம். அவர் வழி நின்றுதான் அவர் கொள்கைகளை நாங்கள் அலசுகிறோம். பெரியாரை விமர்சிக்கவே கூடாது என்பவர்கள் பெரியாரிஸ்ட்டா? பெரியாரையும் விமர்சனத்துக்கு உட்படுத் திப் பார்க்கும் எங்களைப் போன்றவர்கள் பெரியாரிஸ்ட்டா?

-- சீமான்.. ஆனந்த விகடன்.. முழு பேட்டி.. வாங்கி படித்து செய்தி பரப்புங்கள்.

அன்புடன் சீமானுக்கு,

திருத்தலுக்கு உட்படக் கூடிய உங்கள் ஆவணத்தை விமரிசிப்பது, அது பெரியாரை விமரிசித்ததற்காக அல்ல, யார் வேண்டு மென்றாலும் அவரை விமரிசிக்கலாம், ஆவணம் விமரிசிக்கப்பட்டது அதில் இருக்கும் வரலாற்றுப் பிழைகள், தகவற் பிழைகள், கோட்பாட்டுப் பிழைகள், முன்னுக்குப் பின் முரணான வாதங்கள் என்பவற்றிற்காக.

அப் பிழைகளைச் சீர்தூக்கிப் பார்த்து ஆவணத்தைச் செப்பனிடுவது சிறந்தது, அதுவே உங்கள் கட்ச்சியின் வளர்ச்சிக்கு உகந்தது.

இல்லாவிட்டால் உங்கள் கட்ச்சி கிட்லர் சென்ற பாதையிலையே செல்ல வேண்டி இருக்கும் என்பதை , இங்கே உங்களைக் காப்பதாகப் பாவனை செய்து கொண்டு சிலர் எழுதிய கருதுக்களை வாசிப்பதன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

திராவிடத்தால் தான் எமது போராட்டம் அழிந்தது என்று எழுதியவர்கள், மேல் இணைத்தை தேசியத் தலைவரின் பேட்டியில் அவர் என்ன சொன்னார் என்பதை ஒரு கணம் கேட்டு விட்டு, தமது பிதற்றல்களைத் தொடரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் திராவிட நாட்டை மீட்க போராட்டம் நடத்துவதாக எங்கும் சொன்னதாக இல்லை. பெரியாரை தனது கொள்கையாளராக வகுத்துக் கொண்டதாகச் சொன்னதும் இல்லை.

ஈழத்தைப் பொறுத்தவரை திராவிடம்.. பெரியார் எல்லாம் செல்லாக் காசுகள். அதைப் பற்றி ஈழத்தமிழ் மக்கள் அலட்டிக் கொண்டதே இல்லை. அதனால் தான் ஒரு தமிழ் தேசியம் சார்ந்த தமிழ் தேச விடுதலைப் போராட்டமான தமிழீழ விடுதலைப் போராட்டம் அங்கு உயிர்ப்போடு முளைவிடக் காரணமானது.

சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு ஒப்ப இ(ஹி)ந்திய ஆரிய தேசியம்.. தமிழகத்தில் தமிழர்களை அடிமைப்படுத்தி இத்தனை ஆண்டுகள் ஆகியும்.. அங்கு ஒரு தமிழின எழுச்சி மும்மரம் அடைவதை திராவிடமே வீழ்த்தி இருக்கிறது. தனித்தமிழ் நாடு கேட்ட.. மா.பொ.சி போன்ற மறத்தமிழர்களை பெரியார் என்ற தமிழின விரோதி.. திராவிட மாயையால் சரிக்கட்டி நின்ற பாரம்பரியமே.. திராவிடத்திற்கும்.. பெரியாருக்கும் உள்ள தொடர்பாகும்..! ஈ வே ரா ஒரு கன்னடனாக அவரின் மொழிக்கு மக்களுக்கு செய்தது.. தமிழர்களை இயன்றவரை தமிழகத்தில் பலவீனப்படுத்தி.. கன்னட தேசத்தில் தமிழர் வெறுப்புணர்வை வளர்த்தது தான். அவர் திராவிடம் பேசி கன்னடர்களையும் தமிழர்களையும் இணைக்கவில்லை. மாறாக பிரித்து வைத்தார்..!

தமிழன் மட்டும் திராவிடனாக இருக்க.. கன்னடன்.. மலையாளி.. தெலுங்கன் எல்லாம் தமிழனை அடித்து விரட்டி அவன் நில.. நீர் உரிமைகளையே பறிக்கும் நிலை இந்த 21ம் நூற்றாண்டிலும் தொடருது என்றால் அதற்கு பெரியார் என்ற மாயைத் திராவிடம் பேசிய.. தமிழ்.. தமிழர் விரோதி இன்னும் தமிழர்கள் சிலரால் உயிர்ப்பூட்டப்படுவதும் ஒரு காரணமாகும்..!

தமிழகத்தில்.. பெண் விடுதலைக்கு.. சமூக விடுதலைக்கு புரட்சிக் கவிஞன் தாய் தமிழன் பாரதி செய்த கவிப் புரட்சியை விடவா கன்னடனான பெரியார் செய்துவிட்டார். அப்படி என்னதான் அவர் கெளரவமாக செய்து கிழித்தார். அப்படி செய்து தானா சாதி வளர்க்கும் திராவிடக் கட்சிகளை அவர் உருவாக்கிவிட்டுப் போனார்..! திராவிட பாசிசவாதிகள் எம் தமிழ் புரட்சியாளர்களை ஒரு கன்னடனை பாதுகாக்க மறக்கடிக்க.. மறைக்க தயங்கமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும்..!

மலையாளி தமிழர்களை முல்லைப் பெரியாறு சார்ந்து அடிக்கும் போது ஏன் திராவிடக் கொள்கையாளர்கள்.. தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி.. திராவிட பூர்வீக பந்தத்தை இனங்காட்டி மலையாளிகள் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதை தடுக்க முடியவில்லை. கன்னடர்களை ஏன்.. காவேரி நதி நீர் பிரச்சனையில்.. திராவிட உணர்வின் அடிப்படையில் தமிழர்களுடன் சிநேகிதமாக போகச் சொல்ல செய்ய முடியவில்லை..???!

சரி அது எல்லாம் போக.. உலகமே ஆதங்கப்படும்.. ஈழத்தில்.. ஈழத்தமிழினப் படுகொலையை.. எந்தக் கன்னடன் தானும் தமிழனும் திராவிடன் என்று நினைத்துக் கண்டித்துள்ளான்..??! எந்த மலையாளி கண்டித்துள்ளான்..??! எந்தத் தெலுங்கன் கண்டித்துள்ளான். ஏன்.. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஒரு இரங்கலையாவது.. திராவிட முன்னேற்றக் கழகம் விடுத்துள்ளதா..??! அண்ணா தி மு க விடுத்துள்ளதா..??! அந்தப் படுகொலைகளை.. இன்றைய சிங்கள நில ஆக்கிரமிப்புக்களை தி மு க அதன் எம்பி களை அனுப்பி சரிக்கட்டி நிற்பது தானே வரலாறு. சிங்கள அமைச்சர்களுக்கும் படைகளுக்கும் தமிழகம் வரவும் பயிற்சி பெறவும் அனுமதிக்கிறது அண்ணா தி மு க. இதுதானா திராவிடம் தமிழர்களுக்கு அளிக்கும் வாழ்வுரிமை...?????!

இப்படி.. யாருமே மதிக்காத மாயைத் திராவிடத்தை தமிழர் தலையில்.. சுமத்தி.. தமிழர்களின் இருப்பை.. இன அடையாளத்தை சிதைத்து.. தமிழர் ஆட்சியுரிமையை பறித்து.. அவர்களை அவர்களின் நிலத்திலேயே அடிமைப்படுத்தும்.. அழிக்கும்.. செயலை திராவிடம் என்ற பெயரால்.. செய்து கொண்டிருப்பதை எனியும் தமிழர்கள் அனுமதிப்பின்.. அது இந்த உலகில் தமிழினத்தின் இருப்புக்கு விரைந்து முடிவு கட்டும்.

நிச்சயம்.. இந்த மாயை திராவிடத்தின் இருப்பும் உயிர்ப்பு.. சிங்கள பெளத்த..மற்றும்.. ஆரிய ஹிந்திய தேசிவாதிகள் தங்களை தக்க வைக்க தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கவே உதவும்.

இந்தத் திராவிடம்.. தமிழர்களை வாழவும் விடாது.. விடுதலை அடையவும் விடாது..! சாகவே விடும்..!

அந்த வகையில்.. அண்ணன் சீமான்.. தொடர்ந்து.. நாம் தமிழர் என்ற அந்த உணர்வேந்தலோடு.. உலகத் தமிழினத்தை தமிழர்களாக ஒருங்கிணைக்கும் பணியை.. எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாது.. தமிழீழ தேசிய தலைவரை தலைவனாக வகுந்து கொண்ட படி.. செய்து முடிப்பார் என்று நம்புவோமாக.

வெல்க.. அண்ணன் சீமானின் நவ கால தமிழ் தேசிய சிந்தனையும்.. தமிழின இருப்புக்கான செயற்பாடுகளும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடம் மாயை என்று சொல்லிக் கொண்டு சீமான் முதலமைச்சர் ஆனாலும், சீமானாலும் ` நாம் தமிழராலும்` எதனையும் செய்து விட முடியாது.ஏனெனில் அவர்களின் கட்ச்சி ஆவணமே சொல்கிறது வெளியுறவுக் கொள்கை மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுவது என.

மத்தியில் இருக்கும் பார்ப்பனிய ஆளும் கும்பலும் இந்திய தேசியக் கட்சிகளும் அழிக்கப்படும் வரை `சீமானலோ` நாம் தமிழராலோ `இந்தியாவில்` எதனையுமே செய்து விட முடியாது.

அடுத்த தேர்தலுடன் எல்லாம் சந்தைக்கு வந்து விடும்.

நாற்பது கொலை வளக்கில் கைது செய்யப்பட வேண்டியவன் மக்களின் பிரச்சினைக்கு கையைத் தூக்க முடியுமா? தமிழ் மானிலக் கட்சிகளின் மக்கள்பிரச்சினைகள் தொடர்பாக அவர்களது கையறு நிலைமையும் இதனால்த்தான் தமது சொந்த வீட்டிற்காக ஊளல் பெருச்சாளியாய் மாறியவர்கள் மக்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தால் மத்தியிடம் இவர்களை அடக்க வசதியான கடிவாளங்கள் உண்டு. இந்த நிலையை மறைக்கவே பார்ப்பான், பார்பான் என்று கத்துவது!

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் இறுதிக்காலத்தில் சித்திரை வருடப்பிறப்பு தேவையா வேண்டாமா எண்டு பட்டி மண்றம் வைச்சு கொண்டு திரிஞ்சவையே சீமானை பிழை எண்டுகினம்....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு உலக மொழியும் தனது சொந்த மண்ணிலேயே மிகக் கேவலமாக மதிக்கப்படும் நிலை தமிழ் நாட்டில் தமிழ் மொழுக்கு கிடைக்கப் பட்டமையைப் போல் தாழ்வு வேறு எந்த மொழிக்கும் கிடைக்க வில்லை! அப்படி ஒரு நிலையை மாற்ற நினைக்கும் ஒரு முயற்சியை மொழி வெறி என்று அழைப்பதானது எத்தகைய வக்கிரமான புத்தி! அடுத்தவன் மண்ணிலா இதை செய்ய நினைக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

எந்த ஒரு உலக மொழியும் தனது சொந்த மண்ணிலேயே மிகக் கேவலமாக மதிக்கப்படும் நிலை தமிழ் நாட்டில் தமிழ் மொழுக்கு கிடைக்கப் பட்டமையைப் போல் தாழ்வு வேறு எந்த மொழிக்கும் கிடைக்க வில்லை! அப்படி ஒரு நிலையை மாற்ற நினைக்கும் ஒரு முயற்சியை மொழி வெறி என்று அழைப்பதானது எத்தகைய வக்கிரமான புத்தி! அடுத்தவன் மண்ணிலா இதை செய்ய நினைக்கின்றார்கள்?

அப்பிடி வேறை சொல்லுகினமா...?? அப்படி எண்டால் சிங்களவனுக்கு பணிஞ்சு போறது பிழை இல்லைதான்...

Link to comment
Share on other sites

அது சரி கீற்று இதழுக்கு என்ன ஆனது...?? மூண்று வருடங்களுக்கு முன்னர் இருந்த ஆசிரியர் இண்டைக்கு இல்லையா...?? ஏன் இந்த மாற்றம்...!

கேட்க்கிறது புரியாவிட்டால் மூண்று வருடங்களுக்கு முன்னர் இதே கொள்கையை பாராட்டிய கீற்று இண்று எதிர்ப்பதின் காரணம்...??

எனக்கு புரிய சீமான் மாறவில்லை கீற்று தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்களே..குறிப்பாக ஈழத்துத் தமிழர்களே... திராவிட உணர்வுள்ள தமிழகத் தமிழன் கேட்கிறேன்..

சிங்களத்தின் அடக்குமுறை மொழிரீதியிலானது....அதனால் நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுகிறீர்கள்..அது தான் சரி என்கிறீர்கள்.....ஆனால், எங்களின் மீதான அடக்குமுறை இன ரீதியிலானது..அதை எதிர் கொள்ள நாங்கள் திராவிடத்தைக் கையிலெடுத்தோம்...அது தான் எங்களை இன்று வரை காப்பாற்றுகிறது..எங்களுக்கு இது தான் சரி...

சிறிலங்காவில் சிங்களம் செய்த அடக்குமுறைகள் ..என்று எதையெல்லாம் ஈழத் தமிழர்கள் காரணம் காட்டுகிறார்களோ... அதை விட பன்மடங்காக பார்ப்பனியம் எங்களுக்கு செய்த அடக்குமுறைகளின் அழுத்தத்தினாலேயே...திராவிடம் வெடித்தெழுந்தது...அது தான் எம்மை மீட்டது...

ஆனால்..தமிழ்த் தேசியத்தின் பெயராலேயே நீங்கள் ...அரசியல் வகுத்துக் கொண்டீர்கள்...படை கண்டீர்கள்...உங்களுக்குள் மோதிக் கொண்டீர்கள்...காட்டிக் கொடுத்துக் கொண்டீர்கள்...கடைசியில் ?>”+%&...

35 ஆண்டு காலமாக போராட்டத்திற்கு திராவிடம் செய்த உதவிகளை எல்லாம் மறந்து விட்டு... சுயநலப் பிண்டங்களாக...இப்போது எங்களை மீண்டும் பார்ப்பன அடிமையாகச் சொல்கிறீர்கள்..அதற்கான காரணமாக திராவிடத்தைக் கை காட்டுகிறீர்கள்..

திராவிடத்தால் வீழ்த்தப்பட்ட சமச்கிருதக் குடுமிகளை கையிலேந்தி.....தமிழ்க் குலத்தின் தொப்புள் கொடி அறுக்கப்பட்டதே என நீங்கள் ஒப்பாரி வைப்பீர்கள் என்றால்… ..[ தமிழகத்தில் தமிழ்த் தேசியவாதிகள் அன்று தொட்டு இன்றுவரை இதைத் தான் செய்து வருகிறார்கள்]

[size=5].[size=4]நீங்கள் ஏன் சிங்களத்தோடு இணக்க அரசியல் செய்யக் கூடாது....????[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தைப் பொறுத்தவரை திராவிடம்.. பெரியார் எல்லாம் செல்லாக் காசுகள். அதைப் பற்றி ஈழத்தமிழ் மக்கள் அலட்டிக் கொண்டதே இல்லை.

அதாவது இதை இப்படி எடுத்துக் கொள்ளலாமா...

தமிழகத் தமிழர்கள் ...பார்ப்பனியத்திடம் அடிமையாக இருந்ததை ... அந்த நிலையை மாற்ற முனைந்தவரை..ஈழத் தமிழர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை... கவலைப்பட்டதில்லை...அவன் எக்கேடு கெட்டால் எமக்கென்ன என்றே நினைத்தார்கள்..சிலர் இன்னமும் நினைக்கிறார்கள்

ஆனால்... சிங்களத்திடம் இருந்து ஈழ விடுதலைக்கு மட்டும் அவன் வேண்டும்...என்றே ஈழத் தமிழர்கள் நினைத்தார்கள்...நினைக்கிறார்கள்.....

Link to comment
Share on other sites

.

30 வருட தமிழர் போராட்டம் ஓய்விற்குக் கொண்டுவரப்பட்ட போது அதை தடுக்கக்கூடிய சக்தி தமிழகத்திற்கிருந்தும் திராவிடக் கட்சிகளால் ஏன் அதைச் செய்யமுடியாமற் போனது ?

அவர்களது கொள்கையிற் பிழையா ?

அவர்களது செயற்பாடுகளில் பிழையா ?

ஏன் ?

*******************

இந்தியாவின் அனேக‌ மானிலங்களிலும் சாதிய அடக்குமுறை ஒருகாலத்தில் தீவிரமாக இருந்தது. இங்கெல்லாம் திராவிடமா சாதீயத்திற்கெதிரான சட்டங்களைக் கொண்டுவந்தது ?

********************

ஒரு ஜனனாயக தமிழ் நாட்டில் மிகச் சிறுபான்மையான பிராமணர்கள் மிகப்பெரும்பான்மையான திராவிடர்களை அடக்குகிறார்கள் என்றால்... எங்கேயோ இடிக்கிறதே ! ஜனனாயகத்தில் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவது தானே முறை. அப்படியானால் திராவிடக் கட்சிகளின் 60+ வருடப் பார்பனியப் பூச்சாண்டி நெசந்தானா ?

*********************

ஒரு இனம் தன் இனத்தவரே தமக்குத் தலமை தாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி பகுத்தறிவிற்கு விரோதமாகும் ?

**********************

சாதீயத்திற்கு எதிரான கொள்கையும் சாதீயத்தையே மையப்படுத்தியது.

சாதிப்பிரிவுகளைக் கடந்த முழு இனத்தையும் மையப் படுத்திய கொள்கை சாதிகளை ஆதரிக்கின்றது எனப் புள‌ம்புவது எப்படிப் பகுத்தறிவாகும் ?

**********************

60 வருடங்களிற்கு முற்பட்ட சாதி ஒடுக்குமுறைகள் உச்சமாயிருந்த காலத்திற்குத் தேவைப்பட்ட கொள்கைகளிலேயே தமிழினம் இன்னும் காலத்தை ஓட்ட வேண்டுமா ?

**********************

இந்திய யூனியனில் ஒருங்கிணைந்து செயற்படுவது, செயற்பாடுகள் சிலவற்றை காலம் தான் தீர்மானிக்கும் என்பது, கருத்துக்களை மக்கள் மயப்படுத்துவது போன்றன (கருத்து புரட்சி) நாம் தமிழரின் நடைமுறை யதார்த்தத்துடன் கூடிய அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

வாழ்த்துக்கள் சீமான்.

Link to comment
Share on other sites

30 வருட தமிழர் போராட்டம் ஓய்விற்குக் கொண்டுவரப்பட்ட போது அதை தடுக்கக்கூடிய சக்தி தமிழகத்திற்கிருந்தும் திராவிடக் கட்சிகளால் ஏன் அதைச் செய்யமுடியாமற் போனது ?

ஓய்வு? கேட்க நல்லா இருக்கு.

எவரின் சொல்லும் கேட்டாமல் நாங்கள் அடிப்பம் பிடிப்பம் என்று போட்டு பிறகு அவன் தடுக்கேல இவன் பிடிக்கேல என்று நல்லா இருக்கு நியாயம்.

திராவிடம் என்ன அமெரிக்காவைவிட பலமானதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.