Jump to content

சென்னைக்கு வயது 373!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, தனது 373 வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகருக்கு இப்பதிவு சமர்ப்பணம்... :icon_idea:

[size=5]நினைவு கூரல்...[/size]

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்...மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்...

மெதுவாப் போறவுக யாருமில்லே... இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லே..!

ஆம்பிள்ளைக்கும், பொம்பிள்ளைக்கும் வித்தியாசம் தோணலே..!!

இந்தப் பாடல், 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில், நாகேஷ் 'சென்னை'யின் புகழை பாடுவதாக இருக்கும்.

"கெட்டும் பட்டணம் சேர்" என்னும் சொலவடை கேள்விபட்டிருப்பீர்கள். கிராமங்களில் படித்துவிட்டு சீக்கிரம் பணம் சேர்கும் ஆசையில் வேலை வாய்ப்பு தேடி சென்னை வருவோரும், தொழிற்கல்வி முடித்த பண்டிதர்களும், சினிமா ஆசை தேடி வரும் விசரர்களும், அன்றாட கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைகளும், எட்டடுக்கு மாளிகையில் ஒய்யாரமாய் வாழும் சீமான்களும், அதிகாலை விழித்து அரக்கப் பரக்க பட்டணம் வந்து பின்னிரவில் கூடு சென்றடையும் பக்கத்து சிற்றூராரும், கூவத்தைவிட நாறடிக்கும் அரசியல் வியாதிகளும் சேர்ந்து செய்த வினோத கலவை இந்த சிங்காரச் சென்னை. இப்படி பலதரப்பட்ட மக்களைக் கொண்ட நகரவாசிகள் தங்கள் சொந்த ஊரின் மணத்தை கொண்டிருக்காமல் தவறான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் அனைவருக்கும் துன்பம்...அளவுக்கு அதிகமான மக்கட்தொகை, விஷம் போல் ஏறும் விலைவாசி, உழைத்தும் போதிய ஊதியம் கிடைக்காத நிலையில் தெருவோரங்களிலும் பிற ஒதுக்குப்புறங்களிலும் வாழும் மக்கள்...இப்படி சென்னை படிப்படியாக வீங்கி இன்று தோரயமாக 89 லட்சத்தை தொட உள்ளது..

Tamil-Daily-News-Paper_95487177372.jpg

373 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராஸையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.

1640 ல் 'கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள்' மதராசபட்டிணத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் கொடியதொரு பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது மெட்ராஸ் என்ற நகரம் இந்தளவு விரிவடைந்திருக்கவில்லை. இப்போது இருப்பதில் சிறிதளவே நகரின் மொத்த பரப்பளவாக இருந்தது.

1647, ஜனவரி 21ஆம் தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு இந்த பஞ்சத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ''இந்த சிறிய ஊரிலேயே, 3000 க்கும் குறைவில்லாமல் மனிதர்கள் இறந்திருக்கின்றனர். போர்த்துகீசியக் காலனியிலோ 15,000 மனிதர்கள் இறந்துவிட்டனர். இப்போது நம்மிடம் இருக்கும் நெசவாளர்கள், தச்சர்கள் எல்லாம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டனர். 25 ஆங்கிலப் படை வீரர்கள் இறந்துவிட்டனர், பலர் நோயுற்றுள்ளனர்'' என்று அந்த குறிப்பு சொல்கிறது.

இந்த பஞ்ச காலத்தில் கோட்டைக்கு வெளியே சாந்தோம் போன்ற பகுதிகளில் இருந்த பல ஆங்கிலேயர்களும், கோட்டைக்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோட்டையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க சூரத்தில் இருந்து அரிசியை வரவழைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஓராண்டில் இந்த பஞ்சத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சம் 1658 ல் தலையெடுத்தது. அப்போது கோல்கொண்டா, சந்திரகிரி வீரர்களும் மெட்ராஸில் இருந்ததால் அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதேநேரத்தில் வடநாட்டிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதையும் ஒருவழியாக சமாளித்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பஞ்சம் 1686 ல் வந்தது. ஏற்கனவே இரண்டு பஞ்சங்களைப் பார்த்துவிட்டதால், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு இதனை சமாளிப்பதில் சற்று அனுபவம் கிடைத்துவிட்டது. நிவாரணப் பணிகளை எப்படி மேற்கொள்வது என அவர்கள் ஓரளவு கற்றுக் கொண்டனர்.

அடுத்து 18ஆம் நூற்றாண்டிலும் பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற பஞ்சங்களால் கிராமப்புற மக்கள் பிழைக்க வழி தேடி மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். பல இடங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டன. வியாபாரிகள் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இவற்றைத் தடுக்க சில ஆணைகள் இடப்பட்டும், பெரிதாக எந்த பலனும் இல்லை. இந்த ஆணைகள் ஆங்கிலேய வணிகத்தை பாதிக்கும் என உணரப்பட்டதால் சிறிது காலத்திலேயே அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.

1781 ல் வந்த பஞ்சம்தான் மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது. காரணம், அப்போது ஹைதர் அலியின் படையெடுப்பையும் சேர்த்து சமாளிக்க வேண்டி இருந்ததால் துயரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் மதராசப்பட்டிணத்தில் 42 நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு முதன்முறையாக ரேஷன் முறை அமலுக்கு வந்தது.

இதனிடையே சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இன்றைய 'ஸ்டான்லி மருத்துவமனை' இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே இங்கு ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799 ல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னையின் முதல் நவீன மருத்துவனை. உள்ளூர்வாசிகள் 'கஞ்சித்தொட்டி மருத்துவமனை' என்று அழைத்த இதுதான் பின்னாட்களில் 'ஸ்டான்லி மருத்துவமனை'யாக உயர்ந்தது.

19 ஆம் நூற்றாண்டிலும் அடிக்கடி பஞ்சங்கள் வந்துபோகத் தவறவில்லை. 1824 ல் பஞ்சம் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மெட்ராஸில் ஒரே ஒரு கடையில்தான் தானியம் விற்கப்பட்டதாம். பல இடங்களில் கலகங்கள் வெடித்ததால் ராணுவத்தை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1876 -78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட், இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் 'பக்கிங்ஹாம் கால்வாய்' பிறந்தது இப்படித்தான்.

இதுமட்டுமின்றி மேலும் பல புதிய முயற்சிகளும், நிர்வாக சீர்திருத்தங்களும் பஞ்சங்களின் பயனாகவே விளைந்தன. மொத்தத்தில் மெட்ராஸ் மாநகரம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து பல பஞ்சங்களை சந்தித்து பல பாடங்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த பாடங்களே இந்த மாநகரை இன்றும் காக்கின்றன.

நன்றி:தினத்தந்தி.

இனி, புள்ளி விபரம்:

  • முதலில் கிழக்கு இந்திய கம்பனியினரும் ஆங்கிலேயர்களும் ஆண்டபோது மதராசப்பட்டிணம் என பெயரிட்டு ஆண்டனர்.
  • இந்திய விடுதலைக்குப்பிறகு 1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்களை பிரித்தபோது, சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக ஆனது.
  • 'சென்னப்ப நாயக்கர்' என்பவரிடம் இருந்த சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சென்னை என்று அழைக்கப்பட்டது.
  • சென்னையில், வெப்பமும் ஈரபதமும் வருடம் முழுவதும் காணப்படும்.
  • சென்னையின் அதிகபட்ச வெப்பம் 44 பாகை செல்சியஸ்.
  • சென்னையில் தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழை சென்னை நகருக்கு மழையை கொண்டுவரும்.
  • சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மில்லிமீட்டர் மழையை பெற்று தருகிறது.
  • சென்னை கடற்கறை மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டு ,மெரினா கடலின் வடகோடியில் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் மெரினா என்று பெயர் .அதற்க்கு தெற்கே அடையார் ஆறு கடலில் கலக்கும் இடம் பெசன்ட் நகர் கடற்கறை (எலியெட் பீச் என்றும் அழைக்கப்படுகிறது.
  • தரமணியில் டைடல் பார்க் மிக பெரிய தொழில் நுட்ப பூங்காவாகும்.
  • வாகன உற்பத்தியில் சென்னை இந்தியாவிலேயே முதல் இடம் வகிக்கிறது. உலக புகழ் பெற்ற வாகன தொழில் நிறுவனங்களான Hyundai, BMW, Ford ஆகியவை சென்னையில் தொழில்சாலைகள் அமைத்துள்ளன.
  • ஆவடியில் இந்திய ராணுவ தொடர்பான பல நிறுவனங்கள் இருக்கின்றன இந்தியாவின்முக்கிய போர் பீரங்கிகள் இங்குதான் தயாரிக்க படுகிறது.
  • St. George Fort முன்பு இங்கு ஒரு மீனவன் வாழை தோப்பு இருந்தயிடத்தில்தான் இப்போது ஜார்ஜ் கோட்டை கட்டினார்கள்
  • அந்த காலத்தில் சென்னை கடற்கரையிலிருந்து பார்த்தால் கூட ரெட் ஹில்ஸ் அடுத்து உள்ள நாகலாபுரம் மலை தெரியும். ஆனால் தற்போது செங்குன்றம் [Redhills] என்னும் இடத்தில இருந்து பார்த்தால் தான் நாகலாபுரம் மலையை பார்க்க முடியும். அந்த அளவுக்கு இப்போது சென்னை (Madras) வளர்ந்து விட்டது.
    அந்த காலத்தில் கப்பலில் வருபவர்கள் நாகலாபுரம் மலையை பார்த்து தான் சென்னை அருகில் வந்து விட்டது என்று தெரிந்து கொள்வர்.
  • கொத்தவால் சாவடி, வால்டாக்ஸ்(Waltax Road), சால்ட் குவட்டேர்ஸ்(Salt Quarters), தண்டையார்பேட்டை, டோல்கேட்(Toll Gate) ஆகிய இடங்கள் வரி வசூல் செய்த இடமாகும்.பிராட்வே முன்பு சிறிய ஓடையாக இருந்த இடத்தை முடி சாலை அமைத்த இடம் தான் BRODWAY ROAD ஆனது.

[size=5]சென்னை - [/size][size=5]ஞாபகம் வருதே...! ஞாபகம் வருதே...!![/size] [size=5]பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே...!!! :lol:[/size][size=5] [/size][size=5] :icon_idea:[/size]

இது சென்னை 'பாரி முனை' என அழைக்கப்படும் பகுதி. தூரத்தில் தெரியும் ஒரு சிவப்புநிற கூம்பு வடிவ கோபுரம் ஆண்டர்சன் சர்ச் ஆகும்

2008082108kq2alsld03.jpg

2008082108kq2alstr02.jpg

'மவுண்ட் ரோடு' என அழைக்கப்பட்ட தற்கால 'அண்ணா சாலை' சந்திப்பு நூறு வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது...?

2008082108kq2alsjn02.jpg

2008082108kq2alss902.jpg

சென்னை "எக்மோர் தொடருந்து நிலையம்" மாற்றத்தினை காணுங்கள்...

Chennai%20Egmore%20Railway%20Station.jpg

DSCN2781.JPG

சென்னை தீவுத்திடலில் 'மன்றோ சிலை' முன்னரும் தற்பொழுதும்...

MUNROE-STATUE.jpg

Munro_statue.jpg

சென்னை 'மெரீனா பீச்' நிழலும் நிஜமும்...

Chennai%20Marina%20beach%20.jpg

12sld4.jpg

சென்னை மாநகராட்சி அலுவலகம்..ரிப்பன் பில்டிங்க் அன்றும் இன்றும்...

Chennai%20RIPPON-BUILDING.jpg

Ribbon+building.jpg

சென்னை "ஸ்பென்சர்ஸ் பன்பொருள் அங்காடி வளாகம்" அன்றும், இன்றும்...

Chennai%20SPENCERS.jpg

DSC00178s.jpg

சென்னை கடற்கரை சாலையிலுள்ள "மாநிலக் கல்லூரி" அன்றும் இன்றும்...

Chennai%20PRESIDENCY-COLLEGE.jpg

6A9C6CE33617778937978E482260.jpg

சென்னை 'மவுண்ட் ரோடில்' மாட்டு வண்டிகளை கண்டதுண்டா...? நாங்கள் பார்த்திருக்கிறோமே..!

2004070500230102.jpg

2139917037_1ea495fe14.jpg

மேலும் படங்களுடன் தொடரும், யாழ் உறவுகள் விரும்பினால் மட்டும்... :)

.

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், வன்னியன்!

இவ்வளவு, அழகியதா, சென்னைப் பட்டணம்?

பட்டணம் தான், போகலாமடி பொம்பிளே!

பணம் காசு, சேர்க்கலாமடி!

என் கட்டாணி முத்தே!.....

சீ, சுண்டல் எழுறதப் படிச்சுப் படிச்சு, சுண்டல் மாதிரியே எழுத்தும் வருகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பாரம்பரிய நகரத்தைப் பற்றி அறிய... ஆவலாக உள்ளோம், தொடருங்கள் வன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் தந்தவர்களுக்கு நன்றி!

சரி சென்னையின் வரலாறு பற்றி மேலும் சில..

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும், பின்னர் நகரத்தோடு இணைந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது.

புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688 ஆம் ஆண்டில் சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் 'ராபர்ட் கிளைவ்' தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.

1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.

சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நகரின் பெயரான 'மதராஸ்' 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம், மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.

சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு, 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.

அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.

இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த மொழி, சிலரால் கொச்சை மொழியாக கருதப்படுகிறது.

[size=4]சென்னையின் பிரச்சனைகள்:[/size]

  • மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
  • அதிக மக்கள் தொகை அடர்த்தி.
  • 25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது
  • மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்
  • வாகன நெரிசல்
  • மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை.

[size=4]source: விக்கிப்பீடியா[/size].

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு தெரிந்த வரையிலும், சில இணையத்திலும் திரட்டியவையும்:

22-8-1639 சென்னை நகரம் தோன்றிய நாள்.இந்த நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ்டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்பநாயக்கர் என்றஅக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அந்நாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு 'சென்னை நாள்' கொண்டாடப்படுகிறது.

சில வரலாற்று நிகழ்வுகள்:

1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1835 -மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது.

1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது

1856-இல் முதல் தொடருந்து சென்னை ராயபுரத்திற்கும் ஆற்காடுடிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் தொடருந்து நிலையம் ராயபுரம். அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைக் கழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.

1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.

1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.

1892 – உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலங்கரை விளக்கமாகவும் (ஈழத்தமிழில், வெளிச்ச வீடு ?? ) பயன்பட்டது.

1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.

1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்

1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.

1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.

1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் முதல்வர். சுப்பராயலு. சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி

1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.

1996 -'மெட்ராஸ்' என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.

சென்னையில் மட்டும் 18 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

மும்பைக்கு அடுத்த படியாக சென்னையில்தான் அதிகபடியான வேலை வாய்புகள் உருவாகின்றன,

இந்தியாவிலேயே அதிகமாக இரண்டு சக்கர வாகனம் சென்னையில் தான் பாவனையில் உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சென்னைதான் இந்தியாவின் மோட்டர் நகரம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு இந்தியாவின் 40 சதவிகித மோட்டர் வாகனங்களின் பாகங்கள் உற்பத்தி செய்யபடுகின்றன .

சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகத்திலேயே 50 நகரங்களின் கணக்கெடுப்பில் சென்னைக்கு 35 வது இடம்.

மருத்துவ வசதியில் சென்னைதான் இந்தியாவிலேயே முதன்மை வகிகின்றது. மேலும், கல்வி வசதியிலும் முதலிடம் சென்னைக்கு தான்.

சென்னை மெரீனா கடற்கரைதான் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாக உள்ளது.(13 கிமீ)

சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம்தான் தென் ஏசியாவின் மிகபெரிய பேருந்து நிலையம்.

சென்னையில் உள்ள விலங்கியல் பூங்காதான் இந்தியாவிலேயே முதலில் உருவான பூங்கா (1855 ).

கடைசியாக, சென்னையில் உள்ள கான்சர் மையம்தான் இந்தியாவின் பழைமை வாய்ந்த ஒன்று (1920 )

இனி, கால மாற்றத்திற்கேற்றவாறு உள்ளூர் அரசியலால் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலேய சென்னை சாலைகளின் பெயர்கள் சில.. :rolleyes:

மெரினா பீச் ரோடு - காமராஜர் சாலை

மவுண்ட் ரோடு - அண்ணா சாலை.

பூனமல்லி ஹை ரோடு – பெரியார் ஈ.வி.ஆர் சாலை

எட்வர்ட் எல்லியட்ச் ரோடு – டாக்டர்.ராதா கிருஸ்ணன் சாலை

எல்லியட் பீச் ரோடு – சர்தார் படேல் சாலை

மவ்பரிஸ் ரோடு – டி.டி.கே சாலை

கமாண்டர் இன் சீப் ரோடு – எத்திராஜ் சாலை

நுங்கம்பாக்கம் ஹை ரோடு – உத்தமர் காந்தி சாலை

வாரென் ரோடு – பக்தவசலம் சாலை

லாயிட் ரோடு – அவ்வை சண்முகம் சாலை

ஆலிவர் ரோடு – முசிரி சுப்ரமணியம் சாலை

மாண்டியத் ரோடு – ரெட் கிராஸ் சாலை

பைகிராப்ட்ஸ் ரோடு – பாரதி சாலை

ஃபர்ஸ்ட் லைன் பீச் ரோடு – ராஜாஜி சாலை

ராயபேட்ட ஹை ரோடு – திரு.வி.க சாலை

லாட்டிஸ் பிரிட்ஜ் ரோடு – டாக்டர் முத்து லஷ்மி சாலை

சேமியர்ஸ் ரோடு – பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.

கிரிபித் ரோடு – மகா ராஜபுரம் சந்தானம் சாலை

வால் டாக்ஸ் ரோடு – வ.உ.சி சாலை.

ஆற்காட் ரோடு – என்.எஸ்.கே சாலை

ஹாரிஸ் ரோடு – ஆதித்தனார் சாலை

ஒல்ட் மகாபலிபுரம் ரோடு – ராஜீவ் காந்தி சாலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமயிலை கபாலீஸ்வரர் கோயில் அன்றும் இன்றும்...

mylapore1906-721727.jpg

280px-Kapaleeswarar1.jpg

விடலைகள் கடலை போடும் பழைய மெரீனா பீச்சின் மாற்றம்...

oldMadras4.jpg

marina-beach-2.jpg

பழைய மவுண்ட் ரோடு...இப்பொழுது 'அண்ணா சாலை'

oldMadras6.jpg

21SMOLDMADRAS_68162f.jpg

4260653357_72388b81dd.jpg

இது எங்கள் 'பூபாலசிங்கம்' புத்தகக் கடை.. அட அதாங்க... "ஹிக்கின் பாதாம்ஸ்"

31mpmuthiah_jpg_373905f.jpg

Higginbothams+cheenai+3.JPG

சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தையொட்டியே செல்லும் வால்டாக்ஸ் சாலை(Wall Tax Road) அன்றும் இன்றும்...

13DCMYPR_WALL_TAX__1079296g.jpg

13DCMYPR_WALL_TAX__1079295g.jpg

இன்னும் வரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு வயது 373!

Posted Date : 10:22 (22/08/2012)

Last updated : 10:22 (22/08/2012)

கிராமமாக இருந்து பெருநகரமாக (காஸ்மோபாலிடன்) உயர்ந்த சென்னை உருவாகி இன்றுடன் 373 ஆண்டுகள் ஆகிறது.

தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி உருவானது.பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தொடக்க காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தது.

old-chennai.jpg

அந்தப் பகுதிகளை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர். அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் மூலம் வந்து சென்னை கடற்கரையில் இறங்கியுள்ளனர்.சிறிய கிராமமாக இருந்த அந்தப் பகுதி `சென்னப்பட்டிணம்' என்று அழைக்கப்பட்டது.

1639-ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், அந்தப் பகுதியை ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்தனர். அதன்பிறகு, ஓராண்டு கழித்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து ஆங்கிலேயர்களின் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இதனால், சென்னப்பட்டிணத்தை சுற்றி பரவலாக இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்களும் ஒன்றிணைந்தன. 1688-ம் ஆண்டு சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை என்ற புகழ் சென்னைக்கு கிடைத்தது.

1746-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர்.அதன்பிறகு, 1749-ம் ஆண்டு இவைகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன.அதன்பின்னர்தான், சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சியடைய தொடங்கியது.இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரெயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

சென்னப்பட்டிணம் என்ற பெயரில் கிராமமாக இருந்த ஆரம்பகால சென்னை, அதன்பிறகு மதராஸ் பட்டிணம்,மதராஸ் மாகாணம் என்ற பெயரைத் தாண்டியே சென்னை என அழைக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக சென்னை அமைந்தது.

1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமானது. அதன்பின்னர், 1996-ம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் 'காஸ்மோபாலிடன்’ நகரமாக சென்னை விளங்கிவருகிறது.

இந்தியாவிலேயே அதிக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் இங்குதான் உள்ளன. கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உள்பட பல்வேறு துறைகளிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.

[size="2"] [/size] சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில் மற்றும் விமான சேவையும், வெளிநாடுகளுக்கு விமான சேவையும், அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்தும் இருந்து வருகிறது.

அன்றைய கால கட்டிடக்கலைக்கு சான்றுகளாக, சென்னை உயர் நீதிமன்றம், சென்னை பல்கலைக்கழக கட்டிடம், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது,பீகார்,அசாம் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள நகராக சென்னை உருவெடுத்துள்ளது. நிறைவேறிக் கொண்டிருக்கும் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டங்கள் சென்னையின் எதிர்கால வளர்ச்சியை கட்டியம் கூறிக்கொண்டிருக்கின்றன

Vikatan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு, இந்தத்தலைப்பு ஏற்கெனவே... ராஜவன்னியனால், நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106838&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் சில பகுதிகளுக்குப் பெயர்கள் எப்படி தோன்றின என்பது சுவையான ஆராய்ச்சி.

பல ஆண்டுகளுக்கு முன் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை பகுதியையும், மெரினா பீச் பகுதியையும் இணைக்கும் சிறு பாலமாக இருந்த-கூவம் ஆறு வங்கக் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள நேப்பியர் பாலத்தை அகலப்படுத்தப்பட்ட பின் பல திரைப்படங்களில் இரவு நேரத்தில் சண்டைக் காட்சிகளில், பாடல்களில் பார்த்திருப்பீர்கள்!

Chennai%20Napier%20Bridge-1895.jpg

26THBRIDGE_81154f.jpg

[size=4]இன்று நேப்பியர் பாலம்[/size].

இப்போது நேப்பியர் பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே நரிமேடு என்று ஒரு குன்று இருந்தது. ஜோக் ஹில் என்று ஆங்கிலத்தில் பெயர். அந்தக் குன்றில் இருந்து பீரங்கி கொண்டு கோட்டையைக் குறி வைத்தால் கோட்டையைத் தரை மட்டம் ஆக்கிவிட முடியும்.

கோட்டைக்கு அருகில் அப்படியொரு மேட்டுப் பகுதி இருக்கக்கூடாது என்று வெள்ளையர் நினைத்தனர். அந்தக் குன்றை மெல்ல, மெல்ல அகற்றி அந்த மண்ணை செகண்ட் லைன் பீச்சுக்கு(Second Line Beach Road) அருகே கொட்டி அங்கு பள்ளமாக இருந்த பகுதியை மேடாக்கினர். அங்கிருக்கிற மல்லீஸ்வரர் கோவிலைப் பார்த்தால் கோவிலிலிருந்து அந்தப் பகுதி சுமார் பத்தடி உயர்ந்திருப்பது தெரியும்.

அந்தக் குன்றின் மண்ணை, மாட்டு வண்டிகளில் இங்கு கொண்டு வந்து அடித்ததால்தான் இந்தப் பகுதி "மண்ணடி" எனப்படுகிறது.

அப்போது திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் என்ற கிராமங்கள் பழமையானவை. கிராமங்கள் இடைப்பட்ட பகுதிகளால் இணைக்கப்பட்ட போது நகரமாகியது. அப்போது நகரத்துக்குள் நுழையும் இடங்களான கொத்தவால் சாவடி, வால்டாக்ஸ், சால்ட் குவாட்டர்ஸ், தண்டையார்பேட்டை டோல்கேட் போன்றவை நகரத்தின் வரி வசூலிப்பு எல்லைகளாக இருந்தன.

'கொத்தவால்' என்பது வரி வசூலிப்பவனின் ஒரு பதவிதான். அதே போல பெத்தநாயக்கன், தலையாரி, கணக்குப் பிள்ளை, முன்சீப், பணிச்சவன் என்று பல்வேறு பதவிகள் உண்டு.

'தங்க சாலை' என்று அழைக்கப்படுகிற தெரு, முன்னர் வண்ணாரத் தெருவாக இருந்தது. இத்தெருவில் லிங்கிச் செட்டி என்பவர்தான் வெள்ளிக்காசு அச்சடிக்கற கான்ட்ராக்ட் எடுத்து நடத்தினார். அதன் பிறகுதான் இது தங்க சாலை ஆனது. இங்கிருந்த வண்ணார்கள் வேறு இடத்துக்கு குடி வைக்கப்பட்டனர். அந்தப் பகுதி பின்னர் வண்ணாரப் பேட்டை என்று மாறியது.

பல இடங்களின் பெயர்கள் காலப்போக்கில் எப்படியெல்லாம் மாறின என்பது வியப்பானது. செட்டிப் பேட்டை என்பது சேத்துபட்டு என்று ஆனது. நகர எல்லையான சுங்கச்சாவடியில் தண்டோரா போடுவதால் அந்தப் பகுதி 'தண்டாரப் பேட்டை' என்று ஆனது.

சிறிய அளவில் தறி வைத்துத் தொழில் செய்த பகுதியை 'சின்ன தறி பேட்டை' என்றனர். அது இப்போது சிந்தாதிரி பேட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படி நிறைய ஊர்ப் பெயர்கள் அர்த்தம் இழந்து இப்போது மாறிப்போய் இருப்பதைப் பார்க்கலாம்.

மத்திய சென்னைப் பகுதியில் முதன் முதலில் உருவான தியேட்டர் கினிமா சென்ட்ரல். அதில்தான் தியாகராஜ பாகவதரின் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகும். பின்னர் அது முருகன் டாக்கீஸ் ஆனது. இப்போதும் இயங்கிவரும் பழைய திரையரங்கங்களில் ஒன்று.

மண்ணடி பகுதியில் ரத்தினவேலு செட்டியார் நடத்திய ரிப்பன் பிரஸ் மிகவும் பிரபலம். நிறைய தமிழ் நூல்கள் அங்கு அச்சாகின.

21mp_lead1_jpg_869388g.jpg

மவுண்ட் ரோடில் ட்ராம்

madras5004.jpg

பாரி முனையிலுள்ள 'பீச் ரோடில்' அக்கால ட்ராம் வழிப் பாதை

இப்போது பெரியார் திடல்- தினத்தந்தி ஊடக நிறுவனம் இருக்கும் இடத்தில் முன்னர் ட்ராம் ஷெட்(Tram Shed) இருந்தது. அங்கிருந்து ராயபுரம், சிந்தாதிரிப் பேட்டை, மயிலாப்பூர், புரசை வாக்கம் பகுதிகளுக்கு ட்ராம் இயங்கின. சுலபமாக அடையாளம் தெரிய சிவப்பு, திருவொற்றியூருக்கு பச்சை, மயிலாப்பூருக்கு என்று வண்ணம் பிரித்திருப்பார்கள். சென்னையின் ட்ராம் சேவை 1953ல் முடிவுக்கு வந்தது

சென்னையில் குடியிருக்க வரி வசூலிக்கலாம் என்ற யோசனையைத் தந்தவர் பேப்பமன்ஸ் பிராட்வே என்பவர். நகரத்தில் இருக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என்றதும் பாதி பேர் நகரத்தைவிட்டுச் சென்றுவிடத் தீர்மானித்தனர். பிறகு வரி வசூலிக்கிற திட்டம் கைவிடப்பட்டது. இன்று பிராட்வே என்று அவர் பெயரால் அழைக்கப்படும் சாலை இருந்த இடத்தில் நீளமான ஒரு சிற்றோடை இருந்தது. அந்த ஓடையை மூடி, அதன் மீது சாலை அமைத்து அதற்குத்தான் அவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

[size=3]தகவல்கள்: மூலம்[/size]:[size=3] திருமங்கலக்குடி இணையம்[/size], [size=3]இந்து பழைய நாளிதழ்.[/size],

பிரித்தாளும் பிரித்தானியர் (இதுவும் காரணப் பெயரோ? :icon_idea: ), 'வால்டாக்ஸ் சாலை' என்று ஏன் பெயர் சூட்டினார்கள் என்ற சுவாரசியமான தகவலை தமிழாக்கம் செய்து பின் பதிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு

அதிலும் ராஐவன்னியன் வர்ணனை செய்தால் தமிழ் பூத்துக்குலுங்குமே.................. :wub::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக புள்ளி விவரங்களை, வரலாற்று நிகழ்வுகளை கொட்டினால் அலுத்துவிடும்..ஆகையால் சில படங்கள்... :)

gemini_763633g.jpg

[size=3]சென்னையின் முதுகெலும்பாக திகழும் அண்ணா மேம்பாலம் கட்டப்படும்பொழுது[/size]..[size=3]ஜூலை, 1972 [/size]

traffic_signal_763640g.jpg

[size=3]தென்னிந்தியாவின் முதல் தானியங்கி சாலை நெறிகாட்டி - சென்னை எழும்பூர் ,செப்டெம்பர் 1953.[/size]

trafficjam_763647g.jpg

[size=3]அப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) - சென்னை மவுண்ட் ரோடு, ப்ளாக்கர்ஸ் ரோடு சந்திப்பு.[/size].

buskids_764352g.jpg

[size=3]காலங்கள் மாறலாம்...கோலங்கள் மாறலாம் ஆனால் கொண்ட குணம் மட்டும் மாறவே மாறாது...[/size]

[size=3]அக்கால சென்னை மாணவ கண்மணிகள், பேருந்தின் கூரையில் பயணம்[/size]..! [size=3](நம்புங்கள் நான் இதில் இல்லை!

:)[/size][size=3] [/size][size=3])[/size]

nsc_bose_764342g.jpg

[size=3]என்.எஸ்.சி.போஸ் சாலை..பாரி முனை சந்திப்பில்[/size].[size=3]போக்குவரத்து.[/size]

spencers_763644g.jpg

[size=3]மவுண்ட் ரோடு, ஸ்பென்சர்ஸ் அங்காடி வளாகத்தின் முன்னே போக்குவரத்து...[/size]

kothawal_764335g.jpg

[size=3]அட.. நம்ம கொத்தவால் சாவடி![/size]

mountbatn_764304g.jpg

[size=3]லார்டு லபக்குதாஸ்...சாரி..மவுண்ட் பேட்டன் பிரபு, தனது துணைவியாருடன் சென்னை மாநகர விளையாட்டரங்கில் உரையாற்றும்போது...[/size]

nehru_central_764259g.jpg

[size=3]இவரு யாருன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..இவர் 1936ம் வருடம் [/size]

[size=3]சென்னை வந்தபோது சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் வரவேற்பு..(சிங்கள சிப்பாய் அருகில் இல்லைங்கோ...

:rolleyes:[/size][size=3] [/size][size=3])[/size]

[size=3]படங்கள் மூலம்: 'இந்து'' நாளிதழ் பழைய சரக்கு![/size]

இன்னும் வரும்..

Link to comment
Share on other sites

[size=5]தமிழக தலைநகர் மேலும் சிறக்கவேண்டும்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gandhi_kodambkm_764261g.jpg

[size=3]சென்னை கோடம்பாக்கம் வந்த காந்திஜி!, மார்ச், 1937.[/size]

indira_kamraj_764300g.jpg

[size=3]இவர்களைத் தெரிகிறதா...[/size]? [size=3]சென்னை வந்து அந்தமான் சென்ற இந்திராவிற்கு [/size]

[size=3][/size][size=3][/size][size=3]வேற்பளித்த, கு.காமராஜ் மற்று அண்ணா... வருடம் பிப்ரவரி, 1968.[/size]

ripon_763643g.jpg

[size=3]விண்ணிலிருந்து சென்னையின் ஒரு பார்வை! - வருடம் 1913.[/size]

[size=3]ரிப்பன் கட்டிடம், விடோரியா ஹால், மூர் மார்க்கெட்..பின்னால் தெரியும் மாநகராட்சி விளையாட்டரங்கம்.[/size]

cooum_763641g.jpg

[size=3]கூவம் ஆற்றினை தூர்வாரும் பணி - 1971ம் வருடம் நடந்தபோது...[/size]

[size=3]இதிலும் அப்போதைய தி.மு.க அரசு ஊழல் செய்ததாக செய்தி[/size]!

kamraj_764256g.jpg

[size=3]கடல் அலையோ இல்லை மக்கள் தலையோ...கு.காமராஜ் அவர்கள் மறைந்தபொழுது (அக்டோபர் , 3, 1975)[/size]

[size=3]அவ்ரின் பூதவுடலை காண ராஜாஜி ஹால் நோக்கி திரண்ட மக்கள் வெள்ளம்..[/size]

mgr_shot_764262g.jpg

[size=3]நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் குண்டடி பட்டு, மருத்துவமனையில் இருந்தபடியே [/size]

[size=3]மாநில சட்டசபைக்கு, சென்னை பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.ஜி.ஆர்![/size]

alagiri_764265g.jpg

[size=3]இவரைப்பற்றி சொல்லியேயாக வேண்டும்..!

:)[/size][size=3] [/size]

[size=3]தமிழீனக் காவலர், அஞ்சுகம் ஈன்ற அற் (ப)புதல்வன், தனது மகன் மு.க.அழகிரியின் [/size]

[size=3]திருமண வரவேற்பு விழாவில், ஜெகஜீவன்ராம், ஈ.வெ,ரா.பெரியார், நெடுஞ்செழியன் ஆகியோருடன்...[/size]

[size=3]படங்கள் மூலம்: 'இந்து'' .[/size]

பின்னர் தொடர்கிறேன்...! :rolleyes:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

alagiri_764265g.jpg

[size=3]இவரைப்பற்றி சொல்லியேயாக வேண்டும்..!

:)[/size][size=3] [/size]

[size=3]தமிழீனக் காவலர், அஞ்சுகம் ஈன்ற அற் (ப)புதல்வன், தனது மகன் மு.க.அழகிரியின் [/size]

[size=3]திருமண வரவேற்பு விழாவில், ஜெகஜீவன்ராம், ஈ.வெ,ரா.பெரியார், நெடுஞ்செழியன் ஆகியோருடன்...[/size]

அப்பவே பாருங்கள்

பெண்ணை தள்ளி வைச்சாச்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே பாருங்கள்

பெண்ணை தள்ளி வைச்சாச்சு...

:lol: 'எக்ஸ்-ரே' கண்ணுதான்!

Link to comment
Share on other sites

உலகில் எனக்கு வாழ பிடித்த முதல் இடம் சென்னை தான் .

எஸ் ,இராமகிருஸ்ணனின் " யாமம் " வாசித்தால் சென்னையின் வரலாறு சற்றே விரியும் .மிக நல்ல நாவல்.

யாமம் அத்தர் எங்கும் எடுக்கலாமா ராஜவன்னியன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையிலும் 'ஷெல்' தாக்குதல் நடந்தது தெரியுமா...?

1914 ம் வருடம் ஜெர்மானிய போர்க்கப்பல் 'எம்டென்' மூலம் சென்னை நகரை தாக்கியபோது எழுந்த சேதங்கள்...

135257561_-_08_08__1185003g.jpg

135257561_-_08_08__1185004g.jpg

இந்த தாகுதலை தொடர்ந்து இருபதாயிரம் மக்கள் தினந்தோறும் சென்னையை விட்டு வெளியேறினார்களாம்.

[size=4]தாக்குதலின் எச்சங்கள்...[/size]கீழே...

135257561_-_08_08__1185009g.jpg

135257561_-_08_08__1185012g.jpg

135257561_-_08_08__1185010g.jpg

[size=3]Source: [/size]http://www.thehindu.com/news/cities/chennai/article3804379.ece?ref=slideshow.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/YyF-0oMUqIA

http://youtu.be/Dc76E7_BZzA

Link to comment
Share on other sites

[size=5]கருப்பு வெள்ளை படங்களின் அழகே தனி அழகு.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எனக்கு வாழ பிடித்த முதல் இடம் சென்னை தான் .

எஸ் ,இராமகிருஸ்ணனின் " யாமம் " வாசித்தால் சென்னையின் வரலாறு சற்றே விரியும் .மிக நல்ல நாவல். "யாமம் அத்தர்" எங்கும் எடுக்கலாமா ராஜவன்னியன் ?

பகிர்வுக்கு நன்றி!

எஸ். ராமகிருஷ்ணனின் நாவல்களான "உறுபசி" மற்றும் "யாமம்" இங்கே கிடைப்பதாக இணையத்தில் செய்தியுள்ளது...

உயிர்மை பதிப்பகம்.

11 / 29 சுப்பிரமணியம் தெரு

அபிராமபுரம், சென்னை 600 018

தொலைபேசி : 91-44-24993448

மின்னஞ்சல் : uyirmmai@gmail.com.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு!

அதிலும் ராஐவன்னியன் வர்ணனை செய்தால் தமிழ் பூத்துக்குலுங்குமே.................. :wub::icon_idea:

smiley3412.gifஊக்கத்திற்கு நன்றி! smiley5856.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டோல்லாம்... மெய்யாலும், ஷோக்காக்கிது... நைனா. :D

Link to comment
Share on other sites

படங்களைப் பார்க்கும் பொழுது சென்னையில் வாழ்ந்த பழைய ஞாபகங்கள் வந்து போகுது. வாழுவதற்கு நல்ல இடம். கோடை காலத்தில் அதிக வெக்கைதான் பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டோல்லாம்... மெய்யாலும், ஷோக்காக்கிது... நைனா. :D

தாங்க்ஸுபா..

இன்னா நயினா...! காலாங்காத்தாலந்து தம்மாத்தூண்டு பீடியாத்தி குந்திக்கினு, கூவிக்கினு கீரன்..

நீ இப்பால வந்து பத்திரம் வாசிச்கினியே!! அக்...ஹாங்....!

smiley5080.gifநீ மெய்யாலுமே நம்மாளுபா...!

[size=3]டிஸ்கி:: சென்னை தமிழில், நீ என்பது பன்மையை குறிக்கும்...யாழ்கள விதியை இங்கே தளர்த்தியே ஆகவேண்டும்[/size]! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்கும் பொழுது சென்னையில் வாழ்ந்த பழைய ஞாபகங்கள் வந்து போகுது. வாழுவதற்கு நல்ல இடம். கோடை காலத்தில் அதிக வெக்கைதான் பிடிப்பதில்லை.

"தப்ஸ்" பல ஊர் கண்ட அனுபவசாலி போல... :lol:

இருந்தாலும் நம் சென்னை, ஆங்கிலேயரிடமிருந்து போராடி பெற்ற மண்ணை, 'கொல்டி'களிடமிருந்து மீட்ட பொன்னை, பிழை சொல்லுதல் தகுமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.