Jump to content

"நீ மறந்துபோன நான்".

Recommended Posts

கவிதையின் கவிதைகள்

[size=5]696921.gif[/size]

http://www.desicomme...9692/696921.gif

இத்தனை சித்திரவதைகளின் பின்னரும்...

நான் உயிருடன் இருக்கின்றேன்... ஆச்சரியந்தான்!

நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்

என்னிடமில்லை... அவை உன்னிடந்தான்!

நீ மறந்துபோனதாய்க் காட்டிக்கொள்ளும்

எம் பழைய நினைவுகளை மீட்டிப்பார்...

அனைத்துக்கும் விடை கிடைக்கும்!

உன்னிடமும் நான் கேட்கவேண்டியவை,

நிறையவே இருக்கின்றது... அதுவரையும்,

என்னுயிர் பிரியாது!

உண்மையான நேர்மையான பதில்கள்

உன்னிடமிருந்து வரும்வரைக்கும்...

என்னுயிர் போனாலும் உனைத் தொடர்வேன்...!

ஒரு கெட்டவனை நல்லவனாக்கவும்

ஒரு பெண்ணால் முடிகிறது!

ஒரு நல்லவனை கெட்டவனாக்கவும்

அதே பெண்ணால் முடிகிறதே!!

இதில் நீயும் நானும் யார்?

ஒருதலைப்பட்சமான உன் முடிவுகளோடு

இந்த முடிவினையும் நீயே தீர்மானித்துக்கொள்!

இந்தச் சின்ன உலகம் சுற்றும்போது, (***)

கடிகார முட்கள்கூட

அடிக்கடி சந்தித்துக்கொள்ளத்தான் வேண்டும்!

நியதிகள் அப்படியிருக்க...

நீ மறந்துபோன நானும் ...நீயும்???

*** கவிதையின் இறுதிப்பகுதி இணைக்க மறந்ததினால் மாற்றப்பட்டது . தவறுக்கு மனம் வருந்துகின்றேன் .

கவிதை அனுப்பிய கவிதை 01 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105253

கவிதை அனுப்பிய கவிதை 02 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105423

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏம்பா கவிதை அண்ணா.. ஆத்துக்காரியோடை ஏதும் பிரச்சனையோ??? :rolleyes:

Link to comment
Share on other sites

ஏம்பா கவிதை அண்ணா.. ஆத்துக்காரியோடை ஏதும் பிரச்சனையோ??? :rolleyes:

ஏன் இந்த கொலைவெறி???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த கொலைவெறி???

இல்லை அண்ணா.. ஒரே புகைச்சலா இருக்கு.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

மனித பலவீனத்தையும்,மனிதவாழ்வின் யதார்த்தத்தையும்,மனிதனுடைய சிறப்பான

அம்சத்தையும் காட்டி நிற்கும் இந்தக்கவிதையை எழுதிய கவிதை ,,,,,,,,,நீ ஒரு கவிதை......................இணைப்பிற்கு நன்றி கோ அண்ணா ................கவிதைப்பக்கம் நான் செல்வதில்லை என்று கூறியிருந்தேன் ..........உண்மை....... ஆனால் கவிதையாக கூறப்படும் பயனுள்ள வசனங்களை ரசிப்பவன்........சில காலங்களுக்கு முன் ஒரு இசைத்தட்டுக்காக சில பாடல்களுக்கு இசையமைத்தேன்.......அதிலே ஒரு கவிஞ்சர் தந்த சில வரிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்........[size=5]கண்வழியே தான் வழியும் [/size]

[size=5]செங்குருதி தான் வரையும் ...சித்திரம் கூறிடும் தத்துவம் என்னவென்று கல்மனம் ஏத.றியும்...அதை நல்மனம் தான் அறியும்..............[/size]

உண்மையில் முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை............அதன்பின் நன்றாக ஆழமாக உள்ளே போனேன் அருமையான ஒரு மெலோடியை போட்டு அந்தப்பாடலை உருவாக்கினேன் ...........கோ அண்ணா இங்கே இதை நான் இணைத்ததை பற்றி எதுவும் தவறாக என்னைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டாம்

கலைமேல் உள்ள பசியால்தான் மனம் திறந்து தாழ்மையாக பதிவிடுகிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களின் பின் அவருடைய காதலிய சந்திச்சு இருக்கார் போல ஹ்ம்ம்

காதல் எழுதிய விற்று தீர்ந்த காதல் கதையை வாசிக்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103157#entry769791

முதல்தரம் உருப்படியாக ஒரு கருத்து கவிதைக்கு வந்திருக்கின்றது . இதற்கு காலநேரங்கள் கூடிவரும் வேளையில் இந்தப் படைப்பை ஆக்கியவரே உங்களுக்கான பதிலைத் தருவது நியாயமானது என நினைக்கின்றேன் . மிக்க நன்றிகள் தமிழ் சூரியன் உங்கள் நேரத்திற்கும் வருகைக்கும் .

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களின் பின் அவருடைய காதலிய சந்திச்சு இருக்கார் போல ஹ்ம்ம்

காதல் எழுதிய விற்று தீர்ந்த காதல் கதையை வாசிக்க

http://www.yarl.com/...157#entry769791

என்னாது........... சுண்டுவுக்கே ஃபீலிங்கா ?? இத்தோடா ...........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.