• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
மின்னல்

எடித்தாரா கப்பல் மூழ்கடிப்பில் காவியமான மாவீரர் நினைவு நாள்

Recommended Posts

thangam.jpg

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது.

இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் - பதுளை - சிறிலங்கா)

கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் - குருநகர், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் - திருகோணமலை)

கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி - இன்பருட்டி, யாழ்ப்பாணம்)

கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் - பெரியபோரதிவு, மட்டக்களப்பு)

கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி - காரைநகர், யாழ்ப்பாணம்)

கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி - யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி - வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி - மானிப்பாய், யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா - மாங்குளம், முல்லைத்தீவு)

கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி - யாழ்ப்பாணம்)

கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி - முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

40_lt_col_naresh.jpg

41_lt_col_mathavi.jpg

Share this post


Link to post
Share on other sites

[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் . [/size]

Share this post


Link to post
Share on other sites

[size=5]வீரவணக்கங்கள்!!![/size]

Share this post


Link to post
Share on other sites

மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]வீரவணக்கங்கள். [/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4]வீர வணக்கங்கள்! [/size]

Share this post


Link to post
Share on other sites

புலிப்பாய்ச்சலுக்கு வலுச்சேர்த்த வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ஈழ தமிழ் நூல்கள் வெளியீடு .! வவுனியா கனகராயன்குளத்தை சேர்ந்த பேராசிரியர் முருகர் குணசிங்கத்தின் 1. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு 2.இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்ப தோற்றம் பற்றிதொரு ஆய்வு 3.புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓர் உலகளாவிய ஆய்வு. என்ற புலமைசார் மூன்று ஆய்வு நூல்கள், இன்று வெளியிட்டு வைக்கப்பட்டன. கனகராயன்குளம் புதுக்குளம் தங்கம்மா முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு நிகழ்வில், யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியலிங்கம் பிரதம அதிதியாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தலைவர் ரி. கணேசலிங்கமும் வவுனியா ஆசிரியர் நடுவகத்தின் முகாமையாளர் சு. ஜெயச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தனர் -க. அகரன் http://www.tamilmirror.lk/கலை/நலகள-வளயட/56-252857
    • மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை ) மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க  கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்  கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்  அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி...  தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ... ஏ... மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு  
    • புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடையேயே விசனத்தை உருவாக்கியுள்ளது. அது மட்டும் அன்றி இரவு நேரத்தில் ஊராரின் பிரசன்னம் இல்லா நேரத்தில் இவ்வாறு செய்ய வேண்டிய தேவை என்ன என்றும் உண்மையான உள்நோக்கம் என்ன என்று ஊரார் கேள்வி எழுப்புகின்றனர். முன்னர் விபத்தில் தானாகவே சிக்கி கொண்டு தன்னை கொலை செய்ய வந்ததாக கூறிய இந்த பூசகர், தானே உண்டியலை உடைத்து விட்டு ஊராரின் தலையில் அதனை போடும் முற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். எனினும், உண்டியல் உடைக்கப்பட்டமையை அந்த பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளனர். இதனால் இந்த பிரச்சினை மக்கள் மீது சுமத்தப்படவில்லை எனவும் அந்த பகுதி பொது மக்கள் கூறியுள்ளனர். அது மட்டுமன்றி இந்த பூசகரது இந்த அடாவடி தனமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் குருமார் ஒன்றியம் மீது மக்கள் விசனம் தெரிவித்தனர். http://jaffnaboys.com/2020/07/09/16001/
    • ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள். பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....! முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 
    • கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லூர் ஆலயத்துக்கு நாங்கள் உரிமை கோரவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து தமிழ் – முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய தேவை கிடையாது. செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல. என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சிதைவடைந்தள்ள தொல்பொருள் மரபுரிமையினை அடையாளப்படுத்தி அதனை பாதுகாப்பதே எமது பிரதான நோக்கம். பௌத்த மத மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது செயலணியின் நோக்கமல்ல. பிற இனங்களின் மதம் தொடர்பான உரிமைகளும் செயலணியின் ஊடாக பாதுகாக்கப்படும். ஆய்வு நடவடிக்கைகளின்போது கிடைக்கப் பெறும் தரவுகளை கொண்டு வெளியிடும் செய்திகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வரலாற்று புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்பதற்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அநுராதபுர கால யுகத்தில் கோகண்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டது. போர்த்துக்கேயரது படையெடுப்பினால் அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகும். இதனிடையே, கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது. எனினும், நல்லூர் ஆலயத்துக்கு நாங்கள் உரிமை கோரவில்லை. இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார். http://jaffnaboys.com/2020/07/09/16013/