Jump to content

திடீர் கார சாண்ட்விச்

Recommended Posts

வணக்கம்,

ஒஸ்திரேலியாவில் குளிர்காலம் என்பது உலகறிந்த செய்தி. அதனால் வரும் துன்பங்கள், அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிந்த செய்தி. பின்ன என்ன?, காலையில் எழுந்து வேலைக்கு போவதே பெரிய கடினமான வேலை, இதில் நேரத்திற்கு சமைப்பதெங்கே, சாப்பிடுவதெங்கே! ஆயினும் சாப்பிடாமல் வேலைக்கு சென்று, அம்மாவிடம் பொய் சொல்ல தெரியாமல் உண்மையை உளறி, பேச்சு வாங்குவதற்கு, எதையாவது சில நிமிடத்தில் சமைத்து உண்பது எவ்வளவோ மேல்!!

பாண்(ரொட்டி) இல்லாத இடம் உலகில் உண்டா?! அதனால் பாணை வைத்து ஒரு காரமான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Sandwich.jpg

தேவையான பொருட்கள்:

பாண் துண்டு 2

வெங்காயம் 1/4

பச்சை மிளகாய் 1/2

மிளகு தூள் 1/4 தேக்கரண்டி

வெண்ணெய்/நெய்/மாஜரின் சிறிதளவு

செய்முறை:

1. இரண்டு பாண் துண்டுகளிலும் சிறிதளவு வெண்ணெய் பூசுங்கள். இரண்டு பக்கத்திற்கும் பூச வேண்டும்.

2. ஒரு பாண் துண்டில், நீள வாக்கில் அரிந்த வெங்காயம், சிறிதாக அரிந்த பச்சைமிளகாய், மிளகுத் தூளை தூவவும். இன்னொரு பாண் துண்டால்ம மூடவும்.

3. ஒரு தட்டையான பாத்திரத்தை சூடாக்கி, தயாரித்த பாணை வைக்கவும்.

4. இரண்டு நிமிடங்களில், பக்கம் மாற்றிவிடவும்.

அம்புட்டு தான்!!

உதவிக்கரம்:

1. அடுப்பின் வெப்பத்தை மிக குறைத்து வையுங்கள். அல்லது "கரி சாண்ட்விச்" தான் கிடைக்கும்.

2. உங்களுக்கு தாங்க கூடிய அளவு காரத்தை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம்.

Sandwich%2BSteps.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க கிட்டதட்ட இதே மாதிரி தான் கொஞ்சம் வித்தியாசமாக செய்வோம்

இரண்டு முட்டை எடுத்து கொஞ்ச உப்பு தூள் போட்டு பாலும் பொஞ்சம் விட்டு அடித்து பாண்துண்டை அந்த கலவைக்குள் போட்டு எடுத்து தோசைக் கல்லில் போட்டு பிரட்டி எடுத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம்

Link to comment
Share on other sites

2. ஒரு பாண் துண்டில், நீள வாக்கில் அரிந்த வெங்காயம், சிறிதாக அரிந்த பச்சைமிளகாய், மிளகுத் தூளை தூவவும். இன்னொரு பாண் துண்டால்ம மூடவும்.

3. ஒரு தட்டையான பாத்திரத்தை சூடாக்கி, தயாரித்த பாணை வைக்கவும்.

4. இரண்டு நிமிடங்களில், பக்கம் மாற்றிவிடவும்.

இதைச் சாப்பிட்டிட்டு அலுவலகத்திற்குப் போகலாமா? :rolleyes:

Link to comment
Share on other sites

உடாங் சம்பல் மாதிரி பின்விளைவுகள் ஒண்டும் வராதுதானே :o

Link to comment
Share on other sites

வெங்காயம் , பச்சைமிளகாய் , மிளகு தூள் கலவை பிழைக்குதே?????????? தூயா ...............

இதைச் சாப்பிட்டிட்டு அலுவலகத்திற்குப் போகலாமா? :rolleyes:

இதுக்குள்ளை படங்கள் வேறை தூக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீர்ச்சாப்பாட்டோடை கன நாளைக்கு பிறகு வந்திருக்கிறியள்.நன்றி தூயா! சந்தோசம் :) எனது பிள்ளைகளும் இப்படியான சாப்பாடுகளையே விரும்பி உண்பார்கள்.

Link to comment
Share on other sites

நாங்க கிட்டதட்ட இதே மாதிரி தான் கொஞ்சம் வித்தியாசமாக செய்வோம்

இரண்டு முட்டை எடுத்து கொஞ்ச உப்பு தூள் போட்டு பாலும் பொஞ்சம் விட்டு அடித்து பாண்துண்டை அந்த கலவைக்குள் போட்டு எடுத்து தோசைக் கல்லில் போட்டு பிரட்டி எடுத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம்

ஆகா எங்க வீட்டிலும் அப்பா இதை தான் செய்து தருவார் :)

இதைச் சாப்பிட்டிட்டு அலுவலகத்திற்குப் போகலாமா? :rolleyes:

போகலாம், ஆனால் பக்கத்தில யாரும் வர மாட்டினம் : கிகிகிகி

அளவோடு சாப்பிட்ட பின்னர், ஒரு துண்டு மின்ற் போதும் ;)))

உடாங் சம்பல் மாதிரி பின்விளைவுகள் ஒண்டும் வராதுதானே :o

ச்சீசி அப்படியெல்லாம் இல்லை..கொஞ்சம் பொறுங்கோ, என்ட அண்ணாக்கு சாப்பிட குடுத்தனாம் ரெண்டு நாளைக்கு முன்னர்..ஆளை காணோம் : கிகிகிகி

வெங்காயம் , பச்சைமிளகாய் , மிளகு தூள் கலவை பிழைக்குதே?????????? தூயா ...............

இதுக்குள்ளை படங்கள் வேறை தூக்கிது.

ஏன் பிழைக்குது?

திடீர்ச்சாப்பாட்டோடை கன நாளைக்கு பிறகு வந்திருக்கிறியள்.நன்றி தூயா! சந்தோசம் :) எனது பிள்ளைகளும் இப்படியான சாப்பாடுகளையே விரும்பி உண்பார்கள்.

:) குளிர்காலத்தில சாப்பிட நல்லாயிருக்கு ... இதை விட்டா இப்போதைக்கு வேற வழியும் இல்லை என்பது தான் உண்மை... :)

Link to comment
Share on other sites

என்ன தூயா இப்ப யாழுக்கு அடிக்கடி வாரது இல்லை, சமையல் குறிப்போடு வந்தால் 2, 3 மாதம் காணாமல் போகிறீர்கள். என்ன நீங்கள் சமைச்ச சாப்பாட்டினைச் சாப்பிட்டதால் எதாவது பிரச்சனையா?. உங்கட ஆத்துக்காரரை நினைச்சாத்தான் பாவமாக இருக்கிறது

கிகிகி அதே தான்..ஒரு தாக்குதலின் பின்னர் மீண்டுவர நாள் எடுக்கிது.. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.