Jump to content

அனைவரையும் ஒரு சந்தோசமான செய்தி அல்லது சோகமான செய்தியுடன் அடுத்த கிழமை சந்திக்கிறேன்.


Recommended Posts

எனக்கு மற்றவர்கள் மாதிரி சுவாரஸ்யமாக எதுவும் எழுத தெரியாது. எனினும் என் அனுபவத்தை பகிர்கிறேன். அலட்டல் போல் எழுதினால் வாசிப்பவர்களை சலிப்படைய செய்யும் என்று சிலர் சில திரிகளில் சிலருக்கு எழுதியிருப்பதை வாசித்தேன். அப்படியானவர்கள் இதனை வாசிப்பதை தவிருங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------

நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். இந்த நாட்டுக்கு வந்து ஒரு வருடம்.

நான் tourist visa எடுத்து வந்தாலும் லண்டனுக்கு சென்று 7 நாட்களின் பின்னர் இன்னொரு நாட்டுக்கு சென்று 3 நாட்களில் இந்த நாட்டுக்கு வந்தேன். லண்டனுக்கு ஏன் சென்றேன் என்று கூற விரும்பவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பின்னொரு நாளில் கூறுகிறேன். (ஆனால் அதையும் கேஸில் கூறியிருக்கிறேன்)

எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாததால் (இப்ப கொஞ்சம் கதைப்பன்) லண்டனில் கேள்வி கேட்கும்போது முழுசிக்கொண்டு பதில் சொன்னதில் என்னை புலியா என்று கேட்டு போலி விசாவில் வந்தேனோ என்றும் கேட்டு அங்கு வைத்து fingerprint எடுத்து விசாவையும் check பண்ணுவதற்காக வாங்கினார்கள்.(இரவு 9 மணியிருக்கும்.) அவர்களுடைய முழுமையான செக்கிங் முடியும் வரை அந்த இரவு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டேன். நான் மட்டும் தான். லக்கேஜ் வெளியில் வைக்கப்பட்டு என்னை மட்டும் உள்ளே அனுமதித்திருந்தார்கள். போனையும் வாங்கி விட்டார்கள். அங்கு ஒரு வெள்ளைக்காரனும் ஒரு ஆபிரிக்ககாரனுமாக இருவர் கண்காணிப்பாளர்களாக இருந்தார்கள்.

குளிரூட்டியில் உண்ண, குடிக்க தேவையான அனைத்தும் இருந்தன. அதைவிட பழங்கள், crisps, biscuits அனைத்தும் தரப்பட்டன. நான் எதுவும் சாப்பிடவில்லை. அதை பார்த்து rice & curry யும் குளிரூட்டியில் இருப்பதாக வந்து சொன்னார்கள். :D நான் நன்றி கூறிவிட்டு எதுவும் உண்ணவில்லை. என்னை அழைக்க வருபவர்களுக்கு போன் பண்ணி அடுத்தநாள் விடிய 9 மணிக்கு என்னை விடுவதாக சொன்னார்கள். அவர்களும் எனக்கு சொந்தகாரர் இல்லை என்பதால் என்னை பற்றி அக்கறைப்படாமல் சரி என்று கூறிவிட்டு இருந்தார்கள்.

அறை/hall இன் உள்ளே ஒரு tv இருந்தது. நான் பெண்ணாக இருந்தாலும் தனிய இருந்தாலும் எந்த ஒரு சொறி சேட்டையும் விடாமல் tv ஐ போட்டு பார்க்கும்படி கூறிவிட்டு படுக்கும்போது போர்ப்பதற்கு போர்வை ஒன்றை தந்து விட்டு அவர்கள் தமக்குரிய மேசையின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து தம் கடமையை செய்தார்கள். அவர்களுக்கும் நான் இருந்த அறைக்கும் இடையில் ஒரு கதவு இருந்தது...

படுப்பதற்கு கட்டில் இல்லை. சோபா தான் சுற்றிவர அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. (அங்கு போனவர்கள் அவதானித்திருப்பீர்கள்) இரவு முழுதும் நான் தூங்கவில்லை.

அடுத்தநாள் விடிய பல நாட்டவர்களை கொண்டு வந்து விட்டார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்தால் சந்தேகிக்கப்பட்டு விடப்பட்டுள்ளார்கள்.... சிலர் கஞ்சா கடத்தலில் பிடிபட்டவர்கள். என்னை தவிர அனைவரும் ஒரு கவலையும் இல்லாமல் இருக்கும் உணவுகளை உண்பதிலேயே குறியாக இருந்தனர்... :lol:

பின்னர் அனைவரிலும் முதலாவதாக என்னை அழைத்து வெள்ளைக்காரி ஒருவர் சில கேள்விகளை கேட்டு எழுதி விட்டு எனது விசா உண்மையானது தான் என்று கூறி விசாவையும் கையில் அளித்து நம்பிக்கையுடன் நாட்டின் உள்ளே விட்டார்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------

என்னை அழைக்க வந்தவர்களையும் அன்று தான் முதல்முதலாக பார்த்தேன். பின்னர் இன்னொருநாள் london bridge ஐயும் london eye ஐயும் அவர்கள் கட்டாயத்தின் பேரில் பார்த்து விட்டு நானும் சிலரை சந்தித்து விட்டு அடுத்த நாடு பயணமானேன். அங்கு எனது அம்மாவின் சகோதரர்கள் இருவர் உள்ளனர். ஒருவர் திருமணமாகி வந்தவர். இன்னொருவர் வேலை செய்வதற்காக வந்தவர். திருமணமாகி வந்தவருக்கு வேலை செய்யும் இடத்தில் முள்ளந்தண்டு முறிவடைந்து ஒப்பிரேசன் செய்யப்பட்டது... அவரை பார்க்க தான் சென்றேன்.

பின்னர் 3 நாளில் இந்த நாடு வந்தேன்.

------------------------------------------------------------------------------------------------------------------

இனி இந்த நாட்டில் நடந்தவை...

இங்கு எனக்கு நடந்த தனிப்பட்ட பிரச்சினைகளில் சிலவற்றை வேறொரு திரியிலும் கூறியிருந்தேன். இன்னும்பல இருந்தாலும் அவற்றை சொல்லாமல் தவிர்க்கிறேன். (பின்னொரு நாளில் சிலவேளை எழுதுவேன்)

முதல் தடவை அகதி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக என் பிரச்சனைகளை எழுதி ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் (ஒரு ஆண்) மொழிபெயர்க்க கொடுத்தேன். வந்து எடுக்குமாறு ஒவ்வொரு திகதி சொல்லுவார். அந்த திகதிக்கு போனால் இன்னும் மொழிபெயர்த்து முடியவில்லை. இன்னொரு நாள் வரும்படி கூறுவார். (இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் நடந்ததை அவதானித்தேன்). இறுதியாக எனது கேஸை அனுப்ப வேண்டிய திகதிக்கு முதல் நாள் என்னிடம் ஒப்படைத்தார். வாசித்து பார்க்க எனக்கு உதவிக்கு ஒருவரும் இல்லை. சிலரிடம் கேட்டால் அவர்களுக்கு கதைக்க தெரியும் வாசிக்க தெரியாது என்று கூறினார்கள். பின் வேறு வழியின்றி உடனேயே photocopy எடுத்து விட்டு உரிய முகவரிக்கு அனுப்பினேன்.

எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பின் தான் மொழிபெயர்ப்பாளர் என்ன எழுதியிருக்கிறார் என்று எனக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்தால் நான் கொடுத்ததில் சிலவற்றை எழுதாமல் பலவற்றை புகுத்தியிருந்தார்.

அவர் புகுத்திய விடயங்களில் முக்கியமானவை....

  • நான் போலி விசா எடுத்து லண்டன் சென்றேன்.....
  • விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டு நாட்டுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டேன்......
  • அதன் காரணமாக இராணுவத்தினர் நீர்கொழும்பு முகாமிற்கு என்னை கொண்டுபோய் சித்திரவதைப்படுத்தினார்கள்...
  • பின்னர் பணம் கொடுத்து வெளியேறினேன்....
  • மீண்டும் என்னை கைது செய்து பெற்றாவில் ஒரு முகாமில் வைத்து சித்திரவதைப்படுத்தினார்கள்....
  • பின்னர் வெளிவந்தேன்...
  • இறுதியாக ஏஜென்சி மூலம் இந்த நாட்டுக்கு வந்தடைந்தேன்...

இவற்றை வாசித்ததும் எனக்கு எப்படியிருந்திருக்கும்?????? இதை விட பல விடயங்களை புகுத்தி (திகதிகள் உட்பட) கிட்டத்தட்ட குழப்பமான ஒரு கேஸாக வந்து விட்டது. :(

அந்த மொழிபெயர்ப்பாளரிடம் சென்று சண்டை பிடித்தால் எனக்கு ஆபத்து. எனவே எதற்காக அப்படி எழுதப்பட்டது என்று தன்மையாக கேட்டேன். அகதி விசா கொடுக்கும் ஒரு நாட்டை தாண்டி வந்தால் (அங்கு fingerprint உம் எடுத்ததால்) இந்த நாட்டில் விசா தர மாட்டார்கள் என்பதால் அப்படி எழுதியதாக குறிப்பிட்டார். இனி எழுதியாச்சு மாற்ற முடியாது என்று கூறினார்.

உரிய நாளும் வந்து விட்டது. கேஸ் நடக்கும் இடத்துக்கு சென்றேன்... அவர்கள் என்னை கேள்வி கேட்பதற்கு முன்னமே நான் இந்த பிரச்சினையை சொன்னேன். பரவாயில்லை உங்கள் உண்மையான பிரச்சினையை சொல்லுங்கள் என்று கூறினார்கள். எனது கேஸை தமிழில் கொடுத்தேன். வாங்க மறுத்து விட்டார்கள். என்னுடைய பிரச்சினை தெரியாமல் எப்படி என்னை கேள்வி கேட்பீர்கள் என்று கேட்டு விட்டேன். (யாழிலேயே சண்டைக்காரி. அங்கு மட்டும் சும்மா இருப்பனா என்ன? :D)

ஆனால் பிறகும் முதல் கேஸை வைத்து தயார் படுத்திய கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். நான் எனது கேஸின் படி பதில் கூறினேன். :D

நான் இயக்கம் என்று கூறவில்லை. இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும் கூறவில்லை. சண்டை நடந்த இடத்தில் இருந்ததாகவும் கூறவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவே கேஸிலும் கொடுத்தேன்.

ஆனால் அவர்களோ என்னிடம் இயக்கத்தை பற்றி பல கேள்விகள் கேட்டார்கள். :D

  • இயக்கம் (விடுதலைப்புலிகளினது இயக்கம்) என்றால் என்ன என்று கேட்டார்கள். இந்த கேள்வியை என்னிடம் கேட்பார்கள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். :D அதனை நோட் பண்ணி விட்டார்கள். (body language பார்ப்பவர்களாச்சே)
  • இயக்கம் எங்கு ஆரம்பித்தது?

  • அவர்களின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
  • யாழ்ப்பாணத்தில் எங்கெங்கு சண்டை நடந்தது?
  • சண்டை எந்த ஆண்டு முடிந்தது?
  • என்ன மாதம்?
  • என்ன திகதி?
  • 2009 march இல் எங்கிருந்தீர்கள்? அந்நேரம் எப்பிரதேசத்தில் சண்டை நடந்தது?
  • எங்கு இறுதியாக நடந்தது?
  • நீங்கள் நாட்டில் எந்த எந்த இடங்களுக்கு சென்றீர்கள்? என்ன திகதிகளில்?
  • நாட்டை விட்டு என்ன திகதியில் வெளிக்கிட்டீர்கள்? (இன்னும்பல..... )

அனைத்திற்கும் சரியாக தான் பதிலளித்தேன்.

நாட்டில் எனக்குள்ள பிரச்சினை பற்றி பல கேள்விகள். அதற்கும் சரியாக தான் பதிலளித்தேன்.

ஆனாலும் reject...

  • நான் யாழ்ப்பாணம் என்று அவர்கள் நம்பவில்ல. (நானும் அடையாள அட்டை, படித்த certificate எதுவும் கொடுத்திருக்கவில்லை. தனிய birth certificate தான் கொடுத்திருந்தேன்)
  • இயக்கத்தில் இருந்து ஆமியுடன் சேர்ந்த சிலர் பற்றி கூறியிருந்தேன். (இது உண்மை சம்பவம்) ஆனால் அப்படியானவர்கள் ஒருவரும் யாழ்ப்பாணத்தில் இல்லை என்றும் ஈ.பி.டி.பி மட்டும் தான் ஆமியுடன் இணைந்துள்ளார்கள் என்றும் கூறியிருந்தார்கள்.
  • இன்னுமொரு உண்மை சம்பவம் கூறினேன். அதையும் நம்பவில்லை.

இன்னும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இவை தான் முக்கியமாக கூறப்பட்டது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

இனி re-appeal பண்ண வேணும்.

முதல் மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே பிழை விட்டதால் அவரிடம் இம்முறை போகாமல் வேறொருவரிடம் (ஆண்) சென்று எனது கேஸை மொழிபெயர்க்க கொடுத்தேன். முதல் கேஸும் தேவை என்று கேட்டார். கொடுத்தேன்.

இவர் அறிவுக்கொழுந்து. நான் சொன்னதெல்லாம் பிழை. முதல்கேஸில் உள்ளது தான் சரி. நான் மாறி சொல்லிப்போட்டன் என்று எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் நெருங்கியதில் தானே எனது sign ஐ போல் வைத்து photocopy எடுத்து விட்டு அனுப்பிப்போட்டார்.

முதல் அனுபவம் தெரிந்ததில் நான் உடனேயே இன்னொருவரை கொண்டு வாசித்து(காசு கொடுத்து) என்ன நடந்தது என்று கண்டுபிடித்து விட்டேன். இவர்களுக்கெல்லாம் எதுக்கு கோட் சூட்????? என்று கோபம் தான் வந்தது. பிறகு இன்னொரு மொழிபெயர்ப்பாளரை பிடித்து(இவரும் ஆண் ) முதலில் இருந்து அனைத்தையும் விளங்கப்படுத்தி மன்னிப்பு கேட்டு எழுதி அதனுடன் எனது கேஸையும் கொடுத்து (முதல் கேஸை மறந்தும் கூட கொடுக்காமல்) இரண்டையும் மொழிபெயர்ப்பித்து அனுப்பி விட்டேன்.

இதற்கும் அழைப்பு வந்து விட்டது. lawyer ஐ சந்தித்து கதைத்தேன். (ஆங்கிலம் கதைப்பார்)

இன்னொரு திகதி தந்து, கேஸை பற்றி கதைக்க வேண்டும் என்பதால் மொழிபெயர்க்க ஒருவரை அழைத்து வரும்படி கூறினார். இதற்கு ஒரு பெண் மொழிபெயர்ப்பாளரை பணம் கொடுத்து அழைத்து சென்றேன். சில கேள்விகள் கேட்டு பதில் எழுதி விட்டு மீண்டும் வரும்படி இன்னொரு திகதி தந்தார். அதே பெண்ணை நான் திரும்ப பணம் தருவதாக கூறி அந்த திகதிக்கு வரும்படி கூறினேன். சரி என்று கூறினார். அந்த திகதிக்கு முதல் நாள் நினைவு படுத்தினேன்.... அன்றும் விடிய நினைவு படுத்தினேன். வருவதாக கூறிவிட்டு வரவில்லை.....

2 நாள் தான் எஞ்சியிருந்தது. பிறகு வேறு வழியில்லாமல் lawyer ஆங்கிலத்தில் கேட்டு கேட்டு எழுதினார். எனக்கு அனைத்திற்கும் பதில் சொல்லும்படி ஆங்கிலம் தெரியாததால் சிலவற்றுக்கு பதிலளிக்கவில்லை. பதிலளித்தததும் அரைகுறை ஆங்கிலத்தில். நான் கதைக்கிற ஆங்கிலத்தை யார் தான் தாங்குவார்கள்? :lol: அதாலை lawyer உம் 15-20 நிமிடத்தில் என்னை போக அனுமதித்தார்.

இது நடந்தது போன மாதம். பிறகு கேஸ் நடக்கும் இடத்திற்கு போய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னேன். (இந்த முறை body language ஐ கவனத்தில் கொண்டேன்)

முதல் கேள்வியே எதற்கு மாறி மாறி கேஸ் அனுப்பியிருக்கிறேன் என்று.. அதற்கு ஒழுங்கா பதில் சொல்லி விட்டேன்.

பின்னர் லண்டனில் அகதி விசா கேட்காமல் இங்கு ஏன் கேட்கிறேன் என்று கேட்டார்கள்.... அதற்கும் உரிய பதில் சொன்னேன்.

பிறகு என்னுடைய கேஸை வைத்து என் தலைமயிரை புடுங்கு புடுங்கு என்று புடுங்கினார்கள்.... அன்று தான் எனக்கே தெரியும் இந்த கேஸுக்குள்ளும் இத்தனை கேள்வி கேட்க முடியுமா என்று.... ஆனால் கேட்டதெல்லாவற்றுக்கும் ஒழுங்கா பதில் சொன்னனான். ஆனாலும் தலைமயிர் கொஞ்சம் கொட்டுண்டு போச்சு. :lol:

போனமுறை நான் யாழ்ப்பாணம் என்று நம்பாததால் இம்முறை நான் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்ற O/L, A/L certificate photocopy எல்லாம் கொடுத்தேன்.

வாற கிழமை எனக்கு பதில் வரும். என்ன பதில் வரும் என்று தெரியேல்லை.

விசா கிடைக்குமாக இருந்தால்.....

  • ஒழுங்கா பதில் சொன்னமை.
  • body language ஓரளவு சரியாக இருந்தமை.
  • ஜட்ஜின் கருணை.
  • பாவம் குழந்தைப்பிள்ளை பிழைச்சு போகட்டும் என்று நினைத்தமை. :lol: (அர்ஜுன் அண்ணா மட்டுமில்லை. நேரிலும் என்னை பலர் குழந்தைப்பிள்ளை போல் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதான் )

போன்றன காரணமாக அமையும்.

திரும்ப reject கிடைக்குமாக இருந்தால்.....

  • நான் மாறி மாறி கேஸ் கொடுத்ததால் ஏற்பட்ட குழப்பம்.
  • அகதி விசா கொடுக்கும் நாட்டை தாண்டி இங்கு வந்து அகதியாக பதிந்தமை.
  • எனது கேஸை நம்ப முடியாமை.

போன்றன காரணமாக அமையும்.

எதற்கும் பதில் வர முன் இங்கு எனக்கு உதவி செய்தவர்கள், இங்கு வந்தபின் என்னுடன் நண்பர்களானவர்களின் வீட்டிற்கு போய் வர போறன்...

முடிவு தெரிந்ததும் தான் மீண்டும் யாழுக்கு வருவேன். வந்து அறிவிக்கிறேன். எனக்கு விசா கிடைத்தால் சந்தோசப்படவும் மாட்டன். reject கிடைத்தால் கவலைப்படவும் மாட்டன். (அனேகம் reject தான் வரும் என்று எதிர்பார்க்கிறன்)

நன்றி.

பி:கு:- மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்றால் பலருக்கும் அவர்கள் கூறியபடியே கேஸை மொழிபெயர்த்தாலும் இன்னும்பலருக்கு இப்படி பிழை பிழையாக எழுதி வந்த அனுபவம் இருக்காம். பலரிடமிருந்து கேள்விப்பட்டேன். எனவே மக்களே கேஸை அனுப்ப முன் சரியாக யாரையும் கொண்டு வாசித்து விட்டு அனுப்புங்கள்.......

சேர்க்கப்பட்டுள்ளது.

நான் இப்பொழுது இருக்கும் நாட்டின் மொழி ஆங்கிலமில்லை.

------------------------------------------------------------------------------------------------------------

[size=5]முடிவு பார்த்தேன்.[/size]

[size=4]ஆறுதல் கூறிய, நம்பிக்கையளித்த அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி. [/size]

[size=4][size=5]கள உறவுகளே எனக்கு விசா accept பண்ணியிருக்கிறார்கள்.[/size][/size][size=4] [/size][size=4] [/size]

[size=4]கேஸ் நடந்த இடத்தில் எனது பெயருக்கு நேரே போட்டிருக்கிறார்கள். என்னால் நம்ப முடியவில்லை. வெளியில் வந்து விட்டு எனது பெயர் தானோ என்று சந்தேகத்தில் திரும்ப சென்று பார்த்தேன். எனது பெயர் தான். results மாறி போட்டிருக்க மாட்டார்கள் தானே???? [/size][size=4] வீட்டிற்கு எப்ப அனுப்புவார்கள் என்று தெரியவில்லை. [/size]

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சொந்த அனுபவப் பகிர்வு வாசிக்க.. கவலை தான் மிஞ்சுது. எத்தனை சிரமங்கள்.. போராட்டங்கள். :(

இங்க தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அநேகர் குருட்டுவாக்கில.. தங்களுக்கு தெரிஞ்சதை தான் சொல்லுறவை. மொழிபெயர்க்கிறது தெரியாது அவைக்கு...!! :lol:

காவடி எடுத்திட்டீங்க.. எனி ஆடித் தான் இறக்கனும்... எல்லாம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்..!

உங்கட ஸ்ரேட்மெண்ட்.. credibility ஐ கொண்டிருந்தா.. நிச்சயம்.. விசா கிடைக்கும்.

இல்லைன்னா.. இன்னும் கொஞ்சம் கஸ்டப்பட வேண்டி இருக்கும். இன்னும் பல வழிகளில் அப்பீல்.. பண்ணலாம்.. அப்படித்தான் இங்க (லண்டனில) செய்து கொடுக்கினம்... எதையும் உங்கள் வழக்கை கையில் எடுத்தவர்களிடம் கலந்தாலோசிச்சு செய்யுங்கோ. பணம் தான்.. தண்ணியா இறைக்கப்படும்..!

நீங்கள் அதிகம்.. நித்திரையே கொள்ளுறதில்லை என்றது.. உங்க எழுத்தில் மட்டுமல்ல.. யாழில பார்க்கவே தெரியுது. மனக் கஸ்டம் போல. அது நீங்கனுன்னா.. முதலில நல்ல நித்திரை கொள்ளுங்க. ஒரு அண்ணணா.. சொல்லக் கூடியது இது தான். :icon_idea:

Link to comment
Share on other sites

துளசி விசா கிடைக்க வாழ்த்துக்கள். மொழி பெயர்க்க யாழ்களத்திலேயே எத்தனை அண்ணாமார்,அக்காமார் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகிறார்கள்.அவர்களிடமே கேட்டிருக்கலாமே??

ஏனையவர்கள் மொழி பெயர்த்தாலும் அவுசில் உள்ளவர்களுக்கு தான் எப்படி எழுத வேண்டும் என தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் பதிவு, மனதை பாதித்துவிட்டது.

நெடுக்ஸ், நுணாவிலான் சொன்னமாதிரி.... நிராகரிக்கப்பட்டால், பணம் தான் இனி... வீண்விரயமாகும். உங்களின் மொழி பெயர்ப்பு விடயங்களை, யாழ் கள மொழிபெயர்ப்பாளர்களிடம் தனி மடலில் பேணவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]உங்களுக்கு விசா கிடைக்க கடவுளை [/size][size=1]

[size=5]வேண்டுகிறேன் [/size][/size]

Link to comment
Share on other sites

கேஸ் எழுதுகிறவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோராலேயே இங்கு பலருக்குப் பிரச்சனை வந்துள்ளது. அவர்களும் வேண்டுமென்று செய்வதில்லை. விடயம் தெரியாமல்தான் செய்கிறார்கள். இனிவரும் காலங்களில் தீர விசாரித்து நல்ல திறமையானவர்களை அணுகுங்கள். முக்கியமாக நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள விசா கிடைத்த அகதிகளின் அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தெரிந்த ஒருவருக்கு வழக்கு நீண்டகாலமாக இழுபட்டது. இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்ப விமான நிலையத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். பின்பு ஏதோ ஒரு காரணத்தினால் அனுப்புவதில்லை என்று முடிவெடுத்து வழக்கு நடந்து வழக்கு அவருக்கு சாதகமாக முடிந்து விசா கொடுத்துவிட்டார்கள். மகிச்சியில் அழுதார். இப்பொழுது அதனது குடும்பத்தை இங்கு அழைக்கப் போகிறார்.

நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, மனத்தைத் தளர விட வேண்டாம்!

அனைத்தும் நல்ல படியாகவே முடியும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேஸ் எழுதுபவர்களில் பலர் சரியான தொழில் நிபுணத்துவம் இல்லாதவர்கள். எப்போதும் பணத்தில் குறியாக இருப்பதால், கடைசி நாள் மட்டும் வைத்திருந்துவிட்டு ஏதோ தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மாதிரி எழுதிப் பலரின் வாழ்க்கையை நிர்க்கதியாக்கியுள்ளார்கள். ஒரு அகதிக் கோரிக்கை ஏற்கப்படுவதற்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று தனிப்பட்ட ரீதியில் ஒருவருக்கு உள்ள உயிராபத்து சரியான ஆதாரங்களுடன் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்படவேண்டும். இரண்டாவது கொடுக்கப்பட்ட விண்ணப்பம் நம்பகத்தன்மையாக இருக்கவேண்டும்.

நீங்கள் நேர்மையாக உங்கள் விண்ணப்பத்தில் உள்ளவற்றுக்குப் பதில் அளித்திருப்பதால், தனிப்பட உயிராபத்து இருக்கும் என்றும் நீதிபதி கருதும் பட்சத்தில் அவர் அகதிக் கோரிக்கையை ஏற்கச் சந்தர்ப்பம் அதிகம் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

உங்கள் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிட்ட இறைவனை வேண்டுகிறேன். உங்கள் துன்பம் மிகவும் மனதை தொட்டது. எம்மவர்களின் அலட்ச்சிய போக்கும் காசில் மட்டும் குறியாய் இருக்கும் தன்மை தான் பல கேஸ்கள் தோற்பதற்கு காரணம். கொஞ்சம் நேரம் எடுத்து மனிதாபிமானத்துடன் எம்மவர்கள் நடந்து எம் மவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

உங்களது பதிவை வாசித்து முடிக்கும்போது மனது கனக்கிறது. உங்கள் நிலையினை தத்ருபமாக எதியிருக்கின்றீர்கள்;.

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை என்றபோதும் சரியாக அணுகப்படுவதற்கும் நேர்மையாக அணுகப்படுவதற்கும் இடையில் துரதிஸ்ரவசமாக வேறுபாடுகள் இருக்கவே செய்கிறன. ஏனோ இந்தத் திரியில் கூறத்தோன்றுவதால் பின்வருவனவற்றைக் கூறுகிறேன். தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள்.

வழக்கோடு தொடர்புபட்ட நீதிபதிகளும் மற்றைய அலுவலர்களும் அவர்களும் என்னதான் மனிதர்களாக இருந்தாலும், ஒவ்வொரு வழக்குச் சார்ந்தும,; ஒவ்வொரு கேசையும் வாசித்து உள்வாங்கி தமது உள்ளம் என்ன சொல்கிறது என்று முடிவெடுப்பதற்கான சாத்தியங்களோ அல்லது உரிமையோ அவர்களிற்கு மிக அரிது. அவர்களிற்கு இது வேலை. இன்ன இன்ன பிறிசிடென்ஸ் (முன்னுதாரணம்) இன்ன இன்ன புள்ளிகள் இருக்கின்றனவா என்று ஒரு சரிபார்த்துக்கொள்ளும் சிட்டிகையை வைத்துப் பேனாவால் இருக்கா இல்லையா என்று குறித்துக் கொள்வதைப் போலத் தான் அவர்களால் பார்க்கமுடியும். மேலும், அவர்கள் சரிபார்க்கும் சிட்டிகை எப்பெப்போ எப்படி மாறும் என்பதிலும் அவை சார்ந்த அறிவுறுத்தல்களிலும் ஒரு அரசின் பல்வேறு அருவ உருவ கரங்கள் தொடர்புபட்டிருக்கும். இந்நிலையில், பணம்பெற்று வழக்கு எழுதும் மொழிபெயர்ப்பாளர் செய்யக்கூடியது குறித்த நேரதத்தில் அமுலில் இருக்கும் மேற்படி சரிபார்க்கும் சிட்டிகைக்குப் பொருந்தும் ஒரு வழக்கை உங்களைச் சார்ந்து பின்னக்கூடியது மட்டுமே என்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கு மொழிபெயர்ப்பு என்பது வெறும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு என்பதாக இருக்கமுடியாது. இங்கு ஆங்கிலம் அல்ல உண்மையில் மொழி, ஆங்கிலம் வெறும் கருவி மட்டும் தான். உண்மையில் இங்கு மொழி என்பது விற்பனையாகும் கதை எப்படி இருக்கவேண்டும் என்ற விதி தான். இதனால், ஆங்கிலம் தெரிந்தால் வழக்கெழுதலாம் என்று தோன்றவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிட்ட இறைவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள்.துணிச்சலான பெண்ணுக்கு விசா கிடைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

விசா கிடைக்க என்னுடைja வாழ்த்துக்கள் கலந்த பிரார்த்தனைகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லபடியாக நடக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கன்றேன்.

Link to comment
Share on other sites

இதை வாசிக்கும் போது மிகவும் கஸ்டமாக இருந்தது. இதனை துளசியினுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கவில்லை. புலம்பெயர் தேசங்கில் குறிப்பாக இங்கிலாந்தில் ஏராளனமானவர்கள் தங்கள் எதிர்காலம் நிச்சயிக்கப்படாமல் பல காலமாக வழக்கு இழுபடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்குகளுக்காக பெருமளவு பணம் தேவைப்படும் நிலையில் ஒரு தொழிலையும் சட்டரீதியாகச் செய்ய முடியாத காரணத்தால் நம்மவர்களால் மிகக் குறற்நத சம்பளத்திற்கு அமர்த்தப்படுிகிறர்கள். அதைவிட மிகக் கொடுமையான விடயம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் சட்டத்தரணைிகளும்: பணம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு இவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது தான். (சிலமாதங்கள் ஒரு சட்டத்தரணியின் அலுவலகத்தில் வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன்.)

அதைவிட இத்தனை கஸ்டங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நம்மவர்களே செய்யும் ஏளனங்கள் கொடுமையிலும் கொடுமை.

துளசி, நம்பிக்கையோடு இருங்கள்.நல்ல தீர்ப்பே வர வேண்டும் என்று பலரும் விரும்புகிறோம். தீர்ப்பு பாதகமாக அமைந்தாலும் உடனடியாக நாட்டை விட்டுதிருப்பி அனுப்ப மாட்டார்கள். அதற்குள்ளாக நம்பிக்கையான விசயம் தெரிந்தவர்க் மூலமாக நல்லதொரு சட்டத்தரணியின் உதவியோடு மேன்முறையீடு செய்யலாம்.

எல்லாம் நல்லதாக நடக்கட்டும்....

Link to comment
Share on other sites

[size=4]எல்லாம் நன்றாக அமையட்டும். [/size]

[size=1]

[size=4]வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்த முள்ளுக்காடு. எதையும் கடந்து செல்லும் மனத்துணிவும் பக்குவமும் உள்ளவர்கள் நீங்கள். உங்களைப்பற்றி எனக்கு கவலை இல்லை. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் சந்தோசமாக இருக்க மகிழ்சியான செய்தி வரும் அதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் துளசி.

Link to comment
Share on other sites

உங்களுக்கு விசா கிடைத்துவிட்டது......கவலையை விடுங்கள் ...ஏனனில் இறைவன் மனிதர்களை துன்பம் ,சோதனை

மிகுந்த கரடுமுரடான பாதை வழியே அழைதுச்சென்றுதான் ....இன்பம் என்னும் சிகரத்தில் உயர்த்தி வைப்பான்...அப்போ உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து துன்பங்களும் விலகி அமைதியடைவீர்கள் .....நானும்

எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் உங்களுக்குரிய தேவைக்காக வேண்டுகிறேன்.....

கேளுங்கள் தரப்படும்........தட்டுங்கள் திறக்கப்படும்...........தேடுங்கள் கிடைக்கப்பெறும்........[ ஜேசு பிரான்]

இது மதப்பிரச்சாரம் அல்ல.........ஒவ்வொரு மனிதத்தின் மனக்குமுறல்களும் .........

Link to comment
Share on other sites

இவ்வளவு துணிச்சலான பெண்ணாயிருக்கின்றிர்கள். ஆகவே உங்களுக்கு நிச்சயமாக நல்ல செய்திகிட்டும்.

Link to comment
Share on other sites

வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓர் செய்முறை. ஒருநாளும் பூரணத்துவத்தை/முழுமையை நாம் பெறமுடியாது. வாழ்க்கையின் எல்லாக்காலத்திலும் ஏதாவது பிரச்சனைகள், தவிப்புக்கள், திருப்தியின்மைகள், குறைபாடுகள் தொடர்ந்துகொண்டே காணப்படும்.

ஒருவேளை உங்களுக்கு தொடர்ந்து தங்க அனுமதி கிடைக்காவிட்டாலும், உங்கள் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள், ஆற்றல்கள் கிடைத்துள்ளன என்பதை எப்போதும் நினைத்துக்கொள்ளுங்கள். வெளிநாடு வந்தபோது பெற்ற அனுபவங்களை வைத்து உங்கள் வாழ்க்கையை இன்னும் செழிப்பாக முன்னேற்றிக்கொள்ளுங்கள்.

தொடர்ந்து தங்க நிரந்த அனுமதி இந்த நாட்டில் கிடைக்கும்போது வராத முன்னேற்றம் அனுமதி மறுக்கப்படும்போது கிடைக்கலாம். இங்கு நான் கனடாவில் எத்தனையோ பல குடும்பங்களைப் பார்க்கின்றேன். எத்தனை சச்சரவுகள், நோய்கள், பிடிபாடுகள், மன அழுத்தங்கள்... அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் கனடாவுக்கு வந்து ஊரில் இல்லாதவகையில் புதினமாக என்னத்தை வாழ்ந்து கிழிக்கின்றார்கள் என்றும் யோசிப்பதுண்டு.

அதற்காக, தற்போதைய முயற்சியைகைவிடவேண்டும் என்று இல்லை. திட்டம் 01, திட்டம் 02, திட்டம் 03, திட்டம் 04 என பலமாதிரியான பாதைகளையும் கடப்பதற்கு, சவால்களை எதிர்கொள்வதற்கு உங்களைத்தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது தொடர்ச்சியான ஓர் செய்முறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளே துளசி

நம்பிக்கை தான் வாழ்க்கை.நல்ல முடிவு கிட்ட எல்லோரும் வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.