Jump to content

அனைவரையும் ஒரு சந்தோசமான செய்தி அல்லது சோகமான செய்தியுடன் அடுத்த கிழமை சந்திக்கிறேன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]யாழ் கள உறவுகளின் பிரார்த்தனை பலித்தது. துளசிக்கு வாழ்த்துக்கள்.[/size]

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி யாழ்கள பிரார்த்தனையில் ஏதோ இருக்குது .

Link to comment
Share on other sites

காதல். எல்லாம் நல்லதே நடக்க பொதுவான இறைவனை வேண்டுகிறேன்

நன்றி உதயம் அண்ணா, நீண்ட நாளின் பின்னர் யாழில். உங்கள் வேண்டுதலுக்கு நன்றி. :)

துளசி உங்கள் முயற்சி வெற்றிபெற இறைவன் அருள் புரிவாராக.

நன்றி குளக்கட்டான் அண்ணா உங்கள் பிரார்த்தனைக்கு. :)

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்படி எதுவித அலைச்சல்கள் கஷ்டங்கள் படாததால இதன் தார்ப்பரியம் அவளவு தெரியவில்லை.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஏனையவர்களுடன் ஒப்பிடுகையில் இவை பெரிய அலைச்சல் இல்லை. :)

நல்லதே நடக்கும், மனம் தளராதீர்கள்

நன்றி உடையார் அண்ணா, உங்கள் நம்பிக்கையூட்டிய வார்த்தைக்கு. :)

Link to comment
Share on other sites

மிகவும் மகிழ்ச்சி.

புலம்பெயர் தேசத்தில் வதிவுரிமை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை என்|னுடன் கூடத் தங்கியிருந்த நண்பர்கின் மனஉணர்வுகளின் மூலம் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் தொழில் செய்ய முடியாமல் படிக்க முடியாமல் அவர்கள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. இதற்கிடையே ஒரு நல்ல நிலையை எட்டிப் பிடித்த மிருகங்களின் ஏளனங்களையும் எதிர்கொள்ள வேண்டும். விசா இல்லாத அசைலி என்று தெரிந்தால் அடிமட்ட சம்பளத்தில் அவர்களின் வியர்வையை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகளுக்கும் குறைவில்லை.

நீங்கள் இந்த நிலையைக் கடந்திருப்பதில் மகிழ்ச்சி.

தொடர்ந்தும் உங்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சுண்டல் இரவிரவா குப்புற படுத்திருந்து ஜோசிச்சதில ஒரு டவுட் வந்திடிச்சு என்னன்னா உங்க சிஸ்டேர்ஸ் அங்க யுனில படிக்கினம் அவங்களக்கு மிரட்டல் வராம எப்பிடி உங்களக்கு வந்திச்சு? அப்பிடின்னு நான் கேட்கல ஜட்ஜ் கேக்குற மாதிரி ஒரு ட்ரீம் that's ஆல் யுவர் ஆனர்

சுண்டல் அண்ணா, என் சகோதரர்கள் என்று கூறினேனே தவிர அவர்கள் சிஸ்டேர்ஸா பிரதர்ஸா என்று கூறவில்லை.

நீங்களே குப்புற படுத்திருந்து யோசிக்கும் போது ஜட்ஜ் மட்டும் சும்மா இருப்பாரா? அவர் குப்புற படுத்து, கவிண்டு படுத்து, நிமிர்ந்து படுத்து, புரண்டு படுத்து யோசித்து இந்த கேள்வி கேட்டார்.

என் சகோதர்கள் எம்முடன் வசிப்பதில்லை. ஆளாளுக்கு ஒரு திக்கில் உள்ளார்கள். 2004 ஆம் ஆண்டின் பின்னர் நானே அவர்களை ஒரு 10 தரம் தான் சந்தித்திருப்பன். அவர்கள் தான் என் சகோதரம் என்று பலருக்கு இன்னும் தெரியாது. சில தெரிந்தவர்களால் என் சகோதரர்களில் ஒருவருக்கு பிரச்சினை. பல்கலைக்கழக ஹொஸ்டல் வரை சென்றார்கள். ஆனால் உள்ளே விடவில்லை. காரணம் அவர் படித்தது சிங்களவர்களுடனான பல்கலைக்கழகத்தில். அவர் சிங்களவர்களுடன் அரசியல் விடயம் கதைக்காததால் அவர்கள் இவருக்கு நண்பர்கள். அங்கு பிரச்சினை நடந்தால் ஆர்ப்பாட்டம் செய்ய கூடியவர்கள். அவர் படித்த துறையும் அப்படி.

நானும் பல்கலைக்கழகம் போனால் எனக்கு ஆபத்து வராமல் இருந்திருக்கும் தானே என்று கேட்டார்கள். நான் சொன்னேன் எனக்கு கிடைத்தது தமிழர்களுடன் படிக்கும் பல்கலைக்கழகம். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் நடத்துபவர்களை சுட்டு விட்டு போய் விடுவார்கள் என்று. அது தானே உண்மை.

போலீசில் புகார் கொடுக்கலாம் என்று சொன்னார்கள். போலிசும் இராணுவத்தினர் போல் தான் என்று கூறினேன்.

மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டிருக்கலாம் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் அவர்களே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளார்கள். அவர்களுக்கே அங்கு பாதுகாப்பில்லை என்று. அத்துடன் அவர்களிடம் பலரும் முறையிட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே எந்த நல்ல முடிவும் கிடைக்கவில்லை என்று.

கேஸ் points பலதை கொண்டிராவிட்டாலும் கேள்விக்கணைகள் மட்டும் அறம்புறமா வந்திச்சு.... :)

நடப்பவை எல்லாம் நன்மைக்கு என நினையுங்கள். நல்லதே நடக்கும்......

நன்றி உங்கள் வாழ்த்துக்கு. :)

இன்று தான் உங்கள் பதிவைப் படித்தேன் துளசி. குறுகிய காலத்திலேயே களத்தில் எல்லோருடனும் நட்புப் பாராட்டும் பெண்ணாக மாறியுள்ளீர்கள்.

உங்களுக்கு நல்ல முடிவாக கிடைக்க வேண்டுகிறேன்.

என்றாலும், இன்னொரு விதமான முடிவு வந்தால் என்ன செய்யலாமா என்றும் நாம் யோசிக்க வேண்டும். இங்கே களத்தில் உங்களூரைச் (வாழும் நாடு) சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்களால் நேரடியாக உதவ முடியாவிட்டாலும், நல்ல ஆட்களை அறிமுகம் செய்து வைக்க முடியும். முயற்சியுங்கள்.

உங்கள் வேண்டுதலுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி அண்ணா. :)

செய்திகளை மட்டும் படித்துவிட்டு வெளியேறி விடுவதால் இன்றுதான் பார்த்தேன். முடிவு தெரியாததால் என்ன சொல்ல என்று தெரியவில்லை.

துளசிக்கு மனதிற்கு பிடித்த இடத்தில் மனதிற்கு பிடித்த வாழ்கை கிடைக்க வாழ்த்துகிறேன்.

ஆசைப்படாதவர் வாழ்க்கையில் வீணான நாள் என்று இல்லை. வாழ்ந்த நாள் எல்லாமே பொன்னான நாட்களே. அவர்களின் வாழ்கையில் எப்போதுமே கையும் கணக்கும் சரி.

துளசிக்கும் நடக்க இருப்பது மட்டும் நன்றாக நடக்கட்டும்.

அண்ணா வெளிநாடு எனக்கு மனதுக்கு பிடித்த இடமும் அல்ல, இங்கு நான் மனதுக்கு பிடித்த வாழ்க்கை வாழவும் மாட்டேன். ஆனாலும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

எனக்கு நடக்க இருப்பது மட்டும் நன்றாக நடக்க வேண்டும் என்று வாழ்த்தியதற்கு நன்றி. நல்ல பதிலே கிடைத்துள்ளது. :)

Link to comment
Share on other sites

இன்றுதான் உங்கள் திரியை பார்த்தேன் துளசி :( . வாழ்க்கை என்னும் பயணத்தில் சரியான இடத்தில் சரியாக முதலாவது பஸ்சை(bus) பிடித்துள்ளீர்கள் இனி எல்லாம் நல்லதாவே நடக்கும் வாழ்த்துக்கள் துளசி. (காதல்)

Link to comment
Share on other sites

woooooooooooow....வாழ்த்துக்கள்...பாட்டி எப்ப..?காட்வர கிட்டத்தட்ட ஒன்பது மாசம் எடுக்கம் காதல்...அதற்க்கிடையில் உங்கள் தற்போதைய விசா மாற்றப்போகும்போது அவர்களே புதிய விசாவிற்க்கு மாற்றித்தருவர்கள்..ஆனால் அதுவும் முடிவுத் திகதி(valide) கொண்ட விசவாகவே இருக்கும்...லெற்றர் இன்னும் கொஞ்சநாளில் வீட்டுக்கு வரும்...அதைக்கொண்டுபோய் நீங்கள் அங்கு குடுக்கவேண்டும்..அதன் பின் உங்கள் பிறபுசான்றிதழ் மாற்றப்பட்டு கிடைக்கும்..பின்னர் காட் அனுப்புவார்கள்...

நன்றி. நான் இதனை கொண்டாடும் நோக்கில் இல்லை. எனவே பார்ட்டி எல்லாம் வைக்க மாட்டன். :)

தகவல்களுக்கு நன்றி. இந்த பிரச்சினை முடிந்தால் இன்னொரு பிரச்சினை வரும் அதை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும்.

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாட்களும் விசாவைப் பற்றி யோசித்து கலக்கம் அடைந்திருப்பீர்கள். இன்றைய நாளை இனிதாகக் கொண்டாடுங்கள் தூள் சீ.

நன்றி அண்ணா. கொண்டாடும் நோக்கம் இல்லை. ஆனாலும் ஒரு அலைச்சல் குறைந்துள்ளது. நன்றி. :)

வாழ்த்துக்கள் ,மிக்க மகிழ்ச்சி காதல் ........நான் அப்பவே சொன்னானல்லவா .......உங்களுக்கு விசா கிடைத்துவிட்டது .....

இறைவனுக்கு நன்றி...இந்த மகிழ்ச்சி தொடரட்டும் ......வெகு விரைவில் திருமண பந்தத்துடன் பலதும் பெற்று சீருடனும்

சிறப்புடனும் வாழ மீண்டும் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் ...... மகிழ்ச்சி தாயே......... :lol: :lol:

ஆம் அண்ணா. நீங்களும் அலை அக்காவும் உறுதியாக எனக்கு கிடைக்கும் என்று கூறியிருந்தீர்கள். ஐயையோ திருமண பந்தத்துக்குள் விழ நான் தயாரில்லை.

நன்றி அண்ணா. :)

[size=5]மிகவும் சந்தோசமான செய்தி காதல்[/size] :)

நன்றி அக்கா. நீங்களும் அப்பவே உறுதியாக சொல்லி விட்டீர்கள். என்னால் தான் இன்னும் நம்ப முடியவில்லை. :)

வாழ்த்துக்கள் துளசி.

நன்றி நுணா அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி..! :)

Link to comment
Share on other sites

[size=4]யாழ் கள உறவுகளின் பிரார்த்தனை பலித்தது. துளசிக்கு வாழ்த்துக்கள்.[/size]

ஆம் அக்கா, யாழ்கள உறவுகள் மனதால் வாழ்த்தினாலே நல்லது நடக்கும் போலிருக்கு. வாழ்த்துக்கு நன்றி. :)

வாழ்த்துக்கள் துளசி யாழ்கள பிரார்த்தனையில் ஏதோ இருக்குது .

நன்றி அண்ணா. நானும் இந்த வருடம் தான் யாழுக்கு வந்தேன். யாழ்கள பிரார்த்தனை பலிக்கும் என்று பலரும் சொல்வதை பார்த்துள்ளேன். உண்மை போலிருக்கு. :)

மிகவும் மகிழ்ச்சி.

புலம்பெயர் தேசத்தில் வதிவுரிமை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை என்|னுடன் கூடத் தங்கியிருந்த நண்பர்கின் மனஉணர்வுகளின் மூலம் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் தொழில் செய்ய முடியாமல் படிக்க முடியாமல் அவர்கள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. இதற்கிடையே ஒரு நல்ல நிலையை எட்டிப் பிடித்த மிருகங்களின் ஏளனங்களையும் எதிர்கொள்ள வேண்டும். விசா இல்லாத அசைலி என்று தெரிந்தால் அடிமட்ட சம்பளத்தில் அவர்களின் வியர்வையை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகளுக்கும் குறைவில்லை.

நீங்கள் இந்த நிலையைக் கடந்திருப்பதில் மகிழ்ச்சி.

தொடர்ந்தும் உங்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

நன்றி மணிவாசகன் அண்ணா.

விசா இல்லாதவர் படும் துன்பங்களை நானும் அவதானித்துள்ளேன். குறைந்த சம்பளத்திற்கு போட்டு முறித்து எடுப்பார்கள். வாழ்த்துக்கு நன்றி. :)

இன்றுதான் உங்கள் திரியை பார்த்தேன் துளசி :( . வாழ்க்கை என்னும் பயணத்தில் சரியான இடத்தில் சரியாக முதலாவது பஸ்சை(bus) பிடித்துள்ளீர்கள் இனி எல்லாம் நல்லதாவே நடக்கும் வாழ்த்துக்கள் துளசி. (காதல்)

ஆம். இனியும் மொழி உட்பட பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நன்றி உங்கள் வாழ்த்துக்கு. :)

வாழ்த்துக்கள் துளசி..! :)

நன்றி. இன்று வாழ்த்து சொல்லி விட்டு நாளைக்கே அகதி பற்றி சொல்லி சண்டை பிடிக்க தான் போறீர்கள். :lol: என்றாலும் உங்கள் வாழ்த்து கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேணும். நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி..! :)

அய் கூல்.....துளசிக்கு வசிடரின்வாயால் வாழ்த்து வந்தது போல் இருக்கு..<a href="

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாயினி சிஸ்டர்.. இந்தத் தலைப்பில் நாங்க தான் முதலாவதா.. வெற்றிக்கு.. வாழ்த்தியும் இருக்கம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாயினி சிஸ்டர்.. இந்தத் தலைப்பில் நாங்க தான் முதலாவதா.. வெற்றிக்கு.. வாழ்த்தியும் இருக்கம். :):icon_idea:

ஆ....ஆ....கையோடையே கச்சேரிய ஆரம்பிச்சுடாதீங்க சார்..பக்கவாத்தியம் வாசிக்கிற நிலையில் தற்சமயம் நான் இல்லை.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....ஆ....கையோடையே கச்சேரிய ஆரம்பிச்சுடாதீங்க சார்..பக்கவாத்தியம் வாசிக்கிற நிலையில் தற்சமயம் நான் இல்லை.. :lol:

நீங்க வசிட்டர் என்று சொன்னீங்களா அதுக்குத் தான் பதில் சொல்லி இருக்கிறம். அப்புறம் விசுவாமித்திரர் போல சாபம் இட்டிடுவம்... கவனம்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

யாழில் ஊர்ப்புதினம் திரியைத் தவிர மிகுதித் திரிகள் வாசிப்பதற்கு நேரம் இப்போது இல்லாததால் வாசித்து பதில் எழுதுவதைல்லை.சில திரிகளில் நீங்கள் எழுதியவை வாசித்திருக்கிறேன்.உங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து இருப்பது திண்ணையில் தெரிந்து ஏன் என்று தேடி இந்தத் திரியை இப்போது வாசித்தேன்.

பலரும் சொல்லி விட்டார்கள் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. நம்பிக்கையும் மன உறுதியும் தான் வாழ்க்கை அதனை எப்போதும் இழக்காதீர்கள். எங்கேயும் வெற்றி பெறுவீர்கள். பிரார்த்தனை ,கடவுள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

சிந்தனை ,செயல், மன உறுதி இவை தான் முக்கியம்.இவை அனைத்தும் உடையவர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி முடியும் என்டால் எதாவது படிக்க முயற்சி செய்யுங்கோ

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி. சுண்டல் கேட்டதைப் போல நானும் முன்பே யோசித்தேன், ஆனால் பிரச்சனையில் இருக்கும் போது என் கேட்பான் எண்டு விட்டு விட்டேன்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு விசா கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. சிரமங்களைப் பாராது உங்கள் படிப்பைத் தொடர முயற்சியுங்கள். அதோடு, முடிந்தவரையிலும், உங்களை அடையாளப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இப்போது சிக்கல்களைத் தராவிட்டாலும் பிற்காலங்களில் சிரமங்களைச் சந்திக்கக்கூடும். இது நான் எனது அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடம். விசா கைக்குக் கிடைத்ததும் ஒரு சின்ன பார்ட்டியாவது வையுங்கள். :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

உங்களுக்கு விசா கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. சிரமங்களைப் பாராது உங்கள் படிப்பைத் தொடர முயற்சியுங்கள். அதோடு, முடிந்தவரையிலும், உங்களை அடையாளப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இப்போது சிக்கல்களைத் தராவிட்டாலும் பிற்காலங்களில் சிரமங்களைச் சந்திக்கக்கூடும். இது நான் எனது அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடம். :wub: :wub: :wub:

ஏன் உங்களைக் கண்டவுடன் நிறையப் பேர் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்து அலைகினமா ? :D

Link to comment
Share on other sites

ஏன் உங்களைக் கண்டவுடன் நிறையப் பேர் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்து அலைகினமா ? :D

:D :D :D:icon_idea:

Link to comment
Share on other sites

ஏன் உங்களைக் கண்டவுடன் நிறையப் பேர் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்து அலைகினமா ? :D

லொள்ளு நிழலி அண்ணா தமிழ் இன்னும் அத மறக்கலா போல... .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி, வாழ்த்துக்கள். துளசி.

ஒரு பெரிய தலையிடி குறைந்தது என்று நினைத்துவிட்டு, அடுத்த படியை... நோக்கி முன்னேறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, உங்களுக்கு வயதிருக்கின்றது!

இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைப்பது, மிகவும் அரிது!

பயன்படுத்தி மேலே செல்ல வாழ்த்துக்கள்!

வானமே உங்கள் எல்லையாகட்டும்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.