Jump to content

சிவனும் திருமாலும் ஆரியக் கடவுளா?


Recommended Posts

நான் சிறுவனாக இருந்தது முதல் எனக்கு அறியத் தரப்பட்டது சிவனும் திருமாலும் ஆரியக் கடவுள் என்று. சங்க இலக்கியங்களை வாசிக்கும்பொழுது இந்திரன், திருமால்,சேயோன் முதலிய கடவுளை தமிழர்கள் வழிபட்டனர் எனத் தெரிய வருகிறது. சங்க இலக்கியம் முழுவதும் இந்திர விழா பற்றி சிறப்பாக பேசப்படுகிறது. அப்படி எனில் சங்க காலத்திலேயே ஆரியத் தாக்கம் இருந்ததா? இல்லை தமிழர்கள் கடவுள் ஆரியக் கடவுளாக பின்னாளில் மற்றப் பட்டார்களா?

சிவன்(சேயோன்), திருமால் (மாயோன்), வேந்தன் (இந்திரன்), வாரணன் (வருணன்), காளி என்பவர் வேதங்களிற் சொல்லப்படவுமில்லை; அவர் ஆரியத் தெய்வங்களுமல்லர். அவர் தூய தமிழ்த் தெய்வங்களே என்று தேவநேயப் பாவாணரால் கூறப்படுகிறது.

அதற்க்கு அவர் கூறும் காரணங்கள்

1. 'சேயோன் மேய மைவரை யுலகமும்" என்று, முருக வணக்கம் தமிழகத்துக் குறிஞ்சிநிலத்திற் குரியதாகத்தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டிருத்தல் (அகத். 5)

2. சிவபெருமான் வெள்ளிமலை யிருக்கையும், மலைமகள் என்னும் பெயரும்,கொன்றைமாலையும் காளையூர்தியும் சூலப்படையும் அக்கமணியும், குறிஞ்சித்திணைக் குரியனவாதல்.

3. சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும்,செந்தமிழ்ப் பாண்டிநாட்டுத் தலைநகராகிய மதுரையில் நிகழ்ந்தமை.

4. சிவபெருமானின் எண் மறச்செயலகமும் (அட்ட வீரட்டம்) தமிழ்நாட்டிற்குள்ளிருத்தல்.

5. சிவன் நடஞ்செய்யும் அம்பலம் ஐந்தும் தமிழ்நாட்டிலிருத்தல்.

6. வேத ஆரியர், வடநாட்டுச் சிவனியரை, சிவக்குறி வணக்கம் பற்றி ஆண்குறி வணக்கத்தார்(சிச்ன தேவா) என்று பழித்தமை.

7. சிவன் என்னும் சொல் செவ்வண்ணன் என்று பொருள்படுதலும்,சிவனுக்கு அழல் வண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக்கூத்தன் என்னும் பெயர்களுண்மையும்.

இதை பற்றி யாழ் கள உறுப்பினர்களின் கருத்தை அறிய அவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.இந்திரன் முதலில் மழைக்கான கடவுளாக இருந்தான். பிற்பாடு அவன் ஆரியச் சாயம் பூசப்பட்டு, தேவலோக அதிபதி என அழைக்கப்பட்டான்.

2.முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து ஸ்கந்தன் தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார்.

உண்மையில் என்ன நடந்திருக்கும் எனில், பலபிரிவுகளாக இருந்த மதங்களுக்குள் நிறையச் சண்டைகள் நடந்தன. இதனால் ஆதிசங்கர், திருமூலர் காலத்தில் ஒன்றே தேவன் என்ற கொள்கை உருவாகி இருந்தது. அதன் அடிப்படையில் எல்லாக் கடவுள்களும் ஒரே கருத்துக் கொண்டவை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆதிசங்கரர் ஒவ்வொரு மடலாயங்களோடும் போய்க் கதைத்து ஒரே குடைக்குள் உருவாக்கப்பாடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக கடவுள்களின் உறவுமுறை உருவாக்கப்பட்டன. முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் ....... சமஸ்கிருதம் பொது மந்திரமாக இக்காலத்தில் தான் உள்வாங்க வைக்கபப்ட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். அது தான் பிற்பாடு தமிழ் மொழியின் அழிவுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம்.

என்னுமொரு வகையில் பார்த்தால், இந்த உள்வாங்கலில் பௌத்தமும், சமணமும் இருந்ததன என நினைக்கின்றேன். அதனால் தான் அவை காலப்போக்கில் இல்லாது போகவும் காரணமாக இருந்திருக்கலாம். கண்ணகி அம்மன், சிவனின் தட்சணாமூர்த்தி வடிவங்கள், பொள்த்த சிந்தனையை உள்வாங்கியதாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனது மூலம், சிந்து வெளி, மொகாஞ்சிதாரோ, ஹரப்பா நாகரீகங்களுடன், தொடர்பு பட்டது!

வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்துவிட்டார்கள்,

இதே போல, 'ஸ்கந்தா'; எனப்படுபவரும், கிட்டத் தட்ட 'முருகனது' பிறப்புப் போன்ற, ஆனால், சிவனின் மகனலாத ஒருவராகும்! இவருக்கு, ஆரு தந்தையர்கள் உள்ளார்கள்! இவரைச் கந்தனுடன், சேர்த்து விட்டார்கள்!

சிந்து வெளி, நாகரீகத்தில் மட்டுமே, லிங்க வழிபாடும், பெண் வழிபாடும், மிருக வழிபாடும், இருந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன! யோக நிலைகளும், இங்கேயே உருவாகின!

அத்துடன், வேதங்கள் விஷ்ணுவையும், இந்திரனையுமே முதன்மைப் படுத்துகின்றன!,

உருத்திரனுக்கு முக்கியத்துவம், கொடுக்கப் படவில்லை!

தூயவன் கூறுவது போல, இந்திரன் மழைக் கடவுளாக இருந்து, பின்னர் 'வருணன்' அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள, இந்திரன் தேவேந்திரனாகின்றார்!

வேதங்களில், பிள்ளையாரைப் பற்றி எதுவும், குறிப்பிடப் படவில்லை!

வேதங்கள் பெண்களை வெறும் போகப் பொருட்களாகவே (இந்திராணி, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை. அகலிகை} பார்த்தன!

பின் வந்த காலங்களில், எல்லாமே ஒன்றோடு ஒன்று, கலக்கப் பட்டு சாம்பாராக்கப் பட்டு விட்டது!

சிவன் உண்மையில், திராவிடன்! ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால், ஆரியனாக்கப் பட்டு விட்டான்!

சிவனின் நிறமும், கிருஷ்ணனின் நிறமும், இன்னும் 'நீலமாக' இருப்பதையும் கவனத்தில் எடுங்கள்!

அதே வேளை, கடைசி வேதமான, ;சாமவேதம்' இராவணனால் பாடப் பட்டது, என்ற ஒரு ஐதீகமும் உண்டு!

முருகன், இந்திரனின் மகளான தேவையானையை, மணந்து கொண்டதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்! 'வள்ளி' யின் நிறமும், கறுப்பு என்பதையும் கருத்தில் கொள்க!

இந்திரன், ஆரியன் என்பதில், எனக்கு, இரு கருத்துக்கள் இல்லை!

Link to comment
Share on other sites

பாரதக்கதையின் படி கிருஸ்ணன் என்ற கறுப்பு அரசனுக்கு குந்தி என்ற வளர்ப்பு மகளாக இருந்த மாமியார் ஒருவர் இருந்தார். ஆரியர்கள் கலப்பு மணங்களை எதிர்ப்பவர்கள். திராவிடர் பல மனைவிகளை ஏற்றுக்கொள்பவர்கள். தொடர்ந்த படையெடுப்புக்களால் அஸ்த்தினா புரத்து அரசர் பரம்பரை ஆரியர் ஆகத்தக்களவுக்கு கலந்து போய்விட்டது. குந்தி திராவிட பண்புகளுடன் இங்கே அனுப்பி வைக்கப்பட்டாள். அவள் எளிதில் கணவன் அல்லாதவர்களுடன் உறவுகள் வைத்திருப்பது வழமை. இது கீளீன் - சுத்தமான ஆரிய பெண் காந்தாரிக்கு(கண்டகாரிப் பெண்) பெரிய இடைஞ்சலாக இருந்தது. இவள் தனது பலத்தை பயன் படுத்தி குந்தியின் கணவனான பாண்டுவுக்கு (இனம் கலந்த ஒரு பாண்டிய மன்னன்) அவளின் பழக்கங்கள் மீது குரோதம் ஏற்படுத்தினாள். போரில் சிறந்த வீரனான அரிச்சுனனின் பிறந்த நாளன்று பாண்டு தனது மற்றய மனவியுடன் அரண்மனையை விட்டு வெளியேறி காட்டுக்கு போயிருந்தான். காந்தாரி, அரிச்சுனன் பாண்டுவின் பிள்ளை இல்லை என்பதை காட்டி பாண்டுவை பிரித்து காட்டுக்கு அனுப்பிவிட்டாலும், அவன் தடம் புரண்டிடாமலிருக்க மற்ற மனைவியையும் சேர்த்துத்தான் அனுப்பிவிட்டாள். ஆனால் அவளோ உண்மையில் குந்தியுடன் சேர்ந்து திராவிட பெண் சுதந்திரதை அனுபவித்தவள். பேடியான பாண்டுவை விரும்பாத அவள் பாண்டு தூங்கும் போது தலைமீது பாறாங்கலோன்றை தூக்கி போட்டு கொலை செய்து விட்டாள்.(இதை கிருஸ்ணன் தனது ஆட்கள் மூலம் மாதிரிக்காகவும் குந்திக்காகவும் செய்தானா என்பது சந்தேகம், ஆனால் மாதிரி மட்டும்தான் பாண்டு தலை வெடித்து சாகும் போது அவனுடன் இருந்தவள் என்பதுதான் கதை).

கிருஸ்ணன் மெல்ல மெல்லமாக தெற்கு நோக்கிவரும் ஆரிய படையெடுப்புக்களை ஒரேதடவையாக தடுக்க வேண்டும் என்று விரும்பினான். இவன் தலைவர் பிரபாகரன் போல அடிமைத்தனத்தை வெறுப்பவனும், மது நுட்பம் மிக்கவனும், வீரனுமாவான். ஆனால் பாவம் பழிக்கு அஞ்சும்திராவிட ராணுவம் சுத்த மிருகங்களான ஆரிய ராணுவத்தின் முன் தாக்கு பிடிக்காது என்பதையும் அறிவான். இதனால் தந்தையின் உறவினரால் தமது உறவுகள் அல்ல என்று கழிக்கப்பட்ட அரிசுனனுக்கு தனது தங்கையை கொடுத்தான். (கிருஸ்ணன் நாட்டை காக்க சுபத்திரைக்கு உயிர் ஆபத்தான இந்த திருமணம் மணத்திற்கு போனான். அதானால் ஆரியர் அவள் பிள்ளையை இலக்கு வைத்து போரில் முடித்துக்கட்டி விட்டு கிருஸ்ணன் மீதி பழியை போட்டுவிட்டார்கள்). கிருஸ்ணன் தான் தொடங்கியிருக்கும் ஆபத்தான தொடக்கங்களிலிருந்து தன் மக்களைக்காக்க ஒரு தீவைத்தெரிந்தெடுத்து அதில் தன் அரசை நிறுவினான். இதிலிருந்து அவன் இரவுபகலாக உழைத்து ஆரியக்குடும்ப திராவிடக்குடும்ப கலப்பு இருந்த அரசர்களை சிண்டு முடிந்து மாபெரிய போர் ஒன்றை நிகழ்த்தினான். இதில் குருடனான் திருதுராட்டிரன் தப்பிவிட்டான். அவனை ஒருவழியாக காட்டுக்கு அழைத்து அங்கே தீவைத்து கொழுத்தினார்கள்.

இதில் கிருஸ்ணன் இலக்கு வைத்த பலரும் பூண்டொடு போய் முடிந்தார்கள். ஆனால் வடக்கிலிருந்து மாரிகாலத்து நதி போல பெருகிக்கொண்டிருந்த ஆரியரின் வருகை மட்டும் நிற்கவில்லை. அவர்கள் எல்லோரும் கிருஸ்ணனை பழிவாங்க தக்க தருணம் பார்த்துக்கொண்டு திரிந்தார்கள். கிருஸ்ணனுக்கு, ராஜராஜனுக்கு ராஜேந்திரன் வந்தது போல் ஒரு வாரிசும் வந்து கிடைக்கவில்லை. அவனும் வயதானான். கிழண்டினாலும் ஆரியர் அவன் மீது மிகுந்த கவனத்துடன் தான் நடந்து கொண்டார்கள். அவர்களின் எண்ணிக்கை திரும்பப் பெருகிவிட்டது. கிருஸ்ணனின் போறாதகாலம் பாரிய சுனாமி வந்து அவனுடைய தீவை அடித்துச் சென்றது. அஸ்ப்பட்ட கிருஸ்ணன் எஞ்சியிருந்தவர்களுடன் நாட்டுக்குள் ஓடிவந்தான். தருணம் பார்த்திருந்த ஆரியர் போரின் பழிவாங்கலாக தாம் எப்படி பூண்டோடு அழிபட்டார்களோ அப்படியே ஆயுதம் இல்லாமல், உண்ண உடுக்க இல்லாமல் அகதிகளாய் போய்விட்ட கிருஸ்ணனின் மக்களை கைக்குழந்தை வரை கொன்று பூண்டொடு அழித்தார்கள். கிருஸ்ணனுக்கு சுனாமியும் முள்ளிவாய்க்காலும் ஒருகிழமைக்குள் வந்தன. தலைவர் பிரபாகரனுக்கு வந்ததை விடகொடிய கூட்டு சேர்க்கை( 2004 சுனாமி, 2009 முள்ளிவாய்க்கால்) . அராவான், பீஸ்மர் போன்ற ஆரிய வீரர்களை போரின் போது கிருஸ்ணனின் கூட்டத்தவர்கள் வேண்டுமென்றே பலநாட்கள் குற்றுயிராக வைத்திருந்தார்கள். (ஏன் அப்படி செய்தார்கள் என்று கண்டு பிடிப்பது கஸ்டம்). அதற்குப் பழி வாங்கலாக அவனை வேண்டுமென்றே காயப்படுத்தி கடற்கரை சுடு மணலில் குற்றுயிராக போட்டுவிட்டு போய்விட்டார்கள் ஆரியர்கள். எவரும் காப்பாற்ற போக முடியாத நிலையில் கிழவனாகிவிட்ட கிருஸ்ணன் நாட்கணக்காக கடற்கரை மணலில் புண்களின் வேதனைகளுடன் வெய்யிலில் கிடந்து வறுபட்டு இறந்தான். ஆரியரை தடுத்து திராவிடத் தமிழரை காக்க போன கிருஸ்ணனின் கதை சரித்திரம் காணாத சோகமாக முடிந்து போனது. இந்த முடிவுக்கு பிறகு திராவிடர் ஆரியரிடம் கீழ்நிலைகளை விரும்பி ஏற்று அவர்களை தமது பிராமணர்களாக ஏற்றுக்கொண்டார்கள். (கவனிக்கவும்: அந்தணர், பிராமணர் என்பது திராவிடரின் படித்த ஜீவகாருண்ணியம் மிகுந்த சமயத்தலைவர்கள். இந்த வழமை இந்தியா தவிர உலகெங்கும் காணாதது. இது இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை. இவர்கள் தமது நிலைகளை பாபேறி ஆரியருக்கு விட்டுக்கொடுத்து மற்றைய மக்களுக்கும் உயிர்ப்பிச்சை வாங்கிக்கொடுத்தார்கள்) வியாசன் போன்ற படித்த திராவிடர் கிருஸ்ணனை தெய்வமாக மதித்து தமது கதைகளில் புனைந்துள்ளர்கள். இவன் ஒரு திராவிட அரசன். இவனுக்கும் சிவனுக்கும் நிறைய வித்தியாசம். சிவன் காலத்தில் அரசர்கள் சிந்து வெளியில் இருக்கவில்லை. சிவன் ஒரு பிராமணத் தலைவன். கிருஸ்ணன் போல உடுத்து நடத்தி பெண்களுடன் சல்லாபம் போடுபவன் இல்லை. சிவன் காலத்தில் திராவிடர் சரியாக உடுக்கக் கற்றுக்கொள்ளவில்லை. பருத்தி ஆடைகளுக்கு பதிலாக தோலைத்தான் உடுத்தார்கள்

Link to comment
Share on other sites

தூயவன், புங்கையூரன்,மல்லையூரான் உங்களது கருத்துகளுக்கு நன்றி. மல்லையூரான் நீங்கள் சொல்வது எனது பாட்டியிடம் கதை கேட்ட உணர்வைத் தருகிறது. எனக்கு புராணக் கதைகளில் நம்பிக்கை கிடையாது. ஆதலால் இலக்கியங்களையும், கல்வெட்டுகளையுமே ஆதாரமாகக் கொள்ள விழைகிறேன்.

தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5)

காடும் காட்டைச் சார்ந்த நிலத்திற்கு (முல்லை) உரிய தெய்வமாகத் மாயோன்(திருமால்) என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். மலையும்,மலையைச் சார்ந்த நிலத்திற்கு (குறிஞ்சி) உரிய தெய்வமாகத் முருகன் (சேயோன்) என்ற பெயரில் குறிப்பிடுகின்றார்.

‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனக் கூறுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தையே ஆகும். வேந்தன் என்ற சொல்,சங்க காலத்தின் தொடக்கத்தில் இனக் குழுவின் தலைவனையே குறித்தது.இந்திரனுக்கு வேந்தன் என்று பெயரிடப் பட்டுள்ளது. சேக்கிழார் தமது பெரியபுராணத்தில்

"உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு

இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்

தொழுது நாறு நடுவார் தொகுதியே

பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்" என்று மருத நிலக் கடவுளாக இந்திரனைக் கொள்கிறார்.

இந்திரனுக்குக் கோவில் இருந்தது. இந்திரனது ஆயுதம் வச்சிராயுதம் எனப்பட்டது. அதனால் இந்திரன் கோவிலை வச்சிரக் கோட்டம் என்றனர். ஆய் அண்டிரன் என்னும் அரசன் "வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலுக்கு" அதாவது வச்சிரக் கோட்டத்துக்கு வந்த போது அந்தக் கோவிலில் முரசம் முழங்கி வரவேற்றார்கள். (புற நானூறு - 241)

ஆக சங்க கால மருத நில மக்கள் இந்திரனை கடவுளாக வழிபட்டுள்ளனர்.வேதத்திலும் இந்திர வழிபாடு பற்றி கூறப்பட்டிருகிறது.

‘These, indra - vayu, have been shed; come for our offered dainties'

வேத கால இந்திரனும்,மருத நில இந்திரனுக்கும் என்ன தொடர்பு??

"ஆரியர் வணங்கிய கடவுளர் அவர்களது வழிபாட்டு முறை ஆகியவற்றின் பெரும்பகுதி தமிழர் அறிவியல் - மெய்யியல் சார்ந்தவையே. ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள், ஆரியர் - தமிழர் போர் குறித்தவை மட்டும் அல்ல. ஆரியர் தமிழரது மெய் யியலை ஏற்றுக் கொண்டு தமக்கான சமூகத்தை அமைக்கத் தொடங்கிய வரலாறும் அப் பாடல்களில் உள்ளது" என சில தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். உங்களது கருத்து என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு, ஆய்வுக்களத்தைத் திறந்து விட்டுள்ளீர்கள், ஆதித்த இளம்பிறையன்!

கீழேயுள்ள படம், ஹரப்பா அழிவுகளில் இருந்து எடுக்கப் பட்டது!

இதில் சிவலிங்கம், மிகவும் தெளிவாகத் தெரிகின்றது!

sivalinga.jpg

இரண்டாவது படத்தில், பத்மாசன நிலையில், ஒரு யோகி அமர்ந்திருப்பதையும், அவரைச் சுற்றி மிருகங்களும். பறவைகளும், பயமின்றி இருப்பதையும், இது ஒரு வனப்பகுதி என்பதையும் காட்டி நிற்கின்றது!

இதுவும் ஹரப்பா, அழிவுகளிலிருந்து பெறப்பட்டது!

PashupatiProtoshivaHarappa.jpg

மூன்றாவது படம், பச்சிமோந்தாசனம்' எனப்படும், யோகாசனத்தின் ஆரம்ப நிலையாகும்! இதுவும் ஹரப்பா நாகரிக, அழிவுகளிலிருந்து பெறப்பட்டது!

26.jpg

மேலுள்ள படங்கள், சிவனதும், யோகாவினதும், மூலத்தைக் காட்டி நிற்கின்றன!

அத்துடன், தாய்மையையும், நந்தியையும் இவர்கள், வழிபட்டதற்கான, ஆதாரங்கள் நிறைய உள்ளன!

சக்தி வழிபாட்டிற்கும், வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும், இருக்கவில்லை!

மாயோன் என்பது, திருமாலைக் குறிக்கின்றது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு சங்கப் பாடலில், முருகன், மாயோன் மருகனே என விழிக்கப் படுகின்றார்! எனவே, மாயோன் என்ற சொல், இந்திரனைக் குறிக்கலாம்!

அகத்திய முனிவரின், பொதிகை மலை வருகையின் பின்பு, இந்திரன் திராவிடர்களுக்கு, அறிமுகப் பட்டிருக்கலாம்! நீங்கள் கூறும், சங்க காலப் பாடல், முருகனையும் விழித்து நிற்பதால், இது முருகன், ஆரியர்களின் மருமகனாகிய பின்பு, பாடப் பட்டிருப்பதால், இந்திரன் இதனுள், வருவதில் ஏதும் புதுமையில்லை!

அத்துடன் வேதங்களில், குதிரைகள் நிரம்ப வருகின்றன! ஆனால், வேத காலத்தில், இந்தியாவில் குதிரைகள், இருக்கவில்லை!' அசுவமேத யாகம்' போன்ற ஒரு சடங்கு, இப்போதும் அயர்லாந்தில், அனுஸ்டிக்கப் படுகின்றது! இது தெள்ளத் தெளிவாக, இந்திரன் ஒரு ஆரியனே என்பதை, நிரூபிக்கின்றது!

இது தவிர, வேதங்களில் வரும், சரஸ்வதி அல்லது சரயு, நதியும், தற்போதைய ஆப்கானிஸ்தான், வழியாகவே ஓடியுள்ளதை, விண்வெளியில் இருந்து எடுக்கப் பட்ட படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன!

மன்னர்களின் ஆட்சிக்காலங்களில், மன்னரால் கொண்டாடப்படும் விழாக்களை, மக்கள் கொண்டாடுவதும் வழக்கம்! நாங்களும், சூரன்போர் கொண்டாடுகின்றோம்! ஆனால், பத்மாசுரன், ஒரு திராவிடன் என்பதை, நீங்கள் நிச்சயமாக மறுத்துரைக்க மாட்டீர்கள். இது போலத்தான், இந்திர விழாக்களும், என்பது எனது கருத்து!

உங்கள் பதிவுகளைத் தொடருங்கள்!

ஒரு திறந்த மனதுடன், ஆய்வில் இறங்கும்போது, பல மாயைகள், விலகும் சாத்தியங்கள் அதிகம் என எண்ணுகின்றேன்! நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சாய்பாபாவுக்கு சிவன் உருவம் கொடுத்துள்ளார்கள் என்று இந்த இந்த இணைப்பை பார்க்கவும்..http://www.saibabaofindia.com/shivaratri_shiva_sai_baba_wallpapers_mahashivaratri.htm

Link to comment
Share on other sites

1.முதலாவது படம் சரஸ்வதி நதி நாகரீக கருதுகோளர்களால் உபயோக்கிப் படுவது. இது ஒரு வலிந்த தத்துவம். ஆரியர் சிந்துவெளி வாசிகள் என்று காட்ட முயல்வது. சரஸ்வதிப் பள்ளத்தாக்குகள் நாகரிக தடயங்கள் காணப்படும் பகுதியுடன் சரியாக தொடுக்கவில்லை. வேதங்கள் நாகரீகம் அழிந்து 1000 வருடங்களுக்குபின் பிறந்தவை. எனவே வேதகால நதியை அதற்கு 1000 வருடம் முந்தைய நாகரீகத்துடன் இணைக்கும் போது கவனம் வேண்டும். இந்த படத்தின் உண்மைத்தன்மை கேள்விக்குறியானது. எங்கே எடுக்க பட்டது. எப்போது எடுக்க பட்டது. இதில் காணப்படுபவை கல்லா? களிமண்ணா? போன்ற கேள்விகள் எழவைக்கும். சிந்து வெளியில் காணப்பட்ட பட்ட சில பொருள்கள் பிற்காலம் அங்கே கொண்டு வரப்பட்டவை. மேலும் சிந்து வெளி வேலைப்பாட்டுப்பொருள்கள் எல்லாமே விளையாட்டு பொருள் பருமன் மட்டும்தான் கொண்டவை. சிவலிங்கம் களிமண் வணைதலுக்கு உகந்த உருவம் இல்லை. சுழல் அச்சு இருந்தா தெரியாது. சிந்து வெளியில் கல்லுருவங்கள் இருக்கவில்லை. மேலும் சிவலிங்கம் ஒரு குறியாக சொல்லப்படவில்லை. ஆண், பெண் இணந்த சந்தர்ப்பம் ஒன்று ஆகத்தான் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமான எனது கருத்து வேறு திரியில் காணப்படுகிறது.

2.மூனறாவது படம் பசுபதிக்கு முந்தைய கால உருவம். (2ம் கரப்பா காலம். கரப்பாவின் 4000 வருட சரித்திரத்தில் 3 அது முறை முழுதாக அழிந்த நகரம்). பசுபதி முதலா? யோகம் முதலா என்பது நிரூபிக்க படவேண்டியது. இந்த ஒருஉருவத்தை வைத்து அது யோகக் கலையின் பாகம் என்று முடிவுக்கு வருவதும், அதனால் அங்கே யோகக்கலை ஆரம்பித்துவிட்டது என்றும் வருவது அவசர முடிவு. யோகக்கலையை பற்றி சுற்றி கட்டப்படிருக்கும் கட்டுக்கதைகளை வேறு ஒருமுறை பார்க்கலாம். யோகாவின் இன்றைய வடிவம் பௌத்தர்களுடையது என்று நினைக்கிறேன்.

3. இரண்டாவது படம். பசுபதியின் முத்திரைகள் அல்லது களிமண் தட்டு வரைபுகள் பல வடிவங்களில் பலவேறு இடங்களில் பல பல சந்தர்ப்பங்களுடன் காணப்பட்டு கருதுகோள் நிலையை கடந்து ஐயம் திரிபற நிரூபிக்க பட்டுவிட்டது. இவை கரப்பாவின் மூன்றாம் வாழ்க்கை கால முத்திரைகள்.

1. சிந்து வெளி 5000 ஆண்டுகளுக்கு முந்தய நாகரீகம். இந்து சமய (பரந்த இந்திய சமயம் – Hindu Religion அல்ல ) அடித்தளம் அங்கே போடப்பட்டது. இது தமிழ்நாடு, வங்காளம், இலங்கை வரை பரந்தது. தமிழ்நாடு சற்று விலகி சிவனை முருகானாக வழிபடத்தொடங்கியது. வங்காளம் சக்திக்கு முன்னுரிமை கொடுத்தது. இலங்கை சிந்து வெளிச்சிவனை விடாமல் பற்றியிருந்தது. இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள் இதன் தொடர்ச்சி. இலங்கையில் கதிர்காமம், மாவிட்டபுரம் போன்றவை, 3000-4000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்களின் பழமையைக் கொண்டிராதவை. சிதம்பரம் போன்றவை 2000-2500 ஆண்டுகள் வரை பழமையானவை மட்டுமே. தமிழ் நாட்டின் முருகன் கோவில்கள்தாம் இலங்கையில் சிவன் கோவில்கள் மாதிரி காலம் குறிக்கப்படமுடியாதவை. (இலங்கை திராவிட கலம் முதல் வட இந்தியாவுடன் அதிசயிக்கதக்க தொடர்புகளை வைத்திருந்திருக்கிறது. ஆக மோதிக்கொண்ட இராமனும் இராவணனும், பாரதபோர் போலல்லாது, சிவபக்தர்களான திராவிடர்களே). நாம் சொல்லத்தக்கது என்னவென்றால் அகில இந்தியா, இலங்கை எங்கும் 4000-5000 வருடங்களுக்கு முன்னர் பரவியிருந்த சமயம், நாகரீகத்தின் உச்சியில் இருந்த சிந்துவெளி சிவாச்சாரியார்களிடமிருந்து படித்த தத்துவ உட்பொருளைக்கொண்டதே. தமிழ் நாடு மட்டும் சுட்டிக்காட்டத்தக்க சில வேறுபாடுகளை புகுத்தியிருந்தது.

2. வடக்கில் 3000 வருடங்களுக்கு முன்னர் புகுந்த ஆரியர் தமிழ் (அல்லது புறோட்டோ தமிழ் அல்லது திராவிட மொழி) மீது தமது இந்தோ இரானிய பாசையை ஏற்றி சமஸ்கிருத்தை படைத்தார்கள். இது 1000 வருடங்களில் வேதகால சமஸ்கிருதம் ஆயிற்று. எப்படி சமஸ்கிருதம் ஒரு கலப்பு மொழியானதோ, அதே போலவே வடக்கில் குடி கொண்ட மக்களின் சமயமும், கலாச்சாரமும் கலப்பாகிற்று. இந்த நேரத்தில் விளைந்த வேதங்கள் திராவிட சிவாச்சரியர்களின் தத்துவங்களின் மீது இரானிய கடவுள்களான பஞ்ச பூதங்களையும் ஏற்றி அமைக்கப்பட்து. வேதங்களின் அடிப்படை சிந்து வெளிச் சமயமே. பஞ்ச பூதங்கள் அல்லாத ஆரியத்தலைவர்களான இந்திரனும் உருத்திரனும் சிவைனின் பாணியில் (திராவிட வழமையில்) பின்னர் தெய்வங்களாகப் பட்டவர்கள். திராவிடர் துறவறத்தை போதித்தார்கள். திராவிடர், தலைவர்களின் பாதையின் படி சென்று ஏகாந்தத்தில் ஆன்ம ஈடேற்றத்தை தேடுபவர்கள். அவர்கள் பணத்தை தொழிலில் மட்டுமே தேடுபவர்கள். ஆரியர் பணத்தை வெற்றியில் தேடுபவர்கள். இதனால் இவர்கள், ஆன்மஈடேற்றத்தை விட 16 வகை செல்வத்தையும் இறைவனிடம் இருந்து பெற முயன்றார்கள். இவர்களின் தெய்வங்கள் நிஜமான பஞ்ச பூதங்கள். தலைவர்களை கும்பிடுவதை, தலைவர்களை பின்பற்றும் திராவிடரும், பஞ்சபூதங்களை கும்பிடும் ஆரியரும் சேர்ந்து இனங்கள் கலந்த பின் ஆரம்பித்தார்கள். இதனால்த்தான் ஆரியர்கள் பஞ்ச பூதங்கள் ஒவ்வொருவராகக் கும்பிட்டு பின்னர் இந்திரன் உருத்திரன் பிரமா என்று எல்லோரயும் கும்பிட்டு கடைசியில் எல்லோரையுமே கைவிட்டார்கள். சண்டமாருதமான வாயு கோபக்கார உருத்திரனானதும், வர்ணன் இந்திரனாதும் எல்லாம் தத்துவங்களை அறியாமல் ஆரியர் இயற்கைக்கு பயந்து பஞ்ச பூதங்களை வணங்கத்தொடங்கியதால் ஆகும். சிந்துவெளிநாகரீகம் கலைந்து 2500 ஆண்டுகளின் பின்னர் சிவன் திரும்ப ஆழுமை பெற்றது சிவனுடன், இயற்கை பயத்தால் அல்லாமல், “பிறப்பின் நோக்கம் ஆத்ம ஈடேற்றம்” என்ற தத்துவம் பிணைக்க பட்டிருந்ததாலேயே. புத்தர், சங்கரர், மகாவீரர், ராமகிருஸ்ணர் எல்லோருமே இந்தக் கட்சிதான்.

1. 5000 ஆண்டுகள் கடந்து விட்டது சிந்து வெளி அழிந்து.

2. 2700 ஆண்டுகள் கடந்து விட்டது வேதங்கள் இயற்றப்பட்டு.

3. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசன் வேதங்களையும் தொகுத்து பாரதத்தையும் இயற்றினான். கிருஸ்ணன். இப்படி ஒரு காலத்து மன்னன்.

4. முருகன் என்பது(பல தலைவர்கள் முருகன் ஆனார்கள் – சிவனுக்கும் உருத்திரனுக்குமிடையில் நடந்தது ஆள் மாறாட்டம், ஆனால் முருகனின் கதை சாயிபாபாக்களின் கதை போன்றது: ஒருவருக்கு பின் மற்றவர் ) காலம் குறிக்க முடியாத தமிழ்நாட்டு தலைவர்கள்.

5. இந்த நிலையில் தலைக்குள் வெளிப்பில்லாத புலவர்கள் மாயோன் மருகன் என்று பாடியிருந்தால், அது வடநாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சிவனுக்கு காலம் தெரியாத தென்நாட்டு முருகனை பிள்ளையாக்கி, 2500 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்திலிருந்த கிருஸ்ணனை மச்சானும் ஆக்கி விடாது. மூவருக்குமிடையில் 1000 ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமும், மைல் நீள தூரமும் இடைவெளி இருக்கிறது.

6. மேலும் வடமொழியில் புராணமாக இருப்பதுதான் தமிழில் இலக்கியம். வடமொழி புராணங்கள் ஆரியரின் சரித்திரங்களை கூறுவதோ, தமிழ் மொழி இலக்கியங்கள் திராவிட சரித்திரத்தை கூறுவதுமோ இல்லை. பல வடமொழி புராணங்கள் தமிழரால் இயற்றப்பட்டவை. தமிழ் இலக்கியங்கள் வடமொழி படித்த பண்டிதர்களால் இயற்றப்பட்டவை. எல்லாம் ஒரே வெளியிடுதாம். இவற்றை பிரித்து பார்ப்பதில் பொருள் இல்லை.

எனவே முருகன் ஆரியனா, சிவனும், திருமாலும் திராவிடரா என்று கேட்பதில் பொருள் இல்லை.

1.சிவனைச் சரியாக அறிய சிந்துவெளி பாசை மொழிபெயர்க்கப்பட வேண்டும்,

2.இராமாயணம், பாரதம் தூய திராவிட சரித்திரங்கள், திராவிடரால் இயற்றப்பட்டு ஆரியரால் திரிக்கப் பட்டவை. கிருஸ்ணனை அறிய புராணக்கதைகளை பகுத்தறிவுடன் படிக்க வேண்டும்.

3.கந்தன்(கார்த்திகேயன், காங்கேசன், கதிரவன்) என்பவன் தமிழ் நாட்டில் தாண்டாயுதனாக உடையின்றி பிறந்து தவழ்ந்து, வேலனாக கோவணத்துடன் விளையாடி, குமரனாக திருமணக்கோல உடை அணிந்து பெண் திருடி, வீரவாகுவாய் புராணகாலத் தளபதியாகி சூரபத்மனை கொன்று, முருகனாக நவீனகால சங்கம் வளர்த்து தமிழ் நாட்டைக் காத்தவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, நான் சொல்ல வருவதும் இதே தான்!

ஆரியர்கள், இந்தியாவுக்கு வரும்போது, குதிரைகளைத் தவிர வேறு எதுவுமே (பெண்களைக் கூடத்) தங்களுடன் எடுத்துவரவில்லை!

அவர்கள் வேதங்கள் உட்பட, அனைத்தும் இந்த, ஹரப்பா, சிந்துவெளி நாகரீகங்களில் இருந்து திருடப் பட்டவையே!

சரஸ்வதி நதியையும், அவர்கள் தங்களுடன் கொண்டுவரவில்லை! அது, இந்த, நாகரீகமடைந்த மனிதர்கள், வாழ்ந்த பகுதிகளுக்குள்ளாகவே ஓடியது!

துரதிஸ்ட வசமாக, இங்கு வாழ்ந்தவர்கள், அமைதியை மட்டுமே விரும்பினார்கள்! இயற்கையை மட்டுமே, வழிபட்டார்கள்!

இவர்களது மிச்ச சொச்சங்கள், இங்கே அவுசில் வாழ்கின்றன!

ஆரியர்கள் இவர்களது, கலாச்சாரங்களை மட்டும் களவேடுத்துச் செல்லவில்லை! இவர்களது பெண்களும், அவர்களுக்குத் தேவைப் பட்டது!

இங்கு வாழ்ந்தவர்களைக் கொள்வது அவர்களுக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை!

ஆயிரக் கணக்கான எலும்புக்கூடுகள், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப் பட்ட ஆதாரங்கள், இன்னும் இருக்கின்றன! இவர்கள் பஞ்சத்தாலோ, அல்லது கொள்ளை நோயாலோ அழியவில்லை! அந்த எலும்புக் கூடுகளின், அங்கங்கள் பல அவற்றுடன் காணப் படவில்லை!

இதை ஆராய்ந்து பார்க்க, இந்திய அரசு உங்களை அனுமதிக்காது! ஏனெனில் ஒரு விதத்தில், அந்தக் காலத்து முள்ளி வாய்க்கால் போன்றதே!

கடல் கொள்ளைக் காரர்களுக்கு, அரச அந்தஸ்துக் கொடுத்த, ஆரியத்தின் அண்மைக் கால வரலாறு, உங்களுக்குத் தெரியாததல்ல!

இப்போது தங்களைப் பிரமாவின் தலையில் இருந்து வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள், ஒருவரிலும் சுத்தமான ஆரிய ரத்தம் ஓடவில்லை! ஆரியர்களின், நிற முகூர்த்ததைத் தவிர!

அண்மைக் காலம் வரை, கேரளாவில், நம்பூதிரிப் பிராமணர்களுடன், ஒரு இளம்பெண் கலப்பது, ஒரு பெரிய குடும்பக் கவுரமாகக் கருதப் பட்டது! இதைத் தடுத்தி நிறுத்திச் சட்டம் போட்டவன், ஒரு முஸ்லிம் மன்னன்! நம்புவது கடினமாக இருக்கின்றதல்லவா?

ஒரு இத்தாலியப் பெண்ணின் குழந்தைகள், இந்தியாவை ஆள்வதில், இந்த ஆரிய எச்சங்களுக்கு, எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை!

ஏனெனில் இது ஒரு ஆரிய மாயை! இதிலிருந்து இந்தியா ஒரு நாளும் வெளியே வர மாட்டாது!

ஆதாரங்களை என்னால்த் தேடித்தர முடியும்!

ஆனால், இது ஒரு மேலோட்டமான, கருத்துக்கள விவாதம் மட்டுமே!

தங்கள், அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

எப்படி சாய்பாபாவுக்கு சிவன் உருவம் கொடுத்துள்ளார்கள் என்று இந்த இந்த இணைப்பை பார்க்கவும்..http://www.saibabaofindia.com/shivaratri_shiva_sai_baba_wallpapers_mahashivaratri.htm

[size=1]புத்தன் இதைப் பார்த்தல் சிரிப்புதான் வருகிறது. [/size]

Link to comment
Share on other sites

மல்லையூரான், புங்கையூரன் உங்களது பாரிய தகவலுக்கு மிக்க நன்றி. நான் சங்க இலக்கியத்திலும், அதையொட்டிய காலகட்டத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் தமிழர் மதத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதற்க்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள சிந்து சமவெளிக்கு என்னை இட்டுச் சென்று விட்டீர்கள். ஆதலால் என்னுடைய தேடல் களமும் பெரிதாகி விட்டது.

யூத, கிறித்துவ, இசுலாம் மாதங்கள் போல தமிழர் மதம் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை கொண்டிருக்கவில்லை. அது பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளது . நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டி உள்ளது நமது வேர்களை தெரிந்து கொள்ள. நான் நிரம்ப அறிய வேண்டி உள்ளது. அறிந்து கொண்டு பிறிதொரு சமயத்தில் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.