Jump to content

2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு


Recommended Posts

Published: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2012, 14:06 [iST] Posted by: Chakra

டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது.

இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும்.

இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மட்டும் ரூ.186 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், டாடா நிறுவனமும் தென் ஆப்பிரிக்காவின் சசோல் நிறுவனமும் இணைந்து தொடங்கிய ஸ்டேடர்ஜி எனர்ஜி டெக் சிஸ்டம்ஸ், அனில் அகர்வாலின் நிறுவனங்கள், அதானி குரூப், ஆர்சலர் மிட்டல், எஸ்ஸார் குரூப், லான்கோ ஆகிய நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்துள்ளன.

சுமார் 44 பில்லியன் டன் நிலக்கரி கொண்ட சுரங்கங்களை ஏலமே விடாமல் மிக மிகக் குறைவான விலைக்கு இவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கித் தந்துள்ளது என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/08/17/india-coal-block-allotments-cag-final-report-puts-loss-159812.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய பாரதீய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் எல்.கே.அத்வானி தலைமையில் நடந்தது. இதில் வெங்கையா நாயுடு உள்பட அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சினையில் பிரதமர் ராஜினாமா செய்யாத வரை எந்த விவாதத்துக்கும் இடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மூத்த தலைவர் வெங்கைய நாயுடு நிருபர்களிடம் கூறுகையில்,

மத்திய அரசாங்கம் இந்த நாட்டின் ஊழல் கறை படிந்த அரசாங்கமாக செயல்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேட்டை பாராளுமன்றத்தில் தொடர்ந்து கிளப்புவோம். மக்களிடம் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. சமூக விரோதிகளை தண்டிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. ஆனால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊழல்வாதிகளை பாதுகாக்க முயற்சி செய்கிறது என்றார்.

எல்.கே.அத்வானி கூறும் போது, இந்த அரசு நாட்டுக்கு களங்கமாகவும், பாரமாக அமைந்து இருக்கிறது. எனவே இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். நிலக்கரி முறைகேடு பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

எனவே மம்தா பானர்ஜியை பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்து ஆதரவை கோரினர். இந்த விஷயத்தில் பிரதமர் ராஜினாமா செய்ய கோருவதற்கு ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்று கூறியுள்ளது

மாலைமலர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

[size=4]ஊழல் அரசாங்கத்தை வழிநடத்துகிற மன்மோகன்சிங்.. ஜோக்குகளின் நாயகனாகிவிட்டார்:வாஷிங்டன் போஸ்ட் வறுவல்[/size]

[size=3]டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை டைம் பத்திரிகை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் இப்போது அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் "ஊழல் மலிந்த ஒரு அரசாங்கத்தை வழிநடத்துகிற பிரதமர்" என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.[/size]

[size=3][size=5]"India's ‘silent' prime minister becomes a tragic figure"[/size] என்ற தலைப்பிலான கட்டுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:[/size]

[size=3]இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுக்கும் இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் மிக முக்கிய காரணமாக இருந்த மன்மோகன்சிங்கின் ஆளுமை பெரும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஊழல் மலிந்த அரசாங்கத்தை வழிநடத்தக் கூடியவராக இருக்கிறார்.[/size]

[size=3]கடந்த இரண்டுவாரங்களாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலால் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவை கோரி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துக் கொண்டிருக்க்ன்றன. 2-வது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த அவர் மீதான மதிப்பு சரிந்து போய்விட்டது. இந்தியாவின் பொருளாதாரமும் பெரு வீழ்ச்சியடைந்து விட்டது.[/size]

[size=3]மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கிப் போய்விட்டன. இந்தியாவின் வளர்ச்சியும் கணிசமாக குறைந்துபோய் ரூபாய் மதிப்பு பெருவீழ்ச்சி கண்டிருக்கிறது. மன்மோகன்சிங் எப்பொழுதுமே மெளனமாக இருப்பதால் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்களது சொந்த பாக்கெட்டில் பணத்தை நிரப்புகின்றனர்.[/size]

[size=3]ஜோக்குகளின் நாயகன்[/size]

[size=3]கூட்டங்களிலும் மாநாடுகளிலும் செல்போனை சைலண்ட் மோடுக்கு மாற்றுங்கள் என்பதற்குப் பதிலாக "மன்மோகன்சிங் மோடுக்கு" மாற்றுங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜோக்கராகிவிட்டார். மன்மோகன்சிங்கைப் பற்றி ஒரு பல் மருத்துவர் சொன்ன ஜோக் இது... என்னுடைய கிளினிக்கிலாவது மன்மோகன்சிங் வந்து வாயைத் திறக்க வேண்டும்...[/size]

[size=3]மன்மோகன்சிங் கடைசியாக வாயை திறந்தது கடந்த வாரம்தான்.. நிலக்கரித்துறை அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செய்ததன் மூலம் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை குற்றம்சாட்டியிருந்ததற்கு பதில் அளித்த போதுதான் வாயைத் திறந்தார்...அப்போதும் கூட "என்னுடைய மவுனம் பல ஆயிரம் பதில்களைவிட சிறந்தது" என்று கூறியிருந்தார் மன்மோகன்சிங் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.[/size]

[size=3]இதற்கு முன்னர் டைம் பத்திரிகை "செயல்படாத பிரதமர்" என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.[/size]

http://tamil.oneindia.in/news/2012/09/05/india-now-the-washington-post-calls-pm-manmohan-singh-160874.html

Leading US Daily Washington Post has described Prime Minister Manmohan Singh as "dithering, ineffectual bureaucrat presiding over a deeply corrupt government".

The article quoted political historian Ramachandra Guha as saying, “More and more, he has become a tragic figure in our history” — a man fatally handicapped by his “timidity, complacency and intellectual dishonesty.”

http://news.outlookindia.com/items.aspx?artid=774221

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.