Jump to content

8.3 கோடி போலி facebook பதிவாளர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள்!

லண்டன்: இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள் இருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஃபேஸ்புக் தளத்தில் கணக்குப்பதிவை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்,உலகம் முழுவதும் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பயன் பாட்டாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இத்தகவலை லண்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இணையதளத்தில் 95.5 கோடி பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 8.7 சதவிதமும் அதாவது 8.3 கோடி பேஸ் புக்ககள் போலியானவை.

பேஸ்புக்கில் கணக்கு தொடங்குபவர்கள், தங்களைப் பற்றிய உண்மையான தகவல்களை குறிப்பிட வேண்டும்.ஆனால் மேற்கண்ட எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை தந்துள்ளனர். இதில் மூன்று வகையான போலிகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

[size="2"] [/size]

அதாவது ஏற்கனவே முறையான தகவல்களுடன் கணக்கு வைத்திருப்பவர்கள், போலி பெயரில் கூடுதலாக ஃபேஸ்புக் கணக்கை தொடங்கி உள்ளனர். மற்றொரு வகை போலியானது, ஃபேஸ்புக் சேவையை குலைப்பதற்காக தொடங்கப்பட்டது ஆகும்.

மற்றொரு வகையானது விருப்பமில்லாமல் பெருமைக்காக மிகைப் படுத்தப்பட்ட தகவல்களுடன் தொடங்கப்படும் கணக்கு ஆகும். அந்த வகையில் இணையதள மொத்த பயன்பாட்டாளர்களில் 1.5 சதவிகிதம் பேர் விருப்பம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளதாக பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.

vikatan

Link to comment
Share on other sites

[size=4]பங்குச்சந்தையில் நுழைந்து இந்த நிறுவனத்திற்கு 'பொய்யான" பல பிரமிக்கப்பட்ட தகவல்களை வழங்கி பலரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர். இவர்களை நம்பி ஏமாந்தவர்கள் சாதாரண முதலீட்டாளர்கள்.[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.