• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள்   அடுத்த பாராளுமன்றம் திருடர்கள் இல்லாத பாராளுமன்றமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆளும்கட்சி, எதிர்கட்சி எல்லா தரப்பிலும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கட்சி தலைவர்களுக்கு, கட்சிகளுக்கு சிலவேளை "கள்ளர்கள்" என அறியப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்க வேண்டி வரும். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்க முடியாதது. ஆகவே "திருடர்" இல்லாத பாராளுமன்றம் உருவாவது மக்கள் கைகளில்தான் உள்ளது. கொள்கை அடிப்படையில் நீங்கள் விரும்பும் கட்சி சின்னத்துக்கு வாக்களியுங்கள். ஆனால், உங்கள் விருப்பு வாக்கை "திருடர்களுக்கு எதிராக" வழங்குங்கள். யார் நல்லவர், வல்லவர் என அறிந்து, அந்த நல்ல, வல்லவர்களுக்கு மட்டுமே விருப்பு வாக்கை வழங்குங்கள். சிங்கள வாக்காளர்கள் மத்தியில் இன்று இந்த சிந்தனை வேகமாக ஒரு இயக்கமாகவே பரவி வருகிறது. தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த சிந்தனை எழுச்சி பெற வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர், கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியதாவது, எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் விருப்பு வாக்கை கவனமாக வழங்க வேண்டும் என கோர விரும்புகிறேன். அதாவது "மக்கள் வரிப்பணத்தை தம் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு திருடாத", "வெளிநாட்டு முதலீட்டாளர்களை நிர்பந்தித்து கமிசன் பெறாத", "மதுசாலை பர்மிட் இல்லாத", "எதனோல் வர்த்தகம் செய்யாத" வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாத்திரம் தமது விருப்பு வாக்கை மக்கள் வழங்க வேண்டும். அதேபோல், "சபையில் பண்புடன் நடந்துக்கொள்கின்ற", "துணிச்சலுடன் நியாயத்திற்காக குரல் கொடுக்கின்ற", "விசேடமாக தாய்மார்களையும், குழந்தைகளையும், இளைஞர்களையும் நேசிக்கின்ற", "எதிர்காலம் பற்றிய தூரப்பார்வை கொண்ட", "மூன்று மொழிகள் முடியாவிட்டால் குறைந்தபட்சம் இரண்டு தேசிய மொழிகளையாவது பேசி உண்மை இலங்கையராக தம்மை அடையாளம் காட்டுகின்ற" வேட்பாளர்களுக்கு மாத்திரம் உங்கள் விருப்பு வாக்குகளை வழங்குங்கள். இந்த விருப்பு வாக்கு புரட்சி மூலம் அடுத்த ஒன்பதாவது பாராளுமன்றம், "திருடர்கள் இல்லாத" பாராளுமன்றமாக அமையட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். கட்சி, சின்னம் ஆகியவை உங்களுக்கு பிடித்தமானவையாக இருந்தாலும் கூட நடைமுறை அரசியல் காரணங்களுக்காக பிழையான நபர்களுக்கு, வேட்பாளர் நியமனங்களை அழுத்தம் காரணமாக் கட்சிகள், கட்சி தலைவர்கள் வழங்கி விடுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே கட்சியை, சின்னத்தை மட்டும் பார்த்து, பிழையான நபர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கி விட்டு, பின் அப்படியானவர்கள் இருக்கும் பாராளுமன்றத்தை கண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருடர்கள். 225 பேரும் ஒழிய, அழிய வேண்டும் என சாபம் இடுவதில் பயனில்லை. நல்லவர்களை தெரிவு செய்யத்தான் விருப்பு வாக்கு என்று ஒன்று இருப்பதை மனதில் கொள்ளுங்கள். இப்படி திட மனதுடன் சிந்தித்து விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாவிட்டால், என்னை போன்றவர்களுக்கு விடை கொடுங்கள். சபைக்கு சென்று "திருடர்களுடன்" குடும்பம் நடத்த இனியும் எனக்கு முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=126071
    • எச்சரிக்கை - கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம்!     கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால் அங்கு இது குறித்த கவலை எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது சீனாவாகவே உள்ளது. அந்நாட்டில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,600 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு வெளியே சுமார் 30 நாடுகளில் 1200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் திங்களன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் உலக பங்குத் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பவர்களின் விகிதம் ஒன்றிலிருந்து 2 சதவீதம் வரை இருக்கலாம் என கூறப்பட்டாலும், சரியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரானோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, "கவலைக்குரியது" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,800 யைத் தொட்டுள்ளது. இந்த விண்ணை முட்டும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் என்கிறார்கள் நிபுணர்கள். ´´தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என மக்கள் கருதுகிறார்கள். குறைந்த காலத்தில் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனில் அதனை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது´´ என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.   http://tamil.adaderana.lk/news.php?nid=126061&mode=lead
    • ஹெல உறுமயவின் ஆதரவு சஜித்துக்கு     முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரவண தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேசிய சமாதான முன்னணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.  நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஹெல உறுமையவின் செயலாளர் சம்பிக்க ரணவக எம்.பி மேற்கண்டவாறு அறிவித்தார்.  சகல இன மக்களையும் பாதுகாக்கும் தரப்பாக தேசிய சமாதான முன்னணி அமைந்துள்ளதாகலேயே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில்  அந்த கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹல-உறமயவன-ஆதரவ-சஜததகக/175-246023