• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nunavilan

பதினாறு செல்வங்கள் எவை?

Recommended Posts

பதினாறு செல்வங்கள் எவை?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:-

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)

3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத

குழந்தைகள்)

10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

11.மாறாத வார்த்தை (வாய்மை)

12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

Share this post


Link to post
Share on other sites

6....கழுபிணி இல்லா உடல்..திருமணத்தின் பின் யாருக்காவது வருத்தம் வந்துட்டால் தூக்கி எறிஞ்சுட்டு இன்னும் ஒன்றா...

Share this post


Link to post
Share on other sites

6....கழுபிணி இல்லா உடல்..திருமணத்தின் பின் யாருக்காவது வருத்தம் வந்துட்டால் தூக்கி எறிஞ்சுட்டு இன்னும் ஒன்றா...

[size=4]நோய்கள் வராமல் வாழ் என்பதே அது பொருள்படுவதாக தெரிகின்றது. [/size]

Share this post


Link to post
Share on other sites

வெளிநாட்டில் 16 செல்வங்கள்.. :D

1) மோர்ட்கேஜ் முடிந்த ஆடம்பர வீடு.. :icon_idea:

2) சாதாரண சிற்றி கார்

3) SUV

4) Sports Car

5) Truck

6) Cottage

7) சொந்த வியாபாரம்

8) Motor Home

9) Snowmobile

10) ATV

11) சொகுசு படகு

12) மீன்பிடி வள்ளம்

13) Dirt Bike

14) Canoe

15) Kayak

16) கையில காசு.. :D

Share this post


Link to post
Share on other sites

அகோதாண்ணாவின் விளக்கத்திற்கு மிக்க நன்றி...

Share this post


Link to post
Share on other sites