Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது.

ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது.

The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals the moment of separation and colours the manner in which the juxtaposed elements are related.

எளிமையாக சொல்லுவதாக என்றால், இரண்டு படிமங்களை முதல் இரண்டு வரிகளிலும் சொல்லி, மூன்றாவது வரி அவற்றை தொடுக்கவேண்டும். அந்த தொடுப்பு, கவிதையை வேறு தளத்துக்கு கொண்டு செல்லவேண்டும். இதிலே எத்தனை சிலபல்கள்(syllables) எல்லாம் வேண்டும் என்றும் ஒரு ரூல் இருக்கிறது. அது தமிழில் எழுதும்போது பொருந்தாது என்பதால் ஹைக்கூவின் ஆதாரமான விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

இந்த படத்துக்கு ஹைக்கூ எழுதுவது சவாலான விஷயம். படம் ஏற்கனவே பல கதைகள் சொல்லுகிறது. அந்த கருவை சிதைத்துவிட கூடாது. தூண்டில் போடும் சிறுவனும், நீரில் மின்னும் நட்சத்திரங்களும் தான் சாரம். அதை தொடுக்கவேண்டும். தொடுத்துப்பார்த்த முயற்சி தான் இது!

[size=4]IMG_9298_thumb%25255B1%25255D.jpg?imgmax=800[/size]

[size=5]தூண்டில் வீசும் சிறுவன்.

விண்மீன் எல்லாம் கடலில் விழுந்து

மண்புழு தேடி அலைகிறது![/size]

முதல் இரண்டு வரிகளும் படிமங்கள். சட்டத்தை இன்னமுமே மீறவில்லை. மூன்றாவது தான் அந்த கோர்ப்பு. ஏன் விண்மீன்கள் கடலில் விழவேண்டும்? ஐயோ பாவம், இந்த சிறுவன் நீண்ட நேரமாக மீனுக்கு காத்திருக்கிறானே! ஒரு வெளிச்சத்தை கொடுத்து பார்ப்போமே! என்று கடலில் விழுகிறது. விழுந்தது அப்படியே கிடக்கவேண்டியது தானே? இல்லை. அதற்கு அப்பாலே சென்று, அட நாமும் மீன் தானே, அந்த தூண்டிலில் போய் நாமாகவே மாட்டிகொள்வோமா? அப்போது மீன் மாட்டியது என்று அவன் முகத்தில் சின்ன சந்தொஷத்தையாவது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில், “எங்கே அந்த மண்புழு” என்று அவை தேடி தேடி அலைகின்றனவாம்.

உயர்திணை நிகழ்ச்சியில் கோகிலா மகேந்திரன் கேதாவின் “காற்றில் ஒடிந்த தளிர்கள்” என்ற சிறுகதையை வெகுவாக சிலாகித்து, ஒரு கவிதை என்பது காலம் கடந்து, சொல்லும் விஷயம் கடந்து, மேலும் மேலும் பலதை சொல்லவேண்டும் என்றார். இப்போது இங்கே எழுதிய ஹைக்கூ வேறு என்ன விஷயம் சொல்லுகிறது? இது கூட உருவகம் தான். யோசித்துப்பாருங்கள். இந்த விண்மீன்கள், தங்களை மீன்களாக காட்டி ஏமாற்றி, சிவனே என்று மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் சிறுவனை தூண்டி விட்டு, அவனுக்கு மெல்லிய சந்தோஷத்தை கொடுக்க முயன்று, இறுதியில் அவனுக்கு ஏமாற்றம் தானே கிடைக்கும்? தூரத்தில் இருந்து மின்னுவதற்கு மட்டுமே லாயக்கான விண்மீன்களுக்கு எதற்கு இந்த விபரீத ஆசை? ஏன் இந்த மோசம்? இந்த உருவகத்தை நம்முடைய வெளிநாட்டு தமிழர்களோடு பொருத்தினால்… ப்ச்ச் .. அந்த சிறுவனை மீன் பிடிக்கவிடுங்கள் ப்ளீஸ்!

இதே கேதாவின் இன்னுமொரு படத்துக்கு ஒரு ஹைக்கூ முயற்சி.

Jaffna%252520fort%252520093_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

[size=5]சூரியன் மறையும் சமயம்[/size]

[size=5]காத்திருக்கும் காவலரண்[/size]

[size=5]உள்ளே சீருடை![/size]

நானே எழுதி நானே ரசிக்கும் வங்குரோத்து வேலையை திரும்பவும் செய்யப்போவதில்லை! ஆனால் சீருடை யார் யாரெல்லாம் அணிவார்கள்?.

[size=1]பிற்குறிப்பு : முதலில் ஹைக்கூவில் ஆரம்பத்தில் “தூண்டில் போடும் சிறுவன்” என்றே எழுதினேன். கேதா தான் அதை “வீசும்” என்று மாற்றினால் கொஞ்சம் சந்தம் கூட வரும் என்றான். That’s what called attention to details![/size]

[size=3]மூலம் : http://www.padalay.com/2012/06/blog-post_16.html[/size]

Link to comment
Share on other sites

 • Replies 348
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]பசுமையான வயல்கள் [/size][size=1]

[size="4"]நெல்நாற்றுக்குப்பதில் களைகள் [/size][/size][size=1]

[size="4"]வன்னி [/size][/size]

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானே எழுதி நானே ரசிக்கும் வங்குரோத்து வேலையை திரும்பவும்

யாழில் போட வேண்டியதுதானே

எண்ணதை எழுதி

கூவி கூப்பாடு போட

யாழ்

எப்படி இருக்கு நம்மட ஹைக்கூ

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Jaffna%252520fort%252520093_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

கதிரவன் கண்ணயரும் வேளை,

கண்விழிக்கிறது காவலரண்!

அநியாயங்களை அரங்கேற்ற!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

IMG_9298_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

வயிற்றுப் பசிக்காக,,

வீசப்படுகிறது தூண்டில்!

விம்பங்கள் மட்டுமே சிக்குகின்றன!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் கலக்கிட்டிங்க.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]தாயில்லாமல் நானில்லை [/size][size=1]

[size="4"]ஆசியா [/size][/size][size=1]

[size="4"]நாயில்லாமல் நானில்லை [/size][/size][size=1]

[size="4"]ஐரோப்பா [/size][/size]

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லியோ .. அழகான ஹைக்கூ .. உங்கள் அனுமதியில்லாமல் கொஞ்சம் மாற்ற முயற்சிக்கிறேன்!

பசுமையான வயல்கள்

[size=1][size=4]அறுவடைக்கு தயாராகும் களைகள்[/size][/size]

[size=1][size=4]வன்னி [/size][/size]

[size=1][size=4]நன்றி[/size][/size]

ஹ ஹ ஹ ..

நன்றி புத்தன்!

நன்றி புங்கையூரான் .. அழகிய முயற்சி ... மூன்றாவது வரியை கொஞ்சம் செப்பனிடலாமோ?

@புங்கையூரான் .. அந்த இரண்டாவது கைக்கூ .. உங்களுடைய ஆதாரம் சிதறாமால் இப்படி மாற்றலாமா?

பசியில் சிறுவன்

வீசும் தூண்டில்!

விம்பங்கள் மட்டுமே சிக்குகின்றன!

என்று எழுதுகையில் .. சிறுவன் பசியில் களைத்து போய் பொறுமை கெட்டதால் மீன் கிடைக்கவில்லை .. மீன் சிக்க பொறுமை வேண்டும் என்ற பொருளும் சேருகிறது ...

அட இந்த டிஸ்கஷன் நல்லா இருக்கே!

//தாயில்லாமல் நானில்லை

[size=1][size=4]ஆசியா [/size][/size]

[size=1][size=4]நாயில்லாமல் நானில்லை [/size][/size]

[size=1][size=4]ஐரோப்பா //[/size][/size]

[size=1][size=4]அருமை. அதை நாயில்லாமல் தாயில்லை என்றும் மாற்றலாம் .. இங்கே அம்மாமார் எல்லா பிள்ளையை டே கயாரில் விட்டு விட்டு நாயை தான் walking கூட்டிபோகிறார்கள் ... எல்லோரையும் சொல்லவில்லை.[/size][/size]

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பசியில் சிறுவன்

வீசும் தூண்டில்!

விம்பங்கள் மட்டுமே சிக்குகின்றன!

நன்றாக இருக்கின்றது, படலை!

வரிகளை மாற்றும்போது, புதிய தளங்கள் உருவாகின்றன!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் கலக்கிட்டிங்க.....

புத்தனே, உந்தன்,

புன்முறுவல் காண்பதற்காய்,,

ஆயிரம் கவிதைகள்,

அலுக்காமல் எழுதுவேன்!

நீ மட்டும்,

உனது கோபுரங்களை,

உடனே உடைப்பதாய்,

உறுதிமொழி தந்தால்!

நன்றிகள், புத்தன்! :D

,

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உடைப்பதற்க்கு ஏன்

உறுதிமொழி

உடைத்திடு

கோபுரங்களை துறந்து

கோவணத்துடன் வந்தேன்

கோமாளிகள் என்னை

புனிதன் என்றார்கள்

புத்தன் என்றார்கள்

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது. :) இதில் இன்னும் பல ஹைக்கூக்களை தொடருங்கள். :)

புங்கையூரன் அண்ணாவும் புத்தன் அண்ணாவும் சளைக்காமல் எழுதுகிறீர்கள். :) நீங்களும் இத்திரியில் பல ஹைக்கூக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா .. கவிதைகள் எல்லாம் அழகாக இருக்கிறது...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

resize_20100703110137.jpg

கனவுக் கூடுகள் கலைந்து,

தனிமைக் கூட்டினுள் ஒதுங்கும்!

கரையேறாத காதல்!

Link to comment
Share on other sites

Mono_Mononucleosis_Kissing_Disease.jpg

http://www.nationaln...ing_Disease.jpg

உதடும் உதடும் பற்றிக்கொள்ள

கயல்விழி படபடக்கும்

மௌனம் அங்கு குடிகொள்ளும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப் பெரிய ஒற்றைப் பாறாங்கல் இதுவாகும்!

இதன் பெரும்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது!

அவுஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள, இதன் ஆங்கிலப் பெயர் 'Ayers Rock:'. இதனை Uluru என அவுஸ்திரேலியப் பூர்வீக குடிகள் அழைக்கின்றனர்!

இந்தப் படம் 'உலுறு' வின் சூரிய உதயமாகும்!

நீங்கள், இந்தக் காட்சிக்கு ஒரு 'ஹைக்கூ' கவிதை எழுதுங்களேன்!

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]1,[/size]

[size=4]ஈழத்தில் [/size]

[size=1][size=4]எல்லாம் விலை கூடிற்று [/size][/size]

[size=1][size=4]மனித உயிர்களினைத்தவிர [/size][/size]

2,

ஈழத்தில் - அகாலமாய்

[size=1][size=4]தாயும் செத்திற்று சேயும் செத்திற்று[/size][/size]

[size=1][size=4]நாயும்[/size][size=4]செத்திற்று - " சமத்துவம்"[/size][/size]

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவசாயிகள் நிறைந்த உலகின்

அறுவடை

பட்டினி.

கல்லறையில் உறங்கும்

அம்மா போட்ட பின்னல்கள்.

தலைவாரும் போதுவலி.

(எங்கேயோ வாசித்தது.)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

jaffnalttebulding004.jpg

இத்தனை

இத்தனை

இழந்த பின்பும்

இதற்கே

என் மனம்

இப்படி

இடிக்குதே........

Link to comment
Share on other sites

உலகின் மிகப் பெரிய ஒற்றைப் பாறாங்கல் இதுவாகும்!

இதன் பெரும்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது!

அவுஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள, இதன் ஆங்கிலப் பெயர் 'Ayers Rock:'. இதனை Uluru என அவுஸ்திரேலியப் பூர்வீக குடிகள் அழைக்கின்றனர்!

இந்தப் படம் 'உலுறு' வின் சூரிய உதயமாகும்!

நீங்கள், இந்தக் காட்சிக்கு ஒரு 'ஹைக்கூ' கவிதை எழுதுங்களேன்!

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

மறையும் ஆதவன்

உதிக்கும் ஆதவன்

பார்வையில் !!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை, யோக்கர்!

கல்லின் தனித்துவத்தையும் உள்ளே கொண்டு வாருங்களேன்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

<p>

உலகின் மிகப் பெரிய ஒற்றைப் பாறாங்கல் இதுவாகும்!

இதன் பெரும்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது!

அவுஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள, இதன் ஆங்கிலப் பெயர் 'Ayers Rock:'. இதனை Uluru என அவுஸ்திரேலியப் பூர்வீக குடிகள் அழைக்கின்றனர்!

இந்தப் படம் 'உலுறு' வின் சூரிய உதயமாகும்!

நீங்கள், இந்தக் காட்சிக்கு ஒரு 'ஹைக்கூ' கவிதை எழுதுங்களேன்!

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

nice pic..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

பகலவனின் நுனிவிரல்கள்,

பெருங்கல் மேனி தழுவும்!

இரவில் போர்த்த பனியாடை,

விரகத்தில் நழுவும்!

சூரிய உதயம்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் கிழக்கே உதித்தல்

மேற்கே மறைதல்-இயற்கை

என்றால்.....

இது என்ன உலகின்

பெரியதற்குள் இருந்து ஓர்

வரவு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் கிழக்கே உதித்தல்

மேற்கே மறைதல்-இயற்கை

என்றால்.....

இது என்ன உலகின்

பெரியதற்குள் இருந்து ஓர்

வரவு.

யாயினி,

உங்களுக்குள் மறைந்திருக்கும், ஒரு வருங்காலக் கவிதாயினி, வெளி உலகத்தைப் பார்க்கத் துடிக்கின்றாள்!

அவளது சுதந்திரத்தை மறுப்பதற்கு, உங்கள் உரிமைக்காகப் போராடும், உங்களுக்கு உரிமையில்லை என்பது எனது, கருத்து! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.