Jump to content

பின்நவீனத்துவம் – ஓர் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பின்நவீனத்துவம் – ஓர் அறிமுகம்[/size]

புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில்

வலப்பக்கமும். இடப்பக்கமும்

எல்லாமும் பார்த்துக்கொண்டு

எதிலும் கலக்காமல் நிற்கும்

ஒல்லிப் பனைகள் வரிசையில்

- தேவதச்சன்

“பின் நவீனத்துவம்” என்ற வார்த்தையை இன்றைய சூழலில் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப எந்த அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் என்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் “பின்” என்ற சொல் இருப்பதனால் அதை மேலும் மேலும் நவீனக் காலத்திலிருந்து பின்னோக்கிக் கொண்டுப்போவதற்கான ஒரு முயற்சி கூட நடக்கிறது. முதலில் அந்த வார்த்தை கடந்த இருபது ஆண்டுக்காலமாக செயல்பட்டு வந்த எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை குறிக்கப் பயன்பட்டது. அதற்கு பிறகு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திற்கு அந்த வார்த்தை கொண்டு செல்லப்பட்டது. கூடியவிரைவில் அந்த வார்த்தை கடந்த நூற்றாண்டுகளின் படைப்பாளிகளை குறிப்பிட நேர்ந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

உண்மையில் “பின்நவீனத்துவம்” என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப் போல, ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின்நவீனத்துவத்தை கொண்டிருக்கிறது எனக்கூறலாம்.

நவீனத்துவத்தின் பரவல் எல்லை :

வரலாற்று ஆய்வுகள் உண்டாக்கிய தீங்குகள் குறித்து நீட்சே எழுதிய “Thoughts out of season” என்ற நூலில், அவர் விவரித்துள்ளது போன்ற சிக்கல்கள் நிறைந்த சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து வந்திருக்கிறது. கடந்துபோன காலம் நம்மை கட்டுப்படுத்துகிறது, அதன் நிகழ்வுகள் நம்மை தொந்தரவு செய்கிறது, நம்மை மிரட்டுகிறது. நவீனத்துவம் வரலாறு சார்ந்த கடந்த காலத்தோடு தனக்கிருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நவீனத்துவமானது கடந்த காலத்தை, அதன் அடையாளத்தை துடைத்துவிடுகிறது. இன்னும் மேலே சென்று அதை உருத்தெரியாமலாக்கிவிட்டு “அரூபம்” (Abstract) என்ற ஸ்தானத்தை அடைகிறது. இதனை தாண்டி நவீனத்துவம் போக முடியாதா என்ற சிக்கலான கேள்விக்கான பதில் பின்நவீனத்துவத்தில் உள்ளது எனலாம்.

காலத்தோடு பின்நவீனத்துவத்தின் அணுகுமுறை:

பின்நவீனத்துவத்தில் கடந்த காலம் குறித்த அணுகுமுறை தங்கியுள்ளது எனலாம்.

கடந்த காலம் என்பது முடிந்துபோய்விட்ட ஒன்றல்ல, அதனை அங்கீகரித்து அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோருகிறது. அப்படியானதொரு மறுபரிசீலனை “கடந்தகாலத்தை” அறியாமையோடும், வெகுளித்தனத்தோடும் அணுகுவதாக இல்லாமல் முரண்நகையோடு (irony) அணுகுகிறது பின்நவீனத்துவம். அறியாமை, வெகுளித்தனத்தோடு அணுக முற்பட்டால் கடந்தகாலம் குறித்த சரித்திரத்தை நாம் பாடபுத்தகங்கள் வழியாக அறியலாம், படைப்புகள் வாயிலாக அல்ல.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் செதுக்கோவியங்களின் துணுக்குகளை ஒட்டி ஒட்டி உருவாக்கிய “சேர்க்கை ஓவியங்கள்” அல்லது “கொலாஜ்கள்” பின்நவீனத்துவம் சார்ந்தவைகளாக உள்ளன. ஏனெனில் அவற்றை விசித்திரமான கதைகளாக வாசிக்கமுடியும், கனவுகளை எடுத்துக் கூறுவனவாகக் கொள்ளமுடியும். அவை செதுக்கோவியங்களின் தன்மைகள் குறித்தொரு உரையாடலை எழுப்புகின்றன என்பதையோ அவை “கொலாஜ் ஓவியங்கள்” என்பதையோ புரிந்துக்கொள்ளாமலேயே கூட அவற்றை ஒருவர் பார்த்து விளங்கிக்கொள்ள முடியும். எழுத்தில், பின்நவீனத்துவம் வாசகர்களின் கனவுகளைக் கவர்ந்து, சந்தோஷமான வாசிப்பனுபவத்தை நல்குவதாக இருக்கிறது. வாசகர்களின் கனவுகளைக் கவர்வதென்பது அவர்களைத் தப்பிக்கத் தூண்டுவதென்று மட்டுமே அர்த்தமாகாது. அது, அவர்களை இறுதிவரை துரத்திச்செல்வதென்றும் கூட அர்த்தப்படலாம்.

பின்நவீனத்துவ நாவல்களின் அமைப்பு:

குறிப்பாக நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. அது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்றுசேர்ந்த முயற்சி. அதாவது ஒரு இசைக்கோர்வையை போல நாவல் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதுபோல காரண காரியங்களாகத் தொடரும் சம்பவங்களோ, நிகழ்வுகளின் வழியாக மட்டும் வளரும் கதைமுறையோ இனி அவசியமற்றது. அதற்கு மாறாக காரண காரியங்களுக்கு வெளியே முன் பின்னாக காலம் எப்படி கடந்து செல்கிறது என்பதையும் காலத்தின் பல்வேறு அடுக்குகள் எப்படி ஒன்றின்மீது ஒன்று படிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிதல் நாவலின் முக்கியப் பணியாகிறது.

லட்சியவாத உலகை சிருஷ்டி செய்வதோ அரசியல் கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை நிறுவுவதோ நாவலின் வேலையல்ல. மாறாக அரசியலின் ஆதார குணங்களான அதிகாரமும் வன்முறையும் பற்றி ஆராய்வது இங்கு நாவலின் முக்கிய பங்காகிறது. சரித்திரம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்ட மனச்சித்திரங்களை அழித்து புதிய சித்திரங்களை வரைவதில்தான் புனைவு வெற்றிப்பெறுகிறது எனத் தெரிவிக்கின்றன பின்நவீனத்துவ நாவல்கள். கற்பனையின் புதிய சாத்தியங்களை உருவாக்குவதும் அந்த சாத்தியங்களை மெய்மையோடு ஒன்றுகலக்கச்செய்து புனைவின் வழியாகவே உலகை எதிர்கொள்வதுமே நம் கால நாவல்களின் பிரதானப்பாடு என்றிவை வெளிப்படுத்துகின்றன.

மேற்கூறிய நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக:

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான ஜோஸ் சரமாகோ (Jose Saramago) (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்), 1995ல் எழுதிய “கல் தெப்பம்” (The Stone Raft), நம் காலத்திய முக்கியமான அரசியல் நாவலாகும். ஐரோப்பாவின் பைரீனி என்ற பகுதியில் ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சாலையில் சிறிய கோடு போல பிளவு ஏற்படுகிறது. அன்று ஒரு நாய் அதை கண்டு ஊளையிடுகிறது. இதை பற்றிய புகாரை அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் விஷயம் பெரிதாக வளர்ந்தவுடன் இதை வைத்துக்கொண்டு எப்படி சம்பாதிக்கலாம் என்று அதிகாரவர்க்கம் திட்டமிடுகிறது. பிரச்சனை தீரவேயில்லை. முடிவில் சாலையில் ஏற்பட்ட அந்த சிறிய பிளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பள்ளமாக விரிந்துக்கொண்டே போய் ஒரு நாள் ஒரு தெப்பம் மிதந்துப்போவது போல தனியே மிதந்து செல்லத்துவங்கிவிடுகிறது. இப்படி பிரிந்து செல்லும் கல்தெப்பத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு நாயும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த தெப்பம் தனியே ஊர்ந்துப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு அந்நகரின் நிர்வாகத்திலும் தனிநபர்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தும் விளைவுகளும் பிரிந்துசெல்லும் தெப்பத்திலுள்ள கதாபாத்திரங்களின் மனோநிலையும் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு தேசம் ஏதாவது ஒரு காரணத்தினால் துண்டிக்கப்பட்டு பிரிந்துபோகும் அபாயங்களின் பின்னணியில் இது போன்ற வேதனைகளும் வன்முறைகளும் உள்ளன என்று முன்னும் பின்னுமாக ஊடாடி நகர்கிறது நாவல்.

நேர்முகம் ஒன்றில் “சரமாகோ” இந்த நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் “ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே உள்ளன. இருப்பினும் கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு வழியாக இரண்டாக பிளவுப்பட்டு வருகின்றன. உண்மையில் ஐரோப்பா கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளியின் வழியாக பிளவுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் அவர்களின் அதிகார அரசியலும்தான்” என்கிறார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக பலமுறை சிபாரிசு செய்யப்பட்டவரும், இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளர் என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுபவருமான “மிலோராட் பாவிக்” பெல்கிரேடில் வசித்து வருகிறார். அவரது “கசார்களின் அகராதி” (Dictionary of the Khazars) என்ற நாவல் ஆண் பதிப்பு, பெண் பதிப்பு (male edition, female edition) என்று இரண்டு விதங்களில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் உள்ள வேறுபாடு ஒரேயொரு பத்தி மட்டுமே. அதாவது பதினேழு வரிகள் மட்டுமே.

இந்த நாவல் அகராதியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அகராதி கசார்கள் என்ற இனக்குழுவின் அறிவுத்திரட்டு போல புனையப்பட்டிருக்கிறது. மரபான அகராதியின் வடிவத்தில் இது எழுதப்பட்டிருப்பதால் எங்கிருந்தும் வாசிக்கும் சுதந்திரம் இந்த நாவலுக்கு ஏற்படுகிறது.

கசார்கள் என்ற இனக்குழு கருங்கடலுக்கு வடக்கேயுள்ள வோல்கா டெல்டா பிரதேசத்தில் வாழ்ந்த இனக்குழுவாகும். இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டுவரை வலிமையான அரசாட்சி புரிந்து வந்தனர். கசார்களின் அரசனொருவன் தான் கண்ட கனவிற்கு பலன் சொல்வதற்காக தனது தேசத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களை சேர்ந்தவரகளையும் அழைக்கிறான். அதன்படி யூதமதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்ற மூன்று மதப்பிரிவுகளின் பிரமுகர்களும் அரசனின் கனவை விளக்க முயற்சிக்கிறார்கள். மூவரில் எவருடைய விளக்கம் தன்னை திருப்தி செய்கிறதோ அவருடைய மதத்தை தனது தேசமே தழுவ செய்வதாக அந்த அரசன் அறிவிக்கிறான். இந்த சிறிய புனைக்கதையினை துவக்கமாகக் கொண்டு இந்நாவல் கசார்களின் வாழ்க்கை எப்படி மூன்றுவிதமான அறிவு முறையைக் கொண்டுள்ளது என்பதை தனித்தனி தொகுதிகளில் விவரிக்கிறது.

தனது எழுத்தைப் பற்றி “பாவிக்” குறிப்பிடுகையில் “எனது எழுத்து கட்டிடக் கலையும், ஓவியமும் ஒன்று சேர்ந்த இசைக்கோலம்” என்கிறார். நம்முடைய நாட்டார் கதைகளைப் போன்ற விந்தையான கதைப்போக்கும், கனவு நிலைப்பட்ட படிமங்களும், தத்துவத்தின் ஆழ்ந்த பார்வையும், மிகைக் கற்பனையும், சரித்திர உண்மைகளை மீள் ஆய்வு செய்வதும் இந்த நாவலின் தனித்துவமான அம்சங்களாகக் கொள்ளலாம்.

புரிதல் அணுகுமுறை:

பின்நவீனத்துவ நாவல்கள் எல்லாம் “குப்பைகள்”, “அசட்டுத்தனத்தின் உச்சம்”, “பேத்தல்கள்” என வெளிப்படும் வார்த்தைகள் அவற்றிடம் பரிச்சயமற்ற அறியாமையில் இருந்து வெளிப்படுபவை. “படைப்பை வாசித்துவிட்டு” புரியவில்லை என்று சொல்வது நாகரீகமாகிவிட்ட இன்றைய சூழலில், அந்தப் படைப்பு நாளையோ, அடுத்த வருடமோ, (நாம் உயிரோடு இருந்தால்) பத்து வருடங்களுக்கு அப்புறமோ நமக்குள் புரிதலை நிகழ்த்தலாம். அப்படியே புரியாமல் போய்விட்டால்தான் என்ன? வாழ்க்கையில் புதிர்வட்டத்திற்குள் எல்லா நிகழ்வுகளும் புரிதலின் அடிப்படையில்தானா நிகழ்கின்றன?

மொசைக் தளத்தில் வரையப்பட்ட ஓவியங்களென சிதறி கிடக்கும் பின்நவீனத்துவ நாவலின் பகுதிகள் வாசகனின் ஆழ்ந்த ஈடுபாட்டு அனுபவத்தையும், முன்முடிவுகளற்ற புரிதலையும் கோருகின்றன. அவையிரண்டும் ஒருசேர அமைகையில் நாவல் வாசகனின் மனதில் ஒன்றிணைக்கப்பட்ட சித்திரமாக, இணைவுபெற்ற புதிர்த்துண்டுகளில் ஒளிந்துக்கிடந்த புதையல் ரகசியமாக வாசகனை பரவசத்திற்குள்ளாக்குகிறது.

தன்னுடைய தாய்மொழியில் அல்லது தனக்கு பரிச்சயமான மொழியில் எழுதப்பட்ட நாவல்களை புரிந்துக்கொண்ட வாசகன், அதே அகந்தை மனநிலையில் ஒரு பின்நவீனத்துவ நாவலை அணுகும்பொழுது அது அவனுடைய “எட்ட நின்று குச்சியால் கிளறுவதே வாசிப்பு” என்ற மனோபாவத்தை பரிகசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால் கலவரமடைந்த வாசகன் அந்த பின்நவீனத்துவ நாவலை நிந்தித்து தூக்கி எறிவது இயல்பே. ஆனால் முன்முடிவுகளின்றி, அந்த எழுத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளும் ஒரு வாசக நாடோடிக்கு வாஞ்சையான அணைப்பும், ரசவாதம் சித்தித்த கிளர்ச்சியும் அளிக்கின்றன பின்நவீனத்துவ எழுத்துக்கள்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியாக எழுத்தாள நண்பரான திரு எஸ். ராமகிருஷ்ணனின் கூற்றோடு முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

“பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை, குகையை, கானகத்தை என எதையும் காணவோ அதன் நுட்பங்களை அறிந்துகொள்ளவோ விருப்பமற்று இருக்கிறார்கள். இதைவிடவும் விளையாட்டிலும், விஞ்ஞானத்திலும் ஆர்வமிருப்பவன் இலக்கிய ரசனை அற்றவன் என்ற ஒரு பொய்யான கற்பிதம் வேறு தமிழ் எழுத்தாளர்களை பீடித்திருக்கிறது. உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, பார்த்தல்மே, பிரைமோ லெவி போன்று சரித்திரத்தை மட்டுமல்லாது விஞ்ஞானத்தையே ஒரு புனைவாக உருமாற்றும் பின்நவீன எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட காலகட்டத்தில் நொய்ந்த வார்த்தைகளால் தமிழில் கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. “

நன்றிகள்:

1. திரு எஸ். ராமகிருஷ்ணன்

2. திரு. உம்பர்த்தோ எக்கோ

நூல் ஒப்பீடுகள்:

1. விழித்திருப்பவனின் இரவு – எஸ். ராமகிருஷ்ணன்

2. கால்வினோ கதைகள் – பிரம்மராஜன்

3. பிரைமோ லெவி கதைகள் – லதா ராமகிருஷ்ணன்

4. The castle of crossed destinies – Italo Calvino

5. If on a winter’s night a traveller – Italo Calvino

6. Reflections on the name of the rose (Umberto Eco)

http://pinnaveenathuvam.wordpress.com/2010/02/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e2%80%93-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கிருபன் அண்ணா இணைப்புக்கு.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக இவற்றை வாசிக்கின்றபோது தலை கிறுகிறுக்கின்றதில்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக இவற்றை வாசிக்கின்றபோது தலை கிறுகிறுக்கின்றதில்லையா??

இவற்றை வாசிக்காவிட்டால்தான் கிறுகிறுக்கும் ^_^
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் பின்நவீனத்துவம் என்டால் என்ன?

Link to comment
Share on other sites

:wub::rolleyes::unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முழுசுறீங்கள் சொல்லிப் போட்டு முழுசுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் பின்நவீனத்துவம் என்டால் என்ன?

உங்களை மாதிரி ஒருத்தர் நமது ஜீரோ டிகிரி புகழ் பின்நவீனத்துவ எழுத்தாளர் சாரு நிவேதிதாவைக் கேட்டபோது கிடைத்த பதிலைக் கீழே இணைத்துள்ளேன்! :icon_mrgreen:

----------------------------------------------------

அன்புள்ள சாரு

பின் நவீனத்துவம் என்றால் என்னவென்று எனக்கு சுருக்கமாய் விளக்க வேண்டுகிறேன்.

நன்றியுடன்

பொன்.சிவா.

என்னை என்ன எஸ். ராமகிருஷ்ணன் என்று நினைத்துக் கொண்டீர்களா? இப்படி என்னிடம் கேள்வி கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என் எழுத்தைப் படிக்காமல் இருப்பதே எனக்கும் நலம்; உங்களுக்கும் நலம். நான் இதுவரை 32 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாத விளக்கத்தை ஒரு கேள்வி பதில் மூலம் புரிந்து கொண்டு விடலாம் என்று எப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்; நான் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நான் என்ன டூரிஸ்டு கைடா? பருத்தி வீரன் படத்தில் ஒரு கட்டத்தில் ப்ரியா மணியை கார்த்தியோடு பழகாதே என்று சொல்லி அவருடைய பெற்றோர் அடிக்கும் போது அவர் கடும் கோபத்தில் ஆட்டுக்கறி குழம்பை சோற்றில் போட்டு முழுங்குவாரே, அப்படி முழுங்க வேண்டும் போலிருக்கிறது… உங்களை அல்ல; ஆட்டுக்கறிக் குழம்புடன் பிசைந்த சோற்றை…

------------------------------

Link to comment
Share on other sites

ஏன் முழுசுறீங்கள் சொல்லிப் போட்டு முழுசுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்

எனக்கும் அதே சந்தேகம்தான்.. அதுதான்.. :unsure:

நல்ல வேளை கிருபனிடம் நான் கேட்கவில்லை.. :D இப்ப நீங்கள் சாரு நிவேதிதாவின் 32 புத்தகங்களையும் படிச்சு எங்களுக்கு விளக்கம் சொல்ல வேணும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி ஒருத்தர் நமது ஜீரோ டிகிரி புகழ் பின்நவீனத்துவ எழுத்தாளர் சாரு நிவேதிதாவைக் கேட்டபோது கிடைத்த பதிலைக் கீழே இணைத்துள்ளேன்! :icon_mrgreen:

----------------------------------------------------

அன்புள்ள சாரு

பின் நவீனத்துவம் என்றால் என்னவென்று எனக்கு சுருக்கமாய் விளக்க வேண்டுகிறேன்.

நன்றியுடன்

பொன்.சிவா.

என்னை என்ன எஸ். ராமகிருஷ்ணன் என்று நினைத்துக் கொண்டீர்களா? இப்படி என்னிடம் கேள்வி கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என் எழுத்தைப் படிக்காமல் இருப்பதே எனக்கும் நலம்; உங்களுக்கும் நலம். நான் இதுவரை 32 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாத விளக்கத்தை ஒரு கேள்வி பதில் மூலம் புரிந்து கொண்டு விடலாம் என்று எப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்; நான் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நான் என்ன டூரிஸ்டு கைடா? பருத்தி வீரன் படத்தில் ஒரு கட்டத்தில் ப்ரியா மணியை கார்த்தியோடு பழகாதே என்று சொல்லி அவருடைய பெற்றோர் அடிக்கும் போது அவர் கடும் கோபத்தில் ஆட்டுக்கறி குழம்பை சோற்றில் போட்டு முழுங்குவாரே, அப்படி முழுங்க வேண்டும் போலிருக்கிறது… உங்களை அல்ல; ஆட்டுக்கறிக் குழம்புடன் பிசைந்த சோற்றை…

------------------------------

மன்னிக்க வேண்டும் கிருபன் கிரைம் அப்படி என்டால் என்ன என நான் கேட்டால் அதற்கு ராஜேஸ்குமாரின் நாவலைப் படித்துப் பார் தெரியும் என்பது மாதிரி இருக்குது உங்கள் பதில்.பரவாயில்லை விடுங்கோ ஒரு எழுத்தாளார் ஆகிய சாருவிற்கேற்கே பின்நவீனத்துவத்திற்கு வரைவிலக்கணம் தெரியவில்லை என்டால் உங்களுக்கு எப்படித் தெரியும்

எனக்கும் அதே சந்தேகம்தான்.. அதுதான்.. :unsure:

நல்ல வேளை கிருபனிடம் நான் கேட்கவில்லை.. :D இப்ப நீங்கள் சாரு நிவேதிதாவின் 32 புத்தகங்களையும் படிச்சு எங்களுக்கு விளக்கம் சொல்ல வேணும்.. :lol:

அப்பாடா ஒரே இரத்தம் :D :D :D

கிருபன் ஏற்கனவே இவ்வளவு நாவல்களையும்[32] படித்திருப்பார்...அவர் வந்து வரைவிலக்கணம் சொல்லுவார் என எதிர் பார்ப்போம்

Link to comment
Share on other sites

பின் நவீனத்துவம் எண்டா எப்படிச்சொல்ல... ம்ம்ம்

பின் நவீனத்துவம் எண்டா .... பின் நவீனத்துவம் தான்..

இதைவிட எனக்கு சொல்லத்தெரியவில்லை :)

Link to comment
Share on other sites

ரதி,

உங்கள் கேள்விக்கான சுருக்கமான பதிலாக எனது புரிதலிற்குட்பட்டவரை இப்படிச் சொல்லாம் 'பின்னவீனத்துவம் என்றால் என்ன என்று முடிந்த முடிபான ஒரு வரைவிலக்கணம் சொல்லி முடிக்கப்படுகின்ற அதே நொடியில் அந்த வரைவிலக்கணத்தைப் பின்நவீனத்துவம் கேள்விக்குட்படுத்தத் தொடங்கிவிடும்.'. சுருக்கமாகச் சொல்வதானால் அனைத்து வரைவிலக்கணங்களையும், பெறுமதிகளையும், பார்வைகளையும், புரிதல்களையும் கேள்விக்குட்படுத்திப் புதிய கோணங்களில் சிந்திக்கத் தலைப்படும் தன்மையினைக் குத்துமதிப்பாகப் பின்நவீனத்துவம் என்று சொல்லலாம் என நினைக்கிறேன். கொஞ்சம் செக்சியாச் சொல்லுறதென்றால், பெருங்கதையாடல்களைத் துகிலுரித்தல் எனலாம். இன்னும் சொல்வதானால் எந்தச் சிந்தனையும் புத்தம் புதியதுமல்ல முடிந்தமுடிபான உண்மையுமல்ல என்ற ரீதியில் விடயங்கள் அணுகப்படுவதைக் குறிப்பிடலாம். மொத்தத்தில் விழிப்புணர்வோடு, கடிவாளத்தைக் கழட்டி எறிஞ்சுபோட்டு ஆழமா, விரிவா, பரந்து சிந்திக்கத் தலைப்படுவதைக் குறிப்பிடலாம்.

நீட்சே பின்நவீனத்துவத்திற்கு முந்திய அதற்கு பாதை அமைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறது. இருப்பினும் 1979ம் ஆண்டில் வெளியான ஜோன்-பிறான்சுவா லயற்ராடின் 'பின்நவீனத்துவ நிலமை: அறிவு பற்றி ஒரு அறிக்கை' என்ற நூலைத் தொடர்ந்தே பின்நவீனத்துவம் என்ற சொல் பெரிதாக பரிட்சயமானது. பொதுவாக சில பிரஞ்சுக் சிந்தனையாளர்களும் இத்தாலிய சிந்தனையாளர்களும் பின்நவீனத்துவத்தின் முன்னோடிகளாகக் கருதப் படுகின்றனர். குறிப்பாக மிnஷல் பூக்கோ (என்னில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய ஒற்றைச் சிந்தனையாளர் என்று ஒருவரைக் கூறச்சொன்னால் பூக்கோவைத் தான் கூறுவேன்). ஜாக் டெறிடா, ஜான் பிரான்சுவா லயற்ராட், றிச்சாட் றோட்டி ஆகிறோரைக் கூறலாம். அத்தனை துறைகளிலும் ஒவ்வொருவரை அந்தத் துறைக்கான பின்னநவீனத்துவத்தை ஆரம்பிச்சு வைச்ச பெருந்தகை என்று சொல்லப்படுகின்றது. உதாரணமாக, லென்ற்றிச்சியா கற்றல் மற்றும் சட்ட விமர்சனம், கத்தறீன் மக்கினன் மற்றும் ஆன்ட்றியா ட்வோக்கின் பெண்ணியல் சட்ட விமர்சனம், ஜாக் லகான் உளவியல், றோபேர்ட் வென்ச்சூறி மற்றும் ஆன்ட்றேயஸ் ஹஸ்ஸென் கட்டிடக்கலை விமர்சனம் மற்றும் லூசி இறிகறே விஞ்ஞானம் சார்ந்த விமர்சனம் என்பனவற்றைக் கூறலாம்.

எம்மவர்கள் மத்தியில் பின்நவீனத்துவம் என்பது பெரும்பாலும் இலக்கியம் சார்ந்து தான் பேசப்படத்தொடங்குகிறது. இலக்கியத்திற்குள் மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளும் உள்ளடக்கப்படுவதால் இப்படி இருக்கிறது.

எந்த மரபில சிந்திக்கிறோம் என்பது அவசியமற்றது...நாங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும்வரை.

------

தமிழ் வானொலி ஒன்றைக் கேட்டதால வந்த கடுப்பில, தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத எனது வெப்பியாரத்தையும் பின்னூட்டத்தில் சேர்த்திருந்தேன். இப்ப கொஞ்சம் கூல் டவுன் ஆன பின்னர், அதை தேவயற்ற சேர்க்கை என்று படுவதால் அப்பகுதியினை நீக்குகிறேன். ஒருவர் கருத்திட்டபிறகு நீக்குவது கள விதிக்குப் புறம்பானது என்பதை உள்வாங்கி, எனது பின்னூட்டத்திற்கு இடப்பட்ட கருத்திற்குச் சம்பந்தமற்ற பகுதி மட்டும் நீக்குகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் அருமையான நீண்டதொரு விளக்கத்தைத் தந்துள்ளீர்கள் நன்றி...இப்பத் தான் கொஞ்சம்,கொஞ்சமாக புரிகிறது :)

Link to comment
Share on other sites

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

பின்நவீனத்துவம்[size=4]http://tawp.in/r/oex[/size]

[size=3]

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.[/size]

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் [மாடர்னிசம்] என்று சொல்லப்படுகிறது. அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.

நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை [பைனரி] பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.

பின் நவீனத்துவம் அதை மறுக்கிறது. பின்நவீனத்துவம் நான்கு விஷயங்களை மறுக்கிறது. 1. அது எதையும் உலகளாவியதாக பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்கிறது. வட்டாரப்படுத்துகிறது 2. அது வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது. 3. அது இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண்இருமைகளை அது மறுக்கிறது மையநோக்கை ஏற்பதில்லை. மையம் அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது என நினைக்கிறது 4. எல்லாவற்றையும் முழுமையாக தர்க்கப்படுத்தமுடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம்போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] என்று சொல்கிறார்கள்.

தமிழில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்தவர்கள் தமிழவன், நாகார்ஜுனன், பிரேம் ரமேஷ், க பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாராசாமி போன்றவர்கள். அதை எதிர்த்து எழுதியவர்கள் எஸ்.வி.ராஜதுரை போன்ற மார்க்ஸியர்கள் ,சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி போன்ற அழகியல்வாதிகள். ஞானி அதை மார்க்ஸியத்துடன் இணைத்து சிந்தனைசெய்தார்.

கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர்.

பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட், பௌதலியார்ட்,டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.

இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது. ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.

இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. பின்நவீனத்துவம் இலக்கியத்தில் ஒருங்கிணைவுள்ள பிரதிக்கு எதிராக பேசியது. ஆகவே சிதறுண்ட வடிவம் கொண்ட நூல்கள் பல உருவாயின. பிரேம் ரமேஷின் எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல் சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி போன்றவை இவ்வகை நாவல்கள்

பின்நவீனத்துவம் மீபுனைவு [மெடபிக்‌ஷன்] களை உருவாக்கியது. கதைசொல்லுவதையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதுவதைப்பற்றியே எழுதக்கூடிய புனைவுகள் இவை. உள்ளுக்குள்ளேயே சுழலக்கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம்,சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், பின்தொடரும் நிழலின் குரல் யுவன் சந்திரசேகரின் மணற்கேணி, வெளியேற்றம் முதலியவை இவ்வகைப்பட்டவை.

பின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. ஜெயமோகனின் கொற்றவை அவ்வகைப்பட்டது. அது சிலப்பதிகாரத்தை மீண்டும் எழுதுகிறது. பின்நவீனத்துவம் வரலாற்றை திரித்து சுதந்திரமாக எழுதும் வகையை அறிமுகம் செய்தது. பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை உதாரணம்

பின்நவீனத்துவம் மொழியை சிதைப்பதும், கதைகளை சிதைப்பதும், மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவதும் ஆன புதிர்தன்மைகொண்டதாக புனைவுகளை படைத்தது. கோணங்கியின் பாழி, பிதிரா நாவல்களும், உப்புகத்தியில் மறையும் சிறுத்தைகள், பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைகளும் இவ்வகைப்பட்டது. வாசக்களை தீவிரமாக சிந்திக்கத்தூண்டும் புதிர்நடை எழுத்துவகையைச் செர்ந்தவை.

ஆனால் பின்நவீனத்துவ இலக்கியம் என ஒன்று இல்லை. பின்நவீனத்துவ சாயல் கொண்டவை என்று மட்டுமே படைப்புகளை அடையாளம் செய்ய முடியும்.

[size=3][தொகு][/size]பின்நவீனத்துவம் மீதான விமர்சனங்கள்

அலன் சோகல், என்ற பௌதீகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றை சமூகப்பிரதி (Social Text) என்னும் சஞ்சிகை பிரசுரித்தது. அது ஒரு நையாண்டிப் போலிக் கட்டுரையாகும். லக்கான், ஜூலியா கிறிஸ்தோவா, இரிகரி, புரூனோ லத்தூர், போத்ரியால், டெல்யூஸ், கட்டாரி, போர்ல் விரிலியோ ஆகிய பின்னவீனத்துவம் சார் தத்துவவியலாளர்கள் கணிதம், பௌதீகம், உயிரியல், மொழியியல் போன்ற துறைசார் சொற்களையும் சமன்பாடுகளையும் முறையற்றுப் பயன்படுத்துகின்றார்கள் என்ற விமர்சனத்தின் பால் இக்கட்டுரையை அலன் சோகல் எழுதினார். அவர் பொய்யாக தகவல்களைக் கொடுத்து எழுதிய கட்டுரையை எவ்வித சரிபார்ப்பும் இல்லாமல் சமூகப்பிரதி பிரசுரித்தது. சொக்கல் அதன் பின் தான் எழுதியது பின்நவீனத்துவத்தை அம்பலப்படுத்தவே என்று வெளிப்படுத்தினார்

பின்நவீனத்துவம் மார்க்ஸியத்தை நிராகரிக்கிறது. காரணம் அது வரலாற்றுவாத நோக்கு உள்ளது என்பதே. மார்க்ஸியர்கள் பின் நவீனத்துவத்துடன் உரையாடியதன் விளைவாக உருவானதே புதுவரலாற்றுவாதம். அவர்கள் பின்நவீனத்துவத்தை நிராகரிக்கிறார்கள்.

[size=3][தொகு][/size]இணைப்புகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பின்னவீனத்துவம் என்றால் என்ன என்று முடிந்த முடிபான ஒரு வரைவிலக்கணம் சொல்லி முடிக்கப்படுகின்ற அதே நொடியில் அந்த வரைவிலக்கணத்தைப் பின்நவீனத்துவம் கேள்விக்குட்படுத்தத் தொடங்கிவிடும்.'.

நன்றிகள் இன்னுமொருவன். 3-4 வரிகளில் பின்நவீனத்துவத்துக்கு இலகுவான விளக்கம் கொடுக்கமுடியாதென்பதால் எப்போதோ வாசித்த சாருநிவேதிதாவில் பதிலை வெட்டி ஒட்டியிருந்தேன்.

யதார்த்தமான, விஞ்ஞானபூர்வமான விளக்கங்களையும் பின்நவீனத்துவம் கேள்விக்கு உட்படுத்தும். முழுமையாகத் தெரியும் என்று நம்புவைக்குள்ளும் புதிர்கள் உள்ளன என்று சொல்லும்!

Link to comment
Share on other sites

பின் நவீனத்துவம் என்பதன் ஆங்கிலப் பதம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக இவற்றை வாசிக்கின்றபோது தலை கிறுகிறுக்கின்றதில்லையா??

புரியாததை படிச்சு.. புரியாத மாதிரிக்கு எழுதி.. தங்களை வித்தகர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பிறவை பழைய காலத்தில இருந்து வளர்ந்து வருகினம். இப்பவும் அப்படியான ஆக்கள் இருக்கினம். என்ன பிரச்சனை என்றால் அவை மற்றவர்களுக்கு புரியாமல் பேசுறதை.. நீங்கள் எளிமைப்படுத்திச் சொல்லிட்டீங்கன்னா.. அவைக்கு சுர் என்று கோவம் வரும்..!

மரபுக் கவிதை.. புதுக் கவிதை போல...! மரபுக் கவிஞர்கள் என்போர் புதுக்கவிதை எழுதிறவையை.. முட்டாள்கள் என்பினம். இவைக்கு எல்லாம் நவீனத்துவமாக வந்துள்ளதே கிறுக்கல் கவிதைகள்..! மிக எளிமையா.. கிறுக்கிட்டு போயிடுவாங்க.. மக்களும் எளிதாக விளங்கிக் கொள்வாங்க..! மக்கள் எதனையும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்று விரும்புற ஒரு கூட்டத்தின்.. வித்துவத்தனம் தான்... இந்த நவீனத்துவங்கள்..! ஆனால் கிறுக்கல் கவிதைகள் இவற்றில் இருந்து மாறுபட்டுள்ளன.

இந்த விளங்காத வித்துவத்தனங்கள்..என்றுமே முடிவை எட்டப் போவதில்லை. ஏனெனில்.. தத்துவம்.. முடிவாகனுன்னா.. ஆராய்ச்சி செய்யனுமே. அது முடியாதே. தத்துவமா பேசிட்டு இருக்க வேண்டியது தான்.. சாவு மட்டும். அது மற்றவனுக்கு விளங்காத வரை.. தான்.. இவை தங்களை தாங்களே பெரியாக்கள் என்று நினைச்சுக்க முடியும்.

அதுவே மற்றவனுக்கு எளிமையா விளங்கிட்டென்னா.. இவைட நிலை..?????!

இங்கு யாழிலும்.. ஒரு கூட்டம் பேர் இருக்கிறார்கள்.. இந்த வகைக்குள்...! மற்றவனுக்கு விளங்காத மாதிரிக்கு.. தங்களுக்கு விளங்கின மாதிரிக்கு.. எழுதிறது...! உண்மையில மற்றவனுக்கு விளங்கினாத் தானே பிரச்சனை.. கேள்வி கேட்பான்.. விமர்சிப்பான். விளங்காத மாதிரி விளங்காததை எழுதினாலும்.. வித்துவர்கள் என்ற முடியை சூடிக்கொள்ளலாம் எல்லோ..! பிரச்சனை வராது. இவர்கள் தான் "தத்துவ ஞானிகள்" எனப்படுவோர்..! :D:icon_idea:

Link to comment
Share on other sites

பின்னவீனத்துவம் எண்பதுகளில் ஆரம்பித்ததென்றால், தற்சமயம் புதிதாக ஏதோ ஒன்று ஆரம்பிதித்திருக்கும். அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியாததை படிச்சு.. புரியாத மாதிரிக்கு எழுதி.. தங்களை வித்தகர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பிறவை பழைய காலத்தில இருந்து வளர்ந்து வருகினம். இப்பவும் அப்படியான ஆக்கள் இருக்கினம். என்ன பிரச்சனை என்றால் அவை மற்றவர்களுக்கு புரியாமல் பேசுறதை.. நீங்கள் எளிமைப்படுத்திச் சொல்லிட்டீங்கன்னா.. அவைக்கு சுர் என்று கோவம் வரும்..!

மரபுக் கவிதை.. புதுக் கவிதை போல...! மரபுக் கவிஞர்கள் என்போர் புதுக்கவிதை எழுதிறவையை.. முட்டாள்கள் என்பினம். இவைக்கு எல்லாம் நவீனத்துவமாக வந்துள்ளதே கிறுக்கல் கவிதைகள்..! மிக எளிமையா.. கிறுக்கிட்டு போயிடுவாங்க.. மக்களும் எளிதாக விளங்கிக் கொள்வாங்க..! மக்கள் எதனையும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்று விரும்புற ஒரு கூட்டத்தின்.. வித்துவத்தனம் தான்... இந்த நவீனத்துவங்கள்..! ஆனால் கிறுக்கல் கவிதைகள் இவற்றில் இருந்து மாறுபட்டுள்ளன.

இந்த விளங்காத வித்துவத்தனங்கள்..என்றுமே முடிவை எட்டப் போவதில்லை. ஏனெனில்.. தத்துவம்.. முடிவாகனுன்னா.. ஆராய்ச்சி செய்யனுமே. அது முடியாதே. தத்துவமா பேசிட்டு இருக்க வேண்டியது தான்.. சாவு மட்டும். அது மற்றவனுக்கு விளங்காத வரை.. தான்.. இவை தங்களை தாங்களே பெரியாக்கள் என்று நினைச்சுக்க முடியும்.

அதுவே மற்றவனுக்கு எளிமையா விளங்கிட்டென்னா.. இவைட நிலை..?????!

இங்கு யாழிலும்.. ஒரு கூட்டம் பேர் இருக்கிறார்கள்.. இந்த வகைக்குள்...! மற்றவனுக்கு விளங்காத மாதிரிக்கு.. தங்களுக்கு விளங்கின மாதிரிக்கு.. எழுதிறது...! உண்மையில மற்றவனுக்கு விளங்கினாத் தானே பிரச்சனை.. கேள்வி கேட்பான்.. விமர்சிப்பான். விளங்காத மாதிரி விளங்காததை எழுதினாலும்.. வித்துவர்கள் என்ற முடியை சூடிக்கொள்ளலாம் எல்லோ..! பிரச்சனை வராது. இவர்கள் தான் "தத்துவ ஞானிகள்" எனப்படுவோர்..! :D:icon_idea:

புறோ...விழங்காதவற்றை கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது....மற்றவர்களை தப்புத் தப்பாகவே புரிந்து கொண்டு எழுதினால் நம்மை போன்றவர்களுக்கு எழுத வாற மனமும் வேணாம் என்று தான் போகும் இல்லையா..... தங்களால் முடிந்தளவுக்கு ஏதோ ஒரு விடையத்தை சொல்ல வருகிறார்கள் என்ற புரிந்துணர்வாவது அனைவர் மத்தியிலும் இருக்கவேணும் என்று ஆசைப்படுறன் அண்ணா...இல்லையேல் எழுத்துக்கு முழுக்கு போடத்தான் வேணும்..எழுத வேணும் என்ற உணர்வு எப்போதும் வராது...பிறந்து வரும் போதே எல்லோரும் எல்லா விடயத்திலும் நிபுணத்துவம் பெற்றுவருவதில்லை..அவர்,அவர் தங்களுக்கு என்ன மனதில் தோன்றுதோ அதைத் தானே செய்ய முடியும்..நான் கோவிக்க இல்லை..ஆதங்கத்தை சொல்லக் கூடிய இடம் என்ற காரணத்தினால்,எனக்கு சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு சொல்கிறன்..
Link to comment
Share on other sites

இசை,

பின் நவீனத்துவத்தின் ஆங்கிலம் Postmodernism.

தப்பிலி,

பின்நவீனத்துவம் என்பது சிந்தனை மாற்றம் ஒன்றின் போக்ககையும் அப்போக்கின் ஆரம்பத்தின் காலத்தையுமே குறிக்கிறது. கட்டமைப்புக்களை அமைத்து, காரணம் என்ற ரீதியில் விடயங்ளை முடிந்தமுடிபாகக் காட்டி வந்த பிளேட்டோ தொட்டு இருந்து வந்த பாரம்பரியத்தில் ஒரு புரட்சியாக அமைந்த சிந்தனைத் தன்மையின் ஆரம்பம் தான் போஸ்ற்மொடேனிசம். ஆனால், ஒருவர் தான் சிந்திப்பது பின்நவீனத்துவமா என்று சரிபார்த்துக் கொள்வதற்காக பைபிளைப் போன்றோ குரானைப் போன்றோ பின்நவீனத்துவ ஏற்பாடு என்று ஒன்று சாத்தியமில்லை. ஒரு தடம் அமைத்து அந்தத் தடத்தில் கட்டமைப்பிற்குள் சிந்திச்சுக்கொண்டிருந்த மனிதனை, தடத்தில் இருந்து விலக்கி, அணை உடைத்து, நடக்காத பாதைகளில், சரிவுகளில் பள்ளத்தாக்குகளில், நீரோடைகளில் எத்தித் தள்ளப்பட்டு அலைந்து திரியத் தொடக்கிய சிந்தனை முறையின் ஆரம்பத்தைத் தான் இது குறிக்கிறது. பின்நவீனத்துவம் என்பது உண்மையில் ஒரு சிந்தனை மாற்றத்தின் காலத்தைத் தான் சுட்டுகிறது.

ஆரம்பத்தில் சைக்கிள் ஓடப்பழகுகையில் சீற்றில் இருந்து ஓடிவிடவேண்டும் என்று அவாவாக இருக்கும். ஆனால் முதன் முதலில் கையைவிட்டுட்டு சைக்கிள் ஓடிய அன்று எமது மனம் எப்படிப் பறக்கும். ஒரு விட்டு விடுதலையான நிலை. ஓல்லிக்கோம்பை கட்டி நீச்ல் பழகியவர் நன்றாக நீச்சல் பழகியபின் பாறையில் இருந்து திடமாக நீரில் குதிப்பதைப் போல, அல்லது நீச்சல் தெரியாதிருந்தவர் வாழ்வின் நடுப்பகுதியில் நீச்சல் கற்றதைப் போன்ற ஒரு நிலை. இந்தச் சிந்தனை மாற்றம் மனதிற்குள் வரத்தொடங்கிவிட்டால் அதன் பிறகு அடுத்த புதிய 'இசம்' என்ன என்ற தேடல் தேவை அற்றது. மனம் அலைபாய்ந்து ஒரு சமநிலைக்கு வரும், வந்த மாத்திரத்தில் புதிய சமநிலை சாhந்;த விசாரணைகள் அந்தச் சமநிலையை உடைச்சுப் புதிய சமநிலை ஒன்று நோக்கி நகரும். மொத்தத்தில் 'பெருங்கதையாடல்கள்' என்று சொல்லப்படுகின்ற இது இப்படித்தான் என்ற தடத்தில் இருந்து விலகி, கட்டமைப்புக்களை விட்டு விடுதலையாகி வாழ்வைப் பார்க்க ஆரம்பிக்கையில் வாழ்வு போரடிக்காது போகும் என்பது மட்டுமன்றி வாழ்வின் பல சிக்கல்கள் இலகுவில் தீர்க்கப்படும். மற்றும் எரிச்சல் போட்டி பொறாமை என்று சதா மற்றறவரைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு தாமும் உழன்று வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பெருமூச்சும் காழ்ப்புணர்ச்சியுமாக வலம் வரும் பலர் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இவர்களின் அடிப்படைப் பிரச்சினை தேய்ந்து போன தடத்தை விட்டு வெளிவரப் பயப்படும் மனநிலை. ட்றெயினிங் வீல் கழட்டாமல் மூன்றுசக்கர துவிச்சக்கர வண்டியினை முப்பது வயதிலும் ஓடிக்கொண்டிருந்தால், கையை விட்டுட்டுச் சைக்கிள் ஓடுறவனைப் பாத்துப் பொறாமையும் காழ்ப்புணாச்சியும் வருவது தவிர்க்க முடியாதது. ஆனால் விழுவதற்குப்பயப்பட்டால், வாழ்வில் ட்றெயினிங் வீலை என்றும் கழட்டவே முடியாது.

பூக்கோவைப் பற்றி எனது முதலாவது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். மனநோயாளிகள் காப்பகம் மற்றும் சிறை சார்ந்து பூக்கோ அதிகாரத்தை ஆராய்வதை உண்மையில் புரிந்து வாசித்து முடிக்கும் எவராலும் அதன்பின்னர் தான் வாழ்வில் முன்னர் இருந்ததைப் போல இருக்கமுடியாது. ஒரு அடிப்படைச் சிந்தனை மாற்றம் நிரதந்ரமாக உள்ளிற்குள் நிகழ்ந்து விடும். பின்னர் எதைப் பார்த்தாலும், எந்தவித முயற்சியும் தேவை இன்றி புதியகோணங்கள் தானாகத் தெரியத் தொடங்கும. 'பெட்டிக்கு வெளியே சிந்திக்க வேண்டும்' என்பது எந்த ஆராய்ச்சியாயினும் கோருகின்ற விடயம். ஆனால், குந்தி இருந்து, வியர்க்கவியர்க்க முயற்சி செய்து, மந்திரம் போல மனதுக்குள் நான் 'பெட்டிக்கு வெளியே சிந்திக்கவேண்டும்' என்று ஓதிக்கொண்டு, புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துத் தான் சிந்திக்கலாம் என்றால் அது சிந்தனையும் இல்லை அதில் இன்பமும் இல்லை. சிந்தனை என்பது தானாக, ஒரு சுரப்பைப் போலப் பிறக்கவேண்டும். அதுமட்டுமன்றித் தனது சிந்தனையைத் தானே கேள்விக்குட்படுத்தவும், தனது முதன்மை விமர்சகனாகத் தானிருக்கவும் முடியவேண்டும். போஸ்ற்மொடேர்ணிசம் அவ்வாறான ஒரு போக்கைச் சுட்டுகிறது.

ஆனால், உலகில் அனைத்தைப்போலவும், பின்நவீனத்துவம் சார்ந்தும் விமர்சனங்கள் இருக்கின்ற. குறிப்பாக பழமைவாதிகள், புனித வியாபாரிகள், தேய்ந்த தடங்களைக் குத்தகைக்கெடுத்தவர்களிற்குப் பின்நவீனத்துவம் ஒரு பிரச்ச்pனை. அதுமட்டுமனிறி பின்நவீனத்துவத்தை ஒரு மதம்போல பார்ப்பதுமு; காரணம். பெண்ணியலில் ஆன்ட்றியா ட்வோக்கின் பலரால் ஒரு மனநிலை பிறழ்ந்தவர் என்ற அடிப்படையில் திட்டப்படுகிறார். சர்ச்சைக்குரிய இவரின் கூற்றுக்களில்; ஒன்று,

'ஆணிற்கும் பெண்ணிற்குமிடையேயான மோதல் குரூரமானது. ஒரு சாதாரண ஆணின் உளவியலில், ஒரு சாதாரண ஓ** என்பது, பெண்ணிற்குள்ளான அத்துமீறலாகவும், பெண்ணின் நிலத்தைத் தான் பிடித்துக் கொள்வதற்கான பிரயத்தனமான படையெடுப்பாகவும் பார்க்கப்படுகின்றது' என்ற ரீதியில் அமைந்த கூற்று ஆனட்றியா ட்வோக்கினைப் பைத்தியம் என்று நிறுவுதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

அன்ட்றியா ட்வோக்கின் மட்டுமல்ல, புத்தன் காந்தி இயேசு நபி, காடுடையசுடலைப் பொடி பூசும் சிவன், சித்தர்கள், அகோரிகள் என்று அத்தனை பேர் தொட்டும் மேலும் நாளாந்த வாழ்வில் என்னையும் உங்களையும் எங்கள் குடும்பத்தையும அனைவரையும் நாம் பைத்தியமாகச் சித்தரிப்பது சாத்தியம். ஏனெனில் பைத்தியம் என்பது ஒரு கட்டமைப்போடு, மனவமைப்போடு ஒப்பீடு செய்து பெறப்படும் நிலை. குறானையும் வைத்துக் கொண்டு இன்ரலெச்சுவல் பிரமிப்பாக இருக்கும் சூபிகளும் இருக்கிறார்கள், பெண்ணின் உறுப்பையும் ஆணின் உறுப்பையும் அறுப்பவர் தொட்டு மற்றவனைக் கடவுள் பெயரில் கொல்பவர்களும் இருக்கிறார்கள்.

பின்நவீனத்துவம் என்பதே அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி விட்டுவிடுதலையாகிச் சிந்திப்பது என்றிருக்கையில், ட்வோக்கின்; சொன்னவற்றை (ஏன் அது பூக்கோவாகவும் இருக்ட்டும்) வேதாகமாக எடுத்து வாழத் தலைப்படின் அது பின்நவீனத்துவமாகாகது. மொத்தத்தில் பின்நவீனத்துவம் என்பதை ஒரு மதம்போல நான் பின்நவீனத்துவவாதி என்று சொல்லுவதே என்னைப் பொறுத்தவரை நகைப்பிற்குரியது. ட்வோக்கின் உடலுறவை நிலம்பிடிப்பதற்காக ஆண் அனும்பும் probe என்று சொன்னதை பின்பற்றவோ ஏற்றுக்கொள்ளவோ தேவையில்லை, ஆனால் ஆண் அடக்குமுறை என்ற பிரச்சினை சார்ந்து, காலதிகாலமாக புனிதமானதாக, procreation என்று. ஆண்டவனின் சித்தம் என்று, நாள் நட்சத்திரம் பார்த்துக் கூடச் செய்யப்பட்டுவந்த உடலுறவு சார்ந்த சிந்தனையியில் எத்தனன தூரம் ஆன்டிறியாவின் சிந்தனை சமநிலைதேடி, தேடி எத்தப்பட்டு ஓடியிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

எல்லாத்திற்கும் அடிப்டை, சுயமாகச் சிந்திக்கத் தெரியவேண்டும். நாம் நாமாகச் சிந்திப்பதோடு எமது சிந்தனைகளின் பலாபலன்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருக்கும் வரை, நாம் எமது முதன்மை மட்டுமல்ல மூர்க்கமானதுமான விமர்சககராக இருக்கும் வரை, மற்றறையவர்கள் எல்லாம் மடையர்கள் நாம் அதிமேதாவிகள் என்று நினைக்காதவரை, 'இசம்' சர்ந்து அலட்டிக்கொள்ளவோ, எந்த இசம் நல்லம் எந்த இசம் கூடாது என்று ஆராயவோ தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறோ...விழங்காதவற்றை கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது....மற்றவர்களை தப்புத் தப்பாகவே புரிந்து கொண்டு எழுதினால் நம்மை போன்றவர்களுக்கு எழுத வாற மனமும் வேணாம் என்று தான் போகும் இல்லையா..... தங்களால் முடிந்தளவுக்கு ஏதோ ஒரு விடையத்தை சொல்ல வருகிறார்கள் என்ற புரிந்துணர்வாவது அனைவர் மத்தியிலும் இருக்கவேணும் என்று ஆசைப்படுறன் அண்ணா...இல்லையேல் எழுத்துக்கு முழுக்கு போடத்தான் வேணும்..எழுத வேணும் என்ற உணர்வு எப்போதும் வராது...பிறந்து வரும் போதே எல்லோரும் எல்லா விடயத்திலும் நிபுணத்துவம் பெற்றுவருவதில்லை..அவர்,அவர் தங்களுக்கு என்ன மனதில் தோன்றுதோ அதைத் தானே செய்ய முடியும்..நான் கோவிக்க இல்லை..ஆதங்கத்தை சொல்லக் கூடிய இடம் என்ற காரணத்தினால்,எனக்கு சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு சொல்கிறன்..

நாங்கள் சொல்கிறோம்.. என்ன நவீனத்துவமாக இருந்தாலும்.. சாதாரண மக்களுக்கு விளங்கக் கூடிய எளிய முறையில் அவற்றைச் சொல்ல முடியும் என்று.. தானே தவிர.. விளங்காததை.. ஏட்டுச் சுரக்காயாக வைத்திருந்து என்ன பயன்..???!

திருக்குறளுக்கு கூட பொழிப்புரை இல்லையென்றால்.. அது இருந்து தான் என்ன பயன்..????! திருவள்ளுவருக்கு சிறப்புக் கூட.. திருக்குறளுக்கு பொழிப்பெழுதியவரால் தான் கிடைக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை..!

அறிவு மக்களை சேர வேண்டுமே தவிர.. ஓரிருவருக்குள் பதுக்கி வைக்கப்படுவதல்ல..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

மிகத் தெளிவாகவும் செம்மையாகவும் விளக்கியுள்ளீர்கள். இன்னுமொருவன். நன்றி.

அதிகமான இலக்கியவாதிகள் கொடுக்கும் விளக்கங்கள், என்னைப் போன்ற சாமான்யர்களுக்கு 'சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல' இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெரும்பான்மையானோருக்கு பின்நவீனத்துவம் என்டால் தெரியாது நான் வந்து கிருபனை கேட்கும் வரைக்கும் எல்லோரும் பேசாமல் இருந்திருக்கினம் ^_^

Link to comment
Share on other sites

யாழில் பெரும்பான்மையானோருக்கு பின்நவீனத்துவம் என்டால் தெரியாது நான் வந்து கிருபனை கேட்கும் வரைக்கும் எல்லோரும் பேசாமல் இருந்திருக்கினம் ^_^

பின்ன, விளங்காட்டியும் விளங்கின மாதிரி பாவனை காட்ட வேண்டும்தானே. :D

Link to comment
Share on other sites

முந்தி கொஞ்சமாவது விளக்கம் தெரிந்து இருந்தது. இப்ப எல்லாத்தையும் வாசித்த பின் குழம்பிட்டன் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.