Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கரும்புலிகள் தினம் - ஆடி 5


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எமது மண்ணில் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள். இவர்களிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? ம்ம்ம்... : /

காலங்கள் மாறலாம்... ஏன் எண்ணங்கள் கூட மாறலாம், ஆனால் எமது இலட்சியம் மாறலாமா? தேசம் விட்டு தேசம் தாண்டிப் போனாலும், இறுதி உயிர்மூச்சு உள்ளவரை ஈழமே எமது குறிக்கோளாக இதையத்தில் பதிந்திருக்க வேண்டும்!

http://youtu.be/wxMW1ZRPL98

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=5]எமது தாயக விடுதலைக்காக தம்மை ஈகம் செய்த கரும்புலிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கங்கள் ![/size]

http://youtu.be/-kJQavuCHQs

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலிகள்.

'பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்."

தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே.பிரபாகரன்.

எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலு...ம் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது தமதுடலோடு, தமதுயிரோடு 'தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.

ஓயாத எரிமலையாக சதா குமுறிக் கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து

கொண்டிருந்த வேட்கையைத் தணிக்க, எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையை தணிக்க, எதுவும் செய்யவும் எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள்.

ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றை சாதித்துஇருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள். நெஞ்சு புல்லரிக்;கும், உயிர் வேர்க்கும். அவர்கள் கண்களுக்கு முன்னால் விரி;ந்து கிடந்த இன்றைய ஷநவீன நாகரீகத்தின் தாலாட்டில்தான் உறங்கினார்கள். புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் உலாவந்தார்கள்.இவற்றுக்குள் வாழ்ந்தும் எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது. வெளிப்படையாக அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்தபோதும், உள்ளுக்குள் இதய அறைகளின் சுவர்களுக்குள் தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அப+வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்;குள் புகுந்தது. பகைவனை அழிக்கும் தனது நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்ந இந்த அதிசய மனவுணர்வுவை எப்படிஅவர்கள் பெற்றார்கள். தாயகத்திற்காக செய்யப்படும் உயிர் அர்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதுதான் உண்மை.ஆனாலும் இங்கென்றால் வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை பரிப+ரணமான ஒரு போர்ச் சூழ்நிலை. அந்த வீரனது மனநிலையை

அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும். ஆனால் அங்கு............ அது முற்றிலுமே ஒரு தலைகீழான நிலமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி அவற்றுக்குத் தீனி போட்டு சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது. அதில் படுத்துறங்கி பகை தேடி வேவு பார்த்;து ஓழுங்கமைத்து குறி வைத்து, வெடி பொருத்தி புறப்பட்டு, மனிதக்குண்டாகி............ எல்லாவற்றையும் தானே செய்வதோடு பகையழிக்கும் போது தன்னையழிக்கும் போதும் கூட தன்பெயர் மறுத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்பணத்தில் அது உன்னதமானது.

அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது.? உண்மையில் இவையேல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளேதான். நம்புதற்கரிய அற்புதங்கள்தான்... மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்த புனிதர்கள், தான் அழியப்போகும் கடைசிப் பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள், 'முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தை தொட்டு விட்ட 'பிரபாகரனின் குழந்தைகள்.

தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்.....

'நீங்கள் முன்னால் போங்கோ. நான்

பின்னால் வருவேன்"

கரும்புலியாக செல்லுகின்ற

கரும்புலிவீரர்களுக்கு, தலைவர்

அவர்கள் கடைசியாக இப்படிச்

சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்

இது வெறுமனே அவரது வாயில் இருந்;து வருகின்ற

வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்

ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.

உண்மையிலே என்றோ ஒருநாள் இதுதான் நடக்கும்" என்று

உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி

நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின்

குழந்;தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழி;ப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.

கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம்- உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.

கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்;;த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.

' நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன் "

=====================================================

மறைமுகக் கரும்புலிகள் பற்றிய ஒரு பாடல்

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்

புலிகளின் கல்லறை வெளியில் இல்லை

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்

கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு

வாழும் தலைமுறை சாகும் கரும்புலி

வாழ்வை அறிவதுமில்லை -இவர்

வாசம் புரிவதுமில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே

கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு

தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்

சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்

தோழர் நெருப்பென ஆவார்

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி

நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்

விடிவினுக்காகவே இடியென எதிரியின்

முடிவுடன் அவருடல் சாயும் -அவர்

மூச்சும் பெரும் புயலாகும்.

எழுதியது. -:புதுவை இரத்தினதுரை

முகம் காட்ட மறுத்து முகவரி மறைத்து சென்ற கரும்புலி வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்[/size]

Edited by யாழ்அன்பு
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்பணித்த நேரடி / மறைமுக கரும்புலிகளுக்கு எனது வீர வணக்கங்கள்.

http://www.youtube.com/watch?v=iPCNG6Lmvq4

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன் அள்ளித் தூவிது வானம்

http://youtu.be/O_6qQLc-0pQ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்பணித்த நேரடி / மறைமுக கரும்புலிகளுக்கு எனது வீர வணக்கங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

http://youtu.be/LZS0ABjuAEM

காற்றும் நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை -

நாங்கள் போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ஒரு பலவீனம் நிறைந்த இனத்தில் தான் வீரம் செறிந்த அற்புத தியாகங்களாக இவர்கள் உருவெடுத்தவர்கள். உலகம் உள்ளவரை இவர்கள் வீரம் நிலைக்கும்.[/size]

[size=4]இந்த கரும்புலிகள் தினத்தின் இவர்களுக்கு சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!![/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மா வீரக்கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.