Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் 2013


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உலகின் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளில் ஒன்றான “மைக்ரோசொப்ட் ஒஃபிஸ்“ இற்கான புதிய பதிப்பின் பிறீவியூ பதிப்பு என அழைக்கப்படும் முன்தோற்றப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் இறுதிநிலைப் பதிப்பு அடுத்தாண்டே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய பதிப்பு மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் 2013 என அழைக்கப்படவுள்ளது. இதன் வெளியீட்டின் போது கருத்துத் தெரிவித்த மைக்ரோசொப்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் போல்மர், இந்தப் புதிய பதிப்பு மைக்ரோசொப்டின் அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வெளியீடு எனத் தெரிவித்தார்.

-- வின்வின்டோஸ் 7, வின்டோஸ் 8 இல் இயங்கும்[/size]

[size=4]-- வின்டோஸ் XP, வின்டோஸ் Vista இல் இய[/size]ங்காது

-- [size=4]அப்பிள் கணினிகளுக்காகவும் வெளியாகும்

-- (PDF) பிடிஎப் கோப்புக்களை நேரடியாக மைக்ரோசொப்ட் வேர்ட்டில் திறந்து அவற்றை எடிட் செய்யக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன[/size]

[size=4]-- மைக்ரோசொப்ட் வேர்ட்டைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே இணையத்தைப் பயன்படுத்தித் தேவையான விடயங்களைப் பார்த்த பின் அவ்விடயங்களை வேர்ட் இல் இணைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக வேர்ட் கோப்பு ஒன்றில் வீடியோ ஒன்றை இணைக்க விரும்பினால் இணைய மேய்வானுக்குச் செல்லாமல் வேர்ட்டில் இருந்தே "பிங்" தேடுதற் பொறி ஊடாகத் தேடி அந்த வீடியோக் கோப்பினை இணைக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.

-- மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் பதிப்பு இணையத்தோடு அதிகமாகச் சேர்ந்தியங்குவதற்குரிய வசதிகளைக் கொண்டுள்ளது[/size]

[size=4]-- ஸ்கை ட்ரைவ், ஃபிளிக்கர் போன்ற கணக்குளை உங்கள் மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் பதிப்போடு இலகுவாக இணைத்துப் பயன்படுத்தக்கூடியவாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மைக்ரோசொப்ட் வேர்ட் தவிர, எக்சல், வன் நோட், பப்ளிஷர் உட்பட அனைத்து ஒஃபிஸ் உள்ளடக்கங்களும் புதுமைப்படுத்தப்பட்டு புதிய வடிவில் காணப்படுவதோடு பயன்படுத்துவதற்கு இலகுவான வழியில் காணப்படுகின்றன.

இந்தப் புதிய பதிப்பு தற்போது முன்தோற்ற அமைப்பில் கிடைப்பதால் இலகுவாகத் தரவிறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இறுதிப்பதிப்பு வெளியாகும் வரை இதை இலகுவாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிப்பை இலவசமாகத் தரவிறக்க http://www.microsoft.com/office/preview/en என்ற முகவரிக்குச் செல்லலாம்![/size]

[size=4]http://www.tamilmirror.lk/ஏனையவை/2010-08-18-10-05-32/44905-2012-07-18-07-05-32.html[/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.