-
Tell a friend
-
Topics
-
14
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
என்ன தம்பி தமிழ் சிறி....! நேற்றோடு வெள்ளி போச்சுதே...!! இன்று சனி பிறந்தும் தெளியவில்லையா? சிறீலங்காவே ஒரு சின்ன வீடு, அதுவும் ஒருவருக்கு அல்ல. அது எப்படி மற்றச் சின்ன வீடுகளை ஒதுக்கும்....??
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
கொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்.! கொரோனா வைரஸை முற்றிலுமாக அடக்கும் ஒரு உள்ளூர் மருந்தை உருவாக்கியுள்ளதாக சுதேச மருத்துவர் ஒருவரான கவரேஜ் சம்பத் பெர்னாண்டோ என்பவர் தெரிவித்துள்ளார். பண்டைய மருத்துவ பரிந்துரைகளின்படி தயாரிக்கப்படும் சுமார் இருபத்து நான்கு வகையான மருந்துகள் இங்கு உள்ளன என்றும் அவர் கூறினார்.இந்த மருந்தை மக்கள் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று அவர் கூறுகிறார். பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், அவர் 3 நாட்களில் முழுமையாக குணமடைவார் என்றும், பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார்.பண்டாரநாயக்க ஆராய்ச்சி நிறுவனம் இதை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வெளியிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 150 பாதிக்கப்பட்டவர்கள் குணமாகியுள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட நபர் மருந்து உட்கொண்ட மூன்று நாட்களுக்குள் குணமடையவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறினார். கொழும்பில் நேற்று -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். https://puthusudar.lk/2021/01/23/கொரோனா-மருந்தை-குடித்து-3/ டிஸ்கி : -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.! சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. https://thamilkural.net/newskural/news/116127/ -
By தமிழ் சிறி · Posted
இந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது, அதற்குப் பதில் கூற, வேண்டிய பொறுப்பு... முன்நாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும்.. இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும் சமர்ப்பணம். உங்கள்.... குறிகோள் அற்ற, அரசியலால்.. பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது. இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்... என்ன செய்வீர்கள்? லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், உருப்படியான வேலைகளை பாருங்களேன். முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்... கிழட்டு சம்பந்தன் ஊரில்.. இருந்து, "குறட்டை" விடுவது நல்லது. ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. நீங்கள்... இது, வரை... கிழிச்சது போதும், ஐயா.. அடுத்த... பிறவியில்.. நீங்கள், தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள். இப்படி... ஒரு, கேவலம் கெட்ட... பிச்சைக் கார, எதிர்க் கட்சி தலைவர்.... வேண்டவே... வேண்டாம் -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ?” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.