• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கோமகன்

வைணவம் காத்த கதாநாயகர்கள்

Recommended Posts

வணக்கம் கள உறவுகளே !!!

மீண்டும் ஒரு சிறு தொடர் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் . சைவம் தழைப்பதற்கு எப்படி அறுபத்திமூன்று நாயன்மார்களும் மூர்க்கமாக நின்றார்களோ , அதே போல் திருமாலை முழுமுதல்க் கடவுளாகக் கொண்ட வைணவ மதத்தில் பன்னிரு ஆழ்வார்கள் வைணவ மதத்தை வளர்த்தெடுத்து கதாநாயகர்களாக வரலாற்றில் இடம்பிடித்து நிற்கின்றார்கள் .அவர்களது வரலாற்றை உங்கள்முன்பும் , இளையோர் முன்பும் படம்பிடித்துக் காட்டுகின்றேன் . வழமைபோல் உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் .

நேசமுடன் கோமகன்

***************************************************************************

alw.jpg

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர். பகவான் திருமாலின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று பெயர் வைத்தார்கள்.

கி பி 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் இந்தப் பன்னிரு ஆழ்வார்களும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களை (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது .

பன்னிரு ஆழ்வார்களாகப் பின்வருவோர் வரலாற்றில் இடம்பிடிக்கின்றனர் :

 • 1. பொய்கையாழ்வார்
 • 2. பூதத்தாழ்வார்
 • 3. பேயாழ்வார்
 • 4 . திருமழிசையாழ்வார்
 • 5 . நம்மாழ்வார்
 • 6. மதுரகவி ஆழ்வார்
 • 7. குலசேகர ஆழ்வார்
 • 8. பெரியாழ்வார்
 • 9. ஆண்டாள்
 • 10. தொண்டரடிப்பொடியாழ்வார்
 • 11. திருப்பாணாழ்வார்
 • 12. திருமங்கையாழ்வார்

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கோ கோமகன்

Share this post


Link to post
Share on other sites

[size=5]01 பொய்கையாழ்வார் .[/size]

TN_144949000000.jpg

http://img1.dinamala...44949000000.jpg

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார் ஒருவராவார். இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. இவரே முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவரார்.

வைணவ கொள்கையின்படி சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறக்கின்றார்கள் . இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் கொண்டவராவாவர்.

இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.

இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக் கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒருங்கு சேர்த்துத்தானும் அவர்கட்கிடையில் நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான். நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.

அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன . இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

பிறந்த காலம் : 7ம் நூற்றாண்டு

பிறந்த இடம்: மயிலாப்பூர்

பிறந்த மாதம் : ஐப்பசி

திருநட்சத்திரம் : சதயம்

வேறு பெயர்கள் : கிரவ -முனி , மஹாதேவயார் , தமிழ் -தலைவன்

அம்சம் : பாஞ்சஜன்யம்

http://ta.wikipedia..../பொய்கையாழ்வார்

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கோ கோமகன்

மிக்கநன்றிகள் புத்தா.

Share this post


Link to post
Share on other sites

2. பூதத்தாழ்வார்

TN_111213171836000000.jpg

TN_111213171836000000.jpg

பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.

.BhtuhathAzvaraftersAthupadi.JPG

http://4.bp.blogspot.com/-IPadbvZA0VE/Ts2kLbDH5EI/AAAAAAAAR_o/zmv4kfMb1EM/s640/.BhtuhathAzvaraftersAthupadi.JPG

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதார தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.

640px-Thalasayana_Perumal.jpg

640px-Thalasayana_Perumal.jpg

பிறந்த ஊர் : மகாபலிபுரம்

பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை : புதன்

எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள் : 100

சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார். இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார். இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார். பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார்.

மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை, பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி, திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார். பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

http://temple.dinama...ail.php?id=7397

Share this post


Link to post
Share on other sites

[size=5]03 பேயாழ்வார்[/size]

Paeyazhvar.jpg

பிறந்த காலம் :

7ம் நூற்றாண்டு

பிறந்த இடம்:

மயிலாப்பூர்

பிறந்த மாதம்:

ஐப்பசி

அம்சம் :

நந்தகம்

பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.

http://kala-tamilfor.../2011/07/3.html

Share this post


Link to post
Share on other sites

[size=5]04 திருமழிசையாழ்வார் .[/size]

bhaktisar%253Dthirumazisai.gif

திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். . பக்திசாரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. யாப்பருங்கல விருத்திகாரர் 'குடமூக்கிற் பகவர்' என்று குறிப்பது இவரையே என்று சொல்லப்படுகிறது.

பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்றுப்பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப்பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப்பிரம்புத்தூற்றின் கீழ் போட்டுச்சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண் டம் எல்ல உருப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் குழந்தையைக் கண்டெடுத்து தம் மனைவி பங்கயச்செல்வியிடம் கொடுத்தனன். அவர்களுக்கு வேறு மகப்பேறு இல்லை. இக்குழந்தையை வளர்க்கத் தீர்மானித்தனர். என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை.

நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக விஷ்ணுவை உயர்வாகச்சொல்லியவை. இவருக்குமுன் தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.

இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்ன என்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம் முதலிய ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். முக்கண்ணனான சிவபெருமான் இவரைச் சோதித்து இவருடைய பக்தியை மெச்சி இவருக்கு 'பக்திசாரர்' என்ற சிறப்புப்பெயரை அருளிச் செய்தார்.

கணிகண்ணன் திருமழிசையாருடைய சீடன். கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக்கவிதைபாடச்சொல்ல அவர் மானிடனைப்பாடுவது குற்றம் என்று கூறி திருமாலைப்பாடினார். அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை

நோக்கி,

கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

http://ta.wikipedia....ருமழிசையாழ்வார்

Share this post


Link to post
Share on other sites

[size=5]05 நம்மாழ்வார் .[/size]

namalvar_l1.gif

http://solvanam.com/...namalvar_l1.gif

பிறந்த காலம்:

9 ம் நூற்றாண்டு

பிறந்த இடம்:

ஆழ்வார் திருநகரி

பிறந்த மாதம் :

வைகாசி

திருநட்சத்திரம் :

விசாகம்

வேறு பெயர்கள் :

சடகோபன்,சடாரி, பராங்குசன் ,மாறன்,வகுளா பரணன்,குருகையர் கோனே

அம்சம்:

விஷ்வக்சேன

நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.

நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திரு மகனாராக வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் ஒரு சடம் போல் இருந்தார். இக்குழந்தை உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.

பதினாறு ஆண்டுகள் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். அயோத்தியில் தங்கி இருந்த மதுரகவி என்பவர் தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தெற்கு திசை நோக்கி பயணித்தார். மாறனிடமிருந்து அந்த ஒளி வந்தது என்று அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். அவரிடமிருது நிறைய அர்த்தங்களைப் பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.

நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய 4 நூல்களை இயற்றினார். இவை ரிக், யஜுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

நம்மாழ்வார் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அவர் சிறுகுடி வேளாளர் என்று அழைக்கப்படும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் குலத்தில் பிறந்தவர் என்பதைக் கீழ்காணும் தகவல்கள் மூலம் அறியலாம்.

 • பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் லெட்சுமி நாரயண அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர். என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளைமார் அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.

 • தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் (ஈழவர்) குலத்தவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு (தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்ட) சிற்றரச மரபினராவார்.

http://ta.wikipedia....iki/நம்மாழ்வார்

Share this post


Link to post
Share on other sites

[size=5]06 மதுரகவி ஆழ்வார் .[/size]

aazhvaar-thirunagari6.jpg

இவர் பாண்டிய நாட்டில் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் பிறந்தார். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

இவர் சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு மதுரகவி என்ற சிறப்புப் பெயர் வந்தது.

இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலகவிஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச் சென்றார்.

அயோத்தியில் தங்கியிருந்தபோது ஒரு நாளிரவில் வெளியே வந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. உடனே மதுரகவிகள் 'தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்' என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார். புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்தசத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?"

என்று வினவினார். "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"

என்று விடை வந்தது. இந்த வினா, விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. 'சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?' என்பது கேள்வி. 'தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்' என்பதே விடை.

மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.

நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல்: நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன், மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே; தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே. http://ta.wikipedia....மதுரகவி_ஆழ்வார்

Share this post


Link to post
Share on other sites

நல்ல தொடர் அண்ணா , ஆழ்வார்களை பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை . உங்கள் தொடர் அந்த குறையை போக்கும் என்று நினைக்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

[size=5]07 குலசேகர ஆழ்வார்.[/size]

kula.jpg

http://2.bp.blogspot.../s1600/kula.jpg

குலசேகர ஆழ்வாரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.

இவர் பிறந்த ஊர் கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. அதை குலசேகரர்தான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை. ஆயினும் பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சம் பொருந்தியவர்.

ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமை பீடங்களான ஜீயர்கள், "ஆழ்வார்களும் வைணவமும்" என்ற புத்தகத்தில், கிருஷ்ண பக்தனான குலசேகர வர்மா என்ற திருவிதாங்கூர் கேரள வர்மாவையும் சங்க கால சேரர்களது மன்னான சர்கராம பக்தர் குலசேகர ஆழ்வாரையும் குழப்பிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளனர். முன்னையவர் ராமானுசருக்குப் பிற்பட்டவர். ஆழ்வாரோ மிக முற்பட்டவர். ஆழ்வார் தமிழில் மட்டுமே ராமரை பாடியுள்ளார். வர்மாவோ சமஸ்கிருதத்தில் மட்டுமே "முகுந்தமாலா" என்று கிருஷ்ணரை பாடியுள்ளார். இருவரும் ஒருவரல்ல. மேலும் குலசேகர பாண்டியன், குலசேகர சோழன் என்றெல்லாம் அரசர்கள் உண்டு. குலசேகர என்றால் ’தமது குலத்தின் சிகரமான’ என்று பொருள். பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இரு நபர்களை ஒன்றாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

TN_152255000000.jpg

http://img1.dinamala...52255000000.jpg

கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.

திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.

பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:

" மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே! என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ! "

திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:

"செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே."

இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.

இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது.

http://ta.wikipedia....குலசேகர_ஆழ்வார்

Share this post


Link to post
Share on other sites

[size=5]07 பெரியாழ்வார் .[/size]

periyalvar-srivilliputtur.jpg

periyalvar-srivilliputtur.jpg

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலி 47 வதான உருத்ரோதன வருடம் ஆனி மாதம் சுக்ல பக்ஷம் ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை சுவாதி நட்சத்திரத்தில் வேதியர் குல தம்பதி முகுந்தாசார்யாருக்கும் பதுமையாருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. விஷ்ணுசித்தர் என்று பெயரிடப்பட்ட அம்மகவே கருடனின் அம்ஸமாக கருதப்படும் பெரியாழ்வார். இவர் இயல்பாகவே வட பெருங் கோயிலுடையான் ஆன எமபெருமானிடம் பக்தி மிக்கவர். எம் பெருமானுக்கு எந்த தொண்டு செய்யலாம் என்று சிந்தித்த போது கண்ணன் கம்சனின் திருமாலாகாரரிடம் பூக்களை இரந்து அவற்றை சூடி மகிழ்ந்த நிகழ்வால் கவரப் பெற்றார். எனவே மாலை கட்டி சாத்துவதே அவனுக்கு உகந்தது என முடிவெடுத்தார். அதன்படி நந்தவனம் உண்டாக்கி மாலை கட்டி அதை பெருமானுக்கு சாத்தி மகிழ்ந்தார்.

அக்காலத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு நகர்வலம் வருகையில் ஒரு திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு புதியவனைக் கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?” என்று கேட்டான். அந்தப் புதியவன் “ஐயா! நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும் உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின் தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில், முதுமையின் தேவையை இளமையில், மறுமையின் தேவையை இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன் மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை சொல்லி “நமக்கு இப்போது குறையொன்றுமில்லை. மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?” என்று கேட்டான். செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட ஆணையிட்டான். ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய எம்பெருமான் கிழியை அறுத்து வாவென்றார். அது வேதாந்த பரமான சான்றோருக்கு நானோ ஏதும் அறியாதவன் என்ற ஆழ்வாரின் வாதத்தை பரமன் ஏற்க மறுத்தான்.

விழித்தெழுந்து அது விடியற் போது என்றுணர்ந்த ஆழ்வார் இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார். மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன் வரவேற்பதா? என்று சலசலத்தனர். என்றாலும் அபிமான துங்கனான செல்வநம்பி மறுமைக்குத் தேவையான மார்க்க தரிசனம் காட்ட ஆழ்வாரை வேண்டினான். ஆழ்வாரும் ஸ்ரீமன் நாராயணனே பரமேட்டி என்று ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண மேற்கோள்களால் விளக்கினார். அப்போது கிழிகட்டிய தோரணமானது அவர் முன் வளைந்து கிழியை அறுக்க ஏதுவாக நின்றது. ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார். இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும் அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன் வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும் உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன் மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன், தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார்.

ஆழ்வார் எமபெருமானின் கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார். மன்னன் மற்றுள்ள பக்தர்களையும் தன்னோடு பாடச்செய்தார். மனமகிழ்ந்து பணிந்த மன்னனை வாழ்த்தினார். அவன் தந்த பரிசில்களை ஏற்று வில்லிபுத்தூர் திரும்பினார். பொற்கிழியையும் பரிசில்கனையும் வட பெருங் கோயிலுடையானுக்குக் கொடுத்து விட்டு எப்போதும் போல் மாலை கட்டி சாத்தும் தொண்டைத் தொடர்ந்தார். தன் மனத்துக்கினிய அவதாரமான கண்ண பிரானின் பிறப்பு, வளர்ப்பு, ஆனிரை மேய்த்தல், தீராத விளையாட்டுக்கள் மற்றும் பக்தர்களைக் காக்கும் அவன் பேரருட் குணங்களை பெரியாழ்வார் திருமொழி எனும் திவ்ய பிரபந்தமாக உலகம் உய்யப் பாடி அருளினார்.

" நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே நானூற் றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே சொல்லறிய வானிதனிற் சோதிவந்தான் வாழியே தொடைசூடிக் கொடுத்தாளை தொழுமப்பன் வாழியே செல்வநம்பி தனைப்போல சிறப்புற்றான் வாழியே சென்றுகிழி யறுத்துமால் தெய்வமென்றான் வாழியே வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே" .

பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .

http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Share this post


Link to post
Share on other sites

நல்ல தொடர் அண்ணா , ஆழ்வார்களை பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை . உங்கள் தொடர் அந்த குறையை போக்கும் என்று நினைக்கிறேன்

ஒருவர் இருவராவது வரலாற்றை அறிய ஆர்வம் காட்டுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் . மிக்கநன்றிகள் சுடலைமாடன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் .

Share this post


Link to post
Share on other sites

[size=5]09 ஆண்டாள் .[/size]

%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.jpg

http://www.aanthaireporter.com/wp-content/uploads/2012/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.jpg

அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக் கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை” என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும் ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார். விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும் வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார்.

ஆண்டாளும் துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி பல நாள் நடந்தது. ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி “இப்படிச் செய்யலாமா? எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கோபத்துடன் கேட்டார். அவர் அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை.

அன்றிரவு எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி “இன்று நமக்கு மாலை சாத்தாதது ஏன்?” என்றார். ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச் சொல்லி மன்னிக்க வேண்டினார். இறைவனோ “அவள் சூடிய மாலையே நல்ல மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” என அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப் பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும் மார்கழி நீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாய்ச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினார். மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார்.

அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர், திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக் காணலானாள்.

ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார். அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார். ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப் பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில் உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார். ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.” ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை அடைந்தனர். அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.

ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில் உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.

" கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால் நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே" .

http://ta.wikibooks.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Share this post


Link to post
Share on other sites

[size=5]10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் .[/size]

02012011+029.jpg

http://samptamilspea...satrumurai.html

பிறந்த காலம்

8ம் நூற்றாண்டு

பிறந்த இடம்

திருமண்டங்குடி

பிறந்த மாதம்

மார்கழி

திருநட்சத்திரம்

கேட்டை

வேறு பெயர்கள்

விப்ரனாராயனர் , திருமண்டங்குடியார் ,பாக்தங்கிரிறேனு , பல்லயுனர்த்திய பிரான்

எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர்.

சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து மற்ற திவ்ய தேசக் கோயில்களுக்கும் விஜயம் செய்தார்.

ஸ்ரீமந் நாராயணணின் பக்தர்களின் காலடி மண்ணைத் தம் தலையிலிட்டுக் கொண்டு தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்றார்.

http://kala-tamilfor...2011/07/10.html

இன்று மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம். சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த தினம். ஆழ்வார் சாற்றுமுறை இன்று :

முதல் ஆயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை. இவர் பாடிய தலங்கள்

திருவரங்கமும் நாம் பார்க்க முடியாத பரமபதமும். தொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக் கொண்டார். இவரது இயற்பெயர் விப்ர நாராயணன். திவ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்று வருகிறது.

அனுதினமும் காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது பாசுரம்.

சூரியன் கிழக்கே தோன்றி விட்டான்; இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல்அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்து அருள்வாய் - - “. " அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே" என திருவரங்கனை துயில் எழுப்புகிறார்.

தனது திருமாலையில் திருவரங்கனையும், அவனது இடமான திருவரங்கத்தின் பெருமையையும் உரைக்கிறார். அங்கே உள்ளதால் காவிரி கங்கையை விட புனிதம் ஆகிறது.

கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்

பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன், ஏழையேனே!

ஆழ்வார் பூலோக வைகுண்டம் என்று கொண்டாடப் படும் தலத்தில் எம்பெருமானுக்கு கைங்கரியம்செய்ய ஒரு அழகிய நந்தவனம் அமைத்து அதில் பகவானுக்கு உகந்த மலர்களை வளர்த்து, மாலை தொடுத்து அந்த அரங்கனுக்கு சாற்றி மகிழ்ந்தார். இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும் கைங்கரியமே கண்ணாக இருந்தவர்.

http://samptamilspeak.blogspot.fr/2011/01/thondaradipodi-aazhwaar-satrumurai.html

Share this post


Link to post
Share on other sites

[size=5]11 திருப்பாணாழ்வார்.[/size]

renganathar1.jpg

http://2.bp.blogspot...enganathar1.jpg

காலம் -8ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)

மாதம் - கார்த்திகை

திருநட்சத்திரம் - கார்த்திகை

ஊர் - உறையூர்.

வேறு பெயர்கள்

பாணர் ,முனி -வாஹனர் ,யோகி – வாஹனர் ,கவீஸ்வரர்

அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)

திருப்பாணாழ்வார் பிறப்பு பற்றிய முழுமையான தகவல்கள் அறியப்படவில்லை. இவர் உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார்.

பாணர் என்னும் இனம் உண்மையில் தீண்டத்தகாத இனம் அல்ல. அவர்கள் இறைவன் பேரிலும், மன்னனைப் பற்றியும் பாண் என்னும் இசைக்கருவியினால் இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அத்தகைய இனத்தில் வளர்ந்த நம் திருப்பாணாழ்வாருக்கு பாடல்கள் பாட பயிற்சியும் வேண்டுமோ??

இவர் இறைவனுடன் இரண்டறக் கலந்த அந்த சுவையான தகவலை அறிவோம் வாருங்கள்....

திவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை.

அதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார்.

ஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.

ஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். உடனே, தன் சுயநினைவுக்கு வந்த திருப்பாணாழ்வார் விலகி நின்றார்.

பிறகு, திருமஞ்சன நீரை எடுத்துக் கொண்டு, ஆலயத்திற்குள் நுழைந்த இலோக சாரங்க முனி, அங்கே திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து பதறிய அர்ச்சகர், மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார்.

இரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா! இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.

மறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.

கோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.

அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை. தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்து, இறுதியில்.....

அவர் திருவழகைக் கண்ட கண்கள் இனி உலகில் வேறு எதையும் காணாது என்று அக்கணமே, திருவரங்கப் பெருமானின் திருவடியில் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

தீண்டத்தகாதவர் என்று ஒதிக்கவைத்த ஒருவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்த சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்லாமல் அருள் புரிவான் அரங்கன்.

தன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்கு சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது...

திருப்பாணாழ்வார், பாண் என்னும் இசைக்கருவியில் வல்லவராயும், எப்பொழுதும் பெருமாளைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பதாலும், அவர் பாண் பெருமாள் எனவும்,

இலோக சாரங்க முனியின் தோளில் ஏற்றிச் சென்றதால், முனிவாகனன் எனவும் அழைக்கப்படுகிறார்.

இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும்.

அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.

http://aazhvarmozhi....og-post_17.html

திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான் எனப்படும் பத்துப் பாடல்களிலிருந்து, திருமாலின் மார்பைப் பற்றிப் பாடிய ஒரு பாடல்:

" பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன் வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான் கோர மாதவம் செய்தானென்கொ லறியே னரங்கத் தம்மான்திரு வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே "

http://ta.wikipedia....ிருப்பாணாழ்வார்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • வணக்கம் வாத்தியார்......! ஆசைக்கொரு ஆளானவன்  ஆனந்தத்தில் கூத்தானவன்  கோபியர்கள் நீராடிட  கோலங்களை கண்டானவன்  ஆடை அள்ளி கொண்டானவன்  அழகை அள்ளி தின்றானவன்  போதையிலே நின்றானவன்  பூஜைக்கின்று  வந்தானவன்  அவன் உலா உலா உலா  தினம் தினம் பாரீர்  தினம் விழா விழா விழா விழா  வாழ்க்கையில் தேவை கண்ணா உன்னை நாள் தோறுமே  கை  கூப்பியே நான் பாடுவேன் மானும் இல்லை ராமன் இல்லை  கோகுலத்தில் நானா  சோகமில்லை சொந்தம் யாருமில்லை  ராவணனின் நெஞ்சில் காமமில்லை  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ......! --- கோகுலத்தில் கண்ணா கண்ணா---               
  • சாப்பாட்டில் சுத்தம் சுகாதாரம், சுவை , ஊட்டச்சத்துக்கள் ஆகியவையே முக்கியமானது. புனிதம் என்ற எதுவும் இல்லை. வட இந்திய உணவுகளான “சிக்கின் ரிக்கா மசாலா”, “தண்டூரி சிக்கன்” என்பவை கோழி இறைச்சிக்குள் தயிர் விட்டு ஊறவைத்து செய்யப்படுபவை. மிகவும் சுவை மிகுந்தவை.  ஆனால் சைவ உணவையே சாப்பிட்டு வந்தவர்களுக்கு மிகவும் சுவை  உடைய அசைவ உணவுகளும் அருவருப்பை தரும் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் இலங்கையில் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் குடும்பத்தில்  இருந்து வந்தவன் நான்.  இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை. ஐரோப்பா வர  எனது உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. உணவுப்பழக்கம் என்னை மற்ற நண்பர் களிடம் இருந்து  அன்னியப்படுத்தியதால்,  அதை மாற்றுவதற்காக நானாக விரும்பி அசைவ உணவை  சாப்பிட்டு பழகினேன். இருப்பினும் கடலுணவு வகைகள் இப்போதும் சிறிது அருவருப்பு தான். 
  • வ‌ண‌க்க‌ம் அக்கா இந்த‌ திரியில் உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , நீங்க‌ள் உங்க‌ட‌ அண்ண‌ர் க‌ருணாவை பின் தொட‌ருகிற‌ நீங்க‌ள் , நான் சிறு வ‌ய‌து முத‌லே த‌லைவ‌ரின் கொள்கைய‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன்🤞 , நீங்க‌ள் இப்ப‌டி எழுதுவிங்க‌ள் என்று நான் கொஞ்ச‌மும் நினைத்து கூட‌ பார்க்க‌ல‌ , த‌லைவ‌ரும் அவ‌ரின் பிள்ளைக‌ளும் போர்க் க‌ள‌த்தில் இற‌ந்து விட்டின‌ம் அவ‌ர்க‌ளை தூற்றி எழுதுவ‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ , உங்க‌ட அண்ண‌ருக்கும் த‌லைவ‌ர் தானே பொண்ணு பார்த்து முன் நின்று திரும‌ண‌த்த‌ செய்து வைச்ச‌வ‌ர் , த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா அவ‌ரின் ம‌க‌ளை எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போராளிக‌ளில் ஒருவ‌ருக்கு தான் திரும‌ண‌ம் செய்து வைத்து இருப்பார் , த‌லைவ‌ர் போராளிக‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது த‌மிழீழ‌ ம‌க்க‌ள் எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்ப‌த‌ அவ‌ர்க‌ளின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , இப்ப‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் எப்ப‌டி வாழுகிறார்க‌ள் என்று ஒட்டு மொத்த‌ த‌மிழீழ‌த்தையும் சுற்றி பார்த்தா தெரியும்  ,  நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி ச‌ண்டைய‌ பார்த்த‌து இல்ல‌ , சாதிய‌ ப‌ற்றி உற‌வுக‌ள் அல‌ட்டின‌தும் இல்ல‌ , ஒரு ‌ ச‌ம்ப‌வ‌த்த‌ உங்க‌ளுக்கு சொல்ல‌ விரும்புகிறேன் , 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்ப்பாண‌த்த‌ கைப்ப‌ற்ற‌ , மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , என்ர‌ சொந்த‌ங்க‌ளை த‌விற‌ ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்த‌ உற‌வுக‌ளை என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது , பெரிய‌ வீடுக‌ள் இருந்த‌ ப‌டியால் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ வீடுக‌ளில் தான் த‌ங்க‌ வைச்சோம் ஒன்னா சாப்பிட்டோம் ஒன்னா ப‌ழ‌கினோம் , சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ , கிட்ட‌ த‌ட்ட‌ 13 குடும்ப‌ங்க‌ள் 4 வீட்டில் த‌ங்கி இருக்க‌ ஏற்பாடு செய்து கொடுத்தோம் ,  இப்ப‌டித் தான் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை 🤞🙏
  • சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ஹரிவராஸனம் சுவாமி விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் அறிவிமர்த்தனம் சுவாமி நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணகீர்த்தனம் சுவாமி சக்தமானஸம் பரணலோலுபம் சுவாமி நர்த்தனாலஸம் அருணபாசுரம் சுவாமி பூதநாயகம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே ப்ரணயசத்யகம் சுவாமி ப்ராணநாயகம் ப்ரணதகல்பகம் சுவாமி சுப்ரபாஞ்சிதம் ப்ரணவமந்திரம் சுவாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா துரகவாஹனம் சுவாமி சுந்தரானனம் வரகதாயுதம் சுவாமி வேதவர்னிதம் குருக்ருபாகரம் சுவாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே த்ரிபுவனார்ச்சிதம் சுவாமி தேவதாத்மகம் த்ரினயனம்ப்ரபும் சுவாமி திவ்யதேசிகம் த்ரிதசபூஜிதம் சுவாமி சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா பவபயாபஹம் சுவாமி பாவுகாவஹம் புவனமோஹனம் சுவாமி பூதிபூஷனம் தவளவாஹனம் சுவாமி திவ்யவாரணம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே களம்ருதுஷ்மிதம் சுவாமி சுந்தரானனம் கலபகோமளம் சுவாமி காத்ரமோஹனம் கலபகேசரி சுவாமி வாஜிவாஹனம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ஷ்ருதஜனப்ரியம் சுவாமி சிந்திதப்ரதம் ஷ்ருதிவிபூஷனம் சுவாமி சாதுஜீவனம் ஷ்ருதிமனோஹரம் சுவாமி கீதலாலஸம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா