Jump to content

வாழை காய் பற்றிஸ்: சமையல் குறிப்பு - 09


Recommended Posts

போர் காலத்தில் , பொருளாதார தடைக்குள் வாழ்ந்தவர்களுக்கு, அனுபவம் இருக்கலாம். பொருளாதார தடைக்குள் உருளை கிழங்கு கிடைக்காத பொது, உள்ளூர் பயிர் செய்கையில் கிடைப்பதும் பங்குனி சித்திரையுடன் முடிந்துவிடும். ஏனைய காலத்தில் உருளை கிழங்கை பாவித்து செய்த ரோல்ஸ் , பற்றிஸ் போன்றவருக்கு மரவள்ளி கிழங்கு , வாழை காய் என்பவை பயன்படுத்த பட்டன. சில உணவகங்களில் கூட வாழை காய் ரோல்ஸ்களை சாப்பிட்டு இருக்கிறேன். யாருக்காவது அந்த அனுபவம் ?

பொருளாதார தடை காலத்தில் எனது பிறந்த நாள் ஒன்றுக்கு என்னுடைய வீட்டில் மரவள்ளி கிழங்கில் பற்றிஸ் செய்து தந்தார்கள்.

கடந்த வாரம் இங்குள்ள தென் கிழக்காசிய கடை ஒன்றுக்கு வல்லாரை வங்க சென்ற பொது எங்களூர் வாழைக்காய் இருந்தது . வாங்கி வந்து வாழைக்காய் பற்றிஸ் செய்து பார்த்தேன். அந்த செய்முறை

தேவையான பொருட்கள்

1 . வாழைக்காய் - எமது ஊர் வாழைகாய் எனில் 3 / ஆபிரிக்க/ கரிபியன் பெரிய வாழை காய் எனில் 1 -1 /2

2 . அவித்த சாதாரண கோதுமை மா - 2 கப் (கப் -250 ml அளவு கரண்டி)

3 . வெங்காயம் - நடுத்தரம் 1

4 . பச்சை மிளகாய் - 2

5 . கடுகு - 1 /2 தே கரண்டி

6 . சீரகம்- 1 /2 தே கரண்டி

7 . கறி தூள்- உங்கள் சுவைக்கு ஏற்ப (அல்லது 1 - 1 / 2 தேகரண்டி )

8 . கறி வேப்பிலை- ஒரு நெட்டு

9 . உப்பு - உங்கள் சுவைக்கு ஏற்ப

நீர்

சுடு நீர்

எண்ணெய் பொரிக்க

செய்முறை

1 . வாழை காயை தோல் சீவி , 1 /2 இஞ்சி தடிப்புடைய சதுரங்கள வெட்டி கொள்ளவும்.

2 . வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

3 . பொருத்தமான் மூடி உடைய சட்டியை அடுப்பில் வைத்து 1 மேசை கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சீரகம் போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

4 . வெங்காயம் வதங்கி , பொன்னிறமாக வந்ததும், வாழை காயை போட்டு , முக்கால் பகுதி நீரில் முழ்கும் வரை நீர் விட்டு, உப்பு , கறி தூளையும் போட்டு மூடியால் மூடி கொதிக்கவிடவும், ஒரு கொதி வந்ததும் பிரட்டி விட்டு, சூட்டை நடுத்தரத்துக்கு குறைத்து அவியவிடவும். 1௦ - 15 நிமிடத்துக்குள் அவித்து விடும். அப்போது கறிவேப்பிலையை போட்டு, அருவல், நோருவலாக மசித்து கொள்ளவும். (mashed potato மாதிரியில்ல, சிறிய துண்டுகள் இருக்க வேண்டும்)

5 . மாவை வாய் அகன்ற பாத்திரத்தில் இட்டு, சுவைக்கு உப்பு போட்டு சுடு நீர் விட்டு இடியப்ப பதத்துக்கு குழைக்கவும். அல்லது உலர்ந்த மா இல்லது போகும் வரை சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து குழைக்காவும். குழைத்த மாவுக்கு 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு குழைத்து மேசைப்பந்து அளவிலான உடுண்டைகாளாக உருட்டி கொள்ளவும்.

6 . உருட்டு கட்டையில் எண்ணெய் பூசி மெல்லிதாக, 3 இஞ்சி விட்டத்திலும் சிறிது பெரிதாக்க உருட்டி கொள்ளவும்.

hpim2627.jpg

7 . உருட்டிய மாவை அச்சில் போட்டு , 1 தே. கரண்டி கறியை நிரப்பவும் (ஆசிய கடைகளில் டம்பிளிங் அச்சு , அல்லது தமிழ் கடைகளில் பற்றிஸ் அச்சு கிடைக்கும்)

hpim2626m.jpg

yarlpatti.jpg

8 . அச்சை மூடி வெளியே வந்த மாவை எடுத்துவிட்டு, அச்சை திறந்து பற்ரிசை வெளியே எடுக்கவும்.

9 . அதே போல மிகுதியை செய்து முடிக்கவும்.

10 . எண்ணெயை சூடாக்கி பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

yarlpatti4.jpg

12 . 20 - 22 பற்றிஸ் செய்யலாம்

குறிப்பு : பற்றிஸ் ஐ தமிழினி திணிப்பு ரோட்டி என தமிழ் பெயர் கொடுத்திருந்தார். இப்போது தமிழினி என்ற பெயரில் யாழ் களத்துக்கு வருவதில்லை. புதிய பெயரில் வந்தால் தெரியாது.

மா - அவித்த மாவில் செய்ததுக்கு கரணம், வீட்டில் பற்றிஸ் அச்சு இருக்கவில்லை, எனவே அவித்த மாவில் மோதகம், கொழுக்கட்டை செய்யும் பொது மா குழைப்பது போல் குழைத்து, உருட்டு கட்டையால் உருட்டாது, கொழுக்கட்டை பிடிக்கும் முறையில் செய்தார்கள். அந்த அவித்த மா சுவைக்காக நானும் அவித்த மாவில் செய்தேன். பச்சை மாவிலும் செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காய் பற்றிஸ் இதுவரை... சாப்பிட்டுப் பார்க்கவில்லை.

பற்றிஸ் படங்களைப் பார்க்க.... ஆசையக உள்ளது. செய்முறையும் இலகுவாக உள்ளதால், வாறகிழமை செய்ய உத்தேசம்.

இணைப்பிற்கு நன்றி குளக்காட்டான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காய் பற்றிஸ் இதுவரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை வாழைக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாக பொரியல் அதிலும் சாம்பல் வாழைக்காய் மிகவும் சுவையாக இருக்கும் .. :wub:

இணைப்பிற்கு நன்றி குளக்காட்டான். :)

பி கு; என்னிடம் தற்போது பச்சை இல்லை நாளை வந்து குத்துவேன்.

Link to comment
Share on other sites

தமிழ் சிறி. தமிழரசு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காயில் பற்றிஸ் வித்தியாசமான சுவையாக இருக்குமென நினைக்கின்றேன். இருந்தாலும் மரவள்ளிக்கிழங்கில் செய்த பற்றிஸ் இன்னும் நல்ல சுவையாக இருக்கும்.நினைவூட்டியதற்கு நன்றி குளக்காடன்.

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி குளம்ஸ் அண்ணா. வாழைக்காய் பற்றீஸ் சாப்பிட்டதில்லை ஆனால் எங்கள் கல்லூரி கன்டீனில் மரவள்ளிக் கிழங்கு போண்டா நல்ல பேமஸ், இடைக்கிடை கிழங்கின் நார் கடிபடுவது தான் பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

இரண்டு பற்றீசை ஓஸிக்கு அனுப்பி இருக்கலாமே.?!

:))

Link to comment
Share on other sites

ம்... ம்... வாழைக்காயில் பற்றிஸ் வித்தியாசமான சுவையாக இருக்குமென நினைக்கின்றேன். பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.