Jump to content

உடாங் சம்பல்


Recommended Posts

உடாங் சம்பல்

dscn29627gh.th.jpg

உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள்.

தேவையான பொருட்கள்:

300 இறால் (பெரியது)

3 - 4 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய்

அரைக்க:

5 செத்தல் மிளகாய் (நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவையுங்க)

2 சிகப்பு மிளகாய்

4 வெங்காய தடல்

2 உள்ளி பல்லு

2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை என்றால் அவசியமில்லை)

1/2 தேசிக்காய்

தூவ:

1/2 மேசைகரண்டி சீனி

உப்பு தேவைக்கு ஏற்ப போடுங்க

1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள்

செய்முறை:

1. ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும்.

2. அரைத்த பொருட்களை போடு நன்றாக பச்சை மணம் போகும் வரை வறுக்கவும்.

3. இறாலை போட்டு 4 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

4. தேசிக்காய் சாறையும் , சீனி, உப்பு & சிக்கின் ஸ்டொக் தூளையும் போட்டு கிளறவும்.

5. 1 நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கவும்.

in0028.jpg

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

வீட்டில இன்றைக்கு இது செய்தனான்...படம் எடுத்து போடுகிறேன். அப்படி என்றால் சமைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் தானே.

dscn29627gh.th.jpg

இது தான் நான் செய்தது..இது கந்தப்புவிற்கு அனுப்ப போறேன்.. (வீட்டு கிட்ட இருக்கும் தானே, அப்புவை பழிவாங்க இது தான் சந்தர்ப்பம்) உங்களுக்கும் வேணும் என்றால் சொல்லுங்க..அனுப்பிவிடுலாம்...

Link to comment
Share on other sites

துயா எழுதியது

இது தான் நான் செய்தது..இது கந்தப்புவிற்கு அனுப்ப போறேன்.. (வீட்டு கிட்ட இருக்கும் தானே அப்புவை பழிவாங்க இது தான் சந்தர்ப்பம்)

உங்களுக்கு கந்தப்பு மேல் ஏன் இந்த கோபம்

அவருக்கு எனது ஆழ்ந்த அநதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காப்பாற்றுங்கோ, காப்பாற்றுங்கோ தூயாவிடமிருந்து என் உயிரைக்காப்பாற்றுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு கந்தப்பு..... கத்தப்பு கத்தப்பு......சத்தம் போட்டு கத்தப்பு :lol::lol:

Link to comment
Share on other sites

தப்பலாம் என்று நினைப்பு இருக்கவே கூடாது, குளிர்சாதன பெட்டியில் வைத்து இருக்கிறேன். மரியாதையாக சாப்பிடாவிட்டால் பிரச்சனைவரும், சொல்லிட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காப்பாற்றுங்கோ, காப்பாற்றுங்கோ தூயாவிடமிருந்து என் உயிரைக்காப்பாற்றுங்கோ

பயப்பிடாதயுங்கோ கந்தப்பு நீங்கள் இருகிற நாடு உங்களை கைவிடாது.வெட்டனும் கொல்லனும் என்று ஒவரா டயலக் எழுதுவீர் உயிர் மேல் இவ்வளவு ஆசையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயப்பிடாதயுங்கோ கந்தப்பு நீங்கள் இருகிற நாடு உங்களை கைவிடாது.வெட்டனும் கொல்லனும் என்று ஒவரா டயலக் எழுதுவீர் உயிர் மேல் இவ்வளவு ஆசையா??

கலைஞர் ஸ்டைலில் கத்திப்பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஸ்டைலில் கத்திப்பார்த்தேன்

யார் இந்த கலைஞர்??? நாட்டிய கலைஞரா அல்லது நாடக கலைஞரா??

Link to comment
Share on other sites

கலைஞர் ஸ்டைலில் கத்திப்பார்த்தேன்

யார் இந்த கலைஞர்??? நாட்டிய கலைஞரா அல்லது நாடக கலைஞரா??

sathiri1bq.jpg

:lol:

Link to comment
Share on other sites

அட இதுவா விசயம். கலைஞரின் படத்தை பார்த்ததும், உடாங் சம்பல் சாப்பிட்டதால் வந்த பிரச்சனையோ என நினைத்தேன்..

கந்தப்பு எப்ப வந்து உடாங் சம்பல் எடுக்க போறிங்கள்? என்னுடைய குளிர்சாதனப்பெட்டியில் எத்தனை நாட்கள் தான் அது உங்களுக்காக காத்து இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே

Link to comment
Share on other sites

இடம் குடுத்தால் மடத்தையே பிடுங்கிறிங்களே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் பச்சை மிளகாயில் அரைத்து செய்கின்ற எங்கள் சம்பல் மாதிரி எண்டைக்குமே, எதுவுமே வராது.

:oops: :oops:

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் பச்சை மிளகாயில் அரைத்து செய்கின்ற எங்கள் சம்பல் மாதிரி எண்டைக்குமே, எதுவுமே வராது.

:oops: :oops:

உண்மைதான் தூயவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சமிளகாய்ச்சம்பல் நல்லத்தான் இருக்கும். அதைவிடமாசிச்சம்பலும் நாவுக்கு நல்ல ருசியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் ஹாய் பாப்ஸ்.............. :lol: :oops:

பாப்ஸ் என்றால் தூயாவா? தூயாவின் பதிலுக்கு முன்பும் சுண்டல் பாப்ஸ் என்று எழுதியிருந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா நீ பேசுவது தமிழா??

கந்தப்புவின் டயலோக்

quote="கந்தப்பு"]இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே

இடியப்பம் சமைப்பதா அவிப்பதா எது சரி???

கந்தப்பு நீ எழுதுவது தமிழா??

Link to comment
Share on other sites

பாப்ஸ் என்றால் தூயாவா? தூயாவின் பதிலுக்கு முன்பும் சுண்டல் பாப்ஸ் என்று எழுதியிருந்தார்

:oops: :oops: :oops: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா நீ பேசுவது தமிழா??

கந்தப்புவின் டயலோக்

quote="கந்தப்பு"]இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே

இடியப்பம் சமைப்பதா அவிப்பதா எது சரி???

கந்தப்பு நீ எழுதுவது தமிழா??

ஒரு காலத்தில்

மதி-சேது ஊடல்

குருவிகள்-புூனைக்குட்டி ஊடல்

என்று வரலாறுகளை உள்ளடக்கிய யாழ் களம்

இப்ப புத்தரும்- கந்தப்புவும் என்ற அளவில் கொண்டு போய் நிற்கின்றது.

தொடரட்டும் வரலாறு!! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்தில்

மதி-சேது ஊடல்

குருவிகள்-புூனைக்குட்டி ஊடல்

என்று வரலாறுகளை உள்ளடக்கிய யாழ் களம்

இப்ப புத்தரும்- கந்தப்புவும் என்ற அளவில் கொண்டு போய் நிற்கின்றது.

தொடரட்டும் வரலாறு!! :wink: :P

எல்லாத்துக்கும் காரணம் தூயாவின்ர கண்டறியாத உடாங் சம்பல் தான் காரணம்.

:twisted:

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆஅ கடைசியில என் மேலே பழியா? இதை நான் யாழ் நீதி துறைக்கு எடுத்து செல்ல போறேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.