Jump to content

கனடாவில் எதிர்ப்பு


Recommended Posts

கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள்.

அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.?

சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள்.

ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted: :evil:

Link to comment
Share on other sites

கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள்.  

அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.?  

சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள்.  

ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted:  :evil:

சரியான நெத்தியடியான கேள்வி. எதிர்ப்பு ஒண்டயும் காணமே....

Link to comment
Share on other sites

நான் கேள்விப்பட்டேன். கனடாவில் ஒருசிலர் சாமத்தியவீட்டுச்சடங்குக்கா

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறுவீதம் உண்மை. கனடாவில் புூப்புனித நீராட்டுவிழா வெகுவிமரிசையாகத்தான் கொண்டாடுவார்கள். இவர்களிடம் போய் பணம் கேட்டால் பஞ்சம் கொட்டுவார்கள். சனத்திற்கு கொடுக்க மனமில்லை. தாங்கள் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்கின்றார்கள். இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. இவர்களுக்கு நான் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் பணம் போதவில்லை என்பது ஆடம்பரவாழ்க்கைக்கு. ஆனால் ஈழத்தவர்கள் பணம் கேட்பது தமது அன்றாட வாழக்கைக்கு. இது நிற்க.

புலிகளை கனடாவில் தடைசெய்யததற்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் எல்லாம் தடையால் எங்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மக்களுக்கு நொண்டிசாட்டு சொல்லிக்கொண்டு இருக்கின்றாhகள். ஆனால் இதனால் எங்களுக்கு பல தீமைகள் உள்ளன. மக்களின் சுதந்திரத்தில் அக்கறை கொண்டுள்ள கனடாவே தடை செய்யும்போது தாங்களும் தடைசெய்யலாம் தானே என்று பல்வேறு நாடுகளும் புலிகளைத் தடைசெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் இந்தச்செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே இல்லை. வானொலிகளும் இதைப்பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லாமல் வழக்கம்போல தங்களின் ஆட்டம் பாட்டங்களைத் தொடர்ந்தார்கள். இதன்மூலம் தமிழ்மக்கள் உலகத்திற்கு ஒன்றை தெளிவாகச்சொல்லியுள்ளனர். அதாவது நீங்கள் எங்களை என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள். தமிழினம் தனது தலைபோனாலும் விழித்தெழமாட்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் கேள்விப்பட்டேன். கனடாவில் ஒருசிலர் சாமத்தியவீட்டுச்சடங்குக்கா
Link to comment
Share on other sites

சில வியாபாரம் தெரிந்த குடும்பங்கள் 5000 போட்டு 50000 உழைத்த சம்பவங்களும் உண்டு.

Link to comment
Share on other sites

பொங்குதமிழினை வெற்றிகாரமாகச் செய்த கனடாவாழ் தமிழர்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாரகள். தமிழ் அமைப்புக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?. ஈழ உணர்வு செத்துவிட்டதா?. கனடா வாழ் தமிழர்களே பதில் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

இங்கு மக்கள் போரட்டம் வெடிக்கும் என எதிர்பார்த்தேன், கனடா வாழ் தமிழா ஏன் இந்த மவுனம்!. ஆச்சரியம், ஆச்சரியம்.

தமிழர்களின் விடுதலைக்காக போரடும் விடுதலை அமைப்பை ஆதரிப்பது குற்றம்மா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள்.

அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.?

சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள்.

ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted: :evil:

வாய் கிளிய கத்தி தொண்டை வத்த போகிறது. கொஞ்சம் தண்ணி குடீயுங்க நேசன். போராட்டம் என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது. பொறுமையாக மிகவும் நிதானத்துடன் செயற்ப்படுத்த வேண்டும். அதை விட கனடாவில் தடையை தொடர்ந்து பல விரும்பத்தகாத பிரச்சினைகளை தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் எதிர் நோக்குகின்றன. மற்ற நாடுகளில் இருந்து கதைப்பவர்களுக்கு அதன் உள் பிரச்சினைகள் அறிய நியாயமில்லை. எனவே கருத்தை வைக்கும் போது கனடிய தமிழர் தரப்பு நியாயங்களை யும் கருத்தில் எடுத்து வையுங்கள். தற்போது அரச தரப்புடன் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக அறிந்தேன். அவை பலன்தராத விடத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். ஆனாலும் ஒன்றை நாம் கூற வேண்டும். இந்த தடை கனடிய தமிழரை போராட்டத்திற்கான ஆதரவு வழங்குவதில் இருந்து பிாக்க வில்லை. எனவே இதை பற்றி யாரும் அஞ்சத்தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை கனடாவில் தடைசெய்யததற்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் எல்லாம் தடையால் எங்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மக்களுக்கு நொண்டிசாட்டு சொல்லிக்கொண்டு இருக்கின்றாhகள். ஆனால் இதனால் எங்களுக்கு பல தீமைகள் உள்ளன. மக்களின் சுதந்திரத்தில் அக்கறை கொண்டுள்ள கனடாவே தடை செய்யும்போது தாங்களும் தடைசெய்யலாம் தானே என்று பல்வேறு நாடுகளும் புலிகளைத் தடைசெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் இந்தச்செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே இல்லை. வானொலிகளும் இதைப்பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லாமல் வழக்கம்போல தங்களின் ஆட்டம் பாட்டங்களைத் தொடர்ந்தார்கள். இதன்மூலம் தமிழ்மக்கள் உலகத்திற்கு ஒன்றை தெளிவாகச்சொல்லியுள்ளனர். அதாவது நீங்கள் எங்களை என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள். தமிழினம் தனது தலைபோனாலும் விழித்தெழமாட்டாது.

தமிழ் மக்களின் மெளனம் எவ்வளவு எழுச்சி மிக்கது என்று சர்வதேசத்துக்கும் ,கனடிய அரசுக்கும் நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் மெளனம் எவ்வளவு எழுச்சி மிக்கது என்று சர்வதேசத்துக்கும் ,கனடிய அரசுக்கும் நன்றாகவே தெரியும்.

அதெப்படி உங்களிற்குத் தெரியும். சும்மா வெற்று வீராப்பு பேசாதீர்கள்.

ஈழத்தமிழரின் போராட்ட சக்தியை கனடாவில் தடை செய்வதை கண்டு எந்தவொரு கனேடியத் தமிழனும் எதிர்ப்பைக் காட்டாமல் விட்டுள்ளதால் கனேடிய அரசு அதனைத் தனது தடைக்கு தமிழ் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவு அல்லது அங்கிகாரமவே கருதும்.

தடைக்கு எதிராக அமைதிப் போராட்டம், பேரணியே நடத்தி எமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். பாரியளவில் ஒட்டு மொத்த கனேடிய தமிழ் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் அந்த அந்தப் போராட்டம் அமைய வேண்டும். (பொங்கு தமிழ் போல)

அதைவிடுத்து உந்த மவுனப் புரட்சியெல்லாம் வேலைக்கு ஆகாது நிதர்சன்

Link to comment
Share on other sites

வாய் கிளிய கத்தி தொண்டை வத்த போகிறது. கொஞ்சம் தண்ணி குடீயுங்க நேசன். போராட்டம் என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது. பொறுமையாக மிகவும் நிதானத்துடன் செயற்ப்படுத்த வேண்டும். அதை விட கனடாவில் தடையை தொடர்ந்து பல விரும்பத்தகாத பிரச்சினைகளை தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் எதிர் நோக்குகின்றன. மற்ற நாடுகளில் இருந்து கதைப்பவர்களுக்கு அதன் உள் பிரச்சினைகள் அறிய நியாயமில்லை. எனவே கருத்தை வைக்கும் போது கனடிய தமிழர் தரப்பு நியாயங்களை யும் கருத்தில் எடுத்து வையுங்கள். தற்போது அரச தரப்புடன் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக அறிந்தேன். அவை பலன்தராத விடத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். ஆனாலும் ஒன்றை நாம் கூற வேண்டும். இந்த தடை கனடிய தமிழரை போராட்டத்திற்கான ஆதரவு வழங்குவதில் இருந்து பிாக்க வில்லை. எனவே இதை பற்றி யாரும் அஞ்சத்தேவையில்லை

கள உறவுகளே அவர்கள் பக்கமும் நின்றும் சிந்திக்க வேண்டும் தானே. நானும் கொஞ்சம் அவரப்பட்டுவிட்டேன். பொங்குதமிழை சிறப்பாக நடாத்தியவர்கள் இதையும் வெற்றிகரமாக கையாள்வார்கள் என்று எதிர்பார்ப்போம். அங்கே தமிழனின் வீடுகளை எரிக்கிறாங்கள். இங்கை என்னண்டா தடையை போடுறாங்கள் ஒண்டுமா விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

கனடாவில் உள்ள தமிழரின் தொலைபேசிகள் மெயில்கள் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஒரு வாரஇதழ் முலம் அறிந்தேன். சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. :roll: :roll:

Link to comment
Share on other sites

எது எப்படியாய் இருந்தாலும் நாங்கள் விழிப்பாய் இருக்கிறோம் என்று கனடிய அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய கடப்பாடு ஒன்று அனைத்து தமிழ்மக்களுக்கும் உண்டு.

Link to comment
Share on other sites

கனடாவில் உள்ள தமிழான் தொலைபேசிகள் மெயில்கள் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஒரு வாரஇதழ் முலம் அறிந்தேன். சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. :roll: :roll:

கனடாவில் உள்ள தமிழர்களது மட்டுமல்ல அனைவரதும் தொலைத்தொடர்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. அதைவிட நகைச்சுவை என்னவென்றால் அதை ஒட்டுக்கேட்பதற்கு ஏற்படும் செலவையும் நாமே செலுத்துவதுதான் :lol:

Link to comment
Share on other sites

எது எப்படியாய் இருந்தாலும் நாங்கள் விழிப்பாய் இருக்கிறோம் என்று கனடிய அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய கடப்பாடு ஒன்று அனைத்து தமிழ்மக்களுக்கும் உண்டு.

விழிப்பாக இருக்கிறோம் என்றுவிட்டு கண்ணை மூடிக்கொண்டு குழிக்குள் விழமுடியாது நேசன். விழுந்தால் தூக்கிவிடுவதற்கு யாருமில்லை :wink:

Link to comment
Share on other sites

THE LEGAL STATUS OF THE LTTE IN CANADA

FACT SHEET

QUESTION: Is the LTTE banned in Canada?

ANSWER: No, the LTTE is not banned in Canada, but has been designated as (when it comes into effect) one of thirtynine Foreign Terrorist Organizations.

QUESTION: What is the difference between a legal ban and the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: If it is legally banned, the LTTE cannot function in Canada. Designation as a Foreign Terrorist Organization has only limited legal consequences.

QUESTION: What are the legal consequences of the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: There are 3 legal consequences of designation as a Foreign Terrorist Organization, they are:

1. The Foreign Terrorist Organizations funds will be frozen.

2. Members or Representatives of the Foreign Terrorist Organization can be denied entry to Canada.

3. Providing money to the Foreign Terrorist Organization is a criminal offense.

QUESTION: If LTTE members or representatives are denied entry to Canda how will it affect Canadian. citizens?

ANSWER: Canadian citizens can be a member or representative of the LTTE and they will not be denied entry to Canada. Canadian citizens can come and go as they please.

QUESTION: If LTTE members or representatives are denied entry to Canada are they eligible for political asylum in Canada?

ANSWER: LTTE members are eligible for political asylum. LTTE representatives will be granted asylum if they are qualified at the discretion of the Attorney General.

QUESTION: Who are not eligible for asylum?

ANSWER: Anyone who has engaged in terrorist activity or persecution of others is not eligible for asylum.

QUESTION: Is it legal to give money to the LTTE?

ANSWER: No.

QUESTION: Is it legal to send money to our alma maters in the LTTE controlled area?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to send money to our relatives in the LTTE controlled area?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to give money to the TRO?

ANSWER: Yes.

QUESTION: What can be sent to the LTTE?

ANSWER: Medicine and religious materials can be sent directly to the LTTE.

QUESTION: Is it legal to support the LTTE politically?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to celebrate the LTTE's ‘Hero's Day?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to hoist the LTTE flag?

ANSWER: Yes., Canadian citizens can fly any flag they want.

QUESTION: Is it legal to support a separate state for Tamils?

ANSWER: Yes.

QUESTION: Is it legal to read, discuss and distribute the LTTE's literature?

ANSWER: Yes. Freedom of expression is guaranteed in the Canadian constitution and by the charter of rights and freedom.

QUESTION: Will the LTTE legally challenge the designation as a Foreign Terrorist Organization?

ANSWER: Mostlikely they will. every Canadian citizen can challenge the canadian laws in the supreme court of Canada.

சிறுபான்மை ஆட்சியை நடத்தும், பழமைவாதக்(conservative party)கட்சி ரொறன்ரோவில் குறைந்தது பத்து பாராளுமன்றத் தொகுதிகளில் தேர்தலை நிர்ணயிக்கும் அளவுக்குள்ள ஈழத்தமிழர்களின் வாக்குப் பலத்தை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது.

Note: (This is the legal advice given by the legal experts in the wake of the United States listing the LTTE as an outlawed foreign terrorist organization. Since the laws are similar in USA and Canada, this "listing" with other 38 organizations only will have very limited consequences. I had saved this legal advice sometime ago with the USA from a website or news paper article and I forgot the name of that website.

I have also discussed this post with my friends dad; a Canadian lawyer of Jewish background, who has experience with Immigrant & refugee issues and politics in Canada. He also said that this would have very limited consequences as long as the LTTE is not a threat to the national security of Canada.)

"மீனினம் பாடிடும் தேனாடு, பாறை

விண்ணினை முட்டிடும் மலைநாடு,

மானினம் வாழ்முல்லை வளக்காடு,

வயல் வன்னியும் எங்களின் கண்ணாகும்

முத்துக்கள் விளைகடல் மன்னாரும்,

முத்தமிழ்ப் புலமையின் யாழ்நாடும்

சொத்தென நிறைபுகழ் தமிழீழம்"

நன்றி உணர்வுகள் இனையத்தளம்.

Link to comment
Share on other sites

புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - ளொப்ப்ய் எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்.

இருப்பினும் தனிநபர்களினது பங்களிப்புகளாக இருப்பதனூடே மட்டும் விடுதலைப் போராட்டத்தை நகர்த்திவிட முடியாது.

தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது.

சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது.

சிங்களவர்களோடு மட்டுமே நாம் போராடிக் கொண்டிருந்தால் போதுமெனில் எந்த ஒரு தமிழீழக் குடிமகனும் அந்நிய தேசத்தில் அகதியாக இத்தனை காலம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை- நம் காணிகள் செழித்திருக்க- நம் முன்னையர் காலம் மீண்டும் பூத்திருக்க சுதந்திரத் தமிழனாய் திருமலை கோணேஸ்வரர் ஆலயத்துக்கும் நல்லூர் கந்தன் கோவிலுக்கும் பங்குனி உத்திர பாதயாத்திரையும் போய்க்கொண்டிருப்போம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும்.

அதை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே செய்ய முடியும்.

உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக- உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.

கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்.

இந்தக் களைக்கு யார் காரணம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது அல்ல.

களையைக் களைந்து கதிர் முற்ற மகிழ்வோடு அதனை அறுத்து ஒன்றாய் நின்று விடுதலைப் பொங்கலிடுவதற்கான வழி என்ன என்பதைத்தான் புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தும் விதமாக புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டிய கடமையின் அவசியம் உணர்ந்து பேராசிரியர் கா.சிவதம்பி தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பைத் தருகின்றோம்:lol:

ஐரோப்பிய பயணத் தடையையும் கனேடியத் தடையையும் ஒன்றொன்றுக்கொன்று தொடர்புடையதாக கருதமாட்டேன்.

ஐரோப்பிய பயணத் தடைக்கான காரணம் பேச்சுவார்த்தை தொடர்பிலானதும், சிறிலங்கா அரசாங்கத்தினது பரப்புரைகள் அல்லது எடுத்துரைப்புகளுக்கான சந்தர்ப்பங்களாலும் ஏற்பட்டது எனக் கருதலாம். அதிலும் நோர்வே போன்றவற்றில் இது விடயத்தில் ஒரு தளர்ச்சி உள்ளது. அதனால் நோர்வேத் தரப்பை சிங்களத் தரப்பு கடுமையாகத் தாக்குகிறார்கள்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது-

நோர்வே அல்லது மூன்றாவது நாடாக ஒரு மேற்கத்தைய நாட்டின் தலையீடு இல்லாமல், அனுசரணை இல்லாமல் சமாதானம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற உண்மையும்

அப்படியான நேரத்தில் நோர்வேயை வேண்டாம் என்று சொல்வது எப்படிப் புத்திசாலித்தனதமாகும் என்று சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கிற ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.

இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்.

குறிப்பாக சர்வதேச நிறுவனங்களிடத்தில் தமிழர் தரப்பானது நன்மதிப்பைப் பெறுவதற்கான பரப்புரைகளைப் புகலிடத் தமிழர்கள் வேண்டிய அளவு செய்யவில்லை. அதற்கு மாறான செயற்பாடுகளையே செய்து வந்துள்ளதாக எமக்குப்படுகிறது.

கனேடியத் தடையை விதித்தது ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி. அரசாங்கத்துக்கு வந்தும் சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கிறது. கனேடியப் பண்பை பாதுகாப்பாகச் சொல்கிறார்கள்.

தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம்- கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள்-பொறியியலாளர்கள்-வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை.

தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு.

கனடாவில் ளொப்ப்ய் எனச் சொல்லப்படுகிற கருத்தாதரவு தேடும் குழுமம் ஒன்று உள்ளதா?

இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இருந்தது- இப்போது அங்கும் குறைந்து விட்டது. அவுஸ்திரேலியாவிலும் கூட இல்லை என்றுதான் நம்புகிறேன்.

தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுதலில் காணப்படுகிற பலவீனங்களின் வெளிப்பாடாகவும் குறைபாடுகளின் வெளிப்பாடாகவுமே கனேடியத் தடையை நான் பார்க்கின்றேன்.

புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ளவர்கள் சரியான வகையில் இந்தப் பரப்புரையை அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசாங்கங்களிலும் நியாயப்பாடுகளை வெளிக்கொணரத் தவறிவிட்டார்கள் என்று அடித்துச் சொல்கின்றேன்.

நீங்கள் நேர்காணல் எடுக்கும் அவுஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள பிரதான தேசிய நாளிதமிழில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றி எத்தனை அங்குலச் செய்தி கடந்த 6 மாத காலத்தில் வெளியாகியிருக்கின்றது?

ஒன்றுகூட வரவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் என்னுடன் பேசவேண்டியதும் இல்லை. என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?

இங்கிலாந்து- கனடா-ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை விட அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் ஆங்கிலம் படித்தவர்கள்- அடி நிலை ஊழியராக இருந்தாலும் அரச உத்தியோகத்தில் இருப்பவர்கள். உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? அவர்களைப் போல் நீங்கள் உடல் உழைப்பாளர்கள் அல்ல என்பதை நான் நன்கறிவேன்.

உங்களுக்குள் குழு மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இங்கு வந்துவிட்டு மகிழ்கின்றீர்கள்.

கோவில்களுக்குச் செலவிடுவது போன்ற உங்களது சொந்த ஆத்மார்த்த திருப்திக்கான செயற்பாடுகளைப் போல் இந்த கருத்தாதரவு தேடுதல் எனப்படுகிற ளொப்ப்ய் யை ஏன் நீங்கள் செய்யவில்லை?

யார் தலைவர்-செயலாளர் என்கிற வகையிலும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்கிற வகையிலும் அங்கு நிலைமைகள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள்.

நீங்கள் மாநாடுகள்-பட்டிமன்றங்கள்- கருத்தரங்குகள்- குத்துவிளக்கேற்றுதல்களை செய்வதற்குத்தான் இவை தேவை.

அதைவிட எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து இந்த ளொப்ப்ய் யைச் செய்யலாமே.

உண்மையில் ளொப்ப்ய் செய்வதற்கான ஒழுங்குமுறைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம்.

ளொப்ப்ய் யை அறிந்தவர்களும் அதைச் செய்யவில்லை என்பதும் உன்மை.

அப்படியான நிலையில் தடைவிதித்து விட்டார்கள் என்று வயிற்றலடித்துக் கொண்டால் எப்படி?

இங்குள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது. நிலைமை அப்படி உள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கால வரிசைப்படியாக நீங்கள் வெளியீட்டுள்ளீர்களா? அப்படி இருந்தால் அது எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கின்றது? வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டால் போதுமா?

இந்த விடயங்களைச் செய்வதற்கு எல்லோரும் இணைய வேண்டும் என்பதில்லை.

சிறிது பேர் இந்த விடயங்களைச் செய்ய முன்வருவார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்கள் மறுதலிக்கக் கூடாது.

கனடாவில் அப்படித்தான் நடந்தது என்று கேள்விப்படுகிறேன். கனடாவில் உள்ள சிலர் அவர் அப்படிச் சொல்லிவிடுவார்-இவர் எப்படிச் சொல்லிவிடுவார் என்று சொல்லிக் கொண்டு பேச விரும்புகிறவர்களையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றீர்கள். பக்கத்து கிராமத்துக்காரன் சண்டை போட்டால் அங்கேயும் நீங்கள் ஒன்றாக இணைந்து கொண்டு சண்டை போடுகின்றீர்கள். அந்த ஒற்றுமை எல்லாம் உங்களிடம் இருக்கிறது.

ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்ட விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதுதான் பிரச்சனையே.

இன்றுள்ள சிறிலங்கா யாப்பு நிலையில் ஒரு தேசத்தின் அலகு என்கிற வகையில் தேசக் குழுமம் என்கிற வகையில் ஆட்சியில் தமிழர்களினது பங்கு என்ன? என்பது வரைவிலகணக்கப்படுத்தப்படவில

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவத்தம்பி சொன்னது வருத்தமான செய்தி என்றாலும், அது ஏற்றுக் கொள்ளத்தகு உண்மைகள் இருப்பதை மறுக்கமுடியாது.

வெறுமனே நிதி உதவிகளும், ஒரு சில கட்டுரைகளும் வெளிநாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் தெளிவைக் கொடுக்காது. ஒவ்வொரு தமிழனும் போராட்டத்தின் அமைப்பை வெளிப்படுத்தியாக வேண்டும்

பேராசிரியர் அவர்களுக்கு,

தங்களைக் குறித்து சில துரோகத்தளங்கள் கடுமையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கின்றன. அந்தப் பேய்கள் ஆபத்தானவர்கள். உங்களின் பாதுகாப்பில் அவதானமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம்

எமது பிரச்சார இயந்திரம் சரியாக கவனிக்கப்படவில்லை/ஒழுங்கமைக்கப்படவில்லை என்பது வருத்ததுக்குரிய யதார்த்தம்.

போராட்டத்துகு நிதிவளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது எமது போராட்ட நியாயப்பட்டையும், எம்மீது மேற்கொள்ளப்படும் அட்டூளியங்களை பிரச்சாரப்படுத்தி, எமது போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதும்.

இன்றைய சர்வதேசமயப்பட்ட எமது போராட்டத்துக்கு இது முக்கியமானது. அதை செய்ய இன்னும் காலம் தாழ்த்தினால் மேலும் மேலும் சர்வதேச ரீதியில் பின்னடைவே ஏற்படும்.

ஒரு உதாரணத்திற்கு,

எமது போராட்டம் உலகில் பலநாடுகளின் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதை நான் அவதானித்திருக்கிறேன்/ நேரில் கேட்டிருக்கிறேன். எமது கவனத்திற்கு அதிகம் வராத ஆபிரிக்க நாட்டவர்கள் கூட எனது தாய்மொழி என்ன என கேட்கும் போது தமிழ் என்றால் உடனடியாக தமிழ் புலிகள் என கேட்கும அளவிற்கு அறிமுகம் இருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் யாரும் ஐரோப்பவிற்கு பலகாலம் முதல் வந்தவர்கள் அல்ல. மிக அண்மையில் ஐரோப்பவிற்கு வந்தவர்கள்.

பிரச்சாரம் போதுமான அளவில் நிகழவில்லை என்பது கனடாவுக்கு மட்டுமல்ல, அனைத்து புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளுக்கும் பொருந்தும்.

நாம் இதுவரை பிரச்சாரம் என்று எமது புலம் பெயர் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் செய்திருக்கிறோம். மற்றவர்கள் கவனத்துக்கு எடுத்து செல்ல தவறி இருக்கிறோம்.

அதையே வேறொரு பகுதியில் சுட்டிகாட்ட முற்பட்டுள்ளேன்

:arrow:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=10314&start=75

Link to comment
Share on other sites

கனடாவிற்கு வந்து அகதிநிலை அந்தஸ்தை கேட்கும் போது நாம் சொல்கின்ற பொய்களும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். பலருடைய கேஸ் கொப்பிகளை எடுத்துப்பார்த்தால் தெரியும். முக்கியமாக கோடு போட்டு காட்டியிரு்பார்கள். எம்மால் இலங்கையில் இருக்க முடியாது. புலிகளாலும் பிரச்சனை சிறிலாங்கா ஆமியாலும் பிரச்சனை என்று தான் கூறிப்பிட்டு இருப்பார்கள். புலிகள் நம்மை இவ்வளவு பணம் தரச் சொல்லி கேட்டார்கள். புலிகள் பிள்ளைகளை தங்களுடன் வரும்படி கேட்டார்கள் அது இது என்று தமது வசதிக்கு எற்றவாறு எழுதியிருப்பார்கள். இத்தகைய தகவல்களால் தான் புலிகள் தப்பானவர்கள் என்று அரசாங்கமும் வேற்று இன மக்களும் எண்ணுகின்றார்கள். கேஸ் நடக்கும்போது புலிகள் கூடதாவர்கள் என்று அவர்களுக்கு முன் அழுது காட்டிவிட்டு பின்னார் போராட்டம் என்று தொடங்கினால் என்ன நடக்கும்????

Link to comment
Share on other sites

wtm_logo.jpgதடையுடன் தொடர்பு பட்டு கனடா உலகத்தமிழர் இயக்கம் "அறம் செய்ய விரும்பு" எனத் தலைப்பிட்டு விடுத்துள்ள அறிக்கை.

எம்மினிய உறவுகளிற்கு வணக்கம்!

நாம் பிறந்த தேசம் மீண்டும் பற்றி எரிகிறது. பேரினவாதம் பட்டப்பகலில் இனி அழிப்பை மேற்கொள்கின்றது. இணையத்தளங்கள் தோறும் தோய்ந்திருக்கும் நம் உறவுகளின் குருதி நம் உறவுகளின் குருதி நம் இதயத்துள்ளும் இறங்கி வழிகிறது. யார் உதவியும் இல்லாது அல்லற்படும் எம் உறவுகளின் நிலையுணர்ந்து துடிக்கும் உள்ளத்தினால் சீரற்றுப்போன சுவாசம் நெஞ்சை அழுத்துகின்றது. நிர்க்கதியாய் நின்று நாம் 'இதைக் கேட்பாரில்லையா' என கதறுகிறோம். எனினும் வழமைபோல் சர்வதேசம் எம்மைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கின்றது. நம் உறவுகளிற்கான எமது ஆதரவும் இன்று கனேடிய மண்ணில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கனேடிய மண்ணில் கடந்த எட்டாம் நாள் இடப்பட்ட சட்டமாகிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை எவ்வகையிலும் எம் பிறந்த மண்ணின் சமாதான முன்னெடுப்புகளிற்கு உதவப்போவதில்லை என்பதை தமிழ் கனேடியர்கள் நன்கறிவோம். சிங்களப் பேரினவாதம் இத்தடையினைத் தமது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்குக் கிடைத்த இன்னுமொரு அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டு செயற்படுவது திருகோணமலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தில் மட்டுமன்றி கனேடிய மண்ணிலும் கூட சிறிலங்கா அரசின் முகவர்கள் இச்சட்டத்தால் அகமகிழ்ந்து ஆடுவதை நாம் பார்க்கின்றோம். சர்வதேசம் தமக்குத் தங்கு தடையற்ற ஆதரவினை எப்போதும் வழங்கும் என்று சிங்களம் கொண்டுள்ள மமதையின் காரணமாகவே, தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை அடக்கி தமிழ் இனத்தை அழிக்கும் அவர்களது நடவடிக்கைகள், இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் நாளிலிருந்து சமீபத்தில் திருமலையில் நடந்தது வரை, இன்னும் தொடர்கின்றன. ஈழத்தில் வாழும் நமது உறவுகளின் எதிர்காலம் மட்டுமன்றி கனேடிய தமிழர்களாகிய எமது அடிப்படை மனித உரிமைகளும் கனேடியத் தடைச்சட்டத்தால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்

Link to comment
Share on other sites

இது கனடா வாழ் தமிழ்மக்களுக்கு மாத்திரம் அல்ல உலகம் வாழ் புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொருந்தும்.

எப்படி வாழ்ந்தோம்,எப்படி இப்போ வாழ்கிறோம் என்றதை ஒருகணம் நினைத்துப்பார்த்தால்,எங்களு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.