• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
வல்வை லிங்கம்

CMR 101.3 TAMIl FM வானொலியில் சுப்பர்சிங்கர் கனடா குயில்"மகிஷா"!

Recommended Posts

கனடிய பிரபல்ய தமிழ் வானொலியான "101.3 CMR Tamil Fm" வானொலியில் இன்று அதாவது 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு, சுப்பர்சிங்கர் போட்டியாளர் கனடாகுயில் "மகிஷா" வை கௌரவிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் "மகிஷா" தனது ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் வானொலி நேயர்கள் போன்றோரின் கேள்விகளிற்கு வானலையில் நேரடியாக பதிலளிக்கும் வகையில் CMR வானொலி ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது.

இது பாராட்டப் படவேண்டிய, முன்னுதாரனமான செயலாகவே பார்க்க முடிகின்றது.

CMR வானொலி நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

"மகிஷா" நேயர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு தனது சிறுமி என்ற நிலையை தாண்டி மிகவும் நிதானத்துடன் பதில்களை வழங்கியிருந்தது அவரது தூரநோக்கு இலகுவாக புரியக்கூடியதாக இருந்தது.

இந்த நிகழ்வின்போது சில பாடல்களை பாடியதுடன் தனது எதிர்கால திட்டம் அல்லது ஆசைகள் பற்றியும் வெளிப் படுத்தியிருந்தார்.

நிகழ்வின் இறுதியில் தனது இந்த முயற்சியிற்கு ஆதரவாக இருந்த, காரனமாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

"மகிஷா" இசையில் மட்டுமன்றி சகல துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டி தமிழினத்திற்கு பெருமை தேடித் தரவேண்டுமென வாழ்த்துவோமா.

mahisa.jpg

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி அண்ணா. CMR வானொலிக்கும் நிர்வாகத்தினருக்கும் எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

"மகிஷா" இசையில் மட்டுமன்றி சகல துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டி தமிழினத்திற்கு பெருமை தேடித் தரவேண்டுமென வாழ்த்துவோமா.

நிச்சயமாக மகிஷாவுக்கு என் பாராட்டுகளும் உரித்தாகட்டும். :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உதயசூரியன் சின்னத்தில் கிழக்கில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயம் மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் கள நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதுரியமான விடயமாக அமையும். இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த 4 கட்சிகளும், இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி ஒருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை ஏகோபித்த சின்னமாக புதிய கூட்டணிக்கு தெரிவுசெய்து உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம். அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டுச் சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவதில் பிரச்சினையுள்ளதாக தெரிவித்தனர். அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றிகண்டுள்ளது.கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலே, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது. தமிழர் ஜக்கிய முன்னணி பேயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் சின்னமாக உதய சூரியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது 4 கட்சிகளான பி.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன தற்போது இணைந்துள்ளன.குறித்த ஊடக சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் நா.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் மேற்குறித்த தகவலை தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/உதயசூரியன்-சின்னத்தில்-க/
    • நீங்கள் எப்போதுமே பங்காளிகள் தானே பங்காளி! இதென்ன புதுசாய் புதுப்பிக்கிறியள்? 
    • துல்பன், நீங்கள் மதத்தை பற்றி கூறும் கருத்துக்கள் உயர்ந்தவையாகவும் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இடத்திற்கு அது சரி வருமா என்பதே வினா? இல்லை அந்த மாற்றம் அவர்களுக்குள்  இருந்து வர வேண்டும்.  உதாரணத்திற்கு, ஒருவருக்கு தமிழ் தெரியும் என்பதை விட அதை எங்கே எப்படி யாரிடம் எதை பேச வேண்டும் மற்றும் எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது.    
    • இப்பதான்  முரளிதரனுக்கு திரை விலக தொடங்கியிருக்குது. ஆனால் காலம் கடந்து போச்சுது. தான்  சிங்களத்தின்  அடிமை என்பதை வெகுவிரைவில்  உணருவார். மாரடைப்பு வருகுதோ, தற்கொலை செய்யும் துணிவு இருக்குமா இவருக்கு?  தீனி போட்ட எஜமான் பொட்டில போடப்போறார். இடையிடை புலிபுரளி  விடுவதன் காரணத்தில் இதுவும் ஒன்று. தன் அடிமைகளை வைத்து தான் எப்படி தப்புவது என்றே அவர் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்.