-
Tell a friend
-
Topics
-
Posts
-
கையொப்பமிடுபவர்களுக்கான யோசனையை முன்மொழிந்தவர் சுமந்திரனே: கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடருக்காக தமிழ் அரசியல் கூட்டுக்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், மற்றும் மதத்தலைவர்கள் ஆகியோரே கையொப்பம் இட்டுள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் நேரடிச் சாட்சியங்கள் இந்தக் கடிதத்தில் உள்ளீர்க்கப்படாமையால் சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலமே அரசியல் கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை வவுனியாவில் வைத்து முன்வைத்ததாகவும், அதனை தான் ஆமோதித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும், அந்தக் கருத்தினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முழுமையாக மறுத்துள்ளார். அது தொடர்பில் அவர் அளித்துள்ள பதிலளிப்பில், வவுனியா கூட்டத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயம் சம்பந்தமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான இணக்கப்பாடு எடுக்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே, கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் மட்டும் கையொப்பம் வைத்தால் போதுமானது என்று குறிப்பிட்டார். அச்சமயத்தில், அரசியல் தரப்பினரான நாம் மக்களின் பிரதிநிதிகள் ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்ட, இனப்படுகொலையின் சாட்சியங்களாக இருப்பவர்களையும், தமிழ் அரசியல் கைதிகள் சார்ந்த தரப்பினையும் உள்ளீர்த்து அவர்களின் கையொப்பத்தினை பெறுவதால் நாம் அனுப்பும் ஆவணம் மேலும் வலுவாகும் என்று நான் உடனேயே வலியுறுத்தினேன். ஆனால், அந்த யோசனை மறுதலிக்கப்பட்டது. வவுனியாகூட்டத்தில் அந்த விடயத்திற்கு யாரும் சாதமான நிலைமையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஆறாம் திகதி கூட்டத்தின் போதும் கையொப்ப விவகாரத்தினை வெளிப்படுத்தி ஏற்கனவே வவுனியாவில் நான் தெரிவித்த விடயங்களை மீண்டும் குறிப்பிட்டேன். இருப்பினும் முடிவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் பொது ஆவணத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு இறுதியான தருணத்தில் விக்னேஸ்வரன் யார் யார் கையொப்பம் இடப்போகின்றார்கள் என்று மின்னஞ்சலில் கேள்வி எழுப்பினார். அதன்போது ஏற்கனவே வவுனியாவிலும், கொழும்பிலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை குறிப்பிட்டு கையொப்பங்களை விரைவாக பெறுமாறு கோரினேன். அதன்போது விக்னேஸ்வரனே சம்பந்தனின் கையொப்பத்தினை முதலில் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்றார். https://www.virakesari.lk/article/99246
-
By அருள்மொழிவர்மன் · Posted
@ தமிழ் சிறி, உண்மைதான் நெருப்பை மூட்டி விட்டதால் தீ பற்றத்தான் செய்யும். அவர்களைப் பற்றி எழுத நமக்கு அருகதை இல்லைதான், ஆனாலென்ன சொல்ல வந்ததைச் சொல்லிச் செல்வதுதான் முறை. சலமா அவர்கள் நாவலில் அப்படியொன்றும் தவறாகக் குறிப்பிடவில்லை, பெண்கள் மீதான சுரண்டல் இசுலாமிய சமூகத்தில் மட்டும் அன்றி அனைத்து சமூகத்திலும் பரவலாக உள்ளது. வீட்டிலும் நாட்டிலும் நடப்பதை அல்லது நடந்தவற்றையே கூறியுள்ளார். தேள் கொட்டியவனுக்கு வலிக்கத் தான் செய்யும். இத்தகைய சுரண்டல் மதம், பண்டிகைகள், சடங்குகள் மூலமாக எளிதாக நிறைவேற்றப்பட்டு வருவது கவலைக்குறியது. குடும்ப அமைப்பில் பெண்களைச் சுற்றியுள்ள வலை ஆண்களால் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளது. இது இன்று நேற்று மட்டுமல்ல நூறாண்டு காலமாக தொடர்ந்து அமைக்கப் பெற்று வந்துள்ளது. ஆண் பெண் இருவருக்கும் பொதுவான நியதியென்று எதுவுமில்லை, அனைத்திலும் பாரபட்சம்! கணவன் மனைவிக்கு இடையான உடலுறவுக்குப் பின், உடுத்திய ஆடையிலிருந்து பயன்படுத்திய பாய் வரைக்கும் அவள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது அச்சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, இது பெண்களுக்கான வேலை - அப்படித்தான் நமது திருமணம், குடும்ப அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் சண்டைக்கு வரும் பட்சத்தில் வாய்-போர் செய்துதான் பார்ப்போமே !! -
யாழில் மருத்துவர், தாதியர் 07 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர் : வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி (சி.எல்.சிசில்) யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர் ஒ ரு வ ரு க் கு க் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இ து தொட ர் பி ல் அ வ ர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 21ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்பட்ட நபருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த நபர் சிகிச்சைக்காகக் கடந்த 23ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை நேற்றுமுன்தினம் மேற்கொள் ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அவருக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர் என்றார். https://thinakkural.lk/article/107825
-
By கிருபன் · பதியப்பட்டது
மெரினா கடற்கரையில் இன்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு! சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிடக் குவிந்துள்ளனர். https://thinakkural.lk/article/107778 -
By கிருபன் · பதியப்பட்டது
ஜெனீவாவில் நெருக்கடியை தவிர்ப்பதற்கு இலங்கை தீவிர முயற்சி-இணக்கப்பாட்டுடனான தீர்மானம் குறித்து பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் பரஸ்பர இணக்கப்பாட்டுடனான தீர்மானமொன்றை கொண்டுவருவது குறித்து பிரிட்டன் தலைமையிலான முகன்மை குழுவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். எனினும் இவ்வாறான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது அரசியல்ரீதியில் சவாலான விடயம் என்பதை அவர் டீவி ஒன் இன் நியுஸ்லைன் உடனான உரையாடலின் போது ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது. இலங்கை புதிய தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கவேண்டும் அல்லது வாக்கெடுப்பை எதிர்கொள்ளவேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு இருதரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன இன்று இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குவதற்கான வாய்ப்புகளை நிராகரித்துள்ள அவர் புதிய தீர்மானம் தொடர்பில் இலங்கை எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். முகன்மை குழு முன்வைத்துள்ள விடயங்களை இலங்கை ஆராய்ந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/107737
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.