Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மூத்த நடிகர், காகா ராதாகிருஷ்ணன் மரணம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

15-kaka-radhakrishnan1-300.jpg

மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3௩0 மணிக்கு மரணம் அடைந்தார்.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார்.

மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார்.

இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.

அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ளனர்.

இன்று உடல் தகனம்

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் தகனம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.

- தற்ஸ்தமிழ்.-

Link to post
Share on other sites

தேவர் மகனில் கனகாலத்தின் பின் தோன்றி அற்புதமாக நடித்தவர் (அதுவும் சிவாஜி இயல்பாக நடித்த படத்தில் அவருக்கு வில்லனாக, அவருக்கு நிகராக நடித்தார் (இந்தப் படத்தில் தான் சிவாஜி இந்திய தேசிய அளவிலான விருதில் ஜூரி விருது பெற்றார்; வேறு தேசிய விருதுகள் அவர் பெறவில்லை))

அதே போல் மம்முட்டி நடித்து கே.பாலச்சந்தர் இயக்கிய 'அழகன்' இலும் நடித்து இருந்தார்

அவரது கலைச் சேவைக்கு நன்றியும் அவரது இறப்புக்கு அஞ்சலியும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல குணச்சித்திர நடிகர்.

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலம் சினிமாவில் நிலத்து நின்ற ஒரு திறமைசாலி.

அஞ்சலிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவாஜியை நடிப்பதற்கு கூட்டிகொண்டு வந்தது இவர் தான்.அது ஒன்றே போதும் இவர் பெருமை கொள்ள.

காதலுக்கு மரியாதையில் அந்த மாதிரி நடித்திருந்தார் .

அஞ்சலிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல குணச்சித்திர நடிகர்.

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி?

மறைந்த நடிகர் ராதாகிருஷ்ணன் பெயருடன் 'காகா' என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு சுவையான ப்ளாஷ்பேக்.

இந்த ப்ளாஷ்பேக்கை சொன்னவரும் ராதாகிருஷ்ணன்தான். இறப்பதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு பேட்டியின்போது அவரிடம், உங்கள் பெயருடன் காகா என்ற பெயர் வந்தது எப்படி? என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு அவர் அளித்த பதிலில், "மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும்.

மதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட 'நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க. உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா'ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க..." என்றார்.

காகா ராதாகிருஷ்ணன் தன் இறுதிக்காலத்திலும் கூட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாஸன். அவர்தான் தனது தேவர்மகன் படத்தில், சிவாஜியின் தம்பி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை காகா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி, அவரது அடுத்த ரவுண்டைத் தொடங்கி வைத்தார்.

http://tamil.oneindia.in/movies/specials/2012/06/how-veteran-actor-radhakrishnan-got-title-kaka-155746.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]இயல்பான நடிப்பை கொண்ட திறமையான நடிகர். [/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=4]நல்ல குணச்சித்திர நடிகர் .[/size]

[size=4]அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் .[/size]

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • படித்தத்தைப் பகிர்தல் - மாம்பழக் கவிச்சிங்க நாவலர்   படித்தத்தைப் பகிர்தல் - மாம்பழக் கவிச்சிங்க நாவலர்  
  • எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது.  கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல. இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்த மதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது ஒழிந்து கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.   புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது.   
  • அப்போ ஜெயிக்கலனா? கொடுக்க மாட்டீங்களா?        
  • ஜெய் பீம் ! தெறிக்கும் பறை இசை | நிகர் கலைக்கூடம் நாய் வால் திரைப்பட இயக்கம் வழங்கும் மேற்குத்தொடர்ச்சிமலை - பரியேறும் பெருமாள் இயக்குநர்களோடு ஓர் இனிய கைகுலுக்கல்... சிறப்புரை இயக்குநர் ராம் இரா.அதியமான், நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை எழுத்தாளர் பாமரன் வழக்குரைஞர் சிவக்குமார் கவிஞர் கீதா பிரகாஷ் ஏற்புரை : இயக்குநர் மாரி செல்வராஜ்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.