Jump to content

எனக்கு இந்த டீல் மட்டும் பிடிக்கவில்லை


Recommended Posts

"தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" - இது எல்லா முன்னாள் இந்நாள் குழுக்கள் எல்லாத்துக்கும் பொருந்துமா? இல்லைனா "ஒன்றுக்கு" மட்டும் பொருந்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றதே.தமிழீழ விடுதலைக்காக உயர்த்தியாகம் செய்தது என்று. இலட்சியங்களைக் கைவிட்டு, எதிரியோடு விருப்பபட்டுச் சேர்ந்தவர்கள் இதில் அடங்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்...

Link to comment
Share on other sites

தமிழீழத்துக்காக போராட போய்.. ஏன் சாகிறோம் என்று தெரியாமலேயே சக தமிழர்களால் கொல்லப்பட்டவர்கள் மாவீரர்களா? அல்லது துரோகிகளா?

ஏதாவது ஒரு சமயத்திலாவது எதிரியோடு சேராத இயக்கம் எம்மிடையே உள்ளதா? (ஈரோஸ், டி இ எ, தவிர்த்து) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள்பெயரை எப்படி உசச்சரிப்பது?

நான்தான்

நாந்தன்

நந்தன்?????

அடுத்து உங்கள் கேள்வி

தமிழீழ விடுதலைக்காக உயர்த்தியாகம் செய்தது என்பதன் உண்மையான அர்த்தம்

இலட்சியத்திலிருந்து விடுபடாமையாகும்.

அந்த இலட்சியத்துக்காய் கடைசிவரை நின்று தமதுயிரைத்தியாகம் செய்த எல்லோரும் மாவீரர்களே.

அத்துடன் தமிழ்மக்களிடம் நம்பிக்கையையும் நல் ஒழுக்கத்தையும் உடையவரே மாவீரர் என்ற கனமான தகுதிக்குள் தமிழ் மக்களால் அடக்கப்படுவர்.

இப்போ நீங்கள்தான் சொல்லணும் யார்யார் இதற்குள் வருகிறார்கள் என்று.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு துரோகம் இழைக்காத வகையில் எம்மண்ணுக்குக்காக போராடிய அனைவரும் மாவீரர்கள்தான் என்று நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கு துரோகம் இழைக்காத வகையில் எம்மண்ணுக்குக்காக போராடிய அனைவரும் மாவீரர்கள்தான் என்று நான் நம்புகிறேன்.

உண்மை இது தான் எனது கருத்துமாகும்.

அது எந்த இயக்கமாக இருந்தாலும் அமைப்பாக இருந்தாலும் உண்மையாக மண்ணையும்,மக்களையும் நேசித்து துரோகங்களுக்கு விலைபோகாது வீழ்ந்து போன அத்தனை வீரமறவர்களும் மாவீரர்கள் தான்.

தமிழீழம் என்பதுவும் தனி ஒருவருக்கோ, ஒரு அமைப்புக்கு சொந்தமானதல்ல

இந்த தெளிவு இருந்தாலே பாதிபிரச்சனை தீர்ந்துவிடும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்ற இலட்ச்சியத்தை நெஞ்சில் நிறுத்தி இறுதிவரைப்போராடி வீரச்சரவடைந்த போராளிகள் அனைவரும் மாவீரர்களே

Link to comment
Share on other sites

தமிழையும் தமிழ் உணர்வையும் மனதில் ஏந்தி, அதை கடல் கடந்து புலம்பெயர்ந்து சேர்த்தவர்களே மாவீரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு அடுத்த வரிசையில் தமிழீழ விடுதலை இயக்கத்தில்

(TELO )இருந்த பலர் மாவீரர்களாகி இருக்கின்றார்கள்.

அவர்களையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார்.

என்னை பொருத்தமட்டில் எல்லா இயக்கத்திலும் நிறைய மாவீரர்கள் உள்ளார்கள்..ஆனால்

சரியான தலைமைகள் இல்லாமல் (எல்லா இயக்கத்திலும்) எல்லாமே வீணாக போய் விட்டது..

ஆனால் நாங்கள் வென்றவரை மட்டும் போற்றி பாடி பழகி விட்டோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தலமை இருந்தபடியால் தான் விடுதலைப் புலிகளால்

ஈழப்பிரச்சனை உலகெங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

வழிகாட்டல் என்பது எப்போதும் எங்கேயும் மிகமிக முக்கியம்.

Link to comment
Share on other sites

ஈழ பிரச்சினையை எப்போதும் ஒரு சில நாடுகளே கையாண்டு கொண்டு இருக்கின்றன..தங்களது தேவைக்கேற்ப..

இந்தியாவும் இலங்கையும் தான் தங்களுக்கேற்ற மாதிரி தமிழர்களை உருட்டி கொண்டு இருக்கிறார்கள்..

இதில் புலிகளின் பங்கு எங்கே?

புலிகளுக்கு யாரவது நட்பு நாடுகள் உண்டா? புலிகளின் குரலை யாராவது ஒலிப்பது உண்டா?

சிரியா, லிபியா, போராட்ட குழுக்களில் நல்ல தலைமை இருப்பதாக எனக்கு தெரியவில்லை :) :) அவர்களது பிரச்னை தான் உலகிற்கே இப்போது பெரிய பிரச்னை :)

சோமாலியா மாதிரி தான் நாங்களும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இப்போது வென்றார்கள் எனப் போற்றிப் பாடுகின்றோம்? உங்களின் கேள்வியின் அடிப்படை விடுதலைப்புலிகளை மட்டும் ஏன் போற்ற வேண்டும், மற்றய இயக்கங்களை ஏன் தூற்ற வேண்டும் என்பதாகவே தெரிகின்றது. அதை வெளிப்படையாகக் கேளுங்களேன்.

மாற்று இயக்கங்கள் தொடர்பாக, அல்லது அந்த இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகக் களப்பலி ஆனவர்களைப் புலிகள் தூற்றியதாக நான் அறியேன். சிங்களப்படைகளோடு விருப்பத்தோடு சேர்ந்து இயங்குபவர்களைத் தான் பிடிப்பதில்லை.

விடுதலைப்போராட்டம் தோல்வியுற்றதற்காக என்ன வேண்டுமனாலும் பேசலாம் என்பது ஏற்புடையதா என்ன??

Link to comment
Share on other sites

யார் இப்போது வென்றார்கள் எனப் போற்றிப் பாடுகின்றோம்? உங்களின் கேள்வியின் அடிப்படை விடுதலைப்புலிகளை மட்டும் ஏன் போற்ற வேண்டும், மற்றய இயக்கங்களை ஏன் தூற்ற வேண்டும் என்பதாகவே தெரிகின்றது. அதை வெளிப்படையாகக் கேளுங்களேன்.

தூயவன்: நீங்கள் சொன்னது தான் எனது நோக்கமே..

ஆகவே தான் தலைப்பிலேயே சொன்னேன் "அந்த டீல் மட்டும் பிடிக்கவில்லை என்று"

சாதாரண பொது மகனுக்கு போராட போன ஒவ்வொருவருமே மாவீரர் தான்...

Link to comment
Share on other sites

தூயவன்: நீங்கள் சொன்னது தான் எனது நோக்கமே..

ஆகவே தான் தலைப்பிலேயே சொன்னேன் "அந்த டீல் மட்டும் பிடிக்கவில்லை என்று"

சாதாரண பொது மகனுக்கு போராட போன ஒவ்வொருவருமே மாவீரர் தான்...

சாதாரண பொதுமகனுக்காக போராடப்போன அனைவரும் மாவீரர்கள் தான். இல்லை என்று யாழ்கள விதியில் கூறப்பட்டிருக்கா? ஆனாலும் இறுதிவரை தமிழீழ விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களை தான் ஏளனப்படுத்த கூடாது என்று கூறப்பட்டிருக்கு. ஏனென்றால் இது தமிழர்களின் விடுதலைக்காக தம் பங்களிப்பை வழங்கும் ஒரு இணைய தளம்.

"தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்"

இறுதி வரை தமிழனுக்காக அரசாங்கத்திற்கெதிராக போராடி இறந்த அனைவரும் தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்.

இடையில் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டு பின் இறந்தால் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு எதிராக உயிரை நீத்தவர்கள்.

இப்பொழுது புரிகிறதா?

இனியும் உங்களுக்கு அதே டீல் பிடிக்கவில்லையா? பிடிக்கவில்லை என்றால் நீங்களும் தமிழர்களின் விடுதலைக்கு எதிரானவர்.

Link to comment
Share on other sites

துரோகி என்று யார் நிர்ணயிப்பது?

அரசாங்கத்துடன் "ஏன்" கூட்டு சேர வேண்டிவந்தது ?

சிங்கள அரசுக்கு எதிராக தானே எல்லாரும் போராட தொடங்கினார்கள்?

"எனது" வழியில் செல்லாதவன் எல்லாம் "எனக்கு" எதிரியா? அவனை நான் "துரோகி" என்றும் சொல்லலாமா?

"எனக்கு" அந்த "அதிகாரத்தை" யார் தந்தது?

"எனக்கு இந்த டீல் பிடிச்சு இருக்கு" :)

Link to comment
Share on other sites

மாவீரர் நிகழ்வின்

போதும்

, தமிழர்களின் தேசியம் சார்ந்த ஒவ்வொரு நிகழ்வின்

போதும்

நாம் அகவணக்கம் செலுத்தும்

போதும்

தாயக விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த

மாவீரர்களுக்கும்

...................என்ற பதத்துடனேயே ஆரம்பிக்கிறொம்.விடுதலைப்புலிகள்,அமைப்பைச்சேர்ந்த மாவீரர்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கவில்லயே...

Link to comment
Share on other sites

ஈழ பிரச்சினையை எப்போதும் ஒரு சில நாடுகளே கையாண்டு கொண்டு இருக்கின்றன..தங்களது தேவைக்கேற்ப..

இந்தியாவும் இலங்கையும் தான் தங்களுக்கேற்ற மாதிரி தமிழர்களை உருட்டி கொண்டு இருக்கிறார்கள்..

இதில் புலிகளின் பங்கு எங்கே?

புலிகளுக்கு யாரவது நட்பு நாடுகள் உண்டா? புலிகளின் குரலை யாராவது ஒலிப்பது உண்டா?

[size=4]சிரியா, லிபியா, போராட்ட குழுக்களில் நல்ல தலைமை இருப்பதாக எனக்கு தெரியவில்லை :) :) அவர்களது பிரச்னை தான் உலகிற்கே இப்போது பெரிய பிரச்னை :)[/size]

[size=5]சோமாலியா மாதிரி தான் நாங்களும் :)[/size]

புதிய அண்ணா பெரிய ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டுள்ளார். இனி பதில் சொல்லுங்கோவன்.

போங்கோ அண்ணா , போய் வேறை ஏதும் பகிடியள் நிறைய எழுதிற இடம் இருக்கு அந்தப்பக்கம் எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

gajen அண்ணை: தயவு செய்து என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணை..

நான் பிழை செய்துட்டன்..இனிமே சாப்பிடுறதுக்கு தவிர வாய் திறக்க மாட்டன் அண்ணை..

நான் தேசியத்துக்காக உயிர், பிள்ளை, என்ரை வீட்டு நாய் எல்லாத்தையும் தாரன்..

ஆனா சுட்டு மட்டும் போடதங்கோ...

gajan அண்ணை வாழ்க , நான் வாயே திறக்க மாட்டன்..

மன்னிச்சு கொள்ளுங்கோ (கொல்லுங்கோ இல்லை - கொள்ளுங்கோ)

Link to comment
Share on other sites

துரோகி என்று யார் நிர்ணயிப்பது?

அரசாங்கத்துடன் "ஏன்" கூட்டு சேர வேண்டிவந்தது ?

சிங்கள அரசுக்கு எதிராக தானே எல்லாரும் போராட தொடங்கினார்கள்?

"எனது" வழியில் செல்லாதவன் எல்லாம் "எனக்கு" எதிரியா? அவனை நான் "துரோகி" என்றும் சொல்லலாமா?

"எனக்கு" அந்த "அதிகாரத்தை" யார் தந்தது?

"எனக்கு இந்த டீல் பிடிச்சு இருக்கு" :)

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு நபர் இடையில் அவ் இனத்தின் விடுதலைக்கு எதிராக செயற்பட்டால் அவர் துரோகி. இதை நாம் சொல்லவில்லை. உலகமே சொல்கிறது.

தமிழர்கள் மத்தியில் மாவீரர்கள் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது தலைவர் பிரபாகரன் அவர்கள் தான். அவர் தமிழர்களுக்காக போராடி உயிரிழந்த அனைவருக்கும் அந்த பெயரை சூட்டினார். புலிகளுடன் சேராத இயக்கங்களிலும் அரசாங்கத்துடன் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபடாமல் தமிழருக்காக இறுதிவரை போராடி இறந்தவர்களை எவரும் துரோகி என்று சொல்லவில்லை. மாவீரன் என்று தான் சொன்னார். சொல்கிறோம்.

அதே போல் எந்த ஒரு அமைப்பிலும் இல்லாமல் தமிழர்களுக்காக தம் உயிரை தியாகம் செய்தவர்களையும் மாவீரன் என்று தான் அழைக்கிறோம். உதாரணமாக இந்தியாவில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரையும் மாவீரன் முத்து குமார் என்று தான் சொல்கிறோம்.

எனது வழியில் செல்லாதவன் எல்லாம் எதிரி, அவன் துரோகி என்று யார் சொன்னார்கள் என்று முதலில் விளங்கப்படுத்த முடியுமா? தமிழர்கள் போராட்டத்தில் தமிழருக்காக போராடுகிறேன் என்று சொல்லி விட்டு தமிழர்களுக்கெதிராக செயற்பட்டவர்கள் தான் துரோகி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி என்று யார் நிர்ணயிப்பது?

அரசாங்கத்துடன் "ஏன்" கூட்டு சேர வேண்டிவந்தது ?

சிங்கள அரசுக்கு எதிராக தானே எல்லாரும் போராட தொடங்கினார்கள்?

"எனது" வழியில் செல்லாதவன் எல்லாம் "எனக்கு" எதிரியா? அவனை நான் "துரோகி" என்றும் சொல்லலாமா?

"எனக்கு" அந்த "அதிகாரத்தை" யார் தந்தது?

"எனக்கு இந்த டீல் பிடிச்சு இருக்கு" :)

துஒரு விடுதலைக்குப் போராடும் இயக்கத்தைப் பயங்கரவாதி என ஆதிக்க சக்திகள் உருவாக்க முனைந்ததைப் பற்றிப் போய்க் கேளுங்கள். மாற்று எச்சில் கும்பல்கள் விடுதலைக்காகப் போராடியிருந்தால் அதே வழியில் தொடர வேண்டியிருந்திருக்கலாம் தானே? அக்காலத்தில் இந்தியா பாதுகாப்பாக இருந்தது, தப்பிக் கொள்ளப் பல வழிகள் இருந்தன. அதை எல்லாம் விட்டுவிட்டுச் சிங்கள அரசோடு ஏன் எச்சில் நக்க வேண்டும்.குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா 90களில் இந்தியாவில் இருந்து பிரேமதாசாவுடன் விருப்பப்பட்டுத் தான் போய்ச் சேர்ந்து அவர்களோடு இயங்கினார். மக்கள் அரங்கமோ, குரலோ என்று செய்து சிங்கள எடுபிடியானார். பிறகு சந்திரிக்காவின் காலைப் பிடித்துக் கொண்டார். ஆனாலும் இன்றும் மாற்று இயக்கங்களில் இருந்து தமிழீழ விடுதலையை நோக்கிச் சிந்திக்கின்ற பலர் இருக்கின்றார்கள். அவர்களை யாரும் குறை சொல்லவும் போவதில்லை. எங்களுடைய பார்வையில் எவர்கள் துரோகியாக நோக்கின்றோமோ, சிந்திக்கின்றோமோ என்பது எல்லாம் எங்களுக்குரிய உரிமை. அதைப் பற்றிக் கேட்க நீங்கள் யார்??ஈரோஸ் தவிர மற்றய இயக்கங்கள் சிங்கள அரசோடு ஒரு காலத்தில் சேர்ந்தார்கள் என்றீர்கள். புலிகள் இந்தியாவைத் துரத்துவதற்காகச் சேர்ந்ததாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்களைச் சொல்ல வருகின்றீர்கள் போலும். 90களில் ஆயுதங்கள் வாங்கினார்கள். இந்தியாவைத் துரத்தினார்கள். ஆனால் எச் சந்தர்ப்பத்திலும் தங்களுடைய இராணுவ ரகசியங்களையோயோ, ஆயுதங்களைக் கைவிட்டு, தமிழீழுப் போராட்டத்தை, இலட்சியத்தை விட்டு விட்டு பிரேமதாசாவுடன் சேரவில்லை. பிரேமாதாசா நம் பிரச்சனையைப் பேசித் தீர்க்கலாம், 3ம் சக்தி எதற்கு என்ற கேள்விகளோடு தான் பேசப் போனார்களே தவிர, தங்களின் இலட்சியத்தில் இருந்து மாறுபடவில்லை. நீங்கள் யாருக்கு வக்களாத்து வாங்க வந்தீர்கள் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்... எங்களுக்கு

Link to comment
Share on other sites

நான்தான் [நாந்தான்] ஆரம்பிப்பது ஓகே ஆனால் அரிசுவடியிலா........ஒ நந்தலாலா .........................

Link to comment
Share on other sites

நான்தான் [நாந்தான்] ஆரம்பிப்பது ஓகே ஆனால் அரிசுவடியிலா........ஒ நந்தலாலா .........................

:lol: :lol: :lol:

வரும் போதே எப்படிப்பட்டவர் என்று தெரிந்தால் எமக்கும் வசதி தானே? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்தான் [நாந்தான்] ஆரம்பிப்பது ஓகே ஆனால் அரிசுவடியிலா........ஒ நந்தலாலா .........................

எனக்கும் இதுவே வந்தது

ஒரே ரத்தம்.... :icon_idea:

Link to comment
Share on other sites

நான் ஒரு முன்னாள் ***** "employee " :)

company படுத்த உடனே "வேறு" வேலை தொடங்கிட்டேன் :)

மற்றது இங்குள்ள வீர உணர்ச்சிகளை பார்த்து பயந்துட்டன்.. இனிமேல் அடக்கியே (எதை என்று கேக்காதிங்கோ) வாசிக்கிறேன்..

எனக்கு ஏன் தேவையில்லாத வேலை ... என்ரை அலுவலை மட்டும் நான் பார்க்கிறேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.