Jump to content

நகங்களைப் பற்றிய ஆச்சரியம் தரும் தகவல்கள்!


Recommended Posts

22:56 ராஜ் தியாகி

உடலில் காணப்படும் நகங்கள் தேவையற்றது தான் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.

nails.jpg

நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்போது என்னென்ன நிறத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனை என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் அறிகுறிகளை கண்டறிய:

நகங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது. நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் நகங்களானது இருக்கும்.

நகங்கள் வெளுத்து குழியாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருக்கும். மேலும் நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருந்தால், நாள்பட்ட நுரையீரல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும். நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் ஒன்றாக கலந்திருக்கிறது.

மேலும் இரத்தத்தில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அவர்கள் அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். ஆகவே அவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன சின்னக் குழிகள் நகத்தில் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், அது சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அதிகமாக புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து இருக்கலாம் அல்லது நகங்களுக்கு நெயில் பாலிஷ் தீட்டுவதாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை... செய்யக்கூடாதவை:

1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.

2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.

3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.

5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.

ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

http://tk.makkalsant...e-of-nails.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.