-
Tell a friend
-
Topics
-
Posts
-
அப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது. பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார். **** IT துறையில் இருப்பதால், இணைய தளம் உருவாக்குத்தல், அது தொடர்பான, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒரு புரிதல் உண்டு. ஒரு தமிழ் இளைஞர், பெரும் பணம், செலவு செய்து விளம்பரம் செய்துள்ளார். இணைய தளங்களை வடிவமைத்து தருவதாக. அந்த அன்பருடன் எதுவும் தெரியாதது போல பேசினேன். உண்மையிலேயே, அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஈமெயில் மார்க்கெட்டிங் செய்ய உதவுவீர்களா என்றால், அவருக்கு தெரியவில்லை. ஜிமெயில், ஹொட்மெயிளிலும் பார்க்க நல்லது.... 15gb பிரீ ஸ்பேஸ் தருவார்கள். ஈமெயில் மார்கெட்டிங் சிறப்பாக செய்யலாம். என்கிறார், எந்த வித புரிதலும் இல்லாமல். சரி... வாடிக்கையாளர்கள் மெயில் ஐடி இல்லாமல், யாருக்கு, எப்படி அனுப்புவது என்றால், பதில், அப்பாவியாக வருகிறது. உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு தானே அனுப்புவியல்.... அசந்து போய் விட்டேன் என்பதிலும் பார்க்க, அவர் குறித்து கவலை தான் வந்தது. முதலில், வாடிக்கையாளர்கள், கையில் மொபைலுடன், காதில் ஹெட் செட் உடன் இருக்கிறார்கள். அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி? இதனை தான், ஒரு வியாபாரத்தின், big picture view இல்லாத நிலை என்பேன்.
-
முதலில் நாம் பெற்றிருப்பது ஒரு பொம்மையல்ல உயிரோட்டமுள்ள பிள்ளை என்பதனையும் நாமும் இதே பாதையை கடந்து வந்தோம் என்பதனையும் நாம் வாழ்ந்த காலத்தைவிட இன்றைய சூழ்நிலை வேறு என்பதனையும் நாம் பெற்ற பிள்ளையை இந்த சமூகத்தில் நற்பிரசையாக நாம் வளர்ப்பதே நமது வாழ்க்கைப்பரீட்சையில் நாம் சித்தியடைய வழி என்பதனையும் பெற்றோர் புரிந்து கொண்டால்....
-
By Maruthankerny · Posted
வட்டிக்கு வைத்த நகையை கூட திருப்பி விடலாம்... உன் மீது வைத்த கண்களை தான் என்னால் திருப்பவே முடியவில்லை... ஒருவேளை... உன்னை காதலிக்கும்படி... நீயே எனக்கு.... செய்வினை வைத்திருப்பாயோ..? ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... -
கண்ணதாசனின் ஒரு கவிதையில் கண்ட வரிகள். தன் தம்பி மகளை மருமகளாக்க ஆசைகொண்ட ஒரு தாய், மகனின் செயலைத் தடுக்க முடியாமல்..... அவன் வேறொருத்தியை கட்டிவந்ததால் கொண்ட ஆற்றாமையின் புலம்பல். பெண்ணா இவ சனியன் புத்தி கெட்டு போனேனே தம்பிமக சமைச்சா சபையெல்லாம் வாசம் வரும் அள்ளி இலையிலிட்டா அடுக்கடுக்கா வெள்ளிவரும் உண்ணவொரு கையெடுத்தா உள்நாக்கில் நீர்வடியும் கத்தரிக்காக் கூட்டுவச்சா கடவுளுக்கே பசியெடுக்கும் வெண்டைக்கா பச்சடியும் வெள்ளரிக்கா தக்காளி கிண்டி விட்ட கீரைக்கும் கீழிறங்கும் தெய்வமெல்லாம்! அப்படிக்கி சமைப்பாளே அள்ளியள்ளி வைப்பாளே அடுப்படிக்கு நான்போக அவசியமே இல்லாமே உட்கார்ந்த பாய்வரைக்கும் ஓடிவந்து வைப்பாளே இவளும் சமைச்சாளே எல்லாந் தலையெழுத்து
-
By goshan_che · Posted
இந்தியா, அவுஸ் ரெண்டு பேரும் தோற்க வேண்டும் என்பதே நான் வழமையாக வேண்டுவது 🤣. ஆனால் இந்த முறை நட்டு விளையாடுவதாலும் சிராஜ்ஜுக்காகவும், கோலி விளையாடவில்லை என்பதாலும் 🤣 இந்தியா வெல்ல விரும்பினேன். கபாவில் வென்று தொடரையும் வென்றது இமாலய சாதனைதான். அவிசில் கடந்த 30 வருடத்தில் வெளிநாடு அணி அடைந்த பிரமாதமான வெற்றி என்றே கூறலாம். சிராஜின் கண்ணீர் கதை கீழே. https://www.espncricinfo.com/story/australia-vs-india-miya-bhai-mohammed-siraj-lives-his-father-s-dream-to-the-fullest-1248327
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.