Jump to content

விடிவா ? எமக்கா?

Recommended Posts

யாழ் இந்து பிக்னிக்கில் கிரிக்கெட் விளையாடி முடிய நண்பர்கள் பார்பிகியூ போட தொடங்கிவிட்டார்கள் .நல்ல வெயில் எனவே கூடாரத்திகுள் எமது முன்னாள் ஆசிரியர்கள் ஏழுபேர் இருக்க அவர்களை சுற்றிவர பலநாடுகளிலும் இருந்து வந்த பழைய மாணவர்கள் சுகம் கேட்டும் ,பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து கொண்டும் இருந்தார்கள்.

நான் வழக்கம் போல் எனது வாயை திறக்கின்றேன்.அனைத்து ஆசிரியர்களை நோக்கி கேட்கின்றேன்,

ஏன் நாம் தொடர்ந்தும் சிங்களவர்களிடம் தோற்கின்றோம்.

முக்கால்வாசிப்பேரின் பதிலும் ஒற்றுமையின்மை என்பதே.பாடசாலை நாட்களே அதிபர் ,ஆசிரியர்கள் ,விளையாட்டு ஆசிரியர்கள் என்று எல்லாம் ஆளுக்கு ஒரு குழு சேர்த்து மற்றவர்கள் காலை வாரிவிடுவதே வேலையாக இருந்ததாக சொன்னார்கள்.பெட்டிசம் கொழும்பு கல்வி திணைக்களம் வர பறக்குமாம்.

ஒரு ஆசிரியர் சொன்னார் ஒருவர் தான் செய்வது பிழை ,அது பாடசாலைக்கும் கூடாது,மாணவர்களுக்கும் கூடாது என்று தெரிந்தாலும் தனது ஆதாயத்திற்கு எதுவும் செய்யும் மனநிலையில் தான் அனேகமானவர்கள் இருந்ததாக சொன்னார் . அதிபரோ ,தன்னை விட அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவரோ எதை செய்தாலும் அதை சரியென ஆமோதிக்கும் அல்லது வாயை மூடி மவுனிக்கும் மனப்பாங்கே எங்கும் காணப்பட்டதாக சொன்னார்கள் .இதேதான் எமது அரசியலிலும் தொடர்ந்தது என்றார்கள் .

நேரடியாக யாரைரையும் குற்றம் சாட்ட எவருக்கும் மனமுமில்லை துணிவும் இல்லை.

அப்போ நான் இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கேட்டேன்.

வவுனியாவில் சிறைக்கைதிகளை மண்வெட்டி பிடியால்தாக்கி காலை முறித்து கொண்டுபோய் மகரத்தில் ஏறிகின்றார்கள்,கேட்க ஒரு நாதியில்லை.சரி அவன்தான் எமது எதிரி எதையும் செய்ய துணிந்து நிற்கின்றான் .

தமிழ்நாடு செங்கல்பட்டில் இவ்வளவு காலமாக ஒரு விசாரணையின்றி எம்மவர்களை கைதியாக அடைத்து வைத்திருக்கின்றார்களே அவர்களை கூடவா விடுதலை செய்ய எம்மால் முடியாமல் இருக்கு .தமிழ் நாடு என்கின்றோம் முதலமைச்சர் ,எதிர்கட்சி தலைவர் ,அத்தனை அரச நிர்வாகிகளும் சிறைக்காவலர்கள் உட்பட ,போலிசும் தமிழர்கள்.அதைவிட சீமான் ,நெடுமாறன் ,வை .கோ வேறு இருக்கின்றார்கள் .இதை கூட செய்ய முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம் ,வேறேன்னத்தை சாதிக்க போகின்றோம் என்று கேட்டேன்.

அப்போ ஒரு பழைய மாணவர் சொன்னார் ,உண்மைதான் ,

யார் அடித்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க ஆளில்லாத ஒரு அனாதையினமாக ஆகிவிட்டோம் என்று ,

நான் கேட்டேன் ,ஆகி விட்டோமா அல்லது ஆக்கி விட்டார்களா என்று .அனைவரும் மௌனம் .

நினைத்தே பார்க்க முடியாதவர்களிலெல்லாம் கையை வைத்தோம்,அது பிழை என்று தெரிந்தும் மவுனமாக இருந்ததற்கு பிரதிபலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

சர்வதேசம் ஏதும் இந்தியா உட்பட மனமிரங்கி எமக்கு உதவி செய்தால் ஒழிய அதுவரை உழக்குபவன் உழக்க நசிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.

சமய ஆசிரியர் சொன்னார் இறந்தவர்கள் ஆவி ஒரு போதும் சிங்களவர்களை சும்மா விடாது என்று .நான் சொன்னேன் சமய ஆசிரியர் என்றதை நிருபிக்கின்றிர்கள் என்று.

அனைவருக்கும் நடந்தது, நடப்பது, சரி எது, பிழை எது எல்லாம் தெரியும் ஆனால் பதில் எல்லாவற்றிற்கும் மவுனம் தான் .

Link to comment
Share on other sites

[size=4]

நான் வழக்கம் போல் எனது வாயை திறக்கின்றேன்.அனைத்து ஆசிரியர்களை நோக்கி கேட்கின்றேன்,

ஏன் நாம் தொடர்ந்தும் சிங்களவர்களிடம் தோற்கின்றோம்.

[/size]

[size=4]வழமை போன்று கேட்பதை நிறுத்திவிட்டு செயலில் உருப்படியாக எதையாவது செய்தால் அடுத்த ஒன்றுகூடலில் கேட்கத்தேவையிருக்காது. [/size]

[size=4]ஆனால் கேட்பது ... சுலபமான வேலை. [/size]

[size=4]கேட்டுக்கொண்டே இருப்பது... அதை கேட்பவர்கள் இருக்கும் வரை கேட்பவர்களும் இருப்பார்கள். [/size]

Link to comment
Share on other sites

உங்களை மாதிரி சிந்திதுத்தான் நானும் செயலில் இறங்கினேன் .

எங்கட ஆட்களே ஆளை ஆள் வெட்டி சாய்க்கவும் அதை சரி என்று தலையாட்டவும் உதுதான் போராட்டம் என்றவும் வேறு ஆட்களை பார்க்கவும் என்று தான் நான் விட்டுவிட்டு ஓடிவந்தேன் .

திரும்ப அ எழுத கேட்பது வியப்பாக இருக்கு .உம்மை நினைக்க பாவமாகவும் இருக்கு .

ஏனெனில் என்னுடன் இருந்தவர்கள் ஒருவர் இப்போ யப்பானில் ,மற்றவர் அவுஸ்திரேலியாவில் ,மற்றவர் இலங்கையில் எல்லோரும் விடுமுறையில் நான் இங்கு சனியும் வேலை .தேவையெனில் பெயரும் தருகின்றேன் .

சரி வாய் சவாடல் வேண்டாம் செயல் வீரர்கள் நீங்கள் இவ்வளவு காலமும் என்னத்தை சாதித்தீர்கள் என்று கூறுங்கள்.

வவுனியாவிலோ அல்லது செங்கல்பட்டிலோ இருக்கும் கைதிகளை உங்களால் எடுக்க முயற்சித்தால் நானும் உங்களுடன் வருகின்றேன் இலங்கை என்றாலும் இந்தியா என்றாலும்

நட்சத்திர விழாவில் நடனமாடுவதுதான் உங்கள் செயற்பாடு என நினைத்தால் என்னை விட்டுவிடுங்கள் .

புலம் பெயர்ந்த பலருக்கு போராட்டமே விளையாட்டு போட்டி வைப்பதும் களியாட்டம் வைப்பதுமே அதில் அவர்கள் பிள்ளைகள் ஆடுவது போனஸ் .

Link to comment
Share on other sites

எம் விடிவிற்காய் 30000 மேலான உறவுகள் போராடி காவியமானதும்.இறுதிவரை களத்தில் நின்று போராடி வீரச்சாவை அடைந்த போராளிகளும், வீரமும், புத்தியுமுள்ள தங்களைப்போல் சிந்தித்து ஓடி ஒழித்து இங்கு வந்திருந்தால் அவர்களும் உயிர் தப்பி உங்களைப்போல் எப்படி எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கலாம். எங்கடை ஆட்களே ஆளை வேட்டிச்சாய்ப்பதை அவர்களும் உங்களைப்போல் பார்த்து சகிக்காமல் ஓடிவந்திருக்கணும். ஆனால் இவர்களுக்கெல்லாம் புலப்படாத ஞானம் .புத்தி உங்களுக்கு மட்டுமே வந்தது என்றால் நீங்கள் எமது இனத்திற்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் சார் ,,,,,,,,,,,,,,,,,,இனியாவது இப்படியான மாகா புத்திசாளித்தனமுள்ள உங்கள் சிந்தனைகளை லேற்றாக சொல்லாமல் ,கொஞ்ச்சம் வேளைக்கு சொல்லுங்கோ துரை.........கோமணத்துடன் இருக்கும் நாம் எல்லாம் அதுவும் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்களை வழங்கும் நீங்கள் எம் இனத்திற்கு கிடைக்க நாம் எல்லாம் என்ன தவம் செய்தோமோ????? :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அண்ணை கேள்வி கேட்டுட்டார்.இனி தமிழீழம் தான்.எப்பிடித்தான் இப்படி கேள்வி கேட்க முடியுதோ?? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் விடிவிற்காய் 30000 மேலான உறவுகள் போராடி காவியமானதும்.இறுதிவரை களத்தில் நின்று போராடி வீரச்சாவை அடைந்த போராளிகளும், வீரமும், புத்தியுமுள்ள தங்களைப்போல் சிந்தித்து ஓடி ஒழித்து இங்கு வந்திருந்தால் அவர்களும் உயிர் தப்பி உங்களைப்போல் எப்படி எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கலாம். எங்கடை ஆட்களே ஆளை வேட்டிச்சாய்ப்பதை அவர்களும் உங்களைப்போல் பார்த்து சகிக்காமல் ஓடிவந்திருக்கணும். ஆனால் இவர்களுக்கெல்லாம் புலப்படாத ஞானம் .புத்தி உங்களுக்கு மட்டுமே வந்தது என்றால் நீங்கள் எமது இனத்திற்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் சார் ,,,,,,,,,,,,,,,,,,இனியாவது இப்படியான மாகா புத்திசாளித்தனமுள்ள உங்கள் சிந்தனைகளை லேற்றாக சொல்லாமல் ,கொஞ்ச்சம் வேளைக்கு சொல்லுங்கோ துரை.........கோமணத்துடன் இருக்கும் நாம் எல்லாம் அதுவும் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்களை வழங்கும் நீங்கள் எம் இனத்திற்கு கிடைக்க நாம் எல்லாம் என்ன தவம் செய்தோமோ????? :icon_mrgreen: :icon_mrgreen:

அர்ஜீன் அண்ணா தன்னாலே முடியாது என்ட படியால் தான் ஊரை விட்டு வந்தார்...தலைவரிட்டையும்,தலைவரோடு நின்ட தளபதிகளிட்டையும் மிகச் சிறந்த வீரமிருந்தது ஆனால் விவேகம் இருக்கவில்லை...என்ன செய்திருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்க வேண்டாம் அது தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கே இருக்கப் போறேன் :) ...மாற்று இயக்கங்களால் தங்களுக்கு ஏதாவது நன்மை வரும் என்று மக்கள் எக் காலத்திலும் எதிர் பார்க்கவில்லை ஆனால் புலிகளை எதிர் பார்த்தார்கள்...அங்கு அவர்களையே நம்பியிருந்த மக்களை கை விட்டது புலிகளின் பிழை என்பது என் கருத்து.

உங்களை மாதிரி சிந்திதுத்தான் நானும் செயலில் இறங்கினேன் .

எங்கட ஆட்களே ஆளை ஆள் வெட்டி சாய்க்கவும் அதை சரி என்று தலையாட்டவும் உதுதான் போராட்டம் என்றவும் வேறு ஆட்களை பார்க்கவும் என்று தான் நான் விட்டுவிட்டு ஓடிவந்தேன் .

திரும்ப அ எழுத கேட்பது வியப்பாக இருக்கு .உம்மை நினைக்க பாவமாகவும் இருக்கு .

ஏனெனில் என்னுடன் இருந்தவர்கள் ஒருவர் இப்போ யப்பானில் ,மற்றவர் அவுஸ்திரேலியாவில் ,மற்றவர் இலங்கையில் எல்லோரும் விடுமுறையில் நான் இங்கு சனியும் வேலை .தேவையெனில் பெயரும் தருகின்றேன் .

சரி வாய் சவாடல் வேண்டாம் செயல் வீரர்கள் நீங்கள் இவ்வளவு காலமும் என்னத்தை சாதித்தீர்கள் என்று கூறுங்கள்.

வவுனியாவிலோ அல்லது செங்கல்பட்டிலோ இருக்கும் கைதிகளை உங்களால் எடுக்க முயற்சித்தால் நானும் உங்களுடன் வருகின்றேன் இலங்கை என்றாலும் இந்தியா என்றாலும்

நட்சத்திர விழாவில் நடனமாடுவதுதான் உங்கள் செயற்பாடு என நினைத்தால் என்னை விட்டுவிடுங்கள் .

புலம் பெயர்ந்த பலருக்கு போராட்டமே விளையாட்டு போட்டி வைப்பதும் களியாட்டம் வைப்பதுமே அதில் அவர்கள் பிள்ளைகள் ஆடுவது போனஸ் .

இந்தக் கருத்தை அவர் எழுதினதில் என்ன பிழை? யார் எழுதியிருக்கிறார்கள் என பார்க்க வேண்டாம் அதில் என்ன எழுதியிருக்குது எனப் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறியது போல உங்கள் கேள்வி வருகின்றது.

ஆகிவிட்டோம் என்பது சரி.(அதற்குப் பல காரணங்கள்) ஆக்கிவிட்டார்கள் என்பது பிழை.(அதற்கு உங்களுக்கு ஒரே ஒரு காரணம் புலிகள்)

முயற்சி செய்பவனுக்குத் தான் உயர்ச்சி கிடைக்கும்.

அது இன்றல்லாவிட்டாலும் இன்னொரு நாள் கிடைத்தே தீரும்.

Link to comment
Share on other sites

அர்ஜீன் அண்ணா தன்னாலே முடியாது என்ட படியால் தான் ஊரை விட்டு வந்தார்...தலைவரிட்டையும்,தலைவரோடு நின்ட தளபதிகளிட்டையும் மிகச் சிறந்த வீரமிருந்தது ஆனால் விவேகம் இருக்கவில்லை...என்ன செய்திருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்க வேண்டாம் அது தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கே இருக்கப் போறேன் :) ...மாற்று இயக்கங்களால் தங்களுக்கு ஏதாவது நன்மை வரும் என்று மக்கள் எக் காலத்திலும் எதிர் பார்க்கவில்லை ஆனால் புலிகளை எதிர் பார்த்தார்கள்...அங்கு அவர்களையே நம்பியிருந்த மக்களை கை விட்டது புலிகளின் பிழை என்பது என் கருத்து.

இந்தக் கருத்தை அவர் எழுதினதில் என்ன பிழை? யார் எழுதியிருக்கிறார்கள் என பார்க்க வேண்டாம் அதில் என்ன எழுதியிருக்குது எனப் பாருங்கள்

உலகின் உரிமைக்காக போராடிய ,போராடிக்கொண்டிருக்கின்ற மக்களின் சரித்திரங்களை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போமானால்.......ஒரு விடுதலையை அடைவது எவ்வளவு சிரமமான செயல் என்பதை நாம் பார்க்கலாம். எவ்வளவோ, இழப்புகள்,எவ்வளவோ துயரங்கள்,ஏமாற்றங்கள்,மாறாக.தோல்விகள் . இவற்றினூடாக அந்த விடுதலைப்பயனங்கள் தொடரவில்லையா? இந்த இழப்புக்களையும், தோல்விகளையும் கண்டு அந்த மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஒதுங்கியிருந்தார்களா ............மாறாக புதிய புதிய வடிவம் பெற்று அவர்களுடைய போராட்டங்கள் பல சந்ததிகளை தொட்டு இறுதியில் விடுதலை பெறவில்லையா........

இங்கே விடுதலைப்புலிகள் என்னும் விடுதலை அமைப்பும் தம் விடுதலைக்காக,விடுதலையின் தேவையை உணர்ந்த ஒரு மக்கள் தொகுதியினர்க்காக போராடிய, போராடிக்கொண்டிருக்கிற அமைப்பே . மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஓர் எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களும் இன்று மாற்று இயக்கங்கலைபோல் லௌகீக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். சரி ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்டபின்.அல்லது சிலர் கூறுவது போல் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்று வரை ஏன் மக்களாகிய நாம் இந்த விடுதலைப்பாதையூடாக பயணிக்க நினைக்கிறோம்.....இங்கே மக்களாகிய நாமே விடுதலைப்புலிகள் என்ற வடிவத்தில் போராடினோம்.எம் ஆயுதப்போராட்டம் முடக்கப்படு [சூழ்ச்சியால்,வஞ்ச்சகத்தால்] விட்டதால் நாம் எம் விடுதலைக்கான பயணத்தை வேறு வழியில் தொடர்கிறோம்.......

தொடர்வோம்...... அனைவரும் ஒன்றுபட்டு ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலின் பின்னர் தேசியத்திற்கு ஆதரவான பலரே[புலி ஆதரவு] பல குழுக்களாக சிதறுண்டு இருக்கிறார்கள் முதலில் அவர்களை ஒன்று சேர சொல்லுங்கோ பிறகு மாற்று கட்சியில் நின்டவர்களை ஒன்று சேர்க்க முயற்சிப்போம் :icon_idea:

தேசியத்தின் மேல் உண்மையான பற்றுக்கொண்டவர்கள் எக்கணத்திலும் மாறமாட்டார்கள்.

தேசியத்தின் மேல் பற்றுகொண்டவர்கள் போல் நடித்தவர்களே இன்று மாறி தம் சுய வடிவத்தை காட்டி நிற்கின்றனர்...............இவர்களை அப்பவும்சரி,இப்பவும்சரி,எப்பவும்சரி மாற்றமுடியாது. அவர்களே உணர்ந்தால் ஒழிய.....................இவர்களை ஒன்று சேரசொல்லுங்கோ என்று எனக்குமட்டும் சொல்லாதேயுங்கோ நீங்களும் முயற்சித்துப்பார்க்கலாமே .... நான் மட்டுமா விடுதலை,தேசியத்தின் மேல் பற்றுகொண்டவன்.............அப்போ நீங்கள் எல்லாம் யாரு,............ உங்களுக்கு விடுதலை தேவையில்லையா............... :icon_idea:

Link to comment
Share on other sites

போராட்டம் என்னும் போது எதிரியும் இருப்பான், சேர்ந்து நின்று காட்டிக்கொடுப்பவனும் இருப்பான், பிரிவினைகளும் இருக்கும். அது எதுவும் இல்லாமல் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் முடியாது. ஆனால் மற்றைய இனத்தவருடன் ஒப்பிடுகையில் தமிழர்களிடையே ஒற்றுமை குறைவு என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

அப்போ ஒரு பழைய மாணவர் சொன்னார் ,உண்மைதான் ,

யார் அடித்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க ஆளில்லாத ஒரு அனாதையினமாக ஆகிவிட்டோம் என்று ,

நான் கேட்டேன் ,ஆகி விட்டோமா அல்லது ஆக்கி விட்டார்களா என்று .அனைவரும் மௌனம் .

இது எதற்கு? அப்ப புலிகள் தோற்றம்பெற முன்னர் யார் அடித்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க கூடிய மாதிரி இருந்ததா? அப்படி இருந்திருந்தால் புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள்?

இலங்கை முழுவதும் இப்பொழுது இராணுவ ஆட்சி நடக்கிறது. வவுனியா உட்பட. விடுதலைப்புலிகள் இப்பொழுதும் ஆயுத வலிமையுடன் இருந்திருந்தால் அவர்களை போராடி மீட்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள். நாங்கள் பொதுமக்கள். நாங்கள் சொல்லி இந்த அரசாங்கம் கேட்கும் என்று நினைக்கிறீர்களா?

அது சரி எங்களையும் புலிகளையும் குற்றம் சாட்டுகிறீர்களே. ஏனைய பல இயக்கங்கள் (முக்கியமாக ஈ.பி.டி.பி) இவ்வளவு காலமும் இராணுவத்துடன் ஒட்டி ஒட்டுக்குழு வேலையை தானே செய்தார்கள். அவர்கள் இன்றும் இராணுவத்துடன் தானே உள்ளார்கள். அவர்களால் ஏன் அரசாங்கத்திடம் சொல்லி கைதிகளை வெளியேற்ற முடியாமல் இருக்காம்? தனிய மக்களை காட்டிக்கொடுக்கவும், வெள்ளைவானில் மக்களை கடத்தவும், யாழ் கொழும்பு விமான ஒழுங்குகளை செய்து கொடுக்கவும் தான் அவர்களால் முடியுமோ?

இப்பொழுதாவது புரிகிறதா மக்கள் ஏன் விடுதலைப்புலிகளை நேசித்தார்கள் என்று?

எங்கும் அரசியல் புகுந்து விட்ட பின் இந்தியா மட்டும் விதிவிலக்கா? அங்கும் மக்களின் குரல் அடக்கப்பட்டு விட்டது. அரசியல் வாதிகளால் ஜெயிலுக்கு போய்வருவது இலகுவே தவிர அங்குள்ள மக்களை விடுவிப்பது என்பது கடினமான விடயம். அந்த நிலையில் தமிழகமும் மாறிவிட்டது. ஒரு சிலர் கோரிக்கை வைத்தாலும் அவை கவனிப்பாரற்று கிடக்கிறது.

சர்வதேசமும் இந்தியாவும் மனமிரங்கி உதவி செய்யும் என்று இன்னும் நம்பிக்கொண்டிருந்தால் இருக்கிற உயிர்களும் ஜெயிலுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் போக வேண்டியிருக்கும். அவர்கள் மனமிரங்கி உதவி செய்ய மாட்டார்கள். அவர்கள் எமக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் அதற்கான அழுத்தங்களை அவர்கள் மேல் நாம் தான் பிரயோகிக்க வேண்டும். அந்த நடவடிக்கை எதிலும் பங்கு பெறாமல் விடிவா? எமக்கா? என்று கதைப்பதில் பிரயோசனமில்லை.

Link to comment
Share on other sites

அர்ஜீன் அண்ணா தன்னாலே முடியாது என்ட படியால் தான் ஊரை விட்டு வந்தார்...தலைவரிட்டையும்,தலைவரோடு நின்ட தளபதிகளிட்டையும் மிகச் சிறந்த வீரமிருந்தது ஆனால் விவேகம் இருக்கவில்லை...என்ன செய்திருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்க வேண்டாம் அது தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கே இருக்கப் போறேன் :) ...மாற்று இயக்கங்களால் தங்களுக்கு ஏதாவது நன்மை வரும் என்று மக்கள் எக் காலத்திலும் எதிர் பார்க்கவில்லை ஆனால் புலிகளை எதிர் பார்த்தார்கள்...அங்கு அவர்களையே நம்பியிருந்த மக்களை கை விட்டது புலிகளின் பிழை என்பது என் கருத்து.

ஒரு போராட்டத்தில் வெற்றி தோல்வி என்பது அவர்களால் நிர்ணயிக்கப்பட முடியாதது. தோல்வியடைந்தால் அவர்கள் மக்களை கைவிட்டிட்டார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கைவிட்டது புலிகள் என்று சொல்லாதையுங்கோ. அனைவரையும் விட்டிட்டு தப்பி ஓடியிருந்தால் அவர்கள் கைவிட்டிட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் தாமும் சேர்ந்து அழிந்தார்கள்.

புலிகள் இறுதிவரை மக்களை ஒருபகுதிக்குள் வைத்திருந்தது பிழை தான். முன்னைய போராட்டங்கள் போல் முதலே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதற்காக அவர்கள் ஏமாற்றவில்லை. சர்வதேசம் இடையில் தலையிடும் என்று நினைத்து தான் முதலே வெளியேற்றவில்லை. ஆனால் இடையிலேயே வெளியேறின மக்கள் பலரும் தாங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததை விட புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து செத்திருக்கலாம் என்று கூறி அழுததை bbc செய்தியில் கேட்டேன். நீங்களும் சிலவேளை கேட்டிருப்பீர்கள்.

இந்தக் கருத்தை அவர் எழுதினதில் என்ன பிழை? யார் எழுதியிருக்கிறார்கள் என பார்க்க வேண்டாம் அதில் என்ன எழுதியிருக்குது எனப் பாருங்கள்

இவ்வளவு காலமும் என்னத்தை சாதித்தோம் என்று கேட்டு அதன் பின் தான் எதிலும் பங்குபற்றுவோம் என்று சொல்லாமல் இனி என்னென்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான நடவடிக்கைகளில் பங்குபற்ற வேண்டும். அது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் நீங்கள் தான் அர்ஜீன் அண்ணாவைப் பார்த்து நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று கேட்டனீங்கள் அதற்குத் தான் நான் முதலில் தேசியவாதிகள் எல்லோரும் முதலில் ஒன்று படுங்கோ மாற்றுக் கருத்துக்கார‌ரை பிறகு சேர்க்கலாம் என்று சொன்னேன் அதற்கு நீங்கள் உண்மையானவர்கள் ஒன்றுபட்டு தான் நிற்கின்றனர் என்றீர்கள் ஆனால் உங்களாலும்,உங்களைப் போன்றவர்களாலும் இன்னும் முகாமில் இருப்பவர்களை கூட‌ எடுத்து விட‌ முடியவில்லை.

எனக்கு முள்ளி வாய்க்கலுக்குப் பின்னர் எங்களுக்கு ஒரு நாடு கிடைக்கும் என்ட‌ நம்பிக்கை போயிட்டுது அப்படி கிடைக்க வேண்டும் என்டால் இன்னொரு பிர‌பாகர‌ன் பிறக்க வேண்டும் அல்லது ஈழத்தில் எண்ணெய் எதாவது இருந்தால் அதுக்காவது ஏதாவது உலக நாடு பாவப்பட்டு பிச்சை போட‌ வேண்டும் அதை விடுத்து நாங்கள் ஒன்று படுவோம்,போராடுவோம் என்பதெல்லாம் வாய்ப் பேச்சில் இருக்குதே தவிர‌ செயல் வடிவம் ஒருவரும் கொடுக்க மாட்டோம்.

வன்னியில் உள்ளவர்களுக்கு காசு அனுப்புகிறோம்,அவர்கள் வாழ்வாதர‌த்திற்கு உதவுகிறோம் என்பதெல்லாம் மீட்டுப் பணி அது போராட்டமில்லை அதைக் கூட‌ எங்களால் இவ்வளவு காலத்திற்குள் செய்து முடிக்க முடியவில்லை

Link to comment
Share on other sites

போராட போன இயக்கங்கள் அனைத்திலுமே விமர்சனம் இருந்தாலும் மற்ற இயக்கங்களின் ஆயுள் மூன்று வருடங்களுக்குள் முடிந்துவிட்டது.பின்னர் அவை பேருக்கு மட்டும் இருந்தன,அதுவும் அரசுடன் ஒட்டி கொண்டு.அதன் பின் அவர்களை விடுதலை இயக்கங்களாக பார்ப்பதே தவறு .கடைசி இருபது வருடங்களுக்கு மேலாக தமிழனின் விடுதலை புலிகளின் கையில் மட்டுமே தங்கியிருந்தது என்பதே உண்மை .

வாத்தியார், புலிகள் செய்த நல்ல விடயங்கள்,போர்வெற்றிகள்,தியாகங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.அதைவிட முக்கியமாக உலகெங்கும் ஒரு பெரும் சர்வதேச கட்டமைப்பை கட்டியதும், தமிழ்நாட்டில் தமிழ் உணர்வுள்ள ஒரு பெரும் இயக்கத்திற்கே அடித்தளம் இட்டதும் மறைக்க முடியாத உண்மைகள்.

இதன் பலாபலனாக இன்று உலகெங்கும் புலிகளை மையமாக வைத்தே ஏறக்குறைய அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.தமிழ் நாட்டில் கூட பிரபாகரன் என்ற பெயரே பல விடயங்களை தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது.

இலங்கையில் தமிழன் தனது உரிமைக்காக போராட புறப்பட்டதன் பின்னணியில் தான் இவை அனைத்தும் நடந்தது.ஆனால் எதற்காக நாம் போராட தொடங்கினோமோ அது எத்தனை வீதம் வெற்றி பெற்றுள்ளது.எமது மக்களுக்கான விடிவில் எவ்வளவு தூரம் இன்று வந்திருக்கின்றோம். நாம் போராட்டத்தை ஏன் தொடங்கினோமோ அதைத்தவிர அனைத்தும் மிக நன்றாக நடந்திருக்கின்றன.

இன்று எம்மை எதுவுமே செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு புலிகளின் போராட்டம் எம்மை தள்ளிவிட்டிருக்கின்றது .சிறைசாலையில் அடித்தே கொல்லுகின்றான்,செங்கல்பட்டில் எதுவித விசாரணையுமில்லாமல் அடைத்து வைத்திருக்கின்றார்கள்.எங்களால் அவர்களுக்கு என்னவும் செய்ய முடிகின்றதா?பிரபாகரனையே சிறையால் தப்பி ஓட விட்ட தமிழ் நாட்டில் தான் இன்று இந்த நிலை.மட்டக்களப்பில் சிறையுடைத்த எங்களுக்குத்தான் இன்று இந்த நிலை.

புலம் பெயர்ந்த நாடுகளில் புலிக்கொடிஏற்றி விளையாட்டுபோட்டி வைப்பதும் ,நட்சத்திரதிருவிழா வைப்பதுயும் தான் நீங்கள் தேடிய தீர்வு என்றால் புலிகள் வெற்றிதான் பெற்றிருக்கின்றார்கள் .

புலிகள் தான் இப்போ இல்லையே இந்த மூன்று வருடங்களும் நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்கும் மேதாவிகளுக்கு ,சர்வதேசத்தில் தமிழனுக்கு CREDIBILITY என்ற ஒன்றையே இல்லாமல் செய்துவிட்டார்கள் அதை நிவர்த்தி செய்யத்தான் இப்போ எல்லோரும் திரும்ப திரும்ப அகிம்சை அகிம்சை என்று கத்துகின்றார்கள்.(தனிப்பட்ட ஒருவருக்கே CREDIT SCORE பழுதடைந்தால் நிவர்த்தி செய்ய எவ்வளவு கஷ்டம் என்று தெரியும் )

டக்கிளசின் நிலை பற்றி அவரின் நண்பருடன் கதைத்ததை பின்னர் பதிகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பல உண்மைகள்

நன்றி ஐயா

பச்சை இருப்பிலில்லை.

Link to comment
Share on other sites

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. தமிழீத்தைப் போராடித்தான் பெறவேண்டுமென்பதில்லை. அதற்கான வேறு வழிவகைகளும் உண்டு. எமது வாழ்நாளுக்குள்ளேயே தமிழீழம் கிடைப்பது மட்டும் உறுதி. கரும்புலி நாளாகிய இன்று அந்த உறுதியை மட்டுமே என்னால் இப்போது தரமுடியும். மேற்கொண்டு வேறு கருத்துக்கள் கூற விரும்பவில்லை.

உண்மைம தமிழிச்சி

எல்லோரும்ஏதோ ஒரு வகையில் கரும்புலி வீரரின் கனவுக்காய் உழைப்போம்.

அவர்களது தியாகமும் உங்களது உழைப்பும் ஒரு நாளும் வீண் போகாது.

தர்மம் வெல்லும்.

இதை வெறும் வேசமாகத்தான் பார்க்க முடியும்.

௯௯௯ கருத்துக்களை தன்னலமற்று தமது உயிரையே தமது இனத்திற்காக அர்ப்பணித்த போராளிகள் மேல் சேறு அடிப்பதற்காக பதிந்துவிட்டு. வெறும் ஒரு கருத்தை யாரும் பெண்கள் வந்து வதிவிட்டால் ஐயோ கொய்யோ நான் அவனில்லை என்று போடும் வேசமாகதான் இது இருக்கிறது. முப்பது வருடம் போர் நடக்கின்றது...........

ஏன் எதற்கு என்று கேட்க நாதியில்லை

உமா மகேஸ்வரனுக்கு பல்லக்கு தூக்கி சும்மா இருந்தவனையும் உசுப்பேத்தி விட்டவர்கள் இவர்கள். புலிகளில் இருந்து ஏன் பிரிந்தாய்? அதில் ஏதும் நிஜாயம் இருக்கிறதா? ஏன் ஐந்து ஆறு போராட்ட குழுக்கள்? எல்லாமும் ஒன்றை இணைய முயற்சி செய்யும் நல்ல செயலை ஏன் குழப்பி அடிக்கிறாய்? சிங்கள இராணுவத்தை அடிப்பது பற்றி எதையும் பேசுகிறாய் இல்லை புலிகள் பற்றி விஷம் பருக்குவதிலேயே ஏன் குறியாய் இருக்கிறாய்? இந்த கேள்விகள் எதுவும் அற்று சகோதர படுகொலைகளை அரங்கேற்றி ஒருவரை ஒருவர் பிடித்து கொல்லும் நிலை அளவு கடந்து மக்களிடம் கொள்ளை அடித்தல் யார் ஏன் என்பது முடிவில்லாத நிலையில்தான். இயக்கங்களை தடை செய்யும் நிலைக்கு புலிகள் போனார்கள். (கோவில்கள் கொளுத்த பணக்காரரிடம் கப்பம் வேண்டுதல் என்பதை புலிகளும் செய்தார்கள் அவை போராட்ட வளர்சிக்கே செய்தார்கள். எமக்கு தெரியவே தமது சொந்த தேவைக்கு பிற இயக்க உறுப்பினர்கள் களவு செய்தார்கள் இரண்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை ஆறாம் அறிவுடன்தான் பகுத்து பார்க்கலாம் அது இல்லாதவர்கொளோடு அதை பற்றி பேசுவதை திறப்பதே நல்லம்.)

இந்த கூத்துக்களை எல்லாம் நீங்கள் ஆடிய போது வெளி உலகம் தெரியாது கருவில் இருந்த குழந்தைகளாலேயே பின்னாளில் இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது. நாதாரி சிங்களவனின் ஒரு முகாமை தகர்பதட்கு வேவு புலி என்ற பெயரோடு பதினேழு பதினெட்டு வயது ஆண் பெண் போராளிகள் முள் வேலிக்குள்ளும் மிதிவெடிக்குள்ளும் சிக்கி சிதறி சிதையுண்டு போகும்போதெல்லாம். என்றோ நடந்து முடிந்த விடயங்களை நஞ்சுகலாக்கி உமா மகேஸ்வரனுக்கு இன்னமும் நன்றியோடு இருக்கிறோம் என்பதை காட்டுவதை தவிர வேறு எந்த நலனுக்காக புலிகள் மேல் சேறு அடிக்கிறோம் என்று. இந்த எதுவுமே அறியாதா தன்னலமற்ற போராளிகள் மேல் சேற அடித்தீர்கள் ?

இவர்கள் பள்ளிக்கு போகவில்லை படிக்கவில்லை என்று தமிழன் எழுதமுடியாது. ஆனால் உங்களால் எளிதாக இவை முடிகின்றதே?

முள்ளி வாய்க்காலில் என்ன நடந்தது என்று சர்வதேச அரசியல் அறிந்த அறிஞராக தங்களை தாங்களே புகழும் புளுகருக்கு புரியாதா?

உலகமயமாதலின் உச்சத்து பண பிரியரின் வலைக்குள்ளே எமது போராட்டம் சிக்கியது ஏன் தெரியவில்லை? யாசீர் அரபாத்தின் இறுதிநாட்கள் ஏன் நினைவில் இல்லை? இன்னமும் பத்துவருடங்கள் இந்த போரை இழுத்திருக்க யாசீர் அரபத்தாலும் முடிந்திருக்கும் அது பிரபாகரனாலும் முடிந்திருக்கும். அதை தாங்கும் சக்தி இரண்டு பூமியிலும் இருக்கவில்லை என்ற உண்மை ஏன் தெரியவில்லை? சர்வதேச சதிகுள்ளே சிக்குண்டு போன போர்களின் வரிசை ஏன் நினைவில் இல்லை. புளட்டின் பழைய புத்தகங்களில் படித்தவை எமக்கு இப்போதும் நினைவிருக்கு கூடி நின்று அச்சிட்ட உங்களுக்கு நினைவில்லை?

இதையெல்லாம் கடந்து பொறிக்கிதனமாக எழுதும் முள்ளி வாய்க்கால் முடிவு மிகவும் சந்தோசமானது என்ற வாந்திகள் எழுத இப்படியான சில வாக்கியங்கள் தேவை என்பதுதான் எனது நிலைப்பாடு.

என்னதான் தமிழனை கொல்ல சிங்களவன் ஆசைபட்டாலும் இரண்டொரு பேருக்கு கசப்புடன் கம்பளம் விரிக்க வேண்டிய தேவை அவனுக்கும் இருக்கிறதுதானே.

முள்ளி வாய்க்கால் உங்களுக்கு மகிழ்ச்சியோ? இல்லையோ?

[size=5]"புலிகளின் முடிவு என்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே............."[/size]

தனலமற்ற நல்ல தமிழ் பிள்ளைகளை தண்ணிக்குள் எண்ணையை ஊத்தி பிரித்து எடுத்து சாவடிப்பதட்குதான் இந்த போராட்டம் உதவியது. சுயல செமரிகளும் சாதி வெறியர்களும் எதையோ படித்துவிட்டோம் என்று மாஜயாலம் காட்டும் யாழ்ப்பாண அடக்குமுறை சமூகமும் இதில் தொன்று தொட்டு குளிர் காய்ந்தே வந்துள்ளது. (கடந்த கிழமை இங்கே ஒரு செய்தி படித்தேன் யாழ்ப்பாண இளைஞர்கள் வன்னியில் பெண்களுடன் பாலியல் சேட்டை. இதுவே அதற்கு ஆதாரம்)

அதிலும் விட முக்கியமானது சொந்த இனத்தை காட்டிகொடுத்து பிழைப்பு நடாத்தும் துரோக கூட்டம். இனி சிங்களவன் தமிழன் என்று பார்த்துதான் அடிப்பான் புலி என்று பார்த்து ஆக கூடி இன்னும் ஒரு ஐந்து வருடம் அடித்தான் இல்லை.

999 வாந்தி கருத்தை வாழ வைக்க ஒரு வேச கருத்து.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் நீங்கள் தான் அர்ஜீன் அண்ணாவைப் பார்த்து நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று கேட்டனீங்கள் அதற்குத் தான் நான் முதலில் தேசியவாதிகள் எல்லோரும் முதலில் ஒன்று படுங்கோ மாற்றுக் கருத்துக்கார‌ரை பிறகு சேர்க்கலாம் என்று சொன்னேன் அதற்கு நீங்கள் உண்மையானவர்கள் ஒன்றுபட்டு தான் நிற்கின்றனர் என்றீர்கள் ஆனால் உங்களாலும்,உங்களைப் போன்றவர்களாலும் இன்னும் முகாமில் இருப்பவர்களை கூட‌ எடுத்து விட‌ முடியவில்லை.

எவரும் எவரையும் முகாமில் இருந்து எடுத்து விடவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்? நான் எடுத்து விடவில்லை. ஆனால் அப்படி முகாமிலுள்ளவர்களை பணம் கட்டி வெளியே எடுத்து விட்டவர்களை எனக்கு தெரியும்.

அனைவரையும் எடுத்து விடும் சூழ்நிலை இல்லை தான். அதற்காக நாம் வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தை கைவிட வேண்டுமா? 2009 ஆம் ஆண்டு சண்டை முடிந்ததும் அரசாங்கத்தை புகழ்ந்த உலக நாடுகள் இன்று அவர்கள் மேல் குற்றச்சாட்டு வைக்குமளவுக்கு என்றாலும் முன்னேறியிருக்கிறோம் தானே?

இப்படி ஆளுக்காள் நாடு கிடைக்காது, நான் போராட மாட்டன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி ஒற்றுமை கிடைக்கும்? இன்று எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம் என்பதற்காக நாளையும் எதுவும் செய்ய முடியாத நிலை தான் இருக்கும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. தமிழீத்தைப் போராடித்தான் பெறவேண்டுமென்பதில்லை. அதற்கான வேறு வழிவகைகளும் உண்டு. எமது வாழ்நாளுக்குள்ளேயே தமிழீழம் கிடைப்பது மட்டும் உறுதி. கரும்புலி நாளாகிய இன்று அந்த உறுதியை மட்டுமே என்னால் இப்போது தரமுடியும். மேற்கொண்டு வேறு கருத்துக்கள் கூற விரும்பவில்லை.

அக்கா உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். யாழில் மட்டுமல்ல, தனிப்பட்ட வழியிலும். நாமும் முடிந்ததை செய்வோம். இடைக்கிட தான் உங்களை யாழில் பார்த்திருக்கிறேன். ஆனாலும் தமிழீழத்தில் நீங்கள் கொண்ட அக்கறையை அவதானித்திருக்கிறேன். தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

- நீக்கப்பட்டுள்ளது -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி Maruthankerny,

உங்ககளது கருத்துக்களை ஏற்கின்றேன்

அதில் தப்பு என்று சொல்ல ஏதுமில்லை

ஆனால் முதன் முதலாக அர்யூன் பலவற்றை ஏற்று இறங்கி வந்துள்ளார்

இனியும் பழையவற்றை கிளறி நாம் அவரை தள்ளி வைப்பது எமது மக்களுக்கே தீமை தரும்.

மக்கள் நலன் கருருதி கூட்டமைப்பை தலைவர் உருவாக்கவில்லையா?

சிவராமை ஏற்கவில்லையா?

இசுலாமிய கட்சிகளோடு இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கவில்லையா?

பழையதை மறப்போம்

மக்களுக்கு நன்மை தருமாயின் அவற்றிற்கே முதலிடம்.

அந்த மக்கள் சிங்களவனின் காலை நக்கும் நிலையில் நாம் பழையதை கிளறி நேரத்தை செலவளளிப்பது என்னவோ செய்கிறது

குற்றமெனின் மன்னித்தருள்க. எனக்கு நீங்களும் வேண்டும். வேண்டும். வேண்டும்.

Link to comment
Share on other sites

போராட போன இயக்கங்கள் அனைத்திலுமே விமர்சனம் இருந்தாலும் மற்ற இயக்கங்களின் ஆயுள் மூன்று வருடங்களுக்குள் முடிந்துவிட்டது.பின்னர் அவை பேருக்கு மட்டும் இருந்தன,அதுவும் அரசுடன் ஒட்டி கொண்டு.அதன் பின் அவர்களை விடுதலை இயக்கங்களாக பார்ப்பதே தவறு .கடைசி இருபது வருடங்களுக்கு மேலாக தமிழனின் விடுதலை புலிகளின் கையில் மட்டுமே தங்கியிருந்தது என்பதே உண்மை .

வாத்தியார், புலிகள் செய்த நல்ல விடயங்கள்,போர்வெற்றிகள்,தியாகங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.அதைவிட முக்கியமாக உலகெங்கும் ஒரு பெரும் சர்வதேச கட்டமைப்பை கட்டியதும், தமிழ்நாட்டில் தமிழ் உணர்வுள்ள ஒரு பெரும் இயக்கத்திற்கே அடித்தளம் இட்டதும் மறைக்க முடியாத உண்மைகள்.

இதன் பலாபலனாக இன்று உலகெங்கும் புலிகளை மையமாக வைத்தே ஏறக்குறைய அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.தமிழ் நாட்டில் கூட பிரபாகரன் என்ற பெயரே பல விடயங்களை தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது.

இலங்கையில் தமிழன் தனது உரிமைக்காக போராட புறப்பட்டதன் பின்னணியில் தான் இவை அனைத்தும் நடந்தது.ஆனால் எதற்காக நாம் போராட தொடங்கினோமோ அது எத்தனை வீதம் வெற்றி பெற்றுள்ளது.எமது மக்களுக்கான விடிவில் எவ்வளவு தூரம் இன்று வந்திருக்கின்றோம். நாம் போராட்டத்தை ஏன் தொடங்கினோமோ அதைத்தவிர அனைத்தும் மிக நன்றாக நடந்திருக்கின்றன.

இன்று எம்மை எதுவுமே செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு புலிகளின் போராட்டம் எம்மை தள்ளிவிட்டிருக்கின்றது .சிறைசாலையில் அடித்தே கொல்லுகின்றான்,செங்கல்பட்டில் எதுவித விசாரணையுமில்லாமல் அடைத்து வைத்திருக்கின்றார்கள்.எங்களால் அவர்களுக்கு என்னவும் செய்ய முடிகின்றதா?பிரபாகரனையே சிறையால் தப்பி ஓட விட்ட தமிழ் நாட்டில் தான் இன்று இந்த நிலை.மட்டக்களப்பில் சிறையுடைத்த எங்களுக்குத்தான் இன்று இந்த நிலை.

புலம் பெயர்ந்த நாடுகளில் புலிக்கொடிஏற்றி விளையாட்டுபோட்டி வைப்பதும் ,நட்சத்திரதிருவிழா வைப்பதுயும் தான் நீங்கள் தேடிய தீர்வு என்றால் புலிகள் வெற்றிதான் பெற்றிருக்கின்றார்கள் .

புலிகள் தான் இப்போ இல்லையே இந்த மூன்று வருடங்களும் நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்கும் மேதாவிகளுக்கு ,சர்வதேசத்தில் தமிழனுக்கு CREDIBILITY என்ற ஒன்றையே இல்லாமல் செய்துவிட்டார்கள் அதை நிவர்த்தி செய்யத்தான் இப்போ எல்லோரும் திரும்ப திரும்ப அகிம்சை அகிம்சை என்று கத்துகின்றார்கள்.(தனிப்பட்ட ஒருவருக்கே CREDIT SCORE பழுதடைந்தால் நிவர்த்தி செய்ய எவ்வளவு கஷ்டம் என்று தெரியும் )

டக்கிளசின் நிலை பற்றி அவரின் நண்பருடன் கதைத்ததை பின்னர் பதிகின்றேன் .

நன்றி, டக்கிளஸ் பற்றி புகழ்ந்தோ பரிதாபப்பட்டோ தான் கூறப்போகிறீர்கள். பார்ப்பம்.

எம்மக்கள் விடுதலை பெற வேண்டுமெனின் கடைசி முகாமிலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பதில் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி Maruthankerny,

உங்ககளது கருத்துக்களை ஏற்கின்றேன்

அதில் தப்பு என்று சொல்ல ஏதுமில்லை

ஆனால் முதன் முதலாக அர்யூன் பலவற்றை ஏற்று இறங்கி வந்துள்ளார்

இனியும் பழையவற்றை கிளறி நாம் அவரை தள்ளி வைப்பது எமது மக்களுக்கே தீமை தரும்.

இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.........

எல்லோரும் ஒன்று சேர்வது என்பது மிக பெரிய பலமாக தெரிந்தாலும். தமது மாஜ ஜாலங்களை கடந்து மக்களுக்காக இவர்களால் ஒருபோது ஒன்று சேர முடியாது. தமது கற்பனை கதாபாத்திரங்களை (படித்தவர் பாம்பு பிடிப்பவர்) வாழ வைப்பதற்கு அப்படி ஒரு நாடகம் இவர்களுக்கு தேவையே தவிர அவற்றை கடந்து வர இவர்களால் முடியாது. அது முடிந்தவார்கள் வேசங்களை இது வெறும் வேஷம் என்று தெரிந்த போதே கழட்டி எறிந்துவிட்டார்கள்.

இவர்கள் ஒன்று சேர்வது அதைவிட பெரிய தீமை தரும் என்பதற்கு தமிழினம்தான் சாட்சி.

மக்கள் நலன் கருருதி கூட்டமைப்பை தலைவர் உருவாக்கவில்லையா?

உருவாக்கினார்தான்...........

ஊரை ஏய்த்து பிழைப்பு நடத்த அது கூடமைப்பிட்கு உதவியதே தவிர மக்களுக்கு என்ன கிடைத்தது? சிங்க கொடியை கையில் பிடித்து கொண்டு. "இதற்கு முன்பும் பல தடவைகள் நான் கையில் பிடித்து ஆட்டி உள்ளேன்" என்ற வீராப்பில் மக்கள் அடைய ஏதும் நன்மை இருக்கிறதா?

சிவராமை ஏற்கவில்லையா?

இவரை பற்றி நிறைய விமர்சனம் எனக்கு உண்டு...........

இறுதி நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் இருந்தும் உண்மையை எழுத நினைத்த ஒரு மனிதன் மேல் ஓடி வந்து வசதியாக வாழும் நான் இனி எதையும் பேச கூடாது. மௌனிக்க வேண்டிய ஒரு தேவை.

இசுலாமிய கட்சிகளோடு இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கவில்லையா?

சிங்கள அரசுக்கும் தான் புலிகள் பலதடவைகள் அழைப்பு விட்டார்கள். அதை ஏற்று அவர்களும் வந்தார்கள் பேசினார்கள் சென்றார்கள். மீண்டும் குண்டு கொண்டுதானே வந்தார்கள்? இன துவேசம் கடந்து அவர்களால் பேச முடியவில்லை. நாம் போர் விரும்பிகள் அல்ல என்பதை நிருபிக்க திரும்ப திரும்ப பேசுவதை தவிர புலிகளுக்கு வேறு தெரிவும் இருக்கவில்லை.

நாம் எப்போது முஸ்லிமுக்கு கெடுதல் செய்தோம்? தொன்று தொட்டு அவன் அதைதானே செய்கிறான். ஒரு யாழில் இருந்து வெளியேற்றம்............ ஒரு காத்தான் குடி கொலை............ இதற்கு முன்பு இவர்கள் செய்த கொலைகள் கொள்ளைகள் எல்லாம் எதற்காக செய்தார்கள்? சாவு என்பது தமிழனுக்கு மட்டுமே சொந்தமானதா? அவர்கள் எமது சகோதரர்கள்........... வேண்டியதை திருப்பி கொடுக்க கொடுக்க தமிழனுக்கு சுதந்திரம் இல்லையா? சகோதர்கள் எதை தந்தார்களோ அதில் சொட்பத்தைதானே திருப்பி கொடுத்தோம்?

"கூடாதார் கூட்டம் கூடாதே" என்பதில் எதோ அர்த்தம் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது.

பழையதை மறப்போம்

மக்களுக்கு நன்மை தருமாயின் அவற்றிற்கே முதலிடம்.

அதனால்தான் இவற்றை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வருகிறது.

இடம்

பொருள்

காலம்

அறிந்து செயற்பட வேண்டிய நிலை.

அந்த மக்கள் சிங்களவனின் காலை நக்கும் நிலையில் நாம் பழையதை கிளறி நேரத்தை செலவளளிப்பது என்னவோ செய்கிறது

குற்றமெனின் மன்னித்தருள்க. எனக்கு நீங்களும் வேண்டும். வேண்டும். வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் நீங்கள் தான் அர்ஜீன் அண்ணாவைப் பார்த்து நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று கேட்டனீங்கள் அதற்குத் தான் நான் முதலில் தேசியவாதிகள் எல்லோரும் முதலில் ஒன்று படுங்கோ மாற்றுக் கருத்துக்கார‌ரை பிறகு சேர்க்கலாம் என்று சொன்னேன் அதற்கு நீங்கள் உண்மையானவர்கள் ஒன்றுபட்டு தான் நிற்கின்றனர் என்றீர்கள் ஆனால் உங்களாலும்,உங்களைப் போன்றவர்களாலும் இன்னும் முகாமில் இருப்பவர்களை கூட‌ எடுத்து விட‌ முடியவில்லை.

எனக்கு முள்ளி வாய்க்கலுக்குப் பின்னர் எங்களுக்கு ஒரு நாடு கிடைக்கும் என்ட‌ நம்பிக்கை போயிட்டுது அப்படி கிடைக்க வேண்டும் என்டால் இன்னொரு பிர‌பாகர‌ன் பிறக்க வேண்டும் அல்லது ஈழத்தில் எண்ணெய் எதாவது இருந்தால் அதுக்காவது ஏதாவது உலக நாடு பாவப்பட்டு பிச்சை போட‌ வேண்டும் அதை விடுத்து நாங்கள் ஒன்று படுவோம்,போராடுவோம் என்பதெல்லாம் வாய்ப் பேச்சில் இருக்குதே தவிர‌ செயல் வடிவம் ஒருவரும் கொடுக்க மாட்டோம்.

வன்னியில் உள்ளவர்களுக்கு காசு அனுப்புகிறோம்,அவர்கள் வாழ்வாதர‌த்திற்கு உதவுகிறோம் என்பதெல்லாம் மீட்டுப் பணி அது போராட்டமில்லை அதைக் கூட‌ எங்களால் இவ்வளவு காலத்திற்குள் செய்து முடிக்க முடியவில்லை

ரதி [அக்கா] நான் எழுதிய கருத்தை இன்னும் ஓர்தடவை வாசியுங்கள் ...நான் திருவாளர் அர்ச்சுன் அவர்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்றா கேட்டேன் ....இல்லையே ......சரி அவர் தேசியத்தையும் ,தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஒன்றுடன் ஒன்று படுத்தி எங்கே விடுதலைப்புலிகளின் மீது குற்றம் பிடிக்கலாம் என்ற வகையிலேயே அவரின் கருத்து அமைந்திருந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையிலேயே எனது கருத்து அமைந்திருந்தது.சரி அடுத்து நீங்கள் ஒன்று கேட்டிருந்தீர்கள்.....என்னைப்போல்[எம்மைப்போல் ] ஒன்றுபட்டு நிற்பவர்கள் முகாமில் உள்ளவர்களை எடுத்து விடவில்லை என்றெல்லாம் பதில் தந்துள்ளீர்கள்...............அப்படிஎன்றால் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதையும் கொஞ்ச்சம் விபரமாக எழுதினால் நல்லது என்று நினைக்கிறேன். அதற்காக கே பி யைப்போல் இருந்திருக்கலாம் என்று எழுத மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இன்று நான் தேசியத்தைப்பற்றி எழுதுவதற்கும்,கதைப்பதற்கும் புலிஆதரவாளர் என்று நினைபதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டீர்கள் ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில் தமிழீழத்தில் பிறந்த ஓர் தமிழன்.......இதே போல் தான் நீங்களும்,அர்ச்சுன் அவர்களும் .........முதலிலே நாம் கருத்தில் ஒன்றுபடுவோம் பின் என்னயவர்ரைப்ப்றி யோசிப்போம் ஒன்றுபடுவது என்பது எமது இலட்சியத்தில் எவன் உறுதியாய் இருக்கிறானோ அவன் தேசியத்திலும்,போராட்டத்திலும் ஒன்றுபட்டே இருக்கிறான் .பல அமைப்புக்களாய்,குழுக்களாய் .அரசியர்கட்சிகளாய் ........இது கூட இன்றைய காலத்தின் தேவையாகும். ......ஆகவே நாம் எதையும் நெகட்டிவாக சிந்தித்து ஒன்றும் நடவாது ,நடக்காது என்னத்தை ......எதை என்றெல்லாம் சாக்குப்போக்குகளை சொல்வதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாது அல்லது அது சம்பந்தமான கருத்துகளுக்கு அதரவாக கருத்தெழுதுவது எல்லாமே எம்மை,எம் எதிகால சந்ததியினரை அடிமையின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்பது தான் உண்மையாகும் ..............

Link to comment
Share on other sites

என்னைப்போல்[எம்மைப்போல் ] ஒன்றுபட்டு நிற்பவர்கள் முகாமில் உள்ளவர்களை எடுத்து விடவில்லை என்றெல்லாம் பதில் தந்துள்ளீர்கள்...............அப்படிஎன்றால் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதையும் கொஞ்ச்சம் விபரமாக எழுதினால் நல்லது என்று நினைக்கிறேன். அதற்காக கே பி யைப்போல் இருந்திருக்கலாம் என்று எழுத மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இன்று நான் தேசியத்தைப்பற்றி எழுதுவதற்கும்,கதைப்பதற்கும் புலிஆதரவாளர் என்று நினைபதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டீர்கள் ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில் தமிழீழத்தில் பிறந்த ஓர் தமிழன்.......இதே போல் தான் நீங்களும்,அர்ச்சுன் அவர்களும் .........முதலிலே நாம் கருத்தில் ஒன்றுபடுவோம் பின் என்னயவர்ரைப்ப்றி யோசிப்போம் ஒன்றுபடுவது என்பது எமது இலட்சியத்தில் எவன் உறுதியாய் இருக்கிறானோ அவன் தேசியத்திலும்,போராட்டத்திலும் ஒன்றுபட்டே இருக்கிறான் .பல அமைப்புக்களாய்,குழுக்களாய் .அரசியர்கட்சிகளாய் ........இது கூட இன்றைய காலத்தின் தேவையாகும். ......ஆகவே நாம் எதையும் நெகட்டிவாக சிந்தித்து ஒன்றும் நடவாது ,நடக்காது.

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.