Jump to content

மீள் நினைவு கொள்வோம்.


Recommended Posts

மீள் நினைவு கொள்வோம்.

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, July 11, 2012

398875_3709344845022_1662961015_n.jpg

கால விதிகளின் கட்டறுத்தெறிந்த

வீரத்தின் விலாசங்களோடு

வனவாசம் போனவர்களுடன்

ஆழுமையின் வீச்சாய்

அடையாளம் காட்டப்பட்டவள் நீ.

பெண் விதியின் முழுமைகளை

நீ பேசிய மேடைகள்

பதிவு செய்து கொண்டதோடு

நீயொரு பெண்ணியவாதியாய்

பெருமை கொள்ளப்பட்டவள்.

உன்னையும் உனது ஆழுமைகளையும்

உச்சத்தில் ஏற்றி எழுதியோரும்

உன் குரலில் பதிவு செய்தோரும்

எண்ணிலடங்காதவவை....

எழுச்சியின் காலங்களை இப்படித்தான்

காலம் கௌரவப்படுத்துவது வரலாறு.

வீழ்ச்சியின் பின்னரே யாவும்

விழித்துக் கொள்கிறது.

அதுவே உனக்கும்

உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது.

000

2009 மே,

காலச் சூரியனின் கைகளிலிருந்து

தவறிப்போனவளாக

வரலாறு உன்னைப் பதிவுசெய்தது....

பணியாத வீரங்களெல்லாம் கைதூக்கிய சரணாகதி

உன்னையும் தோல்வியின் கைகளில் கொடுத்துவிட

காலத்தால் கைவிடப்பட்டவர்கள் வரிசையில் நீயும்

தோற்றப்போன ஒரு முன்னாள் பெண் போராளி.

திட்டும் சபித்தல்களும்

உன்மீது சொரிந்த வேளையில்

எல்லோர் போலவும்

நானும் கோபித்ததும் உன்னை சந்;தேகித்ததும்

நீயறியாத இரகசியங்கள்....

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்

கடைசிநேர நிலவரம் பற்றியும்

உங்களைத்தான் விழுங்கியது

எங்களது பேரங்கள்.

இருள் நிறைந்த கம்பிகளின் பின்னால் - நீ

இருளோடு கரைந்த கதைகள்

அறிந்த போது

எல்லாக் கோபமும் போய்

தோழமை வென்றது.

தோழியே உனக்காய் கண்ணீரில் கரைந்த

பொழுதுகள் கனத்தது....

கோபம் மறந்து உன்னோடு கதைத்து

உனது கண்ணீரைப் பங்கிட்ட போது

நெஞ்சுக்குள் உறுத்தும்

உன் மீதான எனது கோபங்கள்

அர்த்தமற்றுப் போய்விட்டன....

துயரங்கள் தின்ற உனது நாட்களை

நினைவுகொள் நேரமெல்லாம்

கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்

துயர் கரைக்கும் அந்தரத்தில்

உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்

உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய

வெற்றியை யாரிடமும் சொல்லாமல்

அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

கம்பிகள் உன்னை விடுவிக்கப் போகும் நாளுக்காய்

உன் அம்மாபோல நானும் காத்திருந்த நாட்களில்

உனது விடுதலையின் செய்தி

நெஞ்சுக்குள் பொங்கிய மகிழ்வை

நீ வரும் வரை

பொக்கிசமாய் பத்திரமாய் வைத்திருக்கிறேன்....

வா நாங்கள் மீண்டும்

பேசிக் கோபித்து விவாதித்து

மிஞ்சிய பொழுதுகளையேனும்

மீள் நினைவு கொள்வோம்.

22.06.2012

[size=5]http://mullaimann.blogspot.de/2012/07/blog-post.html[/size]

Link to comment
Share on other sites

துயரங்கள் தின்ற உனது நாட்களை

நினைவுகொள் நேரமெல்லாம்

கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்

துயர் கரைக்கும் அந்தரத்தில்

உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்

உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய

வெற்றியை யாரிடமும் சொல்லாமல்

அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

[size=4]ஒரு பொண்ணோட மனச பொண்ணு தாங்க புரிஞ்சுக்க முடியும் :) .அதுவும் ஈழத்துப் பொண்ணுங்கள சொல்லவே வார்த்த வருதில்லீங்க சாந்தி அக்கா . பெரெண்ட்சிப்போட வால்யூவ ரெம்ப ஃபீல் செஞ்சு எழுதியிருக்கீங்க பாருங்க அங்கதான் நீங்க நிங்கீறீங்க . இந்த கிராமத்து காலேஜ் பொண்ணுக்கு அவ்வளவா அரசியல் வராதுங்க பட் உங்க கிஸ்டரி எல்லாம் என்னோட கிளாஸ்மேட் சிலோன் பிரெண்டு சொல்லுவா :(:( . ரெம்ப ஃபீலிங்கா இருக்குங்க உங்க கவிதைய பாத்து :( .[/size]

Link to comment
Share on other sites

நட்பையும் நம்பாத சந்தேகம் என்றென்றும் நல்லதில்லையே சொப்னா. கருத்துக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்

கடைசிநேர நிலவரம் பற்றியும்

உங்களைத்தான் விழுங்கியது

எங்களது பேரங்கள்.

இரத்தினச்சுருக்கமாய் சுருக்கென்று சொல்வது இது தானோ . உங்கள் கவி வரிகளின் வீச்சும் கனதியும் பெறுமதியானவை சாந்தி . பல புரிதல்கள் , புரிந்தும் புரியாத பலருக்கு உங்கள் கவிதை நல்ல குத்தூசி . தொடர்ந்து எழுதுங்கள் .

Link to comment
Share on other sites

  • 3 years later...

இக்கவிதை தமிழினி அவர்களுக்காக 2012 எழுதம்பட்டது.

வெலிக்கடையிலிருந்து தமிழினி  வவுனியா புனர்வாழ்வு முகாம் சென்ற போது எழுதியது.

தோழி, திருமணம் முடிந்த போது பலமுறை வாசித்தாய் சொல்வாய். இன்று நீ பிரிந்து போன துயரம் உயிரை தின்கிறது. 

தோழி உன் பிரிவு இன்றைப் பொழுதை இருளாய் நிறைத்திருக்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.