Jump to content

இஸ்ரேலின் விவசாய நீர்ப்பாசன முறைகள்


Recommended Posts

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

:) :) :)

என்னையும் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி அண்ணா. படம் மட்டுமல்ல, கருத்துகளையும் வாசிக்கிறேன். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

இனி...

மெல்லிய மண் படைக்கு சில தீர்வுகள்..

1. கீழே படத்தில் உள்ளது போல் அகன்ற கலப்பை மூலம் உழுதது போன்ற கால்வாய்களும் மேடுகளும். இங்கு அடிப்படையில்... கால்வாயின் மண் அள்ளப்பட்டு மேட்டில் குவிக்கப்படுகின்றது. படத்தில் கால்வாயும் மேடும் ஒரே அகலத்தில் உள்ளது. கால்வாயின் அகலம் மேட்டைவிட இரண்டு, மூன்று மடங்காகும் போது மேட்டின் உயரமும் அதற்கேற்ப அதிகரிக்கும். அதாவது பயிரிடப்போகும் இடத்தின் மண்படை தடிக்கும்.

நீளமாக இருக்கும் மேட்டின் இடையிடையே சமதூர இடைவெளியில் குறுக்காக மண்ணை அள்ளி மீண்டும் மேட்டில் போடுவதன் மூலம் மண்படையின் தடிப்பு மேலும் அதிகரிக்கப்படலாம்.இப்போது தொடர்ச்சியான நீள் சதுரங்களாக மேடு காட்சியளிக்கும்.

ready+for+planting.jpg

one-pass-plow-03.jpg

2. உயர்த்தப்பட்ட மண் படுக்கைகள்

ஏறகுறைய முதலாவது முறை போன்றது. ஆனால் பலகைகளால் பலப்படுத்தப்படுகின்றது. மண் அயலில் இருந்து அள்ளப்படுகின்ரது; அல்லது வேறு இடங்களில் இருந்து பெறப்படுகின்றது. இந்த மண்படுக்கையை உயர்த்த மண்ணைவிட‌ பெருமளவில் உக்கல், எரு, வைக்கோல் போன்ற சேதனப் பொருட்கள் பயன்படும்.

bed8.jpg

railway_sleepers_47.jpg

new-sleeper-photos-003large.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

இனி...

களிப்பாங்கான மண்ணை திருத்துவது எப்படி என்று ஒரு சிறிய கானொலி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈசன்! நீங்களும் என்னைப்போல் விவசாயகுடும்பத்தில் இருந்து வந்தவரா? நல்ல தகவல்களை இணைக்கின்றீர்கள் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் பணி..... :wub:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஈசன்,

இந்த முறையிலேயே (உயர் படுக்கை) மரக்கறித் தோட்டம் செய்கிறேன். களிமண் உள்ள இடங்களில் பயிர் செய்வதற்குச் சிறந்த முறை.

Link to post
Share on other sites

.

இசை, நெடுக்ஸ், பூங்கையூரன் சொன்னது போல் கறுப்புப் படலத்தின் நன்மைகள்

 1. ஒளி புகாமல் தடுப்பதனால் களைகள் வளராமல் தடுக்கப்படும். இது முதன்மைக் காரணம்.
 2. படலத்தின் கீழ் மண் வெப்பநிலை அதிகரிப்பதால் தீங்கு செய்யும் குடம்பிகள், புழுக்கள், ஃப‌ங்கஸ் என்பன கொல்லப்படும்.
 3. அதிகரித்த மண் வெப்பநிலை வேர் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் தாவரம் விரைவாக வளர்கின்றது.
 4. மூடி இருப்பதால் ஆவியாகும் நீர் மீண்டும் ஒடுங்கி தாவரத்திற்கே கிடைக்கிறது.

* * * * * * * *

மேலே இணையவனுக்காக இணைக்கப்பட்ட பிளாஸ்ரிக்கினால் ஆன படியும் பனியை பிடிக்கும் சதுரங்களை டால் யா (Tal - Ya) என்னும் இஸ்ரேலிய கம்பனி தயாரிக்கின்றது. இந்த மிக எளிமையான ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் பாலவனத்தில் எப்படி திராட்சை காய்த்துக் குழுங்குகின்றது என்பதைப் பாருங்கள்.

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

அழகான படங்களிற்கு நன்றி ஜீவா. :)

P8200128.JPG

P8200116.JPG

DSC02282.JPG

DSC03625.JPG

DSC02095.JPG

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா. வளி மண்டல ஈரப்பதனை நீராக்கும் உபகரணம் எம் ஊர்களில் மிகவும் வெற்றிகரமாக வேலை செய்யும். ஊர் புழுக்கம் (வியர்வை) ஞாபகம் இருக்கிறது தானே ?

* * * * * * *

இனி...

இந்த தரவைகளில் காணப்படும் பயிர்ச்செகைக்கு ஒவ்வாத காரணிகள்.

1. மெல்லிய மண் படை

--சில இடங்களில் ஒரு சாண் தடிப்புக் கூட இல்லை. சிறிது கிண்டவே பார் வந்து விடும்.

2. கோடை காலங்களில் உலர்ந்த, வரண்ட‌ மண்.

3. மாரிகாலங்களில் நீர் தேங்கி நிற்றல்.

4. கடலுக்கு அண்மையாகவோ, கடலோடு தொடர்பான ஏரிகளுக்கு அண்மையாகவோ காணப்படுவதால் இந்த தரவைகளில் நிலக்கீழ் நீர் உவர்பானதாகக் காணப்படும்.

5. களித்தன்மையான மண்.

.

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

தமிழரசு,

இங்கு திராட்சை நன்றாக விளையும். பெரிய கவனிப்பு ஏதும் தேவையில்லை. நானும் வைத்திருக்கிறேன். 'வைன்' இற்கு பாவிப்பது / உண்பதற்குப் பாவிப்பது என இரு வகை உண்டு. அதனடிப்படையில் திராட்சைக் கன்றுவாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும்.

இதனைவிட சிறிய தோட்டம் இருந்தாலும், அதற்கேற்ற மாதிரி நிறைய பயிர்களைப் பயிரிடலாம். முக்கியமாக 'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை', 'நட்புத் தாவரங்களை சேர்த்து நடுதல்' (companion planting ) முறைகளில் பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஊரைப் போல இங்கு பயிர்ச் செய்கை கஷ்டமானதல்ல.

உடலிற்கும் பயிற்சியாகிறது. அத்தோடு கிருமிநாசினி பாவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். முக்கியமாக மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும். தோட்டத்தில் காய்கறி பறித்துச் சமைப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

Link to post
Share on other sites

தமிழரசு,

இங்கு திராட்சை நன்றாக விளையும். பெரிய கவனிப்பு ஏதும் தேவையில்லை. நானும் வைத்திருக்கிறேன். 'வைன்' இற்கு பாவிப்பது / உண்பதற்குப் பாவிப்பது என இரு வகை உண்டு. அதனடிப்படையில் திராட்சைக் கன்றுவாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும்.

இதனைவிட சிறிய தோட்டம் இருந்தாலும், அதற்கேற்ற மாதிரி நிறைய பயிர்களைப் பயிரிடலாம். முக்கியமாக 'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை', 'நட்புத் தாவரங்களை சேர்த்து நடுதல்' (companion planting ) முறைகளில் பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஊரைப் போல இங்கு பயிர்ச் செய்கை கஷ்டமானதல்ல.

உடலிற்கும் பயிற்சியாகிறது. அத்தோடு கிருமிநாசினி பாவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். முக்கியமாக மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும். தோட்டத்தில் காய்கறி பறித்துச் சமைப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

தகவலுக்கு நன்றி சகோதரா !

இந்த நாத்து (கன்றுகள்)எங்கு வாங்க முடியும்

நான் பார்த்திருக்கின்றேன் ஹோம் பேசில் முந்திரிச்செடி விலை அதிகமாக இருந்தது வாங்கவில்லை ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

நன்றி தப்பிலி. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள். :)

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

இப்பிடி ஆசைகள் நிறைவேறாமலே மண்டையைப் போட்டு விடுவோமோ என்ற பயம் எனக்கும் உண்டு. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த நாத்து (கன்றுகள்)எங்கு வாங்க முடியும்

நான் பார்த்திருக்கின்றேன் ஹோம் பேசில் முந்திரிச்செடி விலை அதிகமாக இருந்தது வாங்கவில்லை ..

[size=4]Homebase இல் உள்ளது 100 தொடக்கம் 150 பவுண்ட்கள் போகும் (பல வருடத் தாவரம்). அந்த விலைக்கு வாங்கி நட்டாலும் நிறைய இரசாயனங்கள் பாவித்திருப்பார்கள். அதைவிட அவர்கள் சில குறிப்பிட்ட வகை திராட்சைகளையே விற்கிறார்கள். பயிர் வியாபார நிலையங்களில் மலிவு (10 - 20 பவுண்ட்கள்) விலையில் வாங்கலாம். 2 ,3 வருடத்துக் கன்றுகளை விற்கிறார்கள். சிலர் இப்பொழுது விற்கிறார்கள். அல்லது ஆவணி தொடக்கம் கார்த்திகை மாதங்களில் வாங்கலாம். [/size]

[size=4]'வைன்' செய்யும் கொடி முந்திரியைத் தவிர்த்து உ[/size][size=4]ண்ணும் கொடி முந்திரியை ( Dessert grapes ) பார்த்தோம் என்றால் அதிலும் இருவகையுண்டு. [/size]

[size=4]1. கண்ணாடிக் கூண்டுக்குள் (Green house) வளர்பவை. [/size]

[size=4]இவையே அதிகம் Supermarket இல் விற்பனை செய்யப்படுகிறது. [/size]

[size=4] [/size]

[size=4]2. வெளியில் வளர்பவை. [/size]

[size=4]அதிலும் விதையுடன் கூடிய / விதை இல்லாத வகைகளும் உண்டு. [/size]

[size=4]விதையில்லாத (Seedless) கொடிமுந்திரி [/size]

[size=4]பழுப்பதற்கு நீண்ட காலம் (வெப்பம் கூடிய) தே[/size][size=4]வைப்படுவதால் கண்ணாடிக் கூண்டில் வளர்ப்பதே உகந்தது. சில வகை வெளியில் வளர்க்கலாம். அதுவும் வீட்டுச் சுவரின் மேல் (சுவரில் இருந்து வரும் வெப்பத்தைப் பெறுவதற்காக) படர விட்டால் நல்ல பயன் கிடைக்கும். [/size]

[size=4]அந்த வகைகள்.[/size]

[size=4]Lakemont seedless [/size]

[size=4]http://www.grovesnur...ert-10102.aspx[/size]

[size=4]Reliance seedless[/size]

[size=4]http://www.silktree....rapevines.html[/size]

[size=4]http://www.readsnurs...e-Reliance.html[/size]

[size=4]விதையுள்ள கொடிமுந்திரி வகை [/size]

[size=4]இவை வெளித் தோட்டத்தில் வளர்க்கக் கூடியவை. பல வகைகள் இருந்தாலும் இங்கு குறிப்பிடும் வகைகள் மிக இலகுவாக வளரக் கூடியன. [/size]

[size=4]Boskoop Glory [/size]

[size=4]http://www.silktree....rapevines.html[/size]

[size=4]http://www.pomonafru...-grown?cPath=61[/size]

[size=4]Regent [/size]

[size=4]http://www.pomonafru...grown?cPath=61[/size]

[size=4]http://www.crosscomm...regent--/c-990/[/size]

[size=4]Muscat Bleu [/size]

[size=4]http://www.kenmuir.c...&product_id=310[/size]

[size=4]http://www.pomonafru...-grown?cPath=18 [/size]

[size=4]நீங்கள் லண்டனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர் என எடுத்துக் கொண்டே, அதற்கேற்ப குறிப்பிட்டுள்ள திராட்சைகள் வகைகளைக் கூறியுள்ளேன். வேறு இடமென்றால் அதற்கேற்ப முந்திரி வகைகளைத் தருகிறேன். [/size]

[size=4]இட வசதிக்கேற்ப கொடியாகப் படர விடலாம் அல்லது மரம் மாதிரி (Homebase உள்ளது) வளர்க்கலாம். பராமரிப்பென்று பெரிதாக ஒன்றுமில்லை. முக்கியமானது உரிய நேரத்திற்குக் கத்தரிப்பது. இதனை குளிர் காலங்களில் (கிறிஸ்மஸ் இற்குப் பிறகு) செய்ய வேண்டும். ஆரம்ப காலங்களில் இதனை ஒழுங்காகச் செய்ய வேண்டியது அவசியம். கொடிமுந்திரி வளர்க்கப் போகின்றீர்கள் என்றால் அதனைப் பற்றி அறியத் தருகிறேன். [/size]

[size=4] [/size]

[size=4]இங்கு ஒழுங்கான காலநிலை இங்கு இல்லாததால் விதையுடன் கூடிய கொடிமுந்திரி வளர்ப்பது நல்லது. [/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

இனி..

எனக்கு நன்கு பரீட்சையமான இரண்டு தரவைகள்..

முதலாவது கல்லுண்டாய் வெளி.

மற்றது காரைநகரின் வடபகுதியில் உள்ள தரவை. ( சிவப்பு வட்டம் ஈழத்துச் சிதம்பரம்)

இரண்டிலும் மொத்தம் 1000 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பு இருக்கிறது.

kalundai.jpg

karainorth2.jpg

* * தகவலுக்கு நன்றி தப்பிலி. :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வெளிநாட்டு முதலீட்டார்கள் மற்றும் பணம் வெளியேற்றம் என்பது, சாதாரண பொருளாதார பிரச்னை அல்ல. அது பொருளிய கட்டமைப்பு பிரச்சனை.  கொழும்பு பொருளியல் பேராசியரின் பார்வையில்      http://www.ft.lk/columns/Policy-trilemma-poses-formidable-challenges-to-interest-and-exchange-rate-management /4-713226 "Capital outflowsAccording to the IRP theorem, low interest rates and exchange rate rigidity encourage foreign investors to take their capital out of the country. This tendency is evident in Sri Lanka by now. The net amount of foreign investment outflows from Government Treasury Bills and Bonds amounted to $ 553 million in 2020. The total outstanding amount of foreign investment in rupee denominated Government securities remained low at $ 37 million by the end of 2020.Also, there were net outflows from primary and secondary markets of the Colombo Stock Exchange amounting to $ 225 million in 2020, and such outflows are continuing this year as well." வெளிநாட்டு முதலீட்டார்கள் விலத்தும் நேரத்தில்,  credit rating குறைந்து கொண்டு இருக்கும் போது,  பங்கு சந்தை உயர்வது என்பது செயற்கயாகவே உள்ளது.  
  • பெயரை உன்னிப்புடன் படித்து முடித்து விட்டு திரும்பியவன் சுலக்சனுடன் சேர்த்து  இரசாயனவியலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக இருவரும் புத்தகங்களிற்குள் ஒன்றிப்போய்விட்டனர். திடிரென்று அவனுக்குள்  இயற்கை உபாதை எட்டிப்பார்க்க புத்தகத்தின் மேலால்  சுலக்சனை எட்டிப்பார்த்தான், படிக்கிறேன் என்ற பெயரில் கடைவாயில் எச்சில் வடிய சுலக்சனோ நித்திரையாசனத்தில் உடகார்ந்திருந்தான். "பாரு தொரை படிக்கிற அழகை"  என்று மெதுவாக சொல்லிவிட்டு எழுந்து கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், நேரமோ  12:49  மண்டபத்தின் முன்னாலிருக்கும் கத்தா  மரத்தின் அடியில் ஒதுங்கப்போனானவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, இந்த மரத்திற்கடியில் சிறுநீர் வாடை வருகிறது என்று அநேகமாக இரவில் இருந்து படிக்கும் குழுவின் வேலையாக தான் இருக்கும், இப்படியே நீடித்தால் ஆட்களை மெதுவாக நிறுத்திவிடவேண்டியதுதான் என்று அதிபர்  எங்கள்  பகுதித்தலைவரிடம் கண்டித்த விடயம். சரி மெதுவாக கூடைப்பந்து மைதானம் தாண்டி இருக்கும் அடர்ந்த புதர்கள் எதற்குள்ளாவது ஒதுங்கினால்  பிரச்சினையில்லை என்றுவிட்டு, கையில் தனது பேனா டோர்ச்சினை எடுத்துக்கொண்டு கூடைப்பந்து மைதானம் தாண்டி கண்ணில் பட்ட ஒரு புதரின் மேல் வெள்ளத்தை மடை திறந்து பாயவிட்டான். வெள்ளம் பாய்ந்து முடிந்து நிற்கும் தருவாயில் தான் கவனித்தான், அருகே இருக்கும் வேற்று வளவின் மூலையில் இருக்கும் குடவுனிலிருந்து இயந்திரம் ஒன்று வேலை செய்துகொண்டிருக்கும் சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டேயிருந்தது,அந்த சத்தம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானது அது ஒரு ரோனியோ மெஷினின் சத்தம் , மெதுவாக தடுப்பிற்கு மேலே எட்டி பார்த்தான். அங்கே குடவுன் உள்ளே  மங்கலான ஒரு ஒளி வெளிச்சத்தில் மின்குமிழ் ஒன்று எரிந்துகொண்டிருந்தது அந்த ஒளியின் நிழலில் ஒரு மனிதன் நிற்பதுபோன்ற  நிழல் சுவரில் தெறித்துக்கொண்டிருந்தது, மின்குமிழ் காற்றில் ஆடும்போதெல்லாம் அந்த நிழலும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது,  ஒருகணம் விதிர்விதிர்த்து போய்விட்டான் காரணம் இந்த எதுவும் அந்த குடவுனிற்குள் சாத்தியமில்லை, சாதாரணதரம் படிக்கும்போது பலமுறை விவசாய பாடவேளைகளில் விவசாய சிரமதானமென்று இந்த வெற்றுவளவை அவனது முழு வகுப்புமே துப்புரவு செய்திருக்கிறது, அந்த குடவுனுக்கு மின் இணைப்பே கிடையாது, அப்படியிருக்க எப்படி இந்த மின் குமிழ் எரிகிறது, உள்ளே நிற்கும் நபர் யார்  பயத்தில் அடிவயிற்றில் அமிலம் சுரக்க மெதுவாக வந்தவழியே திரும்பினான், மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து சுலக்சன் இருந்த பக்கத்தை நோக்கி தலையை திருப்ப,  அங்கே...சுலக்சன் இல்லை, 1946, ஆம்ஸ்டர்டாம் அம்மா ...அம்மா அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, இந்தாருங்கள் என்று  கத்திகொண்டே சோபியாவிடம் ஓடிவருகிறாள் வில்லியின் அனுப்புத்தங்கை, , கடிதத்தை வாங்கிய சோபியாவும் படிக்க ஆரம்பிக்கிறாள், வழமையான நல விசாரிப்புகளிற்க்கு பின் தான் படிப்பை முடித்து இந்தியாவின் கோவாவிற்கு செல்லும் நான்காவது மிஷனரி  பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டுமாத விடுமுறையில் வீட்டிற்கு வரப்போவதாகவும் எழுதியிருந்தார் வில்லி, ஆறு மாதத்தின் பின் காணப்போகும் தன் மகனை வரவேற்க  தடல் புடலான ஏற்பாடுகளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சோபியா (தொடரும்)                     
  • அம்ஸ்ரடாமும், கிழக்கு மாகாணமும் நன்றாக தொடர்புபடுத்தி எழுதுகிறீர்கள். வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள் .....
  • கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டவுடன் சுகாதார அதிகாரிகள் அந்த இடத்தை முறையாக அறிவிப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, இந்த இடத்தை அடையாளம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.இலங்கையில் கொரோனா வைரஸால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் இணங்காணப்பட்ட இடமொன்றில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/கொரோனா-வைரஸ்-தொற்றினால்-2/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.