Jump to content

பிச்சைக்காரரிடம் 6.23 லட்சம் ரூபாய்(தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.[/size]

[size=2]

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[/size][size=2]

தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.[/size][size=2]

விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.[/size]

[size=2]

blank.gif[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தகாலத்தில் அதுவும் தமிழ்நாட்டில் மிகவும் நல்ல போலிஸ்காரராக இருக்கின்றார் எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கின்றோம் இப்படி நல்லவரை பார்த்ததில்லையே

வெளிநாட்டுக்கு வந்து நாய் படாபாடுக்கு இந்தியாவில் இருந்து பிச்சை எடுத்திருந்தாலும் இலட்சாதிபதியாகியிருக்கலாம் . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.[/size]

[size=2]திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[/size]

[size=2]தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.[/size]

[size=2]விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.[/size]

blank.gif

வணக்கம் நிலாமதி! நான் ஏற்கனவே பிச்சைக்காரன் :( ......இதுக்குள்ளை உங்கடை எழுத்துக்களை வாசிக்க என்னாலை பூதக்கண்ணாடி வாங்கேலாது.......இனியும் உறுக்குணி எழுத்திலை எழுதினியளெண்டால் கட்டாயம் பெட்டிசன் எழுதுவன் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.