-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு யாழ். துரையப்பா மைதானத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323042 -
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு By DIGITAL DESK 5 04 FEB, 2023 | 09:31 AM சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/147398
-
பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க இடமளிக்க முடியாது – சரத் வீரசேகர பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டு நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என மகாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். மகாசங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதிப்பளித்து செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அமுல்படுத்தப்பட்டது என்றும் இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். https://athavannews.com/2023/1323049
-
மன்னிச்சு அண்ணை. மிகத் தவறு எனப் புரிந்தது. நன்றி. நிர்வாகத்திற்கு திருத்தச் சொல்லி முறையிட்டுள்ளேன்.
-
By கிருபன் · பதியப்பட்டது
கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் முன்னெடுப்பு! கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டதோடு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகளும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மேலும் பரந்தன் சந்தியிலிருந்து, டிப்போ சந்திவரை இளைஞர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323056
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.