• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Vaanampaadi

வவுனியாவில் தாக்குதல் 4 ராணுவம் பலி

Recommended Posts

S.Lanka rebel blast kills 4 soldiers

Mon Apr 17, 2006 5:11 AM BST

COLOMBO (Reuters) - Suspected Tamil Tiger rebels killed four Sri Lankan soldiers in a claymore fragmentation mine ambush on Monday, an army source said, as violence on the island continued to worsen.

"It was a claymore attached to a three-wheeler (auto-rickshaw)," the source said from the northern town of Vavuniya, just south of rebel territory, where the attack occurred. "Four army people were killed."

Another army source in the northern town of Jaffna said another claymore mine had exploded prematurely there, killing the suspected Tiger rebel who was carrying it.

Share this post


Link to post
Share on other sites

புதினத்தில் வந்த செய்தி

வவுனியா கிளைமோர் தாக்குதலில் 4 படையினர் பலி- 11 பேர் படுகாயம்

[திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2006, 10:54 ஈழம்] [ம.சேரமான்]

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வேப்பங்குளம் வவுனியா-மன்னார் வீதியில் முச்சக்கர வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் சிறிலங்கா படைத்தரப்பு வாகனம் இன்று திங்கட்கிழமை காலை 8.50 மணியளவில் சிக்கியது.

இச்சம்பவத்தில் 4 படையினர் கொல்லப்பட்டனர். 10 படையினரும் ஒரு பொதுமகனும் படுகாயமடைந்தனர்.

இக்கிளைமோர் தாக்குதலையடுத்து அப்பகுதியில் சுமார் 10 நிமிடத்துக்கும் மேலாக படைத்தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அனைத்து வீதிகளும் மூடப்பட்டன.

படுகாயமடைந்த நாகராஜா (வயது 35) என்கிற பொதுமகன் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வவுனியா மருத்துவமனையின் பாதுகாவலர் தயாரூபனை அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாக சிறிலங்கா படைத்தரப்பினர் கைது செய்துள்ளதாகவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை   கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை   கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர…   கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் என்ற பெண் முதுகலை படித்துவந்தார். ரேச்சல் டொரோண்டொவில் பல்கலைக்கழக வளாகம் அருகே லெய்ட்ச் அவின்யூ அசினிபோயினே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, புதன்கிழமை காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் அவரைத் தாக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் மாணவியின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இது குறித்த தகவல் அறிந்த ரேச்சலின் குடும்பத்தினர், தனது மகளைப் பார்க்க கனடா செல்வதற்கு விசா நடைமுறைகளை விரைவாக்க உதவி செய்ய வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உதவியைக் நாடியுள்ளனர். மேலும், மாணவி ரேச்சலின் உடல்நிலை ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு சீராக இருப்பதாவும் இருப்பினும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். கனடா போலீசார் பொதுமக்களுடன் உதவியுடன் மாணவி ரேச்சலை தாக்கிய அந்த மர்ம நபரைப் பற்றி விசாரித்துவருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த நபரின் வயது 20களின் மத்தியில் இருக்கும் என்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர். மாணவி தாக்கப்பட்டது குறித்து டொரோண்டோ போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடிவருகின்றனர்.   ரேச்சலின் சகோதரி ரெபேக்காவின் டி.என்.எம் உடன் பேசுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்க விசாவைப் பெறுவது எனது குடும்பத்தினருக்கு காலத்தின் தேவை. விசா செயல்முறை சிக்கலானது. நாங்கள் இன்னும் அதைக் கண்டுபிடித்து வருகிறோம். நாங்கள் வெளிவிவகார அமைச்சரின் உதவியை நாடுகிறோம். ” ரேச்சலின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்கச் செல்ல விரைவாக விசாவைப் பெறுவது என்பது சிக்கலானது. நாங்கள் அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் உதவியை நாடியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், ரேச்சல், மூளைக்கு இரத்த விநியோகத்தை துண்டிக்கும் வகையில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. ரேச்சலின் கழுத்துப் பகுதியில் பல முறை குத்தப்பட்டதாகத் தெரிகிறது, தவிர இருபுறமும் கீறல்கள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளனர். நன்றாகப் ரேச்சல் தற்போது கனடாவில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்டில் பல்கலைக்கழக உதவித்தொகை உதவியுடன் படித்து வருகிறார். ரெச்சல் இந்த ஆண்டு மே மாதம் பட்டம் பெற உள்ளார். மேலும், தனது செலவுகளுக்காக அங்கே அவர் பகுதிநேரமாக வேலை செய்து கொண்டுவந்தார்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரேச்சலின் உறவினர் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் படிப்பதற்காக கனடா சென்றார். அங்கே அவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். இந்த செய்தி உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. ரேச்சலின் பெற்றோர் குன்னூரில் இருப்பதாகவும் அவர்களுடைய மொபைல் எண்ணையும் குறிப்பிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கனடாவின் டொரோண்டோவில் இந்திய மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மீதான மோசமான தாக்குதலை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். அவருடைய குடும்பத்தினருக்கு எளிதில் விசா கிடைக்க நான் வெளிவிவகார அலுவலர்களிடம் கேட்டுள்ளேன். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பொன் எண்களைக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். https://tamil.indianexpress.com/international/23-year-old-student-from-tamil-nadu-was-stabbed-at-toronto-in-canada/
  • என்ன கோசான் எட்டிப் பார்த்துவிட்டு ஒன்றும் கூறவில்லை. இக் கோவிலுக்குப் போனீர்களா ?? வருகைக்கும் பச்சைக்கும் நன்றி
  • ‘கைலாச நாட்டின் அதிபர்’ நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை!   ஜனவரி 22, 2020 ‘கைலாச’ நாட்டின் அதிபர் ‘சுவாமி’ நித்தியானந்தா பாலியல் மற்றும் வயதுகுறைந்தோரை ஆசிரமத்தில் தடுத்துவைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவிலிருந்து தப்பியோடிய ‘சுவாமி’ நித்தியானந்தா பற்றி மேலதிக விபரங்களைப் பெறும்பொருட்டு சர்வதேச காவற்துறை (இண்டர்போல்) ‘நீல அறிக்கை‘ (blue notice) பிறப்பித்துள்ளது. ஒருவரது அடையாளம் நிரூபிக்கப்படவேண்டி இருப்பின், அல்லது அவர் பற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படின் அல்லது ஒருவர் காணாமற் போயின் அவரைத் தேடுவதற்காக அல்லது ஒரு அடையாளம் காணப்படாத சர்வதேச குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக, சர்வதேச காவற்துறை இந் நீல அறிக்கைகளை (விளக்கம் கோரும் அறிக்கைகள்) விடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் அவர் அடையாளம் காணப்பட்டால் அவரை சம்பந்தப்பட்ட நாட்டுக்குக் கொண்டுவர அக் காவற்துறை முயற்சி செய்யும். குஜராத் மற்றும் கர்நாடகா காவற்துறையினர் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினருக்கு (CBI) விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அது அப் பொறுப்பை இம்டர்போலிடம் கையளித்திருந்தது. அடுத்த நடவடிக்கையாக, நித்தியானந்தாவைக் கைது செய்யும் பொருட்டு ‘சிவப்பு அறிக்கையை’ வெளியிடும்படி இண்டர்போலிடம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவிருப்பதாக குஜராத், கர்நாடக காவற்துரையினர் தெரிவித்துள்ளனர். அஹ்மெதாபாதத்திலிருந்த நித்தியானந்தாவின் ஆச்சிரமத்திலிருந்து இரு பெண்கள் காணாமற்போனமை தொடர்பாக குஜராத் காவற்துறை அவர் மீது வழக்குப்பதிந்திருந்தது. குழந்தைகளைக் கடத்தித் தனது ஆச்சிரமத்தில் வைத்து அவர்கள் மூளம் தன் பக்தர்களிடமிருந்து பணம் அறவிட்டார் எனவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. குஜராத் காவற்துறை அவரை ஏற்கெனவே தேடிக்கொண்டிருந்த நிலையில், அவர் ஏகுவாடோர் நாட்டுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் ‘இந்து நாடொன்றை’ அமைத்துள்ளதாகவும் அதற்கு அவர் ‘கைலாச’ என்று பெயரிட்டு அதற்குத் தனியே ஒரு கொடி, அரசியல் கட்டமைப்பு ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளதாகவும் டிசம்பர் மாதமளவில் செய்திகள் வெளியாகியிருந்தன.   https://marumoli.com/கைலாச-நாட்டின்-அதிபர்-நி/?fbclid=IwAR359MFWz2__nOD1m_QdDaaQNpUW7uC2jM6INzydi14YbLgcw39uRwLbp_g
  • வாவ்.... பிரசாந்துக்கு,  எவ்வளவு பெரிய... தொழில் நுட்ப அறிவு. ❤️ காணொளி... இணைப்பிற்கு, இணைப்பிற்கு நன்றி... ஜெகதா துரை.