Jump to content

தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள


Recommended Posts

தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள்

கார்த்திக்.

எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள் என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன். தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக்.

என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எலெக்ஷன் மூலம் தண்டனை கொடுப்பார்கள். இதற்கெல்லாம் மேலாக கடவுளும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என்று கூறி விட்டு மேலே கைகாட்டியவரிடம், ஏன் இப்படி? என்று கேட்டோம்.

கார்த்திக்குக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் கொடுத்தால், எரிச்சலை ஏற்படுத்திவிடலாம். இந்தப் பதவியை சுமையாக நினைக்கச் செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அதெல்லாம் பலிக்கப் போவதில்லை. மக்கள் கொடுத்த பதவி இது. அதைத் தக்க வைத்துக் கொள்வேன். அதற்கான பொறுமை, நிதானம் எல்லாம் எனக்கு நிறைய இருக்கிறது.

அ.தி.மு.க.வில் உங்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாதது ஏன்?

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ§டன் முதல்வர் இல்லத்திற்குக் கூட்டணி விஷயமாகப் பேசப் போனபோது, எங்களுக்கு பயங்கர ஷாக், காரணம் எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம், அங்குள்ள ஒரு அறையிலிருந்து வந்தார்.

உடனே, பிஸ்வாஸ் முதல்வரிடம், நாங்கள் பக்கத்து அறையிலிருக்கிறோம், நீங்கள் சந்தானத்திடம் பேசி, அவரை அனுப்பிய பிறகு நாம் கூட்டணி பற்றிப் பேசுவோம் என்றார்.

அதற்கு முதல்வர், சந்தானத்தை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் என் விருந்தாளி, இங்குதான் இருப்பார் என்றார். உடனே பிஸ்வாஸ், அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதோடு அல்லாமல் என்னை ரொம்பவும் இழிவாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு எப்படிக் கூட்டணி பேசமுடியும். இது எங்கள் கட்சியின் உள்விவகாரம். இதற்கும், கூட்டணி பேசுவதற்கும் என்ன சம்பந்தம். இது, வேறு அது வேறு என்றார்.

ஆனால், முதல்வர் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

முதல்வரை சந்திப்பதற்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்தீர்களே...

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதால், மரியாதை நிமித்தமாக பிஸ்வாஸ், கலைஞரைச் சந்திக்க வேண்டுமென்றார். நானும் அவரும் போயிருந்தோம். போனோமே தவிர, கூட்டணி பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை. இதுதான் உண்மை.

ஆனால், யாரோ முதல்வரிடம் நாங்க தி.மு.க.வுடன் கூட்டணி பற்றிப் பேசி முடித்துவிட்டோம் என்று தவறான தகவல் சொல்லி பாலிடிக்ஸ் செய்ய அவரும் அதை நம்பி விட்டார்.

எனக்குள்ள வருத்தம் முதல்வர் என்னை அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால், எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். கூட்டணியும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அவர் கொடுக்கவில்லை. அதனால்தான் தனித்துப் போட்டியிடுவதென்று நாங்கள் முடிவு செய்தோம்.

உங்களிடம் பேரம் பேச முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதே...

ஆம்... எங்கள் கட்சியின் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கட்சியைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்தார்கள். கூட்டணி பற்றிப் பேசினார்கள். நான் அவர்களிடம் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதென்று முடிவு செய்துவிட்டோம் என்று சொன்னதற்கு அவர்கள் ஐந்து தொகுதிகள் தருகிறோம் என்றார்கள். நான் உடனே, அப்படியென்றால் ஒரு நிபந்தனை. நாங்கள் எந்தத் தொகுதியைக் கேட்கிறோமோ அந்தத் தொகுதியைக் கொடுக்க வேண்டும் என்றேன். உடனே ஒருவர், ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு வேண்டாம், தனிப்பட்ட கார்த்திக் போதும் என்றார். அப்புறம் ராஜ்யசபா சீட் தருகிறோம். இந்தத் தேர்தலில் நீங்களோ அல்லது உங்கள் இயக்கமோ போட்டி போடக்கூடாது என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது என்ன நியாயம்? என்றேன். நீங்கள் ஒதுங்கிக்கொள்ள எத்தனைக் கோடி பணம் வேண்டும்? என்றார் ஒருவர். இன்னொருத்தர் வந்து என் கண் முன்னே பணத்தை அடுக்கி வைத்தார். மூன்றரைக் கோடி பணம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு ஏதோ கடன் பிரச்னை இருக்கிறதாமே! என்றார். எனக்கு இன்னும் ஷாக். எனக்கு இருக்கும் பிரச்னையை எப்போதோ முடித்துவிட்டேன் என்பது அவருக்குத் தெரியாது பாவம். அப்படியே என்னுடைய பிரச்னை முடியாவிட்டாலும் நான் பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

ஆண்டிப்பட்டியில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா?

அப்படி என் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்ல, அவர்களும் நீங்கள் ஏன் நிற்கக் கூடாது? தொண்டர்கள் விருப்பத்தைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் கட்சிக்காரர்களின் வெற்றிக்காகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன்... என்றார் கார்த்திக்.

நன்றி குமுதம்

Link to comment
Share on other sites

அதிமுக மிரட்டல் பார்வர்ட் பிளாக் வேட்பாளர் தற்கொலை முயற்சி :

மதுரையில் பதட்டம்!

ஏப்ரல் 19, 2006

மதுரை:

மதுரை திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் செந்தில் அதிமுகவினரின் பயங்கர மிரட்டலால் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மதுரை மற்றும் திருமங்கலத்தில் பரபரப்பு நிலவுகிறது.

முதலில் சந்தானத்துக்காக நடிகர் கார்த்திக்கை கேவலப்படுத்திய அதிமுத தலைமை, இப்போது தேர்தலில் போட்டி மிகவும கடுமையாகிவிட்டதால் பார்வர்ட் பிளாக் கட்சியை கூட்டணிக்குள் இழுக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தனித்துப் போட்டியிட்டால் அவ்ளோ தான் என் கார்த்திக்கையும் அவரது வேட்பாளர்களையும் சினிமா விஐபிக்கள் மூலம் மூலமும் கந்து வட்டி கும்பல்கள் மூலமும் மிரட்டி வருகிறது.

மேலும் உளவுத்துறையை விட்டும் அச்சுறுத்தி வருகிறது. கார்த்திக் ஆதரவு பார்வர்ட் பிளாக் தலைவர் ஒருவரை உளவுப் பிரிவினரே ஜீப்பில் கடத்திச் சென்ற சம்பவமும் நடந்தது.

இது தவிர 3 பார்வர்ட் பிளாக் வேட்பாளர்களை வாகனங்களை ஏற்றிக் கொல்லவும் முயற்சி நடந்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.

சமீபத்தில் ராமநாதபுரம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் முத்துக்குமார், தன்னை அதிமுகவினர் சிலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் புகார் மீது போலீசார் ஏறி உட்கார்ந்து அடைகாத்து வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் செந்தில் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

திருமங்கலம் அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரை சில அதிமுகவினர் போட்டியிலிருந்து விலகுமாறும் இல்லாவிட்டால் குடும்பத்தையே காலி செய்வோம் என்றும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால் பயந்து போன செந்தில், தனது வீட்டில் இன்று காலை விஷம் குடித்துள்ளார். பின்னர் தூக்குப் போட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதித்தனர். ஆனால், அவரது நிலைமை மோசமாகவே பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்திலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக்கை 'வளைக்க' முயற்சி:

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை புதன் அல்லது வியாழக்கிழமை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக பார்வர்ட் பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியிருந்தார்.

தென் மாட்டங்களில் பிரசாரத்தைத் தொடங்கி, அதிமுகவின் மிரட்டலாலும் போலீஸ் மிரட்டலாலும் அதை பாதியிலேயே விட்டு விட்டு ஊட்டிக்குப் போய்விட்ட கார்த்திக் அங்குள்ள தனது சொகுசுப் பங்களாவில் ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது நீலகிரி மாவட்டத்தில் பிரசாரத்திலும் ஈடுபடுகிறார்.

கார்த்திக்கின் பிரசாரத்திற்கு ஓரளவு கூட்டமும் வருகிறது. கார்த்திக்கின் மனைவி ராகினி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தோடர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். அவரை ஊட்டியின் மருமகன் என்று நீலகிரி பகுதியில் அழைக்கின்றனர். ஊட்டி வேட்பாளராக அனந்தகுமார் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ராகினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தரப்பிலிருந்தும், காவல்துறையிலிருந்தும் வந்த நெருக்குதல்கள் காரணமாகவே கார்த்திக் மதுரையிலிருந்து இடம் பெயர்ந்து ஊட்டிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக, அதிமுக இடையே 'டப் பைட்' என்று கருத்துக் கணிப்புகள் கூறுவதாலும் உளவுப் பிரிவு எச்சரிப்பதாலும் கார்த்திக் மூலமாக முக்குலத்தோர் வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் அதிமுக தலைமை தீவிரமாகியுள்ளது.

அவரை ஒரு பக்கம் மிரட்டினாலும் மறு பக்கம் அவரை தாஜா செய்து கூட்டணிக்குள் இழுக்க தீவிரமாக முயன்று வருகிறது அதிமுக.

3 சீட் வரை விட்டுத் தருவதாகவும் தேவைப்பட்ட அளவுக்கு பணமும் தருவதாகவும் அதிமுக தரப்பு கூறி வருகிறது.

இந் நிலையில் ஊட்டியில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது கட்சித் தலைமை எடுத்த முடிவு. அதில் மாற்றம் இல்லை.

விரைவில் 77 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடுவர். ஆண்டிப்பட்டிக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டோம். நான் மாற்று வேட்பாளராக போட்டியிடுகிறேன். நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது கடைசியில் தெரியும்.

அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நான் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதை நான் மறுக்கவில்லை.

எனது கட்சி வேட்பாளர்களுக்கு மிரட்டல்கள் தொடருகின்றன. ஆனால் எனக்கு இதுவரை எந்த மிரட்டலும் இல்லை.

நீலகிரி மக்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து அன்பு காட்டுகிறார்கள். நான் அவர்கள் ஜாதியைச் சேர்ந்தவன் இல்லை என்றாலும் கூட என் சமுதாய மக்கள் என்னிடம் எப்படி அன்பு காட்டுவார்களோ அதேபோல இவர்களும் என் மீது நிறைய பாசம் வைத்துள்ளனர் என்றார் கார்த்திக்.

ஆனால், இப்போது அவரது வேட்பாளர் அதிமுகவினரின் மிரட்டல்களால் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் ஜெயலலிதாவை கார்த்திக் சந்திப்பாரா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

நல்ல கருத்து.... தம்பியுடையான் அவர்கள் வெறுத்துப்போய் விலகிவிட்டது நினைவுக்கு வருகிறது... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

கமலிடம் ரூ. 100 கோடி பேரம்: ஆளும் தரப்பு நெருக்குதல் அமெரிக்கா சென்றார் கமல்

ஏப்ரல் 21, 2006

சென்னை:

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு நடிகர் கமல்ஹாசனிடம் ரூ. 100 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட கமல் உடனடியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும், இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும், ஆனால், அந்த நடிகர் அதை ஏற்கவில்லை என்றும் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து அந்த நடிகர் யார்? ரஜினியா என்று நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டனர்.

அதற்கு, அவர் இல்லை. அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் என பதிலளித்தார்.

இந் நிலையில் அந்த நடிகர் யார் என்பது இப்போது வெளியில் வந்துள்ளது.

நான் அரசியலிலேயே இல்லை.. நான் இலக்கியவாதி என்று கூறிக் கொண்டு அரசியல் செய்து வரும் தில்லை அம்பலத்தார் தான் கமலையும் அதிமுகவுக்கு இழுக்க முயற்சி செய்துள்ளார்.

கமல் தரப்பைத் தொடர்பு கொண்டு, நிதிப் பற்றாக்குறையால் நின்று போய்விட்ட உங்கள் மருதநாயகம் படத்தை முடித்துத் தருகிறோம். உங்களுக்கு ரூ. 100 கோடி தரவும் தயாராக இருக்கிறோம் என்று பேரம் பேசியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன கமல், எனக்கு அரசியலே வேண்டாம். எனக்கு அது சரிப்பட்டு வராது என்று கட்அண்ட்ரைட்டாக சொல்லிவிட்டார்.

அத்தோடு இங்கிருந்தால் தொல்லை தொடரும் என்பதால் உடனே அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். தேர்தல் முடிந்த பின்னரே அவர் ஊர் திரும்புவார் என்று தெரிகிறது.

இது குறித்து கமலின் உதவியாளர் குணசீலன் கூறுகையில், கமல் சாரை யாரும் அணுகவில்லை. தனது தசாவதாரம் பட வேலை விஷயமாக அவர் அமெரிக்கா போயுள்ளார் என்றார்.

மேலும் அவர் மே மாதம் 20ம் தேதி தான் சென்னை திரும்புவார் என்றார்.

மே 8ம் தேதி தேர்தலும் 11ம் தேதி வாக்குப் பதிவும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகையர்கள் களத்தில் குதித்தும் கூட அதிமுகவுக்கு நிலைமை சாதகமாகத் திரும்பாததாலும், ரஜினி கைவிட்டுவிட்டதாலும் கமலை ஆளும் தரப்பு குறி வைத்ததாகத் தெரிகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்து.... தம்பியுடையான் அவர்கள் வெறுத்துப்போய் விலகிவிட்டது நினைவுக்கு வருகிறது... :lol::lol::lol:

இது அனைவருக்கும் பொருந்தும் :!: :!: :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 கோடி பெறுமதிக்கு கமல் தோதலில என்ன பிரசாரத்தச் செய்ய முடியும். இதெல்லாம் கருணாநிதியிர உடான்ஸ். மருதநாயகம் படத்த எடுக்கப் போதிய பணமில்லாமக் கைவிட்டவர் நு}று கோடிய வாங்கியிருக்கலாம். திராவிடக் கழகத்தில தன்னை இணைச்சுக் கொண்ட கமல் இந்தச் சந்தர்ப்பத்தத் தவறவிட்டுத் தன்ர கட்சிக்கும் தனக்கும் மருதநாயகம் குருப்புக்கும் துரோகம் செயதுவிட்டார். கார்த்திக் விட்ட உடாண்ஸ் இதிலும் பெரியது. கட்டுக்காசுமில்லாமப் போறதிலும் பார்க்க தாற காச வாங்கிக் கட்சிய வளர்த்திருக்கலாம். அடுத்த முறையாச்சும் கட்டுக்காசப் பெறக் கூடிய அளவுக்கு. இதையெல்லாம் விட்டுப் போட்டு இந்த நடிகர்கள் ஏன் சும்மா இருக்கிறாங்க எண்டு விளங்குதில்ல.

Link to comment
Share on other sites

கறுப்புத்துண்டு கபாலிக்கு 40 கோடி தான்... கமலுக்கு 100 கோடியா?

தமிழ்த் தேசிய வாதிகளே பொங்கி எழுவீர்!!!!

Link to comment
Share on other sites

20 பார்வர்ட் பிளாக் வேட்பாளர்கள் மாயம்: அதிமுகவினர் கடத்தல்? கார்த்திக் குடும்பத்துக்கும் மிரட்டல்

ஏப்ரல் 24, 2006

மதுரை:

கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களைக் காணவில்லை என்று தெரிகிறது. அவர்களை அதிமுகவினரும் போலீசாரும் தூக்கிக் கொண்டு போய்விட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே ஊட்டியில் எனது குடும்பத்தினரை சிபிசிஐடி போலீஸார் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர் என்று நடிகர் கார்த்திக் புகார் கூறியுள்ளார்.

கார்த்திக் கட்சி வேட்பாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அதிமுக தரப்பு கடும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. இந்த மிரட்டலால் ஒரு வேட்பாளர் தற்கொலையே செய்து கொண்டார்.

அதே போல ஆண்டிப்பட்டியில் முத்துராமலிங்கத் தேவரின் சிங்கம் சின்னம் போட்டியிட்டால் தங்கள் நிலைமை கவலைக்கிடமாகி விடும் என்பதால் பார்வர்ட் பிளாக் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாங்கிவிட்டது அதிமுக.

அங்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்யவிருந்த கார்த்திக் திடீரென காணாமல் போய் (கடத்தப்பட்டு??) மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகே வெளியில் வந்தார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த பார்வர்ட் பிளாக் கட்சி கூட்டத்தில் பல்வேறு பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்தன.

கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சி மொத்தம் 64 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதில், திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

20 வேட்பாளர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள், யாரேனும் கடத்தினார்களா என்று தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து மீத¬ள்ள 43 வேட்பாளர்களையும் பத்திரப்படுத்த கார்த்திக் முடிவு செய்தார். இதற்காக ஊட்டியிலிருந்து அவர் மதுரை வந்தார்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள தனமணி திருமண மண்டபத்திற்குத் தனது கட்சியின் வேட்பாளர்கள் 43 பேரை வரவழைக்க உத்தரவிட்டார். அதன்படி அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.

கல்யாண மண்டபத்திற்கு வந்த கார்த்திக் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது வேட்பாளர்கள் அனைவரும் நீங்கள் எங்களது தொகுதிகளுக்குப் பிரசாரம் செய்ய வர வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறிய கார்த்திக் மீண்டும் உங்களை சந்திகிகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவர் போன பின்னர் மண்டபத்திற்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்கள் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர். உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும், வெளியில் இருந்து யாரும் உள்ளே போகாமலும் அவர்கள் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டனர்.

அதிமுகவினரால் தங்களது வேட்பாளர்கள் கடத்தப்படாமல் பாதுகாக்கவும், வேட்பாளர்கள் தவறான முடிவுக்குப் போகாமல் தடுக்கவுமே இந்த நடவடிக்கை என கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், பிரசாரம் செய்ய முடியாத வகையிலும், தொகுதிப் பக்கம் நடமாட முடியாத வகையிலும் எங்களது கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர். யார் மிரட்டுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட மிரட்டல் காரணமாகவே செந்தில் தற்கொலை செய்து கொண்டார். எனது குடும்பத்தினரைக் கூட மிரட்டியுள்ளனர்.

ஊட்டியில் எனது வீட்டுக்குப் போன் செய்து சிபிசிஐடி போலீஸார் என்று கூறி மிரட்டியுள்ளனர். உசிலம்பட்டியில் மட்டும் எங்களுக்கு சிங்கம் சின்னம் கிடைக்கவில்லை. மற்ற 63 தொகுதிகளிலும் நாங்கள் சிங்கம் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

எங்களை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம். சில விஷயங்களை (தான் கடத்தப்பட்டது) வெளியில் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் சட்டம் ஒழுங்குக்கு பாதகம் ஏற்படும். நாங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டோம்.

எனவே மதுரை ஆதீனம் போன்றவர்கள் என்னைச் சுற்றி வரத் தேவையில்லை என்றார் கார்த்திக்.

இதன்மூலம் மதுரை ஆதீனம், கார்த்திக்கை தொடர்ந்து விரட்டிக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

மிரட்டவில்லை: தேவர் பேரவை இதற்கிடையே பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களை நாங்கள் மிரட்டவில்லை. கார்த்திக்தான் முக்குலத்தோர் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் சீனிச்சாமித் தேவர் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முக்குலத்தோர் சமுதாயத்தால் பெரிதும் மதிக்கப்படுகிற மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக், முக்குலத்து மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு இளைஞர்கள் பலியாகி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி என்று ஆரம்பத்தில் கூறி வந்த கார்த்திக், சந்தானம் எம்.எல்.ஏ.வுடன் சேர்ந்து எளிதாக கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு திடீரென திமுக பக்கம் தாவினார் கார்த்திக். அவர்களுக்கு ஆதரவாக இப்போது செயல்பட்டு வருகிறார்.

முக்குலத்தோர் சமுதாயம் ஒற்றுமையுடன் திகழ முத்துராமன் பாடுபட்டார். ஆனால் அவரது புதல்வர் கார்த்திக்கோ, தனது தந்தையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதன் பின்னணியில் திமுக உள்ளது. இதை தேவர் பேரவை முறியடிக்கும்.

தனது கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக கார்த்திக் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. அந்த வேலையில் நாங்கள் ஈடுபடவில்லை. ஆனால் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் பார்வர்ட் பிளாக் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றதில் எங்களது பங்கு உள்ளதை நாங்கள் மறுககவில்லை.

அதிமுக மீண்டும் ஜெயிக்க வேண்டும், அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். கார்த்திக் பின்னால் இளைஞர்கள் தவறான பாதையில் போய் விடக் கூடாது என்பதற்காக கடுமையாக பாடுபட்டு வருகிறோம் என்றார் சீனிச்சாமித் தேவர்.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

கேடுகெட்ட தற்ஸ்தமிழ் செய்தியாளராக இணைந்த கள உறவுக்கு வாழ்த்துக்கள். :P :P :P

Link to comment
Share on other sites

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.

நல்ல எடுத்துக்காட்டு

Link to comment
Share on other sites

கறுப்புத்துண்டு கபாலிக்கு 40 கோடி தான்... கமலுக்கு 100 கோடியா?

தமிழ்த் தேசிய வாதிகளே பொங்கி எழுவீர்!!!!

:lol::lol::lol:

கருப்பு துண்டு கபாலி நல்ல பேர்...கருப்புத்துண்டு கோமளி எண்டு வைச்சா இன்னும் நன்னா இருக்கும்...... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில போற கரு.... உம் நல்ல பெயராகக் கிடக்குதாமே!! :wink: :P

Link to comment
Share on other sites

வைகோட தோள்ள இருக்கிறது தேர்தலுக்கு பிறகு தலைல போட பயண்படும் :oops: :oops: ...கருப்பு துண்டு கபாலி... நல்ல பட்டம் பா... :lol::lol:

Link to comment
Share on other sites

இதுல இப்ப செம ஜோக் என்னன்டா.....வைகோ மீது வழக்கு போட்ட(பொடா) ஜெ இன்னும் அத வாபஸ் வாங்கல...ஆள் பெயிலில தான் சுத்தி திரிது.....ஆனாலும் வைகோவால j சென்ஞ்ச உதவிகள மறக்க முடியல...நாக்கு நல்லா புரளுது...

ம்ம்ம்ம என்ன செய்ய எல்லாம் அந்த 40 படுத்தும் பாடு...

திரும்ப வந்த உடன அத திரும்ப கேக்கிறதோ தெரியல...ம்ம்ம் குடுக்காட்டி என்ன..பெயிலில திரிறவர் திரும்ப உள்ள தான்.... :lol::lol::lol: :oops: :oops: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

அம்மா ஆட்சி செய்யிறா அவா தான் மீண்டும் வருவா அவா மீண்டுன் வந்தா எனக்கு 80 து தருவா.அவா உள்ளே வைத்திருந்தா என்ன வெளியே வைத்திருந்தா என்ன??

உங்களுக்கு ஏன் குமுறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு குமுறாம யாருக்கு குமுறும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோட தோள்ள இருக்கிறது தேர்தலுக்கு பிறகு தலைல போட பயண்படும் :oops: :oops: ...

ஒ. அதுக்குத் தான் மஞ்சள் துண்டை கருணா நிதி போட்டுக் கொண்டு திரிகின்றாரா?? பாவம் எத்தனை தரம் வாங்கிக் கட்டியிருப்பார். ஆனாலும் தலையில் போட்ட மாதிரித் தெரியவில்லையே!! சூடு சொறணை, வெட்கம், மானம் இருந்தவங்களுக்குத் தானே அதைப் போடத் தோன்றும் இல்லையா!! :wink: :P

கட்டையில போற கருணா... :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையில மசாலா இருந்தா தான் போட தோன்றும்.

Link to comment
Share on other sites

ஆமா ஆமா..வைகோ க்கு மட்டும் இருக்காக்கும் :oops: தூயவன் நல்லா ஜோக் அடிப்பார் என்ன.. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிலரின் கருத்து. ஜெயலலிதா ஆட்சியில் 91ல் ஈழத்தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டபோது, 96ல் கலைஞர் வந்தபின்பு மீண்டும் ஈழத்தமிழர்கள் கல்வி கற்க தி.மு.க அரசே வழி செய்தது. பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேர்தலில் வெல்லவேண்டும் என நினைக்கும் ஈழத்தமிழர்களில் சிலர் ஆட்சியில் அ.தி.மு.க வினைப் பார்க்க தி.மு.க வரவே விரும்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி குடித்து , மனைவிமாருக்கு செலவழித்து கடன்காரர்களின் தொல்லை தாங்காமல் அ.தி.மு.கவில் சேர முன்பு முயற்சிக்க ஜெயலலிதா கார்த்திக்கினைக் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது ஜெயலலிதா காசு கொடுக்கும் போது வேண்டாம் என்று சொல்வாரா? எல்லாம் தி.மு.கவின் பொய்ப்பிரச்சாரம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.