Jump to content

அவகாடோ சம்பல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

avakado.jpgUploaded with ImageShack.us

அவகாடோ என்னும் ஒரு வகை பழம் நல்ல கொலஸ்ரரோல் உண்டாக்கக் கூடிய பழம்.இதை நாங்கள் மீன் ரின் சம்பல் மாதிரி சம்பல் போடுவோம்.ஒரு அவகாடோ சம்பல் செய்தால் 5 பேர் வரை நன்றாக போட்டு சாப்பிடலாம்.மிகுதி இருந்தால் கொட்டி கழுவி கவிழ்க்க வேண்டும் என்று அல்ல.குளிர் சாதனப் பொட்டியில் வைத்து 4 5 நாட்களுக்கு சாப்பிடலாம்.

இதை எந்த நேர உணவுடனும் சாப்பிடலாம்.சான்விச் மாதிரி செய்து ஒரு வாழைப்பழமும் சேர்த்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும்.

சரி இதை எப்படி செய்யலாம் என்பதைப் பார்போம்.

அவகாடோவின் தோல் பகுதியில் இருக்கும் மெழுகை பட்டும் படாமலும் சுரண்டி எடுக்கவும்.

கரட் சுரண்டும் கருவியால்(விதை எடுக்கத்தேவை இல்லை)கரட் சுரண்டுமாப் போல் சுரண்டவும்.

சிகப்பு வெண்காயம் இரண்டு சிறு சிறு தூள்களாக வெட்டவும்.

சிறிது யோக்கட் சேர்க்கவும்.யோக்கட் ஒத்து வராதவர்கள் சிறிது பால் சேர்க்கவும்.

உப்பு தேசிக்காய் புளி உங்கள் அளவுக்கு சேர்க்கவும்

உறைப்பு தேவையானவர்கள் பச்சைமிளகாள் குறுணலாக வெட்டி உங்கள் அளவுக்கு போடவும்.எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து எடுத்து ஒரு சட்டியில் போட்டு தேவைக்கேற்ப எடுத்து சாப்பிடவும்.

img2012072200015.jpg

Uploaded with ImageShack.us

Link to comment
Share on other sites

ஆஹா... புது வித சம்பல். கட்டாயம் கெதியன செய்து பார்ப்பேன்

நன்றி ஈழப்பிரியன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ஈழப்பிரியன்

அவகாடோ சம்பல் அந்தமாதிரி இருக்கும் போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான சம்பலாய்க்கிடக்கு...பச்சைமிளகாய்,வெங்காயம் போட்டு செய்துபாக்கத்தான் இருக்கு.நன்றி ஈழப்பிரியன்.

அவகாடோவை பாதியாய் வெட்டிப்போட்டு தேக்கரண்டியாலையும் கோதியெடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, வாத்தியார், குமாரசாமி

குறையிருப்பின் என்னிடம் கூறுக

நிறையிருப்பின் நண்பரகளிடம் கூறுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்போதும் புதிய சமையல்கள் செய்து சாப்பிடுவதில் விருப்பம், இந்த அவகாடோ சம்பலையும் செய்து சாப்பிடுவோம். :D

பகிர்விற்கு நன்றி சகோ ஈழப்பிரியன். :)

Link to comment
Share on other sites

சிறிய துண்டுகளாக வெட்டித்தான் சலட் போடுவது வழக்கம்...உடனே இதை செய்து பார்த்துவிடுகின்றேன்... நன்றி :)))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

338290-59121-29.jpg

நாளைக்கு கடைக்குப் போய்... 2 அவக்காடோ வாங்கத்தான் இருக்கு.

அவக்காடோவை ஊரில் பட்டர் ஃபுருட் ( Butter fruit) என்று சொல்வார்கள்.

இணைப்புக்கு நன்றி ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

இந்த பழத்தை இரண்டாக வெட்டி கரண்டியால் உள்ளீடுகளை எடுத்து அதற்குள் உங்கள் தேவைக்கேற்றளவு சீனி போட்டு சிறிதளவு பாலும் விட்டு நன்றாக கலந்துவிட்டு குளிர்சாதனப்பெட்டிக்குள் அரை மணித்தியாளமோ அல்லது ஒரு மணித்தியாளமோ வைத்துவிட்டு சாப்பாட்டிற்கு பிறகு (dessert ) ஆக சாப்பிட்டுபாருங்கள் சும்மா அந்த மாதிரி இருக்கும். :icon_idea:

சீனி வருத்தம் உள்ளவர்கள் அதிகளவு சாப்பிட்டுவிட்டு என்னை பேசக்கூடாது :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக் கொய்யா மரத்தை, தமிழ்பகுதிகளில் நான் காணவில்லை.

இது, சிங்களவரின் மரம் போலுள்ளது. :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஆனைக் கொய்யா மரத்தை, தமிழ்பகுதிகளில் நான் காணவில்லை.

இது, சிங்களவரின் மரம் போலுள்ளது. :D:lol::icon_mrgreen:

இதற்கு ஈரலிப்பான, நல்ல வளமான மண் வேண்டும். எங்கள் வீட்டில் நட்டு வளர்த்தோம், ஒரு ஆள் அளவு உயரம் வரை வளர்ந்து பட்டு போய் விட்டது. திருநெல்வேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெரிதாக மா மரம் போல வளர்ந்த மரத்தை பார்த்திருக்கிறேன். வருட வருடம் நிறைய பழங்களை கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவாக்காடோ எனக்கு பிடிக்கும் ஆனால் வருடத்திற்கு ஒருக்கால்,இரண்டு தரம் தான் சாப்பிடுவேன்...இந்த சம்பல் நன்றாக இருக்கும் போல தெரிகிறது ஒரு நாள் செய்து பார்த்து விட்டு எப்படி இருக்குது என்று எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு,தூயா, தமிழ் சிறி, குளக்ஸ், தமிழினி, யுகே கரி, மற்றும் ரதி

சுவையானதும் திடமானதுமான அவகாடோ சம்பலை இன்றே செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.உங்கள் கருத்துக்கு நன்றி.

இஞ்சி சாப்பிடுபவர்கள் கொஞ்சம் இஞ்சியையும் குறுணலாக வெட்டி போட்டு கலக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.