Jump to content

குளிருக்கு ஏற்ற ஸ்வீற்கோர்ன் சிக்கன் சூப்

Recommended Posts

குளிர்காலத்தில் இரவு நேர உணவுக்கு உகந்தது சூப் வகைகள் என்பது நாம் அறிந்த செய்தி தானே. தவிர குளிரில் சமைப்பதும், பின்னர் துடைத்து சுத்தம் செய்வதும் நடுநடுங்கி செய்ய வேண்டிய பயங்கரமான வேலை. மிக குறுகிய நேரத்தில், சில பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்க கூடிய ஸ்வீட்கோர்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பெரிதாக யோசிக்க தேவையில்லாத சூப் செய்முறைகளில் இதுவும் ஒன்று. சமையலில் பெரிதாக நாட்டம்/பொறுமை இல்லாதவர்களும் இலகுவாக தயாரித்துவிடலாம்.

Chicken%2BCorn%2BSoup.jpg

தயாரிக்க தேவையானவை:

அரைத்த ஸ்வீட்கோர்ன் 1டின்

லீக்ஸ் (வெள்ளைப்பகுதி அரிந்தது)1

வெங்காயத்தடல் / ஸ்ப்ரிங் ஒனியன் 3

காய்கறி எண்ணெய் - 1 தே.க

சிக்கன் ஸ்டொக் - 4கப்

எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் 1 கோழியினுடையது

முட்டை 2 (உடைத்து லேசாக அடித்தது)

உப்பு,மிளகு தூள் தேவைக்கேற்ப

தயாரிப்பது எப்படி:

கோழி, லீக்ஸ், வெங்காயத்தடலை சிறிதாய அரிந்து கொள்ளுங்கள். முட்டையை உடைத்து அடித்து எடுத்து வையுங்கள்.

ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, லீக்ஸை போட்டு லேசாக பச்சை வாசம் போகும் வரை வதக்குங்கள். வதங்கி வந்ததும், சிக்கன் ஸ்டொக்கை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் கலவையில் வெட்டிய சிக்கன் துண்டுகள் மற்றும் அரைத்த சோளத்தை சேர்த்து 15-20 நிமிடங்களுக்கு இடைப்பட்ட சூட்டில் கொதிக்க விடுங்கள்.

இப்போது அடுப்பை அணைத்த பின்னர், ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள். சேர்க்கும் போது ஒரு பெரிய முள்ளுக்கரண்டியால் கலக்கி கொண்டேயிருங்கள். ஒரு நிமிடம் தொடர்ந்து கலக்கிய பின்னர், உடனே சிறு குவளைகளில் ஊற்றி. சிறிதளவு வெங்காயத்தடலை தூவி பரிமாறுங்கள். (என்னிடம் வெங்காயத்தடல் கைவசம் இருக்கவில்லை, அதனால் போடவில்லை)

உப்பு, மிளகுதூள் அவரவர்க்கு தேவையான அளவு போட்டுக் கொள்ளலாம்.

பி.கு: ஏற்கனவே சுட்ட/வெதுப்பிய கோழி இறைச்சியை சேர்த்தால் மாறுபட்ட சுவை கிடைக்கும்.

Chicken%2Band%2BCorn%2BSoup.jpg

www.thooyaskitchen.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி சகோதரி ! :)

கோடை காலத்திற்க் கேற்றால் போல ஏதாவது சூப் வகைகள் இணைக்கலாமே இங்கு குளிர்காலம் ஆரம்பமாக குறைந்தது மூன்று மாதங்கள் உள்ளதே அதுவரைக்கும் பொறுமையாக இருக்க முடியாது . :D

எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் 1 கோழியினுடையது

:rolleyes:

Link to comment
Share on other sites

கோடைக்கு நல்ல ஒடியல் கூழ் செய்து சாப்பிடலாம் தானே ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயிருக்குள்ளை... கொஞ்ச வெங்கயாம் வெட்டிப் போட்டு, கலக்கிக் குடியுங்கோ தமிழரசு.

சும்மா.... எயாக் கண்டிஷன் பூட்டின மாதிரி இருக்கும்.ventilator.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு, நன்றிகள் தூயா!

அடிக்கடி தலையைக் காட்டிட்டு, ஓடிப்போய் ஒளிக்கிறியள்!

அடிக்கடி வாருங்கள்! :D

Link to comment
Share on other sites

நன்றி தூயா.

தூயாவுக்கு இப்போது குளிர் காலமல்லவோ - அது தான் குளிருக்கு ஏற்ற உணவு தருகிறார்.

பரவாயில்லை - இது நல்ல சத்துள்ள ஆகாரம் தான். கோடையிலும் சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா குளிர் குளிர் என்கிறீர்களே அவுசில் எப்படி என்ன தான் குளிர் தை மாசியில் கனடா பக்கம் போனால் உங்களுக்கு கனடாவே வெறுத்துவிடும்.

மற்றும் இரவில் சூப் குடித்தால் ஒழுங்காக படுக்க முடியாதே? அடிக்கடி கழிவறைப் பக்கம் போக வேண்டியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நாடுகளில் சரியான குளிராக இருக்கும் போது அவுசில் வெப்பம் என்று அறிந்து இருக்கிறன்.உண்மையாக அப்படித் தானா தூயாபேபி..:)

Link to comment
Share on other sites

தயிருக்குள்ளை... கொஞ்ச வெங்கயாம் வெட்டிப் போட்டு, கலக்கிக் குடியுங்கோ தமிழரசு.

சும்மா.... எயாக் கண்டிஷன் பூட்டின மாதிரி இருக்கும்.ventilator.gif

கிகிகிகி அதில கொஞ்ச ஊறுகாயும் போட்டால் சொல்லி வேலை இல்லையாக்கும் :)

இணைப்புக்கு, நன்றிகள் தூயா!

அடிக்கடி தலையைக் காட்டிட்டு, ஓடிப்போய் ஒளிக்கிறியள்!

அடிக்கடி வாருங்கள்! :D

நிச்சயமாக :) நன்றி

நன்றி தூயா.

தூயாவுக்கு இப்போது குளிர் காலமல்லவோ - அது தான் குளிருக்கு ஏற்ற உணவு தருகிறார்.

பரவாயில்லை - இது நல்ல சத்துள்ள ஆகாரம் தான். கோடையிலும் சாப்பிடலாம்.

குளிர் என்றாலும் பரவாயில்லை, அதோட காய்ச்சல் தடிமன் சேர்ந்தே வருவது தான் கொடுமை

ஆமா குளிர் குளிர் என்கிறீர்களே அவுசில் எப்படி என்ன தான் குளிர் தை மாசியில் கனடா பக்கம் போனால் உங்களுக்கு கனடாவே வெறுத்துவிடும்.

மற்றும் இரவில் சூப் குடித்தால் ஒழுங்காக படுக்க முடியாதே? அடிக்கடி கழிவறைப் பக்கம் போக வேண்டியிருக்கும்.

கனடாவில் உள்ளவர்களுக்கு பழகிவிடும்..

எமக்கு இது தான் குளிராக்கும் ;) கிகிகிகி

தவிர இங்கு வீசும் ஒருவித குளிர்காற்றை மிக கொடிய குளிர்நாடுகளில் இருந்தவர்களுக்கு கூட வருத்தத்தை தரும்..

நாங்களும் இயற்கை இனிப்புச்சோளம் பயிரிட்டிருக்கிறோம். இந்த சமையல் குறிப்பு இன்னொரு மாதத்தில் உதவும். நன்றி.

எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள்?

எங்கள் நாடுகளில் சரியான குளிராக இருக்கும் போது அவுசில் வெப்பம் என்று அறிந்து இருக்கிறன்.உண்மையாக அப்படித் தானா தூயாபேபி.. :)

அதே அதே.. :)

Link to comment
Share on other sites

கிகிகி நான் மட்டும் தான் சாப்பிட்டு பார்த்தனான்..இன்னும் நல்லாத்தான் இருக்கேன் கந்தப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகி நான் மட்டும் தான் சாப்பிட்டு பார்த்தனான்..இன்னும் நல்லாத்தான் இருக்கேன் கந்தப்பு..

அப்ப... இனி, கந்தப்புவும் துணிஞ்சு.... ஸ்வீற்கோர்ன் சிக்கன் சூப் குடிக்கலாம். :D

Link to comment
Share on other sites

அப்ப... இனி, கந்தப்புவும் துணிஞ்சு.... ஸ்வீற்கோர்ன் சிக்கன் சூப் குடிக்கலாம். :D

இதை தான் நான் 8 வருசமா இங்க சொல்லுறேன்...ஒருத்தரும் கேட்க மாட்டினமாம் :)

GMO சோளத்தை தவிர்ப்பது நன்று.

உண்மை தான்..

Link to comment
Share on other sites

இங்கு குளிர்காலம் இன்னும் 4 மாதத்தில் தொடங்கும் அப்போ செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். :)

Link to comment
Share on other sites

இங்கு குளிர்காலம் இன்னும் 4 மாதத்தில் தொடங்கும் அப்போ செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். :)

4 மாதத்தில் பதில் சொல்லணும் ;)

Link to comment
Share on other sites

அப்ப... இனி, கந்தப்புவும் துணிஞ்சு.... ஸ்வீற்கோர்ன் சிக்கன் சூப் குடிக்கலாம். :D

சிங்கள நாட்டுக்குப் போய் சிங்கள சிறையில் சித்திரவாதை அனுபவிச்சாலும் அனுபவிப்பேனே, உந்த கருமந்தம் புடிச்ச சூப்பினை அருந்த மாட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.