Sign in to follow this  
வல்வை லிங்கம்

"Vijai Tv" சுப்பர்சிங்கர் போட்டி நிகழ்விலிருந்து கனடாக்குயில் "மகிஷா" வெளியேற்றம்!

Recommended Posts

"Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார்.

இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது.

இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் நான் கூறவருவது என்னவென்றால் இவர்களால் நடாத்தப்படும் இதைப்போன்ற போட்டி நிகழ்வுகள் இவர்களால் முற்கூட்டியே தங்களிற்கு இசைவாக திட்டமிடப்பட்டு அதன் அடிப்படையிலையே நகர்த்துகின்றார்கள் போலத் தெரிகின்றது.

இதைப்போன்ற பிரபல்யமான ஊடகங்கள் இப்படியான சில கீழ்தரமான நடவடிக்கையினால் தங்களது தரத்தை தாங்களே பின்னகர்த்துவதாக கருத முடிகின்றது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எம்மவர் ஒருவர் வெளியேற்றப் பட்டதற்காக நாங்களிப்படி சொல்வது முறையல்ல.

இசையில் ஸ்வர ஸ்தானங்களை எப்படி பாடுகிறார்கள் என்று எப்படி கருவிகளை வைத்து கண்டுபிடிப்பது?

சித்ரா போன்ற சாதனையாளர்கள் இப்படியான கீழ்த்தரமான வேலைகில் ஈடுபடமாட்டார்கள்.

புலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் (எல்லாம் அல்ல ஒரு சில) முன்னரே தெரிவு செய்ப்பட்ட போட்டியாளர்கள் அடுத்த கட்டத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என நடுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கேள்வி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் கனடா வந்திருந்த சைலஜா அவர்கள் ரி வி ஐ தொலைக்காட்சியினரின் கேள்வியின் போது எந்த அடிப்படையில் புள்ளிகளை வழங்குவது என்பதை வடிவாக விபரித்திருந்தார்.இதில் ஒரு விடயம் முக்கியமானது.அவர்களின் குரல் வள பயிற்சி மிகவும் முக்கியமானது.

Share this post


Link to post
Share on other sites

மாற்று கருத்துக்கள் இருக்கலாம், அதற்காக எம்மவர் மகிசாவை வெளியேற்றிய பின் மத்தியஸ்தர்களை பிழை பிடிப்பது சரியல்ல .

மகிசாவின் அம்மாவே சொன்னார் தான் இருபதிற்குள் மகள் வருவாரோ என்ற சந்தேகத்தில் தான் இருந்ததாகவும் இவ்வளவும் வந்ததே பெரிய சந்தோசம் என்று.

கடந்த சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் இறுதிபோட்டி முடிவு பலரை முகம் சுழிக்க வைத்ததும் நினைவில் கொள்ளவேண்டும் ஆனால் மக்கள் தீர்வு அது என்றால் யாரும் எதுவும் செய்யமுடியாது.

இதை அளவிட கருவி வேறு இருக்கா?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இங்கு நடுவர்களில் தவறிருப்பதாக நான் கருதுகிறேன்.

மகிஷா இன்னொரு சிறுவன். இருவரில் ஒருவர் நீக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் அவர்களின் முடிவு தவறாக இருந்தது. இன்னொரு திரியில் நான் எழுதிய கருத்தையே இங்கும் தருகிறேன்.

இது விடயத்தில் மற்றவர்கள் எதை வைத்து பிழை பிடித்தார்களோ தெரியாது. ஆனால் நான் ஜட்சில் பிழை பிடித்ததன் காரணம் அவர்கள் ஜட்ச் பண்ண வந்த பின்னர் மருத்துவ காரணங்களை ஒரு காரணமாக வைத்து உரியவர் மேல் இரக்கப்பட்டு அவருக்கு சலுகை அளித்ததன் காரணமாக.

அன்று அந்த சிறுவனுக்கு பாட முடியாமல் இருந்ததற்கு இவர்கள் இரக்கப்பட்டால் அன்று எவரையும் வெளியேற்றாமல் இன்னொருநாள் மீண்டும் போட்டியை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த சிறுவன் மேல் கொண்ட இரக்கத்தால் மகிஷாவை வெளியேற்றினார்கள்.

மேலதிக தகவலுக்கு இத்திரியிலுள்ள காணொளியை பாருங்கள். (48.14 இலிருந்து பாருங்கள்)

http://www.yarl.com/...=20#entry773267

Edited by காதல்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இதை ஒரு போட்டியாக மட்டும் பாருங்கள். கனடா சிறீ லங்கா இந்தியா என்று பிரித்து பார்ப்பதானால்... போட்டியில் கலந்துகொண்டதே முதற்தவறு.

நான் கிரமாக போட்டியை பார்க்கவில்லையாயினும் குறிப்பிடத்தக்களவு பார்த்துள்ளேன். எனது பார்வையில் மகீஷாவுடன் ஆபத்தான கட்டத்தில் நின்ற குண்டு சிறுவன் மிகுந்த திறமைசாலி. குறிப்பிட்ட இந்தச்சுற்றின் கலகலப்பில் அவன் முக்கியதோர் பார்த்திரம். ஒட்டுமொத்த குழாமில் அவன் சிறந்த Entertainer எனவும் கூறலாம்.

நடுவர்கள் முகமன் பார்த்து முடிவுகளை தெரிவு செய்கின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

நடுவர்கள் முகமன் பார்த்து முடிவுகளை கூறுவதானால்.. உலகறிந்த வித்துவான் ராஜேஷ் வைத்யாவின் புதல்வி வெளியேற்றப்பட்டிருக்க மாட்டாரே.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு இசையைப் பற்றி அதிகம் தெரியாது.

யாரும் நன்றாகப் பாடினால் அவர்களை மனதாரப் பாராட்டுவேன்.

நடுவர்கள் முடிவை ஏற்பதில் நான் என்றும் பின்வாங்கியதில்லை.

காரணம் என்னைவிட இசையின் அறிவு அவர்களுக்கு அதிகம்

இருக்கும் என்ற நிச்சயமான நம்பிக்கை.

Share this post


Link to post
Share on other sites

மிகவும் நன்றாக பாட கூடிய ஒரு பாடகி ஆடி,பாடுவது ரவுண்டில் ஆடாமல் பாடியதற்கு நீக்கப்பட்டார்.அவரை நான் இறுதி மூன்றிற்குள் வைத்திருந்தேன் .அவருக்கு திரும்ப கொடுத்த சந்தர்பந்தத்திலும் அவர் ஆடவே இல்லை .வெளியேற்றி விட்டார்கள்,மிக நல்ல பாடகர் .அவர் பெயர் நினைவில்லை சுருட்டை மயிர் சிறுமி .

அப்போது ஏன் எமது உறவுகள் கொந்தளிக்கவில்

வெளிநாடு வந்துதான் நான் தோல்வியையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கற்றுக்கொண்டேன் .அதை எம்மவர் எல்லோரும் கற்று கொள்ள வேண்டுகின்றேன் .

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் அண்ணா சொல்லும் பாடகி பற்றி எனக்கு தெரியவில்லை.

பாடகர்களுக்கு ஆடல் தேவையில்லை தான். இருந்தாலும் ரவுண்டின் பெயரே ஆடிப்பாடும் ரவுண்ட் என்னும் போது அவர்கள் ஆடலையும் கருத்தில் கொள்வார்கள் என்று சொல்லும் போது எதுவும் கூற முடியாது. வேண்டுமென்றால் பாடுவதை மட்டும் கருத்தில் கொள்ளுமாறும் ஆடுவதை கருத்தில் கொள்ள வேண்டாமென்றும் நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் யாராவது கேட்க வேண்டும்.

இங்கு எல்லோரையும் விட மகிஷா தான் கெட்டிக்காரி என்று சொல்லி நான் சண்டை பிடிக்க வர மாட்டன். ஆனால் அந்த சுற்றில் அவர் நன்றாக பாடியிருந்தார். நன்றாக பாடாத ஒரு சுற்றில் அவரை வெளியேற்றி இருந்தால் நடுவரில் பிழை பிடித்திருக்க மாட்டேன்.

அதே நேரம் அந்த சிறுவனுக்கு காய்ச்சல் இருந்தது என்றும் அதனால் சரியாக பாட முடியவில்லை என்றும் அவர் தாயார் குறிப்பிட்டார். இப்படியொரு சம்பவம் நடக்காத சுற்றில் அந்த சிறுவன் நன்றாக பாடி மகிஷா பாடாமல் விட்டு அவரை வெளியேற்றி இருந்தாலும் நான் நடுவரில் பிழை பிடித்திருக்க மாட்டன்.

Share this post


Link to post
Share on other sites

பிரேம்கோபால் பிரேமினி கூட நல்ல நடனக்கலைஞர்கள் தான். ஆனால் பல சுற்றில் மற்றவர்களை விட நன்றாக ஆடிய போதும் கிடைக்காத பரிசு இந்த சுற்றில் அவர்களை விட வேறு சிலர் நன்றாக ஆடியும் பிரேம்கோபால் பிரேமினிக்கு கிடைத்தது.

காரணம் பிரேமினி accident பட்டதால் கொண்ட இரக்கம். வேறு சுற்றில் கிடைத்திருந்தால் அவர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள்.

நடனம் மாஸசாக இருக்க வேண்டுமென்றும் அவர்கள் பயன்படுத்தும் பாடலும் (தனியே இசை அல்ல, பாடல்) மற்றவர்கள் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டுமென்றும் அப்பொழுது தான் பார்வையாளர்களின் ஆவலை அது பூர்த்தி செய்யும் என்றும் முதல் ஒரு நாள் நடுவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் இந்த சுற்றில் இரண்டும் இவர்கள் நடனத்தில் இல்லை. ஆனால் இவர்களுக்கு பரிசு கிடைத்தது.

நிச்சயம் அவர்கள் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள். வலியின் மத்தியிலும் அவர்கள் நன்றாக ஆடியிருந்தார்கள். அதையும் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு பிடித்த நடன கலைஞர்கள் கூட. ஆனால் நடுவர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது இந்த நடனத்தில் இல்லை.

இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் எம் நாட்டவரை போட்டியில் வெளியேற்றி விட்டதால் தான் நாங்கள் ஜட்சில் பிழை பிடிக்கிறோம் என்று சொன்னதால்.

உண்மையில் அப்படியல்ல எம் நாட்டவருக்கு நல்லது நடந்ததற்கும் ஜட்சில் பிழை என்றால் நாம் ஜட்சில் பிழை பிடிக்கிறோம் என்று நான் கூற தான்.

5.03 இலிருந்து இந்த காணொளியை பாருங்கள்.

1.07 இலிருந்து இந்த காணொளியை பாருங்கள்.

[media=]

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் நான் விரும்பிப் பார்க்கும், ரசிக்கும் ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சி மட்டும்தான்.

இதற்கு முதல்தடவையும் சில ஈழத்தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தது அறிந்ததே.

நான் தெளிவுபடுத்த விரும்பும் விடயம் என்னவென்றால் "மகிஷா"வை வெளியேற்றும் அளவிற்கு இந்த தடவை சரியான முறையில் நடுவர்கள் நடுநிலை வகிக்கவில்லை என்பது தான் எனது கருத்தாகும்.

மற்றும்படி நடுவர்களில் எனக்கு எந்தவிதமான தப்பான அபிப்பிராயமும் கிடையாது.

இதில் நான் எந்தவிதமான பாகுபாடும் நினைப்பதில்லை, இன்னும் வெளிப்படையாக கூறப்போனால் இதுவரை இடம்பெற்ற "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களில் எனது மனதில் இப்போதும் நிலைத்திருப்பவர்கள் "நித்தியசிறி" "சிறிநிஷா" "பிரியங்கா" போன்றவர்கள் தான்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this