Jump to content

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது. [/size]

[size=4]வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது. [/size]

[size=4]எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.[/size]

Devotional & Slokas விலிருந்து......

Link to comment
Share on other sites

[size=5]'...கூடாது ' என முடியும் ஒவ்வொரு வசனத்திற்கு பின்னாலும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் உள்ளன. [/size]

[size=1]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள். [/size][/size]

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி கு.மா அண்ணா.கீரை சமிபாடு அடைய அதிக நேரம் எடுப்பதால் இரவில் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.அத்துடன் உண்ணும் உணவு நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

Link to comment
Share on other sites

[size=4]முன்பு ஒரு உறவு இணைத்திருந்தார் 'உண்ண முன்னர் ஒரு குவளை நீரை அருந்திய பின்னர் உண்ணவும்' என. [/size]

[size=4]அதுவும் நல்ல குறிப்பாக தெரிந்தமையால் நினைவூட்டினேன் :D .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி குமாரசாமி அண்ணை.

முள்ளுக்கரண்டியால்... சாப்பிடுபவர்களும், கை கழுவிட்டுத்தானா... சாப்பிடவேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

காசு உள்ளவர்களுக்கும் இருந்த இருப்பில் இருந்து பணம் மீட்டுபவர்களுக்கு மட்டுமே இவை சரிவரும். ஏழைகளும் உடலை வருத்தி உழைப்பவர்களும் இவற்றில் பலவற்றை கடைப்பிடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அண்ணா ...புர‌ச‌ இலை என்டால் என்ன?...ஏன் ஒரே நேர‌த்தில் பல பழங்களை சாப்பிட‌க் கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி குமாரசாமி அண்ணை.

முள்ளுக்கரண்டியால்... சாப்பிடுபவர்களும், கை கழுவிட்டுத்தானா... சாப்பிடவேண்டும். :icon_idea:

ஓம்...கட்டாயம்......கைகழுவிப்போட்டுத்தான் எதிலையும் கைவைக்கோணும் சிறித்தம்பி.....சுத்தம் சுகம் தருமெண்டு பாலர்பாடத்திலேயே படிச்சனாங்களேல்லே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு உள்ளவர்களுக்கும் இருந்த இருப்பில் இருந்து பணம் மீட்டுபவர்களுக்கு மட்டுமே இவை சரிவரும். ஏழைகளும் உடலை வருத்தி உழைப்பவர்களும் இவற்றில் பலவற்றை கடைப்பிடிக்க முடியாது.

நான் இணைத்த அந்த இணைப்பு ஏழைகளால் மட்டுமே கடைப்பிடிக்க முடியும்.பணக்காரர்களால் அது முடியவே முடியாது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கூடாது கூடாது என்றால் சாப்பாட்டைப் பார்த்துவிட்டுக் கையைக் கழுவவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

[size=3][size=4]100-00-0000-197-7_b.jpg[/size][/size]

[size=4]தமிழர் உணவு[/size]

[size=3][size=4]தொகுப்பாசிரியர்: பக்தவத்சல பாரதி[/size][/size]

[size=3][size=4]வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், பக்கம்: 416, PB, விலை: ரூ. 250/-[/size][/size]

[size=3][size=4]பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி.[/size][/size]

[size=3][size=4]ஈழத்தின் உணவு, புலம்பெயர்ந்தோர் உணவு, இஸ்லாமிய உணவு, செட்டி நாடு உணவு முதலிய 35 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் கள்ளும் ஒரு உணவாகவே பார்க்கப்படுகிறது. பனங்கள், தென்னங்கள் தவிர, ஈச்சமரம், வேப்பமரம், அரசமரம், சப்பாத்திக்கள்ளியிலும் கள் ஊறும்; வேப்பங்கள் மருந்தாகப் பயன்படுகிறது என்பன போன்ற புதிய தகவல்களும் பரிமாறப்பட்டுள்ளன. [/size][/size]

[size=3][size=4]வீட்டுத் தோட்டத்து காய்கறி சமையலும் இருக்கிறது; முனியாண்டி விலாஸும் இடம் பிடித்துள்ளது; பரோட்டாவின் அமைப்பும் கூறப்பட்டுள்ளது. சாப்பிடும் இலை தொடங்கி, சைவ, அசைவ உணவுகள், புளித்த மோர், நிலாச்சோறு, வெற்றிலை வரை அனைத்தின் பண்புகளும் விரிவாக அலசப்பட்டுள்ளன. படிக்க படிக்க நாவில் எச்சில் ஊற வைக்கும் நூல்.[/size][/size]

[size=3][size=4]நன்றி: தினமணி – நூல் அரங்கம் – 19.03.2012[/size][/size]

[size=3][size=4]ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/s...0000-197-7.html[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.