Jump to content

பெண்கள் வாழ தகுதியான நாடுகளில், கனடாவுக்கு முதலிடம்.

Recommended Posts

பெரும்பாலாக எமது சமூகத்தில் நடப்பதைத் தானே சொல்கிறேன்? 10 ல் 6 அல்லது 7 பேர் (புலத்தில் உள்ள ஆண்களுக்கு அவரது பெற்றோர்கள் (பொதுவாக அம்மாக்கள் தான் அதில் அதிகம் விரும்பி) ஊரில் உள்ளவர்களைத் தான் பேசி செய்து கொடுக்கிறார்கள்.. இதனை இல்லை என்று உங்களால் முற்றாக மறுக்க முடியுமா?

இது எனது தனிப்பட்ட சிந்தனையில் உருவான கருத்து இல்லை, சமூகத்தில் பார்த்து அறிந்ததைத் இங்கே குறிப்பிடுகிறேன்.. ('வெளிநாட்டில் வளர்ந்த பொம்பிளை பிள்ளை என்றால் துணிஞ்சதொன்றாத் தான் இருக்கும், எதுக்கும் பார்த்து முடிவெடுங்கோ' என்று ஊரில இருக்கிற சில அம்மாக்கள் சும்மா இருக்கிற தமது தோழிகளுக்கும் ஏற்றிவிடுகிறார்கள்...)

இங்கு எமக்கெதிராக கருத்து எழுதுவது போல் அல்லது பெண்களுக்கெதிராக கதைப்பது போல் அவர்கள் தமது தாயாரிடம் ஏன் கதைக்க முடியாது?

அம்மாக்கள் மட்டுமில்லை பெண் பார்க்கும் பல மாப்பிளைகளும் தான் அப்படி கூறுவார்கள்.

ஒரு ஆணின் பாதுகாப்பு இல்லாமல் பெண் இந்த உலகத்தில வாழ முடியாதோ? ஏன் வாழ இல்லையோ?? முதலில் தற்பாதுகாப்பு தனிச் சுற்றி தானே போட்டுக்கொள்ள வேண்டியது. பெரும்பாலான பெண்கள் அதில் நிதானமாகத் தான் உள்ளார்கள்..

இங்கு ஆணின் பாதுகாப்பு இல்லாமல் ஒரு பெண் வாழ முடியாது என்று எங்கும் நான் கூறியிருக்கவில்லை. தனியே வெளிநாடு வந்த பெண்ணுக்கு ஆணின் தொந்தரவு என்பது ஏதாவது ஒரு வகையில் இருக்கும் என்பதை தான் கூறிக்கொண்டு வந்தேன்.

புதிதாக வரும் பெண் தன்னை சுற்றி எப்படி தற்பாதுகாப்பு அமைத்துக்கொள்ள முடியும். மனதில் மட்டும் தான் அவளால் தற்பாதுகாப்பை அமைக்க முடியும்.

நிதானமாக இருக்கும் பெண்கள் திருமணத்தின் பின் கணவனால் பல கேள்விகள் கேட்கப்படுவதை உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.

நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் காதல்? ஊரில் உள்ள பெண்களுக்கு உடல் வலிமை இல்லை என்றா? இல்லாமலா போராட்டத்தில் பெண்களும் பங்கெடுத்தார்கள்?? (சிங்களவனின் கையில் சிக்குண்டு சின்னாபின்னம் ஆக்கப் பட்டதைப் பற்றி சொல்லவில்லை)

வெள்ளையர்கள், கறுப்பினத்தவர் முன்னிலையில் எம் நாட்டு ஆண்களுக்கு கூட உடல் வலிமை இல்லை. எம் நாட்டு ஆண்களால் அவர்களுடன் மோதி வெற்றி கொள்ள முடியாது. இது உலகமே அறிந்த ஒன்று.

நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் பொதுவான அடிப்படையில்... நீங்கள் என்னத் தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்டுள்ளமையால் பதில் கூறுகிறேன்...

ஒரு பெண் தன்னில் வைக்கும் நம்பிக்கை தான் அவளுக்கு முதல் பாதுகாப்பு.. அதுக்கு அடுத்து தான் மற்றவர்களின் கொடுக்கும் பாதுகாப்பு... ஏன் இரவில் வேலை செய்யும் தமிழ் பெண்கள் உலகத்தில் இல்லையா? விமான சேவை, செய்திச் சேவையிலிருந்து சாதாரண வேலைகள் இரவு வேளைகளில் பெண்கள் வேலை செய்கிறார்கள்... நீங்கள் எத்தனையாம் நூற்றாண்டில் இருக்கிறீகள்? இரவு வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று உங்களால் 100% ஆதாரத்தோடு உறுதிப்படுத்த முடியுமா?

இரவில் தனியே வேலைக்கு செல்லும் தமிழ் பெண்களுக்கு 100% பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்க உங்களால் முடியுமா? எம்மை விட பலசாலியாக உள்ள வெள்ளை, கறுப்பின பெண்களுக்கே 100% பாதுகாப்பு கிடைப்பதில்லை.

முன்பு நான் வேலை செய்த ஒரு கடையில் (supermarket) இரவு 11 மணிக்கு வேலை முடித்து 2 தமிழ் பெண்கள் தனியாக நிலத்தடி ரயிலில் போவார்கள்.. அதில் ஒருவர் திருமணமானவர்.. அவரது கணவர் இன்னொரு கிளையில் காலை 6 மணிவரை வேலை செய்வார்.. ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் பெண்கள் இரவு வேலை செய்தவர்களும்/ செய்பவர்களும் உள்ளார்கள்.. அதனால் இரவு வேலை செய்யும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் முற்று முழுதாகச் சொல்வது சரியானதாகத் தெரியவில்லை! (இரவு வேலை/ செய்து கொண்டு இருக்கும் திருமணம் ஆன/ ஆகாத பெண்களைத் தவறான பார்வையில் மற்றவர்கள் பார்க்க வழிவகுக்கும் என்பதையும் தாழ்மையோடு இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.)

இந்த பெண்கள் தனியாக வெளிநாடு வந்தவர்களா? வெளிநாடு வந்து எத்தனை வருடங்களின் பின்னர் வேலைக்கு சேர்ந்தார்கள்? வேலைக்கு சேர்ந்து எத்தனை வருடங்களின் பின் இரவு வேலையை தெரிவு செய்தார்கள்? அவர்கள் வாழ்வில் ஏற்படும் கசப்பான அனுபவங்களை உங்களிடம் சொல்லக்கூடியவர்களா? நிச்சயம் இருக்காது.

இங்கு தனியே வெளிநாடு வருபவர்களுக்கு உடனடியாக நாடு தெரியாது. அவர்கள் நாட்டை பற்றி அறிந்து அங்குள்ள மக்கள் பற்றி அறிந்து மொழி தெரிந்து வேலைக்கு சேர்ந்த பின் தான் நாட்டில் பல இடங்களுக்கு தனியாக சென்று வரும் நிலை வரும்.

திருமணம் செய்து வந்து மற்றவர்கள் வழிகாட்டலில் நாட்டை அறிந்து கொள்பவர்கள் பற்றி உதாரணம் தர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே நேரம் வந்ததும் சொந்த காரர் வீட்டில் தங்கியிருக்கும் பெண்களையும் உதாரணம் தர வேண்டாம். தனியே வந்து அசூல் அடித்து பெண்கள் வாழ வேண்டும் என்று நீங்கள் கூறியதன் அடிப்படையில் தான் நான் கருத்து எழுதினேன்.

இங்கே வேலை செய்யும் இடத்தில் ஒரு பாட்டி என்று வைத்தால் அங்கு உள்ள எல்லாருக்கும் தான் அழைப்பு வைப்பார்கள்.. அதுவும் பெரும்பாலும் வெள்ளிக் கிழமை வேலை முடிந்த பின்பு... வேலை செய்யும் தமிழ் பெண்களும் அந்த பாட்டிக்கு வருகிறார்கள், நிதானம் இழக்காமல் குடிக்கிறார்கள் தனியே வீடு செல்கிறார்கள்...

பெண் அடிமைத்தனம் என்று பல பெண்கள் பேச, எழுத படித்துள்ளோம்... ஆனால் அவர்களின் முன்னேற்றத்துக்குரிய வழிகள் கண் முன்னே தெரியும் போது பலர் அதனைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.. சிலர் இன்னும் பழைய புராணம் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்..

அந்த பெண்கள் குடித்து விட்டு வீடு செல்லும் வழியில் என்ன நடந்ததோ யாருக்கு தெரியும்?

பெண்களின் முன்னேற்றத்திற்குரிய வழிகள் இவை, நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று நீங்கள் சொல்வது போல் நடந்து கொண்டால் வீட்டில் அப்பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்துவது அதிகரிக்கும்.

என் மனைவி குடிக்கிறாள் அவள் சரியில்லை என்று சொல்லியே divorce எடுப்பார்கள். நெடுக்ஸ் அண்ணா கூட divorce எடுப்பதற்கு ஆதரவாக தான் கருத்து எழுதுவார். நீங்கள் அப்படி நினைக்காவிட்டாலும் மற்றவர்கள் அப்படி தான் நினைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் ஆண்கள் படும் துன்பங்கள், அவர்கள் கொண்ட வேதனைகள் எனக்கும் தெரியும்.

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் படிக்கும் மாணவன். ஆனால் பல வருடங்களின் முன் அகதியாக வெளிநாட்டுக்கு வந்த எம் நாட்டு ஆண்கள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தார்கள்.

மொழி தெரியாத நாட்டில் தனியாக வந்து பல வகையில் அடிபட்டு தான் இன்று முன்னேறி நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. :rolleyes:

என்ன ஆச்சு? :D

நாங்களும் தான் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்தோம். செல் அடிக்க பள்ளிக்குப் போனோம். பொம்பரடிக்க பரீட்சை எழுதினம்.. ஆமி பிடிக்க.. பிடிக்க படிச்சம்.. ஏன் அவையளால முடியல்ல.

மொழி தெரிஞ்சாப் போல என்ன வெட்டியா விழுத்திடுவினம். அப்படி விழுத்திறவை என்றா.. ஊரிலையே சொந்த மொழிலையே படிச்சிருக்கலாமே..! படிச்சு மேற்படிப்பு படிக்க வரலாமே.. ஏன் அப்படிச் செய்யல்ல...?????!

அவைக்கு குறுக்கு வழியில கஸ்டப்படாம அல்லது மத்திம கஸ்டத்தோட முன்னேறத்தான் விருப்பம். அது அசைலம் மூலம் தான் சாத்தியம். அசைலம் அடிச்சு முன்னேறலாம் என்று படிப்பை கோட்ட விட்டவர்கள் பலர். எனக்குத் தெரியவே நல்லா படிக்கக் கூடியவங்க கூட அசைல ஆசையில் படிப்பை விட்டிட்டு களவா ஏஜென்சி பிடிச்சு நாடு நாடாப் போனவை. இதை கஸ்டம் என்பதா இல்ல.. போதை என்பதா..!

அவைக்கு நீங்க வக்காளத்து...??! நல்லா உருப்பட்ட சமூகமாகத்தான் இது இருக்கும்...??!

ஏதோ மாணவர்கள் இங்க கஸ்டப்படாம இருக்கினமாக்கும். அவைக்குத் தான் கஸ்டம் அதிகம். அசைலம் அடிக்க ஒரு செலவு. அடிச்சப் பிறகு அதுவே வருமானம் போடும் பொன் வாத்து. ஆனால் படிக்க சுய முயற்சி.. மூளை.. அவசியம்..! அதுவும் இல்லாமல் செலவுகளுக்கு அநேக நேரங்களில்.. மாணவர்களே பொறுப்பும்..! இதில் எது கஸ்டம்...????!

அசைலக்காரர் தான் அரச பணத்தில் வாழ்கிறார்கள். மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி ஆத்திரப்படுத்துகிறார்கள். மாணவர்களோ.. தொழில் நிமித்தம் வாரவங்களோ அல்ல. அவங்க நாடுகளுக்கு வருமானத்தைக் கொண்டு வாராங்க. அசைலக்காரர் செலவைக் கொண்டு வாராங்க..! இதில் இருந்து தெரியனும்.. யார் உண்மையில் கஸ்டப்படுறானுன்னு..! :):icon_idea:

Link to comment
Share on other sites

சந்தோசமான செய்தி

சே ...... நானும் கனடாவில் தஞ்சம் அடைந்திருக்கலாம் மிஸ் பண்ணிவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வாழும் ஆண்கள் ஏமாளிகள் என்பதை அவர்களது மனது நோகாமல் வேறுமாதிரி சொல்ல முடியுமா? என்று திரும்ப திரும்ப யோசித்தாலும்.............

"பெண்கள் வாழ தகுதியான நாடு " இதைபோல எளிதாக சொல்ல முடியாது.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

இந்த திரியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தனிமனித தாக்குதலாக எழுதப்பட்ட பல கருத்துகள் அகற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அவை எனக்கெதிராக எழுதப்பட்டதா தெரியவில்லை. :unsure::wub:

நாங்களும் தான் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்தோம். செல் அடிக்க பள்ளிக்குப் போனோம். பொம்பரடிக்க பரீட்சை எழுதினம்.. ஆமி பிடிக்க.. பிடிக்க படிச்சம்.. ஏன் அவையளால முடியல்ல.

ஐயகோ பவம். அரசியல் தெரிந்தவர் கருத்து எழுதிறீங்கள் என்று பார்த்தால் உங்கள் அரசியல் அறிவு இந்த பக்கத்தால் சறுக்கி விட்டது.

அப்படி இருந்த பலரை ஆமி கொலை செய்தது உங்களுக்கு தெரியவில்லை போலும். நீங்கள் தப்பி விட்டீர்கள் என்ற சந்தோசத்தில் கதைக்கிறீர்கள்.

உங்களை போன்றவர்கள் இப்படி சொல்லிக்கொண்டு திரிவதால் தான் எம்மக்களுக்கு நாட்டில் பிரச்சினை இல்லை என்று வெளிநாடுகளும் சொல்கிறது.

அது சரி பொம்பர் அடிக்க அடிக்க படிச்சியள். ஆமி பிடிக்க பிடிக்க படிச்சியள். நீங்கள் அப்படி இருந்ததால் மற்றவர்களும் அப்படி இருக்க வேணும் எண்டுறியள்.

இதே போல் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் எத்தனையோ பெண்கள் , ஆண்கள் தங்களை ஆமி பிடிக்க பிடிக்க போரிட்டவை. பலரை கொலை செய்ய செய்ய போரிட்டவை, பலரை காயப்படுத்த காயப்படுத்த போரிட்டவை. நீங்கள் ஏன் அவர்களோட சேர்ந்து போரிடாமல் வெளிநாட்டுக்கு வந்து படிச்சியள். அங்கேயே போரிட்டு போரிட்டு படிச்சிருக்கலாமே.

இங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியாமல் நீங்கள் ஏன் அங்கிருந்து படிச்சு படிச்சு போரிட்டிருக்க கூடாது?

மொழி தெரிஞ்சாப் போல என்ன வெட்டியா விழுத்திடுவினம். அப்படி விழுத்திறவை என்றா.. ஊரிலையே சொந்த மொழிலையே படிச்சிருக்கலாமே..! படிச்சு மேற்படிப்பு படிக்க வரலாமே.. ஏன் அப்படிச் செய்யல்ல...?????!

இந்த காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு அந்த காலத்தை பற்றி கருத்து எழுதுகிறீர்கள். இப்ப கிடைக்கிற மாதிரி student visa எல்லாம் அப்ப கிடைக்காது. உங்களுக்கு பிறகு பிறந்த எனக்கு கூட இது தெரியுது. யாரும் ஒன்றிரண்டு பேருக்கு தான் வெளிநாடு வர கிடைக்கும்.

வெளிநாட்டுக்கு வந்தவர்கள் எல்லாரும் படிக்காதவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? பல படிக்கக்கூடிய பல நல்ல பெறுபேறுகளை பெற்றவர்கள் கூட சூழ்நிலை காரணமாக வெளிநாடு வந்தார்கள்.

இந்தியன் ஆமி இருந்த காலத்தில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்தார்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தவரை அடிக்கடி கொச்சைப்படுத்தி கதைக்கிறீர்கள். நீங்கள் வேறு இடமோ தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் முன்பு பிரச்சினை நடந்தது எல்லாம் உங்களால் உணர முடியாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகில் வீட்டுக்கு வீடு ஒவ்வொரு ஆண்களை பிடித்துக்கொண்டு போய் பலரை சித்திரவதை படுத்தியும் பலரை பிணமாகவும் தான் திருப்பி அனுப்பினவை என்று கேள்விப்பட்டன்.

அப்படியெல்லாம் நடந்திருக்காவிட்டால் பலர் அங்கேயே படிச்சு முன்னேறி இருப்பினம்.

அவைக்கு குறுக்கு வழியில கஸ்டப்படாம அல்லது மத்திம கஸ்டத்தோட முன்னேறத்தான் விருப்பம். அது அசைலம் மூலம் தான் சாத்தியம். அசைலம் அடிச்சு முன்னேறலாம் என்று படிப்பை கோட்ட விட்டவர்கள் பலர். எனக்குத் தெரியவே நல்லா படிக்கக் கூடியவங்க கூட அசைல ஆசையில் படிப்பை விட்டிட்டு களவா ஏஜென்சி பிடிச்சு நாடு நாடாப் போனவை. இதை கஸ்டம் என்பதா இல்ல.. போதை என்பதா..!

அவைக்கு நீங்க வக்காளத்து...??! நல்லா உருப்பட்ட சமூகமாகத்தான் இது இருக்கும்...??!

அசைலம் அடிப்பவர்களுக்கு இந்த காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் எதுவும் அந்த காலத்தில் வழங்கப்படவில்லை. அன்றைய காலத்தில் வந்தவர்கள் பலருக்கு இப்பொழுது போல் உடனடியாக விசா கிடைக்கவில்லை. பலர் விசா இல்லாமல் 10 வருடங்கள் களவாக இருந்து பின்னர் தான் விசா பெற்றார்கள். விசா இல்லாமல் வேலை எடுக்க முடியாது. களவாக தான் வேலை செய்தார்கள். அப்படியானவர்களுக்கு சம்பளம் குறைவு. லண்டனுக்கு வந்திருந்தாலாவது சிலருக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் ஏனைய நாட்டுக்கு வருபவர்களுக்கு மொழி தெரியாது. அவர்கள் அதனாலேயே பெரும் துன்பங்களை அனுபவித்தார்கள். அப்படி வெளிநாட்டு வாழ்க்கை கஸ்ரம் என்று தெரிந்தும் எம் நாட்டில் பாதுகாப்பில்லாததால் வந்தார்கள்.

ஒரு பகுதியினர் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்ததற்காக அனைத்து ஆண்களையும் இப்படி வார்த்தைகளை பிரயோகித்து நோகடிக்கிறீர்களே.

இத்தனைக்கும் அகதியாக வந்து ஆண்கள் கஸ்ரப்பட்டார்கள் என்று சொல்லி அவர்களுக்காக தான் ஆரம்பத்தில் வாதாட தொடங்கினீர்கள். இப்ப அவர்களையே நீங்கள் கேவலப்படுத்தி கதைக்கிறீர்கள்.

ஏதோ மாணவர்கள் இங்க கஸ்டப்படாம இருக்கினமாக்கும். அவைக்குத் தான் கஸ்டம் அதிகம். அசைலம் அடிக்க ஒரு செலவு. அடிச்சப் பிறகு அதுவே வருமானம் போடும் பொன் வாத்து. ஆனால் படிக்க சுய முயற்சி.. மூளை.. அவசியம்..! அதுவும் இல்லாமல் செலவுகளுக்கு அநேக நேரங்களில்.. மாணவர்களே பொறுப்பும்..! இதில் எது கஸ்டம்...????!

நிச்சயமாக மாணவர்களும் கஸ்ரப்படுகிறார்கள் தான். student visa இல் வந்து கஸ்ரப்படுபவர்களையும் எனக்கு தெரியும். ஆனால் student visa எடுக்க முன் நீங்கள் எங்கு வசிக்க போகிறீர்கள், படிப்பதற்கு தேவையான பணம் வெளிநாட்டில் வாழ தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்று குறைந்தது ஒருவருடத்திற்கு தேவையான பணம் என்றாலும் முதலே bank இல் போட்டு காட்ட வேண்டும். லண்டனிலிருந்து உங்களை கூப்பிடுபவர் தனது bank details கொடுக்க வேணும். இல்லாவிட்டால் univercity / college இல் நீங்கள் தங்குவதாக அவர்களிடம் letter எடுத்து கொடுத்து எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தி வைத்து விட்டு தான் வெளிநாடு வருகிறீர்கள்.

உங்களுக்கு part time வேலை செய்வதற்கும் அனுமதி உண்டு. ஏற்கனவே படித்து வருபவர்கள் வேலை எடுப்பதும் இலகு.

இங்கு உங்களுக்கா அல்லது எந்த ஒழுங்குமில்லாமல் வெளிநாடு வந்து camp இல் வாழ்ந்தவர்களுக்கா அதிக கஸ்ரம்?

உங்களிடம் காசு இல்லாவிட்டால் ஏன் வருகிறீர்கள்? வந்து விட்டு உங்களிடம் காசு இல்லை. நீங்கள் தான் உழைத்து உங்கள் செலவை கவனிக்க வேணும் எண்டு சொல்கிறீர்கள்.

அப்படியென்றால் நீங்களும் அந்த நாட்டை ஏமாற்றி தானே வந்துள்ளீர்கள். படிப்பதற்கு முழுமையாக என்னிடம் பணம் உண்டு என்று சொல்லி தான் visa எடுப்பார்கள்.

(உங்களிடம் மட்டும் கேட்கிறேன். ஏனென்றால் பலர் நாட்டில் வாழ முடியாத காரணத்தால் கூட student visa எடுத்து வந்தவர்களும் உண்டு. அவர்களை குறை சொல்லவில்லை.)

அசைலக்காரர் தான் அரச பணத்தில் வாழ்கிறார்கள். மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி ஆத்திரப்படுத்துகிறார்கள். மாணவர்களோ.. தொழில் நிமித்தம் வாரவங்களோ அல்ல. அவங்க நாடுகளுக்கு வருமானத்தைக் கொண்டு வாராங்க. அசைலக்காரர் செலவைக் கொண்டு வாராங்க..! இதில் இருந்து தெரியனும்.. யார் உண்மையில் கஸ்டப்படுறானுன்னு..! :):icon_idea:

அசைலம் அடிக்கிற எல்லாரும் அரச பணத்தில் தான் வாழ்கிறார்கள் என்றெல்லோ உங்கள் கதை உள்ளது.

உங்கள் லண்டனையே எடுத்துக்கொள்ளுங்கள். council கொடுக்கும் வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

அகதியாக வந்த பலரும் குறிப்பிட்ட மணித்தியாலத்துக்கு மேல் வேலைக்கு சென்றால் அவர்களுக்கு அகதிக்குரிய சலுகைகள் வழங்கப்படாது. இங்கு அகதிக்கான சலுகைகளை எதிர்பார்ப்பவர்களை விட பல மணித்தியாலம் வேலை செய்து சம்பாதிப்பவர்கள் தான் அதிகம்.

உங்களை நியாயப்படுத்துவதற்காக மற்றவர்களை ஏளனப்படுத்துவதை முடித்தால் தவிருங்கள்.

உங்களுக்கு திரும்ப திரும்ப கருத்து எழுதுவதால் எந்த பிரயோசனமும் இல்லை என்று தெரிந்தும் எழுதினேன். ஆனால் இந்த திரி மூலம் உங்களை பற்றி பலதும் அறியக்கூடியதாக இருந்தது. (நான் மட்டுமல்ல, பல வருடங்களின் முன் வெளிநாடு வந்து கஸ்ரப்பட்டவர்கள் கூட) :rolleyes:

Link to comment
Share on other sites

கனடாவில் வாழும் ஆண்கள் ஏமாளிகள் என்பதை அவர்களது மனது நோகாமல் வேறுமாதிரி சொல்ல முடியுமா? என்று திரும்ப திரும்ப யோசித்தாலும்.............

"பெண்கள் வாழ தகுதியான நாடு " இதைபோல எளிதாக சொல்ல முடியாது.

அப்ப ஆண்கள் வாழ தகுதியான நாடு எண்டு சொல்லியிருந்தால் அங்கு வாழும் பெண்கள் ஏமாளிகள் எண்டு சொல்லியிருப்பியளோ?

இங்கு தனியே ஆண்களால் பெண்களுக்கு நடக்கும் வன்முறையை கருத்தில் கொள்ளாமல் சுகாதார, மருத்துவ வசதிகளையும் கருத்தில் கொள்ளப்பட்டு தான் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த முடிவை ஆண்களுடன் சம்பந்தப்படுத்தி கதைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆண்கள் வாழ தகுதியான நாடு எண்டு சொல்லியிருந்தால் அங்கு வாழும் பெண்கள் ஏமாளிகள் எண்டு சொல்லியிருப்பியளோ?

இங்கு தனியே ஆண்களால் பெண்களுக்கு நடக்கும் வன்முறையை கருத்தில் கொள்ளாமல் சுகாதார, மருத்துவ வசதிகளையும் கருத்தில் கொள்ளப்பட்டு தான் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த முடிவை ஆண்களுடன் சம்பந்தப்படுத்தி கதைக்க முடியாது.

ஆண்கள் வாழ தகுதியான நாடு "சவூதி அரேபியா" என்று போட்டிருக்கு

Link to comment
Share on other sites

ஆண்கள் வாழ தகுதியான நாடு "சவூதி அரேபியா" என்று போட்டிருக்கு

இல்லை நீங்கள் சொல்வது போல் பார்த்தால் "இந்தியா" என்று போட்டிருக்கு. :D இந்தியாவுக்கு அடுத்தது தான் "சவூதி அரேபியா".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி

சே ...... நானும் கனடாவில் தஞ்சம் அடைந்திருக்கலாம் மிஸ் பண்ணிவிட்டேன்

ஜேர்மனி ஆணும் பெண்ணும் வாழ தகுதியான நாடு.அதிலும் இங்கே பெண்களை கடவுளாக மதிப்பார்கள்.இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனி சீர்குலைந்தபோது....நாட்டை கட்டியெழுப்புவதற்கு பெண்களே முக்கிய இடம் வகித்தவர்கள்.தாய்க்குலமல்லவா!!! :wub: :wub: :wub:

நல்லதுகெட்டது தகப்பனை விட ஒரு தாய்க்குதான் தெரியும்.வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள்

பெண்கள்

முதியோர்கள்

மாணவர்கள்

இளையோர்

குழந்தைகள் என எல்லோரும் வாழ தகுதியான தேசம் தான் கனடா.கனடிய உறவுகளின் தெரிவு சூப்பர். :icon_idea:

Link to comment
Share on other sites

சொல்லுகிறேன் என்று குறை நினைக்க வேண்டாம், உங்களைப் போல பந்தி பந்தியாக எழுத எனக்கு உண்மையில் நேரம் இல்லை!

இங்கே எனது பதிவை மேற்கோள் காட்டி நீங்கள் எழுதிய பதிவில் இருந்து ஒன்றே ஒன்றை மட்டுமே என்னால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது... positive ஆனா சிந்தனை கொஞ்சம் குறைந்தவர் என்று... பெண்களுக்கு நடக்கக் கூடிய negative ஆனவைகளை மட்டுமே சிந்திந்து வாழ்கையில் முன்னேற தயங்கும் பலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவராகவே உங்கள் எழுத்து மூலம் உங்களை அடையாளம் காணக் கூடியதாக இருக்கிறது... உங்களைப் பெண் என்று அடையாள படுத்துக் கொண்டு இரவு வேலை செய்யும்பெண்களை இப்படியான உங்கள் எழுத்துக்கள் மூலம் அவர்களின் தரத்தைக் குறிக்கிறீர்கள் என்பதை தெரிந்தோ தெரியாமலோ செய்கிறீர்கள்... இதனை முன்னைய பதிவிலும் சுட்டிக் காட்டி இருந்தேன்.. மீண்டும் இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்!!

சரி இனி பெண்கள் யாரும் படித்து பட்டம் பெற்றாலும் அவர்கள் வைத்தியத் துறையில் இருந்தாலும், தயவு செய்து இரவு வேலை செய்து இன்னொரு உயிரைக் காப்பாற்றதேங்கோ... ஏன் என்றால் நீங்கள் இரவில் போய் வரும் போது உங்கள் கற்பிற்கு பாதுகாப்பு இல்லை!!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் அவசரத்தில்.. அர்த்தமில்லாமல் எழுதுறீங்கன்னு நினைக்கிறன்...

ஊரில எங்களால இருந்து படிக்க முடியும்.. என்றால் ஏன் மற்றவர்களால் முடியாது...??! ஆமி கொன்றவர்களில் அநேகர் அரசியல் செயற்பாடு கொண்டவர்கள். போராட்ட ஆர்வலர்கள்..செயற்பாட்டாளர்கள். அப்படி எதிலுமே ஈடுபடாத எத்தனையோ பேர் அசைலம் அடிச்சிருக்கினம். அவைக்கு ஊரில இருக்கிறதுக்கு படிக்கிறதுக்கு ஒரு பிரச்சனையுமே இலலையே..!

நல்ல பெறுபேற்றை பெற்றவர்களும் நோகாமல் நொங்கு குடிக்க அசைல வாழ்வை தெரிவு செய்தனர்.காரணம்.. மாணவரா வந்தா படிக்கனும்.. நிரந்தர விசா கிடைகிறது கஸ்டம்... நிறையப் பணம் வேணும். இது அசைலத்துக்கு ஏஜென்சிட்ட கொடுக்கிற காசு தான்.. மிச்சம் நாட்டுக்க நுழைஞ்சாப் பிறகு களவா வேலை செய்து உழைக்கிறது. அப்புறம் கோட் கேசு என்று இயக்கத்தை பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் பத்த வைச்சிட்டு.. அசைலத்த வாங்கிட்டா... அப்புறம் என்ன 2 - 5 வருசத்தில பாஸ்போட் கொடுப்பான். அதையும் கொண்டு ஊருக்கு அல்லது இந்தியா சிங்கப்பூருக்குப் போய் ஊரில இருந்து வாற சோத்தான்ரிகளில் ஒன்றைக் கட்டிக்கிட்டு வாறது.

இதெல்லாம் மாணவர்களா வாறவைக்கு கடினம். ஏன்னா வந்தா படிப்பில மிணக்கடனும். கவனம் செலுத்தனும்.! சிறந்த பெறுபேறு எடுக்கனும்..! அவர்களின் இலக்குகள் வேற.அசைல வாழ்வின் இலக்குகள் வேற..!

மேலும் மாணவர்கள் உழைக்கக் கூடாதோ.. காசு சேமிக்கக் கூடாதோ என்று உலகில உங்களைத் தவிர வேறு ஒருத்தரும் சொல்லேல்ல. பிரிட்டன் உட்பட மாணவர்கள் அவர்களின் மேலதிக செலவை பூர்த்தி செய்ய உழைக்க விடுகுது. ஆனால் உங்களுக்கு அது கூட பிடிக்கல்ல. ஆனால் அசைலிகள் வந்து வெள்ளையளின் வரிப்பணத்தைச் சுரண்டுவதை அங்கீகரிக்கிறீர்கள். என்னே சமூக அக்கறை உங்களுக்கு..!

வெள்ளையள் மத்தியில் அசைலமாக வருபவர்கள் அவ்வளவாக வரவேற்புப் பெறுவதில்லை. ஆனால் மாணவர்களுக்கு அவர்கள் தகுந்த மரியாதை அளிக்கிறார்கள். காரணம் நேர்மையான மாணவர்கள் செல்வமும் அறிவும் கொண்டு வருகிறார்கள். அது நாட்டின் பொருண்மிய வளர்ச்சியில் பங்களிக்கிறது. அதனால் தான் நேர்மையாக படிக்கும் மாணவர்களுக்கு விசா நீட்டிப்பிலும் கெடுபிடி இல்லை..! சரியான சான்றுகளோடு விசா கேட்டால் தருகிறார்கள். காரணம்.. மாணவர்களின் நேர்மையை அவர்களால் பரிசோதிக்க முடியும். ஆனால் அசைலிகளின்.. நிலை.. அப்படியல்ல. அவர்கள் சொல்லும் கள்ளப் பொய்களை நம்ப வேண்டிய நிலை. அசைலம் பெற்ற பல தமிழர்கள் அவற்றிற்கு உரியவர்களே அல்ல. தங்களின் பொருண்மிய தேவைக்காக அசைலம் அடித்தவர்களே பலர்..! இதுதான் யதார்த்த உண்மை..! இதை நீங்கள் பூசி மொழுகலாம். ஆனால் உலகின் கண்களுக்கு நம்மவரின் உண்மை முகம் தெரியும் என்பதால் தான்.. எம்மவரின் குரல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தை உலகம் வழங்குவதில்லை. காரணம்.. நாங்கள் வரேக்க சொன்ன பொய்களை வந்த பின் நாங்களே காட்டிக் கொடுக்கிறமே.

விசா எடுக்கும் வரை சிறீலங்காவில பயம். விசா எடுத்த உடன சிறீலங்கா போய் தாலி கட்டி பொம்பிளையும் கூட வருகுது..??! இதை எல்லாம் நாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. குடிவரவாளர்கள் அசைலத்தை தவறாக குறிப்பாக தமிழர்கள் பாவிப்பது பல நாடுகளுக்குத் தெரியும்..! முன்னர் அசைலமா வந்தால்.. நேர்மை கருதி சில கேள்விகளோடு.. விசா கொடுத்திருந்தனர். இன்று.. நிலை மோசம். அதேபோல்.. முன்னர் படிக்க வாறவை நேர்மையா படிச்சிச்சினம். இப்ப அசைலிகள் மாணவர் என்ற போர்வையில் வந்து அசைலம் அடிக்கிறதால.. மாணவர்களுக்கும் பிரச்சனை. மொத்தத்தில்.. அசைலிகளால்.. உலகில் எல்லோருக்குமே பிரச்சனை தான்..! உங்களுக்கு மட்டும் இலாபம். ஏனென்றால்.. நீங்கள் அவர்களின் மூலம் ஆதாயம் பெற்றிருப்பீர்கள்.. அல்லது வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்த நன்றிக்கடனுக்கு.. எழுதித் தள்ளுகிறீர்கள்.

ஆனால்.. சாதாரண.. வெளிநாட்டு மக்களின் பார்வையில் அசைலிகள்.. விருப்பப்படுபவர்கள் அல்ல. அந்த நிலையை தோற்றுவித்தவர்களில் பொய் கூறி அசைலம் அடித்த.. தமிழ் அசைலிகளும் அடங்குவர்..! :icon_idea::)

நிச்சயம் இங்கு எந்த பெண்களையும் நான் தவறாக கூறவில்லை. பெண்கள் இரவில் வேலைக்கு செல்வது பாதுகாப்பில்லை என்பதை குறிப்பிட்டேன். அப்படியிருந்தும் நீங்கள் குறிப்பிட்ட பெண்களை குறிப்பிடவில்லை. பல வருடங்கள் நாட்டில் வாழ்ந்த பின் வேலைக்கு செல்லும் பெண்களையும் குறிப்பிடவில்லை.

புதிதாக நாட்டுக்கு வந்து அதுவும் தனியாக வந்து அகதியாக பதிந்து ஏன் பெண்கள் அகதி விசா எடுக்க ஏலாது ஏன் ஆண்களுக்கு நிகராக ஆண்களை போல் வாழ முடியாது என்று நீங்கள் கேட்டீர்கள்.

அப்படியான பெண்கள் நாடு அறிய முன் இப்படி எல்லாம் செல்வது, செய்வது சாத்தியமில்லை. அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே குறிப்பிட்டேன். மீண்டும் என் கருத்தை வாசித்து பாருங்கள்.

இங்க மருத்துவத்துறையில் வேலை செய்பவர்கள்... கட்டாயம்..இரவு நேர வேலையும் செய்தாகனும். ஓரிரு தமிழர்கள் அல்லது இந்தியர்கள்.. பாகிஸ்தானியர்கள் நடத்தும்.. தனியார் கடைகளில் இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்கலாம்.. ஆனால்.. வெளிநாட்டு அரசுகளின்.. அரச கண்காணிப்பில் இயங்கும்.. அரச.... தனியார் நிறுவனங்களில் அப்படி இல்லை.

நான்... எல்லாம் முன்னர் லண்டனுக்கு வெளிய இருந்தப்போ.... யுனி முடிச்சு.. மாலை 7 மணிக்கு வேலைக்குப் போய் இரவு 12 மணிக்கு முடிப்பன். எங்கட முகாமையாளர்.. உட்பட அங்கு வேலை செய்யுறது பெரும்பாலும் பெண்களே (வெள்ளை). நாங்கள் வேலை செய்த சுப்பர் மார்க்கெட்டில்.. மனேசர் (பெண்) கடையைப் பூட்டும் வரை வெளிய காவலுக்கு நிற்கச் சொல்வார். சும்மா அலேட் கொடுக்க. மற்றும்படி.. வேறெந்தப் பயமும் அவர்களுக்கு இல்லை. அந்தப் பயமும்.. ஆயுதக் கொள்ளையர்கள் சார்ந்ததே தவிர... வேறல்ல..!

இது எங்கட சோத்தான்ரிகள்.. பீதியைக் கிளப்பிவிடுறது. ஐயோ.. லண்டன விட்டு வெளில போய் படிச்சா பிள்ளை கெட்டிடும். இரவில வேலைக்குப் போனா.. கற்பு பறிபோயிடும் என்று. அங்க பட்டப் பகலில.. பள்ளிக் கூடத்தில கசமுசா பண்ணுறது சோத்தான்ரிகளுக்குத் தெரியாது. லண்டன் யுனி வழிய அவைட வாரிசுகள்.. குப்புறக் கிடத்து தண்ணி.. அதுஇதென்று.. அடிச்சு மகிழுறது தெரியாது. நான் அவதானித்த அளவில் (லண்டனுக்கு வெளியிலும் லண்டனிலும் படிச்ச அனுபவத்தில்) லண்டன் யுனி ஆக்கள் மோசம்.

வெளில வெள்ளை வெள்ளிக்கிழமை மட்டும் தான்.. பப் கிளப்.. மற்றும்படி அதுகள் ரெம்ப நல்லம். நல்ல பழக்கமும்..! ஆனா.. இங்க... ஒவ்வொரு நாளும் யுனில.. யுனி முடிய பஸ்ஸில.. ரெயினில.. காரில.. எங்கும் கசா முசா தான்..! ஏதோ அவிட்டவிட்ட மந்தைகள் போல...! இதுக்கு சோத்தான்ரிகளும் அவையின்ர அரைகுறை புத்திமதியும் ஒரு காரணம். அவை திருந்தினா.. தமிழ் சமூகம் தானே திருந்தும்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

நிச்சயம் இங்கு எந்த பெண்களையும் நான் தவறாக கூறவில்லை. பெண்கள் இரவில் வேலைக்கு செல்வது பாதுகாப்பில்லை என்பதை குறிப்பிட்டேன். அப்படியிருந்தும் நீங்கள் குறிப்பிட்ட பெண்களை குறிப்பிடவில்லை. பல வருடங்கள் நாட்டில் வாழ்ந்த பின் வேலைக்கு செல்லும் பெண்களையும் குறிப்பிடவில்லை.

புதிதாக நாட்டுக்கு வந்து அதுவும் தனியாக வந்து அகதியாக பதிந்து ஏன் பெண்கள் அகதி விசா எடுக்க ஏலாது ஏன் ஆண்களுக்கு நிகராக ஆண்களை போல் வாழ முடியாது என்று நீங்கள் கேட்டீர்கள்.

அப்படியான பெண்கள் நாடு அறிய முன் இப்படி எல்லாம் செல்வது, செய்வது சாத்தியமில்லை. அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே குறிப்பிட்டேன். மீண்டும் என் கருத்தை வாசித்து பாருங்கள்.

நீங்கள் அறியவில்லை என்பதற்காக அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நினைப்பது சிறுபிள்ளைத் தனம்! 90 - 00 களில் நீங்கள் குறிப்பிடும் category க்குள் பலர் உள்ளார்கள்.. அதைத்தான் நானும் எழுதினேன் நீங்களும் கொஞ்சம் பொறுமையாக இருந்து வாசித்து விளங்கும் மனப் பக்குவம் இருந்தால் விளங்கிக் கொள்ளுங்கள்! :rolleyes:

நன்றி வணக்கம்!! :)

Link to comment
Share on other sites

காதல் அவசரத்தில்.. அர்த்தமில்லாமல் எழுதுறீங்கன்னு நினைக்கிறன்...

உங்களை விடவா? :o

ஊரில எங்களால இருந்து படிக்க முடியும்.. என்றால் ஏன் மற்றவர்களால் முடியாது...??! ஆமி கொன்றவர்களில் அநேகர் அரசியல் செயற்பாடு கொண்டவர்கள். போராட்ட ஆர்வலர்கள்..செயற்பாட்டாளர்கள். அப்படி எதிலுமே ஈடுபடாத எத்தனையோ பேர் அசைலம் அடிச்சிருக்கினம். அவைக்கு ஊரில இருக்கிறதுக்கு படிக்கிறதுக்கு ஒரு பிரச்சனையுமே இலலையே..!

அரசியலில் ஈடுபடாத எந்த தமிழருக்குமே நாட்டில் பிரச்சினை இல்லையா? இருக்கிறது என்று நான் கூறுகிறேன். தமிழனாக பிறந்தால் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு எம் நாட்டில் பிரச்சினை தான்.

நல்ல பெறுபேற்றை பெற்றவர்களும் நோகாமல் நொங்கு குடிக்க அசைல வாழ்வை தெரிவு செய்தனர்.காரணம்.. மாணவரா வந்தா படிக்கனும்.. நிரந்தர விசா கிடைகிறது கஸ்டம்... நிறையப் பணம் வேணும். இது அசைலத்துக்கு ஏஜென்சிட்ட கொடுக்கிற காசு தான்.. மிச்சம் நாட்டுக்க நுழைஞ்சாப் பிறகு களவா வேலை செய்து உழைக்கிறது. அப்புறம் கோட் கேசு என்று இயக்கத்தை பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் பத்த வைச்சிட்டு.. அசைலத்த வாங்கிட்டா... அப்புறம் என்ன 2 - 5 வருசத்தில பாஸ்போட் கொடுப்பான். அதையும் கொண்டு ஊருக்கு அல்லது இந்தியா சிங்கப்பூருக்குப் போய் ஊரில இருந்து வாற சோத்தான்ரிகளில் ஒன்றைக் கட்டிக்கிட்டு வாறது.

சோத்து ஆன்டி என்று கதைப்பதை நிறுத்துவீர்களா? ஏற்கனவே கேட்டிருந்தேன்.

இதெல்லாம் மாணவர்களா வாறவைக்கு கடினம். ஏன்னா வந்தா படிப்பில மிணக்கடனும். கவனம் செலுத்தனும்.! சிறந்த பெறுபேறு எடுக்கனும்..! அவர்களின் இலக்குகள் வேற.அசைல வாழ்வின் இலக்குகள் வேற..!

மேலும் மாணவர்கள் உழைக்கக் கூடாதோ.. காசு சேமிக்கக் கூடாதோ என்று உலகில உங்களைத் தவிர வேறு ஒருத்தரும் சொல்லேல்ல. பிரிட்டன் உட்பட மாணவர்கள் அவர்களின் மேலதிக செலவை பூர்த்தி செய்ய உழைக்க விடுகுது. ஆனால் உங்களுக்கு அது கூட பிடிக்கல்ல. ஆனால் அசைலிகள் வந்து வெள்ளையளின் வரிப்பணத்தைச் சுரண்டுவதை அங்கீகரிக்கிறீர்கள். என்னே சமூக அக்கறை உங்களுக்கு..!

மாணவர்கள் உழைக்க கூடாது, காசு சேமிக்க கூடாது என்று நான் எங்கும் சொல்லவில்லை. தனியே உங்களை தான் கேட்கிறேன் என்று தான் சொல்லியிருந்தேன். அது கூட நீங்கள் கூறிய கருத்திற்காக சொல்லப்பட்டது. அப்படியிருக்கும் போது எனக்கு இது பிடிக்கவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?

வெள்ளையள் மத்தியில் அசைலமாக வருபவர்கள் அவ்வளவாக வரவேற்புப் பெறுவதில்லை. ஆனால் மாணவர்களுக்கு அவர்கள் தகுந்த மரியாதை அளிக்கிறார்கள். காரணம் நேர்மையான மாணவர்கள் செல்வமும் அறிவும் கொண்டு வருகிறார்கள். அது நாட்டின் பொருண்மிய வளர்ச்சியில் பங்களிக்கிறது. அதனால் தான் நேர்மையாக படிக்கும் மாணவர்களுக்கு விசா நீட்டிப்பிலும் கெடுபிடி இல்லை..! சரியான சான்றுகளோடு விசா கேட்டால் தருகிறார்கள். காரணம்.. மாணவர்களின் நேர்மையை அவர்களால் பரிசோதிக்க முடியும். ஆனால் அசைலிகளின்.. நிலை.. அப்படியல்ல. அவர்கள் சொல்லும் கள்ளப் பொய்களை நம்ப வேண்டிய நிலை. அசைலம் பெற்ற பல தமிழர்கள் அவற்றிற்கு உரியவர்களே அல்ல. தங்களின் பொருண்மிய தேவைக்காக அசைலம் அடித்தவர்களே பலர்..! இதுதான் யதார்த்த உண்மை..! இதை நீங்கள் பூசி மொழுகலாம். ஆனால் உலகின் கண்களுக்கு நம்மவரின் உண்மை முகம் தெரியும் என்பதால் தான்.. எம்மவரின் குரல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தை உலகம் வழங்குவதில்லை. காரணம்.. நாங்கள் வரேக்க சொன்ன பொய்களை வந்த பின் நாங்களே காட்டிக் கொடுக்கிறமே.

விசா எடுக்கும் வரை சிறீலங்காவில பயம். விசா எடுத்த உடன சிறீலங்கா போய் தாலி கட்டி பொம்பிளையும் கூட வருகுது..??! இதை எல்லாம் நாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. குடிவரவாளர்கள் அசைலத்தை தவறாக குறிப்பாக தமிழர்கள் பாவிப்பது பல நாடுகளுக்குத் தெரியும்..! முன்னர் அசைலமா வந்தால்.. நேர்மை கருதி சில கேள்விகளோடு.. விசா கொடுத்திருந்தனர். இன்று.. நிலை மோசம். அதேபோல்.. முன்னர் படிக்க வாறவை நேர்மையா படிச்சிச்சினம். இப்ப அசைலிகள் மாணவர் என்ற போர்வையில் வந்து அசைலம் அடிக்கிறதால.. மாணவர்களுக்கும் பிரச்சனை. மொத்தத்தில்.. அசைலிகளால்.. உலகில் எல்லோருக்குமே பிரச்சனை தான்..! உங்களுக்கு மட்டும் இலாபம். ஏனென்றால்.. நீங்கள் அவர்களின் மூலம் ஆதாயம் பெற்றிருப்பீர்கள்.. அல்லது வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்த நன்றிக்கடனுக்கு.. எழுதித் தள்ளுகிறீர்கள்.

இங்கு சிலர் நாடு சென்று வருகிறார்கள் தான். அவர்களை வைத்து அனைவரும் அப்படி என்று குறை சொன்னீர்களே. நான் ஏனையோரை கருத்தில் கொண்டு கதைத்தேன்.

பலர் நாடு செல்லாமல் ஏஜென்சி மூலம் அழைத்து திருமணம் செய்கிறார்கள். அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

நிச்சயமாக எனக்கு எந்த அசைலம் அடித்தவர்களும் உதவி செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவாக நான் எழுதவில்லை. நான் அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் எனக்கு நாட்டில் பிரச்சினை. என்ன என்று உங்களுக்கு கூற தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கு வந்தது கூட tourist விசாவில் தான். அதை எடுத்து எப்படி பிரச்சினை இல்லாமல் வந்து சேர்ந்தேன் என்று கேட்க வேண்டாம்.

நான் கொடுத்த கேஸ் கூட என் உண்மை பிரச்சினை. தப்பி தவறி கூட நான் இயக்கம் என்றோ இயக்கத்துக்கு உதவி செய்தன் என்றோ பொய் சொல்லேல்லை. நான் சண்டை நடந்த பகுதியில் இருந்தேன் என்று கூட குறிப்பிடவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக தான் குறிப்பிட்டேன். (இயக்கத்தை சாட்டி விசா பெற எனக்கு மனமில்லை) எனக்கு reject. அடுத்தமுறை கிடைக்குமா தெரியாது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டோ திருமணம் செய்ய என்றோ நான் வரவில்லை. உங்கள் கருத்துகள் என்னை பாதித்தால் பரவாயில்லை. எனக்கு அது பழகி போச்சு. ஆனால் என்னை போன்ற ஏனையவர்களை பாதிக்காத படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால்.. சாதாரண.. வெளிநாட்டு மக்களின் பார்வையில் அசைலிகள்.. விருப்பப்படுபவர்கள் அல்ல. அந்த நிலையை தோற்றுவித்தவர்களில் பொய் கூறி அசைலம் அடித்த.. தமிழ் அசைலிகளும் அடங்குவர்..! :icon_idea::)

தமிழர்களுக்கு நாட்டில் வாழ முடியாத நிலையிலும் அவற்றை இங்கு கூறினால் அதை ஏற்று இங்கு விசா கொடுப்பதில்லை. விசா கொடுப்பதற்கு பல points அவர்களுக்கு தேவை.

உண்மை சம்பவங்களை கூறும் அனைவருக்கும் reject வர தொடங்கியது. பிடித்து நாட்டுக்கு அனுப்ப தொடங்கினார்கள். ஆனால் நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பாதுகாப்பில்லை. அதனால் தான் அவர்கள் பொய்யாக எழுத தொடங்கினார்கள்.

நான் உண்மை பிரச்சினை கூறியிருந்தேன். எனக்கு reject.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொடுத்த கேஸ் கூட என் உண்மை பிரச்சினை. தப்பி தவறி கூட நான் இயக்கம் என்றோ இயக்கத்துக்கு உதவி செய்தன் என்றோ பொய் சொல்லேல்லை. நான் சண்டை நடந்த பகுதியில் இருந்தேன் என்று கூட குறிப்பிடவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக தான் குறிப்பிட்டேன். (இயக்கத்தை சாட்டி விசா பெற எனக்கு மனமில்லை) எனக்கு reject. அடுத்தமுறை கிடைக்குமா தெரியாது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டோ திருமணம் செய்ய என்றோ நான் வரவில்லை. உங்கள் கருத்துகள் என்னை பாதித்தால் பரவாயில்லை. எனக்கு அது பழகி போச்சு. ஆனால் என்னை போன்ற ஏனையவர்களை பாதிக்காத படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இதை வாசிக்கிறப்போ.. ரெம்பவே பீல் பண்ணினன்.. கண்ணே கலங்கிட்டுது. :( எனியும்.. அநாவசியமா உங்களையோ யாரையுமோ.. தெரிந்தோ தெரியாமலோ... நோகடிக்க எனக்கு விருப்பமில்லை. இத்தோட இந்த விவாதங்களில் இருந்து விலகிக் கொள்கிறேன்..! :icon_idea:

செழிப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகின்றேன்..!

Link to comment
Share on other sites

இதை வாசிக்கிறப்போ.. ரெம்பவே பீல் பண்ணினன்.. கண்ணே கலங்கிட்டுது. :( எனியும்.. அநாவசியமா உங்களையோ யாரையுமோ.. தெரிந்தோ தெரியாமலோ... நோகடிக்க எனக்கு விருப்பமில்லை. இத்தோட இந்த விவாதங்களில் இருந்து விலகிக் கொள்கிறேன்..! :icon_idea:

செழிப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகின்றேன்..!

இப்படியான கருத்துகள் எனக்கு பழகி விட்டது. நிச்சயம் என்னை பாதிக்காது. கவலைப்பட வேண்டாம்.

cool அண்ணா. :lol: நண்பேண்டா. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எங்கும் சுதந்திரமாகத் தான் வாழ்கின்றார்கள்.....

ஆண்களை அடக்க நினைக்கும் வரைக்கும்.....:icon_mrgreen:

Link to comment
Share on other sites

பெண்கள் எங்கும் சுதந்திரமாகத் தான் வாழ்கின்றார்கள்.....

ஆண்களை அடக்க நினைக்கும் வரைக்கும்..... :icon_mrgreen:

[size=4]எல்லாம் அரசியல் தான். இங்கேயும் கொஞ்சம் diplomacy யை பாவித்தால்... இனிக்கும்.[/size]

Link to comment
Share on other sites

நீங்கள் அறியவில்லை என்பதற்காக அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நினைப்பது சிறுபிள்ளைத் தனம்! 90 - 00 களில் நீங்கள் குறிப்பிடும் category க்குள் பலர் உள்ளார்கள்.. அதைத்தான் நானும் எழுதினேன் நீங்களும் கொஞ்சம் பொறுமையாக இருந்து வாசித்து விளங்கும் மனப் பக்குவம் இருந்தால் விளங்கிக் கொள்ளுங்கள்! :rolleyes:

நன்றி வணக்கம்!! :)

அண்ணா, நானும் இங்கு தனியாக தான் வந்தனான். நான் இருக்கிற நாட்டில் எனக்கு சொந்த காரர் எவரும் இல்லை. அப்பிடியிருக்க அப்பிடியான பெண்களை நான் அறியேல்லை என்று என்னட்டையே சொல்லுறது கொஞ்சம் ஓவரா இருக்கு. :D

அம்மா தனக்கு தெரிந்த ஒருவரை நம்பி இந்த நாட்டுக்கு அனுப்பினா. அவர்கள் ஒருநாள் கைவிட்டிட்டார்கள். (அதற்கு முன் கூட என் அலுவல்களை நான் தான் பார்த்தேன், அவர்கள் எந்த உதவியும் எனக்கு செய்ததில்லை.). இந்த நாட்டில் நான் நடுத்தெருவில் நிண்டனான். ஒரு இரவு காரில் தூங்கினான் (இன்னொருவருடைய கார்). அதுவும் இல்லாட்டால் எனக்கு என்ன நடந்திருக்குமோ தெரியாது. பிறகு ஒரு கிளிநொச்சி நண்பியின் (அவருடன் எனக்கு ஒரு நாள் பழக்கம் மட்டும் தான் இருந்தது) உதவியுடன் ஒரு மாதம் இன்னொரு வீட்டில் தங்கினேன். (அவருக்கு நன்றி)

பின்னர் 2 room மாறினேன். அந்த வீடுகளில் உள்ள ஆண்கள் குடித்து விட்டு என்னுடன் தேவையில்லாத கதைகள் கதைக்க முயற்சிப்பார்கள். :wub: மனைவி மார் தடுத்துவிடுவார்கள். நல்லவேளை. :) ஆனாலும் நான் room ஐ விட்டு பெரிதாக வெளியில் வருவதில்லை. என்றாலும் அங்கு இருக்க விரும்பாமல் இப்ப ஒரு வீட்டில் room எடுத்து இருக்கிறன். இப்ப இருக்கிற வீட்டுகாரரை பற்றி தான் இத்திரியின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் பெண்கள் பயமில்லாமல் இருக்கலாம் என்று. :) room தந்தது தவிர வேறெந்த உதவியும் அவர்களால் எனக்கு இல்லை. நிச்சயம் என்னால் இங்கு வாழ முடியும். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன்.

இதெல்லாம் சொல்லி பரிதாபம் தேட எனக்கு விருப்பமில்லை. அது தான் நான் இவ்வளவு நாளும் அதை விட்டிட்டு கருத்துகளால் மட்டும் மோதிக்கொண்டிருந்தேன். இன்று கொஞ்சம் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் என்னை மட்டும் வைத்து கதைக்கவில்லை. இங்குள்ள பல பெண்களின் பிரச்சனைகளை அறிந்து கதைக்கிறேன். ஏஜென்சி மூலம் வந்த பல பெண்கள் அந்த ஏஜென்சி காரனாலேயே வழியில் நாசமா போன கதையெல்லாம் கேட்டு வைத்திருக்கிறன். :( எனவே உங்களை விட பெண்கள் மேல் அக்கறைப்பட எனக்கு உரிமை உண்டு.

உங்களுக்கு தெரிந்த சிலர் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும் எண்டு நினைக்காதையுங்கோ. :wub:

யாழ் இணையத்தில் முகம் தெரியாது என்பதால் நான் தனிய இந்த நாட்டில் இருக்கிறேன் என்று துணிந்து சொல்கிறேன். ஆனால் நேரில் யார் கேட்டாலும் நான் சொந்தக்காரருடன் இருக்கிறேன் என்று எனக்கு பல சொந்தங்கள் இருப்பதாக அவர்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கிறேன். என் பாதுக்காப்பிற்காக. :icon_idea:

நானும் இந்த திரியில் இருந்து விலகுகிறேன். நன்றி வணக்கம். :rolleyes:

Note: அந்த கிளிநொச்சி பெண் யாழின் உறுப்பினராகவோ அல்லது யாழின் வாசகராகவோ இருந்து என்னை இனங்கண்டால் நான் யாழில் உறுப்பினராக இருப்பது பற்றி என் குடும்பத்தவரிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

கனடா பெண்களை அல்ல எல்லோரையும் மதிக்கும் ஒரு பல் கலாச்சார நாடு .ஆனால் அவர்களும் ஆதிக்குடிகள் நிலைப்பாட்டில் மிக பிழையாகவே நடக்கின்றார்கள் .

பெண் உரிமை பற்றி ஆண் ஒருவன் கதைப்பதே எனக்கு உடன் பாடில்லை .

இன்னும் இதில் வேடிக்கை ஈ .பி ,புளொட் பெண் போராளிகளை பயிற்சிக்கு எடுக்க நக்கலடித்த புலிகள் கடைசி காலத்தில் (பத்து வருடங்கள் ) உயிர் பலி கொடுத்தது பல சிறுமிகளையே.

இதை புலம் பெயர்ந்த ---------- வீர காவியமாக்கியது வேறு கதை .

Link to comment
Share on other sites

[size=4]பெண்ணுங்களுக்கு எந்த இடத்திலதாங்க பாதுகாப்பு இருக்கு ? சொல்லுங்க அண்ணன்களா . எங்க ஊரில பஸ்சில பெண்ணுங்க தனியா போகமுடியலீங்க பின்னாடி வந்து உரசுறாங்க . அசிங்கம் பண்றாங்க . ஈவ்டீசிங் செய்றாங்க . வேலைக்கு போற இடத்திலை ஜொள்ளு விடிறாங்க . கொஞ்சம் ஃபிறாங்கா பேசினா படுக்கைக்கு கூப்பிட்றானுங்க . ஏதோ பாத்து எழுதுங்க அண்னுங்களா :( .[/size]

உங்கள் தேசத்தின் மொழியில் கேட்கிறேன், சொப்னா!

நீங்கள் 'செருப்பு' அல்லது சப்பாத்துப் போடுவதில்லையா?

சில மனிதர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே பதில் சொல்லுங்கள்!

பெண் என்பவள், கிள்ளுக்கீரையல்ல!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.