Jump to content

பாடசாலை உபகரணங்களுக்கான உதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தோழர்களுக்கும், நண்பர்களுக்கும்,

உடமைகளையும், உறவுகளையும், உரிமைகளையும் இழந்து, உயிரும் வெற்று உடலுமாக மட்டும் வாழ்க்கை நடத்திக்கொண்டு, வானம் வெளுக்காதா, கிழக்கு விடியாதா, வயிற்றுக்கு ஒரு பிடி அவல் கிடையாதா என்று நாளும் பொழுதும் ஏங்கியவண்ணம், வாழ்கை என்ற சிறைக்குள் அடைபட்டு வாடியிருக்கும் எம் பாசங்களுக்கு உதவ என்று ஆரம்பிக்கபட்டிருக்கும் “ போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவையானவர்களுக்கும், அனாதைகளுக்குமான புதிய சந்தர்ப்பங்கள்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) ஆன நமது புதிய அறக்கடளையிருந்து நான் சுபா சுந்தலிங்கம் மீண்டும் உங்களை வந்து சந்திப்பதில் மகிழச்சி அடைகிறேன். நான் உங்களுடன் இணந்து ஆரம்பித்திருந்த தன்னார்வ தொண்டு முன்னெடுப்பான “மிதி வண்டி வழங்கல்” நமது எதிர் பார்ப்புக்களுக்கு மேலே வெற்றியாக நிறைவேறியிருந்ததை நீங்கள் பலரும் அறிந்திருப்பீர்கள். (அந்த செய்தியை காணக்கிடைக்கவில்லையாயின் அதன் இணைப்பு- http://tamilwin.com/show-RUmqyGTZOWis3.html. உங்களின் பெரிய கனிவான உள்ளங்களால் இந்த சிறியசேவை நமக்கு சாத்திமானதை இட்டு உங்களுக்கு என் உணர்வு பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

செய்த செயலின் பயனை காணக்கிடைக்கும் இந்த படங்கள் வாழ்வின் பயனை அடைந்தது போன்று எனது மனதிற்கு ஒரு திருப்தியை கொடுக்கிறது. நீங்களும் நிச்சயம் அப்படி ஒன்றை உணர்வீர்கள் என்பது எனது நம்பிக்கை. அதைவிட பெருமையாக இருப்பது, பலதடவைகளில் பெற்றோர், தமது பிள்ளைகள், இதற்கு பணம் கொடுப்பதற்கு தாமே விரும்பி பகுதிநேர சிறுதொழில் வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்திருப்பதாகும். இதில் புலம்பெயர்ந்த நம்மவர்களின் பிள்ளைகள் பலவற்றை தெரிந்து கொள்ள அரிய சந்தர்ப்பமும் கிடைத்திருந்தது. நாமும் நிறைய கற்றிருந்தோம். நமது அன்பளிப்புக்கள் உரியவரை சேர்ந்தடைய, நமது உண்மைத்தோழனும், கிளிநொச்சியின் பா.உ மான, திரு சிவஞானம் சிறீதரன், ஆற்றிய சேவை மெச்சப்பட வேண்டியது. அவருக்கும் எனது நன்றியை மறக்காமல் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நம்மை நாம் ஊக்கப்படுத்த சில மகிழ்வான சொற்கள் பரிமாறுவது தேவையாக இருந்தாலும், அடுத்து நாம் மேற்கொள்ளவிருக்கும் உதவியின் பரிமாணம், பணத்தாலும், பரிமாறத்தேவையான மூலதனத்தாலும், நாம் போகவேண்டிய பாதையின் நெடும் தூரத்தை நினைவுபடுத்தும் அதன் அச்சுறுத்தல்தான் என் நினைவில் வந்து தங்குகிறது. போனதடவையே, நாம் எமது அடுத்த நடவடிக்கை, வசதி இல்லாத மட்டக்களப்பு மாணவர்களுக்கு என்று அறிவித்திருந்து உண்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு 4000 பட்டதாரிகள் தொழில் அற்று இருக்கிறார்கள். எந்தக்குழந்தைக்கும் அதற்கு தேவையான அடிப்படை பாட உபகரணங்கள் வரவேண்டிய இடங்களில் இருந்து வருவதாக இல்லை. அதனால்த்தான் 3300 மணவர்களுக்கு அடிப்படை தேவைகளான பேனை, பென்சில், கொப்பிகள் போன்ற உபகரணங்களை வினியோகிப்பதற்கு இந்து இளைஞர் சங்கத்துடன்(YMHA) கூட்டு சேர்ந்திருக்கிறோம். ஒரு மாணவருக்கு 3 அமெரிக்க டொலர் வரையில் தான் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் இந்த வருட பள்ளி படிப்பில் நிறைய மாற்றங்களை செயத்தக்கது. மேலும் யோகேஸ்வரன் சீனித்தம்பி, மட்டக்களப்பு பா.உ எமக்காக இந்த வினியோகத்தை மேற்பார்வை செய்ய முன் வந்திருக்கிறார். முன்னயது மாதிரி இதையும் வெற்றிகரமாக்குவது உங்கள் கைகளில் உள்ள மந்திரகோல்.

நான் முன்னர் சொன்னது மாதிரி NOWWOW ஒரு அறக்கட்டளை நிறுவனம். நாம் எடுக்கும் ஒரு முயற்சி வெற்றியோ தோல்வி என்பதை கணக்கு பார்க்காமல் எமது அடுத்த நடவடிக்கைக்கான பூர்வாங்க நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே எமது அடுத்த நடவடிக்கை சம்பந்தமான சில அறிவிப்புக்களை நான் உங்களுக்கு தர முடியும். அடுத்த முயற்சி, அங்கு வேலைவாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளை தனிபட்ட போதகர்களாகப் பயன்படுத்தி மேல்மட்ட நிலைகளில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பள்ளிப்பாடங்கள் போதிக்க வசதிகள் செய்யவிருக்குறோம்.

நமது இப்போதைய ஆர்வம் பள்ளிப்பாட உபகரணங்களே. தயவுசெய்து தயங்காது முன் வந்து இந்த சவாலை ஏற்று, தாளாரமாக உதவுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நமது கோரிக்கைக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு என் முன்கூட்டிய நன்றி.

சுபா சுந்தரலிங்கம்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான உறவுகளே,

கிழக்கு மாகாணத்தில் வாழும் சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஆவணி மாதத்தில் நிறைவு செய்யத் தீர்மானித்திருப்பதால், உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறேன். உங்களால் இயலுமான உதவித்தொகையை பின்வரும் முறையில் வழங்கலாம்.

1. Paypal மூலமாகவோ (Please visit nowwow-us.org)

2. காசோலை மூலமாகவோ

3. அல்லது direct deposit மூலமாகவோ

உதவமுடியும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

சுபா சுந்தரலிங்கம்

நன்றி

s.suba@tgte.org

Link to comment
Share on other sites

அக்கா, உங்கள் முயற்சி முழுவெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.

அத்துடன் எனது சிறு தொகை பங்களிப்பை சற்று முன்னர் PayPal ஊடாக செலுத்தி உள்ளேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கஜேன், உங்களது உதவித்தொகை கிடைத்தது. உங்களது வாழ்த்துக்கும், பண உதவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நன்றி

சுபா

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

பாடசாலை எதிர்வரும் புரட்டாதி மாதம் விடுமுறைக்குப் பின் தொடங்க இருப்பதால், 3300 மாணவர்களுக்கான உதவியை அடுத்த மாதம் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதனைப் பூர்த்தி செய்ய இன்னும் 3000.00 USD தேவைப்படுகிறது. உதவி செய்ய விரும்புவோர் விபரங்களுக்கு nowwow-us.org என்ற இணைய தளத்தினைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

சுபா

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். விதவையானவர்களுக்கும், அனாதைகளுக்குமான புதிய சந்தர்ப்பங்கள்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War, எமது முதலாவது காலாண்டு செய்தி இதழினை வெளியிட்டுள்ளோம். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

[size="2"][size=2]http://www.nowwow-us.org/NOW-WOW-Newsletter-Q3-2012.pdf .[/size][/size]

ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எங்களது facebook இலும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளமுடியும்.

[size="2"][size=2]http://www.facebook.com/nowwowcharity[/size][/size]

[size="2"][size=2]நன்றி [/size][/size]

[size="2"][size=2]சுபா சுந்தரலிங்கம்[/size][/size]

[size="2"][size=3]NOW-WOW[/size]

[size=2][size=3]http://www.nowwow-us.org[/size][/size][/size]

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கருத்துகள அங்கத்தினர்களான எனதருமை நண்பர்களுக்கு,

 

NOWWOWவின் தொழிற்பாடுகள் பற்றிய அவ்வப்போதைய வேண்டுகோள்களையும், முன்னேற்றம்பற்றிய

 

அறிவித்தல்களையும் இதுவரை தெரிவித்து வந்தது போல், மட்டக்களப்பு மாவட்டத்தின் 3000 தமி

ழ்

மாணவர்களுக்கான கல்விதேவைகள் வழங்கலின் இறுதிக்கட்ட நிகழ்வுகளில் ஒன்றைப்பற்றிய தமிழ்வின்

 

செய்தியாக்கம் ஒன்றையும் இதனுடன் இணைத்துள்ளேன்.

 

உங்கள் ஆதரவுகளுக்கு என்றென்றும் எந்தன் நன்றிகள்

 

சுபா சுந்தரலிங்கம்


 

Link to comment
Share on other sites

சுபா சுந்தரலிங்கம் அவர்களே தமிழ்வின் எனும் தளம் யாழ்களத்தின் கறுப்பு பட்டியலில் இருப்பதால் அவர்களின் செய்தியையோ இணைப்பையோ இணைக்க முடியாது என்பதை அறிய தருகிறேன்.நன்றி.

 

 

 

கறுப்பு பட்டியலில் உள்ள தளங்கள் இங்கே:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களினை எனக்கு அறியத்தந்தமைக்கு nunavilan அவர்களுக்கு மிகவும்  நன்றி

 

http://seithy.com/breifNews.php?newsID=85089&category=TamilNews&language=tamil

 

தமிழ்வின் இற்குப் பதிலாக மேற்கண்ட இணையத்தளத்தை இணைப்பதற்கு விரும்புகிறேன்.

 

நன்றி

சுபா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.