Jump to content

சிறுவர் பகுதி


Recommended Posts

999 வார்த்தைகள் பேசும் கிளி

10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கதைகள் :

999 வார்த்தைகள் அறிந்த கிளி ஒன்று ஆயிரமாவது வார்த்தையைத் தேடி அந்நகரத்தில் அலைந்து கொண்டிருந்தது. அந்த ஆயிரமாவது வார்த்தையை அறிந்து விட்டால் அக்கிளிக்கு மனித மொழி மறந்து கிளி மொழி ஞாபகத்துக்கு வந்து விடும். தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டால் அக்கிளி தன் தாயோடும் தன் கூட்டத்தோடும் சென்று சேர்ந்துவிடும். ஆனால் கிளியின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை. அந்நகரத்தில் யாரும் 999 வார்த்தைகளுக்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட தெரிந்திருக்கவில்லை.indian%20parrot.jpg

நகரமெங்கும் சுற்றிப் பறந்த கிளி ஒரு வீட்டை கண்டுபிடித்து அங்கு தங்கியது. அவ்வீட்டில் ஒரு வேலைக்கார சிறுமி இருந்தாள். அச்சிறுமி யாரிடமும் எதையும் பேசுவதில்லை. எப்போதும் தன் வேலையிலேயே கவனமாக இருப்பாள். அவளுடைய அதிகபட்ச பதிலே ஒரு புன்னகைதான். இந்த சிறுமியிடம்தான், தான் தேடும் அந்த ஆயிரமாவது வார்த்தை இருக்கிறது என்பதை கிளி புரிந்து கொண்டது. அதனால் அவளுடன் நட்புக் கொள்ள அது துடித்தது. ஆனால் அச்சிறுமியோ அக்கிளியுடன் பேசுவதே இல்லை.

ஒரு தினம் வீட்டில் யாருமில்லாதபோது அந்த சிறுமி தனியே அழுது கொண்டிருப்பதை கிளி பார்த்தது. அவள் அருகில் சென்று அவளுடைய கண்ணீர் துளிகளைப் பொறுக்கி ஒவ்வொன்றாய் சேர்க்க ஆரம்பித்தது. ஆனால் அச்சிறுமி 999 துளிகளோடு தன் அழுகையை நிறுத்திக் கொண்டாள்.

"இதிலும் 999 தானா?" என்று தனக்குத்தானே அலுத்துக் கொண்டது கிளி.

"இந்த நகரத்திலும் இந்த வீட்டிலும் இருக்கும் வரை ஆயிரமாவது துளி எப்படி வரும்?" என்று கேட்டாள் சிறுமி.

தீடிரென அவள் பேசுவதைக் கேட்ட கிளி, "அட நீ பேசக்கூட செய்வாயா?" என்று ஆச்சரியப்பட்டது.

அதற்கு பதில் சொல்லாமால், "ஆமாம் நீ ஏன் அந்த ஆயிரமாவது வார்த்தையை தேடுகிறாய்? " என்று கேட்டாள் சிறுமி.

கிளி தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

"நான் குஞ்சாக இருக்கும்போதே மனிதர்களால் பிடிக்கப்பட்டு இந்நகரத்திற்கு கொண்டு வரப்பட்டேன் அதிலிருந்து இம்மனித மொழியே எனக்கு கற்றுத் தரப்பட்டது. இம்மனிதர்கள் பேசும் 999 வார்த்தைகளையும் கற்றுக்கொண்டு விட்டேன். ஆனால் ..."

"என்ன ஆனால்?"

"அந்த ஆயிரமாவது வார்த்தையை நான் அறியவே முடியவில்லை. அதை அறிந்து

கொண்டுவிட்டால் நான் என் மொழியை அறிந்து கொண்டு விடுவேன். அதன் பிறகு என் தாயோடும் இனத்தோடும் சென்று சேர்ந்துவிடுவேன்..." என்றது.

அதை சொல்லும்போதே குரல் தளுதளுக்க அக்கிளியை சிறுமி பாசத்தோடு பார்த்தாள். பிறகு கண்களில் கருணை மிதக்க வாஞ்சையுடன் அக்கிளியை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

அப்போது அந்த ஆயிரமாவது வார்த்தை அவள் விரல்களின் வழியே மெல்ல தன்னுள் ஊடுருவதை கிளி உணர்ந்து கொண்டது.

கிளிக்கு தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டது. அது சந்தோசத்துடன் 'கீ ... கீ ...' என்றுகத்திக்கொண்டு அறையெங்கும் சிறகடித்து பறந்தது.

பிறகு அக்கிளி புறப்பட தயாரானபோது நன்றி சொல்வதற்காக அச்சிறுமியை திரும்பி பார்த்தது. அப்போது அவள் கண்களில் அந்த ஆயிரமாவது துளி திரண்டிருந்தது.

Link to post
Share on other sites

அருமை .......... அருமை ........... நுணா . நேற்று இரவுதான் நிர்வாகத்துக்கு என்ரைபக்கத்தால ஒருமணி அடிச்சன் . நீங்களும் அடித்துவிட்டீர்கள் . முத்தான சத்தான மழலைக்கதையைத் தந்ததிற்கு மிக்க நன்றிகள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தோப்புக்கரணம்

"நான் பாஸ் பண்ண.. நீதான் உதவி செய்யணும்..." என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் பாபு.

சாமி சிலை முன்னால் 108 தோப்புக்கரணம் போட்டான். கோவில் பிரகாரத்தில் மூன்று முறை சுற்றி வந்தான்.

பாபு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். இப்படி பரிட்சை ஏதாவது வந்தால் அன்றைக்கு கண்டிப்பாய் கோவிலில் 108 தோப்புக் கரணம் போடுவான்.

அன்று தான் முதல் பரிட்சை. ஆசிரியர் கேள்வித்தாளை கொடுத்தார்.

பாபு சாமியை வேண்டியபடி கேள்வித்தாளை பிரித்தான். ஆச்சரியமாக இருந்தது. ஒன்றிரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

"நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.. ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்?.." என்று மனசுக்குள்ளாக சாமியைக் கேட்டான்.

இரண்டாவது பரிட்சைக்குப் போனான். இரண்டாவது முதல் பரிட்சையை விட மோசமாக இருந்தது. அவனுக்கு மனது சரியில்லை. மீண்டும் கோவிலுக்குப் போய் சாமியிடம் வேண்டிக் கொண்டான்.

"உன்னை நம்பியவர்களை கைவிட மாட்டாய். என்று சொல்லுகிறார்களே.. என்னையும் கைவிட்டுவிடாதே.." என்று வேண்டியபடி பரிட்சை அத்தனையும் எழுதி முடித்தான்.

எந்தப் பரிட்சையும் அவனுக்குத் திருப்தியாக அமையவில்லை. ஆனால் எப்படியும் கடவுள் கைவிடமாட்டார் என்று மட்டும் பாபு நம்பிக்கையாய் இருந்தான்.

அன்று தான் பரிட்சை முடிவு தெரியும் நாள். நேராக பள்ளிக்கூடத்திற்கு ஓடினான்.

அங்கு பரிட்சையில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஒட்டியிருந்தது. அதில் இவன் பெயர் இல்லை. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேராக கோவிலுக்கு ஓடி வந்தான்.

"அந்தி சந்தி எந்த நேரத்திலும் உன்னையே நினைத்திருக்கும் ... எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா?" என்று கேட்டான் சாமியிடம்

சாமி எப்போதும் போல சிலையாக நின்றிருந்தது. பாபு அழுது புலம்பினான்.

அன்று இரவு வெகுநேரம் கழித்துத்தான் தூங்கினான் பாபு.

"உன்னுடைய சந்நதியில் எத்தனை தோப்புக்கரணம் போட்டிருப்பேன். என்னை கைவிட்டுவிட்டாயே..." என்று தூக்கத்தில் அவன் உதடுகள் முணுமுணுத்தன.அடுத்த வினாடி வானம் இடிந்து விழுவது போன்ற ஒரு சத்தம். பாபு கண்விழித்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்?

கோவிலில் அவன் கும்பிட்ட அதே சாமி. உயிரோடு சிரித்தபடி நின்று கொண்டிருந்தது.

"நான் பரிட்சையில் தோல்வியடைந்து அழுது கொண்டிருக்கிறேன்... உனக்கு சிரிப்பாய் இருக்கிறதா?.." என்று அழுதபடி கேட்டான் பாபு. கடவுள் அவன் அருகில் வந்து அவன் கண்களைத் துடைத்துவிட்டார்.

"நீ என்னை நம்பியதை விட உன்னை நம்பியிருந்தால், நீ பரிட்சையில் ஜெயித்திருப்பாய்" என்றார் கடவுள்.

"சாமி, என்ன சொல்கிறாய்..."

"ஆமாம் பாபு. என்னைச் சுற்றி வந்த நேரத்தில் நீ எனக்கு தோப்புக்கரணம் போட்ட நேரத்தில் முறையாகப் படித்திருந்தால் நீ வெற்றி பெற்றிருப்பாய்"

பாபு மௌனமாக இருந்தான்.

"கடமையைச் செய்பவன்... கடவுளைக் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை பாபு" என்றார் கடவுள்.

பாபு ஆச்சரியமாகக் கடவுளைப் பார்த்தான்.

தமிழ்க் கூடலிருந்து பெறப்பட்டது.

Link to post
Share on other sites

காகமே நீ ஏன் கருப்பானாய் ?

"காகமே, காகமே நீ ஏன் கருப்பாக இருக்கிறாய்?" என்று கேட்டான் கருப்பன்.

"ஒரு காலத்தில் நான்தான் உலகிலேயே அழகான பறவையாக இருந்தேன் என்று சொன்னால் நீ நம்புவாயா?" என்று கேட்டது காகம்.

"எப்படி நம்ப முடியும்?" என்று ஆச்சரியப்பட்டான் கருப்பன்.

"நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அதுதான் உண்மை. வண்ண வண்ண சிறகுகள், அழகான தோகை, இனிய குரலுடன் அவ்வளவு வசீகரமாக இருந்தேன் நான்"

"பின் எப்படி நீ இப்படியானாய்?"

"என் இரக்க குணத்தால்"

"அந்த கதையை கொஞ்சம் சொல்லேன்"

"என் அழகான தோற்றத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட மற்ற பறவைகள் என் இரக்கக் குணத்தை பயன்படுத்தி பலன் அடைய நினைத்தன”

'உன் பச்சை நிறத்தை எனக்கு கொடேன்' என்று கேட்டு வாங்கிக் கொண்டது பச்சைக்கிளி.

'எனக்கு நீல நிறம் என்று வாங்கிக் கொண்டது. மீன்கொத்தி.

'வெண்மை எனக்கு' என்று எடுத்துக் கொண்டது புறா.

இப்படியாக ஒவ்வொரு நிறமும் போக என்னிடம் மிஞ்சியிருந்தது என் கம்பீரமான கொண்டையும் அழகான தோகையும்தான். பின் சேவல் கொண்டையையும் மயில் தோகையையும் வாங்கிக் கொண்டன.

அவை போன பிறகு என்னிடம் மெல்ல வந்தது குயில்.

'காகமே, காகமே நீயும் கருப்பு நானும் கருப்பு. எனவே எனக்கு உன் நிறமெல்லாம் வேண்டாம். உன் குரலை மட்டும் கொடு போதும்' என்றது.

அதையும் நான் மகிழ்ச்சியோடு தந்து விட்டேன்" என்று சொல்லி முடித்தது காகம்.

இதைக் கேட்ட கருப்பன், "என்ன காகமே, இவ்வளவு இளித்தவயாக இருந்திருக்கிறாய" என்று செல்லமாக கடிந்து கொண்டான்.

அதற்கு காகம் "நானே கொடுத்தாலும் யாரும் வாங்கிக் கொள்ளாத ஓர் உயர்ந்த குணம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. எனக்கு அதுவே போதும்" என்றது.

"அது என்ன குணம்?" என்று கேட்டான் கருப்பன்.

"ஒற்றுமை"

கருப்பன் யோசித்தான்.

காகம் சொன்னது உண்மைதானே?

அதன் ஒற்றுமை குணம் பற்றி நமக்கே தெரியும். அதனால்தான் எல்லா பறவைகளையும் கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கும் நாம் காகங்களை மட்டும் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறோம்.

அது மட்டுமா?

"கா... கா..." என உரிமையோடு நாம் சாப்பிட அழைக்கும் ஒரே பறவையும் அதுதானே?

கருப்பனுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது.

மனசுக்கு ஏது நிறம் ?

- நக்கீரன்

Link to post
Share on other sites

[size=1]

[size=4]யானை பல் விளக்குமா?[/size]

[/size][size=1]

[size=2]

[size=4]புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.[/size][/size][size=2]

[size=4]"ஏண்டா இன்னைக்கு குளிச்சியா" என்றாள் அப்புவின் அம்மா.[/size][/size][size=2]

[size=4]"நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.[/size][/size][size=2]

[size=4]வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.[/size][/size][size=2]

[size=4]அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.[/size][/size][size=2]

[size=4]"ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.[/size][/size][size=2]

[size=4]"மறந்திட்டேன் சார்" சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.[/size][/size][size=2]

[size=4]அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.[/size][/size][size=2]

[size=4]அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.[/size][/size][size=2]

[size=4]அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.[/size][/size][size=2]

[size=4]ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர்.[/size][/size][size=2]

[size=4]அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.[/size][/size][size=2]

[size=4]"டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா.[/size][/size][size=2]

[size=4]"குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு.[/size][/size][size=2]

[size=4]பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.[/size][/size][size=2]

[size=4]மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.[/size][/size][size=2]

[size=4]அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.[/size][/size][size=2]

[size=4]விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.[/size][/size][size=2]

[size=4]அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.[/size][/size][size=2]

[size=4]"பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர்.[/size][/size][size=2]

[size=4]அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.[/size][/size][size=2]

[size=4]"தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது" என்றார் டாக்டர்.[/size][/size][size=2]

[size=4]அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.[/size][/size][size=2]

[size=4]அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.[/size][/size][size=2]

[size=4]அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மார்க் ரங்கராஜன்" என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.[/size][/size][size=2]

[size=4]ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.[/size][/size][size=2]

[size=4]"சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.[/size][/size][size=2]

[size=4]அடுத்தநாள் அவன் பள்ளிக்கு "பளிச்" என்று வந்தான்.[/size][/size][size=2]

[size=4]"அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல பையன் "கொல்" லென்று சிரித்தனர்.[/size][/size][size=2]

[size=4]அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.[/size][/size][/size]

Link to post
Share on other sites
 • 2 weeks later...

செந்தமிழர் போற்றும் பைந்தமிழில் வாக்கிய அமைப்பு என்பது மிகவும் நுட்பமானதாகும். தமிழ் மொழியினைப் பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். கருத்துள்ள வாக்கியம் ஒன்றனை அமைப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானதாய் அமைகின்றது.

சொற்கள் சில ஒன்று சேர்ந்து பொருள் தருமாயின் அதைச் சொற்றொடர் என்கிறோம். நிறுத்தற்குறிகள் சரியாக அமைந்திருப்பின் அச்சொற்றொடரை வாக்கியம் என்கிறோம். ஒருவாக்கியம் அடிப்படையில் எழுவாய், பயனிலை உறுப்புக்களை கொண்டிருக்கும். இவற்றுடன் செயப்படுபொருள் என்ற மற்றுமோர் உறுப்பும் வாக்கியத்தில் இணைந்து வாக்கியத்தின் முக்கிய உறுப்புக்களை மூன்று வகையாக பிரிக்க வழிவகுத்துள்ளது. ஒரு வாக்கியத்தைப் பொறுத்தவரை அது தோன்றுவதற்கும் அவ்வாக்கியத்தில் நடைபெறும் செயலைச் செய்பவரைக் காட்டுவதற்கும் எழுவாய் முக்கியமானது.

‘அமுதன் மரத்தை வெட்டினான்’ என்ற வாக்கியத்தில் வெட்டுதல் என்ற செயற்பாட்டினை செய்யும் அமுதன் என்ற பெயர்ச்சொல்லினை எழுவாயாகக் குறிப்பிடுகிறோம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடையம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெயர்ச்சொற்களே எழுவாயாக வருவதுண்டு. சிலவேளைகளில் மிகவும் அரிதாக நிகழ்கால வினையெச்சங்களும்எழுவாயாக வருகின்றன. அத்தோடு சில வாக்கியங்களில் பல எழுவாய்கள் காணப்படலாம். இவ்வாக்கியத்தின் பயனிலை பன்மையில் முடிவடைவதனை நீங்கள் காணலாம்.

அடுத்ததாக பயனிலை பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் எழுவாய் செய்கின்ற தொழிலைக் குறித்து நிற்பது பயனிலைஎனப்படும். ஒரு வாக்கியத்தைப் பொருளுடையதாக முடித்துவைப்பதும் பயனிலையே. உதாரணமாகக் ‘அமுதன் படித்தான்’ என்ற வாக்கியத்தில் அமுதன் என்ற எழுவாயின்படித்தல் என்ற தொழிலினைக் காட்டி வந்த ‘படித்தான்’ என்பதே பயனிலை. பயனிலை காலம் காட்டும்.

ஒரு வாக்கியத்தில் எழுவாய் ஒரு செயலைச் செய்கின்றது. எழுவாய் செய்கின்ற செயலைப் பயனிலை காட்டி நிற்கிறது. எனவே செயலினைச் செய்தவர் எழுவாயாகவும் செயல் பயனிலையாகவும் இருக்கின்ற போது அச்செயல் எதன்மீது செய்யப்பட்டது? அல்லது அச்செயலினை ஏற்கும் பொருள் எதுவோ அதுவேசெயப்படுபொருள் எனப்படும்.

உதாரணமாக ‘வேந்தன் மரத்தை வெட்டினான்’ என்ற வாக்கியத்தில் யார் வெட்டினான்? என்ற வினாவுக்கான விடைஎழுவாய். வேந்தன் என்ன செய்தான்? என்ற வினாவிற்கான விடைபயனிலை. வேந்தன் எதை வெட்டினான்? என்ற வினாவிற்கானவிடை செயப்படுபொருள் எனக் கொள்க. எனவே செயப்படுபொருள்என்பது பயனிலைக்கு முன்னால் எதை? யாரை? எவற்றை? போன்றவினாக்களை இட்டு கேட்கப்படும் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடையாகும்.

பல சந்தர்ப்பங்களில் செயப்படுபொருள் வெளிப்படாமலும் கருத்துள்ள வாக்கியங்கள் அமைந்துவிடுவதுண்டு.செயப்படுபொருள் தெளிவாகவோ அல்லது மறைந்திருக்குமாயின் அவ்வாக்கியத்தைச் செயப்படுபொருள் குன்றாவினை வாக்கியம் என்று அழைக்கப்படும்.செயப்படுபொருள் இல்லாமல் அமையும் வாக்கியத்தினைச்செயப்படுபொருள் குன்றியவினை வாக்கியம் என்கிறோம்.

தமிழாசிரியர் திரு ந.தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி.

http://thamizamuthuu.blogspot.in/

Link to post
Share on other sites

75467.gif

கொக்குக்கு எத்தனை கால்

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—

முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

“ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன். :lol: :lol:

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.

Link to post
Share on other sites

[size=4]கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைப் பகுதியை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.[/size]

[size=4]காலை 7.00 மணிக்கே பள்ளிக்குச் சென்று விட்டேன். மாணவர்கள் பரபரப்பாக ஏற்பாட்டுப் பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வராசு, எனக்கு முன்பே வந்து பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தன் பேச்சுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். எல்லா ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகச் செய்து கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் என் மனம் லேசாய் இளகிப் போனது. எண்ணிப் பார்க்க முடியாத மாணவர்கள் கூட வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதைப் பார்த்த போது, துலக்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தால், இவர்களை எங்கோ தூக்கி வைத்து விடலாம் என்பது மட்டும் புரிந்தது.[/size]

[size=4]நேரம் 9.30ஐ நெருங்க-நெருங்க பெற்றோர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஆனால், மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடவே செய்தது. கூட்டம் இந்நேரம் பாதியாவது நிறைந்திருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. நேரம் செல்ல - செல்ல ஒரு போராட்டமே உருவாகத் தொடங்கி இருந்தது. பத்து மணிக்கு நிகழ்வைத் தொடங்கலாம் என்றிருந்த எங்களுக்கு, அதுவரை 30 பேர் கூட வந்திராதது அடிவயிற்றையே கலக்க ஆரம்பித்தது. நான் செல்வராசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன். எந்தக் கலவரமும் இல்லாமல் அப்போதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டுதான் இருந்தார்.[/size]

[size=4]மணி 10.30ஐ நெருங்கியது. எழுநூறு பேரை எதிர்பார்த்த இடத்தில் வெறும் அறுபத்திரண்டு பேர் மட்டும் வந்திருந்தனர். இனியும் வருவார்கள் என்ற நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையில்,[/size]

[size=4]"சார்! இருக்கிறவங்கள வெச்சி ஆரம்பிப்போம். இனி வருகிறவங்க வரட்டும். நாம் காத்திருக்க வேண்டாம்." என்று செல்வராசு தோளைப்பற்றிக் கொண்டு சொன்னபோது, உள்ளம் முழுமையாய் ஒடிந்து விழுந்தது. "சரி" என்றேன். வந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நிகழ்வு தொடங்கியது.[/size]

[size=4]வந்திருந்தோரை நோட்டம் இடுகிறேன். எந்தச் சிக்கலையும் தராத மாணவர்களின் பெற்றோர்கள் தான் நிறைந்திருந்தனர். யாரை எதிர்ப்பார்த்தோமோ அவர்கள் வராதது, உள்ளத்தைக் கலக்கவே செய்தது. எதுவோ இனம் புரியாத ஒன்று உணர்வைக் குடையத் தொடங்கியது.[/size]

[size=4]"...இங்க பாருங்க சார், இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம். இதற்கு மருந்து போட்டு மருத்துவம் பார்க்க நினைப்பது நாய குளிப்பாட்டி நடுவீட்டில வைக்கிற மாதிரி. பேசாம உருப்படியான வேலையைப் பாருங்க....," என்று நக்கலாகச் சொன்ன சங்கரன் ஆசிரியரின் கூற்று கூட உண்மைதானோ? எல்லா முயற்சியும் அவர் சொன்னதைப் போல வீண் தானோ? உள்ளம் உண்மையிலேயே தடுமாறத் தொடங்கியது. காலியான நாற்காலிகள் எல்லாம் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போன்றிருந்தது.[/size]

[size=4]நிகழ்ச்சிக்குப் பெற்றோரின் வருகை தவிர எல்லாமும் சிறப்பாகவே நடந்து முடிந்தது. ஆனால், உள்ளத்தின் தெம்பெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டதை உண்மையாக உணர முடிந்தது.[/size]

[size=4] பேரவைக் கதைகள் - நீரோடை (மு. தமிழரசு)[/size]

[size=4]1. 18வது வரியில் "நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையிலும்" எனும் தொடர் எதைக் குறிக்கின்றது? [2 புள்ளிகள்][/size]

[size=4] ______________________________________________________________________[/size]

[size=4] ______________________________________________________________________[/size]

[size=4] ______________________________________________________________________[/size]

[size=4]2. எத்தகைய பெற்றோர்களுக்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது?[/size]

[size=4] [2 புள்ளிகள்][/size]

[size=4] ______________________________________________________________________[/size]

[size=4] ______________________________________________________________________[/size]

[size=4] ______________________________________________________________________[/size]

[size=4]3. "இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம்" எனும் தொடர் எதனைக் குறிக்கிறது? [4 புள்ளிகள் ][/size]

[size=4]_____________________________________________________________________[/size]

[size=4]_____________________________________________________________________[/size]

[size=4]_____________________________________________________________________[/size]

[size=4]4. ஆசிரியர் செல்வராசு எத்தகைய எண்ணம் கொண்டவர்?

[ 2 புள்ளிகள் ][/size]

[size=4] _____________________________________________________________________[/size]

[size=4] _____________________________________________________________________[/size]

[size=4]5. மாணவர்கள் நலன் கருதி நடத்தப்படும் நிகழ்வுகளுக்குப் பெற்றோர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை? [ 4 புள்ளிகள் ][/size]

[size=4] _____________________________________________________________________[/size]

[size=4] _____________________________________________________________________[/size]

[size=4] _____________________________________________________________________[/size]

[size=4] _____________________________________________________________________[/size]

[size=4] [/size]

[size=4] தயாரிப்பு: தமிழாசிரியர் திரு. ந.தமிழ்வாணன்,

ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி[/size]

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]ராமுவும் சோமுவும்[/size]

[size=4]ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. [/size]

[size=4]ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவன் முகத்தருகே முகர்ந்து பார்த்துவிட்டுச் சென்றுவிட்டது. [/size]

[size=4]அது போனதும் மரத்திலிருந்து இறங்கிய ராமு, சோமுவிடம் “கரடி உன்னிடம் என்னடா சொன்னது?” என்று கேட்டான். அதற்கு சோமு சொன்னான்: “’ஏனப்பா, நீ ஏற [/size]மரம் மாட்டாயா ?’”

http://www.writerpayon.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

Link to post
Share on other sites
 • 4 weeks later...

கெடுவான் கேடு நினைப்பான்

crane.gif

ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.

ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.

"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.

இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.

கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.

உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.

"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.

"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு

"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.

கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.

"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.

கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.

"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.

"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.

மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.

"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.

"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.

கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.

உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.

"என்ன நண்டு" என்றது கொக்கு.

"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.

மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.

புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.

நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.

"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.

"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.

நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.

கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.

வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.

Link to post
Share on other sites

பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு!

kirusa.jpg

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=4691:2012-02-29-02-28-06&catid=68:architecture&Itemid=393

Link to post
Share on other sites
 • 2 weeks later...

நேர்மை உயர்வு தரும்

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=3824:2011-11-12-01-31-39&catid=68:architecture&Itemid=393

Link to post
Share on other sites

[size=5]ஆப்பிழுத்த குரங்கு [/size]

kurangu.jpg

ஒரு காட்டில் குரங்கு ஒன்று தனியாக வசித்து வந்தது. அது மிகவும் குறும்புகாரக் குரங்காக இருந்தது. பின் விளைவுகளை எண்ணாமல் மிகுந்த குறும்புத்தனம் செய்யும்.

அந்த குரங்கு வசித்த அந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு விறகு வெட்டியும் வசித்துவந்தான். அவன் மரங்களை பெரிய துண்டுகளாக வேட்டிவந்து, அவற்றை தன் குடிசை அருகே வைத்து கோடரியால் பிளந்து அடுப்பில் வைக்கக் கூடியதாக சிறு துண்டுகளாக்கி, அவற்றை பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தான். அவன் மரத்துண்டுகளைப் பிளப்பதற்க்கு ஆப்புகளைப் பாவிப்பது வழக்கம். ஆப்பு என்பது V வடிவமான மரம் அல்லது இரும்பினால் ஆன ஒரு பக்கம் ஒடுக்கமாகவும் மற்றப் பக்கம் அகலமாகவும் உள்ள ஒரு ஆயுதம்.

ஒருநாள் வழமைபோல் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். அவனுக்கு களைப்பு வந்ததால் அடிமரத்தின் பாதியளவு பிளந்திருந்த பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த குரங்கு அவன் சென்றவுடன் கீழே இறங்கி வந்தது.

விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி மரத்தில் இறுக்கி இருந்த ஆப்பை நோக்கியவாறு அமர்ந்தது. அப்போது பிளவுபட்ட பகுதியில் அதன் வால் முழுவதும் செறிருந்தது. குரங்கு ஆப்பை இழுக்கும் அவதானத்தில் இருந்ததால் தனது வால் மரத்துண்டின் பிளவில் போயிருப்பதை உணரவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. மரப்பிளவு இறுகாமல் செருகி இருந்த ஆப்பை தன் முழுப் பலத்தையும் பாவித்து ஆட்டி ஆட்டி எடுக்க முயற்சி செய்த்து.

திடீரென்று அந்த ஆப்புத்துண்டு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்ட மரத்துண்டு சுருங்கிக் கொண்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க குரங்கு அலறியது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரவெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக மாண்டு போனது.

[size=5]பாடம்:[/size] [size=5]'பின்' விளைவுகளை ஆராயாமல் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.[/size]

http://panippulam.co...ture&Itemid=393

Link to post
Share on other sites

காகமும் மகாராணியின் நெக்கிளேசும்

ஒரு காட்டில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும் பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந்தது. பெண்காகம் முட்டைகளை அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து பெண்காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது, இருவரும் தமக்கு 5 பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.

அக் காட்டில் ஒரு நரியும் குடும்பமாக வசித்து வந்தது. அந்த நரியும் காகமும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் ஆண்காகம் இரைதேடி வரும் வழியில் வேட்டைக்காரர்கள் காட்டினுள் நுளைவதைக் கண்டது. உடனே காகம் நரி நண்பர் வசிக்கும் இடத்திற்கு சென்று வேட்டைக்காரர் காட்டில் வருவதையும் பாதுகாப்பாக எங்காவது மறைந்து இருக்கும் படியும் கூறியது. அத்துடன் தனக்கும் ஐந்து பிள்ளைகள் பிறக்க உள்ளார்கள் என்றும் நண்பனான நரிக்கு கூறியது. அப்போது நரி தங்களுக்கு பாட்டி வைக்கும்படி கேட்டது. காகமும் அன்று இரவு பாட்டி தர அழைக்க வருவதாக கூறியது. உடனே நரியார் குடும்பம் நன்றி கூறி விட்டு ஓடி ஒழித்துக் கொண்டது.

ஆண் காகம் இரையுடன் பெண்காகம் அடைகாத்துக் கொண்டிருந்த கூட்டுக்கு வந்தது. அப்போது பெண்காகம் அழுது கொண்டிருந்தது. காரணம் வினவிய போது. பாம்பொன்று வந்து தனது முட்டைகளை குடித்துவிட்டதாக கூறிப் புலம்பியது. அதனைக் கேட்ட ஆண்காகமும் விம்மி அழுத்துடன். அந்தப் பாம்பு தமது பிள்ளைகளை அழித்ததுடன் தமக்கு எனிமேலும் பிள்ளைகள் பிறக்க விடமாட்டாது அதனை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தது.

மறு நாள் நரியார் காகம் இருந்த கூட்டடிக்கு சென்று காகத்தை அழைத்தது. காகம்ம் இரண்டும் பறந்து வந்து சோகமாக இருந்தன. அதனை கண்ட நரி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டது. அப்போது ஆஅண் காகம் முழு விபரத்தையும் சொல்லி புத்திசாலியான நரியிடம் பாம்பைக் கொல்ல ஒரு உபாயம் சொல்லும் படி கேட்டது. நரியும் அவர்களுக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் எண்ணத்துடன் ஆலோசித்தது. மறு நாள் நரி வெளியே சென்ற போது மகாராணியார் ஆற்றில் குழிப்பதற்காக தோழியருடனும் காவலருடனும் வருவதை அவதானித்தது. மகாராணி தனது நகைகள் கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குழித்துக் கொண்டிருந்தார்.

உடனே நரிக்கு உபாயம் தோன்றியது மாகாராணி நாளைக்கு குழிக்கும் போது கரையில் வைத்த நெக்ளெஸ்சை காகம் தூக்கிக் கொண்டு போய் பாம்பின் புற்றுக்குள் போட்டால் அரச காவலாளிகள் பாம்பைக் கொலை செய்து நகைகளை மீட்பார்கள் அப்போது எனது நண்பரின் எதிரி இறந்து விடுவான் என திட்டம் போட்டு, தனது திட்டத்தை காகங்களுக்கு கூறியது. மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காகங்களும் நரியும் அவ் ஆற்றங்கரைக்குச் சென்று சரியான சூழ்நிலை வரும் வரை காத்து இருந்தன.

மகாராணியாரும் வழ்காகம் போல் நகைகள்ல் லழட்டி ஆற்றங்கரையி; வைத்து விட்டு குழிக்கச் சென்றாள். இதனைக் கண்ட காகன் இதுதான் த்ருணம் என எண்ணி ராணி நகைகள் வைத்திருந்த இடத்திற்குச் சென்று நெக்ளெஸை தூக்கிச் சென்றது. காவலாளிகள் காகத்தைத் பின் தொடர்ந்தார்கள். காகம் அந்த நெக்கிளெஸ்சை எதிரியான பாம்பு இருந்த புற்றினுள் போட்டது.. காவலாளாளிகள் நெக்ளெஸ்சை எடுக்க முயற்சித்தார்கள் அப்போது அதனுள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. உடனே பாம்பை அடித்து கொலை செய்தபின் நெக்ளெஸ்சை மீட்டுச் சென்றார்கள். அதன் பின் காகங்கள் நின்மதியாக வாழ்ந்தது.

ஆபத்தான நேரத்தில் காகம் நரியின் குடும்பத்தைக் காப்பாற்றியதால் நரியின் உதவியுடன் காகம் தனது குடும்பத்தை காப்பாற்றியது.

http://panippulam.co...93&limitstart=6

Link to post
Share on other sites

[size=5]அப்பா, அம்மாவுக்கு ஒரு கடிதம் - ஹொஸ்ரலில் இருந்து செல்லக்குட்டி[/size]

அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் "செல்லக்குட்டி" என்று அழைக்கப்படும் மகிந்தன் ஹொஸ்ரல் என்னும் கூட்டுக்குள் இருந்து எழுதும் கடிதம்,

நீங்கள் நலமா? நம் வீட்டில் என்னோடு விளையாடிய நாய்க் குட்டி நலமா? அந்த நாய்க் குட்டிக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு அந்த பாக்கியமும் இல்லை அம்மா. மறியல் வீட்டில் இருப்பவரை மாத மொருமுறை பார்க்க வரும் உறவினர்போல் என்னை வநு பார்த்துவிட்டு போகிறீகளே உங்களோடு இணைந்து வாழும் பாக்கியம் எனக்கில்லையா? அம்மா, அப்பா? நான் என்ன தவறு செய்தேன் என்னை பிரித்து வைக்க இறைவா?

அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போனபோது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாயே !

பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது.

உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விரல்களை மூடிக் கொண்டு வீறிட்டு அழுதது ஏன் தெரியுமா? இதுவரை காணாத வெளிச்சம் வந்து என் பூப்போன்ற கண்ணை குத்தியது பூமியின் காற்று முதல் முறையாக என் சுவாச பைக்குள் சென்றதனால் குறுகுறுப்பு தாங்க முடியவில்லை. அதனால் தான் அழுதேன்.

அம்மா அப்போது அழுதவுடன் அள்ளி அணைத்து கொண்டாயே, ஒரே ஒரு நிமிடம் கூட என்னை முழுமையாய் அழவிட்டதில்லை நீ. என் கண்ணத்தில் மீது வந்து உட்காரும் சின்னஞ் சிறிய ஈ கூட உனக்கு ஜென்ம பகையாளியாக தெரியும், அது கடித்தாலும் கடிக்காவிட்டாலும் நான் அழுது விட கூடாது என்பதற்காக ஒடி வந்து என்னை தூக்கி அனைத்து கொள்வாயே.

இன்று நாள் கணக்காக ஹாஸ்டலின் மூலையில் கிடந்து அழுது முகம் சிவக்கிறேன், ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல அருகில் நீ இல்லை அம்மா. என் அழுகை சத்தம் உன் காதுகளுக்கு கேட்கவில்லை என்றாலும் உன் இதயத்திற்கு கேட்குமே? கேட்டும் கேளாதிருப்பது தான் உனது உண்மையான இயல்பா அம்மா?

காசுப்பணம் என்பதும் சொத்து சுகம் என்பதும் குழந்தைகளுக்காக தான் என்று யாரோ எப்போதோ சொன்னது எனக்கு நினைவுயிருக்கிறது அம்மா.

நீ கூட என் பிள்ளையின் வளர்ச்சிக்காக தான் வேலைக்கு போகிறேன் என்று அப்பாவிடம் சொன்னாய். அப்பாவும் ஆமோதித்து தலையசைத்தார். எனக்காக நீங்கள் இரண்டு பேரும் வேலைக்கு போனதினால் உருண்டு புரண்டு தவழ்ந்து நடைவண்டி பழகி விழுந்து எழுந்து அழுது கைதட்டி சிரித்து உங்கள் மடியில் கிடக்க வேண்டிய நான் குழந்தைகள் காப்பகத்தில் ஆயா புகட்டிய புட்டி பாலை மூச்சு திணற திணற குடித்துவிட்டு கனத்த வயிற்றை சுமக்க முடியாமல் மல்லாந்து படுத்திருப்பேன்.

மயக்கத்தில் கண்களை மூடினால் மீசை ரோமங்கள் குத்தும் அப்பாவின் முகத்தில் தலை சாய்ப்பது போல கனவு வரும். அந்த கனவில் தத்தி தத்தி நான் நடப்பதை கை நீட்டி ஊக்குவிக்கும் உன் முகமும் தெரியும், பகல் எல்லாம் கனவில் உங்களுடன் வாழ்ந்து விட்டு இரவில் விளையாட நான் விழித்திருந்தால் களைத்து நீங்கள் தூங்கிவிடுவீர்கள்.

அம்மா உன்னிடம் ஒன்று கேட்க வெகு நாளைய ஆசை எனக்கு, நீயும் என்னை போல் குழந்தையாக இருந்த போது தொட்டிலில் உன்னை போட்டு "ஆராரோ ஆறாரோ" என்று தாலாட்டு பாடி தூங்க வைப்பாளாமே என் பாட்டி,

நீ அப்போதும் தூங்கவில்லை என்றால் தோளில் சாய்த்து முதுகில் தட்டி கொடுத்து நீ தூங்கும் வரை நடந்து கொண்டேயிருப்பாராமே என் தாத்தா.

அப்பா நீ கூட சின்னவனாக இருந்த போது உன் அப்பாவின் நெஞ்சில் நின்று "தை தை" என்று குதிப்பாயாமே. அப்போது தாத்தா வலி என்பதே இல்லாமல் உன் குதியாட்டத்திற்கு ஏற்றாற் போல "சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது" என்று பாட்டு பாடுவாராமே.

உன் அக்கா கூட நடு முற்றத்தில் உன்னை நிறுத்தி "கை வீசம்மா, கைவீசு" என்று பாடுவாளமே. இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏன் கிடைக்கவில்லை என்று கேட்க தோன்றுகிறது. அந்த கேள்வியெல்லாம் இருக்கட்டும் தாத்தா பாட்டி என்று யாருமே எனக்கு இல்லையா? அல்லது நான் வாசலில் தவழ்ந்து கொண்டிருக்கும் போது வீட்டை வித்தாவது எனக்கு பணம் கொடு, பணம் இல்லாமல் என் வாசல் படி மிதிக்காதே என்று ஒரு வயதான மனிதரை திட்டி அனுப்பினாயே அவர் தான் என் தாத்தாவா அம்மா? அம்மா பாட்டி வீட்டு தின்னை தரையெல்லாம் சாணம் பூசியிருக்குமாமே, ஈரமான சாணத் தரையில் மிட்டாய் வேண்டுமென கேட்டு விழுந்து புரண்டு கால்களை உதைத்து அழுவாயாமே? மரபாச்சி பொம்மைக்கு எண்ணெய் தேய்த்து தலைவாரி, முகம் அலம்பி பவுடர் பூசி, பொட்டு வைத்து, பூச்சூடி அலங்கரித்து அழகு பார்த்து பக்கத்தில் வைத்து கொண்டே கடைவாயில் எச்சு ஒழுக தூங்குவாயாமே? உன் அம்மாவின் முந்தானையை கிழிந்து, தாவணி போட்டு கதவுக்கு பின்னாள் மறைந்து கொண்டு, கண்கள் விரிய உன் அப்பாவை பார்த்து சிரிப்பாயாமே?

புத்தக பைக்குள் புளிய பிஞ்சை மறைத்து வைத்து வகுப்பளையில் மிளகாய் தூள் தடவி உன் தோழிகளுக்கு எல்லாம் கொடுத்து கண்டுபிடித்து ஆசியர் அடிக்க இடது கையை நிட்டிக் கொண்டே வலது கையில் ஒட்டியிருக்கும் புளிங்காய் கலவையை நக்கி கொண்டே அழுவாயாமே? உன் அப்பாவின் தோள் மேல் உட்கார்ந்து அம்மன் கோவில் திருவிழாவில் சாமியாடுவதை ரசிப்பாயாமே.

அப்பா நீ கூட தென்னை மரத்தின் மீதேறி தூக்கனா குருவி கூடு எடுக்க போகும் போது மேல் இருந்து இறங்கிய பச்சை பாம்பை கண்டு கிணற்றுக்குள் குதித்து விட்டாயாமே? தேய்ந்து போன சைக்கிள் டயரை தெரு தெருவாய் உருட்டிக் கொண்டு நீ சுத்த பாட்டி உனக்கு சாதம் பிசைந்து கையில் வைத்து கொண்டே உன்னை சுற்றி வருவாளாமே.

தாத்தா பையில் திருட்டுதனமாய் காசு எடுத்து சொக்கலால் பீடி வாங்கி பற்ற வைக்கும் போது தாத்தா வந்து விட்டார் என பயந்து பீடிநெருப்பை வைக்கோல் போரில் வீசிவிட்டு ஒடினயாமே? வீட்டில் கட்டிய காளை மாட்டில் பால் கறக்க போய் மாட்டிடம் உதைப்பட்டு முன்னம் பல்லை பறிக்கொடுத்தாயாமே என்னதான் குறும்பு செய்தாலும் தாத்தா உன்னை அடிக்க பாட்டியின் முந்தானைக்குள் மறைந்து கொண்டு அழுவாயாமே,

இதில் ஒன்று கூட என் வாழ்க்கையில் நடக்கவில்லையே அது ஏன் அப்பா ஏன் அம்மா?

மாலை நேரம் வந்தால் திருவிழா கூட்டம் போல தெருவெல்லாம் பிள்ளைகள் விளையாடுவார்களாமே? அது உண்மையா அம்மா? அவிழ்ந்து போகும் டவுசரை ஒரு கையால் இறுகி பிடித்து கொண்டு மறு கையால் ஐஸ் கிறீம் சூப்புவார்களாமே?

ஒருவர் இடுப்பை இன்னொருவர் தொட்டு கொண்டு வரிசையாக ரயில் வண்டி போல் ஒடுவதும் ஒளிந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடுவதும், பம்பரத்தின் ஆணியை கூராக்க பெருமாள் கோவில் படிக்கட்டில் அனல் பறக்க தீட்டி வேறொரு பையனின் பம்பரத்தை குத்தி பிளப்பதும், பட்டாம் பூச்சியை பிடிக்க உச்சி வெய்யில் தோட்டம் துரவுயெல்லாம் அலைவதும், கபடி, கில்லி, சின்ன சின்ன செப்புகளை அடுக்கி, மணலில் சோறாக்கி, மழைநீரை சாம்பாராக்கி மகிழ்வதும் கொட்கிற மழையில் கைகளை விரித்து வானம் பார்த்து ஆலாவட்டம் சுற்றுவதும், மனதில் தோன்றுகின்ற படியெல்லாம் பாடுவதும், ஆடுவதும் என்று இரவு வரையில் வீதியெல்லாம் அமர்க்ளபடுமாமே அம்மா?

நிஜமாகவே அவையெல்லாம் நடந்ததா அம்மா, அப்பா? அல்லது எங்களின் ஏக்கத்தை வளர்ப்பதற்கு கற்பனையாய் சொல்லப்பட்டதா அம்மா? பொய்யோ மெய்யோ? அதை நினைத்து பார்ப்பதற்கே கண்கள் சொக்குகிறது. நிஜமாக பார்த்தால்..?

நான் பார்க்காத உறவுகளை, நான் அனுபவிக்காத சந்தோஷங்களை நீயும் அம்மாவும் அனுபவித்திருக்கிறீர்கள் அப்பா, நிஜமான சந்தோஷம் இது தான் என்பதை கூட அறியாமல் எனக்கு கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளையும், தங்க வைர நகைகளையும் சேகரித்து வைக்கிறீர்களே அந்த நோட்டுகட்டில் ஒரு ரூபாய் கூட இந்த வயதில் நான் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியைத் தருமா அம்மா அப்பா?

எனக்கு காசு, பொருள் வேண்டாம் அம்மா, உங்கள் அன்பு மட்டும்தான் வேண்டும். காசு பொருள் சேர்க்க குழந்தைகள் காப்பகம், ஹொஸ்ரல் என்றெல்லாம் என்னை மறியல் வைக்காதீர்கள் அம்மா.

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=7190:2012-10-01-14-42-09&catid=67:art&Itemid=392

Link to post
Share on other sites
 • 2 weeks later...

[size=5]உருவுகண்டு எள்ளாமை வேண்டும் [/size]

singa.jpg

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.

பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது.

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்

கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.

(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

http://panippulam.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=68&Itemid=393&limitstart=12

Link to post
Share on other sites
 • 1 month later...
பயம் தெரியாத மாவீரன்!


nepolian.jpg


இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்தச் சிறுவனுக்குத் தூக்கம் வரவில்லை.

மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்த அந்தச் சிறுவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

வீட்டின் அருகில் குளம் ஒன்று இருந்தது.

அந்தக் குளத்தின் கரையில் போய் அமர்ந்து கொண்ட அந்தச் சிறுவன் அங்கிருந்த சிறு கற்களைத் தண்ணீரில் போட்டு அதிலிருந்து எழும் அலைகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் படுத்திருந்த அந்தச் சிறுவனின் தாய், தன்னருகில் தன் மகனைக் காணவில்லை என்றதும் பதறிப் போனார்.

வீட்டின் கதவு திறந்திருப்பது கண்டு பதைபதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.

 


மகன் குளக்கரையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவளுக்கு நிம்மதி வந்தது.

அவனருகே சென்ற அவள், “மகனே, வீட்டிற்குள் படுத்திருந்த நீ, நள்ளிரவு வேளையில் இப்படி தனியே வந்து அமர்ந்திருக்கலாமா? உனக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டாள்.

உடனே அந்தச் சிறுவன், “அம்மா!பயமா? அப்படி என்றால் என்ன அம்மா?” என்று கேட்டான்.

சிறுவனின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள் அந்தத் தாய்.

இளம் வயதிலே பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த அந்தச் சிறுவன் யார் தெரியுமா?

உலகம் முழுவதையும் வென்று தனக்குக் கீழாகக் கொண்டு வர விரும்பினானே அந்த மாவீரன் நெப்போலிய தான் அந்தச் சிறுவன்.
Link to post
Share on other sites
 • 2 weeks later...


 

 

 

ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.

ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.

"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.

இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.

கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.

உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.

"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.

"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு

"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.

கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.

"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.

கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.

"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.

"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.

மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.

"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.

"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.

கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.

உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.

"என்ன நண்டு" என்றது கொக்கு.

"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.

மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.

புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.

நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.

"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.

"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.

நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.

கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.

வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.
Link to post
Share on other sites

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"

 

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது. அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.

 

தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.

இதனைக் கண்ட வேடன், "அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே...'' என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, "எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்'' என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, "நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் "ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு" என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

 

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=835:2010-12-03-23-17-57&catid=68:architecture&Itemid=393

Link to post
Share on other sites
 • 3 weeks later...

நன்கொடை

 

ஏமூர் என்ற ஊரில் ராமசாமி என்ற விறகுவெட்டி இருந்தான். நல்ல ஊழைப்பாளி. அவனுக்கு அன்பு என்ற பையன் இருந்தான். அவன் அரசு பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவன் நன்றாக படிக்கக் கூடியவன். அன்பு பேருக்குத் தகுந்தாற் போல் அனைவரிடத்திலும், அன்பாகவும், பணிவாகவும் இருப்பான். படிப்பை தவிர மற்றவர்களுக்கு என்ன தேவையோ உதவி செய்வான்.

அன்பு பள்ளிவிட்டு வந்தவுடன், அம்மாவிற்குத் தேவையான உதவி செய்துவிட்டு, பின்னர் இரவு பத்து மணி வரை தெருவிளக்கில் படித்துவிட்டு, தூங்கச்செல்வான். அவன் படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தான். அவன் அம்மா அவனிடம் அடிக்கடி நமக்கு பணவசதி கிடையாது, நன்றாக உழைத்துப் படித்தால் பிற்காலத்தில் நல்ல வசதியுடன் வாழலாம் என்று சொல்லுவார்.

அவன் அப்பா பள்ளி விடுமுறை நாட்களில் அவனுக்கு நீதி போதனைக் கதைகளைக் கூறுவார். இவனுடன் படிக்கும் மாணவர்கள் எல்லாம் நல்ல வசதியுடன் இருந்தனர்.

இவனுடைய ஊருக்கு ஒரு மருத்துவமனை கட்டுவதற்கும், பழைய கோவிலைப் புதுபிக்கவும், இவனுடைய பள்ளி மேல்நிலைப் பள்ளியாக மாறுவதற்கும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவிற்கு அடிக்கல் நாட்ட ஒரு மகானை அழைத்து வருவதாக செய்தி வந்தது.

அந்த மகான் வந்தால் ஊருக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும் என்று மக்கள் நம்பினர். யாராருக்கு எவ்வளவு நன்கொடைகள் கொடுக்க முடியுமோ அவர்கள் எல்லாம் அந்த ஊர் தலைமையாளிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மக்களும் அவரவர் சக்திக்குத் தகுந்த நன்கொடைகளைக் கொடுத்தனர்.

ஆனால் அன்பு அப்பா ஒரு விறகுவெட்டி என்பதால், ஒருநாள் சாப்பாடு சாப்பிடுவதே பெரிய கஷ்டம். இதில் நன்கொடை எங்கே கொடுப்பது என்று மிகவும் கவலைபட்டார். அன்புக்கு நம்மால் பணம்கொடுக்க இயலாது. ஆனால் பணத்தைதவிர வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தான்.

நாட்களும் கடந்தன. இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், ஊரில் மகானை வரவேற்பதற்காக எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.

அவனுடைய கிராமத்தில் பழைய கோவிலைச் சுற்றி புதுப்பிக்கப்பட்டது. அன்பு நினைத்தான், பெரியவர் வருவதற்கு ஒற்றையடிப் பாதை மட்டும் சுத்தம் செய்யப்பட்டது. மீதியுள்ள இடங்களில் தேவையில்லாத செடி, கொடிகள் படர்ந்து இருந்தன. இவற்றை நாம் சுத்தம் செய்தால் என்ன என்று தோன்றிற்று.

அதனால் இரவு பகல் பார்க்காமல் மும்முரமாக அவன் நெருஞ்சி முட்கள் நிறைந்த பகுதி எல்லாம் அழகாக சுத்தம் செய்து, ஒருவழிப் பாதையாக அல்லாமல், எந்தப்பக்கம் வந்தாலும், மக்கள் வருவதற்கு அழகானப் பாதையை ஏற்படுத்தி இருந்தான்.

இவன் இவ்வளவு சுத்தமாக செய்ததைப் பற்றி யாரும் புகழ்ந்து சொல்லவில்லை. ஏன் என்றால், மகான் வருவதற்கு யார் யாரோ என்னவெல்லாம் செய்யும் பொழுது, இந்த வேலை மற்றவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

மகானும் வந்தார். கோவிலை அழகாகப் புதுப்பிக்க ஏற்பாடு செய்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தார். மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். கடைசியாகப் பள்ளிக்கு வந்தார்.

 

அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் அருள் என்ற வியாபாரி அன்னதானம் அளிக்க முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதால் அனைவருக்கும் சாப்பாடு போடப்பட்டது. அனைவரும் சாப்பிட்ட பிறகு பள்ளி மைதானத்தில் கூடினர்.

மகான் சொன்னார், எந்த ஒரு விஷயத்திற்கும் ஊர் கூடி செய்யும் பொழுது, அதன் பலன் பலமடங்கு அதிகமாகும். இந்த ஏமூர் மக்கள் இவ்வளவு ஒற்றுமையாக செய்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அந்த ஊர் மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கினார். அப்பொழுது அந்த ஊர் தலைவர் யார் யார் அதிக தொகை கொடுத்துள்ளார்களோ, அவர்கள் பெயர்களை வாசித்தார். அவர்களுக்கு எல்லாம், அந்த மகான் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்.

இந்த பொன்னாடை போர்த்திய போது, அன்புவிற்கு, மனதில் சிறிது வருத்தம் இருந்தது. அவனுடன் கூடப்படிக்கின்ற பையன்களின் பெற்றோர்கள் எல்லாம், அந்த மகானிடம் ஆசி வாங்கினர். நம்மால் இந்தக் கிராமத்திற்கு சிறிய நன்கொடையைக் கூடக் கொடுக்க முடியவில்லையே என்று மனதில் ஆதங்கம் எழுந்தது.

இதனிடையில் அனைவரது பெயரும் வாசித்து முடிந்த போது, மகான் அவர்கள் ஒரு காசோலையை இந்தக் கிராமத்திற்காக வழங்கினார். இந்த ஏமூர் கிராம் நல்ல செல்வச் செழிப்போடும், மனநிம்மதியோடும் மக்கள் வாழ வேண்டும் என இறைவனை ப்ரார்த்திக்கின்றேன் என்று சொன்னார்.

கோவில், மருத்துவமனை, பள்ளி ஆகிய மூன்று இடத்திற்கும் பணம் கொடுத்தாகி விட்டது. இன்னும் ஒரு காசோலை இருக்கிறது. அது தகுந்த இடத்திற்கு செல்ல வேண்டும். எந்த இடம் என்று மக்களால் யூகிக்கமுடிகிறதா என்று ஒரு கேள்வி கேட்டார்.

மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தனர்.

 

அப்பொழுது அந்த மகான், மைக்கில் அன்பு என்ற பையன் யார்?. அவன் எங்கு இருந்தாலும், உடனே வரவேண்டும் என்று கூறினார். அன்பிற்கும், அவன் பெற்றோருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

ஒரு வழியாக அன்பு அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவரை விழுந்து வணங்கினான்.

அப்பொழுது அந்த மகான் சொன்னார். இரண்டு நாட்கள் முன்பு என்னுடைய சீடனை இந்தக் கிராமத்தின் நிலவரத்தைப் பற்றி அறிய அனுப்பி வைத்தேன். இந்த அன்பு என்ற மாணவன் தனி ஒரு ஆளாக அனைத்து நெருஞ்சி முட்களையும் வெட்டி,ப் பாதையை அழகாக சரி செய்து கொண்டு இருந்தான். இவ்வளவு சிறிய வயதில், தன்னம்பிக்கையுடன் அந்த வேலையை முடித்து இருப்பதாக என் சீடன் சொன்னான்.

இந்தச் சிறுவனிடம் இருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னால் பணத்தால் முடியாததை, தன் மன பலத்தால் உடல் உழைப்பால் செய்துள்ளான். இது மிகப்பெரிய நன்கொடை. வழியில் ஒரு சிறு முள் இருப்பதைப் பார்த்து அதை எடுத்து ஒரு ஒரமாகப் போடமல், அப்படியே விட்டு விட்டால், யார் காலிலாவது குத்திப் புண்ணாக்கி விடும். என்று தெரிந்த போதும் அந்த முள்ளை எடுத்து ஓரமாகப் போட விரும்பாமல் பார்த்துக் கொண்டே செல்லும் நிலையில்தான் பலர் இருக்கின்றனர். ஆனால் இந்த ஊரில் உள்ள தேவை இல்லாத முட்கள் அனைத்தையும் இந்தச் சிறுவன் அகற்றி விட்டான். இது பணத்தால் செய்த நன்கொடைக்கு மேலானது. நல்மனத்தால் செய்த இந்தச் செயல் சிறப்பானது.

இந்தக் காசோலையை இந்த அன்பின் படிப்புச் செலவிற்காக நன்கொடையாக அளிக்கிறேன்.

அன்பிற்க்கும், அவனது பெற்றொருக்கும், மனது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 

http://www.muthukamalam.com/children/story/p3.html

Link to post
Share on other sites
காதறுந்த ஊசி

needle.jpg

ஊசி ஒன்று தன் ஒரு முனை கூர்மையாக இருப்பதில் பெருமையடைந்தது. ஆனால் தன் மறுமுனை ஓட்டையாக இருப்பதால் அதை அவமானமாகவும் நினைத்தது.

ஒரு நாள் அதன் மறுமுனை உடைந்து போனது. காதறந்த நிலையில் அந்த ஊசியைப் பயன்படுத்தியவர் தூக்கியெறிந்தார். 

அப்போதுதான் அந்த ஊசிக்குத் தான் அவமானமாக நினைத்த மறுமுனையின் முக்கியத்துவம் தெரிந்தது.

ஒருவர் கூர்மையான புத்தியுள்ளவராக இருந்தால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. கூர்மையான ஊசி தன்னுள் நூலை நுழைத்துக் கொள்ள காது இருப்பதால் தான் அது பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

காதறந்த ஊசி பயன் இல்லை. அது போல் பிறரைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் அன்பு இருந்தால் மட்டுமே சிறந்தவனாகத் திகழ முடியும்.
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி நுணாவிலான். சிறுவர்களுக்கு மட்டுமல்ல எமக்கும் இது பயனுள்ளதுதான் . :)

Link to post
Share on other sites

நல்ல திரி நுணாவிலான். சிறுவர்களுக்கு மட்டுமல்ல எமக்கும் இது பயனுள்ளதுதான் . :)

 

 

 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை   :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சசிகலா `புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ - சசிகலா தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.   சசிகலா, தினகரன் என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். 2/2   சசிகலா அறிக்கை 1/2   சசிகலா அறிக்கை 2/2   சசிகலா அறிக்கை 1/2   சசிகலா அறிக்கை நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். அன்புடன் வி.கே சசிகலா” எனக் குறிப்பிட்டுள்ளார். `நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா அறிவிப்பு | sasikala says, she will exit from politics (vikatan.com)  
  • கவலையில்லாத மனிதன்               சந்திரபாபு அவர்கள் முக்கியக்  கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன்.               நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர்.               சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத்  தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ?               இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய்  பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம்.               24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி  ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும்.               கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார்.               வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”.                                                                                                      - சுப. சோமசுந்தரம்                           
  • நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.